Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-6

முகங்கள் – 6

ஆப்ரேஷன் தியேட்டருக்குள் செல்வதற்கு முன் தியேட்டரின் வாயிலில் ஸ்டெச்சரில் படுத்திருந்தாள் சந்தனா , மருத்துவமனை உடையில் ரெட்டை ஜடை பின்னல் பின்னால் மடித்துக்கட்டப்பட்டு , தனக்கு என்ன நேரப்போகிறது என்ற மிரட்சியுடன் இங்கும் அங்கும் பார்த்தவளின் நெற்றியில் வியர்வை துளிகள் அரும்பியிருந்தன. ஒரு வேளை உடல் உறுப்புகளை எடுத்து விற்க போகிறார்களோ? பயத்தில் ஏதேதோ தோன்றி முகம் வெளிறியது

 

அவளது முக உணர்வுகளை படித்தவன் “பயமா இருக்கா? ” என்றான் கிண்டலாக

 

அவனது கிண்டல் மொழி அவளுள் ஒருவித திமிரை வரவழைத்தது

 

“இல்லையே” என்றவளின் குரல் பயத்தையும் மீறி நிமிர்வாகவே இருந்தது

 

“அது தான் உனக்கு நல்லது ” என்றான் இறுகிய குரலில்.

 

அவள் அவனை எரித்துவிடுவது போல் பார்க்க

 

சட்டென அவள் காதருகே குனிந்தவன் ரகசியக்குரலில் “எல்லாம் நல்லபடியா முடிஞ்சா  என்னை பழிவாங்க உனக்கு நிறைய டைம் கிடைக்கும்,  பயன்படுத்திக்கொள்வது உன் விருப்பம்” என்று கிண்டலாகவே முடித்தான்.

 

‘நிச்சயம் வருவேண்டா நீ எனக்கு கொடுத்ததை திருப்பி கொடுக்கவாவது  நிச்சயம் வருவேண்டா’ மனதிற்குள் எழுந்த திடத்துடன் பிளாஸ்டிக் சர்ஜரியை எதிர்க்கொண்டாள் சந்தனா.

 

ஆப்ரேஷன் சக்சஸ்,

 

“நல்லவேளை ருத்ரா, ஆப்ரேஷன் அந்த அஷ்வின் வர்ரதுக்குள்ள முடிஞ்சிடுச்சு. அவன் ஸ்விசர்லாந்திலிருந்து வர்ரதுக்கு ஃபிளைட் கிடைக்கலையாம். ராத்திரிக்குள்ள எப்படியும் வந்துடுவான்னு நியூஸ் கிடைச்சிருக்கு”

 

“இது ரொம்ப ஓல்டு நியூஸ். நீ  சந்திரிகா மேடத்தோட பேச்சை குறைச்சா நல்லாயிருக்கும், அவங்களை சந்தனாவ மீட்ப பண்ணவிடாம பாத்துக்கோன்னா, உக்காந்து செம கதை போல?” – குறும்பு பொங்க பேசியவன் ஒரு விஷமப் புன்னகையுடன் பிரகாஷின் நெஞ்சில் வலிக்காமல் குத்தினான்

 

அதனை புன்னகையுடன் ஏற்று “ஒகே மிஸ்டர் டைரக்டர். அப்போ அந்த அஷ்வின் பயலை என்ன செய்யலாம்?” பவ்யமாக கேட்பது போல் பாவனை செய்தான் பிரகாஷ்

 

“ம்…ச்…சு…அஷ்வினை லாக் பண்ண இன்னும் பிளான் எதுவும் சிக்கலை” என்று உதட்டை பிதுக்கினான் ருத்ரன்

 

சட்டென கலவரமானான் பிரகாஷ் “என்னப்பா சொல்ற????”

 

வசதியாக நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவன் “அவனுக்கு வீக்பாய்ன்ட்டுன்னு எதுவுமே இல்லை.அதனால அவனை நம்ம வழியிலிருந்து கிளியர் பண்ணித்தான் ஆகனும். சந்திரிகா தனியா இருந்தா ஹாம்லெஸ். பட் அஷ்வினோட சேர்ந்திட்டா நோ சான்ஸ்… அந்த ரிஸ்கை நாம எடுக்க முடியாது” தன் தாடையை தேய்த்த படி தீவிரமாக யோசித்தான்.

 

அவனை ஒருவித பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்தான் பிரகாஷ்

 

*************************************

 

சந்தனா இருக்கும்  தனி கண்காணிப்பறைக்குள் கலவரத்துடன் நுழைந்தான் அஷ்வின்.

 

கதவைத் தள்ளிக்கொண்டு  எட்டிப்பார்த்தான்,

 

அவனது பார்வை வட்டத்திற்குள் முகம் முழுக்க வெள்ளை கட்டுடன் படுத்திருந்த நந்தினியும், நாற்காலியில் அவளருகில் அமர்ந்தபடி அவளது கைகளை பற்றி அதில் தலை கவிழ்ந்திருந்த  ருத்ரனும் தென்பட்டனர்

 

பூட்ஸ் சத்தம் கேட்டு விழிவிரித்த ருத்ரபிரதாப், “ஷ்……..ஷ்…….. மெதுவா… நந்தினி தூங்கிறாங்க” உதட்டின் மேல் விரல் வைத்து எச்சரித்தான்

 

குழப்பம் சூழ்ந்த பொழுதும் தன்னிச்சையாக “ச… சா…சாரி” என்று கிசுகிசுத்துவிட்டு மெல்ல நடந்து கட்டிலருகே வந்தான்.

 

எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் “ஹலோ மிஸ்டர் ருத்ரபிரதாப்” மெதுவாக பேசி முகமன் அறிவித்து கைகுலுக்கினான்.

 

பதிலுக்கு கைகுலுக்கியவன் சைகையிலேயே வெளியே போகலாம் என்றான். அவனது செய்கைக்கே ஒரு தனி சக்தியிருப்பது போல் பதிலேதும் பேசாமல் அவனை பின் தொடர்ந்தான் அஷ்வின்.

 

வெளியே வந்ததும் முதல் குரல் ருத்ரனுடையதாயிருந்தது.

 

“சாரி அஷ்வின். இந்தச்சின்ன ஆக்சிடென்டால் உங்கள் ஹனிமூன் ஸ்பாயில் ஆயிடுச்சே” வருத்தம் தெரிவித்தது அவனது குரல்

 

“தட்ஸ் ஓகே மிஸ்டர் ருத்ரன்” என்று தன்னிச்சையாக அவனது சாரியை ஏற்றான்

 

“ஆனாலும் நீங்க இல்லாம நந்தினி ரொம்பவே ஓடஞ்சிட்டாங்க. நீங்க டெம்பரரியா அபாயின்ட் பண்ணின சந்தனா இறந்து போனதால மனதளவுல அதிகமா பாதிக்கப்பட்டிருக்காங்க, அவங்களுக்கு வெர்ட்டிகோ இருந்திருக்கு, நீங்க மெடிக்கல் டெஸ்ட் எடுக்கலையா? ” என்று பந்தை அஷ்வினின் பக்கம் தள்ளினான்

 

மெடிக்கல் டெஸ்ட் எடுக்காத தனது கவனக்குறைவை நினைத்து ஒருநொடி வருந்தினான் அஷ்வின். பதில் பேசமுடியாமல் நாவடக்கும் கலையில் நம் ருத்ரன் பி.ஹெ.ச்.டி ஆயிற்றே.

 

அவனது முகமாற்றம் ருத்ரனுக்கு திருப்தியளிக்க தொடர்ந்தான்

 

“சரி முடிஞ்சதை விடுங்க அஷ்வின், தேங்க் காட் நீங்க வந்துட்டீங்க இனிமே நான் ரிலாக்ஸ்ட்டா என் வேலையை பாக்கலாம்”நிம்மதியடைந்தது போல் போக்கு காட்டினான்

 

அதனை கண்டுபிடிக்காத அஷ்வின் “ஷுயர் சார்” என்றான்

 

“பை…த..வே… நந்தினி சீக்கிரம் குணமாகனும், இந்த டிலேவால் எனக்கு ஒரு கோடி ரூபாய் லாஸ். புரொட்யூசர் பயங்கர டென்ஷன்ல இருக்கார். அது மட்டுமில்ல இந்தப்படம் நந்தினியோட கேரியர்ல ஒரு ஸ்டெப்பிங் ஸ்டோனா இருக்கும். ஏன் அவங்களோட டிரீம் அவார்ட் கிடைக்க நிறைய சான்ஸ் இருக்கு. டேக் கேர் ஆப் ஹர்…” ஒரு நீண்ட உரை நிகழ்த்தி அவன் முடிப்பதற்கும் அஷ்வினின் செல் சிணுங்குவதற்கும் சரியாக இருந்தது.

 

“எக்ஸ்கியூஸ் மீ ” என்ற அஷ்வின் போனுடன் சற்றுதூரம் சென்று பேசலானான்

 

“இதோ வந்துட்டேன் மகி… அறை மணி நேரத்துல வந்துடுவேன். டோன்ட் ஒர்ரி ” – முடித்தவன் ருத்ரனை நோக்கி வந்தான்.

 

“சாரி சார். ஒரு எமர்ஜென்சி கால் அவசரமா போகனும். இஃப் யூ டோன்ட் மைன்ட்… நந்தினியோட வீட்டு மேனேஜரை அனுப்பி வைக்கட்டுமா? அவங்க நந்தினிய ரொம்ப நல்லா பாத்துப்பாங்க.”

 

அவன் முடிக்குமுன் இடை புகுந்தான் ருத்ரன். “வாட் இஸ் திஸ் அஷ்வின் நந்தினிக்கு முகத்தில் அடுபட்டிருக்குன்னு அதிகமா யாருக்கும் பரவ கூடாது. இப்போ சந்திரிகா, பிரகாஷ், கிருபாகரன், நான் நீங்க அப்புறம் டாக்டர்ஸ் தவிர வேற யாருக்கும் தெரியாது. இந்த நியூஸ் ஸ்பிரெட் ஆகரது நல்லதுமில்ல.” படபடவென பொரிந்து தள்ளினான்

 

பதட்டத்தில்… “ஹோ… சாரி சார் ” என்றவன் வியர்த்தான்.

 

“எனிதிங் சீரியஸ் அஷ்வின் “தோழமையுடன் அவனை நெருங்கினான் ருத்ரன்

 

“எ…என் மனைவி மைனர் ஆக்சிடென்ட் பண்ணிட்டாங்களாம் டிராப்பிக் போலீஸ் பிளாக் பண்ணிட்டாராம் ” முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தான்

 

“சாரி அஷ்வின். இப்போ நீங்க அவங்களுக்கு ரொம்பவும் தேவை நீங்க கிளம்புங்க. நந்தினியை நான் பார்த்துக்கிறேன் ” ஏதோ பெரும் தியாகம் செய்வது போலிருந்தது அவனது குரல்

 

“ஓ…தேங்க்யூ சார். தேங்க்யூ சோ மச்” முடித்தவன் வந்தது போலவே பூட்சத்தத்தோடு வேகமாக வெளியேறினான். வெற்றிப் புன்னகையுடன் அறைக்குள் சென்றான் ருத்ரபிரதாப்.

 

முகங்களின் தேடல் தொடரும்




9 Comments

You cannot copy content of this page