Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள் -7

அத்தியாயம் – 7

ருத்ரன் வீட்டிலிருந்து வெளியேறிய போது பிரகாஷின் கார், பார்க்கிங் உள்ளே நுழைந்தது. கையிலிருக்கும் சாவியால் தன்னுடைய காரை அன்லாக் செய்தபடி ஒற்றை கையசைவில் நண்பனுக்கு குறிப்புக் கொடுத்தான் ருத்ரன். மறுமொழி பேசாமல் தன்னுடைய காரை பார்க் செய்துவிட்டு ருத்ரனின் காரில் ஏறினான் பிரகாஷ்.

 

சீட்பெல்ட்டை போட்டுவிட்டு காரை ஸ்டார்ட் செய்து ஸ்டியரிங் மேல் கைபோட்டு லாவகமாக ஓட்டியவன் கேட்டை விட்டு வெளியேறியதும் கேட்ட முதல் கேள்வி “எப்படி இருக்கான்?” – அவன் யாரை கேட்கிறான் என்பது பிரகாஷிற்கு நன்றாகவே புரிந்தது.

 

“ம்ம்ம்… ஹி இஸ் ஆல்டரைட்…”

 

“குட்… செட்டில்மென்ட் பண்ணிட்டியா?”

 

“கொடுத்து அனுப்பிட்டேன். இன்னும் ‘ஜி-ஹெச்’- ல தான் இருக்கான். நாம சொல்ற வரைக்கும் அங்கிருந்து நகரமாட்டான்”

 

“அடி எதுவும் படலையே?”

 

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல… ஸ்டெண்ட் மாஸ்டர்ல… சமாளிச்சுட்டான். ஆனா அஷ்வினோட மனைவிக்குத்தான் பயத்துல குளிர் ஜுரம் வந்திருக்கும்” என்றான் நக்கலாக. ருத்ரனின் முகத்தில் ஒரு குறும்புன்னகை தோன்றியது.

 

அதே நேரம் ருத்ரனின் அலைபேசி அழைத்தது. காரின் ஸ்பீக்கரில் போட்டவன், “ஹலோ ” என்றான்.

 

“ருத்ரு, தும் கேய்சே ஹோ?” ( ‘ருத்ரா நீ எப்படி இருக்க?’) – ருத்ரனின் தாய் எதிர்புறத்தில் படபடத்தாள்.

 

“டீக் ஹூ மா? ஆப் கேய்சே ஹே?” ( ‘நான் நல்லா யிருக்கேன் நீங்க எப்படி யிருக்கீங்க?’)

 

“அங்கே ஏதேதோ பிரச்சனைன்னு நியூஸ் வருதே ருத்ரு, அம்மாக்கு பயமா இருக்கு, நீ வேற ஒன் வீக்கா என்னோட கால்சை அட்டென்ட் பண்ணலை. வீட்டுக்கு கால் பண்ணா உன்னோட வேலையாட்கள் எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு ஒட்டு மொத்தமா சொல்றாங்க, அப்புறம் பிரகாஷ் அவனும் எங்க கால்சை எடுக்கவே மாட்டேங்கிறான், அங்க என்ன தான் நடக்குது? ” கவலை நிறைந்திருந்தது அந்த தாயின் குரலில்.

 

பிரகாஷை அவன் பார்க்க அவனோ அசடு வழிந்தான். ‘அம்மாவை ஹாண்டில் பண்ண சொல்லி நீ எனக்கு சொல்லவே இல்லையே! நானா ஏதாவது சொல்லப் போய் அப்புறம் நீ என்னை பேய் ஓட்டவா?’ அவனது மைன்ட் வாய்ஸ் ருத்ரனுக்கு புரிந்து விட தாய்க்கு பதிலளிக்கலானான்.

 

“ம்மா… ஐம் நாட் எ பேபி ஓகே? ஐ கேன் ஹான்டில் திங்க்ஸ், யூ டோன்ட் வொர்ரி” – எரிச்சலுடன் மொழிந்தான்.

 

“இல்லப்பா, ஏதோ ஹூட்டிங் ஸ்பாட்ல டெத்ன்னு நீயூஸ்ல பார்த்தேன். அதான்…” அவர் முடிப்பதற்குள்,

 

“ஃபீல்டு வொர்க்ல இப்படிபட்ட ஆக்சிடன்ஸ் நடக்கதான் செய்யும். நா பார்த்துக்கிறேன்” – சாலையில் கவனம் இருந்த போதும் அவனது குரலில் கடுமையிருந்தது

 

“டீக் ஹை பேட்டா, எப்போ பீகார் வர்ரே?” – அவன் என்னதான் எரிச்சலை வாரி இரைத்தாலும், தாயுள்ளம் அதனை உடனே மறந்துவிட்டு மகனை காணத் துடித்தது.

 

“அங்கேயா! ஏன்? என்ன விஷயம்?”

 

“ஏதாவது விஷயம் இருந்தாதான் வருவியா? எங்களை பார்க்கணும்னு தோணலையா உனக்கு?”

 

“ஓகே… ஒன் ஹவர்ல ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணறேன்  கிளம்பி வாங்க ஒன் ஆர் டூ டேஸ் இருந்துட்டு போகலாம்…”

 

ருத்ரனின் தாய் வாயடைத்துப் போனாள். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, “அப்போ நீ வரமாட்டியா?” என்றாள் வருத்தத்துடன்.

 

“ம்மா… என்னோட ஒர்க் ஷெடியூல் எவ்வளவு டைட்டா இருக்குன்னு தெரியாம பேசாதீங்க. இங்கிருந்து ஒரு இன்ச் கூட என்னால இப்போ நகர முடியாது”

 

“இப்படி சொன்னா எப்படிப்பா…”

 

“ம்மா… வாட்ஸ் யுவர் பிராப்ளம்… ஓப்பனா சொல்லுங்க”

 

“வினிஷா…”

 

“வினிஷாவா! அவளுக்கு என்ன?”

 

“அவங்க வீட்ல பிரஷர் பண்ணறாங்கப்பா… அவளும் எவ்வளவு நாளைக்குத்தான் வெயிட் பண்ணுவா”

 

“நிஜமா எனக்கு உங்க பேச்சு புரியவே இல்ல… வோய் த ஹெல் ஷி இஸ் வெயிட்டிங்?” – கடுப்படித்தான்.

 

“நீ தான் யாரையும் லவ் பண்ணலன்னு சொல்லிட்டியே, அதான் வினிஷாவ உனக்காக தேர்ந்தெடுத்திருக்கோம், ரொம்ப நல்ல பொண்ணு, உனக்கும் அவள நல்லா தெரியுமே, பேமிலி பிரண்ட்ஸா இருக்கிற நம்ம ரிலேட்டிவ்ஸா ஆகலாம்னு உன்னோட அப்பா ஆசைப்படராரு. அவங்க வீட்லேயும் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. எல்லாத்துக்கும் மேல வினிஷா உன் மேல க்ரேஸியா இருக்கா…” – அவரது குரலில் சந்தோஷமிருந்தது.

 

“எல்லாம் சரிதான். ஆனா எனக்கு பிடிக்கணும்ல… என்னோட ஃபோக்கஸ் முழுக்க இப்போ என்னோட கெரியர்லதான் இருக்கு. எனக்கு எப்போ கல்யாணம் செய்துக்கணும்னு தோணுதோ அப்போ நான் செஞ்சுக்குவேன். அதுவரைக்கும் என்னை தொந்தரவு பண்ணாதீங்க. குறிப்பா அந்த வினிஷா எனக்காக வெயிட் பண்ண கூடாது… ஐ நோ டு சூஸ் மை கேர்ள்” என்று முடித்தவன் தாயின் பதிலை கேட்காமலே தொடர்பை துண்டித்தான்.

 

மாறாமல் அவன் முகத்தில் நிலைத்திருந்த எரிச்சலை கவனித்தபடி, “இங்க இருக்கர பிரஷரை ஏன் மாதாஜி கிட்ட காட்டர?” என்றான் பிரகாஷ்.

 

நொடி பொழுதில் ருத்ரனின் முகம் இலகுவாக மாறியது. திருப்பத்தில் ஸ்டியரிங்கை வளைத்து காரை லாவகமாக திருப்பியவன், “இங்க என்ன பிரஷர்?” என்றான் கூலாக.

 

அவனை ஒரு திடுக்கிடலுடன் பார்த்த பிரகாஷ் ‘அடேய்… நீ டைரக்டர் இல்லடா… மகாநடிகன்’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.

 

‘இவனோட கான்பிடன்ஸ் லெவல் நம்ம கற்பனைக்கு அப்பாற்பட்டது போலும் ‘ இதற்குமேல் என்ன பேச?,பேசாமல் ரோட்டை வேடிக்கை பார்ப்போம் ‘ கண்ணாடி வழியே வெளியே வேடிக்கை பார்க்கலானான்.

 

ஆனால் ருத்ரன் தொடர்ந்தான், “பிரச்சனை இந்த கல்யாணம் தான்”

 

உடனே அவன் புறம் திரும்பி “கல்யாணத்துல என்ன பிராப்ளம்? ” என்று ஆர்வமாக கேட்டான்.

 

“ஐ லைக் திரில் இன் மை லைப், அதுக்கு மேரேஜ் ஒரு பெரிய தடை”

 

‘இதுக்கு மேல வேற திரில் வேணுமாடா?’ மனதில் தோன்றியதை மறைத்து, “ஓகே, ஆல் த பெஸ்ட்” என்றதோடு நிறுத்திக்கொண்டான்.

 

முகங்களின் தேடல் தொடரும்….




3 Comments

You cannot copy content of this page