Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-8

அத்தியாயம்-8

 

தன் முகத்தை கண்ணாடியில் பார்த்த சந்தனா அதிர்ச்சியில் உறைந்தாள், பிளாஸ்டிக் சர்ஜரி முடிந்து முதன் முதலாக இப்போதுதான் அவளது முகத்தை பார்க்கிறாள், அதிக வேறுபாடு இல்லாமலிருக்கலாம் ஆனால் தன்னைத்தானே அன்னியமாக உணரவைக்கும் இந்த முகமாற்றத்தை எப்படி ஏற்பது! அவளுடைய கண்கள் தானாக கலங்கின.

 

இந்த கண்ணீர் எதை மாற்றப் போகிறது! அவளுக்குள் ஒரு ஆவேசம் எழுந்தது.”நோ…” பயங்கர சத்தத்துடன் கையில் கிடைத்த எதையோ எடுத்து கண்ணாடியை அடித்து நொறுக்கினாள். சுற்றியிருந்த செவிலியர்களும் மருத்துவர்களும் அதிர்ந்து போனார்கள்..அவளை அடக்கி கட்டுக்குள் கொண்டுவர பெரும்பாடுபட்டார்கள். கடைசியில் ஒரு ஊசி மருந்து அவளை அமைதிப்படுத்தியது.ஆனாலும் மனதின் ஓட்டம் அடங்கவில்லை.

 

எத்தனை நயவஞ்சகம்! எத்தனை குள்ளநரித்தனம்! நந்தினிக்கு உதவியாக வந்தவளை நந்தினியாகவே மாற்றிவிட்டானே! ஆம்…டூப் போட வந்தவளை உதவியாளராக உலகிற்கு அறிமுகம் செய்தானே!.அப்போதே அவன் திட்டம் தீட்டிவிட்டான்.நந்தினியை கொன்று அந்த இடத்தை சந்தனாவை கொண்டு நிரப்ப வேண்டும் என்று அப்போதே திட்டம் போட்டு,திறமையாக காயை நகர்த்தி அவளை வசமாக வலையில் சிக்க வைத்துவிட்டான்,,, படுபாவி!- அவள் மனம் ருத்ரபிரதாப்பை சபித்தது.

 

கண்ணாடி தடுப்புக்கு வெளியே நின்று,சந்தனாவின் கூச்சலையும், போராட்டத்தையும் உணர்வுகளற்ற முகத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான் ருத்ரபிரதாப். அவனுக்கு அருகில் நின்ற பிரகாஷ் கலக்கத்துடன் நண்பனைப் பார்த்தான்.

 

ஒரு சிறு பதட்டம்…? பயம்? ம்ஹும்…எதுவும் இல்லை அந்த முகத்தில்.”ஹும்ம்ம்.. எதுக்கும் அசரமட்டான்.இதுக்கா அசரப்போறான்!’-பெருமூச்சுவிட்டான்.

 

அதே நேரம் சந்தனாவின் அறையிலிருந்து அவர்கள் நின்று கொண்டிருக்கும் பகுதிக்கு வந்தார் மருத்துவர்

 

“ஷி இஸ் இன் ஷாக்… கொஞ்ச நேரம் தூங்கி எழட்டும்… கொஞ்ச கொஞ்சமா இந்த சிட்டுவேஷனுக்கு அடாப்ட் ஆயிடுவாங்க..” என்றார்

 

என்னமோ நீ சொல்ற.. இவனும் மண்டையை ஆட்டறான்… இதெல்லாம் இங்க போய் முடிய போகுதோ! ஆண்டவா!’ என்று மனதிற்குள் ஆற்றாமையுடன் புலம்பியவன்,

 

“அடுத்து என்ன உத்தேசம்?” என்றான் அலுப்புடன்.

 

“வாய்ஸ் தெரபி”

 

“வாய்ஸ் தெரபியா! ஆனா…!”

 

“அவசியம்…” என்று நண்பனிடம் கூறியவன்,மருத்துவரைப் பார்த்து,”ஏற்பாடு பண்ணுங்க” என்றான்.அவர் ஒப்பதலாக தலையசைத்தார்.

 

‘நீங்க எதை வேணா பண்ணிட்டு போங்கடா…இந்த பிரச்சனையில என்னையும் கோர்த்துவிட்டுட்டீங்களேடா!அவ்வ்வ்..’

 

“என்ன யோசிக்கிற?”

 

“நோ… ஐ.. ஐ மீன்..வாய்ஸ் தெரபிக்கு யாரை கூப்பிடலாம்னு..”

 

“நோ ஒரிஸ்.. டாக்டரோட வைஃப் தெரபிஸ்ட் தான்,,, ஷி வில் டேக் கேர் ஆஃப் இட்” முடித்துவிட்டான்.

 

ருத்ரபிரதாப் திட்டமிட்டது போலவே அடுத்து வந்த சில நாட்கள் சந்தனாவிற்கு குரல்வள பயிற்சி கொடுக்கப்பட்டது.ஒவ்வொரு முறை தெரபிஸ்ட் இவளை நந்தினி என்று அழைக்கும் போதும் உள்ளே எழும் ஆவேசத்தை அடக்க பெரும்பாடுபட்டாள் அதுமட்டும் அல்ல.. இவள் நந்தினிதான் என்பதை அவளுடைய மனமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக  ஒரு மனோதத்துவ நிபுணரையும் நியமித்து அவளுடைய ஆழ்மனதையும் வசபடுத்த முயன்றான்.ஆனால் அவள் ஒத்துழைக்கவில்லை. அவள் தனக்குள் தான் சந்தனாதான் என்பதை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேதான் இருந்தாள்.இதன் பலனாக நந்தினி என்னும் பெயரை அவளால் சகித்துக்கொள்ள முடிந்ததே ஒழிய தான் சந்தனா என்பதிலிருந்து அவள் மனம் பிறழ மறுத்தது.

 

சந்திரிகா பலமுறை மகளை வந்து சந்தித்தார், அவரை யாரும் தடுக்கவில்லை, அத்தோடு அவர் மகளை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அந்த தில்லுமுல்லு கூட்டத்திலிருந்து ஒருவன் கூடவே இருந்தான்.அது ருத்ரபிரதாபோ ,பிரகாஷோ அல்லது மருத்துவரோ… யாராவது ஒருவர் உடன் இருந்துக் கொண்டே இருந்தார்கள்.அதை பற்றி எந்த சந்தேகமும் அந்த பெண்மணிக்குத் தோன்றவில்லை. ஆனால் பெற்ற தாய்க்கு மகளுக்கும் மாற்றாளுக்கும் உள்ள வேறுபாடு விளங்காமல் போய்விடுமா!நம்முடைய உடைந்த இந்தியை கூட இந்த அம்மாவால் அடையாளம் காண முடியவில்லையே! என்ன தாய் இவள்!சந்தனாவின் மனம் சந்திரிகாவை வெறுத்தது.

 

சந்திரிகா எவ்வளவு பேசினாலும்,அவள் மீதிருந்த எரிச்சலின் காரணமாக ஓரிரு வார்த்தைகளிலேயே பதிலளித்தாள் சந்தனா. அதுவே ருத்ரபிரதாப்பிறகு உதவியாக இருந்தது. சந்திரிகாவிற்கு துளியும் சந்தேகம் வரவில்லை.அதனால் அவளை சமாளிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது.

 

அடுத்த சில நாட்களில் சந்திரிகாவின் வீட்டிற்கு ரெய்டு வர வாய்ப்பிருப்பதாக அவளுடைய நம்பிக்கைக்குரிய இடத்திலிருந்து தகவல் வந்தது அல்லது ருத்ரபிரதாப் மூலம் வரவைக்கப்பட்டது என்றும் சொல்லலாம்,மகள் இங்கே நன்றாக இருக்கிறாள் என்கிற நம்பிக்கையில் அவளை ருத்ரபிரதாப் மற்றும் அஷ்வினிடம் ஒப்படைத்துவிட்டு மும்பைக்கு பறந்தாள் அந்த பாசத்தாய்.

 

************************************

 

அஷ்வினின் நிலைமையோ மோசமாக இருந்தது, அவனது மனைவியின் காரில் விழுந்தவன் உடம்பெல்லாம் கட்டுக்களுடன் அரசு மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டான்.

 

எவ்வளவு கூறியும் தனியார் மருத்துவமனைக்கு வரமறுத்தான் அந்த மணிவண்ணன்.அங்கு அவனுக்கு பாதுகாப்பில்லையாம்!.பணத்துக்காக உறுப்புக்களை உருவிவிடுவார்களாம்! அது மட்டுமா.. அவனது சொந்தங்களோ சென்னை மொழியில் அஷ்வினையும் அவனது மனைவியையும் வெளுத்து வாங்கினார்கள்

 

காவலர்களோ மணிவண்ணன் ஒரு வேளை இறந்து விட்டால் கேஸ் சிக்கலாகிவிடும் என்று பயமுறுத்தினார்கள். “அவ்வளவு வேகமாவா ட்ரைவ் பண்ணுவ?” என்று தாங்கமுடியாமல் சில நேரங்களில் மனைவியிடம் எரிந்து விழுவான். பிறகு அவளுடைய கண்ணீரைக் கண்டு உடனே மனமிறங்கி அவளை ஆதரவாக அணைத்துக் கொள்வான்

 

தன் மனைவியால் அடுத்தவரின் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற பயம் அவனை வேறு எதை பற்றியும் சிந்திக்க விடாமல் தடுத்தது. நந்தினி அவனுடைய நினைவடுக்கில் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டாள். ஹாஸ்பிட்டலுக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும், அவன் வீட்டிற்கும்,  மாமனார் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருந்தான்.

 

அப்படியும்  நடுவில் ஒருநாள் நந்தினியை பார்க்க வந்திருந்தான் ஆனால் அவள் தூங்குவதாக செவிலியர் கூறவும் திரும்பிச்சென்று விட்டான். அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்து அவளுடைய நலனை விசாரிக்க மட்டும்தான் முடிந்தது அவனுக்கு.

 

முகங்களின் தேடல் தொடரும்….




10 Comments

  • Nithi Mayil says:

    Nice

  • Hadijha Khaliq says:

    நல்ல திட்டம் போட்டு யாரையும் சாதனாகிட்ட நெருங்கவிடாம பன்னிட்டான் இந்த ருத்ரன்

  • Daisy Mary says:

    its very interesting…!☺️ i like it….👌

  • Deepashvini Writes says:

    சூப்பர் சூப்பர் சூப்பர்👏👏👏

    ஹேய் என்னப்பா இது நிஜமாவே சந்தனா முகத்தை மாதிட்டாங்களா, அயோ எதுக்கு இப்படி😲😲😲

    இந்த ருத்ரன் நல்லவனா கெட்டவனா, ஆனா ஹீரோவின் போர்வையில் ஒரு வில்லன், 😲😲😲

    என்னாமா பிளான் போட்டு ஒவ்வொரு காயையும் நகர்த்துறான் , சந்திரிக்கா, அஷ்வின், இவங்களை சந்தனா கிட்ட நெருங்க விடாம பண்ணிட்டான், அவ குரலையும் மாத்த போறான், இவனுக்கு என்னதான் வேணுமாம்..😡😡😡

    பாவம் சந்தனா பேபி😢😢😢

    டேய் பிரகாஷ் நீயும் கூட்டு களவாணி தானே அப்புறம் என்னாதுக்கு மைண்ட் வாய்ஸ் குடுக்குற😡😡😡

    அருமையான, குழப்பமான, திக் திக் எபி.
    முக்கியமா அடுத்து என்னன்னு ரொம்பவே யோசிக்க வைக்கிறீங்கப்பா

    அடுத்த அடுத்த அத்தியாயத்திற்கு இப்போவே ஆவலுடன் நான்💜💜

    தீபஷ்வினி…

  • ugina begum says:

    Interesting ud sis

  • Nataraj Nataraj says:

    Ate ruthra unakku ithu atukkuma

  • Lakshmi Narayanan says:

    Adappavi …

You cannot copy content of this page