முகங்கள்-9
2122
6
முகங்கள் : 9
மகாபலிபுரம் : மார்பிள் ரெசார்ட்
ஷுட்டிங்கிற்காக மூன்றுவாரம் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. பெரிய,ஆழமான நீச்சல் குளத்துடன். தனித்தனி வில்லா போன்ற வீடுகளும் அங்கே உண்டு அதேபோல் குடில்களும் உண்டு அதுமட்டுமல்லாமல் ஹோட்டல் அறைகளும் உண்டு. ஹோட்டல் அறைகளில் தான் எல்லோரும் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களுக்கான உணவும் ரெசார்ட்டின் சமயலரையிலேயே தயாரித்து வழங்கினார்கள்.
அந்த ரெசார்ட்டிற்கு சொந்தமான இடம் 20ஏக்கர்,அதில் இரண்டு ஏக்கரில் தான் ரிசார்ட் கட்டப்பட்டிருந்தது மீதமுள்ள இடம் ஷுட்டிங்கிற்காக விடப்பட்டிருந்தது அங்கே தான் குழந்தைகள் விளையாடும் பார்க் போல் செட் போட்டிருந்தார்கள்,
அதில் கேமிரா உருள்வதற்கான டிராக், மேலிருந்து எடுக்கும் ஷாட்டிற்காக கிரேன், பார்க்கினுள் நடமாடும் துணைநடிகை நடிகர்கள், குழந்தை நட்சத்திரங்கள், கேமிராவிற்கு இந்தப்பக்கம் அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ், கண்டினியுட்டி செக் செய்யும் குழு, எடிட்டர்ஸ், லைட் மேன், ரிப்லக்டிங் ஷீட் பிடிக்கும் ஆட்கள் என்று அமிளி துமிளி பட்டது
இதற்கெல்லாம் நடுநாயகமாக ஒரு எஜமானனை போல் எல்லோரையும் ஏவிக்கொண்டிருந்தான் ருத்ரபிரதாப்,
ஆம் டைரக்டர் தானே கேப்டன் ஆப் த ஷிப்,
“எனக்கு பர்பக்ஷன் வேணும், பீ கேர்புல் என்று யாரையோ எச்சரித்தவன் “கேமிரா ரோல்” என்றான்
” ரோலிங்” – பிரகாஷ்
“ஆக் ஷன் ” ருத்ர பிரதாப்பின் கம்பீரக்குரல் செவிப்பரையில் அறைந்ததும் தன் இரு கைகளை கொண்டு தன் காதுகளை அழுந்த மூடிக்கொண்டாள் சந்தனா
கொடூரக்குரல்…. இந்தக்குரல் அவள் செவிகளில் விழும்பொழுதெல்லாம் ருத்ரபிரதாப் அவளுக்கு இழைத்த அநீதியே கண் முன் படம் போல் விரிகிறது.
அவனின் நந்தினி என்ற அழைப்பிலேயே சிடுசிடுக்கும் அவளை ‘நந்தினி இப்படி சிரி அப்படி பார், எமோஷனல் டயலாக் இது அதை ஏன் கொலை செய்யற? ” என்று விதவிதமான அதட்டல் வேறு
அவனது கேள்விக்கான பதில் அவனுக்கு நன்றாக தெரிந்திருந்தும் அவன் கேட்கையில் அவளது கண்கள் அக்கினிப்பிழம்பாக மாறும். அவளுக்கு மட்டும் சக்தியிருந்தால் உயிரற்ற டயலாக்கை ஏன் கொல்லப்போகிறாள் அவனையல்லவா கொன்று போட்டிருப்பாள்.அவள் முகத்தை பார்த்த உடன் அவள் மனதில் நினைப்பது அவனுக்கு புரியுமோ என்னவோ “நெக்ஸ்ட் சீன் ‘ என்று கூறி தப்பித்துக்கொள்வான். கோழை!!!!!!
கோழையேதான் , அதனால் தானே நந்தினியை கொன்று இவளை வைத்து தப்பித்துக்கொண்டான். பணம் எல்லாம் இந்தப் பணம் இருக்கும் காரணத்தினால் தான், பணம் பத்தும் செய்யும் என்று பணத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்கிறான் .
அவளிடம் மட்டும் என்னவாம், கோழை போல் அந்த வீடியோவின் பின் அல்லவா ஒளிந்து கொள்கிறான். ஆனால் அவன் ஏன் நந்தினியை கொல்ல வேண்டும்? நூறாவது முறையாக அதே கேள்வி அவளுள் எழுந்தது
நந்தினியை அவளுக்கு முதலிலிருந்தே பிடிக்கவில்லை, எத்தனை ஆண்கள் அவளிடம் இளித்து இளித்து பேசினார்கள், அவளும் அவர்களுக்கு சமமாகதான் இளித்துவைத்தாள்,
அவள் பெயரை சொல்லி அழைக்கப்படுவதே மகா கேவலமாக தோன்றியது. அவள் சந்தனாவாக வாழத்தான் ஆசைப்படுகிறாள். ஆனால் விதி அவளை நந்தினியாக நடிக்க வைக்கிறது
அவளது தீவிரசிந்தனையை கலைத்தது ஒலிபெருக்கியில் ஒலித்த ருத்ரனின்
“டேக் ஓ.கே ” மீண்டும் கொடூரக்குரல் .
“நெக்ஸ்ட் நந்தினி, உங்களுடைய ஷாட் ” மைக்கில் பேசினாலும் விழிகள் தெளிவாக அங்கே குடைக்குக் கீழ் அமர்ந்திருந்த சந்தனாவை உற்று நோக்கின
எப்பொழுதும் போல் வெறுப்பை மனதிற்குள் புதைத்துக்கொண்டு எழுந்தாள், மேக்கப் ஆர்டிஸ்ட் வந்து டச்சப் செய்தபின் கமுக்கமாக கேமிராவின் முன் சென்று நின்று கொண்டாள்.
“ஸ்கிரிப்ட் படிச்சாச்சா? டயலாக்ல ஏதுவும் டவுட் இல்லையே ” அவளை சந்தேகத்துடன் பார்த்தபடி கேட்டான் ருத்ரபிரதாப்
“இல்லை” என்பது போல் தலையசைத்தாள்
முதல் நாள் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே, சந்தனா ருத்ரபிரதாப் கூறுவதற்கு எதிர்மறையாக தான் நடக்க வேண்டும் என்பதை வேதமாக எடுத்துக்கொண்டாள். அப்படியானால் அவனது வேலை தாமதப்படுமே,அதில் அவனுக்கு நஷ்டமும் வரும், பணத்திமிரில் ஆடுபவனை அந்த பணம் கொண்டே அடிப்பதில் அவளுக்கு கொள்ளை திருப்தி கிடைக்கும். அதையேத்தான் இப்போதும் செய்ய முடிவெடுத்திருக்கிறாள்
கந்தன் (துணை நடிகர்) கதாநாயகியிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறான். அதிக தைரியம் கொண்ட கதாநாயகி அவனை ஓங்கி அறைகிறாள். இது தான் சீன்.
சந்தனாவும் கந்தனும் அவர் அவர் பொஷிஷனில் நின்று கொள்ள மைக்கில் ருத்ரபிரதாப்பின் குரல் “ஓ.கே டேக் ரெடி கந்தன் சார் நீங்களும் ரெடிதானே? ….. ஓ.கே கேமிரா ரோல் ”
“ரோலிங் ” – பிரகாஷ்
” ஆக் ஷன் ” ருத்ரன்
கந்தன் : யின்னாம்மா ரொம்பாத்தான் பிகு பண்ணிக்கிற இப்போ இன்னா தப்பாயிட்டுது லேசா கை பட்டுச்சு அம்புட்டுதானே!
கதாநாயகி : தெரிஞ்சு தானடா பட்டுச்சு….?
கந்தன் :ஹ….ஹா…. அதுக்கு இன்னான்ர???
கதாநாயகி :!!!!! பளார்!!!!!
“கட் கட் ” எரிச்சலடைந்தான் ருத்ர பிரதாப்
மீண்டும் மீண்டும் டேக் போனது
இது ஐந்தாவது டேக். இப்பொழுதும் சொதப்பிவைத்தாள் சந்தனா, முகம் கோபத்தில் சிவக்க
“பிரேக்” என்று கிட்டத்தட்ட உறுமியவன் தொப்பியை கழற்றிய வேகத்தில் பத்தடிதூரம் பறக்கும் படி வீசி எரிந்து விட்டு வேகமாக நடக்கலானான். பிரகாஷ் அவனை பின் தொடர்ந்தான்
சந்தனாவின் இதயம் குத்தாட்டம் போட்டது, ருத்ரபிரதாபிற்கு கோபம் வரவைத்து விட்டாள், எந்த காட்சியையும் ஒரே டேக்கில் முடிக்கவேமாட்டாள், ஈசியான சீனாக இருந்தாலும் இழுத்துக்கொண்டே போகும்
ருத்ரபிரதாப்பின் சப்பாத்தி மூஞ்சு மிளகாய் கடித்தது போல் சிவக்கும்,அதனை பார்க்க இரு கண் போதாது, சில சமயம் அவளருகில் உருட்டும் விழிகளோடு வேகமாக வந்து அவளுக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் ஆனால் ஒருவித அழுத்தத்துடன் “இந்த சிம்பிள் சீன்ன கூட சொதப்பறியே? ,உனக்கு நடிக்க வரும்னு எனக்கு நல்லா தெரியும்,நடிப்பே வராத மாதிரி ரொம்ப நடிக்காத”என்று எச்சரிப்பான் பேசாமல் கேட்டுக்கொள்வாளே தவிர அவள் செய்வதைத்தான் செய்வாள்
கேரவனில் சாய்ந்தபடி ருத்ரபிரதாப் நிற்க, விலையுயர்ந்த சிகரட் ஒன்றை அவன் வாயில் வைத்து அதில் தீயை வைத்தான் பிரகாஷ். டீ பையன் வந்து கொடுத்த டீயை பெற்றுக்கொண்டவன், அவன் அகன்றதும்
“அஷ்வின் வந்தானா? ” – சிகரட்டின் புகையை வேகமாக உள்ளே இழுத்து நிதானமாக வெளியேற்றிய படி கேட்டான்
“வந்தான்! தேவ் நாயரை அனுப்பி சமாளிச்சாச்சு ” – பிரகாஷ்
“ஓ ”
“ரொம்ப நாள் சமாளிக்கிறது கஷ்டம். ரெண்டே ரெண்டு தடவைதான் நேர்ல மீட் பண்ணவிட்டிருக்கோம், அதுலயும் நந்தினியை அதிகமா பேசவிடலை, இன்னும் எத்தனை நாள் தான் போன்லயும் மெசேஜ்லயும் அவன் நந்தினி கூட பேசுவான். இப்பவே அவனுக்கு டவுட் வந்திருக்கும் ”
“டவுட் வர சான்சே இல்ல. நாம சொல்ற மாதிரி தான நந்தினி பேசறா. மெசேஜ் நாமதான அனுப்புறோம். பட் இதுக்கு சீக்கிரம் ஒரு முடிவு கட்டனும் ”
“ஆனா நமக்கு வேற ஒரு பிரச்சனை ஸ்டாட் ஆகிடுச்சே,?” என்ற பிரகாஷின் முகத்தில் கவலை படர்ந்தது
“அப்படியா? அது என்ன? ” சாதாரணமாகவே கேட்டான்
“நந்தினி கோல்ட் வார் ஸ்டார்ட் பண்ணிட்டாங்களே (அமைதியாக ஆனால் கடுமையான எதிர்ப்பை காட்டுவது) இப்போ எப்படி சமாளிக்கப்போறோம்? ” என்றான் உண்மையான வருத்தத்துடன்
“ம்…ப…ச் அகெய்ன் எ ஓல்ட் நியூஸ் ” என்றவன் சிகரெட்டின் புகையை மீண்டும் கண்களைமூடி உள்ளிழுத்து மெல்ல வெளியேற்றினான்.
அதற்குள் காஸ்ட்யூம் டிசைனரின் எடுபிடி ஒரு சட்டையுடன் வந்தான் அதனை பெற்றுக்கொண்ட ருத்ரபிரதாப் அதனை அணிந்து கொண்டான்
“ருத்ரா ..!! இது கந்தன் காஸ்ட்யூம் தானே ”
“ம்…ம் ”
“என்னடா செய்ய போற??? ” ஒருவித ஆச்சர்யமும் ஆவலும் பிரகாஷின் கண்களில் தெளிவாக தெரிந்தது
ஒரு கள்ளச்சிரிப்புடன் “வெய்ட் அண்ட் வாச் ” என்றான்
முகங்களின் தேடல் தொடரும்.
6 Comments
Super…. interesting
Super ruthra enna pirachvhanai unakku antha ponna aal maarattam panni pata patuththura santhana good ma gold war thotaruma appathan ava sariya varuvan
Ha haha super
சாதனாவோட ‘கோல்ட் வார’ எப்படி சமாளிக்க போறான் ருத்ரன்?
Semma ..
Thank u lakshmi