Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-10

முகங்கள்- 10

பிரேக் முடிந்து எடுத்த ஆறாவது டேக்கிலும் விழித்துக்கொண்டு நின்றாள் சந்தனா, இப்போது ருத்ரபிரதாப் கோபப்படவில்லை மாறாக சந்தனாவிற்கு விளக்கமளித்தான்

 

“நந்தினி உங்களுக்கு இந்த சீனோட இன்டன்ஸ் புரியல. உங்க கோபம் ஓங்கி அறையிர உங்க கையில தெரியனும். கந்தன் உங்களை விட சீனியர்தான் அதுக்கான மரியாதையை இங்க காட்டக்கூடாது சரிதானா??? பொண்ணுங்க கிட்ட யார் தப்பா நடந்தாலும் இப்படித்தான் திருப்பி கொடுக்கனும்னு உங்க ரசிகைகளுக்கு புரியனும். தியேட்டர்ல விசில் பறக்கும் பிளீஸ் கான்சன்ட்ரேட் ” அவன் அதிகம் கூறியிராத பிளீஸ் அவன் வாய்மொழி வந்தாலும் அதற்கான முகபாவம் அவனிடம் துளியும் இல்லை.

 

சந்தனாவிற்கு மனதிற்குள் குளிர்ந்தது. மதிய சாப்பாட்டு நேரமும் நெருங்கிவிட்டது. முக்கியமானவர்கள் தவிர மற்றவர்கள் உணவருந்தும் கூடத்தை நோக்கி நடந்தனர்.

 

“ஓ.கே கந்தன் லாஸ்ட் டேக் இது முடிஞ்சதும் லன்ச் பிரேக் ” என்றவன் “ஆக் ஷன் ” என்றான்

 

அவன் எதிர்பார்த்தது போல் மீண்டும் சொதப்பினாள் சந்தனா

 

“கட் … கட் … “ஆவேசம் பொங்க அலறியவன் .

 

“லன்ச் டிஸ்பர்ஸ் ” ஆக்ரோஷமான அவது குரலுக்கு பின் யார் தான் அங்கே நிற்பார்கள்.

 

மற்றவர்களைபோல் வேகமாக ஓடாவிட்டாலும் சந்தனாவும் சாப்பாட்டு அறை நோக்கி நடக்கலானாள்

 

இரண்டெட்டில் சந்தனாவை அடைந்தவன்.அவளது கையை பற்றி நிறுத்தினான்

 

” எப்படி தொட்டாலும் உனக்கு கோபம் வராதா டியர்? ”  அவனது பிடிக்குள் விடுபட துடித்துக்கொண்டிருந்த அவளது கையை தன் புறம் வேகமாக இழுத்தான். நிலை தடுமாற அவன் மேல் விழுந்தவளை இறுக அணைத்தவன் அவளது இடையில் தன் கை விரல்களை அழுந்தப் பதித்தான்.

 

முதலில் தடுமாறியவள் உடனே சுதாரித்து தன் பலம்கொண்ட மட்டும் அவனை குத்தி பின் தள்ளினாள். கண்கள் தீப்பொறியாயின.

 

“ப….ளா….ர் …” முகம்சிவக்க ஆத்திரத்தில் மூச்சிரைக்க நின்றவளை வெற்றிச் சிரிப்புடன் பார்த்தவன்.

 

“கட்- டேக் ஓக்கே ” என்றான்

 

நடப்பது இதுதான் என்று விளங்காமல் விழித்தவள் பிரகாஷிடம் திரும்பிச் சென்ற ருத்ரனின் முதுகினை வெறித்தவளை கலைத்தது பிரகாஷின் குரல்

 

“சம எமோஷன் நந்தினி யூ ஆர் கிரேட். ” சந்தனாவை பாராட்டியவன் அருகில் வந்துவிட்ட ருத்ரனிடம் “நந்தினியோட ரியாக்ஷனை மட்டும் கிலோசப்ல பக்காவா கேப்சர் பண்ணிட்டேன், டோன்ட் வொர்ரி” என்று சந்தோஷமாக கூறியவன் தன் குரலை தழைத்து ருத்ரனுக்கு மட்டும் கேட்கும்படியாய் “ஐஸ் பாக்ஸ் எடுத்துட்டு வரேன் கேரவன்ல வெயிட் பண்ணு ” என்றவன் கிட்சனை நோக்கி ஓடினான்.

 

கன்னத்தை தேய்த்தபடியே கேரவனுள் ஏறிக்கொண்டான் ருத்ரபிரதாப்

 

மீண்டும் ஜெயித்து விட்டான். அதே குள்ள நரித்தனத்துடன். கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவள் அவளுக்காக ஒதுக்கப்பட்ட கேரவனுள் சென்றாள். பசி துளியும் இல்லை.

 

கேரவனுள் கன்றிச்சிவந்த ருத்ரனின் கன்னங்களுக்கு ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தான் பிரகாஷ்.

 

கன்னத்தில் மட்டுமல்லாமல் அவனது மனதிலும் எரிச்சல் மூண்டது

 

‘ச் … சே…. இந்த பொண்ணோட ஒரே ரோதனையா போச்சு. எப்பவும் இதே மாதிரி டிரிக் செஞ்சு டேக் ஒ.கே செய்ய முடியாது. இதுக்கு ஏதாவது பர்மனன்ட்  சொல்யூஷன் வேணும்’ தீவிரமாக யோசித்தான் ருத்ரபிரதாப்

 

*****************************

 

அடர்ந்த காட்டிற்கு நடுவில் ஷுட்டிங் நடந்து கொண்டிருந்தது சந்தனாவின் கண்கள் ருத்ரனை தேடியது

 

தூரத்தில் யாரிடமோ கத்திக் கொண்டிருந்தான். ‘ச்…சே… இவன் இருக்கும் இடத்துல நிக்க கூட பிடிக்கல ‘ தனக்குள் புலம்பியவள் தன் கால் போன போக்கில் நடக்கலானாள்.

 

நேரம் ஆக ஆக இருள் சூழ்ந்தது. திரும்பிச்சென்றுவிடலாம் என்று நினைத்தவள் வழியை தவறவிட்டு விட்டாள்.இங்கும் அங்கும் ஓடிப்பார்த்தாள், வழி புலப்படவில்லை.அடி வயற்றில் குளிர் பரவியது. உடலெங்கும் வியர்க்கத் தொடங்கிவிட்டது.

 

தூரத்தில் யாரோ நடந்து வருவது தெரிந்தது. மனதில் லேசான திடம் பரவியது. அருகில் வந்தவுடன் தான் தெரிந்தது அது சந்திரிகா என்று.

 

சந்தனா பேசும் முன் அவரே பேசினார்

 

“என் பேட்டிய ஏன் கொன்னீங்க. அதை என் கிட்டே கூட ஏன் சொல்லலே.. நான் என்ன பாவம் செஞ்சேன்??? போலோ….. போலோ….??” கதறி அழுதார்

 

‘இவங்களுக்கு எப்படி தெரிஞ்சது?? ‘ குழப்பமுற்றவளாய்

 

“என்னம்மா சொல்றீங்க?? ”

 

ஆக்ரோஷமான சந்திரிகா சந்தனாவின் கூந்தலை கொத்தாக பற்றினாள்

 

“யார ஏமாத்த பார்க்கிற ஜாக்கிரதை ” கண்கள் ரத்தமென சிவந்தது.

 

அவரது முகத்தை அப்படி பார்த்ததுமே சந்தனாவிற்கு பயத்தில் நா வரண்டது, பேச்சு குழறியது.

 

“இ…..ல்…..லை. எ..ன….க்கு எ……துவு….மே தெ….ரியா….து, எல்…..லாம் ரு…….ரு ….த்ரன் தான். எ….ன்……னை மன்னிச்சிடுங்க ”

 

“ச..ந்…தி..ரி..கா….ம்ம்ம் மா.. எ..ன்…னை தயவு….செஞ்சி மன்னிச்சிடுங்க ”

 

“கொலை செ…ஞ்…சது ருத்ரன்தான். எ…எ..ன்ன விட்டுடுங்க.. பிளீஸ்…. ”

 

நெற்றி நிறைய வேர்வைத் துளிகளுடன் இடம் வலமாக தலையை வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தவள்

 

“இ…ல்….லை… ” என்ற அலரலுடன் கிழே விழுந்தாள். பின் மெல்ல எழுந்தவள்

 

சுற்றும் முற்றும் பார்த்து விழித்தாள் சந்திரிகாவை காணவில்லை.

 

ஒரு பெருமூச்சுடன் அருகிலிருந்த பாராங்கல்லின் மீது அமர்ந்துகொண்டாள்

 

மரங்கள் சல சலத்தன.

 

எங்கேயோ விலங்குகளின் சத்தம், வேகமான காற்றின் சத்தம். அதனுடன் சேர்ந்து மெல்லிய குரல். “என் இடத்துல நீயா???? . விடமாட்டேன் ….” ஆங்காரமாக ஒலித்தது.

 

பயத்தில் சப்த நாடியும் ஒடுங்கிவிட, கால்கள் செயலிழக்க தடுமாறி மீண்டும் கீழே விழுந்தாள். உடலெங்கும் வியர்க்க, வெளிறிய முகத்துடன் விரிந்த கண்களுடன் இங்கும் அங்கும் பார்த்தாள். அருகில் ஒரு பெரிய மரத்திற்கு பின் ஒரு உ….உருவம்…. அவளை வெறித்து பார்ப்பது தெரிந்தது. வேகமாக பின்னோக்கி தவழ்ந்தவள் ஏதோ ஒரு மரத்தில் மோதிக்கொண்டாள். அதிலேயே சாய்ந்து தன்னை ஒடுக்கிக் கொண்டவள் கைகளால் கால்களை தன் உடலோடு சேர்த்துப் பிடித்து அதில் முகம் புதைத்தாள்.கண்களை அழுந்த மூடிக்கொண்டாள்.

 

“கண்ண மூடிகிட்டா செஞ்ச தப்பு மறைஞ்சிடுமா ???? வி…ட..மா..ட்..டேன்… உன்னை…ருத்ரனை … அந்த பிரகாஷை…. விடவே மாட்டேன் ” மீண்டும் அந்தக் குரல் துள்ளியமாக கேட்டது

 

தன் பலம் கொண்ட மட்டும் காதுகளை தன் இரு கைகளால் அழுந்த மூடியவள்  “ஐ…யோ…. எ…ன்…ன. …விட்…டு..டு…. எ..ன்.ன…. விட்டுடு..!!!!!

 

அ…ம்…மா..!!!!!!!” அலறினாள் கண்களை திறக்காமலே எழுந்து ஓடினாள். ஓடியவள் எதிலோ கால் இடரி  “ஆ…ஆ… “என்ற சத்தத்துடன் கீழே விழுந்தாள்

 

பிறகு நிசப்தம், இருள்…அவளது இதயத்துடிப்பு மட்டுமே கேட்டது

 

பல மணி நேரமாக தோன்றிய சில நிமிடங்கள் கடந்த பின் யாரோ அவளது தோளை தட்டிய உணர்வு தோன்றவும். துள்ளி குதித்து எழுந்தவள் . கண்களை கூட திறக்காமல்

 

“பே….ய்……பே…ய்…” என்று அலற ஆரம்பித்தாள்

 

அலறியவளின் வாய் வலிய ஒரு கரத்தினால் அழுந்த மூடப்பட்டது.

 

“ம்….ம்…ம்…” திமிறினாள்

 

“ஷ்….ஷ்…நந்தினி . நான் ருத்ரன்… கண்னை திறந்துப் பார்.”

 

முகங்களின் தேடல் தொடரும்…




5 Comments

You cannot copy content of this page