Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-13

முகங்கள் -13

 

கிருபாகரன் சேரிலும் மற்ற மூவர் சோபாவிலும் அமர்ந்திருந்தனர்.அவனது பார்வை எல்லோரையும் விட நந்தினியின் மீதே படிந்திருந்தது.

 

முதல் கேள்வியையும் அவன் அவளிடமே கேட்டான் “நந்தினி மேடம், சந்தனா மயங்கி விழும் பொழுது நீங்க அங்கதானே இருந்தீங்க? ”

 

“……..ஆ…..மா…….ம் சா…..ர்” வார்த்தை வரவில்லை

 

“உடனே உயிர் போயிடுச்சா? ”

 

நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்த துக்கம் கண்ணீராய் வழிந்துவிடாமலிருக்க உதட்டை கடித்தாள்

 

“சொல்லுங்க நந்தினி சந்தனா ஸ்பாட் அவுட்டா? “- அவளது முக உணர்வுகளை துல்லியமாக கவனித்தபடியே சிறிதும் இரக்கமின்றி கேட்டான்

 

அவனது நோக்கம் புரிய, இடை புகுந்தான் ருத்ரபிரதாப் சந்தனாவின் சில்லிட்டிருந்த கைகளைபற்றி தன் கைகளுள் வைத்துக்கொண்டு “இட்ஸ் ஓ கே நந்தினி. சந்தனா இனி எப்போதும் வரப்போறதில்ல நீ ஏன் அதையே நினைச்சு கவலைபடர.?” லேசாக அவளது கையை அழுத்தினான்

 

“அவங்க பதில் சொல்லட்டும் மிஸ்டர் ருத்ரபிரதாப்” – அழுத்தமாகவே கூறினான் கிருபாகரன்

 

மூவரின் முகங்களையும் பார்த்துக்கொண்டு பேசாமல் அமர்ந்திருந்தான் பிரகாஷ். மனதிற்குள் இருக்கும் படபடப்பை வெளியேற விட்டுவிடாமல் காக்கவே பெரும்பாடு பட்டான் அவன்

 

கிருபாகரனின் கண்களை நேராக பார்த்து  பேசினான் ருத்ரபிரதாப்

 

“இல்லை இன்ஸ்பெக்டர், சந்தனா இறந்ததை நேரா பார்த்ததால இவங்க பயங்கர ஸ்ட்ரெஸ் ஆகிட்டாங்க. மறுபடி சகஜ நிலைக்கு திரும்ப பலநாள் ஆனது, இது சம்பந்தமா மறுபடியும் ஷூட்டிங் தடைப்படகூடாது அதுதான் என் நோக்கம்”

 

அவனது விளக்கத்தை விடுத்து மீண்டும் அவளிடமே பேசலானான் கிருபாகரன் “நீங்க சொல்லுங்க நந்தினி, சந்தனா விழுந்த உடனே இறந்துட்டாங்களா? இல்லை கடைசியா ஏதாவது பேசனாங்களா? ”

 

“அ….து…” பேச நா எழவில்லை அவளுக்கு. அவள் எப்படி இறந்தாள் என்று அவளிடமே கேட்டால் என்னதான் பதில் சொல்வது.

 

மேலும் ஒருபுறம் அவளது கைகளை ருத்ரன் அழுத்திக்கொண்டிருந்தான்.

 

சட்டென அவனது அழுத்தம் மாறியது, மிருதுவாக அவளது கைகளை தடவிக்கொடுத்தான்.. அதே போல் தோள்களிலும் தோழமையுடன் தட்டிக்கொடுத்தான்

 

“எ…து…வு…மே….பே…ச…..லை..சார்..” தட்டுத் தடுமாறி கூறிவிட்டாள்

 

“ஓ….ஓ….”

 

இன்னும் சில கேள்விகளை கேட்ட கிருபாகரன் மூவரது முகங்களை மட்டுமே நோட்டமிட்டான். தனித்தனியாக மூவரையும் கேட்ட கேள்விகள் தான். அதையே மூவரையும் வைத்துக்கொண்டு கேட்டு முடித்தான்.அவன் விசாரணையை முடிக்கும் வரை ருத்ரபிரதாப் சந்தனாவின் கைகளை பற்றியபடியே இருந்தான்.

 

“ஓ கே ருத்ரன். இன்றைக்கு போதும். சீ யூ லேட்டர், ஓகே பிரகாஷ்” என்று இருவரிடமும் கைகுலுக்கிவிட்டு புறப்பட்டான் கிருபாகரன்

 

‘மறுபடியும் வேற வருவீங்களா சார்? கிழிஞ்சிது ‘ – கேள்வியாய் அவனை பார்த்துக்கொன்டு நின்றான் பிரகாஷ்,

 

கிருபாகரன் கண்ணுக்கு மறைந்ததும் அனுப்பிவிட்டு சந்தனாவை ஏறிட்டான் ருத்ரன்

 

அவளோ பற்றியிருந்த அவனது கையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

சட்டென அவளை விடுவித்தவன்

 

“ரூமுக்கு போங்க நந்தினி”

 

பதிலேதும் பேசாமல் இரண்டடி நடந்தவள் நின்று திரும்பி ருத்ரபிரதாப்பை பார்த்தவளின் கண்கள் கலங்கியிருந்தன, “அந்த வீடியோவே நான் உங்க பிளான் படி பேச போதுமானது, போதும் இனி இப்படி கையை பிடிக்கனும்னு அவசியமில்லை” குரல் நடுக்கத்திலும் தெளிவாக கூறினாள்.

 

அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த ருத்ரனின் கவனத்தை திருப்பினான் பிரகாஷ்.

 

“பாவம் ருத்ரா அவங்க இறந்துட்டாங்கன்னு அவங்க கிட்டையே சொல்றது எவ்வுளவு கொடுமை,”

 

“ஷ்…ஷ்…. தேவையில்லாம பேசி டைம் வேஸ்ட் பண்ணாத பிரகாஷ் ”

 

கைப்பேசியை எடுத்து அவசரமாக காதுக்கு கொடுத்தான் ருத்ரன்.

 

“என்ன கமிஷனர் சார், சென்னைல வேற கேஸ் எதுவுமே இல்லையா, உங்க இன்ஸ்பெக்டர் மகாபலிபுரம் வரைக்கும் வந்து டைம் வேஸ்ட் பண்றாரே? ”

 

“….”

 

“முடிச்சா என்ன சார் இன்னும் ரெண்டு கேஸை எடுத்து போடவேண்டியது தானே. நம்ப நாட்ல கேசுக்கா பஞ்சம்?”அவன் பேச்சில் அதிக கோபம் தெரிந்தது

 

“…”

 

“ஓ கே இனிமேலாவது கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க ”

 

தொடர்பை துண்டித்தவன் . மீண்டும் வேறு நம்பருக்கு தொடர்பு கொண்டான்

 

“குட் ரவி. நீங்க கரெக்ட் டைம்க்கு இன்பர்மேஷன் கொடுத்ததாலதான் நான் இங்க எல்லாரையும் அலர்ட் பண்ண முடிஞ்சது. குட் வொர்க். இதற்கான பரிசு உங்க அகௌன்ட்ல ரிப்லக்ட் ஆகும் ” தொடர்பை துண்டித்தான்

 

‘ இவன் ஜகஜால கில்லாடியா இருக்கானே நம்ம கூடவேதான் இருக்கான் குடிக்கிறான். இதெல்லாம் எப்ப நடக்குது??!!!’ தலையை பிய்த்துக்கொண்டான் பிரகாஷ்

*************************************

ஐந்து நட்சத்திர பார், கையில் கோப்பையுடன் ருத்ரனும் சஞ்சயும் “சி…யர்ஸ்…” வைத்துக் கொண்டனர்

 

“அப்புறம் என்னாச்சு ருத்ரன்” சிறு பதட்டத்துடன் கேட்டான் சஞ்சய்

 

ஒரு மிடறு மதுவை அருந்தி அதனை விழிமூடி ருசித்து பருகிய ருத்ரபிரதாப்

 

“எல்லாம் நம்ம போட்ட பிளான்படி சரியா போகுது சஞ்சய். டோன்ட் வொர்ரி ”

 

உடனே முகத்திலிருந்த பதட்டம் மறைய “யா யா ஐ நோ யூ மேன், தி கிரேட் டைரக்டர் ருத்ரபிரதாப் . ஹா…ஹா…ஹா..”

 

அருகே அரைகுறையாடையோடு ஒரு பெண் வர அவளுடன் கைகோர்த்துக்கொண்டு, மதுவின் மயக்கத்தில் ஆடிக்கொண்டிருக்கும் கூட்டத்தினுள் புகுந்தான் சஞ்சய்

 

தன் கையினில் இருந்த காலி கோப்பையை மேஜை மீது வைத்தவன்,பேரரை நோக்கி  “ஒன் மோர் பெக் ” என்று சைகை செய்தான்

 

உடனே ஒரு கோப்பையுடன் விரைந்து வந்தான் பேரர்

 

ஆனால் இடையில் வந்த ஒரு பெண் அந்தகோப்பையை பெற்றுக்கொண்டு ஒருவிதமாக உடம்பை நெளித்து அவன்புறம் கோப்பையை நீட்டி “உட் யூ லைக் டூ டான்ஸ் வித் மீ ” என்று கண்களால் அழைத்தாள்

 

அவளது கை படாமல் அவளிடமிருந்த கோப்பையை பெற்றுக்கொண்டவன் “சாரி மிஸ், நாட் இன்டரஸ்டட் ” என்று கூறிவிட்டு தன் கையிலிருந்த கோப்பையில் கவனம் செலுத்தலானான்.

 

மூக்குடைப்பட்டவளாக முகம் சிவக்க அந்தப்பெண் அங்கிருந்து நகர்ந்தாள்

 

இதனை தூரத்திலிருந்து பார்த்தவண்ணம் அவனை நெருங்கிய சஞ்சய் “என்ன ஆளுடா நீ, அழகை ரசிக்க தெரியாம, இதுக்கெல்லாம் எத்தனை பேர் ஏங்கித் தவிக்கிறாங்க தெரியுமா?, நீ என்னடான்னா தானா வந்து விழுறதை கூட ஒதுக்கிவிடுற ” அவனது குரலில் ஆச்சர்யம், அறிவுரை, வருத்தம், என்று எல்லாம் இருந்தது

 

ருத்ர பிரதாபிடமிருந்து ஓர் சிரிப்பு மட்டுமே அவனுக்கு பதிலாக கிடைத்தது

 

அருகில் வந்து விட்ட பேரரிடமிருந்து ஒரு கோப்பையை எடுத்த சஞ்சய் “நீ இதுக்கெல்லாம் சரிபடமாட்ட,  பட் ஐ வான்ட் டு என்ஜாய் மை லைப், டேக் கேர் ஆப் சந்தனா, பீ கேர்ப்புல் வித் கிருபாகரன் ” என்று முடித்தவன் மீண்டும் ஆடிக்கொண்டே கூட்டத்தினுள் மறைந்தான். கையிலிருந்த கோப்பையை ஏதோ சிந்தித்தபடி பார்த்துக்கொண்டிருந்தான் ருத்ரபிரதாப்

 

முகங்களின் தேடல் தொடரும்..

 




10 Comments

  • Thadsayani Aravinthan says:

    Hi mam

    ருத்திரபிரதாப்பிற்கும் சந்த்யாவுக்குள் என்ன சம்மந்தம்,நந்தினிக்கும் ருத்திரபிரதாப்பிற்கும் என்ன பகை,எதற்காக நந்தினியின் இறப்பை அது கொலையா மரணமா என்று தெரியவில்லை ஆனால் இவரின் மரணத்தை பயன்படுத்துகின்றார்கள்,அதுவும் இந்த மரணத்தை வைத்துக்கொண்டு இன்னொரு பெண்ணை அவரின் அனுமதியின்றி அவரை தங்கள் காரியத்திற்கு பயன்படுத்துகின்றனர்,எல்லாமே திட்டமிட்டபடி நடக்கிறது என்றால் இவர்கள் திட்டத்தின் முடிவு என்ன.

    நன்றி

    • Indra Selvam says:

      Ungalin commentai padipathi eppodumea ennaku aarvam than. Ennoda kadai mattum illai matha kadaikalukum ungaloda commentai padipene. I am so happy to see ur comment for my novel. Neenga keatta kealvikku ellam badhil sollithan intha novelai nagarthanum. Entha kealviyaum vittufamatene. Ellathukum nichayam bathil iruku

  • Nataraj Nataraj says:

    Appa ruthra nee yosikka aarampichchitiya athu santhanavukku nallathu ilaie pochi atuththu enna seiya poraano.mmmm.I’m waiting.

  • ugina begum says:

    Nice ud sis

  • Hadijha Khaliq says:

    Rudhran sandhana va nalla lock panni vachirukan unmaiyai pesa vidama….hey indha sadhiku sanjay um koota? Appa nadhini oda death planned murder dhaana? Ore kulapama iruku…

  • Lakshmi Narayanan says:

    Ennamo nadakuthu marmama irukkuthu

You cannot copy content of this page