முகங்கள்-21
2291
11
முகங்கள்- 21
“பிரேக்கப் ஆனாதானே ரீசன் வேணும்?” என்று சர்வசாதாரணமாக கூறிவிட்டு அங்கிருந்த லேன்ட் லயன் போனை எடுத்தவன் எண் ஒன்பதை தட்டி, “ரெண்டு மீல்ஸ் ” என்று தொடர்பை துண்டித்தான்.
சாவதானமாக டீவியை ஆன் செய்துவிட்டு பெட்டில் பொத்தென விழுந்தான்.
டிவியில் பிளாஷ் நியூசாக இவனுடைய பிரஸ் மீட்தான் ஓடிக்கொண்டிருந்தது.
ருத்ரனும் நந்தினியும் ஒருவரோடு ஒருவர் பார்க்கும் போட்டோ ஸ்கிரீனில் இருக்க, “பிரபல டைரக்டர் ருத்ரபிரதாப் அவருடைய தற்போதைய படத்தின் கதாநாயகி நந்தினியை மணக்கப்போவதாக அறிவிப்பு “என்று கொட்டை எழுத்தில் கீழே ஓடிக்கொண்டிருந்தது.
“இந்த சேனல் ஃபோட்டோகிராப்பர் யாருன்னு விசாரி பிரகாஷ். திறமைசாலியா இருக்கான், அபூர்வமான போட்டோ கிளிக். நந்தினி சாந்தமா இருக்கும் போது சூப்பரா கேப்ச்சர் பண்ணிட்டான். நெக்ஸ்ட் பட போட்டோ ஷூட் இவனுக்கு கொடுப்போம்” என்று பேசிக்கொண்டே போனவன் பிரகாஷிடமிருந்து பதில் வராததால் அவனை திரும்பிப் பார்த்தான்
பிரகாஷ் அவனை வெறித்துப் பார்ப்பது தெரிந்தது, “ஏய் பிரகாஷ் என்னாச்சு? ஏன் அங்கயே நிக்கிற இங்க வா!” என்று பெட்டை காட்டினான்.
“டோன்ட் ஆக்ட் ருத்ரா. அவங்களுக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை, அவங்கள அளவுக்கதிகமா காயப்படுத்தற”
“ஐ நோ! பட் அவ என் கூடவே இருக்கிறதுதான் நமக்கு நல்லது”
“நம்மளோட சுயநலத்துக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிக்கிறது பாவம் ருத்ரா”
“போதும் உன் சொற்பொழிவு, என் கூட தானே இருக்க? நமக்கு எதிரிகள் அதிகமாகிட்டே போறாங்கன்னு உனக்கு தெரியாதா? அந்த போலீஸ் கிருபாகரன், அஷ்வின், இப்போ சஞ்சய்…”
“சஞ்சய்!! அவன் என்ன பண்ணினான்?” – பேசிக் கொண்டிருந்தவனை இடைவெட்டி கேட்டான்.
“எஸ்… நேத்து நைட் நந்தினிகிட்ட தப்பா நடக்க முயற்சி செஞ்சிருக்கான்”
“வாட்???!!!! அவன் கிட்ட இவ நந்தினியில்ல சந்தனான்னு சொல்லப்போறதா சொன்னியே?”
“அதெல்லாம் சொல்லியாச்சு” அலுப்பாக பேசினான்
“அப்புறம் ஏன்?”
“அவனப்பத்தி நமக்கும் நல்லா தெரியுமே!”
“பிளடி ராஸ்கல், அவன சும்மாவா விட்ட” கோபத்தில் பிரகாஷின் கைமுஷ்ட்டி இறுகியது.
“காம் டவுன், அவன நான் டீல் பண்ணிக்கிறேன்” – அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே காலிங் பெல் சத்தம் கேட்டது.
ருத்ரன் சென்று கதவை திறக்க சாப்பாட்டுடன் வந்தான் ரூம் சர்வீஸ் பாய். சாப்பாட்டை டேபிள் மீது வைத்தவன், பரிமார ஆயத்தமானான்.
“நாங்க பார்த்துக்கிறோம்… நீ போ…” என்று ருத்ரன் கூற அந்த சர்வர் வெளியேறினான்.
“நமக்கு மட்டுமில்ல நந்தினிக்கும் இதுதான் நல்லது, வா சாப்பிடலாம், என்னோட இன்டஸ்ட்ரி சிம் ஆன் பண்ணனும், பிஸாஷ் நியூசை பாத்துட்டு ஏகப்பட்ட கால்ஸ் வந்திருக்கும்” என்று பேசியபடியே பிரகாஷின் கைப்பற்றி அழைத்து சென்று சாப்பிட அமர்த்தினான்.
ருத்ரனின் திறமை இதுதான் அவரவருக்கு ஏற்றபடி கூறி, தான் நினைத்ததை முடிப்பது, அதனால் தான் அவனால் சிறந்த டைரக்டராக முடிந்தது.
*****************
நந்தினியின் செல்போனில் வந்த குறுஞ்செய்தி, வாட்சப் வாழ்த்துகளுக்கு விடிய விடிய பிரகாஷ்தான் பதிலளித்துக் கொண்டிருந்தான். அதில் சில செய்திகள் அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
“வெய்ட்டிங் சோ லாங் ஃபார் யுவர் கம்பெனி டியர்… ஒன்லி ஒன் நைட் ப்ளீஸ்” என்று ஒரு டைரக்டரும்,
“வாட்! ஆர் யூ கமிட்டட்? நோ டியர், ஐ வான்ட் யூ ” என்று ஒரு ஹீரோவும் அனுப்பியிருத்தது அவனை முகம் சுளிக்க வைத்தது.
“எண்ணிலடங்கா ஆசையுடன் உனக்காக நான் காத்திருந்தேன், இறுதி வரை தாமரை இலை தண்ணீராகவே இருந்துவிட்டாயே கண்மணி!” என்று ஒரு பாடலாசிரியர் கூட அனுப்பியிருந்தான்.
‘கடவுளே!’ – தலையிலடித்துக் கொண்டான். பெண்ணாக பிறந்துவிட்ட பாவத்திற்கு எத்தனை கண்றாவிகளை சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது! உண்மையில் நந்தினியை நினைத்தால் பாவமாக இருந்தது பிரகாஷிற்கு.
“பிளீஸ், ஒன் டேட் வித்மி, ஸ்டிரைட்டாவே கேட்கிறேன் எல்லாவாட்டியும் மாதிரி இப்பவும் புரியாதமாதிரி நடிக்காத” என்கிற புலம்பலை படித்த போது எத்தனை பேருக்கு தண்ணிகாட்டியிருக்கிறாள் என்று நந்தினியின் சாமர்த்தியத்தை மெச்சினான்.
‘கழுவுற மீன்ல நழுவுற மீன்’ – இண்டஸ்ட்ரியில் ரகசியமாக உலா வரும் நந்தினியின் இன்னொரு பெயர். அந்த பெயர் அவளுக்கு எத்தனை பொருத்தம் என்பதை இப்போது கண்கூடாகப் பார்த்தான் பிரகாஷ்.
தொடர்ந்து வந்துகொண்டிருந்த இது போன்ற நாகரீகமற்ற கீழ்த்தரமான குறுஞ்செய்திகள் ருத்ரனின் முடிவு சரிதான் என்னும் எண்ணத்தை அவன் மனதில் விதைத்தது.
அவரவர்களுக்கு ஏற்றார் போல் பதில் அனுப்பிவிட்டு எல்லா மெசேஜையும் அழித்தும் விட்டான். நூரில் ஒரு சதவிகிதமாக இதை அவள் பார்த்து விட்டால் இன்னும் பிரச்சனைதான் என்றது அவனது மூளை.
அவளுக்கு வரும் போன் கால்களை அட்டென்ட் செய்து “மேடம் ஷுட்டிங்ல இருக்காங்க முடிஞ்சதும் கால் பேக் பண்ணுவாங்க” என்று சொல்லி கட் செய்ய ஒரு பெண்ணை நியமித்திருந்தான் ருத்ரன்.
அனைவருடைய அழைப்பையும் தவிர்க்கச் செய்துவிடலாம். ஆனால் சந்திரிக்காவை அப்படி சுலபமாக தவிர்த்துவிட முடியாதல்லவா! தாய் மகளிடம் பேசியே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்த போது வேறு வழியில்லாமல் தலையாட்டினான் ருத்ரபிரதாப். அலைபேசி உரையாடல் சந்திரிக்காவை அமைதிப்படுத்தவில்லை. இந்த திடீர் கல்யாண அறிவிப்பும் அவளுக்கு பிடித்தமானதாக இல்லை. எனவே உடனே சென்னைக்கு புறப்பட்டு வருவதாக கூறினாள்.
பிரகாஷ்தான் கலவரமாக தெரிந்தான். ருத்ரபிரதாபோ, வரட்டும் பாத்துக்கலாம் என்று விட்டுவிட்டு தன் வேலையில் மூழ்கினான். அவனுக்கு நன்றாக தெரியும் சந்திரிகா வருவதற்கு எப்படியும் ஒருவாரம் ஆகிவிடும் என்று, ஏனென்றால் சந்திரிகாவின் நெருங்கி உறவில் ஒர் திருமணம், அதனால் இப்போது இது தேவையில்லாத கவலை என்று ஒதுக்கிவைத்தான்
சந்திரிகாவை போல் ருத்ரபிரதாப்பின் தந்தை மோகன்பிரதாப் மகனுடன் பேசினார்.
“இது என்ன திடீர்னு முடிவெடுத்திருக்க ருத்ரு ”
“பப்பா, ஐ லவ் ஹர்”
“போன வாரம் வரைக்கும் லவ்வே பண்ணலைன்னு சொன்ன, அதனால இங்க வினிஷாவை உனக்காக கமிட் பண்ணியிருந்தோம்” அவரது குரலில் கோபமிருந்தது.
“சாரி பப்பா, நான் அம்மாகிட்ட வினிஷா வேண்டான்னு சொல்லியாச்சு, அன்ட் ஆல்சோ ஐ வான்ட் டு சூஸ் மை லைப் பாட்னர், தட் இஸ் நந்தினி” அவனது வாக்கியத்தில் சாரி இருந்த போதும் குரலில் பிடிவாதம் இருந்தது.
“பட்… தட்ஸ் நாட் எ குட் ஐடியா ருத்ரா… ஒரு நடிகை எப்படிப்பா நம்ம ஃபேமிலிக்கு?”
“நடிப்பு அவளோட தொழில்… தொழிலை வச்சு அவளோட கேரக்டரை முடிவு பண்ணாதீங்க டாட்…” – அழுத்தமாக கூறி தந்தையை வாயடைக்கச் செய்தான்.
இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசினாலும் வார்த்தை வலுத்துவிடும் என்று மூத்தவருக்கு புரிந்தது. அதுவே அவருடைய கோபத்தை அதிகரிக்கவும் செய்தது.
“ஐ வில் நாட் சப்போர்ட் யுவர் ஸ்டுப்பிடிட்டி…”(உன்னோட முட்டாள்தனத்தை நான் ஆதரிக்க மாட்டேன்’) என்றார் கோபத்துடன்.
“அதை நா எதிர்பார்க்கல” – அலட்சியமாக கூறினான். தந்தைக்கும் மகனுக்குமான உரையாடல் மனஸ்தாபத்துடனே முடிந்தது.
அடுத்த சில நிமிடங்களில் தாயிடமிருந்து அழைப்பு வந்தது. இவர் புலம்பி தள்ளியிருப்பார் என்று புரிந்துக் கொண்ட ருத்ரன் நான்கைந்து முறை அழைப்பொலி ஒலித்த பிறகே போனை எடுத்தான்.
“என்னப்பா! அப்பாகிட்ட ஏதேதோ பேசிட்டியாம்!”- ஆரம்பிக்கும் போதே கரகரத்த குரலுடன் துவங்கினார். ஒரு நடிகையை மருமகளாக ஏற்க அவரது மனமும் மறுத்தது. அது மட்டுமல்லாமல் நந்தினியின் பல கிசுகிசுக்கள் அவள் காதிலும் விழத்தான் செய்தது. அவர் உணர்வுப்பூர்வமாக அவனது முடிவை மாற்ற முயன்றார்.
தந்தையிடம் வெட்டிப் பேசியது போல் மூக்கை உறிஞ்சும் தாயிடம் பேசமுடியவில்லை ருத்ரபிரதாப்பிற்கு. இறங்கிய குரலில் தாய்மொழியில் அவருக்கு புரியும் விதமாக எடுத்துக் கூறினான்.
“புரளியெல்லாம் புரளி மட்டும் தான் ம்மா… அதுல ஒரு பர்சன்ட் கூட உண்மை இருக்காது. பக்கத்துலேயே இருந்து கவனிச்சிருக்கேன். அவ்வளவு சீக்கிரம் ஏமார்ந்துடுவேனா? உங்க பையன் மேல உங்களுக்கு இவ்வளவு தான் நம்பிக்கையா? ஷி ஐஸ் வெரி குட் அட் ஹார்ட் ம்மா… அவ மனசு ரொம்ப அழகானது. என்னை நம்புங்க. எனக்கு மனைவியா, உங்களுக்கு நல்ல மருமகளா இருப்பா… நம்ம குடும்பத்துக்கு தகுந்த பொண்ணாதான் நா செலெக்ட் பண்ணியிருக்கேன். தைரியமா இருங்க” என்று பேசி தாயின் மனதை தன் பக்கம் வளைத்தான்.
***********************
உறங்கச் செல்லும் முன் சந்தனாவின் அறைக்கு தொடர்பு கொண்ட ருத்ரபிரதாப், “காலை ஒன்பது மணிக்கு தயாரா இரு, ஷுட் இருக்கு” என்றான். அவள் அமைதியாக கேட்டுக்கொண்டாள்.
“இன்னொரு முக்கியமான விஷயம்,நம்ம கல்யாண விஷயம் கேள்விப்பட்டு, எல்லாரும் அதைபத்திதான் பேசுவாங்க. பி கேர்ப்புல் இன் யுவர் எமோஷன்ஸ்” அவளை எச்சரிப்பது போலிருந்தது அவனது குரல்.
கோபம் முணுமுணுவென்று நுனிமூக்கு வரை வந்தது அவளுக்கு. பதில் சொல்லாமல் சட்டென்று அழைப்பை துண்டித்தாள்.அவளுடைய துடுக்குத்தனமும் தைரியமும் ருத்ரபிரதாப்பின் முகத்தில் புன்னகையை பூக்கச் செய்தது.
அவளுடனான வாழ்வு அவனுக்கு ஏற்ற சவாலாக இருக்கப்போகிறது என்று சிந்தித்தவன், “இட் இஸ் கோயிங் டு பி இன்ட்ரஸ்ட்டிங்,திரில்லிங் அன்ட் அட்வென்சுரஸ்” என்று முணுமுணுத்தபடி மெத்தையில் விழுந்தான்
முகங்களின் தேடல் தொடரும்…..
11 Comments
Nice
Pavam santhana patam mutinthavutan thanakku vituthalainu ninaikira .aana athukkum ruthra aappu ready panni vachurukkan ithu therium pothu santhanavin manam patum patu cha ruthra avala vittutu.
Hi mam
தாய் மகன் தந்தை மகன் இவர்களின் உரையாடல்களில் இருந்து தெரிகின்றது ருத்திரன் எப்படியும் சந்தனாவை திருமணம் செய்திருப்பார் என்று, ஆனால் இப்போது சந்தர்ப்பம் சூழ்நில்லை தனக்கு எதிராக திரும்பிவிடுமோ என்கின்ற சந்தர்ப்பத்தை ,மிக அழகாக தனக்கு சாதகமாக அமைத்து ,திருமண அறிவிப்பை செய்து அதை மேற்கொண்டு எக்காரணத்தாலும் தடைப்பட்டுவிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கின்றார்,ஆனால் சாதனாவின் நிலை தெரியவில்லை,எப்போதுமே தன்னை மிரட்டும் ருத்திரபிரதாப்பை பற்றி ஒருமுறை கூட நல்லவிதமாக நினைத்தது இல்லையே,நல்லவிதமாக நினைக்கும்படி ருத்திரனும் நடந்ததில்லை,பார்ப்போம் திருமணத்தை சாதனா முழுமனதோடு ஏற்கின்றாரா என்று.
நன்றி
Paavam sandhana….ini rudhranudanana aval vaazhvu eppadi iruka pogutho….hmmm
Parkathanea pogirome….. ungalathu vimarsanathirku nandri thozhi
எதுக்காக அவன் கல்யாணம் விஷயம் எடுத்திருந்தாலும்…. இருவரது உரையாடலும் ரசிக்க தான் செய்கிறது….
Ungalai rasikaveaithadhil perumagilchi adaigirene, nandri daisy
ஆசை இல்லாமல் திருமணம் செய்ய நினைக்க மாட்டான் ருத்ரன்.பின் ஏன் இத்தனை ரெளத்ரம்
Ungalathu kealviku koodiya viraivil badhil alilirene. Ungalathu aatharavirku nandri shamika
entha idathilayaavathu sarukkuve ruthraa
Kathirungal saranya….. kalam varum.ungalathu vimarsanathirku nandri