முகங்கள் -22
2349
22
முகங்கள் – 22
காலை 8.30 மணிக்கெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து விட்டாள் சந்தனா. தாமதமாக வருவது ருத்ரனுக்கு பிடிக்காது. ஆனால் அவள் சீக்கிரம் வந்ததற்கான காரணம் அவனுடைய கோபம் அல்ல. வேகமாக இந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டால் அவளுக்கு விடுதலை அல்லவா! எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்து, அவனுடைய இரும்புப் பிடியிலிருந்து விடுதலை பெற்றுவிட வேண்டும் என்கிற குறிக்கோள் அவளை உந்தித் தள்ளியது.
இப்போது கொடுக்க நினைக்கும் ஒத்துழைப்பை முன்பே கொடுத்திருந்தால் ஒருவேளை இந்த திருமண பேச்சே எழாமல் இருந்திருக்கக் கூடும்… ஆனால் முடிந்ததை யாராலும் மாற்ற முடியாது, அதனால் இனி ருத்ரன் என்ன சொன்னாலும் அதை செவ்வனே செய்து முடித்து விட வேண்டும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த நரகத்தை விட்டு முக்கியமாக இந்த ருத்ரபிரதாப்பை விட்டு தூரமாக போக வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள். அதனால் தான் அறைமணிநேரம் முன்னதாகவே வந்துவிட்டாள்
ஷுட்டிங் ஸ்பாட்டின் செட் டிசைனரிடம் ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்த ருத்ரபிரதாப் அவளை பார்த்ததும் பாராட்டுதலாக சிரித்தான். பதிலுக்கு சிரிக்க முடியாததால் தலைகவிழ்ந்து கொண்டாள்.
உடன் வேலை செய்யும் அத்தனை பேரும் நந்தினிக்கும் ருத்ரபிரதாப்பிற்கும் வாழ்த்து தெரிவித்தார்கள். ஓர் ஆழமான புன்னகையுடன் அவர்களது வாழ்த்துகளை ஏற்றான் ருத்ரபிரதாப். இவளோ ஒருவாறு சிரித்தார்ப்போல் நன்றி சொல்லி சமாளித்தாள்.
அன்றைய படப்பிடிப்பு மொத்தமும் காதல் காட்சிகளாக இருக்க திணறிப்போனாள் சந்தனா.
“கட்… கட்….” மானிட்டரை பார்த்தபடி எரிச்சலுடன் எழுந்த ருத்ரபிரதாப், சந்தனாவை பார்த்ததும் நிதானித்தான்.
அவளை திட்டவும் முடியாது, திட்டவும் கூடாது, ஆனால் டேக் ஓகே ஆகவேண்டுமே…
மனதிற்குள், “காம் டவுன், காம் டவும்” என்று உறுபோட்டவன் அவர்களை நெருங்குகையில், மித்ரன் அவளுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். சந்தனாவின் முகம் கோபத்தில் சிவந்தது, இருப்பினும் தன்னை நோக்கி நடந்து வரும் ருத்ரனை கவனித்தவள் தன்னை சமனப்படுத்திக்கொண்டாள்.
அவர்களருகில் வந்தவன் சில்வர் ஷீட்டை பிடித்திருந்த சங்கரிடம் அவனுக்கு மட்டும் கேட்கும் படி குரலை தாழ்த்தி பேசினான், “என்னவாம் மித்ரனுக்கு, ஷாட் ஓகேயாக விடாம நந்தினிகிட்ட ஏதோபேசி அவங்கள அப்செட் பண்ணறாரே!” என்றான்.
இந்தக் கேள்வியில் கலவரமானான் சங்கர்.
ஹீரோ ஹீரோயினின் முகம் பொலிவாக தெரிய அவர்களின் மீது அதிக வெளிச்சம் பட வேண்டும் அதற்காக ஷூட்டிங்கில் சில்வர் ஷீட் பயன்படுத்துவது வழக்கம். சில்வர் ஷீட்டை பிடித்திருப்பவர் மட்டுமே படப்பிடிப்பின் போது நடிகர்களின் அருகே நிற்க முடியும், அதனால் மித்ரன் எது பேசியிருந்தாலும் அது நிச்சயம் சங்கரின் காதில் விழுந்திருக்கும் என்று தெரிந்துதான் கேட்டான் ருத்ரபிரதாப்.
ஆனால் சங்கர் தயங்கினான், அவனது வெளறிய முகம் அவனது சந்தேகத்தை உறுதி படுத்தியது.
“சொல்லு சங்கர்” என்றான் அழுத்தத்துடன்
“வ…ந்….து…. மேடம்….கி…கிட்ட பர்..சன..லா….” முடிக்க முடியாமல் எச்சில் விழுங்கினான்.
உள்ளே எழுந்த கடுங் கோபத்தை உள்ளேயே அடக்கினான், சங்கரை மேலும் தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பாமல், சந்தனாவின் அருகே சென்றவன் உரிமையாய் அவளது கைபற்றி “என்னாச்சு டியர், எனி பிராப்ளம்?” என்று மித்ரனை பார்த்தான், அவன் தான் பிராப்ளமா என்று கேட்காமல் கேட்டன அவனது பார்வை
உடனே மித்ரனோ “நீங்களே பாருங்க ருத்ரன்… என்னவோ பர்ஸ்ட் டைம் ரொமான்ஸ் சீன் நடிக்கறமாதிரி ஷீ இஸ் கெட்டிங் டென்ஸ்ட்” என்று சந்தனாவின் மேல் பழியை தூக்கி போட்டான்.
“அப்படியா நந்தினி? ஆர் யு ஓகே?” அவளது நெற்றியை தொட்டுப் பார்த்தவனின் குரலில் வழக்கமாக இருக்கும் கண்டிப்பு துளியும் இல்லை.
அவள் பார்வை வியப்புடன் அவன் முகத்தில் படிந்தது. காற்றில் களைந்த அவளது நெற்றி முடியை காதோரம் ஒதுக்கிவிட்டபடி, “நாம வேணும்னா ஒரு பிரேக் எடுத்துக்கலாமா?” என்றான்.
அவனுடைய கண்களோடு பின்னிக் கொண்டிருந்த பார்வையை பிரித்தெடுக்க முடியாமல், வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள்.
“ஆர் யு ஷுயர்?” – அவன் கண்களில் தெரிந்த அக்கறை உண்மையா! அல்லது மாயையா! புதிருக்கு விடைதேடி இன்னும் ஆழமாக அவனுடைய பார்வையை ஆராய்ந்தாள்.
“என்ன ஆச்சு?” – அவளுடைய தோள்களை மென்மையாக பிடித்து சிறு அழுத்தம் கொடுத்து அவளை தன்னிலைக்கு மீள செய்தான்.
“ஆங்!” – மலங்க விழித்தாள்.
“டேக் போகலாமா? இல்ல பிரேக்?”
“இல்ல… நா… நா பண்ணிடறேன்…”
“ஓகே… இட்ஸ் வெரி சிம்பிள் அன்ட் நீட் சீன், என் கண்ணை பாரு” – இவ்வளவு நேரமாக அதைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறாள்!
அவளுடைய கையை பிடித்து அதில் சிறு அழுத்தம் கொடுத்து, வசனத்தை பேச ஆரம்பித்தான் “எ…. எனக்கு சாரி சொல்ல தெரியாது தான்…. இருந்தாலும்….” என்றவனது கண்கள் அவளிடம் யாசித்தன. எத்தனை ஜீவன் அந்தக் கண்களில். சந்தனா கட்டுண்டு நின்றாள். அவன் பார்வையிலிருந்து மீள முடியவில்லை அவளுக்கு.
“ஐ …ஐ ..ஆம் சாரி மிருதுளா… யு ஆர் இன் மை ஹார்ட்… சோ டீப்லி… உன்ன இழக்க நா விரும்பல… ஐ வான்ட் யூ டு ஃபர்கிவ் மீ, ” அவனுடைய முகத்தில் தோன்றிய உணர்வுகள் அவளை தடுமாறச்செய்தன.
இது தான் நடக்கிறது என்று அவள் சிந்திப்பதற்குள் சட்டென்று அவளது இடையை பற்றி தன்புறம் இழுத்து அவளது நெற்றியோடு அவனது நெற்றியை சேர்த்து, இருவரது மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று உரச, “ஐம் சாரி… வெரி சாரி..” என்று வசனத்தை முழுவதுமாக பேசி முடித்துவிட்டான்
சந்தனாவின் இருதயம் அதிவேகமாகத் துடித்தது. கண்கள் கலங்கின. ‘ஷூட்டிங்… நடிப்பு… நந்தினி… டைரக்டர்…’ வசனம் என்று மூளை ஏதேதோ வார்த்தைகளை சேர்த்துக் கோர்த்து அவளுக்கு எதையோ சொல்ல முற்பட்டது. ஆனால் மனம் அவனுடைய மன்னிப்பிலேயே ஆழ்ந்துவிட்டது. அது வெறும் வசனமாக இல்லாமல், அவளுக்கு அவன் செய்த கொடுமைகளுக்கெல்லாம் உண்மையாகவே வருந்தி மனதார மன்னிப்பு கேட்பது போல் தோன்றியது.
வெறும் கற்பனைதான்… மாயை தான்… ஆனால் அந்த மாயையிலிருந்து மனம் வெளியேற மறுக்கிறது. அந்த கற்பனையால் அவளுள் ஒருவித நிம்மதி படர்வதை அவளால் தடுக்கமுடியவில்லை.
“பர்ஃபெக்ட்” – பிரகாஷின் கணீர் குரல் அவர்களின் மோனநிலையில் கொடூரமாக குறுக்கிட்டது. அதை தொடர்ந்து பெருத்த கரகோஷமும் அவர்களை சூழ்ந்து கொண்டது. சட்டென்று சுயநினைவுக்கு மீண்டவள், பதட்டத்துடன் ருத்ரனைவிட்டு விலக முற்பட்டாள். ஆனால் அவனிடம் எந்த பதட்டமும் இல்லை.
வெகு நிதானமாக அவளை விடுவித்தவன், “இவ்ளோ தான், இட்ஸ் வெரி சிம்பிள், ஓகே டேக் போலாமா?” என்றான்.
அவள் பதில் சொல்வதற்குள் பிரகாஷிற்கு கட்டைவிரலை உயர்த்தி சைகை காண்பித்தான்.
சந்தனாவிற்கு வேறு வழியில்லை. மனதை கட்டுக்குள் கொண்டு வந்தாள். அடுத்து செய்ய வேண்டியதில் தன்னுடைய கவனத்தை முழுமையாக திருப்பினாள்.
சங்கரின் கையிலிருந்த சில்வர் ஷீட்டை பெற்றுக்கொண்டு அவனே அதனை கேமராவிற்கு ஏற்றார்போல் பிடித்தான் ருத்ரன். ‘இப்ப அவகிட்ட என்ன சில்மிஷம் செய்யிறேன்னு பார்க்கிறேன்’ மனதிற்குள் மித்ரனுக்கு சவால்விட்டான்.
அவன் அருகில் இருப்பது பெரிய பலமாய் தோன்றியது அவளுக்கு. அவளை அர்த்தத்துடன் பார்த்தவன், “கமான் மித்ரன் யு கோ வித் த டயலாக்ஸ், நந்தினி நீ மித்ரனின் முகத்தை மட்டும் தான் பார்க்கனும், ஒகே?” என்றான்.
“பிரகாஷ் டேக் போலாமா?”
“எஸ் ரோலிங் “என்று கத்தினான் பிரகாஷ்
“ஆக் ஷன் ” என்ற ருத்ரபிரதாப்பை தொடர்ந்து, சந்தனாவின் கைபிடித்து டயலாக்கை பேசலானான் மித்ரன்.
ருத்ரன் கூறியது போல் மித்ரனின் முகத்தைவிட்டு விழியகற்றவில்லை சந்தனா, அதேபோல் சந்தனாவின் முகத்திலேயே பதிந்திருந்தது ருத்ரனின் பார்வை.
நல்ல வேளையாக அவனது முக உணர்வுகளை யாரும் கவனிக்கவில்லை, எல்லோரது கவனமும் மித்ரன் மற்றும் நந்தினியிடம் இருந்தது.
மித்ரன் அவளது நெற்றியோடு நெற்றிவைத்து வசனத்தை சொல்லி முடித்ததுதான் தாமதம்…”கட்” என்றவன் தொடர்ந்து
“டேக் ஓகே ” என்றபடி கையிலிருந்த ஷீட்டை விசிறியடித்தான். சந்தனாவை தவறியும் அவன் பார்த்துவிடவில்லை, பார்த்திருந்தால் அவளது முகத்திலிருந்த கோபம், இயலாமை, எரிச்சல் அருவருப்பு என்று அத்தனை உணர்வுகளையும் அவனால் பார்த்திருக்க முடியும்
அதனால் தானோ என்னவோ அவன் பார்க்கவில்லை “பிரேக் டிஸ்பர்ஸ் ” என்று கத்திவிட்டு வேகமாக கேரவனை நோக்கி நடக்கலானான். அவனை பின் தொடர்ந்து கேரவனுள் சென்ற பிரகாஷையும் அவன் பார்க்கவில்லை. மொத்தத்தில் அவனுக்கு யாரையுமே பார்க்க பிடிக்கவில்லை.
ஆனால் பிரகாஷ் விடவில்லை “மானிட்டரை பாக்காமலே ஏன் டேக் ஓகே பண்ணின? ” கடுப்புடனேதான் கேட்டான்.
“பர்பெக்ட்டாதான் இருந்தது. நான் தான் பக்கத்திலேயே இருந்தேனே” எங்கோ பார்த்துக்கொண்டு பேசினான்.
அவனெதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தவன் “ருத்ரா ” என்று மென்மையாக அவன் கரம் பற்றி “ஆர் யூ ஓ.கே ” என்று கேட்டான்.
ஆம் என்பது போல் தலையசைத்தவன், ” என்னோட சிகரெட் எங்கே?” என்று தீவிரமாக சிகரெட்டை தேடத் தொடங்கிவிட்டான்.
“என்னாச்சு இவனுக்கு? மானிட்டர் பாக்காம டேக் ஓகே பண்ணறான், ஒரு மார்க்கமாவே இருக்கானே! புதுசா ஏதாவது எதிரி என்ட்ரி ஆகியிருக்கானோ? ” ருத்ரனை குழப்பத்துடன் பார்த்தான் பிரகாஷ்
முகங்களின் தேடல் தொடரும்….
22 Comments
Hi mam
அது நடிப்பாக இருந்தாலும் காதல் காட்சியில் தன் காதலியை இன்னொருத்தர் கூட பார்ப்பதில் ருத்திரனுக்கு விருப்பமில்லைப்போல,இது பொறாமையின் வெளிப்பாடுதானே,இந்த பொறாமை ஏன் வருகின்றது என்று இந்த முட்டாள் இயக்குனர் ருத்திரன் கொஞ்சம் யோசித்தாலே பதில் கிடைத்துவிடுமே.
நன்றி
Ruthranoda plan yennanu kande pidika mudilaye.. Chanthana ruthra va love pannuvala INI nice going…
SUPERRRRRR UD SIS
YEHHHHHHHH PUTHUN YETHRIIIIIIIIII VANTHAVHAHUUUUUU
Very interesting..today only I have started reading it story..very interesting hero rudra..when is the next update
We give daily one update meena….. saturday and sunday holiday
😍
Aama prakash ruthravukku puthusa ethirinu solla mutiyathu but oruththan vantuttan athan kadhal.
Ha ha ha ……ungalathu vimarsanam arumaiyo arumai, nandri
ருத்ரன் சந்தனாவை ஆழமாக நேசிப்பது புரிகிறது.ஏற்கனவே கருத்திற்கு சந்தனாவை தெரியுமா
Thanks for ur valuable comment shamika
Paavam sandhana false hope la iruka….idhula avan pesura dialogue ah unmainu vera karpanai panra….eppadhaan rudhranoda unmai nokatha purinjika porala???
Hmmm…seekiram purinjipa, thanka for ur comments hadijha
Nice ud sis……
Thank u pa
ha ha ha…..
nice…..
Thank u daisy
ருத்ரா சந்தனாவை லவ் பண்றானா?அதனாலதான் மித்ரனை பார்த்து ஜெலஷாகிறானா?
Thanks for ur comments punitha
Vakkran piditha jenmamo intha mitran
Konjam apadithan saranya… thanks for ur comments
Ruthra nee nallavana kettavana 😎
Theriayalea ma….. ungalathu vimarsanathirku nandri