கடைவிழியின் கண்ணீர்
2342
5
காலை பொழுதில் கவலை ஏதும் இன்றி, காலம் என்மேல் தொடுக்கப்போகும் கணைகள் என்ன என்று அறியாமல் அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தேன்….!
அந்த காலையும் வந்தது , என் இதயத்தை கிழிக்கும் கணையாய் வந்தது, என் தந்தை இந்த மண்ணுலகத்தை விட்டு மறைந்த மரணச்செய்தி, உயிர் இருந்தும் மரித்து போனேன் நான்……!
மரணச்செய்தி கேட்ட மனிதர்களின் மனமும் மாறிபோனது, அப்போது தான் உணா்ந்தேன் மாற்றம் ஒன்று தான் மாறாது என்பதை…..!
மறுகணமே, மறுக்காமல் ஏற்றுக்கொண்டேன் நான்…….!
சொந்தம் எல்லாம் சொடுக்கு போடும் நேரத்திற்குள் சொல்லாமல் உடைந்து போனது……!
உனக்காக உருகும் உறவு என்று யாரும் இல்லை என்று உரக்கக் உணா்த்தியது……!
உண்மையை உணர்ந்தால் உள்ளுக்குள் உடைந்துப்போனேன் நான்………!
உணவு இருந்தும் உண்ண முடியாத நாள் நகா்ந்து, உணவுக்காக உழைக்கும் நாள் வந்தது, சுமைகளை சுமக்க ஆரம்பித்தேன், இன்பத்தை இழந்து……..!
கல்வி என்ற கரையை நான் கண்டு…….!
கண்ணீர் ஆழிக்குள் என்னை அனுதினமும் அா்ப்பணித்துக்கொண்டு என்னை கரை சோ்க்கும் காலம் என்று வரும் என்று…….!
கடவுளிடம் கடைவிழியின் கண்ணீருடன் யாசிக்கும் கனவுகளை தொலைத்த இந்த கயல்விழியாள்………!
– மீனாக்ஷி சிவகுமார்
5 Comments
கண்ணீர் என்பது நிரந்தரம் அல்ல கடவுள் நிச்சியம் நல்லதாெரு வாய்ப்பினை தருவாா்.
காத்திருக்கும் கயல்விழிக்கு என் மனமார்ந்த அன்பு கலந்த வாழ்த்துக்கள்…
இலக்கிய பணி தாெடர….
படிப்பவர்களின் கடைவிழியிலும் கண்ணீர்.இது படைப்பாளியின் வெற்றி.
நன்றி தொடந்து எனக்கு ஆதரவு தாருங்கள் தோழி
Super meena
கடைவிழி கண்ணீருடன் கனவுகளோடு காத்திருக்கும் கயல்விழியின் கனவு நிஜமாக நாமும் காத்திருப்போம்