முகங்கள்-26
2104
6
முகங்கள் – 26
சந்தனா மற்றும் மித்ரன் நின்றிருக்க அவர்களின் எதிரில் இருந்தான் ருத்ரபிரதாப் அவனுக்கருகில் துணைநடிகை அர்ச்சனா,மித்ரனை மட்டும் பார்த்து பேசலானான்.
“கமான் லுக் அட் மி, சீன் ரொம்ப சிம்பிள், நந்தினி இந்த ஸ்டிரீட் லைட் கீழ ஓடி வந்து மூச்சு வாங்க நிப்பாங்க ,அதேமாதிரி இந்த ஸ்டிரீட் வழியா நீங்க ஓடி வரீங்க, நீங்க ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்து சில நொடி நிக்கனும், அப்புறம் மித்ரன் நந்தினியின் பக்கம் வேகமா ஓடி வரனும், நந்தினி உங்களை சந்தோஷமும் அழுகையுமா பாக்கனும், தென் நீங்க நந்தினி தோள்பிடிச்சு “என்னாச்சு மிருதுளா? என்னாச்சு? ‘” ன்னு இதோ இப்படி அவங்க தோள்பிடிச்சு உலுக்கனும் என்றவன் அர்ச்சனாவின் தோள்களை தன் இரு கரங்களால் பிடித்து உலுக்கினான், அவள் எதுவுமே பேசாமல் அவனை பார்த்து மீண்டும் அழவும், அவன் அவளை தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான் ” ஒருவினாடி கூட நிலைத்திருக்கவில்லை அந்த அணைப்பு, உடனே அர்ச்சனாவை விடுவித்தவன் சந்தனாவின் கண்களை தவிர்த்து, “சீன் கிளியரா? டேக்போகலாமா? “என்று மீண்டும் மித்ரனை மட்டும் பார்த்து கேட்டான்
“ஓகே ” என்று ஸ்டைலாக தன் தோள்களை குலுக்கினான் மித்ரன்
சந்தனாவின் காதுகளில் அவள் பேசிய வார்தைகளே எதிரொலித்தன ‘ஆனா நீ அதைவிட கேவலமா எல்லார் முன்னாடியும் கத்துத்கொடுக்கிறேன்னு கட்டிப்பிடிப்ப’, அவள் அவனை நிமிர்ந்து பார்க்க , அவளை அர்த்தத்துடன் பார்த்த ருத்ரன்
உடனே “டச்சப் ” என்றான், அவனது குரலுக்கு ஓடி வந்த மேக்கப் ஆர்டிஸ்ட் நந்தினி ,மித்ரன் இருவர் முகத்திலும் கொஞ்சம் பௌடர் போட்டுவிட்டு அதன்மேல் தண்ணீரை ஸ்பிரே செய்தனர், அது வியர்வைபோல் காட்சியளித்தது
டச்சப் முடிந்ததும் அவளருகில் வந்த ருத்ரன்,அவளை குரோதத்துடன் பார்த்தான் ‘நுணலும் தன் வாயால் கெடும் ” பழமொழி உன் விஷயத்துல கனகச்சிதமா பொருந்தும், மதியம் நான் சாய்ஸ் கொடுத்த போதே நீ சரியான சாய்ஸ்சை சூஸ் பண்ணியிருக்கனும் , இப்போ ஒன்லி சாய்ஸ் இந்த சீன் எனக்கு பெர்பெக்ட்டா வரனும்,அப்படியில்லைன்னா அதன் விளைவுகள் உன் கற்பனைக்கு அப்பாற்பட்டதா இருக்கும் இதை மைன்ட்ல வெச்சிக்கோ ” என்று மிரட்டலுடன் முடித்தவன் “கேமிரா ரோல் ” என்று கத்தியபடி பிரகாஷை நோக்கி நடக்கலானான்
அவனது பேச்சு அவளுள் ஒரு பீதியை கிளப்பியது, ஏனோ கிளிசரின் துணையில்லாமலே கண்ணீர் வந்தது,
சிறிது தூரம் ஓடிவந்து மூச்சிரைக்க நின்று நிமிர்ந்து கேமிராவை பார்க்க வேண்டும் அங்கே மித்ரன் இருப்பது போல் பாவித்து இன்பமும் துன்பமும் கலந்த உணர்வை காட்டவேண்டும், இதுதான் சீன்
வேகமாக ஓடி வந்து மூச்சிரைக்க நின்ற சந்தனா கேமிராவை பார்க்க நிமிர்கையில் அவளுக்கு கேமராவின் பின் நின்ற ருத்ரபிரதாப் தான் தெரிந்தான், அவனை பார்த்ததுமே அவன் பேசிய வார்த்தைகள் அவள் காதில் மீண்டும் ஒலித்து அவளது கண்களை நிரப்பின.
அப்பொழுது அவளது கண்களை நேருக்கு நேர் சந்தித்தவன் “லைட்டா ஒரு ஸ்மைல் “என்றான், ருத்ரனின் கட்டளைக்கு கட்டுபட்டவளாக இதழ்களை லேசாக சிரிப்பது போல் விரிக்க
“கட் ” என்றவன் “டேக் ஓகே “என்றான்
“அப்பாடா ” என்றிருந்தது அவளுக்கு ஆனால் உண்மையான பிரச்சனை அடுத்த காட்சியில் அவளுக்காக காத்திருந்தது
*************************************
இரண்டு மணி நேரமே இருந்தது பொழுது விடிவதற்கு
மித்ரன் சந்தனாவின் தோள்களை பிடித்து உலுக்கி கட்டிப்பிடிக்க வேண்டும், சந்தனா அழுதுகொண்டே அவன் நெஞ்சில் புதைய வேண்டும், இது தான் காட்சி
வியர்வை துளிகள் நிறைந்த ஒப்பனையுடன் மித்ரனும் சந்தனாவும் எதிர் எதிரில் நின்றிருந்தனர்
‘கடவுளே ஒரே டேக்கில் ஓகே ஆகவேண்டும் ‘ மனதிற்குள் கடவுளை வேண்டிக்கொண்டாள் சந்தனா, அவர்களை சூற்றி பல கேமிராக்கள் இருந்தன, எல்லாவற்றிலும் ஓர் அசிஸ்டன்ட் டைரக்டர் மானிட்டரை பார்த்தார்கள்.
ஏதேனும் ஒரு கோணத்தில் உணர்ச்சிகரமாகவும் தத்ரூபமாகவும் நிச்சயம் பதிவாகிவிடும் என்பது ருத்ரனின் நம்பிக்கை, அதோடு அவனது எடிட்டர் விக்ரம் சிங்கின் மீது அவனுக்கிருந்த அசாத்திய நம்பிக்கையும் ஒரு காரணம்.
வெளியே காட்டிக்கொள்ளவில்லையே தவிர ருத்ரனுக்கும் இந்த காட்சி ஒரே டேக்கில் முடிய வேண்டும் என்கின்ற பரபரப்பு இருக்கத்தான் செய்தது
“கேமிரா ரோல்” – ருத்ரன், மானிட்டரில் தன் கவனத்தை பதித்தான்
“ரோலிங் ” – பிரகாஷ்
“ஆக்ஷன் ” – ருத்ரன்
சந்தனாவின் தோள்களை உலுக்கிய மித்ரன் அவளை அணைப்பதற்கு பதிலாக பின்னே தள்ளிவிட்டான். குழப்பமாக சந்தனா மித்ரனை பார்க்க அவனோ கேமிராவை பார்த்தான்
“கட் இட் ” – ருத்ரன் சேரிலிருந்து எழுந்தவன்
“என்னாச்சு மித்ரன்? ” என்று கத்தவும்
“நந்தினி இஸ் நாட் கோ-ஆப்ரேட்டிங் ” என்று அபாண்டமாக அவள் மீது பழிபோட்டான்
அவளோ ருத்ரனை பரிதாபமாக பார்த்தாள், அவனோ பிரகாஷை முறைத்தான்
உடனே பிரகாஷ் “நந்தினி பிளீஸ் கொஞ்சம் கோ-ஆப்ரேட் பண்ணுங்க, லாஸ்ட் சீன், முடிஞ்சதும் பேக்கப் தான் ” என்று அவளுக்கு எடுத்துச்சொன்னான்
ஆனால் அவளிடம் எந்தத் தப்பும் இல்லையே! மனதிற்குள் குளிர் பிறந்தது
“டேக் டூ, ஆக் ஷன் ” – ருத்ரன்
மீண்டும் மித்ரன் ருத்ரனை பார்த்து உதட்டை பிதுக்கினான்
“டேக் திரீ ” – ருத்ரன்
“கட் ” – ருத்ரன்
“டேக் ஃபோர் ”
“கட் ”
“டேக் எய்ட் “கடித்த பற்களிடையே ருத்ரன் கத்த, உண்மையிலேயே வியர்த்தது சந்தனாவிற்கு, பயத்தில் அழுகைவேறு இப்போது வரவா, அப்போது வரவா என்று கேட்டது அங்கே குழுமியிருந்த அத்தனை துணைநடிகர்கள் உதவியாளர்கள் அனைவருக்கும் படபடப்பாக இருந்தது,
மித்ரனுக்கோ குதூகலமாக இருந்தது, இன்று ருத்ரன் கத்தும் கத்தலில் இவர்களது திருமண முடிவு உடைந்தால் எப்படியிருக்கும் என்று உள்ளுக்குள் நினைத்து சந்தோஷப்பட்டான்.
எட்டாவது டேக்கும் ருத்ரனின் “கட்” என்ற உறுமலோடு நிற்க விதிர்விதிர்த்துப்போனாள் சந்தனா
அங்கே இருந்த அத்தனை பேரின் கண்களும் ருத்ரனை ஒருவித பயத்தோடு பார்க்க, கையிலிருந்த மைக்கை கீழே ஓங்கி அடித்தவன் சினம் கொண்ட வேங்கையை போல வேக நடையுடன் இரண்டெட்டில் சந்தனாவை அடைந்தான்
எல்லோரது முகங்களும் வெளிறிவிட்டது, சந்தனாவிற்கோ கால்கள் நடுங்கத்தொடங்கின
நேரே சந்தனாவின் முன் நின்று முறைத்தவன் உடனே மித்ரனின் புறம் திரும்பி “நீயெல்லாம் என்னய்யா ஹீரோ? ஒரு ஹீரோயினை கட்டுப்படுத்தி நடிக்க வைக்க தெரியல? இதுல ரொமான்டிக் கிங்குன்னு டைட்டில் வேற” கர்ஜித்துக்கொண்டே சந்தனாவின் தோளை அழுந்தப் பற்றினான், வலியில் அவள் கண்களை மூடிக்கொண்டாள் பற்றிய தோளை பிடித்து உலுக்கியவன் “என்னாச்சு மிருதுளா, என்னம்மா? ” என்று முடித்து விட்டு சில நொடி அவளது முகத்தை பார்த்தான் அடுத்த நொடி சந்தனா ருத்ரனின் அணைப்பிலிருந்தாள், ஆனால் அவள் அவனை அணைக்கவில்லை, அவள் காதுகளை நோக்கி குனிந்தவன் “கையை என் முதுகுல வை ” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினான் பயத்தில் விதிர் விதிர்த்தவள் உடனே அவனை இறுக கட்டிக்கொண்டாள்
அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து கண்மூடினான் ருத்ரன், அவளது வியர்வைத்துளி தந்த குளிர்ச்சியும், அவளுக்கான பிரத்யேக மனமும் அவனுள் நிறைந்தது, ஏதோ ஒரு உணர்வு அவனுள் கரைந்தது, காலையிலிருத்து தனக்குள்ளே கனன்று கொண்டிருந்த கோபம் படிப்படியாக குறைவதைபோல் உணர்ந்தான், சந்தனாவிற்கோ அடைத்துக்கொண்டு வந்த அழுகை அவள் கட்டுப்பாட்டையும் மீறி உடைந்தது, அவனது மார்பில் முகம் புதைத்து விம்மி அழுதாள், அவனது கைகள் தாமாக அவளது முதுகினை வருடிவிட “உனக்கு எதுவும் ஆகாது, எதுவும் ஆக நான் விட மாட்டேன், ஐ ப்ராமிஸ் ” என்றான் அவளது அழுகை குறையத் தொடங்குகையில் மித்ரனின் குரல் அவர்களை கலைத்தது,
“ஓ கே ருத்ரன், லாஸ்டா “உனக்கு எதுவும் ஆகாதுன்னு “சொன்னீங்களே அதையும் சேர்த்து சொல்லனுமா ” என்று கேட்பதற்கும் ருத்ரன் தன்னை நிலைபடுத்திக் கொள்வதற்கும் சரியாக இருந்தது, அந்த டயலாக் ஸ்கிரிப்ட்டிலேயே இல்லையே என்பதை கேட்காமல் கேட்டான் மித்ரன்.
தன் மனதிற்குள்ளிருந்து வந்த வார்த்தைகள் என்று அவனால் சொல்ல முடியவில்லை அதனால் வேறு வழியின்றி “சேர்த்துக்கோங்க மித்ரன் ” என்று மெதுவாக பேசியவன் உடனே குரலை உயர்த்தி, “இது தான் கடைசி சான்ஸ், சும்மா நந்தினிய குறைசொல்லாம இந்த சீனை ஒரு ஹீரோவா ஹான்டில் பண்ணுங்க” – கறாராக பேசியவன்
“கேமிரா ரோல்” என்று கத்தினான்
பிரகாஷின் ரோலிங்கை கேட்டதும் “ஆக் ஷன் ” என்றவன் மானிட்டரையும் பார்க்க வில்லை, காட்சியையும் பார்க்கவில்லை ”
சந்தனாவிற்கு முதுகாட்டி நின்று கொண்டவனுக்கு ‘அந்த ஷீட்டுக்கு பதிலா விளக்கை பிடிச்சீங்கன்னா இன்னும் பொருத்தமா இருக்கும் ‘ என்ற சந்தனாவின் குரல் கேட்டது,
குறைந்த கோபம் இன்னும் பல மடங்காக ஏறியது, பிரகாஷை நோக்கி அவன் நடப்பதற்கும் சீன் முடிவதற்கும் சரியாக இருந்தது
“கட் ” என்று எங்கோ பார்த்து கூறினான். அவனது ’கட்’டை கேட்டதும் அங்கே கூடியிருந்த கூட்டமே அவனைத்தான் உற்று பார்த்தது, சந்தனா உட்பட, அவன் ஆக் ஷன் என்றதிலிருந்து சந்தனாவின் கண்கள் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தன.
எப்போது மித்ரன் கட்டிப்பிடித்தான் எப்போது விடுவித்தான் என்பது கூட தெரியவில்லை
“பிரகாஷ் மானிட்டரை பாரு” என்றான் ருத்ரபிரதாப்
அவனை விசித்திரமாக பார்த்த போதிலும் மறுக்காமல் எழுந்து மானிட்டரை பார்த்தவன்
“ஹீரோயின் கண்ணு ஃபிரேமுக்கு வெளிய போகுது ருத்ரா, ” என்றான் பரிதாபமாக உடனே ஒருவித பரபரப்புடன் மானிட்டரை பார்த்தவனின் விழி விரிந்தது, மிக மிக லேசான புன்னகை அவன் இதழில் வந்து சென்றது
உடனே நிமிர்ந்து சந்தனாவை பார்த்தவன்
“டேக் ஓகே, பேக்கப், “என்று கத்தினான். அவன் அடக்க முயன்றும் அவனுள் இருந்த உற்சாகம் அவனது குரலில் தெரிந்தது.
அங்கே இருந்த கூட்டத்தின் ஆரவாரமும் கைதட்டலும் கூட சந்தனா ருத்ரனின் காதுகளை எட்டவில்லை
முகங்களின் தேடல் தொடரும்….
6 Comments
Ruthra un aatathukku alave illama pochchu.
Hi mam
இங்கு என்னதான் நடக்குது ஒன்றுமே புரியல்ல.
நன்றி
Super
santhana unaakku realitiyai livaa kaatraan……………athaiye avanukku aruthalaavum…….jagajaalaa killadi…………….
என்னதான் தெரியுது அந்த மானிட்டர்ல.
அடேய் என்னடா இந்த போடு போடுற…