Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-27

முகங்கள் – 27

 

ஷுட்டிங் முடிந்து ரூமிற்கு வந்த ருத்ரபிரதாப்பின் இதழ்கள் புன்னகையை ஏந்தியிருந்தன,

 

தனக்கு பிடித்தமான பிராண்டை ஒரு கோப்பையில் ஊற்றிக்கொண்டு டிவியை ஆன் செய்தான்,மிகப்பிரபலமான மியூசிக் சேனலை வைத்துவிட்டு,  பஞ்சுமெத்தையில் அமர்ந்தான்,  கோப்பையில் இருந்த திரவத்தை இசையை கேட்டுக்கொண்டே பருகி முடித்தவன், அப்படியே பின்னே சரிந்தான், கால்கள் தரையிலிருந்தன, விழிமுடினான்

 

அன்று இறுதியில் நடந்த காட்சி அவனது இதயத்தை விட்டு அகலுவதாகவே இல்லை.அவளது கண்கள் அவனை தொடர்ந்து கொண்டே இருந்தது,  அவனது இருதயத்தில் கையை வைத்தான், அங்கே அவளது கண்ணீர் துளியின் ஈரத்தை அவனால் இப்போதும் உணர முடிந்தது. அவனது அணைப்பால் அவளது அழுகை வலுவிழந்தது அவனுள் ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்தியது.அதன் தொடர்ச்சியாக இதழ்களின் புன்னகை விரிந்தது.

 

“ருத்ரா! ” கத்திக்கொண்டே கதவை திறந்து உள்ளே நுழைந்தான் பிரகாஷ்

 

அவனது நினைவுகள் கலைந்து விட்ட எரிச்சலில் “ஷ்.. ஏன் இவ்ளோ சவுண்ட்? ” சிடுசிடுத்தபடியே எழுந்தான்

 

“சவுண்ட் நான் இல்ல இந்த பாட்டு ” என்று பதிலளித்தவன் ரிமோட்டை எடுத்து மியூட் பட்டனை அழுத்தினான்

 

அப்போதும் கண்களை திறக்கவில்லை ருத்ரபிரதாப், நினைவுகளை மீட்டெடுக்க முயன்று கொண்டிருந்தான்.

 

“இங்க என்னென்னவோ நடக்குது ருத்ரா ” அவனிடம் முறையிட்டான் பிரகாஷ்

 

“என்ன நடந்தது? ” சாவதானமாகவே கேட்டான்

 

“இவ்வளவு நாள் ஹீரோயின் தான் பிராப்ளமா இருந்தது, அதையும் எப்படி எப்படியோ ஒரு வழியா இப்போ தான் சார்ட் அவுட் பண்ணினோம், பட் இப்போ ஹீரோவும் பிராப்ளமாயிட்டான், மித்ரன் தான் இன்னையோட ஷுட் ஸ்பாயில் ஆக காரணம், இப்பதான் மத்த கேமிரா பூட்டேஜ் பாத்துட்டு வரேன்.” ஆவேசமாக அவன் கத்திக்கொண்டிருக்க ருத்ரனோ மெல்ல எழுந்து அடுத்த ரவுண்டுக்கு பாட்டிலை எடுத்தான்,

 

“நான் இங்க கத்திகிட்டிருகக்கேன், நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க? ” ருத்ரனின் முகத்திற்கு நேரே வந்து நின்று கொண்டு கேட்டான்

 

“ம்…ச்…சேம் ஓல்ட் நியூஸ் டியூட் ” பாட்டிலில் இருந்த திரவத்தை கோப்பையில் ஊற்றினான்

 

பிரகாஷின் முகம் மாறியது

 

“அப்போ எல்லாம் தெரிஞ்சும் நீ கூலா இருக்க, அந்த மித்ரனை பாக்க பாக்க எனக்கு ஆத்திரமா வருது”

 

கையினில் இருந்த கோப்பையை டேபிள் மீது வைத்தவன் பிரகாஷின் தோள் பற்றி “கூல் டவுன், கெட்டதுலயும் நமக்கு என்ன நல்லதுன்னு  யோசிக்க கத்துக்கோ பிரகாஷ், கமான் கெட் எ டிரிங்க் ஃபார் யூ ” என்று பாட்டிலை அவன் கையில் திணித்து விட்டு டைனிங் டேபிளில் வந்தமர்ந்தான்,

 

பாட்டிலை அது இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு ருத்ரபிரதாப்பை பின்தொடர்ந்தான் பிரகாஷ்

 

“இப்போ நீ எதை நல்லதுன்னு சொல்ற? “அவன் முகத்தை பார்த்து கேட்டான்

 

அவனது கேள்விக்கு பதில் கூறாமல் கண்களை மூடினான், இப்போதும் அவனால் அந்த குளிர்ச்சியை, அந்த ஸ்பரிசத்தை, அந்த வாசனையை உணரமுடித்தது,  அவளது கைகளின் அழுத்தம் அவன் முதுகில் ,அவளது முகம் இவன் மார்பில், எல்லாம் இப்போதும் நீடித்திருப்பது போல்  உள்ளுக்குள் ரசித்தான்.

 

அவனது அமைதியை கலைத்தது பிரகாஷின் குரல்

 

“ருத்ரா, ஸ்பீக் அவுட் ”

 

சட்டென கண்களை திறந்தவன் “அ…அது மித்ரன் ஒரு முட்டாள்னு தெளிவா தெரிஞ்சதே ஒரு நல்லது தான், சுத்தி கேமிரா வெச்சிருக்கோம் எதுலயாவது அவன் மாட்டிக்க சான்ஸ் இருக்குன்னு தெரிய வேண்டாம்? டேக் திரீலயே கேமிரா ஃபைவ் அசிஸ்டன்ட் சொல்லிட்டான், இடியட் மித்ரன்,  ஐ வில் நாட் சூஸ் ஹீம் ஆஸ் மை ஹூரோ அகெய்ன் “என்று ஏதோ கோர்வையாய் சொல்லி முடித்தான்

 

“என்னது? ” குழம்பியவன் உடனே, “ஓ… அது தான் மித்ரனை ஒரு வாங்கு வாங்கனியா,, யூ ஆல்வேஸ் ராக்,  பட் இந்த சீன் சொதப்பலாகிடுச்சே!” கவலையோடு சோபாவில் அமர்ந்தான் பிரகாஷ்

 

“வாட் சொதப்பலா? நோ வே,  நான் கோபமா போனபோது கேமிரா ரோல் பண்ண சொன்னேனே எதுக்குன்னு தெரியுமா? “ருத்ரபிரதாப்பின் கண்கள் சிரித்தன

 

“ஓ…” வியப்பில் விழிவிரித்தான் பிரகாஷ்

 

“உன்னோட கேமிரா மட்டும் இல்ல எல்லா கேமிராவும் ரோலிங்தான். சோ பூட்டேஜை  எடிட்டர் விக்ரம் சிங் கிட்ட ஹேன்ட் ஓவர் பண்ணிட்டட்டா போதும், ஹி வில் டேக் கேர். அன்ட் யு நோ வாட்? இந்த படத்தோட பெஸ்ட் சீனா இந்த சீன் இருக்கும் ” அவனது குரலில் உற்சாகமிருந்தது

 

 

“இஸ் இட்?, ஐ நோ யூ ருத்ரா, ஐ ஹேவ் நோ டவுட், பட் இது என்ன காலையிலயே ஆரம்பிச்சுட்ட? ” கையிலிருந்த கோப்பையை சுட்டிக்காட்டினான்

 

“நமக்கு இது தான் நைட், அண்ட் ஐ ஆம் சோ ஹாப்பி,  டோன்ட் டிஸ்டர்ப் மீ “என்றவன் டைனிங் டேபிளிலிருந்து பெட்டில்  வந்து விழுந்தான், அவளது ஸ்பரிசம் தந்த போதை அவனை மொத்தமாக ஆட்கொண்டது.

 

அன்றைய ஷூட் முழுவதும் நெருப்பின் உக்கிரத்தை காட்டி எல்லோரையும் வதைத்தவனின்  முகத்தில் உறைந்திருந்த சிரிப்பு பிரகாஷை அதிசயிக்க வைத்தது.

 

*************************************

அறைக்குள் நுழைந்து  கதவை சாத்தி தன்னிச்சையாக லாக் செய்த சந்தனா பெரும் குழப்பத்திலிருந்தாள்

 

அவளுள் என்னதான் நடக்கிறது என்று அவளுக்கே புரியவில்லை.

i

அவள் அதிகமாக வெறுக்கும் ருத்ரனின் நெஞ்சில் புதைந்து இவள் எப்படி அழலாம்? அவனது இன்றைய கோபமான முகம் இவளை ஏன் பாதிக்க வேண்டும்? அவனது அருகாமை இவளுக்கு ஏன் பாதுகாப்பானதாக தோன்ற வேண்டும்?, மூளை அவன் அவளுக்கு இழைத்த அநீதிகளை துள்ளியமாக நினைவு வைத்திருந்தது, ஆனால் இதயம் அதனை மறந்துவிட்டதா? என்ன தான் நடக்கிறது. அவனது பாராமுகம் அவளுள் ஏன் அழுகையை வரவைக்கிறது,

 

உள்ளுக்குள் ஒரு குரல் “ஐ லவ் ருத்ரபிரதாப் “என்றது

 

“நோ….நோ…ஐ ஹேட் ஹிம் ”

 

“நோ ஐ லவ் ருத்ரன் டீப்லி அன்ட் மேட்லி ” –

 

“ஐய்ய்ய்….யோ….. போதும் நிறுத்து ” கண்களை மூடி தலையை இருகைகளால் பிடித்துக்கொண்டு கத்தியவள் மயங்கிச் சரிந்தாள்.

 

*************************************

 

வேகமாக கதவு தட்டப்படும் ஓசை கேட்டு கண்விழித்த ருத்ரபிரதாப் வேகமாக சென்று கதவை திறந்தான், வெளியே தேவ் நாயர் நின்றிருந்தான்,

 

அவனை பார்த்ததும் கலவரமானான் ருத்ரபிரதாப்

 

“என்னாச்சு தேவ் நாயர்? ”

 

“சா…ர்… மேடம்…. டிபன் கூட சாப்பிடலை, கதவையும் திறக்கலை” பதட்டத்துடன் பேசிக்கொண்டிருந்தவனை பின்னுக்கு தள்ளி முன்னேறினான்.

 

தேவ் நாயர் மேடம் என்று தயக்கத்துடன் தொடங்கும் போதே ருத்ரபிரதாப் செயலில் இறங்கி விட்டான்,

 

தன் பாக்கெட்டிலிருந்த சாவியை எடுத்து பக்கத்து அறையின் கதவை திறக்க முயன்று கொண்டிருந்தான். வெளியே டாக்டர் சியாமளாவின் நர்ஸ் பதட்டத்துடன் நின்றிருந்தாள்.

 

கதவை திறந்து கொண்டு அவன் உள்ளே நுழைந்ததும் அவன் கண்ட காட்சி அவனை துரிதப்படுத்தியது,கீழே கிடந்தவளை தூக்கி பெட்டில் கிடத்தினான், லேன்ட் லையனிருந்து சியாமளாவை தொடர்பு கொண்டான், அவருக்கு விபரம் தெரிவித்து விட்டு மீண்டும் அவளருகில் வந்தமர்ந்து கொண்டான்,  நர்ஸ் தன்னாலான முதலுதவியை செய்து கொண்டிருந்தாள். சந்தனாவின் மூடிய விழிகளை பார்க்கையில் அவனுள் ஏதோ கரைந்தது, அவளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொள்ள சொன்னது அவனது மனம்,

 

இன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் அவளை அதிகமாக கஷ்டப்படுத்தி விட்டானோ? அவளது மனநிலை தெரிந்தும் அவளுடன் சரிக்கு சரியாக கோபப்பட்டு அவளது மன அழுத்தம் அதிகமாக இவனே காரணமாகிவிட்டானோ?

 

அவள் என்ன சொன்னால் தான் என்ன, அவளை சுற்றி என்ன நடக்கிறதென்று தெளிவாக புரிந்த இவன் தன்னிலை இழந்தது சரியா?  இப்படி ஏதேதோ சிந்தித்தபடியே நிமிர்ந்து பார்த்தவனின் விழி வட்டத்திற்குள் தேவ் நாயர் நின்றிருந்தான்,  அவனும் ருத்ரபிரதாப்பை தான் பார்த்துக்கொண்டிருந்தான், அவனது தோரணையே ருத்ரன் எப்போது வாய் திறந்து எது சொன்னாலும் உடனே செயலில் இறங்க ஆயத்தமாக தயாராக இருப்பது போல் இருந்தது

 

“டேப்லட்ஸ் கொடுத்துட்டாங்களா தேவ் ” என்றவனது கேள்விக்கு தேவ் அமைதியானான்

 

நர்ஸ் நடுக்கத்துடனே “இ…ல்…ல சார்,  மேடம் டிபன் சாப்பிடலையே, ” தர்மசங்கடத்துடன் கைகளை பிசைந்தாள்

 

“வாட்??? ” கண்கள் தீப்பொறியாக எழுந்தவன்

 

“யூஸ் லெஸ், வேஸ்ட், இடியட் “வாயில் வந்த அத்தனை வார்த்தையையும் சொல்லி தேவ்நாயரை திட்டினான்

 

பதிலேதும் பேசாமல் அமைதிகாத்தான் தேவ்நாயர்.

 

“டிபன்ல தான் கலந்து கொடுக்கனுமா என்ன? தண்ணீல கூட கொடுத்திருக்கலாமே! ”

 

ருத்ரபிரதாபின் கண்கள் கோபத்தில் சிவந்தன

 

“சாரி சார் சாரி.” பயத்தில் சாரி மட்டுமே அந்த நர்சால் சொல்லமுடிந்தது.

 

ஆனால் அவனது கோபம் தேவ்நாயரை தான் தாக்கியது “கெட் லாஸ்ட் குட் பார் நத்திங், கொடுத்த ஒரு வேலையையும் உருப்படியா செய்ய முடியல, கான்ட்யூ கெட் எ பிராப்பர் செக் ஆப் டேப்லட்ஸ்?   கெட் அவே ஆப் மை சைட் ” அவனது சத்தத்தில் அரையிலிருந்து பிரகாஷே விழுந்தடித்துக்கொண்டு வந்துவிட்டான்,

 

உள்ளே வந்து சூழலை கிரகித்தவன் தேவ்நாயரை சைகை செய்து வெளியே அனுப்பினான்,அவன் வெளியேரவும் டாக்டர் உள்ளே வரவும் சரியாக இருந்தது,

 

சில நிமிடங்கள் அவளை சோதித்த சியாமளா,  “நத்திங் டு வொர்ர்ரி மிஸ்டர் ருத்ரபிரதாப், இது மாத்திரையோட எபக்ட் தான்,  விடாம தொடர்ந்து எடுக்கனும், வி ஆர் இன் ரைட் டிராக். பட் கொஞ்சம் கேர்புல்லா இருங்க, நிதானமான மாற்றம் தான் நல்லது, அவசரப்படாதீங்க. ஐ திங்க் யூ அன்டர்ஸ்டான்ட்.

 

“எஸ்  டாக்டர், ஐவில் டேக்கேர்” -என்ற ருத்ரபிரதாப்பின் பார்வை மெத்தையில் துவண்டு கிடந்தவளின்  முகத்தில் நிலைத்தது. ‘நத்திங் டு வொர்ர்ரி ‘ என்ற சியாமளாவின் வார்த்தைகள் அவனது இறுக்கத்தை தளர்த்தியது

 

அவனருகில் வந்த பிரகாஷ் அவனது தோள்பற்றி “எல்லாம் சீக்கிரம் நார்மலாகிடும் டோன்ட் வொர்ரர்ரி ” என்றான் அவனை சமாதானப்படுத்தும் குரலில்

 

அவனது கையை தட்டிவிட்டு “சேம் ஓல்ட் நியூஸ் ” என்று ருத்ரபிரதாப் அர்த்தத்துடன் சிரிக்க பிரகாஷூம் அவனுடன் இணைந்து கொண்டான்

 

 

முகங்களின் தேடல் தொடரும்…

 




16 Comments

You cannot copy content of this page