Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்- 28

அத்தியாயம் – 28

அந்த மாபெரும் நட்சத்திர விடுதி விழாக்கோலமெடுத்திருந்தது, இந்தியாவில் உள்ள அனைத்து திரைத்துறை ஜாம்பவான்களும் ஒவ்வொருவராக தங்களுக்கென்று  ஒதுக்கப்பட்ட நேரத்தில் சரியாக வருவதும் போவதுமாக இருந்தனர். அவர்களை பார்க்க வந்த ரசிகர் கூட்டத்தையும் பிரஸ் மீடியா ஆட்களையும் சமாளிப்பதில் அந்த விடுதியின் பாதுகாப்புத்துறைக்கு மூச்சு திணறத்தான் செய்தது

 

அப்போது தான் ஷாரூக்கான் காரில் ஏறி அங்கிருந்து அகன்றார், பத்மஸ்ரீ கமலஹாசனின் கார் உள்ளே நுழைந்தது, உடனே மீடியாக்களின் பிளாஷ் வெளிச்சம் எல்லோரது கண்களையும் கூசச்செய்தது.

 

அதே போல் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் சரியாக ருத்ரனின் கார் அந்த விடுதியின் லாபியில் வழுக்கிக்கொண்டு நுழைந்தது. அருகில் அமர்ந்திருந்தவளின் முகம் பார்த்தான்,அவளது கண்களில் இருந்த மலர்ச்சியையும் ஆர்வத்தையும் அவனால் உணர முடிந்தது.  மார்பிள் ரெசார்ட்டில் நடந்த காட்சியும் அவனுள் வந்து சென்றது.

 

அன்றைய ஷூட்டிங் முடிந்து குளித்து இரவு உடைக்கு மாறியிருந்த சந்தனாவின் ரூம் காலிங்பெல் அடித்தது,

 

‘யாராக இருக்கும்? ‘ என்று சிந்தித்துக்கொண்டே கதவை திறந்தவளை ஒருவித புன்னகையுடன் எதிர்கொண்டான் ருத்ரபிரதாப்

 

‘என்ன? ‘என்பது போல் அவள் விழிக்க

 

“சீக்கிரம் கிளம்பு ” – என்றான் ஒற்ரை வரியில்

 

அவனை குழப்பமாக ஏறிட்டவளின் கைகளை பற்றி “கேன் யூ பிலீவ்!!!!!!  வீ ஆர் கோயிங் டு மீட் தி கிரேட் ஹாலிவுட் டைரக்டர் மிஸ்டர் கிறிஸ்டோபர் நோலன் ” என்று சந்தோஷத்தின் உச்சத்தில் திளைத்தது அவனது குரல்

 

அப்போது அவளது கண்களில் வந்துபோன மின்னலை கவனிக்க அவன் தவறவில்லை, அதனால் தானே ஃபோனில் சொல்லாமல் நேரில் வந்தான்

 

“ஓகே கெட் ரெடி சூன் ” என்று அவளது கைகளை விடுவித்துவிட்டு அகன்றான்

 

அப்போது அவளது முகத்திலிருந்த சந்தோஷமும் எதிர்பார்ப்பும் துளியும் குறையாமல் இப்போதும் அவளுள் இருப்பது அவனுக்கு புரிந்தது. ‘எல்லாம் சரியான வழியில் தான் செல்கிறது ‘ என்றது அவனது உள்மனம்.

 

காரிலிருந்து ருத்ரபிரதாப்பும், நந்தினியும் முதலில் இறங்க, பின்னோடு பிரகாஷ் இறங்கினான். அவனால் இன்னமும் கூட நம்பமுடியவில்லை, கிறிஸ்டோபர் நோலன்னை சந்திக்க போகிறோமா? அவரது படங்களில் ஒருவித மேஜிக் இருக்கும், அவரது ஸ்டைல் ஆப் மேக்கிங் எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக இருக்கும். அவரது படத்தை புரிய வைக்க தனியாக ஒரு குழு தேவைப்படும், பொதுவாக எல்லோரும் தொட பயப்படும் கதைக்கருவையே அவர் விரும்பி கையாள்வார், அவரது மொமன்டம் கதையின் ஒரு துளியை வைத்துதான் தமிழில் சூர்யா நடித்த கஜினியை எடுத்தார்கள், ஒரு துளியே இப்படி என்றால் நிஜத்தை பற்றி சொல்லவும் வேண்டுமா? இப்படி எல்லா திரைத்துறையினறையும் தன்பால் இழுக்கும் வல்லமை படைத்தவரை சந்திக்கபோவது பெரும் வரம் அல்லவா! என்று தன்னைத்தானே கிள்ளிப்பார்த்துக்கொண்டான் பிரகாஷ்.

 

ருத்ரபிரதாப்பும் நந்தினியும் கைகோர்த்துக்கொண்டு நடப்பதை பல கேமிராக்கள் படமெடுத்தன, அதில் ஓர் தொகுப்பாளப்பெண் “இப்போது இங்கே தமிழகத்தின் மாபெரும் இயக்குனரும் அவரது வருங்கால மனைவியாகப் போகிற பிரபல நடிகை நந்தினியும் கிறிஸ்டோபர் நோலனை சந்திக்க வந்திருக்காங்க,  அவங்க கிட்ட சில வார்த்தைகள் ” என்று ருத்ரபிரதாபின் முன் மைக்கை நீட்டினாள், அவன் “ஐ ஆம் சோ ஹாப்பி டு மீட் சச் எ வொண்டர்புல் டைரக்டர் ” என்று முடிக்க அவளும் “மீ டூ ” என்றதோடு நிறுத்திக்கொண்டாள்

 

இவர்கள் ஹோட்டலின் விஐபி தளத்திற்கு வர அங்கே கிறிஸ்டோபர் நோலனை சந்தித்துவிட்டு திரும்பிய பத்மஸ்ரீ கமலஹாசன் லிப்ட்டின் வாயிலில் இவர்களை சந்தித்தார்.அவரை பார்த்ததும் “கமல் சார்” என்று ஓடிசென்று அவருக்கு கைகொடுத்து குலுக்கினாள் சந்தனா, “எப்படி இருக்கிறீர்கள் நந்தினி ” என்று அன்புடன் விசாரித்தவருக்கு “ஐ ஆம் ஃபைன், சார், நன்றி ” என்றாள், அதற்குள் பின்னோடு ருத்ரபிரதாப்பும் பிரகாஷூம் பத்மஸ்ரீயை நெருங்க எல்லோரும் கைகுலுக்கி தங்களது முகமனை தெரிவித்துக்கொண்டார்கள், சந்தனா சாதாரணமாக கமல் சாரிடம் பேசியதை இருவருமே ஒருவித திருப்தியுடன் பார்த்தனர். ருத்ரபிரதாப் நந்தினியின் திருமணத்திற்கு வாழ்த்து சொன்ன பத்மஸ்ரீ ,ருத்ரனுக்கு முன்பே தொலைபேசியில் வாழ்த்தை சொல்லிவிட்டதாகவும், ஆனால் நந்தினியிடம்தான் பேசவே முடியவில்லை என்றார். மிருதுளா படத்தின் வெற்றியை நோக்கி காத்திருப்பதாக கூறினார். ருத்ரபிரதாப்பின் தனித்துவமான சிந்தனை அவருக்கு பிடிக்கும் என்றும் நந்தினி தன் மகள் போல் அதனால் அவளை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியவர் அவரது பிரத்யேக புன்னகையுடன் விடைபெற்று சென்றார்.

 

*************************************

 

கிறிஸ்டோபர் நோலனை பார்த்ததும் உறைந்துவிட்டான் பிரகாஷ், அவனது தோளை இடித்து சுயநினைவிற்கு கொண்டு வந்தான் ருத்ரபிரதாப். எல்லோரும் கைகுலுக்கிக் கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். எங்கே சந்தனா முறுங்கை மரம் ஏறப்போகிறாளோ என்று உள்ளே படபடத்தது அவசியமற்றதாய் போனது. அவளும் சர்வசாதாரணமாக கைகுலுக்கி கட்டிப்பிடித்து, அவருக்கு அருகில் கால்மேல் கால்போட்டு கண்களில் ஆர்வம் மின்ன பேசலானாள் சந்தனா.

 

ருத்ரபிரதாப்பின் முந்தைய படமான உயிரின் எல்லை படத்தை பற்றி பாராட்டி அவர் பேசியபோது அவனுக்கு பெருமையாக இருந்தது.தற்போதைய படம் என்ன? என்றும் விசாரித்தார்.

 

“மிருதுளா சார், இட் இஸ் எ ரோமான்ட்டிக் திரில்லர் கம் சஸ்பென்ஸ்” என்றான். மிருதுளா வெற்றிபெற வாழ்த்தினார்.

 

அதேபோல் அவனும் அவரது பழமை காக்கும் பழக்கமான பிலிம் ரோல் கேமரா ஹான்டிலிங் பற்றி பாராட்டி பேசினான். தான் கொண்டுவந்த அன்பு பரிசை அவரிடம் கொடுத்த பொழுது அவர் ஆர்வமாக அதனை பிரித்து பார்த்தார்.

 

உள்ளே ஓர் சின்னஞ்சிரிய பிராண்டட் பிளாஸ்க்.

 

அதனை பார்த்ததும் கிறிஸ்டோபர் நோலன் சிரித்துவிட்டார் கூடவே

 

“மோஸ்ட் வேல்யுவபிள் கிப்ட்” என்றார். காரணம் அவர் ஒரு டீ பிரியர், கோட் பாக்கெட்டில் எப்போதும் ஒரு சின்ன பிளாஸ்க்கில் டீ இருந்து கொண்டே இருக்கும்.

 

ருத்ரபிரதாப்பின் பயனுள்ள பரிசுக்கு நன்றி கூறியவர். பிரகாஷின் கேமிரா வொர்க்கும் பாராட்டப்படவேண்டிய ஒன்று என்றார்,  இவர்களது கூட்டணி வெற்றி கூட்டணி என்றார்,இதை கேட்ட பிரகாஷ் இந்த உலகத்திலேயே இல்லை.

 

நந்தினியின் நடிப்பை பற்றியும் சிலவரிகள் பேசினார்,அவளும் அதற்கு ஏற்றார்போல் அழகான ஆங்கிலத்தில் பதிலளித்தாள், அவரது சமீபத்திய படமான Dunkirk படத்தை பற்றி சில விபரங்களையும் கேட்டுக்கொண்டாள். அவரது மற்ற படங்களான Inception, interstellar, batman series பற்றி ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தாள்

 

அப்போது பிரகாஷ் ருத்ரனின் காதை கடித்தான்

 

“ஆச்சர்யமா இருக்கு ருத்ரா, அந்த பல்லி மிட்டாய் சைஸ் மாத்திரைக்கு இவ்வளவு சக்தியா? ‘

 

ருத்ரபிரதாப்பும் இமைக்காமல் அவளைத்தான் பார்த்துகொண்டிருந்தான்

 

“”எஸ் ஹட்ஸ் ஆப் டூ ஷர்மா ”

 

“மருத்துவத்தின் மகிமையே மகிமை!!! ” – பிரகாஷ்.

 

முகங்களின் தேடல்தொடரும்….

 

Hi friends…..

என்னுடைய முகங்கள் கதைக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் தோழமை அனைவருக்கும், என் நெஞ்சார்ந்த நன்றி. எனக்கு மிக பிடித்த ஹாலிவுட் டைரக்டரை பற்றி இந்த Ud இல் எழுதியிருக்கிறேன்.

கிறிஸ்டோபர் நோலன் ஒரு பிரபல ஹாலிவுட் டைரக்டர் என்பது உங்களில் பலருக்கு தெரிந்தும் இருக்கும். எனக்கு இவரது படங்கள் பிடிக்கும். பார்ப்பவர்களை குழப்பிவிட்டு ரசிப்பவர் இவர் என்றுதான் எனக்கு தோன்றும். இவரது ஒவ்வொரு படமும் புது புது கதை களத்தை மையமாக வைத்து நகரும், Dunkirk – உலகப்போரை பற்றி, Following – ஒரு எழுத்தாளரைபற்றி, Inception – கனவு திருட்டு பற்றி, Interstellar -வின்வெளிபற்றி,  Momentem – short term memory loss பற்றி, The prestige – magic mans பற்றி, இன்னும் நிறைய இவரது படங்களை பார்த்த உடன் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. பார்க்க பார்க்கத்தான் புரியும். ஒவ்வொருமுறை பார்க்கும் பொழுதும் புதிதாக ஒன்று புரியும். அவர் டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தமாட்டார். அவரிடம் ஃபோன் கிடையாது. தனக்கான ஈமெயிலும் அவர் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. பழமையை ரசிப்பவர்.அவர் இந்தியா வந்த பொழுது உண்மையிலேயே கமலஹாசன் சென்று அவரை சந்தித்தார்.  முடிந்தால் Youtube இல் அவரைப் பற்றிய வீடியோக்களை பாருங்கள் சுவாரஸ்யமாக இருக்கும். உங்களுடன் கிறிஸ்டோபர் நோலன் பற்றிய விபரங்களை பகிர்ந்து கொள்வதில் எனக்கு சந்தோஷம்.

இதேபோல் என்றும் உங்களது ஆதரவை எதிர்பார்க்கும் – இந்திரா செல்வம்

நன்றி




12 Comments

You cannot copy content of this page