முகங்கள்-32
2737
12
முகங்கள் 32
அறிமுகமான முதல் நாளிலேயே சந்தனாவை நந்தினிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவள் ருத்ரனின் விருந்தாளி என்ற ஒரு காரணமே அதற்கு போதுமானதாக இருந்தது. அவளுடன் பழகப் பழக அவளது வெகுளித்தனம், உள்ளத்தில் நினைப்பதை அப்படியே பேசும் தைரியம் என எல்லாம் ஒவ்வொன்றாய் பிடிக்க அவளை தன் நெருங்கிய தோழியாய் பாவித்தாள். இதுவரை இப்படி ஒரு தோழி அவளுக்கு கிடைத்ததேயில்லை. யார் அவளிடம் பேசினாலும் அதில் அவர்களுக்கு என்ன லாபம் என்று தான் அவளுக்கு யோசிக்க தோன்றும் , ஏனெனில் அவள் கடந்து வந்த நபர்கள் அப்படிபட்டவர்களே, இதில் விதி விலக்காய் தெரிந்த சந்தனாவை நந்தினியின் மனம் இறுக பிடித்துக்கொண்டது.
ஆனால் கொஞ்சநாட்களாக அவளது கண்கள் சிலவற்றை பார்த்து வருந்த நேரிட்டது
அது, ஷூட்டிங் செட்டில் ருத்ரனின் பார்வை சந்தனாவை அவ்வப்பொழுது உரசி செல்வதுதான். அவன் கண்களில் தெரிந்த ஈர்ப்பை அவளால் உணர முடிந்தது. ஆனால் சகித்துக் கொள்ளத்தான் முடியவில்லை, இரவில் வெகுநேரம் நந்தினியின் தலையணை நனையும்.
ருத்ரன் சந்தனாவை பார்க்கும் பொழுதெல்லாம், சந்தனா முகம் திருப்பிக்கொள்வதும் நந்தினியின் பார்வையில் படத்தான் செய்தது, அது அவளுள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
ருத்ரபிரதாப் பேரும் ,புகழும், செல்வமும் நிறைந்தவன் மட்டுமல்ல, உண்மையானவன், கண்ணியமானவன், அப்படிபட்டவனை ஏன் இந்தப் பெண் நிராகரிக்கிறாள்? என்கின்ற கேள்விதான் அவளுள் எழுந்தது.
ஆனால் அவளது வெறுப்புக்கான காரணத்தையும் அவள் வாய்மொழியாகவே பலமுறை கேட்டிருக்கிறாள், சந்தனாவை பொருத்த வரை அவன் ஒரு நயவஞ்சகன், சுயநலவாதி, குள்ள நரி, திமிர்பிடித்தவன் அப்படியிருக்க அவளது மனதில் இருக்கும் விரோதமும் வெறுப்பும் மாறவே மாறாதென்று நந்தினிக்கு தெளிவாக புரிந்தது.
அது அவளுள் சிறு சந்தோஷத்தையே ஏற்படுத்தியது. ஆனால் விருப்புக்கும் வெறுப்புக்கும் ஓர் நூலிழை தான் வித்யாசம் என்பதும் அவளது மூளைக்குள் எங்கோ ஒலித்துக்கொண்டே இருந்தது.
***********
நந்தினிக்கு அது மூன்றாவது படம்,
அன்றைய காட்சியை நந்தினிக்கு விளக்கிக்கொண்டிருந்தார் ஒருவர், அப்போது தூரத்தில் டைரக்டரிடம் யாரோ சத்தமாக பேசுவது கேட்டது.
எப்பொழுதுமே செட்டில் டைரக்டரின் குரல் தான் ஓங்கியிருக்கும். எல்லோரும் அவருக்கு ஆமாம் சாமி போட்டுதான் நந்தினி பார்த்திருக்கிறாள். அப்படி யாருக்காவது முரணான கருத்து இருந்தாலும் மெதுவாக சொல்ல முயற்சிப்பார்கள் அல்லது எதற்கு வம்பென்று அமைதியாக இருந்துவிடுவார்கள்
இப்படி டைரக்டரிடமே வாதாடும் குரலுக்கானவனை ஆர்வத்தோடு பார்க்க முயலுகையில் அங்கு தெரிந்தவன் தான் ருத்ரபிரதாப்,
என்ன பிரச்சனை என்று தெரியவில்லை ஆனால் அவன் சத்தமாக கோபத்தோடு பேசுவது அவள் நின்ற இடத்தில் இருந்து தெளிவாக கேட்டது.
“இப்போ எதுக்கு சார் சம்பந்தமே இல்லாம என்ன திட்டுனீங்க? ஐ வான்ட் எ சாலிட் ரீசன் ” என்றது ருத்ரனின் கடுமையான குரல்
“டேய் ருத்ரா சும்மா இருடா ” அவனது காதை கடித்தான் சக அசிஸ்டன்ட் செந்தில்
“நீ வாய மூடு, இவருக்கு கீழ நம்ம வேலை செய்யத்தான் வந்தோம், அசிங்கப்பட இல்ல ” செந்திலின் வாயடைத்துவிட்டு டைரக்டரை முறைத்தான். அவரும் இவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார், ஆனால் எதுவும் பேசவில்லை
“என்ன தம்பி டைரக்டர்கிட்டயே இப்படி பேசுறீங்க ” கோ புரடியூசர் ஞானசகாயம் பிரச்சனையின் தீவிரம் புரிந்து களத்தில் இறங்கினார்
அவர் எப்போதுமே அமைதியானவர், ருத்ரபிரதாப்பை தம்பி என்று தான் அழைப்பார். அவர்மீது அவனுக்கு எப்போதுமே அன்பு கலந்த மரியாதை உண்டு. அவருக்காக குரலை தாழ்த்தியவன்
“சரி சார் நான் பேசலை, ஆனால் என்னை ஏன் திட்டினார்னு எனக்கு தெரியனும் ” விடாப்பிடியாக பேசினான் ருத்ரன்
யாருக்காக பேசுவது? என்று சகாயம் சிந்திக்கையில்
“டைரக்டர்னா அப்படித்தான் சத்தம்போடுவார், அவருக்கு எவ்வளவு டென்ஷன் தெரியுமா?” டைரக்டரின் ஒரு கொடுக்கான பாண்டியன் இடைபுகுந்து பேசவும் மீண்டும் பொங்கினான் ருத்ரபிரதாப்
“அதுக்கு? நாங்கதான் கிடைச்சோமா? எந்தத் தப்பும் செய்யாத என்னை திட்ட இவருக்கு என்ன சார் ரைட்ஸ் இருக்கு? ” ஞானசகாயத்தை பார்த்து நியாயம் கேட்டான்.
“ஒரு அசிஸ்டன்டுக்கு இவ்வளவு திமிர் ஆகாது, நீயெல்லாம் டைரக்டர் ஆனா வெளங்கிடும் ” மீண்டும் ருத்ரனின் கோபத்திற்கு தூபம் போட்டான் பாண்டியன்
அவனது தன்மானத்தை, அவனது கனவை, அவனது லட்சியத்தையே ஆட்டிப்பார்த்தவனை எரித்து விடுவதுபோல் முறைத்தான், கண்கள் செந்நிறமானது, செந்திலும் இன்னொரு அசிஸ்டன்ட்டும் அவனது இருதோள்களை பிடித்துக்கொண்டனர். கோபத்தில் கொந்தளித்தான் ருத்ரபிரதாப்
“யூ…யூ……” அவன் வாயில் வரவிருந்த கெட்ட வார்த்தை சகாயத்தின் முகம் பார்த்து பாதியிலேயே நின்றது.
ருத்ரபிரதாப்பின் முகத்தில் தோன்றிய வெறியை பார்த்த பாண்டியனின் முகம் வெளிறி விட்டது, ஞானசகாயத்தின் பின் மறைந்து நின்று கொண்டான். வாட்ட சாட்டமான ருத்ரபிரதாப் லேசாக தட்டினாலே அவன் சுருண்டு விழுவது உறுதியாயிற்றே.
ஞானசகாயமும் ருத்ரபிரதாப்பை சமாதானப்படுத்தத்தான் முயன்றார், ஆனால் நடுவில் பாண்டியன் வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டான்.
பாண்டியனின் வெளிறிய முகத்தை கவனித்தவன் செந்திலிடம் திரும்பி “ஒன்னும் செய்யமாட்டேன் விடுங்க ” என்றான் கடித்த பற்களிடையே
அவனது அந்த குரலை தாண்டி அவனை பிடித்து வைக்கும் தைரியம் அவர்களுக்கில்லை. மெதுவாக தங்களது பிடியை தளர்த்திக்கொண்டனர்.
ஞானசகாயத்தை நெருங்கி “சாரி ஞானசகாயம் சார் ” என்றவன்
தலையில் போட்டிருந்த கேப்பை கழட்டி தரையில் ஓங்கி அடித்தான், உடன் கையிலிருந்த பேப்பரையும் அதை தாங்கிய அட்டையையும் செந்திலின் கையில் அழுத்திவிட்டு ஆக்ரோஷமாக டைரக்டரை நிமிர்ந்து பார்த்தான்,அவரோ அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
“ஐ ஆம் நாட் யுவர் ஸ்லேவ்(நான் உங்கள் அடிமையில்லை) மைன்ட் இட் ” என்றவன் வேக நடையுடன் நடந்து மறைந்தான்
அவன் செல்வதையே எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.. அங்கே ஓர் புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது. அப்போது ருத்ரன் நந்தினிக்கு ஓர் மாவீரனை போல் தோன்றினான்.
அதிலிருந்து அவளது கண்கள் அவனை கவனிக்க தொடங்கியது
*******
கோபமாக ஊருக்கு கிளம்பிவிட்ட ருத்ரனை ஞானசகாயம் மற்றும் இன்னும் சில முக்கிய புள்ளிகளும் சென்று சமாதானப்படுத்தி மீண்டும் அந்த படத்தில் தொடர வைத்தனர்.
அதற்கு அவன் வகுத்த கண்டிஷன்களையும் அவர்கள் ஏற்க வேண்டியதாய் இருந்தது.
அதன் பிறகு டைரக்டர் டென்ஷனில் திட்டினால் கூட மறந்தும் ருத்ரனை பார்க்கமாட்டார்.
ருத்ரபிரதாப்பின் திறமைக்கு கிடைத்த மரியாதை இது என்றே நந்தினிக்கு தோன்றியது.
அதுமட்டுமல்ல அவனது திறமையை அவளுமே இப்போது கண்கூடாக காண்கிறாள்.
ஓய்வு நேரங்களில் மற்ற அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் துணை நடிகைகளிடம் பேசி சிரித்துக் கொண்டிருக்கையில். இவன் மட்டும் எப்போதும் பேப்பர் பேனாவுடன் தனியாக சென்று அமர்ந்து கொள்வான்.
அதுமட்டுமல்ல உடன் வேலை பார்ப்பவர்களிடம் ஏதாவது ஒரு சூழ்நிலையை விளக்கி அதனை அவர்கள் எப்படி கையாள்வார்கள் என்று கேட்டு அதிலிருந்து அவனுக்கு தேவையானதை குறித்துக்கொள்வான்.
அங்கே வேலை செய்யும் அத்தனை ஊழியர்களுக்கும் சரியாக சம்பளம் வந்ததா என்று விசாரிப்பான், அப்படியாராவது இல்லை என்றால் ஞானசகாயத்திடம் இதுபற்றி பேசி சம்பளத்தை வாங்கிக் கொடுத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். யாராவது கஷ்டப்பட்டால் முதல் உதவிக்கரம் இவனுடையதாய்த்தான் இருக்கும்,செட்டில் எல்லோரும் சாப்பிட்டார்களா என்று உறுதிசெய்துகொள்வான்.
அப்படி ஒரு நாள் எல்லோரிடமும் கேட்டது போல் நந்தினியிடமும் ஓர் வார்த்தை கேட்டான்.
“சாப்பிட்டீங்களா மேடம்? ”
அவ்வளவுதான் நந்தினியினுள் சந்தோஷம் பொங்கியது. அவனது சாதாரண கேள்வி அவளை ஏன் இவ்வளவு மகிழ்ச்சியடைய செய்கிறதென்று யோசித்தவளுக்கு கிடைத்த பதில் அவளை அதிர்ச்சியடையச் செய்தது.
முகங்களின் தேடல் தொடரும் …
12 Comments
Ruthranin inor mukam.arumaiya kathai.Chandirasekara paathu nandhini payanthal ok.but santhana enn payappatanum.(ippa irukkirathu santhanava allathu namdhiniya)
Ungalathu kealviku adutha epila bhadhil irukiradhu……… thank u
SUPER UD SIS
Thank u soooooo much sis
Hi mam
நன்றாக இருந்ததுஇப்பகுதி.
நன்றி
Nandri…. ungalathu comment kurugi vitathey. Ungalai pondru kealvi keatu comment podubavargalai veaithu than ennaku oru thealivu kidaikirathu. Nandri. Adutha epi la question commentirkaga kathirupene
ஹாய் இந்திரா…. இன்னிக்கு நான் நேரடியா சைட்லேயே படிச்சுட்டேன். அதனால கமெண்ட் இங்கேயே கொடுக்கறேன்… 😀 சூப்பர்… சூப்பர்… நந்தினி ருத்ரன் ஃபர்ஸ்ட் மீட் அருமையா இருக்கு… வித்தியாசமான சூழ்நிலை.
எழுத்து நடை ரொம்ப நல்ல இருக்கு இந்திரா… குறிப்பா ‘சந்தனாவை நந்தினியின் மனம் இறுக பிடித்துக் கொண்டது’ – இது போல சில இடங்கள்ல கவனிக்கறமாதிரி எழுதியிருக்கீங்க…
Thank u soooo much nithya…… ungalathu commentai site la padikaradhu adhiga santhoshathai kodukirathu.
Nandini avanai ethum miratuniyaa..
Ha ha ha…… appadium nadanthirukumo? – comentirku nandri
Rudhran nallavanaga than irunthirukkiran. Anal enn nadhini yi kolai seithan?
Koodiya viraivil bhadhil kidaikum raji. Nandri