Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-34

முகங்கள் :34

 

அந்த அறையின் ஓர் ஓரத்தில் கிடந்த சோபாவில் அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தாள் நர்ஸ் , இரவு மணி ஒன்பது ,மெத்தையில் சுயநினைவின்றி கிடந்தவளை விட்டு அகல மனமின்றி அருகிலேயே அமர்ந்திருந்தான் ருத்ரபிரதாப்,மதியம் மயங்கி விழுந்தவள் தான் இன்னும் எழவேயில்லை, மீண்டும் பரிசோதிக்க வந்த சியாமளா “நந்திங் டு வொர்ர்ரீ ” என்றுவிட்டு சென்றார். ருத்ரனின் மனதிற்குள் ஓடியதெல்லாம் ஒரே கேள்விதான்,  எதற்காக சந்திரசேகரை பார்த்து இவள் நடுங்க வேண்டும்? இவர்களுக்குள் அப்படி என்ன நடந்திருக்கும்?

 

ருத்ரனின் சிந்தனையை கலைத்தது அவனது ரிங்டோன்.

 

உடனே எடுத்து காதுக்கு கொடுத்தவன் “எனி க்ளூ? ” என்று கேட்டான்

 

எதிர்முனையில் பிரகாஷ் “அவர் அடிக்கடி நந்தினி வீட்டுக்கு வருவாராம் ருத்ரா ”

 

“….”

 

“ஒரு புரோடியூசர் நடிகையோட வீட்டுக்கு வர்றது சாதாரண விஷயம். இதுக்கு மேல எந்த இன்பர்மேஷனும் இல்லை ”

 

“…..”

 

“சந்திரசேகரன் சார் சஞ்சய் மாதிரி கிடையாதுன்னு நமக்கு நல்லாவே தெரியும், இது மாதிரி விஷயங்களில் அவரோட பெயர் அடிபட்டதேயில்லை அப்படின்னா வேற என்னவாக இருக்கும்? ” பிரகாஷ் ருத்ரனை கேள்வி கேட்க அப்போதும் அவன் மௌனமாக இருந்தான். பிரகாஷ் பேசப் பேச ருத்ரபிரதாப்பினுள் பலவிஷயங்கள் தெளிந்தது

 

“ஹலோ ஹலோ … ருத்ரா!!  கேன் யூ ஹியர் மீ?? ” பிரகாஷ் எதிர்முனையில் கத்திக்கொண்டிருந்தான்.

 

“ஐ காட் இட்  இன்வெஸ்டிகேஷன் ஓவர், கம் பேக் ” என்றவன் தொடர்பை துண்டித்தான்.

**********************************

ஷூட்டிங் ஸ்பாட்டில் நின்றிருந்தான் ருத்ரபிரதாப்,  அவனது முகம் கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருந்தது,

 

ராட்சத ஃபேன் ரிப்பேராகிவிட்டது அன்றைய ஷூட்டிற்கு மிக தேவையான ஒன்று, பணியாட்கள் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள், “வாட் த ஹெல் யூ பீப்புள் ஆர் டூயிங் ” என்று அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ்சையும் ராட்சத ஃபேன் கான்ட்ராக்டரையும் கத்திக்கொண்டிருந்தான்

 

எல்லோரும் அமைதியாய் கேட்டுக்கொண்டிருக்க அதில் ஒரு கடைகுட்டி அசிஸ்டன்ட் மட்டும் “நேத்து வரைக்கும் நல்லா தான் சார் ஓடிச்சு ” என்றான் தைரியமாகவே என்றாலும் சன்னமான குரலில்.

 

“”ஷ்…ஷ்…ஷட்டப், யூ…” ஏதோ சொல்ல வந்தவன் நிறுத்திவிட்டான்.ஏனெனில் தன்னை போல டைரக்டரையே எதிர்த்து பேசும் துணிச்சல் அவனுக்கிருந்தது தான். ஆனால் இங்கே தவறு நடந்திருக்கிறதே, “நேத்து வர்க் ஆச்சு, இன்னைக்கு காலைல யார் செக் பண்ணீங்க, ஆர்டிஸ்ட் வர்றதுக்கு முன்னாடி இதையெல்லாம் பாக்கனும்னு தெரியாதா?” என்று கோபம் குறையா வண்ணம் கத்திக்கொண்டிருந்தான்.

 

அப்போது ஒருவன் ஓடி வந்து “நந்தினி மேடம், மித்ரன் சார் எல்லாருமே வந்துட்டாங்க ” ருத்ரபிரதாப்பின் காதில் கிசுகிசுத்தான்

 

“அதுக்கு இப்போ நான் என்ன செய்யனும் ? சிகப்பு கம்பளம் விரிக்கனுமா ?ஆஸ்க் தெம் டு வெயிட் ” என்று அவனிடமும் எரிந்து விழுந்தான்

 

அதற்குள் ஃபேனை பழுது பார்த்தவர்கள் ஸ்விட்சை போட ஃபேன் சுற்றியது, அங்கிருந்த அத்தனை முகங்களிலும் ஒர் நிம்மதி படர்ந்ததென்றால் “யூஸ் லெஸ் ஃபெல்லோஸ், குட் பார் நத்திங், காலைலயே டென்ஷன் ” என்று சிடுசிடுத்துக்கொண்டே அங்கிருந்து அகன்றான் ருத்ரபிரதாப்

 

**********************************
மழை காட்சி :

வேகமாக அடிக்கும் காற்றிற்கும் மழைக்கும் மத்தியில் நந்தினி அந்த சாலையில் நடந்து செல்லவேண்டும் பின்னோடு வரும் மித்ரன் அவளுக்கு குடை பிடிக்க வேண்டும், அதனை புறக்கணித்து விட்டு அவள் மழையில் நனைந்து கொண்டே செல்ல வேண்டும், மீண்டும் மீண்டும் மித்ரன் அவளை குடைக்கு கீழ் இருத்திக்கொள்ள முயல்கையில் பொறுமை இழந்தவளாய்

 

“கெட் அவுட் ஆப் மை வே ” என்று கத்தவேண்டும் நந்தினி

 

“நான் போகமாட்டேன் ” பிடிவாத குரலில் மித்ரன் பேசவேண்டும்

 

“யூ ஆர் நத்திங் டு மி ” அவனது கண்களை பார்த்து அலட்சியமாக நந்தினி பேசவேண்டும்

 

“பட் யூ ஆர் எவிரிதிங் ஃபார் மி ” அவன் கரகரப்பாக பேச வேண்டும்

 

அவனது கண்களை சில நொடி அவள் பார்க்கவேண்டும் பிறகு”கெட் லாஸ்ட் ” என்று கத்திவிட்டு வேகமாக நடந்து செல்ல வேண்டும்

 

பின்னே நிற்கும் மித்ரன் “உன்னோட இந்த திமிர் தான் டி உன்னை விட்டு போகவிடாம தடுக்குது ” என்று பேசிவிட்டு இதயத்தில் கைவைக்க வேண்டும் பிடித்திருந்த குடையை கீழே போட்டு விட்டு மழையில் நணைந்தபடியே ஒரு போஸ் கொடுக்க வேண்டும்,

 

இது தான் சீன் என்று ஸ்கிரிப்ட் ரைட்டிங் அசிஸ்டன்ட் தீனா சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான், பின் குறிப்பு போல் அவன் இன்னொன்றும் சொன்னான்   “நந்தினி மேடம் நீங்க உங்க முகத்துல கோபம் குறையாம பாத்துக்கோங்க.” “மித்ரன் சார் நீங்க கெஞ்சலான ரியாக்ஷன் கொடுத்துடுங்க, ஓகேவா” என்றவனுக்கு இருவரும் தலையசைத்து சரி என்றனர்

 

அவர்களது உரையாடலை கேட்டுக்கொண்டே ருத்ரபிரதாப்பும் பிரகாஷூம் கேமிரா அங்கிள்சை சரிபார்த்துக் கொண்டிருந்தனர்,

 

“டோன்ட் வொர்ர்ர்ரி தீனா,கோபமான சீன்னா நம்ம நந்தினி மேடம்க்கு சர்வ சாதாரணமா வரும்” என்று சிரித்துக்கொண்டே ருத்ரனை பார்த்தான் பிரகாஷ்

 

அவனோ அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்

 

“ஓகே, மெய்ன் ஆர்டிஸ்ட் ரெடியா? ” என்று ருத்ர பிரதாப் மைக்கில் கேட்க, மித்ரன் கட்டை விரலை உயர்த்தினான், வேறு வழியின்று அவளும் உயர்த்தினாள்

 

“ஓகே, சப்போர்டிங் ஆர்டிஸ்ட் ” என்று அவன் கேட்க அந்த சூழ்நிலையை உயிர்பிக்க  ஆங்காங்கே நின்றிருந்தவர்களும்  கட்டைவிரலை உயர்த்திக் காட்ட

“ஓகே, கேமிரா ரோல் ” – ருத்ரபிரதாப்

“ரோலிங் ” – பிரகாஷ்

“ஷவர் ” – ருத்ரபிரதாப்பின் குரல் கேட்டதும் அங்கே மழைவந்தது

“வின்ட் ” என்றதும் புயல் வந்தது

 

“ஆக்ஷன் ” என்றதும் மித்ரனும் நந்தினியும் நடிக்க ஆரம்பித்தனர்

 

மிக மிக அற்புதமான காட்சி இந்த காட்சியின் தொடர்ச்சியாக வரும் பாடலை கூட படமாக்கிவிட்டான்  கதநாயகனுக்கும் கதாநாயகிக்கும்  சிறு ஊடல் அவர்களின் செல்ல சண்டை, மிகவும் ரசித்துதான் எழுதினான் , ஆனால் அது காட்சியாக்கப்படும் போது ஏனோ ருசிக்க வில்லை,  இருப்பினும் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டு  தன் தொழிலுக்கு  உண்மையானவனாக அந்த காட்சியை படமாக்கி முடித்தான்

“கட் ” என்று அவனது குரல் கேட்டதும் காற்று மழை எல்லாம் நின்றுவிட்டது

“டேக் ஓகே ” என்றவனது பார்வை ஏனோ அவளிடம் தான் சென்று நின்றது

தண்ணீரில் முழுதாக நனைந்திருந்தவளின் ஆடை உடம்போடு ஒட்டிக்கொண்டிருக்க  முகத்தில் ஓர் நடுக்கமும் தெரிந்தது

 

மேக்கப் ஆர்டிஸ்டிடமிருந்த டர்கி டவலை எடுத்துக்கொண்டு வேகமாக அவளை அடைந்தவன், அவளது தோளைசுற்றி அதனை போர்த்திவிட்டான், அவளது தோள்களில் நிலைத்திருந்த அவனது கையை பார்த்தவள் கேள்வியாய் அவனை ஏறிட்டாள், ஓர் ஆழமான விழி உரசலுக்கு பிறகு அவளது கண்ளை தவிர்த்தவன் மேக்கப் ஆர்டிஸ்டை பார்த்து

 

“கமான் சீக்கிரம் டிரெஸ் சேஞ் பண்ண சொல்லிட்டு ஹேர் டிரை பண்ணுங்க,  ஷீ இஸ் ஷிவரிங் ” என்றான்

 

மைக்கை ஆன் செய்து “பிரேக் டிஸ்பர்ஸ் ” என்றவன் தீனாவை நோக்கி நகர்ந்தான், அவளது பார்வை ருத்ரபிரதாப்பை பின் தொடர்ந்தது

 

முகங்களின் தேடல் தொடரும்….

*************************************




7 Comments

You cannot copy content of this page