ஷ்! இது வேடந்தாங்கல்! – 2
2340
1
“ஹலோ வெங்கட் ஹியர்.” என்று நிமிர்ந்து பேசியவன் கண்களில் அணிந்திருந்த கருப்பு கூலிங்கிலாஸ் வழியாக என்னவெல்லாம் பட்டது?
அவன் கண்களில் என்னவெல்லாம் பட்டது?
ஐஸ்கீரிம் கேட்டு அழுத குழந்தை கண்களின் கருவிழிகூட கருப்பாக இல்லாத அழகிய இரண்டு ஸெளராஷ்ட்ரா இனப் பெண்கள் இளநீர் கடையில் அழகு ஸ்கர்ட்டும் டாப்ஸ் அணிந்த மூக்கும் முளியும் என்று சொல்வார்களே? அப்படிப்பட்ட அழகு ராட்சஸி ஒருவள். இவ்வளவு சமாச்சாரங்களை நோட்டம் விட்டாலும் ரிங்டோனில் சிதறவிட்ட கவனத்தை பேசுபவரிடம் சிதறவிடாமல் அழுத்தமாகக் கேட்டான்
“சொல்லுங்க சார் யார் நீங்க ? ”
“நான் 110வது வார்டு கௌன்சிலருடைய பி.ஏ பேசுறேன்… உங்ககிட்ட ஒரு வேலைகொடுக்கணும். ஒரு வேலை ஆகணும். கௌன்சிலர் நீங்கதான் சரியான தேர்வு என்று திட்டவட்டமாகச் சொல்லிட்டார். சாயங்கால வேளையில் நேரில் வரணுமே.. முடியுமா? ”
“ம். அட்ரஸ் சொல்லுங்க. ”
ரகசிய உளவுப்பிரிவு போலீஸ் என்றுதான் பெயர் ஆனால் நம்ம பெயர் லிஸ்ட்தான் எல்லா அதிகார வர்கத்துக்கும் முதலில் ஜாதக கட்டத்தோடு போகுது என்று எண்ணி எரிச்சல் பட்டவன் மீண்டும் கண்களிடம் அந்த அழகிய ராட்சஸி என்று அவன் மனம் வர்ணித்ததே? அந்த ராட்சஸியைப் பார்க்க உத்தரவிட்டான். அவளைப் பார்த்த நொடி சற்றுமுன் உள்ளம் அடைந்த எரிச்சல் விலகியது. உற்சாகமாக பஜாருக்கு வந்த வேலையை முடித்துவிட்டு கிளம்பினான். மாலை மணி ஆறு.
அந்த பங்களாவில் அவன் கார் நுழையும் போதே அவன் எண்ணிக்கொண்டபடி பத்து சி.சி.டி.வியின் மென்பொருளில் அவன் முகம் பதிவானது.
காரிலிருந்து இறங்கியவனை ஒரு அசத்தலான இளைஞன் வரவேற்றான் “வாங்க சார் நீங்க சரியான நேரத்துக்கு வந்திடுவீங்க என்று தெரிஞ்சதால் ஐயாவும் அரை மணி நேரம் முன்பே வந்திட்டார். ப்ளீஸ் கம் இன் வெங்கட். ”
இளைஞனின் வரவேற்பை பெற்றுக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்ததும் லிஃப்டில் ஏறினான். லிஃப்ட் நான்காம் தளம் என்று காண்பித்தபோது அது அசைவற்றுப்போனது.
லிஃப்டைவிட்டு வெளியே வந்தவன் அவன் வந்திறங்கிய தளத்தின் ஆடம்பரத்தை திகைப்புடன் பார்த்தான். சுவரின் அருகிலே இருந்த ஒரு கட்டிலின் பாதிபரப்பளவு கொண்ட பளீர் வெள்ளை நிற சோபாவில் அவனை அமரச் சொன்னார்கள். எதிரே உட்கார்ந்திருந்த வெள்ளை வேட்டி பெரிய மனிதர்தான் கௌன்சிலர் என்று தெரிந்து கொண்டான்.
எதிரில் இருந்த நாற்பது வயது ஆண் பேசும் அறிகுறியே தெரியவில்லை. சாவதானமாக வெங்கட் தனது செல்பேசியை சட்டைப் பாக்கெட்டில் இருந்து எடுத்து அணைத்தான்.
செல்பேசியை அவன் பக்கத்திலிருந்த சோபாவில் பொத்தெனப் போட்டான். அட புரிந்துகொண்டானே என்று அடுத்த நொடியில் புன்னகையுடன் நாற்பதுவயது கௌன்சிலர் பேச ஆரம்பித்தார் “உளவுத்துரையில் நீங்கதான் பெஸ்ட் என்று கேள்விப்பட்டேன். அதான் உங்களை வரவழைச்சோம். இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்டுக்கு விஷயம் போகாமல்… ”
வெங்கட் ‘சரி’ என்று தலையசைக்கவும் அவர் மேலும் தொடர்ந்தார்.. “ஏழு வருஷம் முன்பாக என் வீட்டில் இன்கம்டாக்ஸ் ரைட் வந்தது. முன்கூட்டியே ரைட் பற்றி தெரிந்ததால் சுமார் நாற்பது எல் ரொக்கத்தை என் வைஃபின் சகோதரன் வீட்டில் வைத்திருந்தேன். அவன் பணத்தை கோட்டை விட்டுட்டான்.”
“எப்படி?” என்று வெங்கட் கேள்வி கேட்கவும்.. தயங்கியபடி தொடர்ந்தார்
“அவன் ஒரு பொண்ணுகூட ஜாலியாக இருந்தப்ப.. ”
“பணத்தை அவள்தான் எடுத்திருக்கா. பவித்ரான்னு பெயர். அவளை உடனே பிடிச்சிட்டோம். ஆனால் எங்களிடமிருந்து தப்பிச்சிட்டா. நாங்களும் பிரச்சனை பெருசாகிடுமோன்னு அதன்பிறகு விஷயத்தை கொஞ்ச நாள் ஆறப்போட்டோம். அவசரத்தில் அவளை ஒரு ஃபோட்டோ கூட எடுக்காமல் விட்டுட்டோம். பிறகு எவ்வளவு முட்டினாலும் பணத்தைக் கண்டுபிடிக்க முடியல.
பிறகு டி.ஐ.ஜி வரை மூவ் பண்ணாலும் அவளுடன் சேர்ந்து அந்த பணத்தை பட்டுவாடா செய்த இன்னொரு பொண்ணையும் கண்டுபிடிக்க முடியல. அந்த பொண்ணு பெயர் ‘ஸ்ரீ’. பவித்ராவைப் பிடித்த அன்றே அவளையும் பிடிச்சிருக்கணும். கொஞ்சம் அசால்டா இருந்துட்டேன். எனக்கும் எலக்ஷன் வேலை இருந்ததா.. அதனால் கொஞ்சம் வெயிட் பண்னேன். ஆனால் அதுதான் தப்பா போச்சு. நானும் தலைகீழா நின்னு பார்த்திட்டேன். ஸ்ரீயைக் கண்டுபிடிக்க முடியல.” என்று தன் நிலையை விளக்கி பட்டியலிட்டவர் மேலும் சில விபரங்களை வெங்கட்டிற்கு தந்தார். வெங்கட்டும் அவர் பேசுவதை மனதில் அப்படியே ஏற்றிக்கொண்டான்.
“இப்ப சமீபத்தில் ஒரு கேஸ் பற்றிய விசாரணையில் ஸ்ரீயும் பவித்ராவும் இருக்கும் வீடியோ கிடைத்தது. அது நாலு வருஷத்திற்கு முன்பு பதிவான வீடியோ. ”
“ மில்லினியனம்’ மாலில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் பவித்ராவுடன் அந்தப் பொண்ணு ஸ்ரீயும் இருந்திருக்கா.. சி.சி.டிவியில் ரெக்கார்ட் இருக்கு. ஸ்ரீ முகம் தெரியல. ஆனால் எங்ககிட்ட மாட்டினவ முகம் நல்லா கிளியரா இருக்கு. அதை வச்சி கேஸை ஏதாவது நகர்த்த முடியுமான்னு பாருங்களேன்
இடைவிடாது பேசிய கௌன்சிலரை வெங்கட் நிறுத்தி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவன் உள்வாங்கிய செய்தியில் சின்னதாய் ஒரு சந்தேகம் தோன்ற கைகளால் சைகையில் அவரை மறித்து “ஒரே ஒரு கேள்வி.” என்று சொன்னான் வெங்கட்.
1 Comment
super sister nalla podhu… then ratchasi nic starting…