முகங்கள்-38
2172
4
முகங்கள் 38
சந்தனாவின் தலை பாரமாக இருந்தது. இமைகளை திறக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை ,கைகளையும் அசைக்க கஷ்டமாக இருந்தது.
ஆனால் ருத்ரபிரதாப்பின் குரல் மட்டும் அவளது செவிகளில் தெள்ளத்தெளிவாக கேட்டது.
“வாட்??? ஆர் யூ ஷூயர் ” யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்
“தேங்க் காட், ஓகே ஐ வில் டேக் கேர், பை ” அவன் பேச்சில் வியப்பும் சந்தோஷமும் ஒரு சேர இருந்தது.
இன்னொருவரின் குரல் கேட்காததால் ருத்ரன் ஃபோனில் பேசுகிறான் என்று உறுதி செய்து கொண்டாள். ஆனால் அவளது மெத்தை ஏன் ஆடுகிறது. ஒருவேளை இது கனவோ?
இதோ மீண்டும் ருத்ரனின் குரல்
“ஹலோ !தேவ் நாயர், நீ உடனே அந்தமான் கிளம்பனும்”
“….”
“எஸ் இமீடியட்லி ஹட்பே தீவுல நம்ம விட்டுட்டு வந்த மிச்சத்தை கலெக்ட் பண்ணனும் ”
“….”
“வேற யார் கையிலயும் அது போகக்கூடாது ”
“…”
“பீ கேர்ப்புல், நான் சென்னை வந்ததும், ஐ நீட் எ குட் நியூஸ் ”
அவ்வளவு தான் அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை.
இரண்டு முறை அவளது நெத்திமுடியை கோதி சரி செய்தான். கன்னத்தை வருடிக்கொடுத்தான். அவளால் அதனை உணரமட்டுமே முடிந்தது தடுக்கமுடியவில்லை.
இவன் சென்னையில் இல்லை என்றால் வேறு எங்கு இருக்கிறான்? அப்படியானால் இப்போது அவளும் சென்னையில் இல்லையா? வேறு எங்கு இருக்கிறாள்? தலைக்குள் யாரோ சுத்தியல் வைத்து அடிப்பது போல் வலித்தது.
“இதோ இந்த வீடு தான் ஸ்டாப் பண்ணுங்க ” மீண்டும் ருத்ரனின் குரல்.
இப்போது அவளால் கைகளை அசைக்க முடிந்தது. விழிகளை அசைக்க முடிந்தது.. இதோ கண்களை கூட திறக்க முடிகிறது.மெதுவாக கண்களை திறந்தாள். சுற்றும் முற்றும்பார்த்தாள்.கேரவன் தான் என்பதை உறுதி செய்து கொண்டாள். ருத்ரனை கண்கள் தேடியது. அவன் டிரைவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான், பேசி முடித்து விட்டு திரும்பியவன் அவள் விழித்திருப்பதை பார்த்துவிட்டான்.
வேகமாக அவளருகில் விரைந்து “டிட் யூ ஸ்லீப் வெல்? ” என்று கேட்டான்
ஆம் என்பது போல் தலையை மேலும் கீழும் அசைத்தவள் ஜன்னல் வழியே வெளியே பார்க்க முயற்சித்தாள்.
சரியாக எதுவும் தெரியாததால் வேறு வழியின்றி அவனிடமே கேட்டாள்
“நம்ம எங்க இருக்கோம்? ”
“சர்ப்ரைஸ் ”
“இது என்ன புது கேம், ஐ டோன்ட் லைக் சர்ப்ரைசஸ் ” என்றாள் எரிச்சலுடன்
அவளது முகத்தைவிட்டு பார்வையை சிறிதும் விலக்காமல் “சரி வேற என்ன கேம் பிடிக்கும்னு சொல்லு விளையாட ஐ ஆம் ரெடி, ” என்றான் குறும்புடன்
“வாட் ரப்பிஷ்?” கோபத்தில் அவள் முகம் சிவந்தது
“ஓகே ஓகே கூல்.. ஜோக்ஸ் அபார்ட், வா நீயே வந்து பார், ஐ திங் யூ வில் லைக் இட், பட் கொஞ்சம் ஃபிரஸ் ஆகிட்டு வா, நடிகை நந்தினிக்குன்னு ஒரு ஃபேஸ் வேல்யூ இருக்கு, டோன்ட் ஸ்பாயில் தட்” என்று முடித்து விட்டு வெளியே சென்றான்.
எங்கு தான் இருக்கிறோம் என்னும் கேள்வி குடைந்தாலும் வேகவேகமாக முகம் கழுவி சிறு ஒப்பனையுடன் கேரவனை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்தாள்.
அவள் அந்த சுற்றுப்புறத்தை கிரகிக்க முயற்சிப்பதற்குள் ஒரு பெண் வேகமாக ஓடி வந்து இவளது கையை பற்றினாள்
“ஐய்யோ!!! நந்தினி மேடமே தானா, நம்பவே முடியலை ” என்று பற்றிய அவளது கையை குலுக்கிக்கொண்டே பேசியவளை பார்த்து வியந்தாள் சந்தனா
தங்கை சாந்தி!!!!! மனதில் புகைப்படவடிவில் எப்போதும் இருப்பவள், இனி நேரில் பார்க்கவேமுடியாது என்று நினைக்கப்பட்டவள் இப்போது அவள் கண்முன் நிற்கிறாள்.
அங்கே நிறைய பேர் இருந்தார்கள்…..
அந்த வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. உள்ளே நுழைந்த சந்தனா எதுவுமே பேசவில்லை.
கூடத்தில் இருந்த ஊஞ்சலை பார்த்தாள், அங்கேயிருந்த புகைப்படங்களை பார்த்தாள், அதிலிருந்த சந்தனாவை பார்த்தாள்,
அங்கே கூடியிருந்த சொந்தங்களை உற்று பார்த்தாள், சோபாவில் அமர்ந்துவிட்ட போதும் அவளது கண்கள் இங்கும் அங்கும் அலைபாய்ந்தன. தலை வலித்தது
அப்போது அவளது காதுக்குள் கிசுகிசுத்தான் ருத்ரபிரதாப்
“சாந்திக்கு நாளைக்கு கல்யாணமாம், சரியான நேரத்தில் தான் வந்திருக்கிறோம், இதோ உன் சித்தி, பார்த்து பேசு, இப்போ நீ நந்தினி ”
மிக பருமனாக ஓர் உருவம் அவளை நோக்கி விரைந்து வந்தது, அப்போது தான் அந்த சிறு புகைப்படம் அவள் கண்ணில் பட்டது, சந்தனாவின் சிறு போட்டோ மாலையிடப்பட்டு அங்கே இருந்தது, சட்டென எழுந்து நின்றுவிட்டாள், ஏனோ அவளுள் ஓர் நடுக்கம் உண்டானது, தலை வலித்தது, கால்கள் தடுமாறியது, அவள் விழுந்து விடாமல் தாங்கிப்பிடித்தான் ருத்ரபிரதாப்
முகங்களின் தேடல் தொடரும்…
4 Comments
Hi mam
யாருக்குமே இந்த நிலை வரக்கூடாது தன்னை இறந்ததாக நினைத்து தன்படத்திற்கு மாலை போட்டிருக்கும் அந்த தருணம்.
நன்றி
SUPERRRRRRR
interesting. . .
Super