முகங்கள்-40
2243
4
முகங்கள் :40
நர்சின் செல்போன் பேச்சை கேட்ட சந்தனாவிற்கு தலை சுற்றியது, கால்கள் நடுங்க அப்படியே கேரவன் வாசலிலேயே தரையில் அமர்ந்து விட்டாள். இதயம் வேகமாக அடித்துக்கொண்டது, எங்கோ விழுந்து பலமாக அடிபட்டது போல் அந்த இதயம் வலிக்கவும் செய்தது.
‘அப்படியானால் ருத்ரபிரதாபிற்கு தெரிந்து தான் எல்லாமே நடக்கிறது, அதிலும் குறிப்பாக அவளுக்கு மாத்திரை கொடுக்கப்படுவது, அதன் விளைவுகள் தான் அவளுக்கு தொடர் மயக்கம், மறதி எல்லாம்! ஒரு வேளை அவனிடம் அவளுக்கு உருவாகியிருக்கும்…..இ..ந்…த….கா… அதற்கு மேல் அதனை முழுமையாக யோசிக்க கூட அவளுக்கு பிடிக்கவில்லை.
எல்லாமே இந்த மாத்திரையால்தான். இப்போது என்ன செய்வது? பேசாமல் இங்கிருந்து ஓடிவிடலாமா? அப்படியானால் என்னுடைய அந்த வீடியோ? மீண்டும் முரண்டியது.
வின் வின் என்று தெரித்த நெற்றியில் விரலை வைத்து அழுத்தினாள், தலையே பாரமாக இருந்தது.சட்டென ஒரு யோசனை
‘அது தான் இந்த உலகின் பார்வையில் சந்தனா செத்துட்டாளே இனி அவளோட வீடியோ என்ன ஆனால் தான் என்ன? ” அந்த வீடியோ, ருத்ரன், அவனது படம், எல்லாம் எப்படியோ கெட்டு ஒழியட்டும் ‘என்று நினைத்தவள் மீண்டும் பின்னடைந்தாள். ‘உயிரை விட பெரியது மானமல்லவா? அந்த வீடியோ வெளிவரக்கூடாது. அப்படியென்றால் இதற்கு என்னதான் வழி? இந்த இராட்சசனிடமிருந்து எப்படி விடுபடுவது என்று புரியாமல் பரிதவித்தாள்.
இவனுக்கு மட்டும் எப்படி எல்லாமே சாதாரணமாக இருக்கிறது, ஒரு பெண்ணை துடிக்க துடிக்க கொன்று விட்டு, இன்னொரு பெண்ணின் அடையாளத்தை அழித்து அவளை நடைபிணமாக்கிவிட்டு எப்படி நிம்மதியாக இருக்கிறான்! உலகை ஏமாற்றி போலீசை ஏமா….ற்….றி…..!!!!!
சுவிட்ச் போட்டார் போல் அவளது முகம் பிரகாசமானது
“கிருபாகரன் ” தன்னையும் மீறி அவனது பெயரை உச்சரித்தாள். கையிலிருந்த காதிதத்தை இறுக பற்றிக்கொண்டாள். பின் ஓர் உறுதியுடன் கேரவனின் கதவை திறந்து உள்ளே சென்று அமைதியாக படுத்துக்கொண்டாள்.
அந்த காலை ருத்ரபிரதாப்பிற்கு தலைவலியுடன் தான் தொடங்கியது. இருப்பினும் அதனை புறம் தள்ளி சந்தனாவுடன் திருமணத்திற்கு சென்றான். போட்டோ எடுத்துக்கொண்டான். அவனிடம் ஆர்வமாக வந்து பேசியவர்களுக்கு இன்முகத்துடன் பதிலளித்தான்.
சந்தனா பேசாமல் இருந்தது அவனுக்கு பெரிதாக உறுத்தவில்லை. அவள் எப்போதுமே அதிகம் பேசுகிறவள் இல்லையே.
தாலி கட்டும் பொழுது சந்தனாவின் கையை ஆதரவாக பற்றினான் ருத்ரபிரதாப், ஷாக்கடித்தார் போல் அவனது கையை தட்டி விட்டாள்,
சுரு சுரு என்று மூண்ட கோபத்தை அடக்க பெரும்பாடுபட்டான் ருத்ரபிரதாப், தனிமையில் என்றால் அவனது பதில் வேறாக இருந்திருக்கும், இது பொது இடம் கோபத்தை அடக்கித்தான் ஆகவேண்டும். பல்லை கடித்துக்கொண்டு அவன் அமர்ந்திருக்கையில் நேரம் காலம் தெரியாமல் அந்த ஊர் நாட்டாமையின் மகன் இவர்கள் இருவரையும் ஒன்றாக அமரவைத்து அந்த ஊர் பெரியவர்களை வாழ்த்தச் சொன்னான். இவர்களுது திருமணம் தான் உலகறிந்த விஷயமாயிற்றே!
சந்தனாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ஆனால் தப்பிக்க வழியின்றி அமைதி காத்தாள், எல்லாம் கொஞ்ச நேரம் தான், அப்புறம் ருத்ரனை கிருபாகரன் பார்த்துக்கொள்வார். மனதிற்குள் உருபோட்டபடி எல்லோரது வாழ்த்தினையும் ஏற்றாள்.
அதில் ஒரு கிழவி சும்மாயில்லாமல் “கண்ணாலம் ஆனதும் சீக்கிரம் ஒரு சிங்க குட்டிய பெத்து கொடுக்கனும் மவராசி ” என்றார்
ருத்ரனின் இதழ்களில் புன்னகை படர்ந்தது. இருந்த கோபமெல்லாம் எங்கோ தொலைதூரத்தில் தொலைந்து போனது.
லேசாக சந்தனாவின் தோளை தன் தோளால் இடித்து ‘எனக்கு டபுள் ஓகே டார்லிங் ” என்றான் காதலோடு.
அவனை முறைக்கவும் முடியாமல் அவனது கிண்டலை ஏற்கவும் முடியாமல் தற்மசங்கடத்துடன் நெளிந்தாள் சந்தனா
” பொண்ணு வெட்கப்படுது ஆத்தா, இங்கிட்டு வா ” என்று சந்தனாவை காப்பாற்றினாள் ஒரு நடுத்தர வயது பெண்மணி
“அட இவங்களுக்கெல்லாம் வெட்கம் வேற வருமா? எல்லாம் நடிப்பு மாதிரிதான் இருக்கு ” என்று சத்தமாகவே கிசுகிசுத்தாள் ஒரு பெண், அது சந்தனா ருத்ரன் இருவர் காதிலும் தெளிவாகவே விழுந்தது.
ருத்ரனின் முஷ்டி இறுகியது
‘நடிப்பவர்களும் மனிதர்கள் தானே, அவர்களுக்கு, காதல் வெட்கம், துக்கம், அழுகை, சிரிப்பு எல்லாம் இயல்பாய் வரக்கூடாதா என்ன? ‘ ஆனால் இந்த ஒரு பெண்மணியிடம் கோபம் காண்பித்து என்ன பயன் இப்படி இந்த உலகில் எத்தனை பேர், எல்லாம் அவர்களாகவே உணர்ந்தால் தான் எல்லாம் மாறும் ‘ ஓர் பெருமூச்சுடன் தன்னைதானே சமாதானப்படுத்திக்கொண்டான்
அருகிலிருந்த சந்தனாவின் முகம் பார்த்தான், அவளது முகமும் இறுகித்தான் இருந்தது.
எப்படியோ அந்த மக்களின் பிடியிலிருந்து தப்பி மணமக்களிடம் சென்று வாழ்த்து கூறினார்கள், ஆறு இலக்க எண் நிறைந்த காசோலையை அவர்களுக்கு பரிசாக அளித்தான் ருத்ரபிரதாப்.
அந்த ஊரே புடை சூழ ருத்ரபிரதாப், சந்தானாவை ஏந்திய அந்த கேரவன் சென்னையை நோக்கி புறப்பட்டது.
இரவு சரியாக தூங்காததால் பயணத்தின் போது ருத்ரபிரதாப் தூங்கிவிட்டான்.
சந்தனா நகத்தை கடித்தபடி தன் திட்டத்தை எப்படி அரங்கேற்றலாம் என்று தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
கேரவனை விட்டு இறங்கியதும் வேகமாக கேரனை விட்டு இரங்கியவள் ருத்ரனை தள்ளிக்கொண்டு அவசரஅவசரமாக அவளது அரைக்குள் நுழைந்து கதவை தாழிட்டாள்.
வேகமான சில மூச்சுக்களை உள்ளிழுத்து வெளியேற்றியவள், அங்கிருந்த ஒரு பாட்டில் தண்ணீரையும் மூச்சுவிடாமல் ஒரே மிடறில் குடித்து முடித்தாள்.
வழி முழுவதும் பச்சை தண்ணீர் கூட குடிக்கவில்லை. அதில் அந்த நர்ஸ் எதையாவது கலந்திருந்தால்? இனி அவள் கையால் கொடுக்கும் எதையுமே தொடக்கூடாது என்று தனக்குள் உறுதிகொண்டாள்.
தன் திட்டத்தை அரங்கேற்றும் நேரம் வந்து விட்டது
அந்த அரையிலிருந்த தொலைபேசியை கையிலெடுத்தவள் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த காகிதத்தை எடுத்து அதிலிருந்த நம்பரை டயல் செய்தாள்
எதிர்முனையில் கம்பீர குரல் “கிருபாகரன் ஹியர் ”
முகங்களின் தேடல் தொடரும்….
4 Comments
Hi mam
நன்றாக இருந்தது இப்பகுதி .
நன்றி
Super. Santhana etukkira mutivala avalukku nallathu natakkuma .illa kettathu natakkuma.poruththiruppom
Sandanaa new yosipatharkul avan mudithe viduvaan
Sandhana kurubavidam solli viduvalo, appo rudhran?????