Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-46

முகங்கள் – 46

 

“நந்தினி ஆஆகை ” என்ற சந்திரிகாவின் வார்த்தையை ருத்ரபிரதாப் பிரகாஷ் இருவராலுமே நம்பமுடியவில்லை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஆனால் சந்திரிகாவின் முகத்தில் இருந்த பிரகாசம் அவர் கூறுவதை உண்மை என்றது,

 

பின்னால் நின்று கொண்டிருந்த சியாமளா முன்னே வந்து ருத்ரனின் காதருகே “எனிதிங் இஸ் பாசிபிள் ” என்று கிசுகிசுத்தவர்

 

“நான் அவங்களை பாக்கனும் ” என்று முன்னே வர முயன்றார்

 

“நோ ” ஒற்ரை வரியில் சியாமளாவை தடுத்தவன், கார் சாவியை பிரகாஷின் கைகளில் திணித்து விட்டு பக்கத்து அறையை நோக்கி நடந்தான்

 

‘கடவுளே எதுவும் விபரீதமாகிவிடக்கூடாது ‘ மனதிற்குள் வேண்டிக்கொண்டான் பிரகாஷ்

 

“நந்தினிக்கு பேய் பிடிச்ச விஷயத்தை ருத்ரன் கிட்ட சொல்லிட்டியா?  ” என்று சந்திரிகா  கேட்க, சியாமளா பிரகாஷை கேள்வியாய் நோக்கினார்

 

‘இந்த ரெண்டுபேர்கிட்ட என்ன தனியா விட்டுட்டியே ருத்ரா, இவங்களுக்கு அந்த பேயே பரவாயில்ல போல ‘ மனதிற்குள் புலம்பித் தீர்த்தவன்

 

“இ……இ…..இல்லை, சொல்லலை ” என்றான்

 

“அதான் தைரியமா போறார் ” என்று சந்திரிகா கூற தலையில் ஓங்கி அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது அவனுக்கு

********

 

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ருத்ரன் எதை பற்றியும் சிந்திக்காமல் விரைந்து சென்று சந்தாவை தன் நெஞ்சோடு இறுக அணைத்துக்கொண்டான்,  இத்தனை நேரம் அவளை இழந்துவிட்டதாக எண்ணி அவன் மனம் பட்ட வேதனை அவன் மட்டுமே அறிந்த உண்மை,

 

அவனது பிடியிலிருந்து விடுபட துடித்து துள்ளித் திமிரியவளை மென்மையாகவே விடுவித்தான், அவன் விடுவித்ததும் விழுந்தடித்துக்கொண்டு அந்த அறையின் கடைகோடியில் சுவற்றின் மூளையில் குறுகி நின்றபடி அவனை வித்தியாசமாக பார்த்தாள் சந்தனா.

 

இந்தனை நாள் அவளது கண்களில் கோபத்தைதான் அவன் அதிகம் பார்த்திருக்கிறான், ஆனால் இப்போது பயம், பதட்டம், படபடப்பு, தூக்கமின்மையால் ஏற்பட்ட கருவளையம் ,  எல்லாவற்றையும் சந்தேகத்தோடு பார்க்கும் கண்கள்,  இப்படி எல்லாம் ஒரு சேர அவளதுமுகமே விகாரமாக இருந்தது.

 

‘இதற்கு முழு காரணம் நீ தான் ருத்ரபிரதாப் ‘ என்று சாடியது மனதின் ஓர்மூளையில் இருக்கும் கடவுளின் குரல்

 

உண்மை வலித்தபொழுதும் அதனை மாற்றும் வழி தெரியாமல் தவித்தான்.

 

நெடுந்தூரம் வந்துவிட்ட பிறகு திரும்பிப்போகும் வழி மறைந்துவிட்டதுபோல் இருந்தது,  இதோ இருப்பது ஓர் வழிதான், அதில் தான் அவனும் போக வேண்டும் சந்தனாவையும் உடன் அழைத்துச் செல்லவேண்டும், கண்களை ஒருமுறை அழுந்த மூடித்திறந்தவன்

 

“என் கிட்ட சொல்லாம எங்க போனே நந்தினி ” வேண்டுமென்றே நந்தினியில் ஓர் அழுத்தம் கொடுத்தான்

 

அவளது கண்கள் கலங்கின, கண்ணீர் வெளியே விழுந்துவிடாமல் கைகளால் அழுந்தத் துடைத்தவள்

 

“நந்தினி செத்துட்டா ” என்றாள் கடித்த பற்களிடையே

 

அடிமேல் அடிவைத்து அவளை நெருங்கியவன்”என் முன்னாடி நிக்கிற நந்தினி செத்துட்டான்னு நீ சொன்னா, என்னால எப்படி நம்பமுடியும்?,  என்னால மட்டும் இல்லை உங்க அம்மாவால ஏன் இந்த உலகமே நம்பாது ” ஒருவர் எழவே முடியாமல் எப்படி அடிக்கவேண்டும் என்று பயின்றவனாயிற்றே ருத்ரன்

 

இப்போது அவளும் குறைந்தவள் இல்லையே, யானைபலம் தன்னுள் இருப்பதுபோல் உணர்ந்தாள்

 

“நம்ப வைக்கும் நாள் ரொம்ப தூரம் இல்லை ” வார்த்தையில் ஓர் திமிர் இருந்தது

 

“ஓ….. ஐ …..சீ…….” சாவதானமாக பதிலளித்தவன்

 

“நம்பினா பாக்கலாம், அதுவரை நீ நந்தினிதான்,  ஏன் எப்பவுமே நீ நந்தினி தான்”

 

நந்தினி என்ற வார்த்தையை கேட்க பிடிக்காமல் காதுகளை இறுக மூடிக்கொண்டவளை மேலும் நெருங்கி அவளது காதுகளிலிருந்து வலுக்கட்டாயமாக அவளது கைகளை விலக்கியவன், அவள் திமிருவதை பொருட்படுத்தாமல்

 

“எல்லாம் சரிதான், ஆனால் அந்த வீடியோவை மறந்திட்டியே ” கவலையுடன் விசாரித்தான்

 

கைகளை அவனிடமிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றவள் “அது தான் சந்தனாவும் செத்துட்டாளே, இனி அவ வீடியோ என்ன ஆனா எனக்கு என்ன?  ” அவனை காயப்படுத்த கூறியது தான் ஆனால் மனதிற்குள் அவன் அந்த வீடியோவை அழித்து விட வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்

 

அவளது பேச்சிலிருந்த முரணை கவனித்தவன்

 

” நந்தினி சந்தனா ரெண்டு பேருமே செத்துட்டாங்க, அப்போ நீ யாரு? ” அவளுக்கு உண்மையை உணர்த்த அவன் கேட்ட கேள்வி அவளை வெகுவாக பாதித்தது

 

தலையை இரு கைகளால் அழுந்தப்பற்றியவள்

 

“தெ……ரி….ய….ல……..,நான்…….நான்……..” கண்கள் இங்கும் அங்கும் இலக்கில்லாமல் உழன்றன,

 

அவளது மனநிலை புரிய அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலின் மூடியை திறந்து அவள் புறம் நீட்டினான்

 

“ப்ளீஸ், கொஞ்சம் தண்ணி குடி ” என்றான்

 

தண்ணீர் பாட்டிலையும் ருத்ரபிரதாப்பையும் மாறி மாறி பார்த்தவள்

 

“நோ!!!!!!!!’ ” கிரீச்சிட்டாள்

 

“இதுல என்ன கலந்திருக்க?  நான் குடிக்க மாட்டேன், நீ ஒரு கொலைகாரன்,  நீ என்னையும் கொன்னுடுவே போ!!!  போ!!!! ”  என்று கத்தியவள் வேகமாக நடந்து வாஷ் பேசின் குழாயை திறந்து அதில் வந்த தண்ணீரை குடித்தாள், தலை லேசாக சுற்றுவது போல் இருந்தது, கொஞ்சம் தண்ணீரை முகத்தில் வேகமாக அடித்துக்கொண்டாள்

 

குழப்பத்துடன் அவளையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தவனை நிமிர்ந்து பார்த்த சந்தனா

 

“ஒய் ஆர் யூ ஸ்டேன்டிங் ஹியர்,  கெட் லாஸ்ட்,  கோ!!! ” என்று கத்திக்கொண்டே அவனிடம் விரைந்து அவன் நெஞ்சில் கைவைத்து பின்னே தள்ளியவள் அவன் கைகளிலேயே மயங்கிச் சரிந்தாள்

 

அவளை படுக்கையில் கிடத்தியவன் முகத்திலிருந்த தண்ணீர் துளிகளை தூவாலையால் ஒற்றி எடுத்தான், கலைந்திருந்த கேசத்தை தன் கைகளாலேயே சீர்படுத்தினான்,  ஏனோ அவளது அருகாமையை விட்டு விலகவே மனம் வரவில்லை, அவள் அருகிலேயே இப்படி அவளை பார்த்துக்கொண்டே இருந்துவிட மனம் துடித்தது.

 

இருப்பினும் அவனுக்கென்று சில கடமைகள் இருக்கின்றனவே

 

செல்போனை எடுத்து சியாமளாவை அழைத்தான்

 

அவர் வந்து இன்ஜக்ஷன் போட்டார்.

 

“டோன்ட் வொர்ர்ரி சார், ரெண்டு நாளா தூங்காம, குழப்பத்தோட இருந்ததால வந்த மயக்கம் தான், டேப்ளட்ஸ் போடாததால கொஞ்சம் ஹேவி டோஸ் இன்ஜக்ஷன் போட்டிருக்கேன், நல்லா தூங்குவாங்க, லெட் ஹர் டேக் ரெஸ்ட் ” என்றுவிட்டு சென்றார்

 

ருத்ரன் அவளை விட்டு துளியும் அகன்றான் இல்லை,

 

சந்திரிகாவை ஒருவாறு சமாளித்துவிட்டு ருத்ரபிரதாப்பை சந்திக்க வந்தான் பிரகாஷ்

 

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சந்தனாவை பார்த்தவன் “சியாமளா என்ன சொன்னாங்க? ” என்று கேட்டான்

 

“நல்லா தூங்கட்டும்னு சொன்னாங்க,  நீ தேவ் நாயரை கான்டாக்ட் பண்ணியா, இன்னும் அங்க என்ன பண்றான் ”

 

“நமக்கு வேண்டியது கிடைச்சிடுச்சு ருத்ரா ”

 

முகத்தில் சந்தோஷம் மின்ன பேசிய பிரகாஷை பார்த்து லேசாக ருத்ரனின் இதழ் விரிந்தன

 

” ஓல்ட் நியூஸ் டூட் ” என்று முடித்தவனின் கண்களும் சிரித்தன

 

பிரகாஷும் சிரித்து விட்டான்

 

“எப்போ இங்கே வருவான்? ”

 

“அங்க கிளைமேட் ரொம்ப மோசமா இருக்காம் சோ பிளைட்ஸ் எல்லாம் கேன்சல் ”

 

“ம்….ச்……எல்லா சைடும் லாக் ஆன மாதிரி இருக்கு பிரகாஷ்,  ஏதோ மனசுக்கு தப்பாவே படுது, ஐ ஃபீல் சம்திங் இஸ் ராங் ”

 

“ம்….ம்….உன்னோட இந்த ஃபீல்க்கு காரணம் இவங்க தானே ” என்று கட்டில் தூங்கிக்கொண்டிருப்பவளை கண்களால் சுட்டிக்காட்டினான்.

 

எதுவும் பேசாமல் மீண்டும் சந்தனாவின் முகத்தில் தன் பார்வையை பதித்தான்

 

“எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட் ருத்ரா”

 

“தேவ் நாயர் எவ்வளவு சீக்கிரம் வரானோ அவ்வளவு நல்லது, லெட்ஸ் புட் ஏன் என்ட் டு ஆல் திஸ் ”

 

“நிச்சயம் ருத்ரா, நீ நினைக்கிறது கட்டாயம் நடக்கும் ” நண்பனுக்கு ஆதரவாய் பேசினான் பிரகாஷ்

 

முகங்களின் தேடல் தொடரும்……




8 Comments

You cannot copy content of this page