முகங்கள்-47
2774
11
முகங்கள் 47 :
மாலை நெருங்கி விட்டது, சந்தனா விழித்தாளில்லை, சியாமளா உடன் இருந்தார் ,அவள் விழித்ததும் எழுப்புமாறு கூறிவிட்டு ருத்ரனும் பிரகாஷும் சிறிது நேரம் தூங்கி எழுந்தனர், இன்ரைக்கும் இரவு படப்பிடிப்பு தான். அதற்கான ஏற்பாடுகளை ஹோட்டலில் இருந்தபடியே செய்து கொண்டிருந்தான் ருத்ரபிரதாப். ஏனோ அவள் விழித்ததும் அவளை பார்த்துவிட்டு தான் செல்லவேண்டும் என்று அடம்பிடித்தது அவன் மனம்.
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் பிரகாஷ், அவனது முகத்தில் பதட்டம் அப்பட்டமாய் தெரிந்தது, பேசிக்கொண்டிருந்த போனை கட்செய்துவிட்டு அவனை எதிர்கொண்டான் ருத்ரபிரதாப்.
“ருத்ரா…..கிருபாகரன் வர்றார் ”
“வாட்???, எனக்கு எந்த இன்பர்மேஷனும் வரலையே!!! ” தன் செல்போனை எடுத்து எஸ்எம்எஸ் வாட்ஸ் அப் ஏதாவது வந்திருக்கிறதா என்று மீண்டும் சரிபார்த்தான். எதுவும் இல்லை. எதிர்பாராத இந்த பிரச்சனையை சமாளித்துத்தான் ஆக வேண்டும்,
“நீ ஏன் டென்ஷனாகிற பிரகாஷ்? அவர் யாரை பார்க்க வர்றார், நந்தினியையா, என்னையா இல்லை உன்னையா?”
“தெரியல ருத்ரா ”
“இட்ஸ் ஓகே, நீ உன் ரூமுக்கு போ, என்கிட்ட வந்தா நான் சமாளிச்சுக்கிறேன், நந்தினிகிட்ட போனா சியாமளா பார்த்துப்பாங்க ”
“இல்ல நான் எங்கயும் போக மாட்டேன், நல்லதோ கெட்டதோ உன் கூடத்தான் இருப்பேன் ” அவன் பேசிமுடிக்கவும் கதவு தட்டப்படவும் சரியாக இருந்தது
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர், பின் ருத்ரபிரதாப் சென்று கதவை திறந்தான், வெளியே அவர்கள் எதிர்பார்த்தது போல் கிருபாகரன் தான் நின்றிருந்தான்
“வாட் எ சர்ப்ரைஸ் கிருபாகரன், கம் இன்” என்று கதவை திறந்து விட்டான் ருத்ரபிரதாப்
விரைப்பாக உள்ளே வந்தவன் தன் கரத்தை ருத்ரபிரதாப்பின் புறம் நீட்டி “கிளாட் டு மீட் யூ ருத்ரபிரதாப்” எனவும் ருத்ரனும் வேறுவழியின்றி கைகொடுத்தான்
“நான் வந்ததே சர்ப்ரைஸ்னு சொன்னீங்க, பட் உங்களுக்கு இன்னும் நிறைய சர்ப்ரைஸ் காத்துக்கிட்டிருக்கு மிஸ்டர் ருத்ரபிரதாப்” பூடகமாக பேசியவனுக்கு சோபாவை காட்டிவிட்டு
“இஸ் இட்???!!!! ஐ லைக் சர்ப்ரைசஸ் ” என்று சாவதானமாக அவனும் இருக்கையில் அமர்ந்து கொண்டான் இவர்களை பார்த்துக்கொண்டு படுக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தான் பிரகாஷ்
அவனை ஓர் முறை பார்வையால் அளந்த கிருபாகரன் “என்ன பிரகாஷ் சார், நலமா? மூஞ்சே சரியில்லையே ”
“அ…தெ….ல்லாம் ஒன்னுமில்லை சார், தொடர்ந்து ஷூட் அதான் கொஞ்சம் டயர்ட் ” என்று ஏதோ சொல்லி மழுப்பினான்
“பிரகாஷ் சாருக்கு டீ சொல்லு ” என்று நண்பனை காப்பாற்றினான் ருத்ரபிரதாப்
“சொல்லுங்க மிஸ்டர் கிருபாகரன் ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ? ”
“நான் நந்தினி மேடமை கூட்டிட்டு போக வந்திருக்கேன் ”
“காரணம்? ”
“இதோ ஆர்டர்ஸ்” என்று தமிழக காவல்துறையின் ஆர்டரை ருத்ரபிரதாபின் முன் நீட்டினான்
உள்ளே லேசான நடுக்கம் ஏற்பட்ட போதும் அதனை வெளியே காண்பிக்காமல் அந்த பேப்பரில் அச்சிடப்பட்டிருந்ததை படிக்கலானான்
அதன் சாராம்சம் இது தான் ‘நந்தினியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நந்தினிக்கும் சந்திரிகாவுக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க உத்தரவிடபட்டிருந்தது.’
முகமெல்லாம் வெற்றியின் தடம் தெரிய ருத்ரனை பரிதாபமாக பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான் கிருபாகரன்.
பேப்பரிலிருந்து தன் பார்வையை அகற்றி கிருபாகரனை ஏறிட்ட ருத்ரபிரதாப்
“நந்தினி மேடம் ரூம் பக்கத்து ரூம், நீங்க தப்பா இங்க வந்துட்டீங்க ” குரலை சிறிதும் ஏற்றாமல் தெளிவாக பேசியவன் சாவதானமாக சேரில் சாய்ந்து அமர்ந்தான். தனக்கும் இந்த டிஎன்ஏ ரிப்போர்ட்டுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பது போல் இருந்தது அவனது தோரணை
எதற்காக இங்கே வந்திருக்கிறோம் என்று தெரிந்தால் ருத்ரபிரதாப் உணர்ச்சிவசப்பட்டு ஏதேனும் பேசக்கூடும் என்று ஃபோனின் ரெகார்டரை ஆன் செய்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஆர்வமாக வந்திருந்த கிருபாகரனுக்கு இது சிறு ஏமாற்றம் தான். இருப்பினும் அதனை பின் தள்ளி ருத்ரபிரதாப்பின் முகத்தை கூர்ந்து பார்த்தவன்
“உங்களோட இந்த கான்பிடன்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மிஸ்டர் ருத்ரபிரதாப் ” என்று தன்னால் ஆன மட்டும் முயன்று பார்த்தான்
“இதுல கான்பிடன்ஸ் எங்க இருந்து வந்தது. நீங்க டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போறது நந்தினிக்கு தானே!!? ”
“உண்மை தெரியர நேரம் வந்தாச்சு ருத்ரபிரதாப் ”
“ஓ அப்படியா? என்ன உண்மை ” ருத்ரனின் இந்த வாக்கியம் கிருபாகரனின் பொறுமையை மலையேரச் செய்தது
அவனை பேசவைத்து அதை கண்டிப்பாக ரெகார்ட் செய்யவேண்டும் என்ற உந்துதலில் “ஒரு கொலை, ஒரு ஆள்மாராட்டம், ஒரு பிளாக்மெயில், இது எல்லாத்துக்கும் சேர்த்து எத்தனை வருஷம் தண்டனைன்னு உங்களுக்கு தெரியுமா? ”
” நான் வக்கீல் இல்லை மிஸ்டர் கிருபாகரன் ” துளியும் அசரவில்லை ருத்ரபிரதாப்
அவனை நெருங்கிவந்து காதருகே கிசுகிசுப்பதுபோல் “சந்தனா உங்களுக்கு எதிரா ஸ்ட்ராங்கா ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்காங்க ” என்று கூறி ருத்ரனின் முகம் பார்த்தான்
“சந்….த….னாவா????!!!! ” கண்கள் விரிய லேசாக அதிர்ந்தவன் உடனே தன்னை சமன்படுத்திக்கொண்டு “சந்தனாதான் செத்துட்டாங்களே சார், உங்க கிட்ட ஃபுல் ரெக்கார்ட்ஸ் இருக்குமே ”
“அதெல்லாம் நீங்க குக் பண்ண ரெகார்ட்ஸ், நந்தினியை கொன்னுட்டு, சந்தனாவை நந்தினின்னு இந்த உலகத்தை நம்ப வைச்சு, சந்தனாவை பிளாக்மெயில் பண்ணி, எல்லாமே சந்தனா சொல்லிட்டாங்க, அதாவது இப்போ நந்தினியா நடிக்கிறவங்க அவங்க வாக்குமூலமாவே சொல்லிட்டாங்க ” முடித்தவன் ஓர் வெற்றிப் பார்வையுடன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்
இனி ருத்ரபிரதாப்தான் பேசவேண்டும் என்பது போல் இருந்தது அவனது தோரணை
“ஓ… இப்போ இருக்கிறது சந்தனாங்கிறதுக்கு.அவங்க வாக்குமூலத்தை தவிர வேற ஏதாவது சாட்சி இருக்கா?”
ருத்ரபிரதாப் ஏதேனும் பேசுவான் என்று ஆர்வமாக காத்திருந்த கிருபாகரனுக்கு அவன் தன்னிடமே ஓர் கேள்வி கேட்டு நிறுத்தியது ஏமாற்றத்தை கொடுத்தது.
இருப்பினும் தன் கையிலிருந்த இன்னொரு பேப்பரை அவன் புறம் நீட்டினான் “பிளாஸ்டிக் சர்ஜரி நடந்ததுக்கான கன்பர்மேஷன் டாக்குமென்ட் , சந்தேகமா இருந்தா உத்து பாக்கலாம் கீழே டாக்டர் ஷர்மாவின் கையெழுத்து இருக்கும்.”
அவன் காட்டிய பேப்பரை முற்றிலும் ஒருமுறை நோட்டமிட்டான் ருத்ரபிரதாப்
‘பதில் சொல்ல டைம் எடுத்துக்கிறியா? நல்லா எடுத்துக்கோ, எப்படியும் நீ இப்போ பேசித்தான் ஆகனும் ‘ என்று தன்னுள் பேசிக்கொண்டான் கிருபாகரன்
படித்து முடித்த டாக்குமென்டை சோபாவில் போட்டுவிட்டு “பிளாஸ்டிக் சர்ஜரி நடக்கலைன்னு நான் எப்போ சொன்னேன், சந்தனா இறந்த அதிர்ச்சியில் நந்தினி மயங்கி கீழே விழுந்துட்டாங்க, அவங்களோட தாடைல அடிபட்டு மார்க் வந்துடுச்சு, அவங்க ஒரு நடிகை அதனால அவங்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சோம், இதுல நீங்க சந்தேகப்படற மாதிரி என்ன இருக்கு? ” மீண்டும் கேள்வியை கிருபாகரணிடமே விட்டு விட்டு வேடிக்கை பார்க்கலானான் ருத்ரபிரதாப்
அங்கு நடக்கும் எல்லாவற்றையும் ஓர் திக் திக் மனநிலையோடு பார்த்துக்கொண்டிருந்தான் பிரகாஷ்
ருத்ரன் பேசியதில் கிருபாகரனின் ஈகோ பாதிக்கப்பட்டது, உடனே சந்தனா பேசிய வீடியோவை ஆன் செய்து அவன் முன் வைத்தான்
அதனை எந்தவித முகமாற்றமும் இல்லாமல் பார்த்து முடிப்பது ருத்ரபிரதாப் பிரகாஷ் இருவருக்குமே கடினமாக இருந்தது. அதனை தன் மனதில் தெளிவாக பதிவு செய்து கொண்டான் கிருபாகரன்
வீடியோ முடிந்ததும் ஆப் செய்து மீண்டும் ரெகார்டரை ஆன் செய்து தன் பாக்கெட்டினுள் போட்டுக்கொண்டான்.
இப்போது ருத்ரபிரதாப் பேசித்தான் ஆகவேண்டும்
வீடியோவின் தாக்கம் இருந்த பொழுதும் தன்னை ஒருவாறு சமாளித்துக்கொண்டு தொண்டையை செருமிக்கொண்டு பேச முயன்றான் ருத்ரபிரதாப்
முகங்களின் தேடல் தொடரும்…..
11 Comments
அடுத்த பதிவு எப்பொழுது?
Very interesting sis.ruthra enna pesapporan waiting for next ud
Hi mam
கிருபாகரனின் DNA பரிசோதனை செய்வது பற்றிய பேச்சிற்கு ருத்திரன் பயப்படவேயில்லையே, ருத்திரனின் பயமற்ற தன்மையை பார்த்தால் உண்மையில் உயிரோடிருப்பது நந்தினியா.
நன்றி
sema
super😊
nice ud sis
sis.. too much suspense. thanga mudiyala…
Rudhran edhuvm nadakkatha mathiriye eppadi irukkan? Hmmm
உண்மையில் உயிரோடு இருப்பது நந்தினியேதானா?இந்த ரைட்டர் என்னமா சஸ்பென்ஸ் மெயிண்ட்டென் பண்றாங்க.
Konjamum asaralaiye ruthrs.unmaiyaa sollu ippo uyirudan itupathu yaàaaaaaaR
திக் திக் திக்….