Share Us On
[Sassy_Social_Share]பேசாதே பார்வைகள் வீசாதே
1470
0
“ இந்த வருடத்திற்காண தொழிலாதிபர் விருதுல இரண்டு பேர் லீடிங்குல இருக்காங்க அது
யாருன்னு யாருக்காவது தெரியுமா என்று கேட்க, அப்போது இரண்டு ஜோடி கண்கள் ஆவலுடன் எதிர்பார்த்தது.
அதில் ஒன்று ஆதித்யவர்மன் இந்த வருடமும் என்னக்கு தான் கிடைக்கும்
என்ற இருமப்புடனும்.
இந்த வருடம் எனக்க கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடனும் காத்திருந்தாள் ஆருத்ரா
“மிஸ்டர் ஆதித்யவர்மன் stage on bless ”
ஆதி எப்படியும் உனக்கு தான் இந்த விருது கிடைக்கும்.என்று உள்மனம் கூச்சலிட
All The Best டா மச்சி என்று ரிஷி தோள் தட்ட தீர்க்கமான பார்வையுடன் தன் நெற்றியில்
விளையாடிய முடியை தன் கைகளால் கோதிய படி ஒருவித துள்ளல் நடையுடன் மேடை
ஏறினான் ஆதி.
“ மிஸஸ் ஆருத்ரா stage on Bless”
இவன் முன்னாடி நான் எப்படி போய் நிக்கிறது.என்ற யோசனையுடன் அமர்ந்து இருந்தாள்
இரண்டாவது முறையாக மிஸஸ் ஆருத்ரா stage on bless என்று கூப்பிட தன்னுடைய
யோசனைகளை பின்னுக்கு தள்ளியவள். எதுவாக
இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடுவோம். என்று இல்லாத தைரியத்தை
வரவழைத்துக்கொண்டு, அரக்குவண்ண பட்டு உடுத்தி கண்கள் இரண்டிலும் மெலிதாக மை தீட்டி
வானவில்போன்ற புருவங்கள் இரண்டும் ஆயிரம் ஆயிரம் கதை பேச புருவங்களுக்கு
மத்தியில் பொட்டு இட்டு உச்சி வகுடு எடுத்து அதில் திலகம் இட்டு இடைவரை நீண்ட முடியை தளர பின்னலிட்டு மல்லிகைசரத்தை தலையில் சூடி அன்ன நடையிட்டு மேடை
ஏறினாள் ஆருத்ரா.
“இவளா!!!!!!!!!!!!!!!!!!!!!!”
“கண்களாலேயே அவளை எரித்துவிடும் பார்வை பார்த்தான்.எதற்கும் அஞ்சதவளாக ஆதியை
பார்க்கமால் அனைவரையும் பார்த்து வணக்கம் தெரிவித்தாள்”
டேய் ஆதி அவளை பார்த்து ஒரு ஹாய் சொல்லிடுறா என்று உள் மனது எச்சரிக்க அவளை
பார்த்து ஹாய் என்று கை குலுக்கும் விதமாக கை நீட்டினான் ஆதி. அவளோ இருகையையும் கூப்பி வணக்கம் என்று கூறினாள்.
உனக்கு ரொம்ப தாண்டி ஏத்தம் என்று மனதிற்குள் வசைபாட இதை எதையும்
கண்டுகொள்ளமால் நின்று இருந்தாள்.
இந்த வருட தொழிலாதிபர் விருதிற்கான coundan bless… மிஸஸ்ஸ்ஸ்ஸ் ஆருத்ராரா…
ஆதி விருது வழங்க ஆருத்ரா அதனை பெற்றுக்கொண்டாள்.
இன்று எனக்கு கிடைக்க வேண்டிய விருது இவளால் தட்டி பறிக்கபட்டுவிட்டது இப்படிதான்
என் வாழ்க்கையும் தட்டி பறித்தாள். அதுமட்டுமில்லாமல் என் விட்டிலேயே என்னை அந்நியம்
ஆக்கினாள் என்று அவள் மிதான வன்மம் கூடிக்கொண்டே போனது.
விருதை வழங்கிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டான் ஆதி. பின் தொடர்ந்து ரிஷியும் செல்ல இதையெல்லாம் கண்டும் காணதது போல் நின்று இருந்தாள்
ஆருத்ரா.
“ ஏன்டா இப்படி வந்தே அங்க உள்ளவுங்க என்ன நினைப்பாங்க கொஞ்சமாவது நீ யோசித்து
பார்த்தாயா அப்படி என்னடா கோவம் உனக்கு”
என்னடா ரிஷி லூசு மாதிரி பேசுற அந்த விருது நான் வாங்க வேண்டியது டா இந்த
ஐந்துவருடமா நாம தான் இந்த விருதை வாங்குவோம் இன்னைக்கு எங்கிருந்தோ வந்த அவ
வாங்கிட்டு போவ நான் நின்னு வேடிக்கை பார்த்து கை தட்டனுமா.
யாருடா அவ யாரு என் விட்டில் வேலை செய்த வேலைகாரி என் விட்டிலே என்னை அந்நியம்
ஆக்கியவள் அந்த வேலைக்காரி ரிஷிக்கு கட்டுக்கு அடங்காத கோபம் வர
“ ஏய்!!!!!!! என்ன பேசிக்கிட்டு இருக்க அவள் வேலைகாரியா……….. உன் வாழ்க்கையை திருப்பி கொடுத்தவள் அவள் தானே அபி மட்டும் இல்லை என்றால் நீ
என்ன ஆகியிருப்ப?”
“அத தான்டா நானும் யோசிக்கிறேன். அவள் வாழ்க்கை கொடுத்த நான் அந்த வாழ்க்கை
வாழனுமா?”
“உன்னையெல்லாம் திருத்த முடியாதுடா… எக்கேடு கேட்டு போ நான் போகிறேன்” என்று காரை எடுப்பதற்காக சென்றான் ரிஷி.
“அண்ணாணா……….. எப்படிஇருக்கிங்க?” – அபி என்ற ஆருத்ரா. ஆனால் ரிஷிக்கோ அன்பு தங்கை அபியாகவே தோன்றினாள்.
“அபி நல்லாயிருக்கியடா வாழ்த்துக்கள் டா”
“தேங்க்ஸ் அண்ணா… அப்பா அம்மா எப்படி இருக்காங்க”
“ம்ம்………….”
“நல்ல இருக்காங்கடா நீ ….. அங்க இல்லைன்னு ஒரு குறை தான்டா.
நீ விருது வாங்கினது மட்டும் அப்பா அம்மாவுக்கு தெரிந்தால் ரொம்ப சந்தோசம்
படுவாங்க”
“அண்ணா அவரு ஏதாவது கோவமா இருக்கங்களா”
“யாரும்மா?”
“அண்ணா………….”
“என்னம்மா…. இல்லன்னா எதுக்கும்மா இவ்வளவு தயக்கம்”
தொண்டைவரை வந்த வார்த்தையை விழுங்கி கொண்டு “சரி அண்ணா நான் கிளம்புறேன்”
“தனியவா வந்த?”
“இல்லண்ணா கார்லதான் வந்தேன். அம்மா எண்ட்ரன்ஸ்ல வெயிட் பண்ணுவாங்க
அழைச்சிகிட்டு போகணும்” – சென்றுவிட்டாள்.
‘எப்படி இருந்த பொண்ணு இப்படி மாறி விட்டளே! எல்லாம் இவனால் தான்’
“என்னடா உன் பாசமலர் உன்கிட்ட பேசிட்டு போறா!”
“அதுக்கு என்ன?”
“இப்போ என்னவாம்? என்ன சொல்லிட்டு போறா?”
“அது எதுக்கு உனக்கு உன் வேலையை பார்த்துட்டு போ” என்று கூறி சென்றுவிட்டான்.
Comments are closed here.