Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உன் உயிரென நான் இருப்பேன்-3

அத்தியாயம்-3

கன்னங்கரிய இருள் சூழ்ந்த இரவு. வானத்தில் சில நட்சத்திரங்கள் மாத்திரமே கண்சிமிட்டிக் கொண்டு இருந்தன. மொட்டை மாடியில் வானத்தை வெறித்தபடி கையில் மதுக் கோப்பையுடன் நின்று கொண்டு இருந்தான் அபிநவ் ஆதித்யன். கண்கள் சிவந்திருந்தன. அவன் திரும்பி நடக்க முனைய கால்கள் தள்ளாட கீழே விழப்போனவனை விக்ரம் தாங்கிப் பிடிக்க கைகளை உதறி விட்டான் அவன்.

 

“வ்வ் வி.. க்கி.. இதுக்கு ம்..மேலஹ் பொறுமையா இருக்க கூடாதுஉஉ.. அந்த ர் ர்..ரமேஷ் செனவிரத்ன அ..வ்வனை.. ” போதையில் தள்ளாடியபடி ஏதேதோ உளறிக் கொண்டிருந்தான் அவன்.

 

” டேய் மச்சி உனக்கு என்னடா ஆச்சு? இது ரொம்ப சின்ன மேட்டர் இதுக்கு போய் டென்ஷன் ஆ இருக்கியே? அபி நீ கேட்ட டீடெயில்ஸ் எல்லாம் ரெடியா இருக்கு.” என அவனிடம் கூறி கொண்டிருக்க அபிநவ்வை பார்க்க அவனோ அப்படியே மட்டை ஆகி இருந்தான். நெடிய பெரு மூச்சொன்றை விட்டவன் அபிநவிவ்வை கைத்தாங்கலாக அறைக்கு அழைத்து சென்று உறங்க வைத்தான்.

 

அன்று காலை விழித்தவனுக்கு ஒரே தலை வலியாக இருந்தது. தலையை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்து எழுந்து அமர்ந்து நெற்றியை நீவி விட்டுக் கொண்டிருக்க அப்போது தான் இரவு உடை கூட மாற்றாமல் தூங்கி இருப்பதை உணர்ந்தான். அப்படியே குளியல் அறைக்கு சென்று காலைக்கடன்களை முடித்து குளித்து விட்டு வெளியே வந்தவன் தன்னுடைய வார்ட்ரோபில் இருந்து அன்றைய நாள் அணிவதற் கான ஆடையை தெரிவு செய்து கொண்டு இருந்தான்.

 

“குட் மோர்னிங் மச்சி.. பரவாயில்லையே நீ இன்னும் தூங்கிட்டு இருப்பனு நெனச்சேன்” என்று சிரித்தபடியே கையில் காபியுடன் உள்ளே நுழைந்தான்.

 

“டேய் காலங்காத்தால என் வீட்டுல என்னடா பண்ணிட்டு இருக்க” என்றபடி உடை மாற்றி கண்ணாடி முன் நின்று தலையை கைகளால் சீவிக்கொண்டிருந்த அபிநவ்வின் முன்னே வந்து நின்றான் விக்ரம்.

 

“அபி..” என அவன் முகத்தை கூர்ந்து நோக்கியாவன் “நான் எப்போடா வீட்டுக்கு போனேன் நேத்து நைட்ல இருந்து உன் வீட்ல தானே இருக்கேன், உன் கூட இதோ உன் பெட்ல தான் தூங்கினேன்.” என்று சொல்லிக்கொண்டே கையில் இருந்த காபியை உறிஞ்சினான்.

 

“நீ இங்கே என் கூட அதுவும் என்னோட பெட்ல தூங்கியிருக்க ம்ம்.. எனக்கென்ன அம்னீசியாவா ?? என இன்னும் நம்ப மாட்டாதவனாய் அவனைப் முறைத்துப் பார்த்தான்.

 

“ஐயா நேத்து மொட்டை மாடியில ஏதோ உளறி சரக்கடிச்சது மட்டையாகினது எதுவுமே உனக்கு ஞாபகம் இல்லை சும்மா சும்மா என்னையே மொறச்சி பார்க்க வேண்டியது. நீ வேற உடம்பை இப்படி வளர்த்து வைச்சிருக்க அங்கே இருந்து உன்னை தூக்கிட்டு வர நான் பட்ட பாடு இருக்கே. ஹப்பாஆஆஆ.. என பெறு மூச்செரிந்தான்.

 

அப்போது தான் அபிநவ்விற்கு நேற்று நடந்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவன் மனத்திரையில் படமாக ஓடியது. பூங்காவில் அவளுடன் அந்த நொடி நினைவில் மூழ்கியவன் முகம் தானாக மலர்ந்தது. அடுக்கடுக்காக அவள் அருகில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் நினைவில் தோன்ற அவனுள் இனம் புரியாத ஏதோ ஓர் சந்தோசம். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஏதோ ஒன்று அவனை ஆட்கொண்டது. ஆனால் அதன் பிறகு அங்கே அவன் கண்ட காட்சி நினைவில் வர அவன் முகம் கடுமையை காட்டியது. அங்கே அவன் அவளுடன் சிரித்து சிரித்துப் பேசியது மனத்திரையில் தோன்ற அவனை வேட்டையாடும் வேட்கை மேலும் அதிகமாகியது.

 

“ஆமா மச்சி நாம எங்கே போறோம்? இன்னைக்கு சண்டே வேற நைட் பப்புக்கு போனா ஜாலியா இருக்கும்” என ஜாலி மூடில் கூறியவனை முறைத்து வாயை மூடிக்கொண்டு வருமாறு சைகை காட்ட அப்படியே பேச்சை மாற்றினான்.

 

சிறிது நேரத்தில் இருவரும் பூங்காவை வந்தடைய அவனை குழப்பத்துடன் பார்த்தான் விக்கி. அவனை இறங்குமாறு கூறி தன் கூலர்ஸை மாட்டியடி இறங்கினான். அடிக்கடி மணிக்கட்டை உயர்த்திப் பார்த்தவனை விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தான் விக்கி. எல்லோரும் இவனுக்காக காத்திருந்து தான் பார்த்திருக்கிறான். முதல் தடவையாக இவன் இப்படி காத்திருக்கிறானே அதுவும் அவனது முகத்தில் கொஞ்சம் கூட பதற்றம் இல்லை மாறாக அவன் உதடு புன்னகையுடன் இருந்தது.

 

“மச்சி ஏன்டா இன்னும் லஞ்ச் கூட எடுக்கல. வயிறு உள்ள ஃபுட்போல் மேட்ச் ஒன்னே நடக்குது”என தன் வயிற்றை தடவிக்கொண்டே அபிநவ்வை பார்த்தான்.

 

அவன் கண்களோ அவனது தேவதையின் வரவை எதிர்ப்பார்த்து பூங்கா வாயிலை நோக்கிக் கொண்டிருந்தது. அவனை அதிகம் காக்க வைக்காமல் அவளும் வர இவன் உள்ளம் துள்ளிக் குதித்தது. இதை விக்கியும் கண்டு கொண்டான்.

 

“பயபுள்ள இதுக்காக தான் சாப்பிட கூட விடாம இழுத்துட்டு வந்தானா? இவனை..” என அபிநவ்வை பார்க்க அவன் இந்த உலகத்திலேயே இல்லை என்பது நன்றாக புரிந்தது.

 

இனியா இவர்களை தூரத்திலேயே கண்டு கொண்டாள். இன்றும் பணத்தை வாங்குவதற்காக தான் வந்திருக்கிறார்கள் என எணணியவளுக்கு திரும்பி ஓடி விடலாமா என்று இருந்தது. பக்கத்தில் அவளுடைய தம்பி வருண் இருந்தான். தம்பியும் கூடவே இருப்பதால் அன்று நடந்தது போல் எதுவும் இன்று நடக்க வாய்ப்பில்லை என தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவர்கள் இருந்த இடம் நோக்கி நடந்தாள்.

 

“ஹலோ அபிநவ் சார்.. ஹலோ அண்ணா.. என்ன சார் டெய்லி இந்தப் பக்கம் வரும் பழக்கம் இருக்கா” என சிரித்துக் கொண்டே அவர்களை பார்த்துக் கேட்டாள்.

 

“இதுவரை இந்தப் பக்கம் இப்படி வந்ததில்லை ஆனால் இனி இப்படி அடிக்கடி வர வேண்டி வருமோஓஓஓஓ னு தோனுது” என எள்ளல் தொணியில் அவபிநவ்வை பார்த்துக் கூற சட்டென்று முறைத்தான் .

 

“அப்படி இல்லை இன்னைக்கு சண்டேல அதான் சும்மா இந்தப் பக்கம்” என இலகுவாக கூறினான்.

 

“ஓ அப்படியா.. சார்..இவன் என்னோட செல்ல தம்பி வருண்” என அவன் கண்ணம் கிள்ளி தம்பியை அறிமுகப்படுத்த அந்த இடத்தில் நான் இருக்க கூடாதா என அவன் மனம் ஏங்கியது. ஹலோ சார் என அபிநவ்வை பார்த்து கை நீட்ட அதில் உணர்வு பெற்றவன் தானும் கைகுலுக்கினான்.

 

“சார் நீங்க எங்கே வர்க் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று பேச்சை தொடர்ந்தான் வருண்.

 

“அவன் தான் ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனியோட…”என்று விக்ரம் கூறி முடிக்கு முன்னர் முந்திக் கொண்டு “மேனேஜர்”என கூறி விட்டான்.

 

ஆச்சரியமாக அபிநவ்வை பார்த்த விக்கியை ஒரு கண்ணசைவால் தடுத்து விட்டான்.

 

“சூப்பர் சார் உங்க கம்பெனி ப்ராடக்ட்ஸ் ரொம்ப பிராண்டட்ல?” என வருண் அபிநவ் மற்றும் விக்ரமுடன் பேச்சை வளர்த்துக் கொண்டே போக இனியா அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். இதை அவதானித்த விக்கி அவர்களை தனிமைப்படுத்த நாடிய “வாங்க ப்ரோ நாங்க அந்தப் பக்கம் கொஞ்சம் உலாவிட்டு வரலாம்” என்று அபிநவ்வை பார்த்து கண்ணடித்து விட்டுச் சென்றான்.

 

அவர்கள் அங்கிருந்து நகர்ந்த பின் இனியா அவனைத் திரும்பிப் பார்க்க இருவரின் பார்வைகளும் ஒரே நேர் கோட்டில் சந்தித்தன. அவனது லேசர் கண்கள் அவளது இதயம் வரை ஊடுருவ இமைக்க மறந்தாள் அவள். அந்தப் பார்வை அவளுக்கு ஏதோ ஒன்றை உணர்த்த அது என்னவென்று புரியாமல் குழம்பினாள். அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் கூச்சல் சத்தம் கேட்டு சுய உணர்வு வர தன் நிலை உணர்ந்தவள் சட்டென பார்வை திசையை மாற்றினாள்.

 

“ஓகே சார் நேரமாச்சு நான் கிளம்பட்டுமா? கொஞ்சம் வேளை இருக்கு ” எனக் கூறி அங்கிருந்து கிளம்ப முயன்றாள்.

 

“பேச ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள எங்கே எஸ் ஆக பார்க்குற “என அவள் கையை பிடித்து அருகில் இருந்த பெஞ்சில் அமர வைத்து அவனும் அவள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டான். அவள் இதயம் தாறுமாக துடிக்க அவன் அருகாமை அவளுக்கு ஏதோ கூச்சத்தை ஏற்படுத்தியது. சிறு இடைவெளி விட்டு தள்ளி அமர அவன் மேலும் நெருங்கினான்

 

“ஏன் இப்போ தள்ளி தள்ளி போற? நான் உன்னை என்ன பண்ணிட போறேனு பயப்படுற? இப்படியே பேசாம உட்காரு இல்லை நான் இன்னும் பக்கத்தில வருவேன்” என சற்று கறாராக அவளுக்கு மட்டும் கேட்கும் தொணியில் கூறினான். செய்தாலும் செய்து விடுவான் என்ற பயத்தில் பேசாமல் அமர்ந்து கொண்டாள்.

 

சிறிது நேரத்தில் அவன் சாதாரணமாக பேச அவளும் இலகுவாக பேசத் துவங்கினாள்.

 

“ஆமா நீ யு.கே.ஜி டீச்சரா தானே இருக்க. இப்போ ஒரு மாதமா அங்கே தான் வர்க் பண்ணிட்டு இருக்க. படிச்சது இன்ஜினியரிங் பட் உன் அப்பாவுக்கு நீ அந்த ஃபீல்ட்ல வேலை கிடைக்கலை சோ..” என அவளைப் பற்றிய விபரங்கள் அத்தனையும் ஒன்று விடாமல் கூற அவளுக்கே வியப்பாக இருந்தது. அவளைப் பற்றி அவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறானே எப்படி என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி என்று கேட்க வாய் திறக்க முன்னர் அங்கே வருணும் விக்ரமும் வந்து சேர்ந்தனர். சிவ பூஜையில் கரடி போல நுழைந்த விக்கியை கொலை வெறியுடன் பார்த்தான் அபிநவ்.

 

“டேய் அபி” என அழைத்தவன் தன் கைப்பேசியை காட்டி ஏதோ கூற எழுந்தவன் வருணை அங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு சைகை காட்டினான்.
“வருண் நீ அந்தக் காரை பார்க்கனும்னு சொன்ன தானே வா போகலாம்”என வருணிடம் கூறி அழைத்துச் சென்றான்.

 

அவள் அருகில் அவன் நெருங்கி வர அவள் பின்நோக்கி நகர்ந்தாள். அவனிடம் கேட்க நினைத்ததை கூட மறந்து போனாள் அவள். அவள் இமைகள் இரண்டும் பசக் பசக் என்று முத்தம் வைத்துக் கொண்டன. மேலும் நெருங்கி வந்தவன் அவள் காதருகே குணிந்து ஹஸ்கி குரலில் “ இப்போ நான் அர்ஜன்ட் ஆ போகனும் சீக்கிரமாக திரும்பி வருவேன்… ஸ்வீட்டி…” எனக் கூறி அவள் ஒரு பக்க கண்ணத்தை கிள்ளி விட்டு சென்றான். அவளோ இது நிஜம் தானா என திகைத்து நின்றாள்.

 

இரவு தூக்கமின்றி தவித்துக் கொண்டிருந்தாள் இனியா. எவ்வளவோ முயன்றும் அவளால் தூங்க முடியவில்லை. அவள் நினைவு முழுக்க அவனையே சுற்றிக் கொண்டிருந்தது. அவனது ஸ்வீட்டி என்ற அந்த அழைப்பு அவளுக்குள் ஏதோ புதுத் தெம்பளித்தது. அவளுக்கு அது பிடித்தும் இருந்தது. அவ்வளவு உரிமையாக அழைத்தானே. அதை நினைக்கையில் அத்தனை ஆனந்தம். ஆனால் அவன் தொடுகை அதை எப்படி ஏற்பது. அதை எந்த விதத்தில் எத்துக் கொள்வது. அவன் எப்படிப் பட்டவன். நல்லவனா? கெட்டவனா? எதுவும் தெரியாதே. ஆனால் அவன் கண்ணம் கிள்ளிய போது அதை தடுக்கும் எண்ணம் கூட வரவில்லையே. இதே வேறு ஒருவனாக அவள் ஐவிரல்களும் அவன் கண்ணத்தை பதம் பார்த்திருக்கும். ஆனால்.. என்ன இது என்று புரியாமல் திண்டாடினாள். அன்று அவளால் சரியாக உறங்க முடியவில்லை.

 

“ உன்னை யாராலும் எதுவும் பண்ண முடியாதுனு சொன்ன. இதை பார்த்த பிறகும் உன்னால நம்ப முடியலையா? இப்போ பாரு உன்னோட இந்த நல்லவன் முகமூடி கிழித்தெறிய வேண்டிய நேரம் வந்தாச்சு. என்னை நீ அங்கே தேடாதே உன் டைம் தான் வேஸ்ட். அங்கே அனுப்பி இருக்க எல்லாமே நகல்கள் தான். அசல் எல்லாமே என்னிடம் பத்திரமாக இருக்கு. நீ இன்னும் ஒரு த்ரீ மன்த்ஸ் வெய்ட் பண்ணு நானே அங்க வருவேன்.தி கிரேட் பிஸ்னஸ் மேன் அபிநவ் ஆதித்யன் உன்னால முடிஞ்சதை செய்.” என சிங்களத்தில் எழுதி முடிக்கப் பட்டிருந்தது. அத்துடன் அந்த வீடியோவுடன் கூடிய பென்ட்ரைவ்வும் வைக்கப்பட்டிருந்தது.

 

அவனது அலுவலக அறையில் மேசை மேல் இருந்த கவரை பிரித்துப் பார்த்த இருவரும் அதிர்ந்து போய் இருந்தனர். ஒரு நிமிடம் செய்வதறியாது திகைத்தவன் மேசை மேல் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் கிளாஸை மட மட வென்று குடித்து முடித்தான். அதில் இருந்த அத்தனையும் இவனுக்கு எதிரான ஆதாராங்கள். இத்தனை நாள் இதற்கு தானே போராடிக் கொண்டிருந்தான்.

 

“விக்கி நாங்க ரொம்ப கெயார்லெஸ் ஆக இருந்துட்டோம். அவனோட டிமாண்ட் என்னனு கூட புரியலை. அவன் எங்கே போய் இருக்கான் ஏதாவது டீடெய்ல் கிடைச்சதா?” என கோபத்துடன் விக்ரமிடம் கேட்டான்.

 

“நோ அபி.. ஆனால் அவன் ஸ்ரீ லங்காவுலேயே இல்லை. நம்ம ஆளுங்க விசாரிச்சு பார்த்ததில இது தான் தெரிய வந்தது. இதுக்கு மேல இதை வளர விடக்கூடாது டா” என அவனைப் பார்த்துக் கூற அவன் கோபத்தின் உச்சத்தை அடைந்து அவன் கண்கள் ரத்தச் சிவப்பேறியிருந்தன.
“விக்கி இந்த டைம்ல எந்த பிரச்சினையும் வேணாம் சைலன்ட்டா மூவ் பண்ணலாம். பட் இதை கண்டுக்காம விடக் கூடாது. நான் பார்த்துக்குறேன்.” என விக்ரமை கூட்டிக் கொண்டு கிளம்பினான் அபிநவ்.

 

தொடரும்..




2 Comments

You cannot copy content of this page