முட்டகண்ணி முழியழகி – 2
2957
5
அத்தியாயம் – 2
“ஹா..ஹா…. மச்சி இங்க பாருடி, சிங்க்ஷான் செம்ம டி.. ஹா ஹா… சோ க்யுட் டி… சிரிச்சு முடியல…” என்று கையிலிருந்த மிக்சரை காலி செய்தபடி சிரித்தவளை, வேற்றுக் கிரகவாசியைப் போல் பார்த்தாள் ஷாலினி, தோழியிடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் இருக்க, அவளைத் திரும்பி பார்க்க, அவளோ கனலியை முறைத்துக் கொண்டிருந்தாள்.
“என்ன மச்சி… மிச்சர் அம்புட்டு காரமாவா இருந்துச்சு, உன் ஐஸ் எல்லாம் இப்படி ரெட் சில்லி மாதிரி சிவப்பா கிடக்கு,” எனவும்,
“ஏய்.. வேணாம், கொலைவெறில இருக்கேன், நானே உன்னைக் கொன்னுடுவேன் பார்த்துக்க, மனுஷியாடி நீ, பிரச்சினை எப்படி போயிட்டுருக்கு, நீ என்னன்னா கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லாம இருக்க, ஏண்டீ இப்படி இருக்க..” என்று பொங்க,
ஓய்.. என்ன.. விட்டா பேசிட்டே இருக்க, எனக்கு என்ன தெரியல..? எல்லாம் தெரியும், தெரிஞ்சுதான் பண்றேன், முடிஞ்சா ஹெல்ப் பண்ணு, இல்லையா.” என்றவள் தன் கையை வாயில் வைத்து, ‘மூடிட்டு போ..’ என்பது போல் காட்டிவிட்டு, “நான் பார்த்துக்குறேன்” எனவும்,
சட்டென்று தன் கோபத்தை விட்ட ஷாலினி, “பங்கு நான் சொல்றது அதுக்கில்லடா, அப்புச்சிக்கு ரொம்ப முடியலையாம், தேனி ஹாஸ்பிடல்ல பார்த்துட்டு, மதுரைக்கு அனுப்பியிருக்காங்க, மார்னிங்க்ல இருந்து எனக்கு கால் பன்னிட்டே இருக்காங்க, நானும் எவ்வளவுதான் சமாளிக்க, அதோட நிலவன் அண்ணா நம்பர்ல இருந்தும் மெசேஜ் வருது..” என்று முடிக்கவில்லை,
“நிலவனா.. அவனுக்கு எப்படி உன் நம்பர் தெரியும்..” என படபடத்தவளை, “ம்ம் எனக்கு மட்டும் என்ன ஜோசியமா தெரியும், உங்க வீட்டாளுங்க தான் கொடுத்துருக்கனும், இல்லைன்னா நீ வச்சிருக்கியே ஒரு உளவுத்துறைன்னு ஒரு குட்டிச்சாத்தான் கூட்டம், அதுல இருந்து எதாவது கட்சி மாறியிருக்கும்…” எனக் கடுப்படிக்க,
“இல்ல, இல்ல… அவங்க பண்ணிருக்க மாட்டாங்க, அப்பத்தா தான் செஞ்சிருக்கும், அதைவிடு, அவன் என்ன மெசேஜ் பண்ணான்..” என,
“ம்ம்ம்… என்ன சொன்னான்… தயவு செஞ்சு உன் ப்ரெண்டை திருப்பி அனுப்பிடாத, என் லைஃபை சேவ் பன்ன புண்ணியமாச்சும் உனக்கு கிடைக்கட்டும், அப்படின்னு சொல்றான்..’ என்று கடுப்படித்தவளை,
“என்ன அப்படியா சொன்னான், அடேய்.. சிடுமூஞ்சி சிம்பன்ஸி, உன்னை..” என்று பல்லைக் கடிக்க,
“அதுதாண்டி சொல்றேன், உன்னை இரிடேட் பன்றவனை சும்மா விடலாமா, எனக்கே கோபம் வெறியா கிளம்புது, உனக்கு எப்படி இருக்கும் சொல்லு, அவன் சொல்றான் சொந்த தாத்தா பாட்டியை கூட, புரிஞ்சுக்காத இவளையெல்லாம் நான் மேரேஜ் செய்து என்ன செய்ய, நாளைக்கு எங்க ஃபேமிலில இருக்குறவங்களையும் இப்படித்தான விட்டுட்டு போவா, அதனால அவளை எனக்கு வேணாம்னு சொல்லிடு, என்ன… நல்ல பொண்ணுனு நம்பபுற எங்கம்மாவை சமாளிக்குறது தான் கஷ்டம், அதை நான் மேனேஜ் பன்னிக்கிறேன்.’ அப்படின்னு சொல்றான் டி..” என ஏகத்துக்கும் ஏற்றி விட,
“ம்ம் அப்படியா சொல்றான், ஆனா அவனுக்கு என்னைப்பத்தி அவ்வளவு தெரியாதே, எப்படி சொல்றான்..” என்று வாய்விட்டுப் புலம்பியபடியே குறுக்கும் நெடுக்குமாய் நடக்க, ‘ஆஹா நாம கரெக்டா பெர்ஃபார்ம் பன்னிட்டோம், நான் பேசினதுல எப்படியும் கிளம்பிடுவா, இவக்கிட்ட இருந்து தப்பிச்சிடுவோம்..’ என மனதுக்குள் பாலே ஆடியவளை, “சரி விடு, அவனே சொன்னதுக்கு அப்புறம் நமக்கென்ன, போனா போகட்டும், எனக்கும் அவனை ஒன்னும் அவ்வளவா பிடிக்கல..” விட்டது தொல்லை என்ற ரீதியில் பேசி, நொடியில் பாலே ஆடிய கால்களை சட் சட்டென்று உடைத்து போட, ஷாலினியின் முகம் காற்று போன பலூனாய் மாறிப்போனது.
எந்தப்பக்கம் பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கிறாளே பாவி..’ என்று வெந்து நொந்து போனாள் ஷாலினி.
இப்போது ம்யுசிக் சேனலை மாற்றி, அதில் ‘ஹேய் கோலி சோடாவே, மை கறிக்குழம்பே..’ என்று பாட்டு வர, அதைப் பாடிக்கொண்டே, தட்டிலிருந்த மீதி மிக்சரையும் எடுத்து ரஜினி ஸ்டைலில் வாயில் போட்டுக் கொண்டு, தன் கைச்சட்டையை மடக்கிவிட்டு, தனுஷ் போல் ஒரு ஸ்டெப்பை போட, “ச்சே திருந்தாத ஜென்மம்..” என்றுத் தலையில் அடித்துக்கொண்டு, சோபாவில் கிடந்த பில்லோவைத் தூக்கியெறிய, அதையும் தலைவர் ஸ்டைலிலேயே கேட்ச் செய்து ஆடிக்காட்டினாள் கனலி.
மயிலாடும்பாறை கனலியின் வீடு..
“மச்சான் நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்க கூடாது, பொம்மியை நாங்க எங்க மகளாதான் பார்க்குறோம். அவளைத் தப்பு சொல்லல, தப்பாவும் செய்ய மாட்டா… ஆனா சூழ்நிலையையும் புரிஞ்சுக்கனும் இல்லையா, நிலவன் இந்த கல்யாணத்துல ‘உங்க முடிவுதான் என்னோட முடிவுன்னு சொல்லிட்டு, எதுலயும் தலையிடாம ஒதுங்கிட்டான். உங்க தங்கச்சி சத்தம் போட்டதுக்கு கூட, மேரேஜ்க்கு முதல் நாள் காலையில் தான் வருவேன், இல்லை முன்னாடியே வரனும் அப்படி, இப்படின்னா கல்யாணமே வேண்டாம்னு சொல்லிடுவேன்’ சொல்றான். அதனால இங்க நடக்குறது எதையும் நிலவன்கிட்ட நாங்க சொல்லல.”
“இதையெல்லாம் தாண்டி நிலவன் எங்களுக்கு ஒரே பையன், அவனுக்கு ஒரு சின்ன அளவுல கூட கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு பெத்தவங்களா நாங்க நினைக்கிறோம். பொம்மியோட இந்த செயல்கள் தெரிஞ்சா அவன் என்ன செய்வான்னு யோசிக்கக் கூட முடியாது, அப்புறம் கல்யாணமே வேண்டாம்னு முடிவே பண்ணிடுவான். எங்க பக்கச் சொந்தக்காரங்க மத்தியில குடும்ப மானமே போயிடும் மச்சான்..” என்று தயங்கித் தயங்கிப் பேசிய சாரதியின் கைகளைப் பிடித்துக் கொண்டார் கதிரவன்.
சாரதியின் பக்கத்தில் கைஅயைப் பிசைந்தபடி கலக்கமாய் நின்றிருந்த நாயகியைப் பார்த்த கதிரவன், “மாப்ள, உங்களுக்கு எப்போ என் தங்கச்சியை கல்யாணம் செய்து வச்சோமோ , அப்பவே நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை. கூட பிறக்கலன்னாலும், அவன்னா எங்களுக்கு உசுரு, அவளைப் போய் நாங்க வருத்துவோமா… எங்க மாப்பிள்ளைக்கு நாங்க எந்த வகையிலையும் தலையிறக்கத்தை கொண்டு வரமாட்டோம். அதை நீங்க நம்பனும்..” என்று விடாமல் பேசியவர்,
பின் தயங்கி, “மூனு தலைமுறைக்கு அப்புறம் எங்க வம்சத்துல பொறந்த பொண்ணு மாப்ள பொம்மி. அவ எங்க குலசாமி, எந்த குலசாமியும் அவங்க வம்சத்தை அசிங்கப்பட வச்சிடாது, என் பொம்மியும் அப்படித்தான் மாப்ள, ஏதோ ஒரு கோபம் அவ்வளவுதான். ஆனால் எங்களுக்கு எந்த இட்த்துலயும் அவமானத்தைத் தேடி தரமாட்டா.. நிச்ச்யம் எங்க வளர்ப்பு தப்பா போகாது மாப்ள. கல்யாணத்துக்கு செய்ய வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்யலாம், எங்க சாமி மேல நம்பிக்கை இருக்கு, சரியான நேரத்துக்கு வந்துடுவா பாருங்க. நாயகி உனக்கும் நம்பிக்கை இல்லையா..” என பேச்சில் தங்கையை இழுக்க,
“அய்யோ இல்லண்ணே.. எனக்குத் தெரியாதா என் பொம்மியைப் பத்தி, நான் வளர்த்த பொண்ணுண்ணே அவ, அவரும் ஒன்னும் தப்பா சொல்லலண்ணே, நிலவனுக்குத் தெரிஞ்சா தான்..” என படபடப்பாய் பேச,
“விடு நாயகி, அதுதான் மச்சான் இவ்வளவு சொல்றாரு இல்ல, மறுபடியும் இதைப்பத்தி பேசி குழப்பிக்க வேணாம், நம்மளை மீறி நடக்குறதை யாராலயும் தடுக்க முடியாது, எது நடந்தாலும் ஏத்துக்குற பக்குவத்தையும், மன தைரியத்தையும் வளர்த்துக்கனும் நாம..” என்றவர், கதிரவனிடம் திரும்பி “வாங்க மச்சான் ஆஸ்பத்திரி போய் மாமாவை டிஸ்சார்ஜ் செய்து கூப்பிட்டு வந்துடுவோம், இப்போவே சொந்தக்காரங்க என்ன..? என்னன்னு..? கேட்க ஆரம்பிச்சுட்டாங்க…” என்று மனைவியிடம் ஒரு தலையசைப்புடன் விடைபெற்று, கதிரவனை அழைத்துக் கொண்டு கிளம்பினார் சாரதி.
பாண்டிச்சேரி நிலவனின் வீடு…
அதிகாலைப் பொழுது மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது அந்தத் திருமண மண்டபம். பட்டும் நகையுமாய் பெண்கள் சிரிப்பும் மகிழ்ச்சியுமாக ஜொலி ஜொலிப்புடன் சுற்ற, குழந்தைகளையோ அல்லது கிஃப்ட் பார்சல்களையோ ஒரு கையில் பிடித்தபடி, விழாக்காலங்களில் மட்டுமே கட்டிப் பழக்கப்பட்ட பட்டு வேட்டிகளை மறு கையால் பிடித்தபடி, மனைவிகளின் பின்னே கணவன்மார்களும் சுற்ற, நாற்காலியில் வட்டமாய் அமர்ந்து தங்களின் சிறுவயதுகளை அசைபோட்டபடி சிலர் அமர்ந்திருக்க, ஐயரோ மணமகளை ஒரு குட்டி புகைமூட்டத்தில் அமரவைத்து சில சடங்குகளை செய்து கொண்டிருந்தார்.
காலை நேரத்தில் இத்தனை பரபரப்பா என்றபடி மண்டபத்தை தாண்டி செல்பவர்கள் வாயைப் பிளந்தபடி நகர்ந்தனர். சில நிமிடங்களில் ஐயர் “மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்கோ..” என்று சப்தமிட, மாப்பிள்ளைத் தோழர்கள் இருவர் சென்று மாப்பிள்ளையை அழைத்து வர,
வெண்பட்டு வேட்டி சட்டையில், மலர்மாலை அணிந்து, ஆறடி உயரத்தில் அழகாய் நடந்து வந்து அவளுக்கு அருகில் அமர்ந்தான் அவன்.
அவன் அமர்ந்ததும், இருவரையும் வைத்து சில சடங்கு நிகழ்வுகளை நிகழ்த்தியவர், பின் மாங்கல்யத் தட்டை அவனின் தாயிடம் கொடுத்து பெரியவர்கலிடம் ஆசிர்வாதம் வாங்க சொல்ல, இங்கே இவனின் முகம் வெளிறி கைகள் இரண்டும் சில்லிட்டிருந்தது. உள்ளுக்குள் பயம் வேறூ தாறுமாறாகா ஏறியது.
மாங்கல்யத்தை கையில் எடுத்த ஐயர் அவளின் கையில் கொடுத்து, ‘வலப்பக்கமாக கொண்டு போய் கட்டனும்’ என்று சொல்லி, கெட்டிமேளம்.. கெட்டிமேளம்..” என சத்தமிட, ஐயர் சொன்னதை அட்சரம் பிசகாமல் குனிந்திருந்த நிலவனின் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டினாள் கனலி.
“ஓ மை காட்..” என்ற அலறலுடன் அர்த்தராத்திரியில் அடித்துப் பிடித்து எழுந்திருந்தான் நிலவன். முகம் முழுவதும் முத்து முத்தாய் வியர்த்து கொட்டியிருந்தது. “ச்சே.. என்ன கனவுடா சாமி..” என்றுத் தலையை அழுந்தக் கோதியபடியே, பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அவசர அவசரமாய் அருந்தினான். அறையைச் சுற்றி நடந்தான், மனம் சமனப்படவில்லை, மணியைப் பார்த்தான் பின்னிரவு இரண்டைக் காட்டியது.
இந்தத் திருமணம் சரியான முடிவுதான..? சில நாட்களாக வழக்கம் போல் எழும் அதே கேள்வி, முன் நாட்களில் அந்தக் கேள்வியைத் தலையில் தட்டி உள்ளே அனுப்புவான் நாயகியின் பொருட்டு. இன்று ஏனோ அப்படி செய்ய முடியவில்லை. திருமணத்திற்கு இன்னும் ஒரே நாள் தான் இருக்கிறது, இப்போது போய் இந்தக் கேள்வியா என்று மனசாட்சி அவன் மண்டையில் தட்ட, நான்கு மணிக்கு கிளம்பலாம் என்றிருந்தவன், அப்போதே கிளம்ப ஆரம்பித்தான்.
செல்ஃப் ட்ரைவ் தான். நாயகி ஒத்துக்கொள்ளவே இல்லை. ஆனால் அவன் கேட்பதாய் இல்லை. செய்யாதே என்று சொல்லும் எல்லாவற்றையும் செய்தே தீரவேண்டும் போல் ஒரு கோபத்தை கனலியுடனான திருமணம் அவனுக்கு கொடுத்தது.
இன்று மாலை நிச்சயம், நாளை காலையில் திருமணம். சிறுவயதில் பார்த்தது. அதன் பிறகு இதுவரை இருவரும் ஒருவரையொருவர் நேருக்கு நேராய் பார்த்ததில்லை.. பேசியதில்லை.. மற்றபடி இருவரும் போட்டோக்களில் தான் கண்டிருக்கின்றனர். நாட்கள் நெருங்க நெருங்க சிறியவர்களை விட பெரியவர்களுக்கே வயிற்றில் புளியைக் கரைத்தது.
இதோ கிளம்பி விட்டான் சிங்கிளாக.. திரும்பும் போது புளுரலாக வருவானோ அல்லது முரட்டு சிங்கிளாக வருவானோ.. கேள்வியுடன் உங்களைப் போல் நானும்…
விழி விரிப்பாள்….
Tags: fiction Romance Tamil Novel
5 Comments
Super store , starting sema
nice.
தேங்க்ஸ் மா
Nice…….
நன்றி மா