Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உன் உயிரென நான் இருப்பேன் -8

உன் உயிரென நான் இருப்பேன்-8

காலைச் சூரியன் பொன் கிரகணங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கீழ்வானம் தனது சிவந்த நிறத்திலிருந்து மாறி இன்னும் கொஞ்ச நேரத்தில் தனது உக்கிரத்தால் சுட்டெரிக்கும் வெயிலாக மாறப் போகும் ஒரு இனிய காலைப் பொழுது..

தன் காதல் தேவியை சந்திக்கச் சென்று தாமதமாக வீடு வந்தவனுக்கு கிட்டத்தட்ட பொழுது புலந்னனனனனனனன நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதியான உறக்கம் அவனை ஆட்கொண்டது. ஆனாலும் வெகு சீக்கிரமாகவே விழித்துக் கொண்டவனது சிந்தை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தாள் அவன் ஆருயிர் காதலி இனியா.

அந்த காதல் மயக்கத்திலேயே விழித்தவன் உதடுகள் விரிந்தே இருக்க பக்கத்தில் இருந்த தலையனையை கட்டிக்கொண்டு புரண்டு கொண்டிருந்தான்.

அந்நேரம் எதிர்பாராத விதமாக அவன் அறைக் கதவு திறக்கப்பட “ப்ரோஓஓ.. வாட் ஹேப்பன்ட்?” என ஆரவ் கத்த திடுக்கிடலுடன் திரும்பிப் பார்த்தவனுக்கு அசடு வழிந்தது. அங்கே ஆரவ் அவனது ஹெட் செட்டை கழுத்தில் மாட்டியடி ஒரு கையில் ஃபோனை ஏந்தியபடி நின்றிருந்தான். அவனது தோற்றத்தை பார்க்க அப்போது தான் ஜாக்கிங் போய் வந்திருப்பான் போலும்.

“நத்திங் நத்திங்.. இப்போ எதுக்கு இங்கே வந்த?” என சமாளிக்க நினைத்தவன் எரிச்சல் மீதூறும் குரலில் கேட்டான்.

அண்ணனின் எரிச்சல் கலந்த குரலை கேட்ட பிறகும் அதையே கேட்டுக் கொண்டிருந்தால் காலையிலேயே வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியது தான் என்றெண்ணிய ஆரவ் அதை விடுத்து வேறு பேச்சுக்கு தாவினான்.

“அண்ணா நைட் வீட்டுக்கு வர ரொம்ப லேட்டாச்சா?” எனக் கேட்க என்னையே கேள்வி கேட்கின்றானே என்ற எண்ணம் தோன்ற,

“ஒரு அர்ஜன்ட் வர்க் அதான் போனேன் உனக்கு என்ன இப்போ?” என்று சலிப்புடன் கேட்டான் அபிநவ்.

“கார்லேயே கீயை விட்டுட்டு வந்து இருக்க அது கூட ஓகே. ஆனா ஹெட் லைட் உடைஞ்சிருக்கு எங்கே போய் இடிச்சிருக்கனு தெரியுது.” என்று அருகில் வந்தவன் “நேத்து ட்ரிங்க் பண்ணி இருந்த” என மெதுவாகக் கேட்க அவனை முறைத்துப் பார்த்தான் அபிநவ்.

அபிநவ் அப்படி கவனக்குறைவாக இருப்பவன் அல்ல அதிலும் அவனது காரை அப்படி எங்கும் இடித்து விட மாட்டான் என்பது அவன் நன்கறிவான். முன்தினம் ஏதோ குழப்பத்தில் இருந்த அபிநவ்வை பார்த்தவன் அதன் காரணமாக ஒரு வேளை குடித்திருக்க கூடும் என எண்ணினான். ஆனால் அவனது தற்போதைய செயல் ஆரவ்வை குழப்பத்திற்குள்ளாக்கியது.

ஆம் அவன் போதையில் தான் இருந்தான். அதுவும் காதல் போதை. ஒரே இரவில் அவன் வாழ்வே தன் வசமானது போல் ஓர் உணர்வு. அவளது காதலில் திளைத்திருந்தவனுக்கு தான் எந்நேரம் எப்போது வீடு வந்தான் என்பதே ஞாபகத்தில் இல்லை. இதில் அவனது காரைப் பற்றி அவனுக்கு சுத்தமாக ஞாபகம் இருக்கவில்லை. ஒரு வேளை ஷெட்டில் நிறுத்தும் போது எங்கேனும் இடித்திருக்கக் கூடும் என்றெண்ணியவன்,

“மே பீ. ஷெட்ல விடுறப்போ இடிச்சிருக்கும்” என சிரத்தையற்றுக் கூற ஆரவ் அவனை வித்தியாசமாக கூர்ந்து பாரத்தான்.

“நீ தான் ஷெட்ல விடவேயில்லையே ப்ரோ..” என்று அவன் ஒரு மாதிரி குரலில் கூறும் போது தான் போர்டிக்கோவில் காரை நிறுத்தியது ஞாபகம் வந்தது.

அபிநவ் இவன் கிட்ட இப்படியா மாட்டிக்குவ? என்று மனதால் நினைத்தவன் தலையை சொறிந்தபடி அசடு வழிய நிற்க ஆரவ்விற்கோ தன் அண்ணனை வாழ்க்கையில் முதன் முறையாக இப்படி ஒரு கோலத்தில் பார்க்க சிரிப்பு வர அதை அடக்க பெரும் பாடு பட வேண்டியிருந்தது. அபிநவ்வின் செயல்கள் அவனை தாறு மாறாக சிந்திக்க வைத்தது. அபிநவ்வுக்கோ அவன் எப்போதடா வெளியே போவான் என்றிருந்தது.

அதற்கு மேல் ஒன்றும் பேசாதவனாய் அறையிலிருந்து வெளியேறிய அடுத்த கணம் கதவை பாதி திறந்தபடி ஆமை போல் தலையை உள்ளே நீட்டி,
“ ப்ரோ..” என்று மெல்லிய குரலில் அழைக்க இவன் இன்னும் போகவில்லையா என்பது போல் திரும்பிப் பார்த்தவன்

“ என்னடா”என கடுப்புடன் கேட்டான்.

“நீ ஏன் பில்லோவை கட்டி பிடிச்சி புரண்டுட்டு இருந்த.. சம்திங் சம்திங்.. அதான் அண்ணா சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க எல்லாம் சரியாகிடும்..” என இரட்டை அர்த்தம் கொண்டு கேட்டது மட்டுமல்லாமல் கல்யாணம் செய்து கொள்ளுமாறு இலவச ஆலோசனை வேறு வழங்க அதில் கடுப்படைந்த அபிநவ் அவனை அடிப்பதற்கு எதையோ தேட எஸ்கேப் என்று கத்தியபடி ஓடி விட்டிருந்தான்.

தம்பியின் முன்னால் இப்படி அசடு வழியும் படியாகி விட்டதே என்ற கவலை ஒருபுறம். இனி ஒரு வருஷத்துக்கு இத வச்சே நம்மல ஓட்டுவானே.. விக்கிக்கு தெரிஞ்சா இதுல டபுள் மடங்கா இருக்கும்.. அதான் நம்ம கிட்ட இருக்கே ஆயுதம் ஒரு முறைப்பு அவ்வளவு தான் அப்படியே சைலன்டா போயிடுவாங்க. என்றெண்ணியபடி குளியலறைக்குள் நுழைந்தான்.

அவன் காதல் தேவிக்கும் அன்றைய பொழுது அழகாக விடிந்தது போலவே தோன்றிற்று. அன்னையின் துணையுடன் காலை கடன்களை முடித்தவளுக்கு வார்த்தைகளால் வர்ணிக்கப்பட முடியாத ஆனந்தம். அவள் அடிக்கடி காணும் கனவு நனவானது போல் ஓர் உணர்வு. ஹாலில் சோபாவில் கால்களை நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்தவளுக்கு ஏதோ ஞாபகம் வர மொபைலை எடுத்து நிராஷாவுக்கு ஒரு குறுஞ் செய்தி அனுப்பி விட்டு வேறு ஏதோ நினைவுகளில் மூழ்கி விட்டாள். எல்லாம் நம்ம

நண்பர்களுடன் வெளியே செல்வதற்காக தயாராகியபடி ஹாலுக்கு வந்த வருண் “குட் மோர்னிங்” என்றுறைத்தபடி டிவியை இயக்கியவன் அவளுக்கு எதிரே இருந்த சோபாவில் அமரந்தான். ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டிருந்தவனுக்கோ தன் அன்புக்குரிய அக்கா இன்னும் பதிலுறைக்காததை அப்போது தான் உணர்ந்தான். இதுவே மற்ற நாட்களாயிருந்தால் “குட் மோர்னிங் குட்டா. (இனியா வருணை செல்லமாக அழைக்கும் பெயர் குட்டா.) எங்கே கிளம்பிட்ட? டிரஸ்ஸை பாரு கரடி பொம்மைக்கு கலர் சட்டை போட்டு விட்ட மாதிரி. ப்ச்ச்.. உனக்கு கொஞ்சம் கூட டிரஸ் சென்ஸே இல்லைடா” என அவனை வம்புக்கு அழைத்திருப்பாள். ஆனால் இன்று அவளது அமைதி வழமைக்கு மாறான ஒன்றாக தெரிந்தது. என் உடன் பிறப்பு ஒன்றும் அமைதியானவள் இல்லையே என்று தோன்ற அவள் முகத்தை உற்று நோக்கினான். ஒரு வேளை இன்னும் அதே நினைவுகளில் உழன்று கொண்டிருக்கிறாளோ என்ற எண்ணம் வர அவளை நோக்கியவனுக்கு அவளோ உதட்டில் புன்னகையுடன் தன் வலது கையை இன்று தான் புதிதாக பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன் செல்ல அக்காவின் மனதில் தோன்றும் எண்ணங்களை பிட்டு பிட்டு வைப்பதில் அவனுக்கு நிகர் அவனே. அவர்களுக்குள் அந்தளவு புரிந்துணர்வு. ஆனால் அவனுக்குத் தான் எல்லாம் தெரியுமே. அவள் முகத்துக்கு நேரே சென்று பேஏஏஏஏஏ…. எனக் கத்த பயந்து திடுக்கிட்டு அவளும் கத்த வீட்டுக்கு பின்புறத்தில் ஏதோ செய்து கொண்டிருந்த லலிதாவுக்கும் கேட்டது. அவருக்குத் தெரியும் இது தன் பிள்ளைச் செல்வங்களின் சேட்டை என்று. அதனால் அவர் அதை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வேலையை தொடர்ந்தார்.

“லூசுஹ்.. ஏன்டா சும்மா காதுக்குள்ள வந்து கத்தினஹ் எரும?” என வருணினன் திடீர் செயலால் பயந்தவள் தன் நெஞ்சு மத்தியில் கைவைத்தபடி கேட்க,

“ஹாஹா..நீ லூசா நான் லூசா? நான் குட் மோர்னிங் சொன்னது கூட தெரியாம உன் கையை புதுசா பார்க்குற மாதிரி அப்படி பார்க்குற?” என்று கேட்டவன் அவள் பதில் கூற முன்னரே “ நோ நோ.. அது ஈஈஈஈனு இழிச்சிக்கிட்டே பார்க்குற. ஒரு வேளை நம்ம அபிநவ் மாம்ஸோட ஃபேஸ் தெரிஞ்சதோ?” என பலமாக யோசிப்பவன் போல கிண்டல் குரலில் கூற,

“ஆமா பெரிய மாம்ஸ் அவரு.. அதெல்லாம் ஒன்னுமில்லை.. சரி இப்போ எங்கே கிளம்பிட்ட? பார்த்த காலேஜ் போற மாதிரி இல்லையே?” என்று பேச்சை திசை திருப்ப முயல வருணோ விடுவதாக இல்லை.

“அக்கோவ்.. என்கிட்டயே சமாளிபிக்கேஷனா?.. என்னை ஆராயுரதை விடு. உன் ஃபேஸ் இன்னைக்கு ஆயிரம் வால்ட் பல்ப் போட்ட மாதிரி பளிச்சினு இருக்கே.. கண்ணு கூசுதுப்பா. வாட் ரீசன்?” எனக் கேட்டு அவளை கேலி செய்ய அவளது முகம் காட்டிக் கொடுத்து விட்டதே என்ன சொல்வதென தெரியாமல் தடுமாறினாள்.

அவளது தடுமாற்றத்தை உணர்ந்தவன் காதருகில் குனிந்து மிக மெல்லிய குரலில் “நேத்து நைட் மாம்ஸ் வந்தாருல்ல?” என இத்தனை நேரம் அவளே யாருக்கும் சொல்லாமல் பூட்டி வைத்திருந்ததை தம்பியின் வாய் வழியாகக் கேட்டவள் திகைப்புடன் விழிகள் விரிய அவனை பார்க்க அவனோ கூலாக கூறி விட்டு மீண்டும் அவன் அமர்ந்திருந்த அதே சோபாவில் ஒரு கைபிடிக்கு மேல் தன் கால்களை போட்டு ஆட்டியபடி அமர்ந்து கொண்டான்.

அவள் செவிகளுக்கு சரியாகத் தான் விழுந்ததா? இல்லை அவள் புரிந்து கொண்ட விதம் தவறா என்று ஊகிக்க முடியாதவளாய் “எ..என்ன கேட்ட வருண்?” என தடுமாற்றத்துடன் கேட்டாள்.

“அபிநவ் மாம்ஸ்.. நேத்து நைட் வந்தாரு தானே?” என சத்தமாக கேட்க அவள் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.

“அது..அது..” என்றவளுக்கு நா எழவில்லை.

“ அக்கா.. ஐ நோ எவ்ரிதிங்.. நேத்து மாம்ஸ் வந்தது.. ரொம்ப ஹேப்பியா போனது எல்லாம் பார்த்தேனே..” என்று கேலியாய் அவளை பார்த்து சிரிக்க,

“உனக்கு எப்படிடா தெரியும்?” எனக் கேட்டவள் ஏதோ பெரும் தவறிழைத்தது போல் தலை குனிந்திருந்தாள்.

“ஐயோ அக்கா இதுக்கு ஏன் இப்படி மூஞ்ச வச்சிருக்க.. நான் எல்லாம் பார்த்துட்டு தான் இருந்தேன். சரி அதை விடு.. உன் ஃபேசை பார்த்தா எல்லாம் ஓகே ஆயிடுச்சு போல?” என சிரித்துக் கொண்டே கேட்க அவளுக்கோ வருண் அப்படிக் கேட்டதும் நாணம் தலைதூக்க கண்ணங்கள் செம்மையுற்றன. அவள் அவனை நிமிர்ந்து பார்க்காமலே ஆம் என்பது போல் தலையசைக்க அக்காவின் செய்கையில் ஓர் குபீர் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

அவன் சிரிப்பதை உணர்ந்து நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்,
“ இப்போ ஏன்டா இப்படி சிரிக்குற?” எனப் புரியாமல் அவனைப் பார்த்துக் கேட்டாள்.

சிரிப்பை அடக்க பெரும் பாடு பட்டவனாய் அவளை பார்த்தவனுக்கு மேலும் சிரிப்பு முட்டிக் கொண்டு வந்தது.

“அ.அக்காஹ்.. நீ வெட்கம் எல்லாம் பட்ற.. அதை ப்பார்த்து எனக்கு சிப்பு சிப்பா வருது..” என்றவன் ஹாஹா என உரக்கவே சிரித்து வைத்தான்.

ஒருவாறு சிரிப்பை அடக்கியவன் மீண்டும் அவளருகில் வந்தமர்ந்து கொண்டான்.

“அப்போ மேடமுக்கு லவ் வர்க் அவுட் ஆயிடுச்சு… நேத்து வரைக்கும் வேணாம்னு சொல்லிட்டு இருந்தவ ஒரே நாள்ல இப்படி ஒரு மன மாற்றம் அது எப்படிக்கா?” என்று யோசிப்பவன் போல நெற்றியில் கைவத்தபடி அவளைப் பார்த்துக் கேட்க முன்தின இரவை எண்ணிப் பார்த்தவளுக்கு உடல் சிலிர்த்தது. தற்போது அவள் அபிநவ் ஆதித்யனின் உயிர்க் காதலியல்லவா?. அவள் பிறந்ததே அவனை நேசிக்கத் தான் என தோன்றியது அவளுக்கு.

கண்மூடித் திறந்தவள்,
“ ஆமாடா ஐ லவ் ஹிம் உனக்கென்ன?” என்றபடி அவனது காதை திருக ஐயோ என்று அலறியவன் விடுவித்துக் கொள்ள
“லூசு.. எனக்கு லேட்டாச்சு.. கால் பத்திரமாக எங்கேயும் இடிச்சிடாதே.. ஓகே நான் கிளம்புறேன் அபிநவ்வின் காதலியே..” என்று நாக்கை துருத்தி அழகு காட்டி விட்டு வெளியேற நிராஷா உள்ளே வர சரியாக இருந்தது. வந்தவளிடம் ஏதோ சைகை செய்து காட்டி சிரித்து விட்டுச் சென்றான்.

உள்ளே வந்தவள் இனியாவை அனைத்து விடுவித்தவள் “சூப்பர் பா.. ஐ அம் ரியலி ஹேப்பி ஃபார் யூ இனியா.” என்று தன் மகிழ்ச்சியை தெரிவிக்க இனியாவின் முகம் புன்னகையில் விகசித்தது.

அவளது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அவர்கள் மூவருள் ஜூலி இல்லையே என்ற எண்ண தோன்ற “நிரு.. ஏன் ஜூலி வரவே இல்லை? நான் பண்ணின எந்த மெசேஜஸ்கும் ரிப்ளை இல்லை? உன் கூட பேசினாளா?” என தன் சந்தேகத்தை கேட்டாள்.

“தெரியலைடி.. நானும் எவ்வளவு மெசேஜ்ஸ் கோல்ஸ் பண்ணேன். பட் அவ கிட்ட இருந்து நோ ரெஸ்போன்ஸ்.. ம்ம் என்னனு தெரியலை அவ மம்மிக்கு கோல் பண்ணி பார்க்கனும். ப்ச்.. சரி அவளை அப்புறம் பார்த்துக்கலாம் உன் ரோமியோ என்ன சொன்னாரு?” என நிராஷா ஆர்மாகக் கேட்க நேற்றைய இரவு காட்சிப் பிழை யின்றி அவள் கண் முன் தோன்றியது.

விக்ரமும் ஆரவ்வும் ஹாலில் சோபாவில் அமர்ந்து காபி அருந்தியபடி ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டு இருந்தார்கள். பொதுவாக ஆரவ் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது. அந்தளவிற்கு நகைச்சுவை உணர்வு மிக்கவன். அவன் சிரிப்பதை பார்த்தால் தானாகவே சிரிப்பு வந்து விடும். மெதுவாக பேசுவது சிரிப்பது அவன் அகராதியிலே இல்லை. ஆனால் அபிநவ் முற்றிலும் மாறு பட்டவன். அவனுக்கு சத்தமிட்டுச் சிரிப்பது அளவுக்கு அதிகமாக பேசுவது இரண்டுமே பிடிப்பதில்லை. அவன் ஒரு அமைதி விரும்பி.

அந்நேரம் அபிநவ் கார் சாவியை தனது ஆள் காட்டி விரலால் சுழற்றியபடி மாடிப்படிகளில் ஸ்டைலாக தாவி இறங்கியபடி “மை டியர் ராணி என் டீரிம்ல வா நீ.. நம்ம ஒன்னா ஃபயர் பத்திக்கிருச்சா..” எனப் உல்லாசமாக பாடிக் கொண்டு கீழே வந்தவனை அனைவரும் திகைத்து நோக்கினர்.

மறுபடியும் மாட்டிகிட்டோமோ.. அபிநவ் உனக்கு என்னாச்சுடா இன்னைக்கு? என்று தன்னையே கேட்டுக் கொண்டவனுக்கு கொஞ்சம் அசடு வழிய நேரிட்டாலும் அதை வெளியில் காட்டாது விறைப்பாகவே நின்றான்.

அங்கிருந்த விக்ரம், ஆரவ், வேலு அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. ஆரவ்வுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அண்ணனை உம்முனா மூஞ்சியாகத் தான் தெரியும். விக்ரமுக்கும் சற்று வியப்பாக இருந்தாலும் இது ஏதோ இனியா சம்பந்தப்பட்ட விஷயம் என்பது மற்றும் புரிந்தது.

அபிநவ்வின் செயல்கள் எல்லாமே இன்று வித்தியாசமானதாக இருக்க விசித்திரமாக பார்த்தான் ஆரவ். “ அண்ணா ஆர் யூ ஆல்ரைட்?” என்று கேட்க,

“ ஏன்டா நான் நல்லா தானே இருக்கேன்?” என்று பதிலுறைத்து விட்டு வேலுவிடம் தனக்கும் காபி கொண்டு வருமாறு கூறினான்.

விக்ரம் அவனையே பார்க்க எல்லாம் சக்ஸஸ் என்பது போல் தனது கட்டை விரலுயர்த்திக் காட்டியவன் சிரிக்க இருக்க பதிலுக்கு விக்ரமும் சிரித்து வைத்தான். இதையெல்லாம் கவனித்துக் கொண்டு இருந்த ஆரவ் அமைதியாக இருப்பானா என்ன?

“விக்கி ப்ரோ.. அண்ணனுக்கு ஏதோ ஆயிடுச்சுனு தோனுது. காலையிலே அவன் ரூமுக்கு போனப்போ பில்லோவை கட்டிப் பிடிச்சு பெட்ல புரண்டுட்டு இருந்தான் தெரியுமா? அதான் நான் அவனை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க சொன்னேன்” என்று காலையில் அவன் பார்த்ததை பற்றி விக்ரமிடம் சொல்ல அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.

“இவன் ஒருத்தனே போதும் ஊருக்கே சொல்லிடுவான் போல இருக்கே..நம்மல காமெடி பீஸாக்கிட்டானே” என்றெண்ணியவனுக்கு அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது. அப்படி எல்லாம் இல்லை விக்கி என்று அபிநவ் சமாளிக்க முயல ஆரவ் விடுவானா என்ன?

“ விக்கி ப்ரோ அண்ணனுக்கு நல்ல பொண்ணா பாருங்க கல்யாணம் பண்ணி வைச்சிடலாம்” என பெரிய மனிதன் போல் அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டே போக அபிநவ் அவனை முறைத்துக் கொண்டிருந்தான்.

அபிநவ்வை மேலும் கலாய்க்க எண்ணியவனாக “நாங்க ஏன்டா அதுக்கு அவ்வளவு கஷ்டப்படனும். உன் அண்ணன் ஆல்ரெடி உனக்கு அண்ணியை செலக்ட் பண்ணி தான் வைச்சிருக்கான்.” என விக்ரம் அபிநவ்வின் காதல் விவகாரத்தை தம்பியிடம் போட்டுடைத்தான்.

ஒரு கணம் திகைத்து அண்ணனை நோக்க அவன் விக்ரமை முறைத்து வைத்தான். தன் அண்ணனின் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் ஒரு பெண்ணா ? அவனால் நம்பவே முடியவில்லை. தன் அண்ணன் காதலிக்கிறானா? ஆனாலும் அபிநவ்வின் மாற்றம் அவனுக்கு நல்லதாகவே தோன்றியது. மகிழ்ச்சியுடன் அண்ணன் பக்கம் திரும்பியவன்
“ யாரு அண்ணா பொ.. இல்லை அண்ணி? எங்கே இருக்காங்க? என்ன பண்றாங்க?” என்று கேட்ட விதத்தில் அபிநவ்வின் முகமும் மலர்ந்தது.

“இனியா..” என்று பெயரைக் கூறியவன் தனது மொபைலில் இருந்த அவளது போட்டோவைக் காட்ட ஆரவ்வின் இதழ்கள் விரிய வால் என்றவன் “சூப்பரா இருக்காங்க. எப்போ ப்ரோ அண்ணியை வீட்டுக்கு கூட்டிட்டு வர போற?” என அவன் அதே ஆர்வத்துடன் கேட்டான்

தம்பியின் ஆர்வத்தை கண்டு சிரித்தவன்,
“ இன்னும் கொஞ்ச நாள்ல..” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவனது செல் ஒலித்தது.

தன் செல்லை எடுத்து பார்த்தவனது கண்களில் திரையில் ப்ரீத்தி என்ற பெயர் விழ அவனது மகிழ்ச்சி பறி போனதை போல உணர்ந்தான். கழுத்து நரம்புகள் புடைக்க கைமுஷ்டி இறுக திரையை வெறித்தபடி நின்றவனது கண்களில் கோபக்கணல் எரிந்து கொண்டிருந்தது.

தொடரும்..

அன்புடன் அபிநேத்ரா..❤




1 Comment

You cannot copy content of this page