Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

உன் உயிரென நான் இருப்பேன்-9

உன் உயிரென நான் இருப்பேன்-9

கொழும்பு சிட்டி சென்டர் (Colombo city centre) வளாகத்தில் பார்க்கிங் ஏரியாவில் தனது காரை நிறுத்த விக்ரம் மாத்திரம் இறங்கி சுற்றிலும் நோட்டம் விட்டான். இன்னும் வரவில்லை என்று அபிநவ்விடம் கூற மீண்டும் அதே எண்ணிற்கு அழைப்பை மேற்கொண்டு ஏதோ கறாராக பேசி செல்லை அனைத்து விட்டான்.

சுமார் பதினைந்து நிமிடங்களின் பின் சிட்டி சென்டரினுள் இருந்து வெளியே வந்தாள் ஒரு அல்ட்ரா மாடர்ன் பெண்ணொருத்தி. தன் உடலை இறுக்கிப் பிடித்த வண்ணம் ஒரு மினி ப்ராக் அணிந்திருக்க அவ்வுடையில் அவளது முன்னழஙி பாதி அப்பட்டமாக வெளித் தெரிய பார்ப்போரின் முகம் சுளிக்க வைத்தது. அவளது முகத்துக்கு சற்றும் பொருந்தாத அளவுக்கதிகமான ஒப்பனையில் தன் ஹை ஹீல்ஸ் கால்கள் தரையில் பதிய பூனை நடையுடன் அவனுடைய காரை நோக்கி வந்து கொண்டிருந்தாள் ப்ரீத்தி.

வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த விக்ரமுக்கு உள்ளே கொதித்தது. இந்த சப்பை மூஞ்சிக்கு என்ன திமிர். அவளது நடையும் உடையும்.. போயும் போயும் இவளிடம் தன் நண்பன் மாட்டிக் கொண்டிருக்கிறானே. அவளது முகத்தை பார்த்தவனுக்கு அருவெருப்பில் முகத்தை திருப்பி நின்றான்.
அவளும் அருகில் வர “ அபி அவ வந்துட்டா” என்றபடி அவளை முன் இருக்கையில் அமருமாறு சைகையில் சொன்னவன் காரின் பின்புற சீட்டில் அமர்ந்து கொண்டான்.

“ஹாய் அபி.. எப்படி இருக்க பார்த்து ரொம்ப நாள் ஆச்சு?” என்று குழையும் குரலில் அவன் கண்ணத்தை தொட முயல அதில் எரிச்சலடைந்தவன் அவளது கைகளை தட்டி விட்டான்.

“ப்ரீத்தி உனக்கு இது தான் லாஸ்ட் சான்ஸ்.. நீ கேக்குறப்போ எல்லாம் உனக்கு காசு கொடுக்க நான் ஒன்னும் முட்டாள் இல்லை..” என்றவன் அவளை ஏகத்துக்கும் முறைத்து வைத்தான்.

“ஹேய் டார்லிங் நீ முட்டாள் இல்லை அடி முட்டாள்.. இல்லைனா இப்படி ஏமாந்து இருப்பியா..அன்னைக்கு நடந்தது..” என அவள் சிரிக்க அவள் சொன்ன விதம் விக்ரமுக்கே கோபத்தை தூண்ட,

“ச்சீ வ்வாயை மூடு ப்ரீத்தி.. நீ யாரு கிட்ட பேசுறேனு தெரிஞ்சு தான் பேசுறியா?” என கோபத்தில் கத்தினான்.

அவன் கோபத்தை உணர்ந்து சிரித்துக் கொண்டே அவன் பக்கம் திரும்பியவள்,

“விக்கி பேபி என்ன ரொம்ப துள்ளுற? தி கிரேட் பிஸ்னஸ் மேன் அபிநவ் ஆதித்யன்.. உன் ஃப்ரண்ட் குடுமியே இன்னோருத்தன் கையில் தான் இருக்கு. அதை வெளியே விட்டோம்னு வச்சிக்க இந்த அபிநவ்வோட நல்லவன் இமேஜ் நார் நாரா கிழிஞ்சிரும்.. மைன்ட் இட்..” என ஏளனம் கலந்த குரலில் கூற அங்கிருந்த இருவருக்கும் மேலும் கோபத்தையே தூண்டியது.

அபிநவ்வை பொருத்தவரை பணம் ஒரு பொருட்டல்ல. ஆனால் இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? இப்படி செய்யக் காரணம் என்ன? என்பதை தெரிந்து கொள்வதே அவன் நோக்கம். இன்று எப்படியாவது அவளிடமிருந்து உண்மையை வரவழைத்தே ஆக வேண்டும் இல்லையெனில் அவனது எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் சவாலாக அமையக் கூடும் என்று தோன்ற,

“லுக் ப்ரீத்தி.. நீ கேட்குற பணத்தை விட டபுள் மடங்கா உனக்கு கொடுக்கிறேன் அதுவும் பத்தலைனா இன்னும் தரேன். ஆனால் உண்மையை சொல்லிடு.. உன்னை யாரு இப்படியெல்லாம் செய்ய சொன்னது?” என மிக நிதானமாக கேட்டான்.

“அபி டார்லிங்..எனக்கு இப்போ நான் கேட்ட அமவுன்ட்டை கொடு.. இந்த டீல் பற்றி அப்புறம் பேசிக்கலாம்.” என தன் கூந்தலை சரி செய்த வண்ணம் கூலாக கூறினாள்.

அவனது பேச்சை மதிக்காமல் அவள் பேசிய விதமும் அவளது செயலும் அபிநவ்வின் கோபத்தை கிளற வெறி பிடித்தவன் அவளது கழுத்தை பற்றி,

“ஏய் என்ன நீ உன்னிஷ்டத்துக்கு பேசுற? என்னை பார்த்தா க்கேனயன் மாதிரி இருக்கா?என்னடா இவன் நான் எப்போ கேட்டாலும் காசை அள்ளி கொடுக்குறான் காலம்பூரா இப்படியே இருந்துடலாங்குற எண்ணமா உனக்கு?” என்று கேட்டுக்கொண்டே தன் பிடியை அழுத்த திமிறியவள் அவள் பலம் கொண்ட மட்டும் விடுவித்துக் கொள்ள போராடினாள்.

நண்பனின் இத் திடீர் செய்கையில் ஒரு கணம் பதறினாலும் மறு கணமே இது இவளுக்கு தேவை தான். இப்படியாவது உண்மையை வெளியே வரட்டும் என எண்ணிக் கொண்டான்.

“வ்விடு..டா எ..என்னை வ்விடு” என அவனது கைகளை பிடித்து அகற்ற முயல அவளால் அபிநவ்வின் இரும்புக் கரங்களை தடுக்க முடியவில்லை.

“இங்கே பாரு உன்னை இவ்வளவு காலம் விட்டு வைச்சதே நீ ஒரு பொண்ணுங்குற ஒரே ரீசன்காக தான்.. பட் இப்போ உண்மையை சொல்லலை உனக்கு இந்த இடத்திலேயே சாமாதி கட்டிடுவேன்.” என வெறி கொண்ட வேங்கையாய் உறுமினான் அபிநவ்.

அவளது மூச்சுத்திணறலை கண்டு கொண்ட விக்ரம். “ டேய் அபி விடுடா” என அவன் கைகளை விடுவிக்க அவளது தடைபட்ட சுவாசமானது திரும்ப கிடைக்க பலமாக இருமியபடி தன் கழுத்தை தடவியபடி அவனை ஏறிட்டு பார்க்க அபிநவ்வின் விழிகள் அடங்காத கோபத்தில் சிவந்திருந்தன.

“ப்ரீத்தி இதுக்கு மேலேயும் உனக்கு கஷ்டம் வேணாம்னு நினைக்கிறேன். உண்மையை சொல்லிடு.. அன்ட் அந்த வீடியோவை கொடுத்துட்டு ஓடி போயிடு” என விக்ரம் சீற பதிலுக்கு அலட்சிய பார்வை ஒன்றை வீசியவள் ,

“நீ என்னை கொன்னு உனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. ஏன்னா நான் செத்தா கூட உன் தலையெழுத்தை மாத்த முடியாது அந்த வீடியோவோட அசல் சேர வேண்டியவன் கிட்ட போய் சேர்ந்துருச்சி. இவ்வளவு நாள் உன்கிட்ட காசு வாங்குறதுக்காக தான் என்கிட்ட தான் அந்த வீடியோவோட ஒரிஜினல் காப்பி இருக்குனு பொய் சொன்னேன். எங்கிட்ட இருக்குறது அதோட காப்பீஸ் மட்டும் தான். அன்ட் இன்னொரு மேட்டர் சொல்றேன் தெரிஞ்சுக்க இதை யாரு பண்ண சொன்னாங்கனு எனக்கு தெரியாது. இந்த மாதிரி வேலைக்கெல்லாம் அவங்க டிரெக்ட்டா வரமாட்டங்க பட் எனக்கு கொடுத்த ப்ராஜெக்டை நான் ஒழுங்கா முடிச்சி கொடுத்துட்டேன். அதுகப்புறம் எங்களுக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லை..” என அவள் கூறி முடிக்க அபிநவ்வும் விக்ரமும் ஒரு கணம் அதிர்ந்து போனார்கள்.

இவளை வைத்து அந்த வில்லனை கண்டு பிடிக்கலாம் என்று எண்ணியிருந்தவர்களுக்கு இவளே தெரியாது என்கிறாளே. அந்த வீடியோ அவர்கள் கையில் ஒவ்வொரு நிமிடமும் இவனது எதிர்காலம் கேள்விக்குறி தான். அபிநவ்வின் ஆட்களை வைத்து இந்த பிரச்சினையை மிக சுலபமாக தீர்த்து விட முடியும் ஆனால் இது அபிநவ் சம்பந்தப்பட்ட சொந்த விஷயம் அது வெளியே தெரியாமல் இருப்பது தான் நல்லது அதனால் தான் முடிந்தளவு இவர்கள் இருவருமாக டீல் செய்து கொண்டிருக்கின்றனர்.

“சரி எனக்கு டைம் ஆகுது. பணத்தை கொடு நான் கிளம்பனும்.” என்று அவள் அலட்சியமாக கேட்க அபிநவ்விற்கு கடுப்பானது. அடிக்க கையை ஓங்கியவனை விக்ரம் தடுத்து பணத்தை கொடுக்க காரை விட்டு இறங்கியதும்,

“ இதோ பார் எனக்கு தெரிஞ்ச எல்லாமே சொல்லிட்டேன் இதுக்கு மேல நானும் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் நீயும் பண்ண கூடாது.” வெடுக்கென கூறி திரும்பி கழுத்தை தடவியபடி அவளது நடையை தொடர்ந்தாள்.

அவள் அப்படிக் கூறிச் சென்ற பின்னரும் கூட அவள் மீதான சந்தேகம் தெளிந்தபாடில்லை. இருவருக்குமே ப்ரீத்தி எதையோ மறைக்க முயல்வதாகவே தோன்றியது. ஆகவே அவளை பின் தொடரலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். அதை செயல்படுத்த எண்ணி காரை ஸ்டார்ட் செய்ய அப் பாதையில் வாகனங்கள் சில கிரீச் என்ற ஒலியுடன் நிறுத்தப்படும் சத்தம் கேட்ட அதே நேரம் அங்கிருந்தவர்கள் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடலாயினர். அந்த பதற்றமான சூழ்நிலை இவர்களையும் தொற்றிக் கொள்ள ஸ்டார்ட் செய்த காரை நிறுத்தி விட்டு அவ்விடம் நோக்கி சென்றார்கள். அங்கே குழுமியிருந்த ஏராளமான மக்கள் கூட்டம் ஏதோ அசம்பாவிதம் நிழ்ந்திருப்பதை உணர்த்தியது.

கூட்டத்தை கைகளால் விலக்கிய வண்ணம் முன்னே சென்று பார்த்த இருவரும் அதிர்ந்து போனார்கள். அங்கே இரத்த வெள்ளத்தில் கிடந்தாள் ப்ரீத்தி. இருவரும் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க கூட்டத்தில் இருந்த ஒருவரின் குரல் இவர்களை கலைத்தது.

“ என்னப்பா பார்த்துட்டு இருக்கீங்க? ஆம்புலன்ஸுக்கு கோல் பண்ணுங்க..” என்று கூற இன்னோருவர்
“ஒரு கார் தான் சார்… ஆக்ஸிடன்ட் பண்ணிட்டு எட்டி பார்த்துட்டு அவன் பாட்டுல போயிட்டான் சார் நிறுத்தவே இல்லை” என்று விபத்தை பற்றி கூறிக் கொண்டிருக்க அபிநவ்வுக்கும் விக்ரமுக்கும் இது வேண்டுமென்று திட்டமிட்டு செய்யப்பட்ட விபத்து என்பது உறுதியானது.

கண்டிப்பாக இவளை சாக விடக் கூடாது என எண்ணம் தோன்ற உயிருக்குப் போராடிக் கொண்டு தரையில் வீழ்ந்து கிடந்தவளை அங்கிருந்தவர்களின் உதவியுடன் காரில் ஏற்றிக் கொண்ட மறு கணம் அபிநவ்வின் கைகளில் கார் மின்னல் வேகத்தில் மருத்துவமனையை அடைந்திருந்தது.

உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் ஐ.சி.யூ விரல் இருந்து வெளிவந்த டாக்டர்,
“ மிஸ்டர் அபிநவ்.. இவங்க உங்களுக்கு யாரு?” என்ற கேள்வியில் ஒரு கணம் தடுமாறினாலும் சுதாரித்தவன்,
“ இவங்க என்னோட ஆஃபீஸ்ல தான் வர்க் பண்ணிட்டு இருந்தாங்க இப்போ இல்லை. ரோட்ல அடிபட்டு கிடந்தாங்க அதான் அட்மிட் செஞ்சோம்.. அவங்களுக்கு இப்போ எப்படி இருக்கு டாக்டர்?” எனக் கேட்டான்.

“ ஆக்ஸிடன்ட்ல ஹெவி பிலட் லாஸ்.. தலையில் வேற அடிபட்டு இருக்கு.. பிழைக்குறது ரொம்ப கஷ்டம் தான்.. இருந்தாலும் வீ வில் ட்ரை..” என்றவர் அதற்கு மேல் அங்கிருக்கவில்லை.

மூன்று நாட்கள் போராட்டத்தின் பின் ப்ரீத்தி இறந்து போனாள். அவளுக்கு உறவுகள் யாரும் இல்லாத காரணத்தால் அபிநவ், விக்ரம் இருவருமே செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்தனர்.

ப்ரீத்தியை வைத்து இந்த பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வரலாம் என்று எண்ணியிருந்தவனுக்கு அவளது இறப்பு மேலும் குழப்பத்தை விளைவித்தது. ஆனால் அவள் இறப்பதற்கு முன் அபிநவ்வை அழைத்தவள் ரமேஷ் என்ற பெயரை இரு தடவை உச்சரிக்க அவளது உயிர் பிரிந்தது.

கடந்த மூன்று நாட்களாக காலையில் வீட்டிலிருந்து வெளியேறும் அபிநவ் நடு நிசியிலேயே வீடு திரும்பிக் கொண்டிருந்தான். இந்த அலைச்சலில் இனியாவை பார்ப்பதற்கோ பேசுவதற்கோ நேரம் இருக்கவில்லை.

ஒருவாறு எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு மாலையில் வீடு திரும்பியவன் ஹாலில் இருந்த ஆரவ்விடம் கூட எதுவும் பேசவில்லை. நேரே தன் அறைக்குள் நுழைந்தவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

குளியலறை கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவனுக்கு தனது முட்டாள் தனத்தை எண்ணி அவன் மேலேயே கோபம் வந்தது. ரமேஷ் கிடைத்தால் தான் இந்த பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்றெண்ணியவன் கொதிநிலையில் இருந்தான். அவனுடைய கண்கள் சிவந்து, கழுத்து நரம்பு புடைத்திருந்தது. கோபத்தினை தாங்க முடியாதவன் கைகளை இறுக்கி அவன் முன்னால் இருந்த கண்ணாடிக்கு ஒரு குத்து விட துகள் துகளாக சிதறியது. அவனது வலிய கையிலிருந்து வழிந்த இரத்தம் குளியலையின் வெண்ணிற டைல்ஸ் தரையில் சிவப்பு சாயமிட்டதை போல வழிந்தோடியது. அவனுடைய உதடுகள் ரமேஷின் பெயரை ஆக்ரோஷத்துடன் உச்சரித்தன.

அவனறைக்கு செல்வதற்காக மாடிக்கு வந்த ஆரவ் அண்ணனின் அறையில் ஏதோ நொறுங்கும் சத்தம் கேட்டது. அவன் வீட்டுக்கு வரும் போதே ஏதோ கோபத்தில் இருப்பது போல் தோன்றியது. நிச்சயமாக அவன் எதையோ உடைத்திருக்கக் கூடும் என வேகமாக அவனது அறைக்குள் நுழைய குளியலைறயிலிருந்து கையை உதறிய உதறிய வண்ணம் வெளியே வந்து கொண்டிருந்தான். கையில் இரத்தம் வழிய வந்தவனை கண்ட ஆரவ் பதறி அருகில் ஓடி வந்து,

“ அண்ணா என்ன பைத்தியக்காரத்தனம் இது ? சின்ன வயசுல இருந்த இந்த பழக்கம் இன்னும் உன்னை விட்டு போகலையா? நீ கோவப்பட்டு உன்னையே ஹர்ட் பண்ணிக்குற..” என்று கடிந்து கொண்டவன் வேலுவுக்கு அழைப்பெடுத்து பர்ஸ்ட் எயிட் கிட்டை எடுத்து வருமாறு ஆனையிட மறு நிமிடமே எடுத்து வந்தான்.

ஒருவாறு காயத்தை சுத்தப்படுத்தி மருந்திட்டவன் சில மாத்திரைகளை எழுதி வாங்கி வருமாறு வேலுவை அனுப்பினான்.

“பரவாயில்லையே நீ டாக்டருக்கு படிச்சது யூஸ் ஃபுல்லா தான் இருக்கு” என்று அவன் சிரிக்க அபிநவ்வை முறைத்தவன்,

“என்ன அண்ணா இப்படி பண்ணிட்டு சிரிக்கிற?” என கோபமாகவே கேட்டான்.

“இந்த கொஞ்ச நாளாக ஆபீஸ்ல சின்ன பிரச்சினை வேற அதான்..” என அவன் கூற,

“போண்ணா நீ… இந்த குணத்தை மாத்திக்க.. ஒரு டாக்டரா சொல்றேன்.. இப்படியே இருந்தா அண்ணி கூட எப்படி தான் இருக்க போறியோ..?” என்றவன் அண்ணனை ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டுச் சென்றான்.

அப்போது தான் அவனுக்கு இனியாவின் ஞாபகம் வந்தது. இந்த மூன்று நாட்களாக அவன் இருந்த மனநிலையில் அவனால் அவளுடன் பேச முடியவில்லை. அவனது காதல் தேவி அவனை பாராமல் பேசாமல் துடித்து போயிருப்பாளே.. “ச்சே ஒரு கோல் பண்ணி இருக்கலாம்.. என் கூட கோவமா இருப்பாளா? பின்னே காதலிச்ச ஒரு நாளிலேயே இப்படி செஞ்சா அவ என்னை பத்தி என்ன நினைச்சிருப்பா..” என்று தோன்ற அக் கணமே அவளுக்கு அழைப்பெடுத்தான்.

ஆனால் அவளோ அழைப்பை ஏற்கவே இல்லை. “ என் நம்பர் தான் அவ கிட்ட இல்லையே.. தெரியாத நம்பர்னு அட்டன்ட் பணணலை போல..அதனால் என்ன போய் பார்த்துடுவோம்” என்று அதை செயலாற்ற எண்ணியவன் டீ சர்ட்டை அணிய முற்பட கட்டு போடப்பட்டிருந்த கை சுருக்கென வலி எடுத்தது. அதை கருத்திற் கொள்ளாதவனாய் டீ சர்ட்டை அணிந்தவன் கார் சாவியையும் எடுத்துக் கொண்டு கீழே சென்றான்.

ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த ஆரவ் வெளியே போவதற்காக வந்த அபிநவ்வை தடுத்து,

“ அதுகுள்ள சார் எங்கே கிளம்பிட்டீங்க இந்த நேரத்தில்?” என்றவன் அவன் கையில் கார் சாவி இருப்பதைக் கண்டு, “ அண்ணா லூசா நீ இப்படி கையை வச்சிகிட்டு கார் வேற ஓட்ட போறியா.?” எனக் கடுப்பாக வினவினான்.

என்னடா இவன் வேற என்று எரிச்சலுடன் அவனை பார்த்தவன்,

“ இனியாவை பார்க்க போறேன். எல்லாம் உன்கிட்ட சொல்லனுமா?” என்று கோபமாக வெளியேறியவனை மீண்டும் தடுக்க ஆரவ்வை முறைக்க,

“அண்ணா இந்த கண்டிஷன்ல நீ டிரைவ் பண்ணாதே.. நான் பண்றேன்” என்றவன் அவன் கையில் இருந்த கார் சாவியை பறித்து எடுத்துச் சென்றான்.

ஆரவ்வின் மீது கோபம் வந்தாலும் தம்பி தன் நன்மை கருதித் தானே என்ற எண்ணம் தோன்ற அவனோடு ஒன்றும் பேசாமல் கிளம்பினான்.

தொடரும்..
அன்புடன் அபிநேத்ரா..❤
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vidya Priyadarsini says:

    Nice…… Waiting for the next episode eagerly