உன் உயிரென நான் இருப்பேன்- 15
1525
0
உன் உயிரென நான் இருப்பேன்-15
இனியா தன்னறையில் மஞ்சத்தில் சாய்ந்தமர்ந்து கொண்டு சாளரத்தின் வழியே பார்த்துக் கொண்டிருந்தாள். காலை நேர இதமான தென்றல் காற்று அவளை வருடிக் சென்றது. அவள் நினைவு முழுவதையும் அபிநவ். தனக்காக ஒருவன் இருக்கிறான், தான் அழும்போது அணைத்து ஆறுதல் படுத்தி, தான் சிரிக்கும் போது தன்னோடு தன் சிரிப்பை பார்த்து சிரித்து , தன் இதயத்தோடு இரண்டறக் கலந்து விட்ட அவன், அவளுடைய உயிர் ஜீவன்.
அந்நேரம் பூனை போல் அறைக்குள் நுழைந்த வருண் அவன் காதருகில் குணிந்து “ப்ப்பேஏஏஏ…” என தன்னுடைய ஸ்பீக்கர் குரலில் கத்த, பதறியடித்துக் கொண்டு எழுந்தாள் இனியா. நெஞசின் மத்தியில் கையை வைத்த வண்ணம் சுற்றும் முற்றும் தேடியவள், தம்பியின் அடக்க முடியாத சிரிப்பொலியை கேட்டு நிமிர்ந்து பார்த்தவனின் கண்கள் சிவந்திருந்தன.
“லூசு உன்னோட வேலை தானா? இன்னைக்கு நீ செத்தடா…” என கருவிக் கொண்டு முன்னேற, வருண் அவளறையை விட்டும் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடலானான். அவள் கையில் மாட்டினால் அவ்வளவு தான். அவனோ சுண்டெலி போல் ஹாலிலும் கிட்சனிலும் சுற்றி வளைந்து வளைந்து ஓடலானான்.
“ஹேய் சாரிக்கா… நீ தனியா சிரிச்சிக்கிட்டு அபி மாம்ஸ் கூட கனவு கண்டுக்கிட்டு இருந்ததை யாருகிட்டேயும் சொல்ல மாட்டேன்.. ப்ளீஸ்க்கா..” என சமாதான பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாள். ஆனால் இனியாவோ அதற்கு ஒப்பவில்லை..இவன் கத்திய கத்தலில் எப்படி பயந்து போனாள்.. “ டேய் குட்டா வர வர உன் சேட்டை ரொம்ப ஓவர் ஆயிடுச்சு. உன்னை..” என்ற வண்ணம் அருகில் நெருங்கினான்.
அவளோ சோபாவின் பின் நின்று கொண்டு,
“அக்கா.. நோ ப்ளீஸ்..” என்று கெஞ்ச அதை பொருட்படுத்தாமல், அவளருகில் இருந்த டீபோயின் மீதிருந்த தண்ணீர் ஜாடியை எடுத்தபடி, “ உன்னை என் பண்றேன்னு பாரு.” என்ற வண்ணம் தண்ணீரை அங்கிருந்தே வருணுக்கு வீசியடிக்க, அவனோ சோபாவை கேடயமாக்கி குனிந்து கொண்டதால் நனையாமல் தப்பித்தான். தான் நனையாமல் தப்பித்ததாக அக்காவை கேலி செய்ய வேண்டும் என எண்ணி மெல்ல தலையை தூக்கிப் பார்த்தவள் அங்கே கண்ட காட்சியில் அடக்கமாட்டாமல் வயிறைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்.
அங்கோ வெளியே செல்வதற்காக ஆயத்தமாகி வெளியே வந்த ஈஸ்வரன் தெப்பமாகி நின்றிருந்தார். இனியாவோ வெற்று ஜாடியுடன் கைகள் வெடவெடக்க தந்தையையே விழியகலப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவர் வருணையே முறைத்துப் பார்த்த வண்ணம்,
“என்ன வருண்.. இப்படி தான் நீ டெய்லி சேட்டை பண்ணிட்டு இருப்பியா? அவளை ஏதாவது தொந்தரவு பண்ணி இருப்ப அதான் உன்னை துரத்திக்கிட்டு இருக்கா.. போ போய் அக்கா கிட்ட மன்னிப்பு கேளு.” என்றவர் உடை மாற்றுவதற்காக அறைக்குள் நுழைந்தார்.
இனியாவும் வருணும் குளிரில் உறைந்த நீர் போல அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். அவர் மேல் தண்ணீரை விசிறியடித்ததற்காக தன்னை உண்டு இல்லை என செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்தவளுக்கு அவர் முதல் முறையாக தனக்கு சாதகமாக பேசியது பெரும் ஆச்சர்யமாக இருந்தது அவளுக்கு.
எப்போதும் அவளை கடிந்து கொண்டே இருப்பவர் இன்று இப்படி பேசியது அவளுள்ளும் எல்லாம் கூடிய விரைவில் சரியாகக் கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. தன் தந்தையின் பேச்சு சற்று விசித்திரமாக தோன்றினாலும் மகிழ்ச்சியாகவே இருந்தது.
அதே மகிழ்ச்சியுடன் இனியாவை நோக்கி, “அக்கா” என்றழைத்த வண்ணம் சோபாவில் அமர தானும் அமர்ந்து ,
“ என்னடா” என்று கேட்டாள்.
“ நேற்று ஈவ்னிங் என் ஃபிரெண்ட்ஸ் கூட லிபர்ட்டி பிளாசா (liberty plaza) போயிருந்தேன்கா. அங்கே ஜூலி அக்காவை பார்த்தேன். உன் நிச்சயதார்த்தத்துக்கு கூட வரலையேனு பேசலாம்னு போனேன். ஆனா…” என்றவன் நிருத்தி இனியாவின் முகத்தை பார்க்க அவளோ மேலே சொல்லு என்பதை பார்க்க தொடர்ந்தான்.
“நான் போய் ஏன் ஜூலி அக்கா நீங்க வரலைனு கேட்டதற்கு, உன் அக்காவும் நிராஷாவும் தானே பெரிய பணக்காரர்களை பார்த்து வளைச்சு போட்டுருக்காங்க அப்புறம் எங்கே உன் அக்காவுக்கு எங்களை எல்லாம் ஞாபகம் இருக்க போகுது.?” என ஏளனக்குரலில் அலட்சியமாக கூறிவிட்டு இவனது பதிலையும் எதிர்பாராமல் சென்றதை வருத்தத்துடன் கூறி முடித்தான்.
“எனக்கே ஒரு மாதிரி ஆகிருச்சு அக்கா.. என் ஃபிரெண்ட்ஸ் முன்னாடி உன்னை பற்றி அப்படி பேசிட்டு போனாங்க. உன்கூட பேசுறதும் இல்லை. உன்னோட நிச்சயதார்த்தத்துக்கும் வரலை. அப்படீன்னா கண்டிப்பாக என்னமோ இருக்குக்கா. என்னனு தான் தெரியலை..” என்றவன் தன் நாடியை அழித்த வண்ணம் சோபாவில் சாய்ந்து கொண்டே யோசனையில் ஆழ்ந்தான்.
இனியாவுக்கு இன்றைய நாளின் இரண்டாவது அதிர்ச்சி. முதலில் ஆனந்த அதிர்ச்சி என்றால் இது வேதனைக்குரிய அதிர்ச்சி. ஜூலி அப்படிக் கூறியிருப்பாள் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. அதுவும் பணக்காரர்களாக பார்த்து, வளைத்து போட்டு போன்ற வார்த்தைகள் அவளை மிகவும் பாதித்தது. வருண் ஒரு போதும் இட்டுக்கட்டு பேசுபவனல்ல என்று அவளுக்குத் தெரியும். ஆனால் ஜூலி ஏன் அப்படிக் கூற வேண்டும்?
இத்தனை நாட்கள் இனியாவும் நிராஷாவும் மேற்கொண்ட அழைப்புகளுக்கோ குறுந்தகவல்களுக்கோ அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஒரு முறை அவளது அம்மாவுக்கும் அழைப்பெடுத்து பார்த்தாயிற்று ஆனால் அவரும் கூட இவர்களது அழைப்பை ஏற்கவில்லையே. நேரில் போய் ஜூலியை சந்திக்க வேண்டும் என எண்ணியிருந்தவர்களுக்கு வேலைப்பளு காரணமாக சந்திக்க முடியாமல் போனது. இனியாவுக்கும் நிராஷாவுக்கும் பள்ளி வேலைகளிலேயே காலம் ஓடிற்று.
“சரி இப்போ அவளுக்கு ஓரு கோல் பண்ணிப் பார்ப்போம்” என எண்ணி அழைப்பெடுத்துப் பார்க்க ஜூலியிடமிருந்து பதிலில்லை. பல முறை முயன்று பார்த்து சோர்ந்து போனாள் அவள்.
எது எப்படியாயினும் இந்த வார இறுதியில் ஜூலியை சந்தித்தே ஆக வேண்டும். அவளை கட்டியணைத்து மன்னிப்புக் கேட்டால் அவளுடைய இந்தக் கோபம் எல்லாம் காற்றுப் போன பலூன் போல ஆகிவிடும் என தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டவள் நிராஷாவுக்கு அழைப்பை மேற்கொண்டாள். அந்தோ பரிதாபம் அவளது ஃபோன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது.
“இந்த நிரூக்கு என்னாச்சு? மொபைல் சுவிட்ச் ஆஃப்னு வருது. இவ வேற படுத்துறாளே.. சரி ஸ்கூல் வருவா தானே போய் பேசிக்காலாம்..” என எண்ணியவாறே பள்ளி செல்ல ஆயத்தமானாள்.
அதே சமயம் விக்ரமின் பிளாட்டில் அபிநவ்வும் விக்ரமும் எதிரெதிர் சோபாக்களில் அமர்ந்திருந்தனர். விக்ரமின் தலை மட்டும் நிமிரவே இல்லை. இருவருக்குமாக காபியை தயார் செய்தவன் அவனுக்கு ஒரு கப்பை நீட்டி விட்டு தானும் அருந்திய வண்ணம் விக்ரமை நோக்கி,
“விக்கி உனக்கு என்னாச்சு? நீயேன் இப்படி ஏதையோ பறிகொடுத்த மாதிரி இருக்க? வீட்டுக்கு வேற லேட் நைட் தான் வருவதா சொன்னாங்க.. நைட் வேற அளவே இல்லாம குடிச்சிருக்க?” என்று கேள்விகளை அடுக்கியவன் காலி கப்பை டீபோயின் மேல் வைத்து விட்டு கால் மேல் போட்டு அமர்ந்த வண்ணம்,
“அதெல்லாம் கூட பரவாயில்லை.. ஆனா ரெண்டு நாளா நீ என்னை பார்க்க வரலை. உன் ஃபிரெண்ட் என்னை பார்க்க வரலைல?” எனக் கேட்க, நிமிரந்து பார்த்தவனது கண்கள் கலங்கியிருந்தன.
அவனது கலங்கிய கண்களை பார்த்து ஒரு கணம் பதறித் தான் போனான் அபிநவ். நண்பனின் முக வாட்டத்தை தாங்க முடியாதவன் சட்டென எழுந்தவன் அவனருகில் அமர்ந்து அவனது ஒரு பக்கத் தோளை பற்றி,
“விக்கி உனக்கு என்னடா ஆச்சு? உன்னை இப்படி பார்க்க முடியலைடா. உனக்கு என்ன தான் கவலை? என்கிட்ட சொல்ல முடியாதளவுக்கு..” என கேட்டவனது குரல் அவனையும் மீறி தழு தழுத்தது.
எதுவும் பேசாமல் எழுந்து அறைக்குள் நுழைந்தவன் கடந்த சில நாட்களாக அணைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசியை உயிர்ப்பித்தான். மீண்டும் அதே சோபாவில் அமர்ந்தவன் அதை அபிநவ்விடம் நீட்டினான். இது என்ன என்பது போல் புரியாமல் அவனை பார்க்க , அதை பாரு என்பது போல் சைகை செய்தான்.
அவனுடைய செல்போன் திரையில் கண்ட காட்சி அவனை திகைக்க வைத்தது. அந்த படத்தில் இருப்பவன் ரமேஷே தான் ஆனால் அவன் பக்கத்திலேயே அவனது ஒரு பக்கத் தோளில் கையிட்ட வண்ணம் புன்னகையுடன் நிராஷா இருந்தாள். அவள் எப்படி இவனுடன்? என ஒன்றும் புரியாமல் குழம்பிப் போனான் அபிநவ்.
தன் நண்பனின் முகத்தில் குழப்பத்தின் ரேகைகளை கண்டு கொண்ட விக்ரம் அவன் கேட்காமலே விளக்கத்தை தொடர்ந்தான்.
“ அபி.. ரமேஷ் செனவிரட்ன கூடப்பிறந்த தங்கை தான் நிராஷா செனவிரட்ன.” என அன்று நடந்ததை கூறினான்.
அன்று நிராஷாவும் விக்ரமும் வெளியே சென்றிருந்த வேளை நிராஷாவுக்கு ஓர் அழைப்பு வந்தது. அது வேறு யாருமல்ல ரமேஷ் தான். ஆனால் அப்போது இவள் பேசிக் கொணடிருப்பது ரமேஷுடன் எனத் தெரியாது. வார்த்தைக்கு வார்த்தை ‘அய்யா’ (அண்ணா) என்ற வார்த்தையை உபயோகிக்க பேசுவது அவளது அண்ணன் என்பதை புரிந்து கொண்டான்.
பேசி முடித்து விட்டு விக்ரமை நோக்கி,
“ஈஎன் அண்ணன் தான் விக்ரம். இப்போ சிங்கப்பூரில் இருக்கான். அவன் ஒரு ஜர்னலிஸ்ட் அதனாலேயே என்னவோ அவனுக்கு எதிரிகள் அதிகம். ஏதாவது பண்ணி வச்சிட்டு இப்படி தான் எங்கேயாவது போயிருப்பான். ம்ம்..” என்றவள் பெருமூச்செறிந்தவாறு தொடர்ந்து,
“ஆனா இந்த தடவை பிரச்சினை ரொம்ப பெருசா இருக்கு. எங்களையும் சேஃப்பா இருக்க சொல்றான். பாருங்க விக்ரம் அவன் இப்படி ஏதாவது லூசுத் தனமா பண்ணி வைச்சிட்றான்.”என்று அவள் தன் அண்ணனை பற்றிக் கூறி முடிக்க யோசனையில் ஆழந்திருந்தான் விக்ரம்.
நிராஷாவை கூர்ந்து நோக்கியவன், “உங்க அண்ணன் யாரு நிரு?” எனக் கேட்க, அவனது ஃபோனில் ஏதோ தேடிய வண்ணம்,
“ஓ உங்களுக்கு என் அண்ணனை தெரியாதுல்ல? இதோ பாருங்க..” என்றவாறு அவளது ஃபோனில் ரமேஷூம் அவளுமாக இருந்த படங்களை காட்ட அதிர்ச்சியில் கல்லாய் சமைந்தான் விக்ரம்.
இத்தனை நாட்கள் தாங்கள் தேடிக் கொண்டிருப்பவன். அவனது உயிர் நண்பனின் எதிரி நிராஷாவின் அண்ணனா? அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. சிறிது நேரம் மௌனமாக இருந்தவன், “உன் அண்ணனுக்கு நாங்க காதலிக்கிறது தெரியுமா? எனக் கேட்க இன்னும் இல்லை என்ற பதிலே கிடைத்தது. அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி அவளை வீட்டில் இறக்கி வீட்டு நேராக வீடு வந்து சேர்ந்தான்.
ரமேஷின் தங்கை என்பதை அறியாமல் தான் செய்த முட்டாள் தனத்தை எண்ணி வருந்தினான். இந்த காதல் விவகாரம் அவனுக்கு தெரிந்தால் எப்படியும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அதை விட அவன் அபிநவ்வின் எதிரி. அந்த ஒன்றே அவனது காதலுக்கு தடையாக அமைந்தது. நிராஷாவின் காதலை விட அபிநவ்வின் நட்பு ஒன்றே அவனுக்கு பெரிதாக தோன்ற நிராஷாவுடனான காதலை முறித்துக் கொள்ள முடிவு செய்தான்.
அந்த முடிவை எடுத்த மறு கணம் அவன் இதயத்தை யாரோ குத்திக் கிழிப்பது போல வலி உண்டாயிற்று. நிராஷா அவன் உயிரில் கலந்த உறவல்லவா? அவளை அவள் காதலை எப்படி மறப்பேன்? என்று நினைக்கையிலே அவன் கண்களில் கண்ணீர் நிரம்பியது. ஆனாலும் அவனால் அபிநவ்வை விட்டுக் கொடுக்க முடியவில்லை.
அதனால் அடுத்த நாளே அவர்கள் வழமையாக சந்திக்கும் இடத்திற்கு வரச் சொன்னவன் அவளிடம், நமக்குள் காதல் ஒத்து வராது என்றும் தன் குடும்பத்தில் ஓர் சிங்களப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள் என்றும் கூறியவன் இத்தோடு இதை நிறைவு செய்து கொள்வோம் என்று அவள் அவனுக்கு கொடுத்த முதல் பரிசான அந்த வாட்சையும் அவள் முன்னே வைத்தான்.
சொல்ல முடியாத சோகத்தில் அவள் கண்கள் கலங்கியிருக்க அதற்கு மேல் இருந்தால் தன்னாலும் கட்டுப்படுத்த முடியாது போகும் என எண்ணியவன் அவளது பதிலையும் எதிர்பாராது திரும்பி வந்து விட்டான்.
அவன் நினைத்ததை போல அவளை மறப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. கொஞ்சமே கொஞ்ச காலம் பழகிய காதல் ஏன் இத்தனை வலியை தருகிறது?அன்றிலிருந்து வெளியே சுற்றியவன் வெகு நேரம் கழித்தே வீடு திரும்பினான். நேற்றைய தினம் அவனுடைய பிளாட் வீட்டிற்கு வந்தவன் குடியில் மூழ்கினான்.
இப்படி அவன் ஒவ்வொன்றாக கூறி முடிக்கும் போது அவன் குரல் தோய்ந்து போயிருந்தது. இவை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அபிநவ் ஒன்றும் பேசாமல் இருக்கவே, குரலை சரி செய்து கொண்டு அவன் கையின் மேல் தன் கையை வைத்தவன்,
“ அபி எனக்கு நீ தான்டா முக்கியம். இந்த லவ் எல்லாம் ஜஸ்ட் …” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே ‘பளார்’ என ஓர் அறை விழ நிமிர்ந்தவன் புரியாமல் அவனை நோக்கினான்.
அபிநவ்வின் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தன. அவனை முறைத்த வண்ணம் அவனை நோக்கி,
“என்னடா நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? ஒரு பொண்ணை கஷ்டப்படுத்தினதும் இல்லாம நீயும் இப்படி உன்னை வருத்திக்குற.. உன்னால எப்படி இதை பண்ண முடிஞ்சது? அவ யாரோடு தங்கையா இருந்தா உனக்கென்ன? நீ அவளை தான் அவளை மட்டும் தான் காதலிக்குற. அவ உன்னை மட்டுமே நம்பி வாழ போறவடா அவளை இந்த சீப்பான காரணங்களுக்காக விட்டுடுவியா? இது தான் என்னோட விக்கியா? நீ நிராஷாவை தான் கல்யாணம் பண்ணிக்கனும்” என்றவன் கோபம் அடங்காமல் எழுந்து நின்று இடுப்பில் ஒரு கையை வைத்து மறு கையால் தலையை அழுந்தக் கோதினான்.
விக்ரமோ மீண்டும் தலை நிமிராமல் தரையை பார்த்த வண்ணமே இருக்க,
“நீ உன் காதலை இழந்து தான் உன் நட்பை நிரூபிக்கனும்னு தப்பா நினைச்சுட்ட. உன்னையும் உன்னோட ஃபிரண்ட்ஸிப் பத்தியும் எனக்கு தெரியாதாடா? யூ ஆர் ஆல்வேஸ் மை ஃபிரெண்ட்” என்றவன் அவனருகில் சென்று சென்று அவனை அணைத்துக் கொண்டான் இருவரது கண்களும் கலங்கியிருந்தன.
“சரி இப்போ போ சீக்கிரம் ஷேவ் பண்ணி குளிச்சி ரெடியா வா.” எனக் கூற “எங்கேடா” கேட்டவனை முறைத்து குளியலறையினுள் தள்ளி விட்டான்.
அபிநவ்வோ தன் நண்பனின் அன்பில் உள்ளம் நெகிழ்ந்து போனான். விக்ரம் தனக்கு நண்பனாக கிடைத்தது எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ? என்றே அவனுக்கு தோன்றியது.
தொடரும்..
அன்புடன் அபிநேத்ரா..❤
Comments are closed here.