உன் உயிரென நான் இருப்பேன்-16
1324
0
அவள் நினைத்ததை போலவே இன்றும் நிராஷா பள்ளிக்கு வந்திருக்கவில்லை. ஆகவே பள்ளி முடிந்ததும் தன் அன்னைக்கும் அழைப்பெடுத்து கூறி விட்டு நிராஷா வீட்டிற்கு சென்றாள். அங்கே அவள் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தியதும் கதவை திறந்து இன்முகத்துடனே வரவேற்றார் நிராஷாவின் தாயார்.
நிராஷா ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று அவரிடம் கேட்டதற்கு அவர் “ இந்த ரெண்டு மூனு நாளா தலைவலினு சொல்லி ரூமகுள்ளேயே அடைஞ்சு கிடக்குறா.. டாக்டர் கிட்ட போகலாம்னு அழைச்சாலும் வர முடியாதுன்னு செல்லிட்டா.. சரியாக சாப்பிடுறது கூட இல்லைமா…” என கவலை தோய்ந்த குரலில் உறைத்தார்.
இதை கேட்டு சற்று திகைத்தாலும் நான் அவளிடம் பேசுகிறேன் என அவள் அறைக்குள் நுழைந்து . அங்கே நிராஷாவோ விட்டத்தை வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தாள். நான் வந்தது கூட தெரியாமல் இவளுக்கு அப்படி என்ன யோசனை என்று எண்ணிய வண்ணம் அவள் அருகில் சென்று அவள் தோளைத் தொட்டு உலுக்கினாளள்.
அதில் உணர்வு வர இனியாவை ஏறிட்டுப் பார்த்தவளின் கண்கள் அழுதழுது சிவந்து சோபையிழந்து போயிருந்தன. தன் ஆருயிர் தோழியின் விழிகளை பார்த்து அதிர்ந்தவள்,
“ நிரூ என்னாச்சுடி? இப்படி இருக்க?” என்று அவள் கன்னங்களை தாங்கிய வண்ணம் கேட்ட மறுகணமே அவளை அணைத்துக் கொண்டு அழுதாள். முதலில் புரியாமல் திகைத்தவள் பின்பு அவளை தன்னிலிருந்தும் விலக்கி,
“நிரூ முதல்ல என்ன நடந்ததுனு சொல்லு?” என அவளிடம் கேட்க, அன்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறியவள், “விக்ரம் என்னை வேணாம்னு சொல்லிட்டான்டி..” தொண்டை அடைக்க கூறி விம்மி அழ அவளாலும் தாங்க முடியாமல் போயிற்று.
அவளால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எந்த காதலியால் இதை தாங்கிக் கொள்ள முடியும்? உயிருக்கு நிகராக காதலிக்கும் ஒருவரை சில அற்ப காரணங்களுக்காக தூக்கி எறிய முடியுமா? இத்தனை காலம் ஈருடல் ஓருயிராக பழகி விட்டு ஒரே நிமிடத்தில் இருவரும் பிரிந்து விடுவோம் என அவ்வளவு எளிதாக இயம்பி விட முடியுமா?
இந்த மாதிரி ஒரு நிலையில் தான் இருந்தால் என நினைக்கும் போதே இதயத்தை யாரோ பிடுங்கி எறிவதை போல வலி உண்டாயிற்று அவளுக்கு. முடியாது முடியவே முடியாது அபிநவ் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பார்க்கவே பயமாக இருந்தது. உண்மை நேசம் என்ற ஒன்று இருந்தால் எந்த காரணத்திற்காகவும் காதலை விட்டுக் கொடுக்க முடியாது. தன்னை விட்டும் அவன் பிரிந்தால் அந்த வாழ்க்கை நரகமல்லவா? பிற்காலத்தில் அந்த கொடூரமான வலியை தன் உயிராணவனுக்கு வழங்கப் போகிறோம் என்ற உண்மை அறியாமல் அக் காதல் கொண்ட மனம் என்னென்னவோ கற்பனையில் உழன்று கொண்டிருந்தது.
அபியின் நண்பன் அவன் அவனால் எப்படி இவ்வாறு கூறிப் பிரிய முடிந்தது. அன்று அபிநவ்விடம் தான் கேட்க கேள்விகள் ஞாபகத்தில் தோன்ற அதற்கு பதிலளித்த தன் கண்ணாளனின் மேல் கட்டுக்கடங்காத கோபம் ஏற்பட்டது.
விக்கி ஒன்றும் அப்படி விட்டு விட மாட்டான். என்ன பிரச்சனை வந்தாலும் நானும் கூடவே இருப்பேன் என்றெல்லாம் பேசிய தன் காதலன் எங்கே போனான்? இதை கண்டு கொள்ளாமல் இருக்கிறானே.. என்று தன் காதலனின் மேலும் குற்றம் சுமத்தினாள்.
அப்போது தான் முன்தினம் விக்ரம் வீட்டு விருந்தின் போது அவர்கள் விக்ரமை பற்றி கூறிய ஒவ்வொன்றும் அவள் நினைவில் வந்தது. அப்படியானால் அவரும் ஏதோ பிரச்சனையில் தான் இருக்கிறார் அதனால் தான் இப்படி ஓர் முடிவை எடுத்திருக்க வேண்டும என்று அவளுக்கு தோன்றினாலும் அது ஏன் எதற்காக என்பது மட்டும் புரியவில்லை.
ஒரு புறம் நிராஷாவின் நிலை மறு புறம் விக்ரமின் நிலை என்னவென்றே தெரியவில்லை. இதை பற்றி அபிநவ்விடம் பேசியே ஆக வேண்டும் என எண்ணி, தன் கைப்பேசியை கையில் எடுக்கவும் அபிநவ்வின் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.
அழைப்பை ஏற்றவளுக்கு மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ தெரியவில்லை. அடுத்த கணமே நிராஷாவையும் விடாப்பிடியாக கிளப்பிக் கொண்டு வெளியேறினாள்.
அங்கே போய் பார்த்ததும் தான் தெரிந்தது விக்ரம் நிராஷாவின் காதல் எந்த இடத்தில் ஆரம்பமானதோ மீண்டும் அவனுடைய அதே உணவகத்திற்கு அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்று. உள்ளே வர முடியாது என மறுக்க முயன்றவளின் கையை பிடித்து இழுத்த வண்ணம் அழைத்துச் சென்றாள்.
அன்று போல் இன்றும் அந்த தளம் இவர்களுக்கென பிரேத்தியமாக ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது. அங்கே அபிநவ்வும் விக்ரமும் இருப்பதை கண்டவளுக்கோ அழுகை முட்டிக் கொண்டது.
அது என்ன சாமாதான முயற்சியா? எதற்கு இந்த வீண் வேலையெல்லாம் என்பது போல இனியாவை பார்க்க அவள் கண்டு கொள்ளவில்லை.
அவர்கள் இருவரும் இருந்த இடத்திற்கு விக்ரமையும் அழைத்து வந்தவன் இனியாவின் பக்கம் திரும்பி, “ இனியா இவங்க ரெண்டு பேரும் டூ விட்டுருக்காங்க போல அது தான் ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை திருப்பி வைச்சிருக்காங்க. நிரூ கூட பரவாயில்லை ஆனா விக்ரமை பாரு கல்யாணப் பொண்ணு மாதிரி தலை குனிந்து இருக்கான்.” என்று அவளிடம் காட்டி சிரித்து விட்டு தொடர்ந்து,
“ வா ஸ்வீட்டி நாங்க போய் சாப்பிட ஏதாவது ஆர்டர் கொடுப்போம். ஏன்னா இதுக்கப்புறம் இவங்களுக்கும் பசிக்கும்ல..” என்ற வண்ணம் இருவரையும் ஓரக் கண்ணால் நோட்டம் விட்டவாறு இனியாவையும் அழைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டும் நகர்ந்தான் .
அவர்கள் சென்ற பின் அவ்விடத்தை அமைதி குடி கொண்டது. அவளை வேண்டாமென கூறி விட்டு வந்தவன் தற்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளுடன் பேச முடியும் என எண்ணியவன் தலை நிமிரவேயில்லை. தன் முட்டாள் தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டான்.
தன்னவன் தன்னை வேண்டாமென நிராகரித்தை எண்ணி உள்ளுக்குள்ளேயே உழன்று கொண்டிருந்தவள் இப்போது அவன் என்ன சொன்னாலும் சமாதானமாகவே கூடாது என எண்ணிக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் தலையை நிமிர்த்தியவன் தன்னவளின் களையிழந்து போயிருந்த வதனத்தை கண்டு கலங்கினான். இது எல்லாம் தன்னால் தானே என்ற குற்றவுணர்வு அவனை மேலும் கலங்க வைத்தது.
பார்வையை அவன் முகத்தில் பதித்தவளுக்கு தன்னையும் அறியாமல் சிறு வலி எட்டிப் பார்த்தது. சில நாட்களாகவே சவரம் செய்யாமல் ஆங்காங்கே முளைத்திருந்த தாடி. சோபையிழந்து தெரிந்த அவன் முகமும் கலங்கியிருந்த அவன் கண்களும் என அவளை ஏனோ இம்சித்தது, தன்னவன் தனக்கு கொடுத்த துன்பங்கள் யாவும் அந்நொடி பஞ்சாய் பறந்து போனது.
சட்டென எழுந்தவள் அவனருகில் வந்தவள் அவன் கன்னங்களை ஏந்திய வண்ணம்,
“என்னாச்சு விக்ரம்? நீங்க ஏன் அழுறீங்க? ஏன் உங்க முகம் இப்படி வாடி போயிருக்கு?” என்ற பதற்றத்துடன் கேட்க, இம்முறை துடித்துப் போனது அவன் தான்.
அவள் மனம் நோக பேசி விட்டு அவளை வேண்டாமென்று கூறிச் சென்றது அவன். இத்தனைக்கும் தவறிழைத்தது அவன் தான் மன்னிப்பு கேட்டு அவளை சமாதானப் படுத்த வேண்டும். இங்கு எல்லாமே உல்டாவாக நடக்கிறதே.
தன் முகவாட்டத்தையே தாங்க முடியாதவள் தான் இல்லாமல் எங்ஙனம் துடித்துப் போயிருப்பாள்? அவளை மிகவும் வருத்தி விட்டேனே. தன்னுடன் இருந்த கோபம் யாவும் மறந்து தன் மேல் அளவு கடந்த அன்பை வைத்திருக்கும் இவளையா வேண்டாமென்றேன்? அவன் மனம் அவனையே கேள்வி கேட்டது.
அடுத்த நொடி அவளை அணைத்தவன்,
“ சாரி நிரூ.. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல?… நான் ஏதோ டென்ஷன்ல முட்டாள் தனமா நடந்துக்கிட்டேன். மன்னிச்சாடுமா.. என் மேல உனக்கு கொஞ்சம் கூட கோவம் வரலையா?” எனக் கேட்க, அணைப்பிலிருந்து விலகியவள் அவனை நாற்காலியில் அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டாள்.
அவன் விழிகளை நேராக நோக்கி, “கோவம் வந்துச்சு.. உங்களை கொலை பண்ணுற அளவுக்கு கோவம் வந்துச்சு. ஆனால் அதை விட என் மேல.. ஏன் உன்னை காதலிச்சேன்னு என் மேல தான் கோவம் வந்துச்சு. என்னையும் மீறி ஏதாவது பண்ணிக்குவே..” என்ற வார்த்தையை முடிக்கும் முன்னரே நாற்காலியில் இருந்து எழுந்தவன் மீண்டும் அவளை தன் வயிற்றோடு கட்டி அணைத்துக் கொண்டவன்,
“ நோ நீரு ப்ளீஸ்.. இப்படி சொல்லாதே.. என்னால தாங்க முடியாது. அந்த மாதிரி ஏதாவது நீ செய்திருந்தா…” என்றவனுக்கு அதற்கு மேல் வார்த்தை எழாமல் அணைப்பை மேலும் இறுக்கி மீண்டும் தொடர்ந்தான்.
“உனக்கு ஏதாவது ஆகியிருந்தா நான் மட்டும் உயிரோட இருந்திருப்பேன்னு நினைக்குறியா? அடுத்த நிமிசமே நானும்..”என்று கூறிக் கொண்டிருக்கையிலே தன் கரங்களால் அவன் வாயை பொத்தி,
“ ப்ளீஸ் விக்ரம் இப்படி பேசாதீங்க.. என்னாலையும் தாங்க முடியாது.. எனக்கு வேண்டியதெல்லாம் நீங்களும் உங்களோட மாறாத இந்த காதல் மட்டும் தான்..” என உணர்ச்சி பொங்க கூறியவள் அவனுடன் மேலும் ஒன்றினாள்.
அவளது காதலில் மெய் மறந்து போனவன், அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு,
“ அப்போ வா நாளைக்கே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்..” என்று காதலுடன் கூற,
“நாளைக்கு வேணாம் இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்..” என்றவள் தன்னவனின் விழிகளை மையலுடன் மையலுடன் நோக்கியவளின் இதழை குனியும் வேளை தடுத்தது இருவரது குரல்கள்.
“சென்சார் கட் பண்ணுங்கப்பா.. இதெல்லாம் இந்த சின்னப் பசங்களை வைச்சிக்கிட்டு பண்ணுற வேலையா அண்ணா..?” என்று குறும்புடன் வினவ இருவரும் சட்டென விலகி அசடு வழிய நின்று கொண்டிருந்தனர்.
“ நீங்க ரெண்டு பேருமா ஒன்னும் தெரியாத சின்னக் குழந்தைகள்? நம்பிட்டோம்மா..” என்று நக்கலாய் கூற அபிநவ் விக்ரமையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்க கண்களாலே நன்றியுரைத்தான் விக்ரம்.
“ ஓகே..ஓகே.. இன்னைக்கோ நாளைக்கோ கல்யாணம் பண்றது இருக்கட்டும். முதல்ல உங்க ரெண்டு பேர் அம்மா அப்பா கிட்டேயும் போய் இதை பத்தி பேசி பர்மிசன் வாங்கனும்.” என்று அபிநவ் கூற, கலக்கத்துடன் அபிநவ்வின் விழிகளை ஏறிட்ட நிராஷா,
“ நீங்க நினைக்குற மாதிரி இல்லை அண்ணா. எங்க வீட்ல கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க. எங்க அப்பா எதுக்காகவும் அவரோட ஜாதி மதத்தை விட்டுக் கொடுக்கவே மாட்டார்.” என அவளது குடும்பத்தின் நிலையை கூறியவள் தொடர்ந்து,
“விக்ரம் வீட்ல கூட ஒத்துக்க மாட்டாங்கன்னு சொன்னாரே அண்ணா..” என்று வருத்தத்துடன் வினவ விக்ரமை முறைத்தவன்,
“ அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லைமா..” என்றவன் வாயிலை நோக்கி திரும்பி அம்மா, அப்பா, அக்கா என்றழைக்க அவனது மொத்தக் குடும்பமுமே வருகை வந்திருந்தது.
விக்ரம், நிராஷாவின் விழிகள் அகல விரிந்திருந்தன. ஏன் இனியாவினதும் கூட அவளிடம் இதை பற்றி கூறவில்லையே. உள்ளே வந்த திருமதி குருமூர்த்தி நிராஷாவின் அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்டார். ஆர்த்தியும் சிரித்த முகமாகவே நிராஷாவையும் விக்ரமையும் அணைத்துக் கொண்டாள்.
“ இதுக்காக தானா விக்ரம் இந்த கொஞ்ச நாளாக ரொம்ப அப்செட்டா இருந்த? எங்ககிட்ட சொல்லியிருக்கலாமேடா? நாங்களே இவங்க வீட்ல போய் பேசியிருப்போமேடா. அம்மா கூட உன்னை நினைச்சு எவ்வளவு ஃபீல் பண்ணாங்க.. நல்ல வேளையே அபியே எங்களுக்கு கோல் பண்ணி எல்லா விஷயத்தையும் சொல்லி உடனே இங்கே வர சொல்லிட்டான்.
இங்க வந்தப்புறம் தானே தெரிஞ்சது நம்ம தம்பி காதல் வசனமெல்லாம் எப்படி அள்ளி விட்றான்னு..” என்று கூறி சிரிக்க அவனோ தாய் தந்தையரை காட்டி கண்களால் ஏதோ வினவ,
“ பயப்படாத தம்பி.. நீ லவ் டோக்ஸ் விட்றப்போ அம்மா அப்பா இங்க இருக்கலை போதுமா..” என்று கூறிய பின்னர் தான் அவனுக்கு மூச்சு விடவே இலகுவாக மூச்சு விட முடிந்தது.
விக்ரமே எதிர்ப்பார்க்காத ஒன்று. இவ்வளவு எளிதாக இது தீர்ந்து விடும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. எல்லாம் அபிநவ்வின் திட்டம் தானே. தன் எடுத்த காரியத்தை முடிக்காமல் விட்டு விடுபவனா அவன் நண்பன்? இல்லையே..
அபிநவ்வின் தலைவியின் விழிகளோ தன் தலைவனேயே வட்டமிட்டுக் கொண்டிருக்க அதை கண்டு கொண்டவன் அருகில் வந்து காலரை உயர்த்திக் காட்டி,
“எப்படி மாமாவோட வேலை” என்று காதலுடன் வினவ அவன் அருகாமை அவளைய ஒரு நொடி கிறங்க வைத்தது. தன் பார்வை திசையை மாற்றியவள்,
“ரொம்ப சீன் போடாதீங்க பாஸ்.. ஓவர் சீன் ஒடம்புக்கு நல்லதிலை..” என்று கிளுக்கிச் சிரித்தாள். ஆளை மயக்கும் அவள் புன்னகையில் சுற்றம் மறந்தவன் அவள் காதருகே குனிந்து,
“இப்படி சிரிக்காதே ஸ்வீட்டி.. உள்ளே என்ன என்னமோ பண்ணுது. இந்த கும்பலுக்கு நடுவில் சிங்கில் ஃபோர்ஹெட் கிஸ் கூட பண்ண முடியாதுடி..” என்று அவனது கிச்சு கிச்சு மூட்டும் ஹஸ்கி குரலில் கூற கன்னங்கள் செம்மையுற நாணத்துடன் தலை குனிந்தாள் அவன் காதல் தேவி.
“ஓஓஓ.. அபி உன் லவ் டோக்ஸ் எல்லாம் அப்புறம் வைச்சிக்கலாம்.. இப்போ வங்க சாப்பிடலாம்..” என ஆர்த்தி இருவரையும் கேலி செய்ய அங்கே சிரிப்பலை பரவியது.
தன் செம்மையுற்றிருந்த கன்னங்களை மறைக்க பிரயத்தனம் செய்தவள் மெதுவாக நடந்து சென்று அமர அவளுக்கு எதிர்த்திசையில் அமர அவனை நிமிர்ந்து பார்க்கவே கூச்சமாக இருந்தது.
அவனோ யாரும் அறியாத வண்ணம் தன் கால்களால் அவள் காலை தடவ மின்சாரம் தாக்கியதை போல கால்களை இழுத்துக் கொள்ள அவனை நிமிர்ந்து முறைக்க அவனோ அவனது கன்னக்குழி சிரிப்புடன் தன் இரு புருவங்களையும் மாற்றி மாற்றி உயர்த்திக் காட்டினான்.
தொடரும்…
அன்புடன் அபிநேத்ரா..❤
Comments are closed here.