உன் உயிரென நான் இருப்பேன்-18
1731
0
இரவும் பகலும் நட்புடன் கை கோர்க்கும் ஓர் பொன்மாலை பொழுது. இனியாவும் நிராஷாவும் ஆழ்ந்த யோசனையுடன் மஞ்சத்தில் அமர்ந்திருந்தனர். இருவரது ஆழ்ந்த யோசனைக்கு காரணம் அவர்களின் மற்றைய தோழி ஜூலியே. இது வரை ஒரு நாள் கூட அவள் இவ்வாறு நடந்து கொண்டதில்லை. அவளை காணச் சென்ற தங்களுடன் ஏன் இப்படி நடந்து கொண்டாள்?. அவளது அன்றைய நடவடிக்கையால் இருவர் மனமும் நொந்து போனது. அவளது இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன எனப் புரியாமல் குழம்பி போயினர் தோழிகள் இருவரும்.
அன்று இனியாவின் பிறந்த நாள் அன்று கூட ஜூலி வாழ்த்தியிருக்கவில்லை. இது இனியாவுக்கு வேதனை அளிக்கவே நிரஷாவும் அவளை அன்றே சந்திக்க முடிவு செய்து கிளம்பினார்கள்.
அவள் இல்லம் நோக்கி சென்ற இருவரையும் ஜூலி ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு காண போகும் தோழியை பார்க்க ஆவலுடன் சென்றவர்களுக்கு இவளது அலட்சியம் ஏதோ வித்தியாசத்தை உணர்த்தியது.
“உங்களை யாரு இங்க வர சொன்னாங்க ?’ என்ற அவளுடைய முதல் கேள்வியே அன்னியத் தன்மையை உணர்த்தியது.
“ஏன் ஜூலி எங்க கூட பேச மாட்டேங்கிற? உனக்கு எவ்வளவு கால்ஸ் மெசேஜ் பண்ணியும் உன் கிட்ட இருந்து நோ ரெஸ்பான்ஸ்? நேத்து இனியா பர்த்டே அதுக்கு கூட விஷ் பண்ணலை. ஏன் இப்படி எங்களை அவொய்ட் பண்ற? ” என்று கேட்டுக் கொண்டே போனவளை தடுத்து நிறுத்தியது ஜூலியின் குரல்.
“ஏய் நிறுத்து.. சும்மா சீன் போடாதே எல்லாமே . இதுக்கு மேல என்ன தெரியணும்.” என்றவள் இனியாவை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் தொடர்ந்து,
“எங்க வீட்டு பார்ட்டிக்கே வந்து நல்ல பணக்கார பசங்கள பார்த்து மயக்கி இப்போ கல்யாணம் பண்ற அளவுக்கு வந்துடீங்கல்ல? உங்க ஸ்டேட்டஸ் என்ன அவங்க ஸ்டேட்டஸ் என்ன? நான் தான் ஸ்டேட்டஸ் தெரியாம உங்க கூட பிரெண்ட்ஷிப் வச்சிக்கிட்டேன். மிடில் கிளாஸ் உங்களுக்கு இப்படி ஒரு பணக்கார லைப் கேட்குதா? அவனுங்களை கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக அவங்க கூட எப்படி எல்லாம் பழகி இருப்பீங்க?’ என சம்மந்தமே இல்லாமல் வார்த்தைகளை சரமாரியாக வீசிக்கொண்டே போக, அந்த வார்த்தை இனியாவின் கோபத்தை ஏகத்துக்கும் கிளறி விட ஜூலியை உறுத்து நோக்கி,
“ஜூலி ஸ்டாப்..நானும் பார்த்துகிட்டே இருக்கேன் வார்த்தைக்கு வார்த்தை பணக்கார பசங்க வளைச்சி போட்டுக்கிட்டோம்னு சொல்ற? எங்க காதலை கொச்சை படுத்துற உரிமை யாருக்குமே இல்லை. நீ எங்களை பத்தி இவ்வளவு கேவலமா நினைப்பனு கனவுல கூட நினைக்கலை.” என்று கண்கள் சிவக்க கத்திக் கொண்டே போனவளது கைகளை அழுந்த பற்றினாள் நிராஷா.
“வா இனிய போகலாம் இவ கிட்ட என்ன பேச்சு.. இவ்வளவு காலமா வச்சிருந்த நட்பை கூட ஒரு நிமிஷத்துல எப்படி கேவல படுத்திட்டா..சீ ..” என்றவள் ஜூலியின் வேகமாக பக்கம் திரும்பி, “நாங்க அவங்களை கல்யாணம் பண்றது என்ன காரணத்துக்காக உனக்கு பிடிக்கலைனு எங்களுக்கு தெரியலை ஆனா இனி நீயா புரிஞ்சிக்கிட்டு மன்னிப்பு கேக்குற வரைக்கும் நாங்க உன் முகத்துல கூட முழிக்க மாட்டோம்… ஓகே பை..” என்று கூறி அதே வேகத்துடன் இனியாவையும் இழுக்க கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
அன்றிலிருந்து இருவருக்கும் ஒரே யோசனை தான். என்ன தான் யோசித்தாலும் அவளது கோபத்திற்கும் அலட்சியத்திற்குமான காரணம் என்னவென்பது மட்டும் புலப் படவில்லை. இப்படி ஜூலியை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தவர்களை கலைத்தது லலிதாவின் குரல்.
“என்னமா நிராஷா உன் கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. ஏகப்பட்ட வேலைகள் இருக்கு நீங்க ரெண்டு பெரும் என்னடான்னா எப்போ பாரு இப்படியே இருக்கீங்க..” என அவர் கூறும் போது தான் திருமண நாள் நெருங்கி கொண்டிருப்பதும் நாளை ஷாப்பிங் செய்வதற்காக ஆர்த்தி வருவதாக கூறியதும் ஞாபகத்திற்கு வந்தது.
அதன் பின் வந்த நாட்களில் தோழிகள் இருவரும் திருமண வேளைகளில் மூழ்கி போனார்கள்.
சோபாவில் ஒய்யாரமாக படுத்தவாறு ஹெட் செட்டை காதுகளில் மாட்டி போனை குடைந்த வண்ணம் இருந்தான் ஆரவ். அந்நேரம் அங்கே வந்திருந்த விக்ரமுக்கு ஆரவ்வை சீண்டிப் பார்க்கும் எண்ணம் தோன்றவே சுற்றும் முற்றும் பார்த்தவனுக்கு அங்கு அலங்காரத்திற்கென வைக்கப் பட்டிருந்த பூச்சாடியில் இருந்த ஒரு பூவை எடுத்தவன் அவன் பாதத்தின் அடியில் கிச்சு கிச்சு மூட்டவே பதறியடித்துக் கொண்டு எழுந்தான் ஆரவ்.
“என்ன ஆரவ் பயந்துட்டியா ?” என்று சிரித்துக் கொண்டே கேட்க,
“கல்யாண மாப்பிள்ளை நீங்களா?” என்றவன் தனது போனை கையில் எடுத்த வண்ணம் மீண்டும் சோபாவில் அமர்ந்து கொள்ள, நீண்ட பெரு மூச்சொன்றை வெளியிட்ட விக்ரம்,
“அப்படி என்னடா இருக்கு இந்த போன்ல 24 மணி நேரமும் நோண்டிகிட்டே இருக்க ? உன் போன் பேட்டரி லோ ஆகவே ஆகாதாடா? .. நீ நிஜமாவே டாக்டருக்கு தான் படிச்சேன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. ” என்று கூறிக் கொண்டே வேலுவிடம் தனக்கு காபி கொண்டு வருமாறு பணித்து விட்டு அமர்ந்து கொண்டான்.
தனது போனை சார்ஜில் போட்டு விட்டு திரும்பி வந்து அமர்ந்து கொண்டு,
“ப்ரோ... உங்களுக்கும் எங்க அண்ணாக்கும் ஆள் இருக்கு ஜாலியா லவ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. ஆனா நான் இன்னும் சிங்கிள் சிங்கமா தானே இருக்கேன். சோ இப்படியே போன்ல சும்மா கடலை போட்டே காலத்தை ஒட்டிட வேண்டியது தான் வை லவ் வை கஷ்டம்..” எனக் கூலாக கூறிக் கொண்டே தொலைக்காட்சியை ஆன் செய்தவன் அதில் புதைந்து போனான்.
“இரு இரு அபி கிட்ட சொல்லி உன்னை சீக்கிரம் லண்டனுக்கு பார்சல் பண்ணி அனுப்பிடறேன்.” என்று கூறிய வண்ணம் மாடிக்குச் சென்றான்.
அங்கே அபிநவ்வின் அறையில் அவன் இல்லாமல் பால்கனியில் நின்று கொண்டிருந்தவனை நோக்கி,
“என்னடா மச்சி.. அங்கே என்ன பண்ணிட்டு இருக்க?” என்ற வண்ணம் அவனருகில் போய் நின்று கொண்டான்.
விக்ரமை கண்டதும் அவனது தோளில் கையை போட்டுக் கொண்டவன்,
“வாங்க கல்யாண மாப்பிள்ளை இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணத்தை வைச்சிக்கிட்டு இங்க என்ன பண்றீங்க? இப்பவே ரெஸ்ட் எடுத்துக்குங்க அப்புறம் டயர்டாகிடப் போறீங்க..” என்று குறும்புடன் கலாய்க்க, அவன் தோளில் தட்டியவன்,
“நான் டயர்டாகுறது இருக்கட்டும் உன் கூட ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேச வந்து இருக்கேன்..” என அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து அவனையும் அருகில் அமருமாறு கூற தானும் அமர்ந்து என்ன என்பது போல் கேள்வியாய் நோக்கினான் அபிநவ்.
“ரமேஷ் கூடிய சீக்கிரத்தில் ஸ்ரீலங்கா வரப் போறான்.” என்று கூறியதும் அபிநவ்வின் விழிகள் தானாக கோபத்தில் சிவந்தன. கோபத்தை கட்டுப்படுத்த எழுந்து நின்றவன் கண்களை இறுக மூடித்திறந்து,
“எப்போ வருவதா இருக்கான்?” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் வினவினான் .
“நிராஷா என்னோட போட்டோவை அனுப்பி என்னை தான் கல்யாணம் செய்துக்க போறதா சொல்லி இருக்கா. ஆனால் அவன் என்னை கல்யாணம் செய்துக்கவே கூடாதுன்னும் சொல்லி ஸ்ரீலங்கா வருவதாகவும் சொல்லி இருக்கான். அவனுக்கு நிரூ மேல பாசம் அதிகம் கண்டிப்பா எங்க கல்யாணத்தை நிறுத்த ஏதாவது செய்வான். சோ அந்த டைம்ல அவனை ஈஸியா பிடிச்சிடலாம் அபி..” என்று கூறிய நண்பனை ஒரு நிமிடம் இமைக்காது நோக்கியவன் பின் தயங்கி,
“விக்கி அவன் நிராஷாவோட அண்ணன் .. என்னால உன் லைஃபுக்கு ஏதும் பிரச்சினை..” என்று வார்த்தைகள் தடுமாற கூறியவனை நிறுத்துமாறு சைகை காட்டி விட்டு தொடர்ந்தான்.
“அபி இதுல என்னோட லைஃப் பத்தி நீ யோசிக்கவே கூடாது. தப்பு செஞ்ச அவனே அப்படி இருக்கும் போது நீ ஏன் தயங்குற? உண்மை தெரிஞ்சா அவளே ரமேஷை சீ ன்னு சொல்லிடுவா.. எப்படியாவது அந்த வீடியோஸ் நம்ம கைக்கு வரணும் அவ்வளவு தான் ..” என்றவனது குரல் அதன் தீவிரத்தன்மையை அவனுக்கு உணர்த்தியது.
விக்ரமுடைய நட்பு எத்தகையது என ஏற்கனவே அறிந்தவனாயிற்றே ஆயினும் அவனை மேலும் கஷ்டப்படுத்த அவன் விரும்பவில்லை. அதனால் தனது நண்பனின் வாழ்க்கைக்கு ஏதேனும் பங்கம் ஏற்பட்டு விடும் என்ற தயக்கம் ஒருபுறமிருக்க இந்த விஷயத்தில் சரிவர செயல்படா விட்டால் தனது எதிர்கால வாழ்க்கையும் கேள்விக் குறியாக மாறி விடும் என்ற பயமும் அவனை வெகுவாக தாக்கியது. அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாதவனாய் சோர்ந்து போனான் அபிநவ்.
உண்மையில் யார் காரணம் என அறிய வரும் நாளில்..
தொடரும்..
Comments are closed here.