உன் உயிரென நான் இருப்பேன்-19
1364
0
“டேய் ஆரவ் இதை எப்படிடா கட்டுறது..?” என வேஷ்ட்டியை இடுப்பில் சுற்றிய வண்ணம் தடுமாறிக் கொண்டிருந்த விக்ரமை பார்த்து அபிநவ், ஆரவ் மற்றும் வருண் மூவரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர். அதில் கடுப்பான விக்ரம் மற்ற மூவரையும் முறைத்த வண்ணம் நோக்கி,
“என்னை பார்த்தா காமெடியா இருக்கா..? இவ்வளவு சிரிக்குறீங்கல்ல முடிஞ்சா எவனாவது இந்த வேட்டியை கட்டிக் காட்டுங்கடா..” என்று சவால் விட மூவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்க,
“முடியாதுல்ல அப்போ மூடிக்கிட்டு இதை கட்ட ஹெல்ப் பண்ணுங்க..” என்று சிடுசிடுத்தவன் மீண்டும் வேஷ்ட்டி கட்ட முனைந்தான் கல்யாண மாப்பிள்ளை விக்ரம்.
அங்கிருந்த நால்வருக்குமே வேஷ்ட்டி கட்டத் தெரியவில்லை. வருணுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் அவனாலும் அதை ஒழுங்காக கட்டி விடத் தெரியவில்லை. அந் நேரம் எழுந்து நின்ற அபிநவ் தன் ஃபோனை எடுத்த வண்ணம் அவர்களை நோக்கி,
“ யூடியூப் இருக்க பயமேன்..” என்று கூறியபடி யூடியூபில் இலகுவான முறையொன்றை தேடி எடுத்துக் கொடுத்தான்.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்து எரிச்சலுடன் இருந்த விக்ரம்அருகில் வந்த ஆரவ், “ என்னடா இது விக்ரம் ப்ரோவுக்கு வந்த சோதனை..” எனக் கூறியவாறே அவனும் யூடியூபில் காட்டிய வண்ணம் வேஷ்ட்டியை கட்டி விட முயன்றான்.
அவனும் தடுமாற ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையிழந்த விக்ரம் “அட போங்கடா.. இதை கட்டியே நான் டயர்டாகிட்டேன். அர்ஜன்ட்டா போயிட்டு வறேன்.” என வாஷ் ரூமிற்குள் நுழைந்தான்.
அவன் சென்றதும் மற்ற மூவரும் அணிந்து கொள்ள தயாராகினர். இவர்கள் பாடும் அதே தான். முதலில் அபிநவ் வேஷ்ட்டியை கட்டுவதாக கூறி அந்த ஆளுயர கண்ணாடி முன் நின்று அணியத் துவங்கினான். அவனுக்கும் அதே நிலமை.
“அபி மாமா.. உங்களுக்கும் சரியாகவே வரலை. எங்க வீட்ல எங்க அக்கா தான் கட்டி விடுவா..” என்று வருண் கூற, உணமையாகவா? என கேட்பது போல் இருந்தது அபிநவ்வின் பார்வை.
“ஆமா மாமா.. இருங்க நான் ட்ரை பண்றேன். ஆரவ் அண்ணா நீங்களும் வந்து ஹெல்ப் பண்ணுங்க..” என்று ஆரவ்வின் உதவியை பெற நாடி அவனையும் கூட்டு சேர்த்துக் கொண்டு கட்டி விட முனைய அபிநவ்வுக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது.
“ ஆரவ் அண்ணா இப்படி..”
“வருண் அப்படி இல்லைடா இங்கே பாரு ..” என இருவரும் மாறி மாறி ஏதேதோ செய்து கொண்டிருக்க யாரும் எதிர்பாராத அவ்வறை கதவு சடாரென்று திறக்கப்பட மூவரும் இருந்த நிலையிலே திரும்பிப் பார்த்தனர். அறை வாயிலில் கை கட்டிய வண்ணம் அடக்கப்பட்ட சிரிப்புடன் நின்று கொண்டிருந்தாள் அபிநவ்வின் காதல் தேவதை இனியா.
மூவரும் நின்ற நிலை வேறு அவளுக்கு மேலும் சிரிப்பை தூண்டிவிட அபிநவ்வுக்கோ அவள் முன்னிலையில் அசடு வழியும்படியாயிற்று. அபிநவ்வை மேலிருந்து கீழ் பார்வையால் அளவிட்டவளுக்கு மேலும் சிரிப்பு பீறிட்டது.
“என்ன கோலம் இது அபி? உங்களுக்கு வேஷ்ட்டி கட்டத் தெரியாதா..?” என உதட்டில் புன்னகையுடன் கண்களில் வியப்பைக் காட்டி வினவ,
“இது தான்.. பர்ஸ்ட் டைம் அதான் கொஞ்சம்..” என தலையை சொறிந்த வண்ணம் மெல்லிய குரலில் கூற, அவளுக்கு தன்னவனின் செயலில் மேலும் சிரிப்பு மூண்டது .
“பெரிய பிசினஸ் மேன்னு தான் பேரு.. ஜஸ்ட் சிம்பிள் மேட்டர் ஒரு வேஷ்ட்டி கட்டத் தெரியலை.. நீங்க எல்லாம் என்ன பிசினஸ் மேனோ..?” என உதட்டை பிதுக்கி சிரிக்க,
சட்டென அவளை நோக்கியவன், “ அதான் உனக்கு தெரியுமாம்ல நீ வந்து ஹெல்ப் பண்ணு..” என அவளை அழைக்க வருணை முறைத்துப் பார்த்தாள் அவள்.
“ஓகே ப்ரோ.. அப்போ அண்ணியே சொல்லிக் கொடுப்பாங்கல்ல.. அப்போ நாங்க உத்தரவு வாங்கிக்குறோம்..” என்று ஆரவ் வருணையும் இழுத்துக் கொண்டு அறையை விட்டும் வெளியேறினான்.
அவர்கள் இருவரும் வெளியேறிய மறு நிமிடம் அவளை தன் அணைப்புக்குள் கொண்டு வந்திருந்தவன், “என்னடி என்னையே கலாய்க்குறீயா..?” என்று அவனது அணைப்பை மேலும் இறுக்க, மார்பில் கையூன்றி தள்ளி விட்டு அணைப்பிலிருந்து வெளி வந்தவள்,
“ஆமா.. இப்பவே இப்படின்னா அப்புறம் எங்க கல்யாணத்துக்கு எப்படி..” என அவனது ஒரு பக்க கன்னத்தை செல்லமாய் தட்டினாள்.
“அதான் என் ஸ்வீட்டிமா நீ இருக்கீயே..” என்றவன் அப்போது தான் அவளை முழுமையாக ஆராய்ந்தான்.
இளஞ்சிவப்பு மற்றும் பச்சை வண்ணம் கலந்த டிசைனர் புடவையில் அதற்கு பொருத்தமான ஆபரணங்கள் அணிந்து அளவான ஒப்பனையுடன் அழகு தேவதையாகவே தெரிந்தாள் இனியா. அவளது வதனத்தின் அழகு அவனை ஈர்க்க அவளை கிறக்கத்துடன் கூர்ந்து நோக்கி ஓர் எட்டு எடுத்து வைத்தான்.
அவனது அந்தப் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவளது கால்கள் தானாக பின்நோக்கி நகர சுவருடன் மோதி நின்று விழித்தவளை இரு புறமும் தன் கைகளால் அனைகட்டிய வண்ணம் அவள் இதழ்களை நோக்கி குனிய,
“சென்சார் கட் பண்ணுங்கப்பா..” என்று கூறி சிரித்த வண்ணம் குளியலறையினுள் இருந்து வெளியே வந்தான் விக்ரம். சட்டென அவனிலிருந்து விலகி நின்றவளுக்கு விக்ரமை நிமிர்ந்து பார்க்கவே கூச்சமாக இருக்க அவனையும் தள்ளிக் கொண்டு அறையிலிருந்து வெளியே ஓட அபிநவ் விக்ரமை ஏகத்துக்கும் முறைத்து வைத்தான்.
“ஏன்டா மொறைக்குற? அவ்வளவு அவசரம்னா கல்யாணம் பண்ணிக்க..” என்றவன் மீண்டும் அணியத் தயாராகினான்.
யோசனையுடன் விக்ரமை நோக்கி,
“அதெல்லாம் சீக்கிரம் பண்ணிடலாம் விக்கி.. எனக்கென்னவோ இந்த பிரச்சினையை தீர்த்துட்டே கல்யாணம் பண்ணலாம்னு தோனுது.” என்றவன் விக்ரமின் தோளில் கையிட்டவாறு தொடர்ந்து, “அவ கூட வாழப் போற வாழ்க்கை சந்தோஷமா வாழனும்.. தினமும் என்ன நடக்குமோனு பயத்தோட வாழ முடியாது. உனக்கே தெரியும்ல விக்கி எனக்கு இனியா எந்தளவுக்கு முக்கியம்னு ..” என்று தோய்ந்து போன குரலில் கூற, யோசனாக அபிநவ்வை நோக்கியவன்,
“ஏன் அபி நீ ஏன் இதை பத்தி இனியா கிட்ட பேசக் கூடாது? நீ சொன்னா கண்டிப்பா புரிஞ்சுக்குவா..உன் மேல தான் எந்த தவறும் இல்லையே” என தன் நண்பனுக்கு யோசனை கூற நெடிய பெரு மூச்சொன்றை விட்டவன்,
“ம்ம்.. சொல்லலாம் என் மேல எந்த தப்பும் இல்லை தான்.. ஆனா எனக்கெதிரா அந்த வீடியோ ஆதாரம் அவன்கிட்ட இருக்கும் வரை இந்த பிரச்சினை தீராது.. அன்ட் இனியா கிட்ட எப்படிடா சொல்லுவேன் நான் ஒரு பொண்ணு கூட.. அவ தாங்க மாட்டாடா.. அதை விட அவ என்னை வெறுத்துட்டான்னா..” என்றவனுக்கு கவலையில் வார்த்தைகள் வெளிவர மறுத்தன.
தன் நண்பனது காதல் எத்தகையது என விக்ரமுக்கு தெரியாதா என்ன? அவளை கண்டு காதலில் விழுந்த நாள் முதல் இன்று வரை நடந்த அத்தனையும் அவன் அறியாததல்லவே.. அவன் காதலின் ஆழம் அந்தப் பரந்த கடலிலும் ஆழமானது. இனியா வெறுத்தால் தன் நண்பனின் நிலை?
“நோ அபி ரிலாக்ஸ்டா.. அப்படி எல்லாம் நடக்க நீ தான் விட்டுடுவியா?அதான் இன்னைக்கு ரமேஷ் வர்றான்னு தெரிஞ்சிருச்சுல்ல நீ அடுத்து ஆக வேண்டியதை பாரு..” என்றவன் ஆறுதலாய் அபிநவ்வை அணைத்துக் கொண்டான்.
ரமேஷ் என்ற பெயரை கேட்டதுமே அவன் முகம் இறுகியது. அவனது மனம் அந்தப் பெயரை ஆக்ரோஷமாக உச்சரித்தது. இன்று அந்த ரமேசுக்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று எண்ணி ராபர்ட்டுக்கு அழைப்பை மேற் கொண்டான்.
“ஹலோ ராபர்ட் இஸ் எவ்ரித்திங் ஓகே?”
“……”
“இன்னைக்கு அவனை கண்டிப்பா பிடிச்சாகனும்.. ஏர்போர்ட்டில் நம்ம ஆட்களை கேர்ஃபுல்லா இருக்க சொல்லுங்க..”
“…..”
“அவன் வந்ததும் அவனோட ஒவ்வொரு அசைவையும் அவனை வாட்ச் பண்ணிக்கிட்டே இருங்க.. ஏதாவது சொதப்பல் நடந்தது…”
“………..”
“ஓகே…குட்” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு மும்முனமாக திருமண வேலைகளில் ஈடுபட்டான்.
இனியாவின் விழிகள் தன்னவனிலேயே லயித்திருந்தது. எப்போதும் கோட் சூட்டிலே பார்த்து பழகியவளுக்கு அவனது இந்த தோற்றமும் அதில் தெரிந்த கம்பீரமும் இன்று அவனை எக்ஸ்ட்ரா அழகனாய் காட்டியது.
அந்நேரம் அங்கிருந்த இளம் பெண்கள் கூட்டமொன்று..
“ஹேய் பாருங்கடி அவர் செம்ம ஹேண்டசம்மா இருக்காருல்ல..”என்று ஒரு பெண் கூற, அவனை திரும்பிப் பார்த்த மற்ற பெண்,
“வாவ்.. சூப்பர் ஸ்மார்ட்டா இருக்காரு.. அவரோட ஆர்ம்ஸ் பாரு.. சிக்ஸ் பேக் வச்சிருக்காரு போலடி..” என்று வியந்து இன்னொரு பெண் கூற ,
“அவரோட சிரிப்பை பாருங்கடி.. ஹேய் ஹேய் அந்த டிம்பிளை பாரேன்.. என்ன அழகு..” என அவனது கன்னக்குழி சிரிப்பையும் சுட்டிக் காட்டி அந்த கும்பலே அபிநவ்வை இரசித்துக் கொண்டிருக்க இந்த வர்ணனைகளை கேட்டுக் கொண்டிருந்த இனியாவுக்கு பற்றிக் கொண்டு வந்து.
அந்தக் கூட்டத்தில் அவனை அங்குல அங்குலமாக விபரித்த வண்ணம் சிரித்துக் கொண்டிருந்த பெண்ணின் தோளை தட்டியவள், அவள் திரும்பியதும்,
“அபிநவ் என் ஆளு.. என்னை கல்யாணம் பண்ணிக்க போறவரு.. மறுபடியும் இப்படி ஏடாகூடமா என் காதுல ஏதாவது விழுந்துச்சு.. அப்புறம் யாருக்கும் சாப்பாடு கிடையாது..ஓகே..” என்று கூறி அவர்களை முறைத்தவாறே அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
அங்கிருந்து நேரே அபிநவ் இருக்கும் இடத்துக்கு வந்தவள் அவன் முதுகில் தட்டி தன்புறம் திருப்ப. இடுப்பில் கை வைத்த வண்ணம் அவனையே முறைத்துக் கொண்டே அதிகாரத் தோரணையில் கையை நீட்டி,
“இப்படி தான் ஈஈஈனு இளிச்சிக்கிட்டே வேலை பார்க்கனுமா? ஏன் எப்பவும் வச்சிக்குற மாதிரி மூஞ்சை ‘உர்’ருன்னு வச்சிக்க வேண்டியது தானே.. இன்னைக்கு மட்டும் என்ன இப்படி சிரிப்பு.. இதுல இந்த டிம்புள் தெரியுற மாதிரி வேற சிரிக்குற..” என சிடுசிடுத்துக் கொண்டே போனவளை புரியாத பார்வை பார்த்தான் அபிநவ்.
அவனுக்கோ அவள் என்ன கூற வருகிறாள் என்பதே புரியவில்லை. வழமையாக சிரிக்காமல் இருப்பதற்குத் தான் அவளிடம் அடிக்கடி வாங்கிக் கட்டிக் கொள்வதுண்டு. இன்று அவன் சிரிப்பதற்கு இப்படி திட்டுகிறாளே..என்னவாயிற்று இவளுக்கு என ஒன்றும் புரியாமல்,
“என்னாச்சு ஸ்வீட்டி.. இப்படி திட்டுற வழமையாக சிரிக்க சொல்லி திட்டுவ இன்னைக்கு சிரிக்குறேன்னு திட்டுறியே.. இது உனக்கே அநியாயமாக தெரியலை?” என்று புரியாமல் வினவ,
“பேசாதே.. பேசாதே..” என்றவள் அவனது கைச்சந்தை தொட்டுப் பார்த்து விட்டு, “உனக்கு இந்த ஆர்ம்ஸ் , சிக்ஸ் பேக்லாம் ரொம்ப முக்கியமாடா? கல்யாணத்துக்கு அப்புறம் முதல் வேலையா உன் வீட்டுல இருக்குற ஜிம்மை இடிச்சு தள்ளுறேன் பாரு..” என மீண்டும் அதே குரலில் அவனுடன் சம்பந்தமே இல்லாமல் சண்டையிட அவள் நின்ற தோரணை வேறு அவனுக்கு சிரிப்பை மூட்டியது.
“சரிமா இப்போ என்னாச்சு? ஏன் திட்டுறேன்னு சொல்லிட்டு திட்டு மா.” என்று கூற அவனை முறைத்தவள்,
“ஏன் திட்டுறேனா? உன்னை..” என்றவள் நடந்தவற்றை கூற அவனால் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை. மேலும் அவளை சீண்டிப் பார்க்கும் நோக்குடன் அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை நோக்கி,
“பார்த்தியாமா ஐயா அழகு அப்படி.. ச்சே..யாரு அந்த பொண்ணுங்க? என்னை இவ்வளவு ரசிச்சிருக்காங்கனு தெரியாம போச்சே.. அழகா இருந்தாங்களா? இனியா அவங்க எல்லாரும் எங்கே?” என அவர்ளை தேடுவது போல் பாவ்லா காட்ட அவளோ கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள்.
“போடா போ.. அவங்களையே கட்டிக்கோ ..” என்ற வண்ணம் அங்கிருந்து நகர முற்பட அவளது முன்னங்கையை பற்றி இழுத்தவன் ஓர் ஓரமாக அழைத்துச் சென்று,
“ஸ்வீட்டி ..” என அழைக்க அவளிடமிருந்து பதிலில்லை எங்கோ வெறித்து பார்தபடி கைகளை கட்டிய வண்ணம் நின்று கொண்டிருக்க,
அவளது இரு கைகளையும் தன் கைகளுக்குள் வைத்து கொண்டவன், அவள் காதலாய் நோக்கி,
“இனியா.. என் லைஃப் லோங் நீ மட்டும் தான் எனக்கு வேணும்.. உன்னோட இந்த உரிமையான காதல்.. என்னோட காதல் எப்பவுமே உன்னோட மட்டும் தான்.. இதை நீயே நினைச்சா கூட மாத்த முடியாது.. ஆல் மை நைட் இஸ் யோர் லவ்..” எனக் கூற அவளும் அவனது விழிகளையே இமைக்க மறந்து பார்த்த வண்ணம் நின்றாள்.
அவனது காதல் எல்லையற்றது.. உண்மையானது.. ஆழமானது.. அழகானது.. யாராலும் மாற்ற முடியாதது… இதே நிலை தொடருமா..?
அவர்கள் இருவரையும் சுயம் உணர வைத்தது அபிநவ்வின் செல்போன். திரையில் ராபர்ட்டின் பெயரை கண்டதும் அவளை விட்டும் விலகியவன் பேசி விட்டு வருவதாக கையால் சைகை காட்டி விட்டு போனில் பேசிய வண்ணம் நடந்து செல்லும் தன்னவனையே காதல் கமழ நோக்கினாள் அவள்.
“ம்.. சொல்லு ராபர்ட்..”
“……”
“வாட்..” என அதிர்ந்து சுற்றிலும் பார்வையை செலுத்தி விட்டு “*******”
“……”
“டூ வாட் ஐ சே..” என்றவன் அழைப்பை துண்டித்து ஃபோனை தன் சட்டை பாக்கெட்டுக்குள் இட்டவன் ஏனைய வேலைகளை கவணிக்கலானான்.
ரமேஷ் வருவானா? மாட்டானா?
தொடரும்..
அன்புடன் அபிநேத்ரா ..
Comments are closed here.