என் நெஞ்சில் என்றும் நீயடி 😍😍😘
623
1
என் நெஞ்சில் என்றும் நீயடி 😍😍😘
அத்தியாயம்:2
முதலில் போன் கட் ஆனவுடன் தெரியாமல் கைபட்டு கட் ஆகியிருக்கும் என்று நினைத்துக்கொண்டு மீண்டும் அவனை போனில் அழைத்தாள், ஆனால் அதுவோ சுவிட்ச்ஆஃ என்று அவளுக்கு பதில் கூறியது மனதில் சிறு வலி தோன்ற கட்டிலில் படுத்தாள் மீனா…
அவர்கள் பெண் பார்க்க வருகிறோமென்று கூறிய அந்த ஞாயிற்று கிழமையும் வந்தது.
காலையிலிருந்து எத்தனை தடவை சொல்லிட்டு இருக்கேன் அந்த புடவையை காட்டுனு நீ பாட்டுக்கு நயிட்டி போட்டுட்டு நிக்கிற, இந்த பையனுக்கு மட்டும் உன்னை பிடிக்கலைன்னா, என்னோட சொந்தகார பையனுக்கு உன்ன ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணி குடுத்துருவேன், ஒழுங்கா அந்த பையனுக்கு புடிக்கிற மாதிரி ரெடி ஆயிட்டு வா சிறு கண்டிப்புடன் கூறிவிட்டு சென்றாள் மீனாவின் சித்தி ஸ்ரீதேவி…
இன்னைக்கு மித்ரன் கண்டிப்பா வரமாண்டங்க, ஒரு வேலை வந்தாலும் என்னை புடிக்கலன்னு தான் சொல்லுவாங்க அதுக்கு நா எந்த ட்ரெஸ் போட்டா என்ன போடலன்னா என்ன 😜, வர வர நம்ம வாழ்க்கை எத நோக்கி பயணம் போதுனே தெரிய மாண்டுக்கு, புலம்பிக்கொன்டே புடவை உடுத்த சென்றாள் மீனா.
அவளது அலங்காரம் முடியவும் மித்ரன் குடும்பத்தினர் வரவும் நேரம் சரியாக இருந்தது.
தட்டில் காபீ கோப்பைகளுடன் அழகு பதுமையாக அங்கே வந்தாள் மீனா….
வாவ் அண்ணி நீங்க போட்டோல இருக்கிறத விட நேர்ல சூப்பரா இருக்கீங்க, நித்யா இப்படிக்கூறவும் மீனாவின் கன்னத்தில் செம்மை படர்ந்து அவளை இன்னும் அழகாக காட்டியது☺️, மித்ரன் கொஞ்சம் கிரங்கித்தான் போனான்.
மாப்பிளைக்கு பொண்ண பிடிச்சிருந்தா மத்த விஷயமெல்லாம் பேசிடலாம், ஒரு வழியாக சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டார் கனகராஜ் மீனாவின் அப்பா.
போச்சு என்னை புடிக்கலைனு எல்லார் முன்னாடியும் சொல்ல போறாங்க, என்னோட மானம் போக போகுது, நிச்சயம் என்ன பத்தி கேவலமா தான் சொல்லுவாங்க, அவன் இப்படி தான் கூறுவான் என்று மீனா முடிவே பண்ணிவிட்டாள். ஆனால் அவனோ நா மீனாவிடம் கொஞ்சம் தனியா பேசணும் என்று கூறிவிட்டான்.
முதலில் பெரியவர்கள் யோசித்தாலும் பின்னர், இருவரும் தனிமையில் பேச அனுமதித்தனர். மீனாவும் சிறு தயக்கத்துடனே மித்ரனை தன் அறைக்கு அழைத்து சென்றாள்.
ப்ரதாப்பும் ஹனியும் யாருக்கும் தெரியாமல் கண்ணாலே பேசிக்கொண்டனர், அதை நித்யாவின் கண்களும் கவனிக்கத்தான் செய்தது….
என்ன ஹனி நீயும் ப்ரதாப்பும் சண்டே மீட் பண்ணனும்னு பிளான் பண்ணீங்கல்லா, இப்போ ரெண்டு பேரும் மீட் பண்ணிட்டீங்க, உங்களுக்கு ஹாப்பி தான??? ஒன்னும் தெரியாதது போல் கேட்டாள் நித்யா…
ஏய் நித்து உனக்கு கடற்கரைல மீட் பன்றதும் வீட்டுல மீட் பன்றதும் ஒன்னா?? கடுப்புடன் கேட்டாள் தேன்கிரெனா…
நீங்க ரெண்டு பேரும் நண்பர்கள் தான ஹனி ??
ஆமா என்பது போல் தலையை ஆட்டினாள் தேன் கிரெனா..
அப்ரோம் என்ன நண்பர்கள் எங்க மீட் பண்ணாலும் ஒன்னு தான்😜…
ஆஆஆஆ ஆமா அதுவும் சரி தான், ரொம்ப தேங்க்ஸ் நித்து எங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண வச்சதுக்கு 🙏🙏கையெடுத்து கும்பிட்டாள் ஹனி….
யுவர் ஆல்வேஸ் வெல்கம் மை டியர் ஹனி😉…
இங்கே அறையில் வந்த இருவரும் ஏதும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே நின்றிருந்தனர்.
மீனாவோ பதட்டத்தின் உச்சத்தில் இருந்தாள்.
மீனா நீ என்கிட்ட போன்ல உன்ன பிடிச்சிருக்கானு கேட்டல்ல, அதுக்கு பதில் சொல்ல தான் தனியா கூப்டேன், அதனால நீ பதட்டப்பட வேண்டாம்….
அவளிடம் அமைதி நிலவியது…..
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அன்ட் ஐ ஐ ஐ லவ் யூ…..
பொய் சொல்லாதீங்க உங்களுக்கு என்னை பிடிச்சிருந்தா நீங்க நா போன்ல கேட்கும்போதே சொல்லிருப்பிங்க, இப்போ சொல்றது என் மேல இரக்கப்பட்டு தான், நா ஏற்கனவே சொல்லிட்டேன் என் மேல இரக்கப்பட்டு வர அன்பு ஏதும் எனக்கு வேண்டாம் பொரிந்து தள்ளினாள் மீனா…..
சின்ன பிள்ளை மாதிரி கோபப்படுற மீனு, அன்னைக்கு என்னோட போன் சுவிட்ச்ஆஃ ஆகுற அளவுக்கு நீயும் என்னோட தங்கச்சியும் என்கிட்ட கதை சொல்லிருக்கீங்க. அப்புறம் உனக்கு போன் பண்ணி சொல்லிருக்கலாம்தான் ஆனால் உன்னை புடிச்சிருக்குனு உன்னோட கண்ண பாத்து சொல்லணும்னு தோணுச்சு…….
என்னால நம்ப முடியல யாராவது போன் சுவிட்ச்ஆஃ ஆகுற அளவுக்கு சார்ஜ் வைச்சிருப்பாங்களா???
மீனாவும் அவனை நேசிக்க ஆரம்பித்துவிட்டாள் என்பது அவள் அவன்மீது காட்டும் கோபத்தின் மூலம் புரிந்து கொண்டான்…
முதல் தடவை என்னோட போன்ல சார்ஜ் இல்லியேனு பீல் பண்னேன் 😒. நா ரெண்டு நாளைக்கு ஒரு தடவை தான் சார்ஜ் போடுவேன் அதுவும் நித்துகுட்டி கூட பேசுரத்துக்குத் தான்….
இல்லை இல்லை நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் அதை ஏற்று கொள்ள என் மனம் மறுக்கிறது, நீங்க என் மேல இரக்கப்பட்டு தான், மீனாவிற்கு கண்ணீரே வந்துவிடும் போல் இருந்தது…
அப்போ இன்னும் உனக்கு என் மேல நம்பிக்கை வரல அப்படித்தான????
ஆமாம் என்று சொல்ல அவள் வாயை திறக்க போனால், கண்மூடி கண் திறப்பதற்குள் அவளது வாய் மித்ரனின் வாய்க்குள் இருந்தது😝…
(சொன்னா நம்பனும் சொல்ல சொல்ல கேட்கலனா இப்படி தான் நிரூபிக்க முடியும்)
சிறிது நேரம் கழித்து அவள் இதழ்களை விட்டவன், இப்போவாது என்னை நம்பிரியா இல்ல………
(அவன் இழுப்பதை பார்த்தால் அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆய்டான் போல)
இல்ல இல்ல நா நம்பரேன், வேகமாக தன் மறுப்பை தெரிவித்தாள் மீனா….
சரி வா நாம வெளிய போகலாம், ரொம்ப நேரம் உள்ளையே இருந்தா எல்லாரும் தப்பா நினைப்பாங்க, எதுவும் நடக்காதது போல் கூறிவிட்டு கதவை திறக்க போனான் மித்ரன்.
அப்போ நா சமீர காதலிச்சத நெனச்சீ உங்களுக்கு எந்த வருத்தமும் இல்ல தானே. போறவனை தடுத்து நிறுத்தினாள் மீனா…
நீங்க ரெண்டு பேரும் காதலிக்கவே இல்ல, அப்பறோம் எதுக்கு நா அத நினைச்சி வருத்தப்படனும் அவள் இரண்டு தோள்களிலும் தன் இரண்டு கைகளை போட்டபடியே கூறினான்…
நீங்க என்ன சொல்றிங்க எனக்கு புரியல குழப்பமாக கேட்டாள் மீனா…
உங்க ரெண்டு பேருக்கும் உங்களோட நண்பர்கள் கிண்டல் பண்ணதுக்கப்புரம் தான் காதலிக்கனும்னே தோணுச்சு, அதுவும் இல்லாமா உனக்கு அன்பு காட்ட ஒருத்தர் தேவ பட்ருக்காங்க அது தான் உன்னை தப்பான வழியில் செல்ல தூண்டிருக்கு. காதல் கிண்டல் பன்றதுக்காகவோ இல்ல வேற எதுவோ எதிர் பாத்தோ வரக்கூடாது, அது தான வரணும்….
மித்ரன் கூற கூற மீனாவும் தெளிவடைய தொடங்கினாள்….
நீ அவனை உண்மையாகவே காதலிச்சிருந்தா, அவன மறந்துருக்கவும் மாண்ட, நா உனக்கு முத்தம் குடுக்கும் போது எதிர்ப்பு எதுவும் காட்டாமலிருந்திருக்கவும் மாண்ட, நீயும் என்னை காதலிக்காமல் இருந்திருந்தால் நா முத்தத்தை பற்றி பேசும் போது உனக்கு கோபம் வராம இப்படி வெட்கமும் வந்திருக்காது….
மீனா மேலும் வெட்கப்படுவதை பார்த்துவிட்டு சரி சரி இதுக்கப்புறமும் நாம உள்ள இருந்தா அது சரியா வராது வா வெளிய போகலாம்…
மித்ரன் வெளியே வந்த பிறகு, எனக்கு மீனாவ ரொம்ப பிடிச்சிருக்கு வரதட்சனையாக ஒரு ரூபாய்க்கூட தர வேண்டாம், கல்யாண செலவு அனைத்தும் நாங்களே பாத்துகிறோம் என்று கூற, ஸ்ரீதேவிக்கு வாயெல்லாம் பல்லாகி போனது….
வீட்டிற்கு வந்த பிறகு நித்யாவிடம் மட்டும் மீனாவின் காதல் கதையை சொன்னான் மித்ரன்…
அதன் பிறகு மித்ரன் மற்றும் மீனா இருவரும் போனிலே தங்கள் காதலை தொடர்ந்தனர்.
நித்து நாளைக்கு அம்மாவுக்கு பர்த்டே நம்ம பிரண்ட்ஸ் எல்லாரையும் கூப்டுருக்கேன், நீயும் கண்டிப்பா வரணும் காரணம் ஏதும் சொல்லாத ஓகே, கண்டிப்புடன் கூறினான் பாபு…
ஓகே பாஸ் கண்டிப்பா வரேன் ஆனா சாப்பாட்டுக்கு பிரியாணி தான் எனக்கு வேணும் இதுக்கு ஒத்துக்கிட்டா நா கண்டிப்பா வரேன்….
உனக்கு பிரியாணி பிடிக்கும்னு எனக்கு தெரியாதா, நாளைக்கு பிரியாணிதான் அங்க மெயின் டிஷ், நீங்க இருக்ற ஹாஸ்டல்கு நா கார் அனுப்றேன் சீக்கிரம் வந்துருங்க என்றான் பாபு.
ஓகே ஓகே வரேன்…..
அடுத்த நாள் பாபுவின் வீடே ஆட்டமும் பாட்டுமுமாக கலை கட்டியது. பாபுவின் அம்மா அப்பா அவனது அண்ணன் அண்ணி என அனைவருக்கும் நித்யாவை பிடித்து போனது.
பாபுவின் அம்மாவோ எனக்கு நித்யாவ ரொம்ப பிடிச்சிருக்கு நீ எப்போ அவகிட்ட உன்னோட காதல சொல்ல போற, இப்போவே எல்லார் முன்னாடியும் சொல்லிரு நித்யா கண்டிப்பா ஒத்துக்கொள்வாள் என்று கூறிக்கொன்டே இருந்தாள்…
அம்மா நித்துகூட ஒவ்வொரு தடவையும் பேசும் பொழுதும் என்னோட காதல சொல்ல துடிக்கத்தான் செய்கிறேன், ஆனால் அவளுக்கு என் மேல காதலே இல்ல நட்பாக தான் என்னிடம் பேசுறா, பாப்போம் எப்போ சொல்றதுக்கு சந்தர்ப்பம் கிடைக்குதோ அப்போ சொல்ரேன் என்றான் பாபு…
அம்மா அப்பா நீங்க எல்லாரும் கண்டிப்பா என்னோட அண்ணா கல்யாணத்துக்கு வந்துருங்க, அடுத்த மாதம் 27ல தான் கல்யாணம் வந்துருவீங்கல்ல?? நித்யா பாபுவின் குடும்பத்தினரை அழைத்தாள்…
அச்சோ அன்னைக்கு இன்னொரு கல்யாண வீடு இருக்கே, நீ கவலப்படாத, பாபு உன்னோட அண்ணன் கல்யாணத்துக்கு வந்துருவான், நித்யாவிற்கு சமாதானம் கூறினார் பாபுவின் அப்பா…
அனைவரும் எதிர்பார்த்த மித்ரன் மற்றும் மீனாவின் கல்யாண நாளும் வந்தது. அழகாக அலங்கரிக்கப்பட்ட மண்டபம் அங்கு வந்திருந்த அனைவரையும் ரசிக்க வைத்தது என்றால் இங்கு பாபுவை ரசிக்க வைத்தது நித்யாவின் தோற்றம் தான்…
பெண்கள் பொதுவாக பூ வைத்தாலே அழகு தான், அதிலும் சேலை உடுத்தி பூ வைத்தால் அதை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அழகு பொங்கி வழியும், பாபுவிற்கும் வழிய தான் செய்தது…
நித்து என்னடா இப்படி இருக்கா ஆபீஸ்ல அவ இருக்றத விட இப்போ சேலையெல்லாம் கட்டி ஆளே கும்முனு இருக்கா, நண்பர்களுடன் புலம்பிக்கொண்டிருந்தான் பாபு…
ஹனி சொல்லவே இல்ல பாத்தியா நீயும் ப்ரதாப்பும் ஒரே கலர்ல ட்ரெஸ் போடுவிங்கனு, அதுவும் உனக்கு பிடிச்ச மெரூன் கலர்..
அப்டிலாம் ஒன்னும் இல்ல நித்து இது தற்செயலாக நடந்தது முகத்தில் செம்மை படற கூறினாள் தேன்கிரெனா☺️.
ஓகே ஒரே கலர் டிரஸ் போட்ருக்கது தற்செயலாக நடந்ததுனு வச்சிக்கலாம், ஆனால் இப்போ ப்ரதாப் உன்னை சைட் அடிக்கிறது மட்டும் தற்செயல்னு சொல்லிராத ஹனி..
அவளும் நோக்கினாள் அவனும் நோக்கினான்…
போதும் போதும் ரெண்டு பேரும் பாத்துட்டு மட்டும் இருந்தா எப்போ உங்கலோட காதலை சொல்ல போறிங்க…
எனக்கு ப்ரதாப்ப பிடிக்கும் தான் அதுக்குன்னு காதல்லாம் ஒன்னும் இல்ல, ஆனால் அவருக்கு என் மேல காதல் இருந்தா பாக்கலாம்…
ஹனி… இத விட அழகா ப்ரதாப்ப நீ காதலிக்ரனு சொல்ல முடியாது, இப்போவே நா ப்ரதாப்ப கூப்டுறேன் நீ அவன்கிட்டையே உன்னோட காதல சொல்லிரு, ஓய் ப்ரதாப் கூப்பிடவே தொடங்கி விட்டாள் நித்யா.
ஐயோ நித்து சும்மா இரு, இதுக்கு தான் நா உன்கிட்ட இவ்ளோ நாள் இத பத்தி சொல்லவே இல்ல, ஐயோ அவங்க வர மாதிரி இருக்கு நா போறேன் ப்ரதாப் வந்தா நீயே சமாளிச்சுகோ ஓட்டமும் நடையுமாக இடத்தை விட்டு அகன்றால் தேன்கிரெனா..
அவள் போவதை சிரித்துகொண்டே பாத்துட்டு இருந்த நித்யாவின் பின் ஒலித்தது பாபுவின் குரல்..
நித்து உன்கிட்ட ஒன்னு சொல்லணும்…
ஒன்னு என்ன பத்தே சொல்லு பாபு..
கல்யாண மேடையில் தேங்காய் மேல இருக்ற அந்த தாலிய பத்திரமா பாத்துக்கோ நித்துமா, என்றான் பாபு.
என்ன ஆச்சு? எதுக்கு பத்திரமா பாத்துக்கனும் பதறி போனாள் நித்யா…
அது வந்து அந்த தாலிய எடுத்து உனக்கு கட்டிருவேனு பயமா இருக்கு, அதான் பத்திரமா பாத்துக்கோனு சொன்னேன்…
(வாவ் வாட் அ ப்ரொபோஸ் )
பாபு கூறியதை நித்யா புரிந்து கொள்வதர்கே கொஞ்ச நேரம் ஆனது, புரிந்த பின் அவள் முழி இரண்டும் வெளியே வந்துவிடும் அளவுக்கு திரு திருவென முழித்து கொண்டிருந்தாள்😲..
ஐயோ… அப்படி மட்டும் முழிக்காத நித்துமா, நீ இப்படி முழிக்கும் போதெல்லாம் எனக்கு உன்ன அப்படியே கடிச்சி திங்கணும் போல இருக்கு😋😋…
ஒரு வழியாக தன்னை சகஜ நிலைக்கு கொண்டுவந்து பேச தொடங்கினாள் நித்யா. பாபு உனக்கு நா பொருத்தமானவ கிடையாது, அதுவுமில்லாம ஆபீஸ்ல எத்தனை பெண்கள் உன்னை லவ் பன்றாங்கனு தெரியுமா.
ஆபீஸ்ல எத்தனை பேர் என்ன லவ் பன்றாங்கனு தெரிஞ்ச உனக்கு, நா உன்னை லவ் பன்றது மட்டும் தெரியாமலிருந்திருக்கு.
நித்து ஒழுங்கா உனக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையானு மட்டும் சொல்லு, நா உனக்கு பொருத்தமானவ கிடையாது, நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோனு மட்டும் சொல்லிராத ஓகே..
எனக்கும் உன்ன பிடிக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும், ஆனா அது ஜஸ்ட் பிரண்ட்டாதான், நா உன்கூட கடைசி வரைக்கும் ஒரு நல்ல பிரன்ட்டா இருக்கணும்னு ஆசபடுறேன், இப்படி காதல் அது இதுனு சொல்லி நம்மளோட பிரண்ட்ஷிப்ப கெடுத்துக்காத சற்று எரிச்சலாகவே பேசினாள் நித்யா…
உனக்கு என்னை ரொம்ப பிடிக்கும்னு எனக்கும் தெரியும், உனக்கு நா நல்ல தோழனாக, காதலனாக, கணவனாக எல்லாமுமாக இருப்பேன், என்னோட வீட்டுல எல்லார்கிட்டயும் உன்ன பத்தி சொல்லிட்டேன், அவங்களுக்கும் உன்ன ரொம்பவே பிடிச்சிருக்கு உன்ன நல்லாவும் பாத்துப்பாங்க, ப்ளீஸ் என்னோட லவ்வ அக்ஸ்ப்ட் பண்ணு கெஞ்சலில் இறங்கினான் பாபு…
வாட் நீ உன்னோட வீட்டுல எல்லார்கிட்டயும் சொல்லிட்டியா யார கேட்டு இப்படி சொன்ன, அவளுக்கு கோவமே வந்துவிட்டது..
எனக்கு தெரியும் நீ எப்படியும் என்ன லவ் பண்ணுவன்னு, இல்லனாலும் உன்ன எப்படியாவது லவ் பண்ண வச்சிருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு அதான் நா வீட்டுல எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன் கூலாக சொன்னான் அவன்…
நா என்னோட அண்ணா பாக்கிற பையன தான் கல்யாணம் பண்ணிப்பேணு அண்ணாவுக்கு சத்யம் பண்ணிருக்கேன், அதனால தயவு செய்து என்ன டிஸ்டர்ப் பண்ணாத, இப்போது கெஞ்சுவது நித்யாவின் முறையானது…
ஓ உன்னோட இதயமெனும் பூட்டுக்கு சாவி மித்ரன் தான் வச்சிருக்காங்கலா, இப்போவே போய் சாவியை வாங்கிட்டு வந்து பூட்டை தொறக்க போரேன்…
ஐயோ கொஞ்சம் சும்மா இரு பாபு, அண்ணனுக்கு இன்னைக்கு கல்யாணம், நீ அவன டிஸ்டர்ப் பண்ணாத வேணும்னா இன்னொரு நாள் பேசிக்கோ,
சரி நா உன்னோட அண்ணாவிடம் பேசி சம்மதம் வாங்கிய பின்பு நீ என்னை லவ் பண்ணா போதும் அதுவரைக்கும் நாம நண்பர்களாகவே இருப்போம், நீ இப்போ போய் கல்யாண வேலையெல்லாம் பாருடி என் செல்லக்குட்டி நித்துமா, என்று கூறிக்கொண்டே அங்கிருந்து அகன்றான் பாபு…
அவன் போன பின்பு தான் நித்யாவாள் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது, பாபு அண்ணாவிடம் ஏதாவது சொல்லி அண்ணா என்னை தவறாக நினைத்துக்கொண்டால் நா என்ன பண்ணுவேன், கடவுளே அண்ணனுக்கு என் மேல எந்த கோபமும் வராமல் பாத்துக்கோ, நித்யாவின் சிந்தனைகள் பந்தயக் குதிரை போல் ஓடி கொண்டிருந்தது அதற்கு கடிவாளம் போட்டது கற்பகத்தின் குரல்…
ஏய் நித்து இங்க நின்னு என்ன கனவு கண்டுட்டு இருக்க அங்க கல்யாண வேலை எவ்ளோ இருக்கு வா வந்து உதவி பண்ணு…
அதன் பின்பு கல்யாண வேலைகள் வேக வேகமாக நடந்தது மாப்பிள்ளையையும் பெண்ணையும் மேடையில் உட்கார வைத்தனர், மீனுகுட்டி நீ ரொம்ப அழகா இருக்க கஷ்டப்பட்டு என்னை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா, மித்ரன் இப்படி கூறவும் மீனாவின் முகத்தில் செம்மை படர்ந்து அவளை இன்னும் அழகாக காட்டியது…
இவங்க ரெண்டு பேரோட ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லா இருக்குதுல்லா ஹனி, ரொம்ப தேங்க்ஸ் உன்னால தான் எனக்கு இவ்ளோ அழகான நல்ல அண்ணி கிடைச்சிருக்காங்க மனமுவந்து நன்றி கூறினாள் நித்யா…
எனக்கு தேங்க்ஸ்லாம் வேண்டாம் அதுக்கு பதிலா 500ரூபாய்கு சாக்லேட் வாங்கி தா போதும் என்றாள் தேன்கிரெனா.
சாக்லேட் எதுக்கு ஹனி நா அதுக்கு பதிலா உனக்கு ப்ரதாப்பையே செட் பண்ணி தரேன், இந்த கல்யாண மண்டபத்திலிருந்து நீங்க ரெண்டு பேரும் காதல் ஜோடியா தான் வெளிய போவீங்க அதுக்கு நா உத்ரவாதம்.
நித்யா இப்படி கூறியதும் ஹனிக்கு வெட்கமே வந்துவிட்டது😊.
இப்போமே இவ்ளோ வெட்கம் வேண்டாம் ஹனி, அப்புறமா ப்ரதாப் முன்னாடியும் வெட்க படுறத்துக்கும் கொஞ்ச மிச்சம் வச்சிக்கோ என்றாள் நித்யா…
நித்யா கூறியது போலவே ப்ரதாப்பிடம் ஹனியின் காதலை பற்றி பேசி இருவரையும் காதல் ஜோடிகளாகவே ஆக்கிவிட்டாள்…
மித்ரன் மற்றும் மீனா இருவருக்கும் கல்யாணமும் முடிந்து மற்ற சடங்குகள் அனைத்தும் கேலியும் கிண்டலுமாகா நடந்து முடிந்து இரவு வேலையும் வந்தது.
அளவான அலங்காரத்துடன் இதயம் பட படக்க மித்ரனோட அறைக்கு வந்தாள் மீனா. அவளை அப்படியே பூ போல் கட்டிலில் இருந்த பூ மேல் அமர வைத்து பின்பு பேச தொடங்கினான் மித்ரன்.
மீனுகுட்டி உன்னை இப்போமே எடுத்துக்கணும்னு தான் எனக்கு ஆசை, ஆனால் அதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் பேசணும், பேசவா???
மித்ரன் கேட்டதற்கு மீனாவிடமிருந்து வந்த பதில் ம்ம்ம் மட்டுமே, வேறன்ன அவளால் பேச முடியும்…
உன்கிட்ட ரெண்டு முக்கியமான விஷயம் பேசணும், ஒன்னு உன்னோட வீடு, இதுக்கப்புரம் நீ உன்னோட வீட்டுக்கு போகக் கூடாது, இது நா ஆணாதிக்கத்துல சொல்லறேனு மட்டும் நினைக்காத, உன்னை முக்கியமா நினைக்காத உன்னை கஷ்டப்படுத்துர இடத்துல நீ இருக்க கூடாது , இத நா உன் மேல வச்சிருக்கிற காதல்ல சொல்ரேன்னு நெனச்சாலும் சரி இல்ல எப்படி வேணாலும் நெனச்சாலும் சரி ஆனா நீ மறுபடியும் அந்த வீட்டுக்கு போக கூடாது என்றான் மித்ரன்.
நா உங்களையே நம்பி வந்துருக்கேன், நீங்க என்னை சாக சொன்னாக்கூட சந்தோசமா செத்து போவேன் அப்படியிருக்க இத பண்ணமான்டெனா வீர வசனம் பேசினாள் மீனா.
இரண்டாவது என்னோட தங்கச்சி தான், அவளுக்கு வாய் கொஞ்சம் அதிகம், அவ உன்மேல ரொம்ப பாசமும் வச்சிருக்கா அதிக அன்பு ஒரு நாள் வெறுப்பை தரும் வெறுப்பு கோபத்தை உண்டாக்கும் என் நித்துகுட்டி மேல யாராச்சும் கோப பட்டா என்னால பொறுத்துக்க முடியாது, நா என்ன சொல்ல வரேன்னு புரியுது தானே, நீ எப்பவுமே நா முக்கியமா நித்யா முக்கியமானு மட்டும் என்னிடம் கேட்டுறாத ப்ளீஸ்…
நித்யாவினால் தான் எனக்கு இந்த வாழ்கையே கிடைச்சிருக்கு, அப்படியிருக்க நா அவ மேல கோபபடுவேணு உங்களுக்கு எப்படி தோணுச்சு, நித்யாவும் எனக்கு தங்கச்சி மாதிரி தான் நா அவளை குழந்தை மாதிரி பாத்துக்குறேன் போதுமா, என்றால் மீனா.
மீனா கூறிய இரண்டையுமே பின்பற்ற போவதில்லை என்று தெரியாமல் அவள் கையை பிடித்து நன்றி கூறிக்கொண்டிருந்தான் மித்ரன்.
சரி அவ்ளோ தான இல்ல இன்னும் எதாவது சொல்லணுமா ஏன் கேட்குரேனா எனக்கு ரொம்ப தூக்கமா வருது சீக்கிரம் தூங்குவோமா என்றாள் அவள்.
மீனா கூறியதில் எந்தவித உள் நோக்கமும் இல்லை, அவளுக்கு நிஜமாகவே தூக்கம் தான் வந்தது, ஆனால் மித்ரனோ அதை வேறு விதமாக புரிந்து கொண்டு அவளை இழுத்து அனைத்து அவள் முகம் முழுதும் முத்த ஊர்வலம் நடத்தினான் பின்பு அவள் சிவந்த உதடுடுகளை மேலும் சிவப்பாக்க ஆவல் கொண்டு அதற்கான வேலையில் இறங்கினான் (முத்தமெனும் கம்பளியை ஏந்தி வந்து உன் இதழை என் இதழும் போர்த்தி விடும்😘) அப்புறம் கட்டிலில் தூவப்பட்ட பூவின் மீது பூ போன்ற அவளை மென்மையாக படுக்க வைத்து, அவளை மென்மையாக ஆட்கொண்டான் மித்ரன், மீனா அடுத்து பேச அவன் வாய்ப்பே கொடுக்க வில்லை அவள் வாயையும் விட வில்லை.அப்புறம் அப்புறம் அப்புறம் என்ன இருவருக்கும் சாந்திமுகூர்த்தமும் முடிந்தது அவர்களுக்கு காலை பொழுதும் அழகாக விடிந்தது….
இங்கே வேலைக்கு வந்த நித்யாவால் எப்பொழுதும் போல் பாபுவுடன் சகஜமாக பேசுவதற்கே ரொம்ப நாள் ஆச்சு, ஹனியிடம் மட்டும் பாபு தன்னை காதலிப்பதை பற்றி கூறினாள்.
ஒரு மாதம் கழித்து ஹனி, ப்ரதாப், கற்பகம், மித்ரன், மீனா மற்றும் நித்யா அனைவரும் சேர்ந்து கன்னியாகுமாரிக்கு சென்றனர், அங்கு தான் மித்ரன் மற்றும் மீனா இருவருக்கும் சண்டைக்கான விதை விதைக்கப்பட்டது…
கோவிலுக்கும் கடைகளுக்கும் சென்று அனைவரும் பொழுதினை கழித்தனர், ப்ரதாப்பும் ஹனியும் யாருக்கும் தெரியாமல் கைகோர்த்து நடந்தனர், கைகோர்த்து நடக்கும் போது மனதில் ஏற்படும் புரியாத உணர்வை இருவரும் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தனர். நித்யாவோ கடல் அலையுடன் பொழுதினை கழித்துக்கொண்டிருந்தாள்.
அண்ணி நீங்களும் என்கூட கடல்ல குளிக்க வாங்க என்று கேட்டுக்கொண்டே ஈர உடையுடன் அங்கே வந்தாள் நித்யா.
நா வேற டிரஸ் எடுத்துட்டு வரல நித்யா என்றாள் மீனா.
மீனுகுட்டி நீயும் நித்துகுட்டியுடன் குளிக்க போ, டிரஸ் ஈரமாய்டுச்சினா வெயில்ல கொஞ்ச நேரம் நடந்தா காஞ்சிடும் என்றான் மித்ரன்.
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம், நீங்க நித்யாவையும் சரி மீனா அண்ணியையும் சரி ரெண்டு பேரையும் குட்டினு சொல்லி தான கூப்டுரிங்க அதுக்கு எதாவது ஸ்பெஷல் ரீசன் இருக்கா என்று கேட்டாள் தேன்கிரெனா.
ரீசன்லாம் ஒன்னும் பெருசா இல்ல அண்ணனுக்கு யார ரொம்ப்ப பிடிக்குதோ அவங்கள குட்டினு சொல்லி தான் கூப்டுவான் என்று முந்தியடித்துக் கொண்டு பதில் சொன்னாள் நித்யா..
ஓ அப்போ மீனா அண்ணி வந்த கொஞ்ச நாள்லியே உன்னோட இடத்தை பிடிச்சிட்டாங்களா விளையாட்டாக கேட்டாள் தேன்கிரெனா.
என்னோட நித்துகுட்டி இடத்த யாராலையும் பிடிக்க முடியாது, நித்துகுட்டிக்கு அடுத்து தான் மீனுகுட்டி என்று மித்ரன் கூறியதற்கு மீனாவாள் பேருக்கு மட்டும் தான் சிரிக்க முடிந்தது.
அவனையே நம்பி வந்த மீனாவுக்கு, நானும் மித்ரனுக்கு முக்கியமாக இருக்கணும் என்று தோன்றாமல் நான் மட்டும் தான் அவனுக்கு முக்கியமாக இருக்கணும் என்ற எண்ணம் முதல் முதலாக தோன்றியது.
அதன் பிறகு மீனாவாள் எப்பொழுதும் போல் எல்லாருடணும் பேச முடியவில்லை, என்னாச்சு மீனுகுட்டி ஏன் ஒரு மாதிரி இருக்க என்று மித்ரன் கேட்டதற்கு தலைவலி என்று கூறி சமாளித்தாள் மீனா.
நாட்கள் அதன் போக்கில் வேகமாக சென்றது நித்யாவும் வார வாரம் சனிக்கிழமை காலையிலேயே வந்துவிடுவாள் அடுத்த நாள் இரவு தான் சென்னைக்கு மீண்டும் பயணமாவாள், இது மித்ரனுக்கு பெருமகிழ்ச்சயென்றால் மீனாவுக்கு பெரும் அவஸ்த்தையாக இருந்தது, காரணம் நித்யா வரும் வேளைகளில் பெரும்பாலான நேரங்களை மித்ரன் அவளுடன் செலவழிப்பது தான், ஒரு நாள் அவன் படுக்கை அறைக்கு வர 12 மணியே ஆகிவிட்டது சும்மா இருப்பாளா மீனா தன் மனதில் இருக்கும் அனைத்தையும் கொட்ட தொடங்கிவிட்டாள்.
உங்க தங்கச்சிக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா புதுசா கல்யாணம் முடிச்சவங்களாச்சேன்னு கொஞ்ச நேரம் நம்மல தனியா இருக்க விடுறாளா, வந்ததிலிருந்து அண்ணா அண்ணானு உங்க பின்னாடியே சுத்துறா, இப்போ கூட நா தனியா இருப்பேணு அவளுக்கு தோணுதா இவ்ளோ நேரம் உங்கள பிடிச்சி வச்சி பேசிட்டு இருக்கா, சே சரியான இம்சை.
மீனுகுட்டி என்ன பேசுறோம்னு தெரிந்து தான் பேசுறியா, அவ வாரத்துக்கு ஒரு தடவை தான் வரா அதான் அவகூட அதிக நேரம் செலவிடுறேன், இன்னைக்கு நித்துகுட்டி என்னை சீக்கிரமா போக தான் சொன்னா நா தான் அவளை பிடித்து வைத்து பேசினேன் அதுவுமில்லாம அவ உன்னையும் இருக்க சொன்னா நீ தான் கேட்காம வந்துட்ட, நா உன்னிடம் ஏற்கனவே சொல்லிருக்கேன் நித்துகுட்டி மேல கோபப்படாதன்னு, அப்போ ஏதோ பெருசா சொன்ன இப்போ இப்படி பேசுற, பொறுமை இழந்து பேசினான் மித்ரன்.
ஆமா இவருக்கு இவரோட தங்கச்சிய பத்தி சொன்னா மட்டும் உடனே கோபம் வந்துடுமே என்று நினைத்துக்கொண்டு, சாரி என் மேல தான் தப்பு நா தான் நித்யாவ பற்றி தப்பா புரிந்துகொண்டேன், பொய்யாக வறுத்தப்பட்டால் மீனா…
வாரம் வாரம் நித்யா வருவதும் மீனா மித்ரனிடம் அவளை பற்றி குறை கூறுவதும் மித்ரன் கஷ்டப்பட்டு தன் பொறுமையை கடை பிடிப்பதுமாக நாட்கள் கடந்தது, மீனாவிற்கு நித்யா மேல் ஏற்படும் பொறாமைக்கும் கோபத்திற்கும், அவள் மித்ரன் மீது வைத்திருக்கும் அதீத அன்பு தான் காரணம் என்று அவனுக்கும் தெரியும், இருந்தாலும் மீனா நித்யாவைப் பற்றி ஏதாவது சொன்னால் மற்றவை எல்லாம் மறந்து அவனுக்கு அவள் மீது கோபம் மட்டும் தான் முந்தியடித்துக்கொண்டு வருகிறது.
ஒரு நாள் நித்யாவிற்கு சந்தேகம் வந்து மித்ரனிடமே கேட்டு விட்டாள், அண்ணா அண்ணி ஏன் என்கிட்ட இப்போல்லாம் முன்னாடி மாதிரி பேசுறது இல்ல, என் மேல அண்ணிக்கு ஏதும் கோபமா, நா எதாவது தப்பு பண்ணிட்டேனா சொல்லு அண்ணா என்று பாவமாக கேட்ட நித்யாவிடம் அனைத்தையும் கூற துடித்த நாவை அடக்கினான்.
மீனுகுட்டி என்னிடமும் சரியா பேசுறது இல்ல அவளுக்கு அவ வீட்டு நியாபகம் வந்துட்டுமா, அதான் யார்கிட்டயும் ஒழுங்கா பேசுறது இல்ல, கொஞ்ச நாள்ல சரி ஆய்டுவா என்று பச்சையாக பொய்க்கூறினான்..
எப்படியோ அண்ணி பழைய மாதிரி என்னிடம் பேசுனா அதுவே எனக்கு போதும், ஆங் அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன், நா உனக்கு கல்யாணம் முடிஞ்ச சந்தோசத்துல ரொம்ப லீவு எடுத்துட்டேன்லா அதான் எனக்கு ஒரு 5 இல்ல 6 மாதம் இங்க வர முடியாத அளவுக்கு வேலை குடுத்துட்டாங்க என்று நித்யா கூறியது மித்ரனுக்கு தலையில் இடியை இறக்கியது என்றால் மீனாவுக்கோ சந்தோசத்தில் துள்ளி குதிக்கனும் போல் இருந்தது.
நித்யா சென்னைக்கு சென்ற பின் ஒரு வாரமும் மீனா மித்ரனிடம் சண்டை ஏதும் போடாமல் அவனுக்கும் நிம்மதியை மட்டும் தான் கொடுத்துக்கொண்டிருந்தால், முதல் ஒரு வாரமும் நித்யா வேலை பளுவின் காரணமாக மித்ரனிடம் போனில் குறைவான நேரம் மட்டுமே பேசினாள், ஆனால் அதற்கடுத்துவந்த நாட்களில் அண்ணனும் தங்கச்சியும் போனில் மணிக்கணக்காக பேசினர், அவர்கள் போன் சூடானதை விட மீனாவின் மண்டையே அதிகம் சூடானது🤨😠. இதுவே தினமும் தொடர மீனாவின் வயிறு எரிய 🔥ஆரம்பித்து அவளை கொந்தளிக்க வைத்தது.
அப்படி நீங்களும் உங்க தங்கச்சியும் என்ன தான் மணிக்கணக்கா பேசுவீங்களோ தெரியல, இந்த ஊர் உலகத்துல நீங்க மட்டும் தான் அண்ணன் தங்கச்சியா இருக்ற மாதிரில்லா பாச மழையை பொலிரீங்க, எனக்கும் தம்பி இருக்கான், அவன் ஒன்னும் உங்க தங்கச்சி மாதிரி போன் பண்ணி மணிக்கணக்கா பேசி நம்ம ரெண்டு பேரையும் தொந்தரவு பண்ணது கிடையாது.(ப்ரதாப் எதுக்கு மீனாவுக்கு போன் பண்ணி நேரத்தை வீணடிக்க போறான் அவன் எந்நேரமும் ஹனியுடன் அல்லவா போனில் நேரத்தை செலவிடுகிறான்) நீங்க நித்யா மேல எவ்ளோ பாசம் வச்சிருக்கிங்களோ அதை விட குறைவா தான் அவளுக்கு உங்க மேல பாசம் இருக்கு, அவளுக்கு கலயாணம் முடிஞ்சப்புறமும் இதே மாதிரி உங்ககூட கண்டிப்பா பேசமாண்டா, நா வேணா எழுதி தரேன்.
என்ன சொன்ன என்னோட நித்துகுட்டி என் மேல குறைவான பாசம் தான் வச்சிருக்காளா, அவளுக்கு அவள விட நா தான் முக்கியம் எனக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவா, அது உனக்கு சொன்னா புரியாது, அப்பறோம் என்ன சொன்ன அவ மாறிடுவாளா என்னோட நித்துகுட்டி எப்பொழுதும் யாருக்காகவும் எதுக்காகவும் மாறமாண்டா, நீ இப்படி என்கூட சண்டை போடுறது அவளுக்கு தெரியாது தெரிஞ்சா அவ்ளோ தான் உன்னை ஒருவழி ஆக்கிடுவா என்று பெருமையுடன் கூறினான் மித்ரன்…
அவன் இப்படி என்னோட நித்துகுட்டி என்று அழுத்தி கூறியது மீனாவுக்கு இன்னும் எரிச்சலை உண்டு பண்ணியது…
நீங்க சொன்ன மாதிரி உங்களோட தங்கச்சி கல்யாணத்துக்கப்புறமும் மாறாமல் இதே மாதிரி உங்களிடம் பேசுனான்னா அவளோட புருஷனும் என்னை மாதிரி பொறுமையா இருப்பானு மட்டும் நினைக்காதீங்க, (இவள மாதிரி பொறுமையாவா 😲) நீங்க வேணும்னா பாருங்க அவ கல்யாணம் முடிஞ்ச ரெண்டே நாள்ள இங்க வாழா வெட்டியா வந்து நிக்க போறா..
இதுவரைக்கும் மீனாவின் கன்னங்களை வெட்கத்தாலும் சந்தோசத்தாளும் சிவக்க வைத்த மித்ரன் இன்று முதல் முறையாக தன் அடியால் சிவக்க வைத்தான்.
இதுக்கு மேல பேசுனா அவ்ளோ தான் அவளை எச்சரித்துவிட்டு கட்டிலில் கோவமாக படுத்தான்.
திக் பிரம்மை பிடித்தது போல் கன்னத்தில் கை வைத்த படியே கட்டிலில் படுத்தால் அவள்…
மித்ரன் இதுவரை யாரையும் அடித்தது கிடையாது அதிலும் தன்னையே நம்பி வந்தவளை அடித்ததை நினைத்தும் அவள் அவனிடம் பேசாமல் இருந்ததை நினைத்தும் நொந்து தான் போனான், கற்பகத்திற்கு இவர்கள் போடும் சண்டை தெரியாமலிருக்கவும் பெரிதும் பாடு பட்டான் அவன்.
இரண்டு நாள் சென்றிருக்கும் மித்ரனே மீனாவிடம் சென்று காலில் விழாத குறையாக கெஞ்சிய பின்பு தான் அவள் மன்னித்தாள், அதுவும் ஒரு கண்டிஷன் போட்டு தான் மன்னித்தாள்.
சரி நா உங்ககூட பேசுறேன் ஆனா ஒரு கண்டிஷன், என்னோட சித்திக்கு சுகர் அதிகமாயிடுச்சி நா அவங்கள போய் பாத்துட்டு இரண்டு வாரம் கழித்து தான் வருவேன் இதுக்கு ஒத்துக்கிட்டா நா பேசுறேன்.
இவ அங்க போய் கொஞ்ச நாள் இருந்தா தான் எங்களோட அருமை தெரியும் அப்ரோம் சண்டையும் போட மாண்டா என்று தப்பு கணக்கு போட்டுவிட்டான், அவளிடம் அவள் சித்தி வீட்டுக்கு செல்ல அனுமதியும் கொடுத்துவிட்டான்…
அவன் எப்போ சம்மதம் சொல்லுவான் எப்போ கிளம்பலாம் என்று காத்திருந்தால் போல, அனுமதி கிடைத்த உடனே துணிகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள்.
இப்போ போனவள் திரும்பி வரமாண்டால் என்று அவன் உள்ளுணர்வு சொல்லியதோ என்னவோ அவளை இழுத்து அணைத்து இருக்கி கட்டிக்கொண்டு அவள் இதலோடு தன் இதழ் வைத்து அணைத்த பின்பு தான் விட்டான்….
“வாழ்கை எனும் பயணத்தில் நீயும் நானும் சந்தோசம் எனும் வண்டியில் சென்று கொண்டிருக்க
இடையில் கஷ்டம் எனும் குண்டும் குழியும் இடைவிடாமல் இருந்தால் அது கோவெர்மென்ட் பண்ண சதியோ இல்லை கடவுள் செய்த விதியோ”.
மித்ரன் என்ன தான் தினமும் மீனாவிற்கு போன் பண்ணி பாச மழையை பொழிந்தாலும் அவளுக்கு அவன் அடித்ததே மனதை அரித்துக்கொண்டிருந்தது.
மித்ரனுக்கு கெட்ட நேரமோ என்னவோ மீனாவின் முன்னால் காதலன் சமீர் வெளிநாடிலிருந்து திரும்பி வந்து விட்டான்….
சமீர் அவனை பற்றி என்னவென்று சொல்லுவது, அவன் ஒரு ஆணழகன், அதிலும் வெளிநாட்டிலிருந்து வந்தாலே தனி அழகும் கலையும் கலரும் வந்துவிட தான் செய்கிறது..
சமீர் வேறொரு நாட்டில் இருக்கும் போது மீனாவை பற்றியே நினைத்தது இல்லை தான், எப்பொழுதாவது அவள் நியாபகம் வந்தால் அவனுள் பெரிதாக ஒன்றும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை, ஊருக்கு வந்த பின்பு கூட அவளுக்கு திருமணம் ஆன செய்தியை கேட்டு பெரிதாக வருந்தவில்லை என்றாலும் முன்னாள் காதலி என்ற நெருடல் மட்டும் இருந்தது…
மீனா ஊருக்கு வந்த செய்தியை அறிந்த சமீர் அவளை தோழமையுடன் பாக்க ஆவல்கொண்டு, அவளை பார்ப்பதற்காக அவள் வீட்டிற்கு சென்றான், மீனாவை பார்த்ததும் சமீர் சிலையாகி போனான், அவள் ஏற்கனவே அழகு தான் அதிலும் பெண்களுக்கு கல்யாணம் ஆனாலே தனி அழகும் வடிவும் வந்துவிட தான் செய்கிறது, இப்போது அந்த அழகு சிலையை கண்டு தான் இவன் சிலையாகி நிற்கிறான்…
மீனா அவனை பார்த்து சினேகமாக புன்னகைத்த பின்பு தான் சமீர் சகஜ நிலைக்கே வந்தான். அதன் பின்பு சமீர் தன் எண்ணங்களுக்கு அணை போட்டு விட்டு அவளுடன் ஒரு நல்ல தோழனாக பேசினான்.
ஸ்ரீதேவிக்கு இவர்களது காதல் கதையை பற்றி ஏற்கனவே தெரியும் (மீனா மித்ரனிடம் பேசும் பொழுது ஒட்டு கேட்டாள்) அதிலும் சமீர் மீனாவை பார்த்த விதத்தைவைத்து அவளுள் கேவலமான எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது…
சே மீனாவுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சிட்டோம், கொஞ்ச நாள் பொருத்திருந்தால் இந்த சமீருக்கே கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம். நல்ல வசதியா வேற இருக்கானே, மித்ரன் வரதட்ச்சனை எதுவும் வாங்காமல் இவள கல்யாணம் பண்ணான் ஆனால் இவனோ வரதட்ச்சனை குடுத்து கல்யாணம் பண்ணுவான் போலிருக்கே, சமீர் மட்டும் மீனாவை கல்யாணம் பண்ணுனா இவன நம்ம கைக்குள்ள போட்டு வச்சி நல்ல வசதியா வாழலாம், இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல சமீருக்கு மீனாமேல இன்னும் ஈர்ப்பு இருக்கு, மீனாவுக்கும் மித்ரனுக்கும் ஏதோ சண்டை மாதிரி தான் தெரியுது இந்த ரெண்டு விஷயத்தையும் நமக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ளலாம் என்று தன் மனதில் மிக மிக மட்டமான யோசனையை ஓட விட்டபடி இருந்தால் ஸ்ரீதேவி.
நா இன்னொரு நாள் வரேன் ஆன்டி என்ற சமீரின் குரல் ஸ்ரீதேவியை வெளி உலகிற்கு கொண்டு வந்தது.
இன்னொரு நாளா என்று வாயை பிளந்தால் ஸ்ரீதேவி, நீ தினமும் இந்த வீட்டுக்கு வரணும் தம்பி, ப்ரதாப் இல்லாம வீடே கலை இழந்து கிடக்கு நீ வந்தப்புறம் தான் வீடு வீடாவே இருக்கு, ஏதாவது பொருள் வாங்கணும்னாலும் யாாரையாவது எதிர்பார்க்க வேண்டி இருக்கு (மீனா அப்பா என்ன பண்ணுவான் ), நீ தினமும் வீட்டுக்கு வந்துட்டு போனா எங்களுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்…
இப்படி வெளிப்படையாக கூறிய பின்பும் அவனால் வராமல் இருக்க முடியுமா, முதலில் பேருக்கு மீனா வீட்டுக்கு தினமும் வந்தவன் பின்பு போக போக அவர்கள் வீட்டிலே அதிகம் செலவிட்டான், அவர்கள் எதாவது வாங்கிட்டு வர சொன்னாலும் பணம் ஏதும் அவன் வாங்கமாண்டான் அதிலும் அவன் வரும் பொழுதெல்லாம் மீனாவிற்கு சாக்லேட் வாங்கிட்டு தான் வருவான் அது அவளுக்கு பிடித்திருந்தது.
ஸ்ரீதேவியும் தன் வேலையை தொடங்கிவிட்டால், தினமும் மீனாவிடமும் சமீரிடமும் மீனாவிற்கு உன்னை மாதிரி வீட்டுக்கு ஒரே ஒரு பையன் இருக்கர மாதிரி பாத்து கல்யாணம் பண்ணிருக்கலாம், இவளுக்கு நித்யா மாதிரி கொழுந்தியா இருந்திருக்கவும் மாண்டால் கணவன் மனைவிக்குள்ள எந்த பிரச்சனையும் வந்திருக்காது என்று அவளே யூகித்து கூறிக்கொண்டே இருப்பாள்…
மீனாவுக்கும், மித்ரனுக்கு தங்கை யாரும் இல்லாமல் இருந்தால் நல்லா இருந்திருக்கும் என்ற எண்ணமும் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஒரு நாள் மீனா சமீரிடமும் ஸ்ரீதேவியிடமும் அவர்களுக்கிடையே நடந்த சண்டையைப் பற்றி சொல்லியேவிட்டாள்.
இது போதுமே ஸ்ரீதேவிக்கு என்னுடைய பொண்ண அந்த மித்ரன் தினமும் அடிச்சு கொடுமை படுத்துறான் என்று முதலை கண்ணீரே வடிக்க ஆரம்பித்து விட்டாள், மீனாவும் அவன் என்னமோ தினமும் கொடுமைபடுத்த மாதிரி கண்ணீர் வடிக்க தொடங்கி விட்டாள்😭, இதில் சமீர் வந்து அவளுக்கு சமாதானம் வேறு சொன்னான்…
நாளடைவில் மீனா மித்ரனிடம் பேசுவதே குறைந்து போனது அவன் மீது காரணமே இல்லாமல் கோபம் மட்டும் அவளுக்கு அதிகமானது😠….
மீனாவும் 2வாரத்தில் வந்துவிடுவேன் என்று சொல்லி இன்றோடு 3 மாதமும் ஆகிவிட்டது, மித்ரன் நம்ம வீட்டுக்கு எப்போ வருவ என்று கேட்டால் இவளும் எதாவது நொண்டி சாக்கு சொல்லி சமாளித்துவிடுவாள், மீனா அடி வயிற்றில் எரியும் தீ குறைய குறைய ஸ்ரீதேவி பெட்ரோல் ஊற்றி கொண்டே இருந்தால் அவள் எப்படி மித்ரனிடம் போக வேண்டும் என்று நினைப்பாள்….
ஊரிலுள்ள மக்கள் சும்மா இருப்பார்களா இவர்கள் இருவரையும் இணைத்துவைத்து பேச ஆரம்பித்து விட்டார்கள், ஒரு சில பேர் இவர்களிடமே கேட்டு விட்டார்கள்.
அதுவரை சமீர்க்கும் அவள் மீது எந்த வித தப்பான எண்ணமும் வரவில்லை தான், ஊரில் உள்ளவர்கள் இவர்களை இணைத்து பேசி பேசியே அவனுள்ளும் அது போன்ற எண்ணம் துளிர் விட ஆரம்பித்து அவள் மீது ஆசையும் வந்தது..
அப்புறம் என்ன ஸ்ரீதேவி போலியாக வருந்திகொண்டிருந்தாள், என்னோட பொண்ண இப்படி ஊர்ல எல்லாரும் தப்பு தாப்பா பேசுறாங்கலே, அந்த மித்ரன் வேற இவள சும்மாவே அடித்து கொடுமை படுத்துவான், இப்போ இந்த விஷயமும் தெரிந்து விட்டால் அவ்ளோ தான் மீனாவா அடிச்சே கொன்னுருவானே ரொம்ப வருத்தம் தான் ஸ்ரீதேவிக்கு 😏.
சாரி ஆன்டி என்னால தான் உங்களுக்கு இவ்ளோ கஷ்டம் நா இனிமேல் இங்கு வரல உண்மையாகவே வருந்தினான் அவன்😔😔…
நீயும் இனி இங்கு வராமல் இருந்தா மீனாவுக்கு யாரு வாழ்க்கை குடுப்பா, தன் கேள்வியின் மூலம் சமீர் மற்றும் மீனாவின் தலையில் இடியை இறக்கினாள் ஸ்ரீதேவி.
சித்தி என்ன பேசுறீங்க சும்மா இருங்க அவளை அதட்டினாள் மீனா…
நீ சும்மா இரு மீனா உனக்கு ஒன்னும் தெரியாது, ஊர்ல எல்லாரும் எப்படி பேசுறாங்கனு தெரியுமா மித்ரனுக்கு எப்படியும் கொஞ்ச நாள்ல இந்த விஷயத்தை பற்றி தெரிய தான் போகுது, அப்பறோம் என்ன, ஒன்னு உன்கூட சேர்ந்து வாழ முடியாதுனு உன்னை விவாகரத்து பண்ணுவான் இல்லன்னா உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு போய் கொடுமைப்படுத்துவான், அவன் இப்படி தான் நடந்துகொள்வான் என்று முடிவே பண்ணிவிட்டாள் ஸ்ரீதேவி.
அதன் பின்பு அங்கு மௌனம் மட்டும் தான் ஆட்சி செய்தது….
அந்த மௌனத்தை கலைத்தது சமீர் தான், மீனா, ஆன்டி சொல்றதும் கரெக்ட் தான், மித்ரன் ஏற்கனவே உன்னை அடிக்கிறான் உனக்கு முக்கியத்துவமும் கொடுக்க மாண்டுக்கிறான், இப்போ இது வேற அவனுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் நீ கடைசி வரைக்கும் கண்ணீர் மட்டும் தான் சிந்தனும், உனக்கு என்னால தான் இந்த நிலைமை வந்துருக்கு அத நா தான் சரி பண்ணும், என்னால உன்னோட வாழ்கை கேள்வி குறியாயிர கூடாது, அதனால………… அதனால நானே உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன், முக்கி திணறி விஷயத்திற்கு வந்தான்.
என்ன பேசுறோம்னு தெரிஞ்சி தான் பேசுறீங்களா எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி, சிறிது கோபத்துடன் கூறினாள் மீனா.
சோ வாட், நா இருந்த நாட்டுல இதெல்லாம் சாதாரணம், கல்யாணம் முடிஞ்ச ரெண்டு வாரத்லியே வேறொருத்தனை கல்யாணம் பண்ணிக்கராங்க என்று சமீர் பேசிக்கொண்டிருக்கும்போதே மீனா குறுக்கிட்டாள்.
லுக் சமீர் இது இந்தியா, அதுவுமில்லாம நா இன்னும் மித்ரனிடம் நீங்க ஊருக்கு வந்ததையே சொல்லல, நா முதலில் அவரிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்ல போரேன், அதுக்கப்புறம் வேற என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் என்று கூறிவிட்டு மித்ரனிடம் பேச கைபேசியை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தால் மீனா.
ஸ்ரீதேவியும் தன்னுடைய பிளான் எல்லாம் சொதப்பிடுமோ என்று பயந்து தான் போனால்.
இங்கே உள்ளே வந்த மீனாவோ மித்ரனுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்து அது தோல்வியில் முடிய கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள், அவள் விடாமல் முயற்சி செய்து கொண்டிருந்தாள் ஒரு வழியாக மித்ரனும் போனை எடுத்தான்.
சாரி சாரி மீனுகுட்டி ரொம்ப முக்கியமான விஷயம் அதான் உன்னோட போனகூட அட்டென்ட் பண்ணாம பேசிட்டு இருந்தேன், இப்போ சொல்லு எதுக்கு இவ்ளோ நேரம் விடாமல் போன் பண்ணிட்டு இருந்த அவளின் மனநிலை தெரியாமல் கூலாக பதில் கூறினான் மித்ரன்.
நா இங்க ஒருத்தி உங்களுக்கு பைத்தியகாரி மாதிரி போன் பண்ணிட்டு இருக்கேன், நீங்க கூலா பதில் சொல்ட்ரீங்க அப்படி என்ன முக்கியமா பேசிக்கிட்டு இருந்திங்க.
ஓகே ஓகே டென்ஷன் ஆகாத சொல்றேன், நித்துகுட்டியோட பிரன்ட் பாபு அவள லவ் பன்றானாம், அதை அவளிடம் சொல்லிருக்கான், அவளும் என்னோட அண்ணன் யார கல்யாணம் பண்ண சொல்ராங்கலோ அவன தான் லவ் பண்ணுவேனு சொல்லிட்டா, அதான் பாபு எனக்கு போன் பண்ணி சம்மதம் கேட்டான், அவனிடமும் அவனோட குடும்பத்தினரிடமும் பேசுனேன், அதுனால தான் இவ்ளோ நேரம் ஆச்சி உன்னோட போனையும் எடுக்கல என்று பெருமையுடனும் சந்தோசத்துடனும் கூறினான் அவன்.
ஓ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டீங்களா கடுப்புடன் கேட்டாள் மீனா..
அதெப்படி உடனே சம்மதம் சொல்ல முடியும், அவனோட குடும்பம் நல்ல குடும்பமா தான் தெரியுது இருந்தாலும் பாபுவ பற்றி விசாரித்த பிறகு சொல்லலாம்னு ஒரு வாரம் கழிச்சு சொல்ரேனு சொல்லிட்டேன் இன்னும் அவன் குரலில் சந்தோசம் தாண்டவம் ஆடிக்கொண்டு தான் இருந்தது.
அன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் போன்ல பேசிட்டு இருக்கும் போது உங்களோட தங்கச்சி போன் பண்ணானு என்னோட போன கட் பண்ணிங்க, இன்னைக்கு நா இவ்ளோ நேரமா போன் பண்ணிருக்கேன் உங்களுக்கு அட்டென்ட் பண்ணனும்னு தோணலலா அவள் குரலில் கோபம் தாண்டவம் ஆடியது.
ஐயோ மீனுகுட்டி நா இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன், நீ சண்டை போடுற மூடுல இருக்கனு தெரியுது, ப்ளீஸ் சண்டை போட்டு என்னோட மூட ஸ்பாயில் பண்ணிராத.
நா சண்டைக்கு எப்போவுமே ரெடியா இருக்கிற மாதிரில்ல பேசுறீங்க, என்னால உங்களுக்கு கஷ்டம் மட்டும் தான் அப்படி தான நீங்க சொல்ல வரீங்க அவனை திட்டுவதற்கு மீனா ரெடி ஆகிட்டு இருக்கும் போது மித்ரன், மீனுகுட்டி ஒரு நிமிஷம் நித்யா போன் பன்றா நா அப்ரோம் உன்ன கூப்டுறேன் என்று பொய் சொல்லிவிட்டு அவளது இணைப்பை துண்டித்தான் மித்ரன்.
அவள் திட்டுவதை கொஞ்ச நேரம் பொருத்துக்கொண்டு கேட்டிருந்தால், அவன் இனி வரும் காலங்களில் துன்பத்தை மட்டும் சுமந்து கொண்டிருந்திருக்க மாண்டான்….
மித்ரன் போனை வைத்த பின்பு சமீர் மற்றும் ஸ்ரீதேவி இருக்கும் இடத்திற்கு வந்த மீனாவோ அவன் மீது இருக்கும் கோபத்தில், நா பேசிட்டு இருக்கும் போதே இணைப்பை துண்டிச்சிட்டு போறிங்கல்ல, இனி நீங்க எனக்கு போன் பண்ணும் போது நா இணைப்பை துண்டிக்றேன் போன் இணைப்பை மட்டும் இல்ல உங்களோட இணைப்பையும் தான் என்று மனதிற்குல் கருவிகொண்டு சமீரை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டால் மீனா.
சமீர்க்கும் ஸ்ரீதேவிக்கும் வாயெல்லாம் பல்லாக தான் இருந்தது.
சமீருக்கு தன்னுடைய பழைய காதலி கிடைத்துவிட்டாள் என்ற சந்தோசம் மட்டும் தான் இருந்ததே தவிர அவள் இன்னொருவருடைய மனைவி என்ற எண்ணமே அவனுக்கு தோன்றவில்லை, காரணம் அவன் இவ்ளோ நாளாக இருந்த நாட்டின் கலாச்சாரம் அப்படி, நம்மக்களுக்கு நல்லதை கற்றுக்கொள்ள தான் லேட்டாகும் கெட்டதை அல்ல.
சமீர் அவனுடைய வீட்டுக்கு சென்றான், அங்கே அவனுடைய அம்மாவும் அப்பாவும் சோகத்தில் இருந்தனர்.
என்னம்மா என்னாச்சு நீயும் அப்பாவும் ஒரு மாதிரி இருக்கீங்க என்றான் சமீர்.
சமீர், உன்னையும் மீனாவையும் இணைத்து ஊர்ல எல்லாரும் தப்பா பேசுறாங்க இனியும் நீ அங்க போனா நல்லா இருக்காது, பாவமாகவும் வருத்தத்துடனும் கேட்டாள் மல்லிகா, சமீரின் அம்மா.
ஊர்ல எல்லாரும் தப்பா பேசல சரியா தான் பேசுறாங்க, நானும் மீனாவும் சீக்கிரமாகவே கல்யாணம் பண்ணிக்க போறோம், இதுக்கு நீங்க சம்மதிக்கனும், ஒருவேளை சம்மதிக்கலன்னா, நா எப்பாவது தான் மீனா வீட்டுக்கு போறேன் அப்பறோம் எப்பவும் அங்கேயே இருந்துருவேன் என்றான் சமீர்..
பாத்தியா மல்லிகா, அவன் நம்மகிட்ட சம்மதம் கேட்கல சம்மதிக்கணும்னு கட்டளை போடுறான், ஒரே ஒரு பிள்ளைனு செல்லம் கொடுத்து வளத்தோம்லா நமக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலையும் வேணும், நீ இந்த வீட்டுக்கு எப்பையுமே வந்துக்கோப்பா, நாங்க உன்ன ஒன்னும் கேட்கல, இங்க இருக்கிற பொருள்கள் மாதிரியே நாங்களும் இருக்றோம், நீ எப்பவேணாலும் வரலாம் போலாம் சரியா சார், கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து அகன்றான் சுந்தரம், சமீரின் அப்பா.
சமீர்க்கு அவனுடைய பெற்றோர்களின் கோபத்தை நினைத்து வருந்துவதா இல்லை அவர்கள் அவனது முடிவிற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லையேன்னு நினைத்து சந்தோசப்படுவதா, என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான். நம்ம அம்மா அப்பா தான சமாதானம் பண்ணிரலாம் என்று நினைத்து கொண்டு படுக்கை அறைக்கு சென்றான், ஆனால் அவனுடைய பெற்றோர்கள் அவனுடன் இனிமேல் பேச போவதில்லை என்று அவன் அப்போது அறியவில்லை.
ஒரு வாரத்திற்கும் மேல் ஆன பின்பும் மீனா மித்ரனுடன் பேச வில்லை, மித்ரன் அவளை தொடர்பு கொண்டாலும் அவள் அதை நிராகரித்தாள், இந்த கவலையில் மித்ரன் பாபுவை பற்றி மறந்தே போனான், பிறகு எங்கிருந்து பாபு கேட்டதற்கு சம்மதம் சொல்ல முடியும்.
பொறுமை இழந்து மீனாவின் சித்தி ஸ்ரீதேவியின் நம்பரை ப்ரதாப்பிடம் வாங்கி போன் பண்ணினான், ஸ்ரீதேவியோ அவனது போனிர்காக காத்திருந்தால் போல அவனிடம் மீனா மற்றும் சமீரின் காதலை பற்றி கூறிவிட்டு இனிமேல் மீனாவுக்கு போன் பண்ணாத என்று எச்சரித்து விட்டு வைத்தாள். மித்ரனுக்கு என்ன செய்வதென்ரே தெரியவில்லை, ஸ்ரீதேவி கூறியதை அவன் துளி கூட நம்பவில்லை, பயங்கரமாக யோசித்து ஒரு வழியாக மீனாவின் அப்பா கனகராஜின் நம்பரையும் ப்ரதாப்பிடம் வாங்கி அவருக்கு போன் பண்ணி மீனுகுட்டி கூட பேசனும் அவளிடம் போனை குடுக்க முடியுமா என்று மட்டும் கூறினான், கனகராஜ் கொஞ்சம் நல்லவர் போல போனை உடனே மீனாவிடம் கொடுத்துவிட்டார். அவளும் வேறு வழியில்லாமல் மித்ரனிடம் பேசினாள்….
என்ன மீனுகுட்டி உனக்கு என்ன ஆச்சி எதுக்கு என்கூட இவ்ளோ நாளா பேசல, என்னோட போனையும் அட்டென்ட் பண்ணல, உன்னோட சித்திக்கு போன் பண்ணாலும் லூசு மாதிரி என்னல்லாமோ சொல்றங்க, உனக்கு என்மேல எதாவது கோபமா, மீனுகுட்டி ப்ளீஸ் பேசுமா, புலம்பி தள்ளினான் அவன்.
உங்க மேல கோபபடுறதுக்கு எனக்கு என்ன உரிமை இருக்கு, எனக்கு உங்களிடம் பேச பிடிக்கல அதான் பேசல அவ்ளோ தான், அப்பறோம் சித்தி ஒன்னும் லூசு மாதிரி பேசல அவங்க சொன்னது எல்லாமே உண்மைதான், கூலாக பதிலலிதாள் மீனா…
இன்னுமே அவனால் நம்ப முடியவில்லை, மீனுகுட்டி ஏற்கனவே உன்ன பாக்காம எனக்கு பைத்தியம் பிடிச்சிடும் போலிருக்கு, இதுல நீ வேற விளையாடாத, ப்ளீஸ் மீனுகுட்டி வீட்டுக்கு வந்துரு என்னால முடியலமா ரொம்ப கஷ்டமா இருக்கு கெஞ்சினான் அவன்….
அவன் கெஞ்சுவதில் மீனாவின் கோபம் கொஞ்சம் கரைந்து தான் போனது, சரி நா வீட்டுக்கு வரேன், ஆனால் ஒரு கண்டிஷன், நீங்க நித்யாவுக்கு யாரவேணாலும் கல்யாணம் பண்ணி வைங்க அத பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல , ஆனா அவளுக்கு எவ்ளோ முடியுமோ அவ்ளோ சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சிருங்க, நித்யாவோட கல்யாணத்துக்கு அப்புறம் அவ நம்ம வீட்டுக்கு வரக்கூடாது நீங்களும் அவளிடம் பேசகூடாது, இதுக்கு நீங்க ஒத்துக்கிட்டா நா இப்போவே வீட்டுக்கு வரேன் என்றால் மீனா.
அவள் இப்படி பேசுவாள் என்று அவன் துளியும் எதிர்பார்க்கவில்லை.
உனக்கு நித்துகுட்டி மேல இவ்ளோ கோபமும் பொறாமையும் வரதுக்கு காரணம் நீ என்மேல வச்சிருக்க அதீத காதல் தான்னு எனக்கு புரியது, நீ என்னோட தங்கச்சியை இவ்ளோ திட்டியும் நா உன்னிடம் வந்து வந்து பேசுறதுக்கு காரணமும் நா உன்மேல வச்சிருக்க அதீத காதல் தான்னு உனக்கு எப்போ புரியுதோ அப்போ தான் நீ என்னிடம் இப்படியெல்லாம் கண்டிஷன் போடாமல் இருப்ப என்றான் மித்ரன்.
ஓ உங்களுக்கு என்மேல இருக்கிற அதீத காதல்னால தான் அன்னைக்கு அப்படி அடிச்சீங்களா என்று மீனா பேசிக்கொண்டிருக்க அது வந்து மீனுகுட்டி என்று மித்ரன் தன் பக்கத்து நியாயத்தை எடுத்துக்கூற விளையும் போது மீனா அதை காது கொடுத்து கூட கேட்க தயாராக இல்லை, தேவை இல்லாம எதுவும் பேசாதீங்க என்று அவன் வாயை அடைத்து விட்டாள், இப்போ முடிவா கேட்குறேன் உங்களுக்கு நா முக்கியமா இல்ல நித்யா முக்கியமா என்று மீனா கேட்டதற்கு மித்ரனால விரக்தியாக புன்னகைக்க தான் முடிந்தது…
நா உன்னிடம் செய்யகூடாதுனு சொன்ன ரெண்டு விஷயதையும் மீறிட்டல்ல, இப்போ சொல்றேன் டி இந்த நொடி சொல்றேன் நா சாகுறதுக்கு ஒரு செகண்ட் முன்னாடி இந்த கேள்வியை நீ மட்டும் இல்ல யார் கேட்டாலும் என்னோட பதில் எனக்கு எப்போவுமே முக்கியம் என்னோட நித்துகுட்டி தான் ஆணித்தரமாக கூறினான் அவன்.
எனக்கும் நீங்க முக்கியமில்லை சமீர் தான் முக்கியம் நா அவரை தான் கல்யாணமும் பண்ணிக்க போறேன் என்று மீனா கூறிக்கொண்டிருக்கும் போதே மித்ரன் அவளது இணைப்பை துண்டித்தான், மீனா கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள்….
மித்ரன் மீதிருந்த கோபத்தில் சமீரை அதிகமாக காதலிக்கிறோம் என்ற பெயரில் காதலித்தால் மீனா, சமீரோ அவள் அழகை கண்டு மயங்கினான் அதற்கு காதல் என்றும் பெயர் வைத்தான் அவன்….
ஆகமொத்தத்தில் அவர்களது காஞ்சி போன காதல் செடியில் மறுபடியும் காதல் துளிர்விட ஆரம்பித்தது🌱…..
ப்ரதாப்பிற்கோ மித்ரன் இரண்டு முறை போன் பண்ணி அவனின் அப்பா அம்மா நம்பரை கேட்டது ஏதோ பிரச்சனையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை வரவழைத்தது, இந்த வாரம் எப்படியாவது லீவ் எடுத்துட்டு வீட்டுக்கு போகணும் அங்கு போனா தான் என்ன பிரச்சனைனு தெரியும், பலவாறு யோசித்தபடியே இருந்தான் ப்ரதாப். ஒரு வழியாக லீவும் கிடைத்து வீட்டிற்கும் சென்றான் அவன்.
ப்ரதாப் வீட்டிற்கு வந்தவுடன் ஏதோ பெரிய சாதனை புரிந்த மாதிரி தான் செய்த அனைத்தையும் பெருமையுடன் கூறினாள் ஸ்ரீதேவி.
அம்மா என்ன பண்ணி வச்சிருக்க உன்னோட சுயநலத்துக்கு அக்காவோட வாழ்கையை நாசம் பண்ணாத, சே உன்னை அம்மானு சொல்லவே எனக்கு கேவலமா இருக்கு, அவனும் அவன் அம்மாவை எப்படியெல்லாமோ திட்டி பார்த்தான், ஸ்ரீதேவி அதை கண்டு கொள்ளவே இல்லை, சமீரிடமும் மீனாவிடமும் கூட பேசி பாத்தான் அவர்களும் அவன் பேச்சை காது குடுத்து கூட கேட்க தயாராக இல்லை, இனி மீதம் இருப்பது அவனது அப்பா கனகராஜ் மட்டும் தான் அவரிடம் என்ன பேசுவது அவர் ஒரு டம்மி பீஸ் ப்ரதாப்பிற்கு என்ன செய்வதென்ரே தெரியவில்லை , அவனால் தலையில் கைவைத்துக்கொண்டு அமர மட்டும் தான் முடிந்தது.
தேன்கிரெனாவிடம் போன் பண்ணி அனைத்தையும் அழாத குறையாக சொன்னான் ப்ரதாப், அவன் கூறிய அனைத்தும் அவளின் தலையில் இடியாக இறங்கியது அவளுக்குமே என்ன செய்வதென்று தெரியவில்லை, உடனே நித்யாவிடம் போய் சொன்னாள் தேன்கிரனா இப்பொழுது இடி இறங்கியது நித்யாவின் தலையில், உடனே தன் பாச மிகு அண்ணனை பாக்க ஓடி வந்துவிட்டாள் நித்யா🏃….
அண்ணனுக்கும் அண்ணிக்கும் அப்படி என்ன தான் சண்டையாக இருக்கும், இங்க வந்து ஒரு நாளுக்கும் மேலாகிவிட்டது இன்னும் அண்ணன் என்கூட ஒழுங்கா பேசமா சுத்திட்டு இருக்கான், என்று நித்யா யோசித்து கொண்டிருக்கும் போதே பாபு அவளை போனில் அழைத்தான்.
ஹெலோ நித்து, ஹனி இப்போ தான் என்னிடம் எல்லா விஷயமும் சொன்னா, உன்னோட அண்ணா இப்போ எப்படி இருக்காங்க, அவங்ககிட்ட எதாவது பேசுனியா, என்றான் பாபு.
அண்ணா இப்போ முன்னாடி மாதிரி இல்ல ரொம்ப சோகமா இருக்காங்க, இன்னும் நா அண்ணாவிடம் எதுவும் பேசல , இனிமேல் தான் பேசணும், சாரி பாபு எனக்கு மூடு சரி இல்லை நா உனக்கு அப்ரோம் போன் பன்றேன் என்று கூறி விட்டு அவனது இணைப்பை துண்டித்தாள் நித்யா.
இதுக்கு மேலையும் வெயிட் பண்ணா அவ்ளோ தான் எல்லாம் கை மீறி போயிரும் இப்போமே அவனிடம் போய் என்னாச்சினு கேட்ருவோம், தன் சிந்தனையை ஓடவிட்டபடியே மித்ரன் அறைக்குள் நுழைந்தாள் நித்யா.
அண்ணா உனக்கும் அண்ணிக்கும் இடையில ஏதோ பிரச்சனை இருக்கு, அதை காரணமா வச்சி தான் அண்ணி மனச அவங்களோட சித்தி மாத்திருக்காங்கனு ப்ரதாப் சொன்னான், அப்படி என்ன பிரச்சனை தான் உங்களுக்குள்ள இருக்கு ப்ளீஸ் அண்ணா சொல்லு நீ சொன்னா தான் என்னால எதாவது பண்ண முடியும், சொல்லு அண்ணா ப்ளீஸ், நித்யா விடாமல் கெஞ்சிகொண்டே இருந்தாள், அதனால் மித்ரனும் மறுக்காமல் நடந்த அனைத்தையும் கூறிவிட்டான், அவனுக்கும் மனதில் இருப்பதை யாரிடமாவது கொட்டிவிடவேண்டும் போல் தான் இருந்தது அதான் அனைத்தையும் கொட்டிட்டான்.
என்னால தான் உங்க ரெண்டு பேருக்குள்ளையும் இவ்ளோ சண்டை வந்துருக்குனு எதுக்கு என்னிடம் முன்னடியே சொல்லல, கோவமாக கேட்டாள் நித்யா.
சொல்லிருந்தா என்ன பண்ணிருப்ப நித்துகுட்டி…
எனக்கு உன்னோட சந்தோசம் தான் முக்கியம் அண்ணா, என்னிடம் நீ இதை முன்னாடியே சொல்லிருந்தா நா உன்னைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகி இருப்பேன், மென்று முழுங்கி கூறிவிட்டாள்.
நீ இப்படி தான் சொல்லுவன்னு எனக்கு தெரியும் நித்துகுட்டி, நீயும் சரி அவளும் சரி எனக்கு நீங்க ரெண்டு பேரும் எவ்ளோ முக்கியம்னு புரிஞ்சிக்கமாண்டுகிங்க, எனக்கு மீனுகுட்டி முக்கியம் தான் ஆனால் அதை விட நீ ரொம்ப ரொம்ப முக்கியம், உங்க ரெண்டு பேர்ல யாரையும் யாருக்காகவும் என்னால விட்டுகொடுக்க முடியாது, நா சொல்றது புரியுதா நித்துகுட்டி…
ம்ம் புரியுது அண்ணா, அடலீஸ்ட் உனக்கு கல்யாணம் முடியுறதுக்கு முன்னாடி எப்படி இருந்தியோ அப்படியாச்சும் இரு, நா வேணும்னா வேலைக்கு போகல என்றால் நித்யா.
உனக்கு வேலைக்கு போறது எவ்ளோ பிடிக்கும்னு எனக்கு தெரியும், வேணும்னா ஒரு மாதம் லீவ் எடுத்துட்டு இங்க வந்து இருந்துக்கோ, சிறு சிரிப்புடன் கூறினான் மித்ரன்.
நா வேலைக்கு போகலனு சொன்ன உடனே உன் முகத்தில் சிரிப்பு வந்துடுமே, நா ஒரு மாதம் இல்ல ரெண்டு மாதம் லீவ் கேட்டு உன்னோட இல்ல இல்ல நம்மளோட பிரச்சனையை முழுவதும் சரி பண்ண முடியுமான்னு தெரியல அடலீஸ்ட் பாதியாச்சும் சரி பண்ணிட்டு தான் போவேன், உறுதியாக கூறினாள் நித்யா.
ஓ அப்படியா பெரிய மனுஷி, நீங்க சொன்னா கண்டிப்பா சொன்னபடி பண்ணிடுவீங்களே, இப்பொழுது நல்லாவே சிரித்துகொண்டே அவளை கிண்டல் அடித்தான் அவன்.
நித்யாவும் அவள் பணிபுரியும் அலுவலகத்தில் இரண்டு மாதம் லீவும் கேட்டுவிட்டால், மேனேஜரும் நீ நல்லா வேலை பாக்குற அதுனால தான் உனக்கு இவ்ளோ நாள் லீவு தரேன், ஆனால் லீவு முடிஞ்சப்புறம் ஒரு வருடத்திற்கு நீ லீவ்வையே மறந்துறனும் என்ற நிபந்தனை வைத்த பின்பு தான் லீவே கொடுத்தார்.
அதன்பின் நித்யாவிற்கும் மித்ரனுக்கும் மனது கொஞ்சம் லேசானது போல் இருந்தது, ஆனால் நித்யாவிற்குகோ எவ்ளோ கண்ட்ரோல் பண்ணி பார்த்தும் அவளால் முடியவில்லை மீனா மீது கோபம் அதிகமாகிக்கொண்டே தான் இருந்தது, அதைவிட அதிகமாக முகம் தெரியாத அந்த சமீரை கொல்லும் அளவிற்கு கோபம் வந்தது அவளுக்கு.
நாட்கள் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் வேகமாக சென்றது, மித்ரனும் முன்னாடி இருந்ததற்கு இப்போ எவ்ளோ பரவால்ல கொஞ்சம் அதிகமாகவே சிரிக்க ஆரம்பித்திருக்கிறான், அன்று ஒரு நாள் காலை உணவை வாயில் திணித்த படியே நித்யாவும் மித்ரனும் ஒருவரை மாற்றி ஒருவர் கிண்டல் அடித்துக்கொண்டிருந்தனர், கற்பகமும் அவர்களின் சிரிப்பை கண்டு கொஞ்சம் நிம்மதியானாள், அவள் நிம்மதியை கெடுப்பதற்கென்றே நித்யாவின் போன் சிணுங்கியது திரையில் ஹனி என்று தெரிய அதை மித்ரனே ஸ்பீக்கரில் போட்டு நித்யாவின் அருகில் வைத்தான், தன் பாச மிகு தங்கை சாப்பிடும் போது போனை காதில் வைத்து பேசி கஷ்டப்படாமல், சுலபமாக சாப்டுக்கொண்டே பேசவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் தான் ஸ்பீக்கரில் போட்டு வைத்தான, ஆனால் அது அவனுக்கே பெரிய ஆப்பாக வரும் என்று அவனுக்கு தெரியாது.
சொல்லு ஹனி என்றால் உற்சாகமான குரலில் நித்யா,,
எனக்கு இப்போ தான் ப்ரதாப் போன் பண்ணி சொன்னான் நித்து, ஒரு பெரிய பிரச்சனை, மீனா அண்ணிக்கும் அந்த சமீர்க்கும் இன்னும் இரண்டு வாரத்தில் நிச்சயம் பண்ண போறாங்கலாம், என்றால் ஹனி.
கற்பகம் சொன்னது போல் ஹனியின் நாக்கில் சனி தான் தாண்டவம் ஆடுது போல, ஹனி கூறிய அடுத்த நொடியே மித்ரன் மயங்கியிருந்தான்….
மித்ரன் தரையில் விழுந்த வேகத்தில் அவன் தலையில் அடிபட்டு ரத்தம் வேறு வந்தது, அதை பாத்து நித்யாவும் கற்பகமும் பதறி போய் அடிச்சி புடிச்சி ஆட்டோவ புடிச்சி மருத்துவமனையில் சேர்த்தனர்…
மருத்துவரோ நித்யாவிடம், மித்ரனின் மனதும் உடலும் பலவீனமாக இருக்கு அதனால் தான் மயங்கியிருக்கான், உடலை எங்களால் சரி பண்ண முடியும் ஆனால் மனதை சரி பண்ண அவனாலும் அவனை சுற்றி உள்ளவர்களாலும் தான் முடியும், குளுக்கோஸ் ஏறி முடிச்சதும் வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என்று கூறி விட்டு சென்றுவிட்டார்.
மித்ரன் மீனாவிடம் பேசுனா அவனோட உடம்பு சரி ஆகுதோ இல்லியோ, நீ உன்னோட தோழி தேனிடம் பேசாம இருந்தா தான் அவனோட உடம்பு சரி ஆகும், அவளால தான் உன்னோட அண்ணன் இப்போ ஹாஸ்பிடல் வரைக்கும் வந்திருக்கான், கோபமாக கூறினாள் கற்பகம்…
கற்பகம் இப்படி கூறியதற்கு நித்யாவாள், முறைக்க மட்டும் தான் முடிந்தது, இதில் நித்யாவின் கண்கள் கலங்கி வேறு இருந்தது..
மித்ரனை பார்க்க அவனது அறைக்கு சென்றால் நித்யா, சோகமாகவும் சோர்வாகவும் தன்னுடைய கட்டிலில் படுத்திருந்தான் அவன், அவளை பார்த்து பேருக்கு மட்டும் புன்னகை சிந்தினான்.
என்ன அண்ணா இப்போ எப்படி இருக்கு பரவால்லையா, தலையில் வலி எதாவது இருக்கா பரிவாக கேட்டாள் நித்யா.
தலைல வலிக்கலமா மனசு தான் ரொம்ப வலிக்குது, அந்த வலியை என்னால தாங்க முடியல நித்துகுட்டி, மீனுகுட்டி என்னிடம் எப்படியும் வந்துருவாங்கற நம்பிக்கை என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமா போயிருச்சு, செத்துரலாம் போலிருக்கு, மித்ரன் பேசிகொண்டிருக்கும் போதே அவனது கண்களிலிருந்து கண்ணீர் அருவி போல கொட்டியது.
என்ன அண்ணா இப்படி பேசுற என்னையும் அம்மாவையும் பற்றி கொஞ்சம் யோசிச்சு பாத்தியா, நீ போய்ட்டனா எங்களோட நிலைமை என்னாகும்னு, என்மேல உனக்கு நம்பிக்கை இருந்தா நீ இப்படிலாம் பேசியிருக்க மாண்ட…
நித்துகுட்டி உன்மேல நம்பிக்கை இல்லனு யாரு சொன்னா, நா இப்போ வரைக்கும் உயிரோடு இருக்கேனா அதுக்கு காரணம் நீயும் அம்மாவும் தான்..
ம்ம் குட் என்மேல நம்பிக்கை இருக்குதுல அது போதும் எனக்கு, இன்னும் கொஞ்ச நாள்ல நீ இழந்த நம்பிக்கையை நா உனக்கு திரும்ப கிடைக்க வைப்பேன், சரி சரி நா இருந்தா பேசிட்டே இருப்பேன் நீ ரெஸ்ட் எடு நா போறேன், அங்கிருந்து அகன்றாள் நித்யா.
மித்ரன் அறையிலிருந்து வந்த நித்யா நேராக சென்றது மொட்டை மாடிக்கு தான், தன் சிந்தனையை பலவாறாக ஓடவிட்ட படியே வானத்தில் தெரிந்த நிலவை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள், அவள் மனம் முழுவதும் சோகமும் குழப்பமுமாக இருந்தது, அவள் சிந்தனை ஓட்டத்திற்கு தடை போட்டது அவளது கைபேசி.
ஹெலோ நித்து காலைல நா போன்ல பேசும் போது ஒரே சத்தமா இருந்துச்சு, அப்புறம் நா உனக்கு அடிக்கடி போன் பண்ணேன் நீ எடுக்கவே இல்ல என்னாச்சு எதாவது பிரச்சனையா, பதட்டமாக கேட்டாள் ஹனி.
நித்யாவும் நடந்த அனைத்தையும் கூறி முடித்தால், சாரி ஹனி, நா போன டென்ஷன்ல வீட்டுலியே வச்சிட்டு ஹாஸ்பிடல் போய்ட்டேன் அதான் உன்னோட போன அட்டென்ட் பண்ணல.
நா தான் உன்னிடம் சாரி கேட்கணும் நித்து என்னால தான அண்ணனுக்கு இவ்ளோ கஷ்டம்.
ஹனி உன்னிடம் எத்தன தடவ சொல்லிருக்கேன் இப்படி பேசாதனு, உன்மேல எந்த தப்பும் இல்ல, இப்படியெல்லாம் நடக்கணும்னு விதி இருந்துருக்கு நடந்துடுச்சி அவ்ளோதான், இனிமேல் இதுமாதிரி பேசாத கோபமாக பேசினாள் நித்யா.
சரி நித்து நா இனி அப்படி பேசல, அண்ணா எப்படி இருக்காங்க இப்போ பரவால்லையா.
அவனுக்கு தலையில் வலி இல்லையாம் மனசுல தான் வலியாம், அதுவும் சாதாரண வலி இல்ல ஹனி, சாகுற அளவுக்கு வலிக்குதாம். என்ன 🤬*********** காதலோ சாகுற அளவுக்கு ஒருத்தங்கல தூண்டி விடுது, காதல்னு பேர கேட்டாலே வெறுப்பா இருக்கு..
என்ன நித்து கெட்ட வார்த்தையெல்லாம் பேசுற, நீ இவ்ளோ கோபபட்டு நா பாத்ததே இல்ல, காதல் மேல உனக்கு ஏன் அவ்ளோ வெறுப்பு, காதல் புனிதமானது அது காதலிக்ரவங்களுக்கு தான் தெரியும், நீ லவ் பண்ணது கிடையாதுலா அதான் உனக்கு காதலோட அருமை தெரியல, காதல் வசனம் பேசினாள் ஹனி.
அண்ணனை சாகனும்னு தூண்டுர காதல், கல்யாணம் முடிஞ்சப்புரமும் வேறொருவர் மேல வர காதல் இதெல்லாம் உனக்கு புனிதமான காதலா, இன்னும் கோபத்தின் உச்சத்தில் தான் பேசிக்கொண்டிருந்தால் நித்யா.
கூல் நித்து டென்டின் ஆகாத, இப்போ நித்யாவிடம் காதலை பற்றி பேசி அவளை இன்னும் டென்டின் ஆக்க ஹனி விரும்பவில்லை, அதனால் அவளை சமாதானம் ஆக்க முயற்சி செய்து கொண்டிருந்தால் ஹனி, ஆனால் அவளது ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டது.
எனக்கு அண்ணி மேலையும் அந்த சமீர் மேலையும் ரொம்ப கோபமா வருது ஹனி, என்னோட அண்ணனையே அழ வச்சிட்டாங்கல்லா அவங்க ரெண்டு பேரையும் நா கதற வைக்கிறேன், அண்ணா சிந்தினத விட அதிகமா அண்ணியை நா கண்ணீர் சிந்த வைப்பேன், ஹான் அப்புறம் அந்த சமீர் அவன நா சும்மா விடுறதா இல்ல, இனி அவனோட வாழ்கைல என்ன நடந்தாலும் அது நா முடிவு பண்ணாத தான் இருக்கும்…
என்ன நித்து வில்லி மாதிரி பேசுற, அப்படி என்ன தான் பண்ண போற பதட்டமாக கேட்டாள் ஹனி…
நித்யாவும் வில்லியின் தோரணையில் கூறினாள், ” வெயிட் அன்ட் வாட்ச் ” ஹனி😎😎😎….
…….. தொடரும்
My dear friends 😇😇😇 please drop your valuable comments😊😊….
1 Comment
இது என்னோட முதல் கதை தவறுகள் இருந்தால் திருத்த உதவி பண்ணுங்கள்.