அக்கா நான் படிச்சி முடிக்கிறதுகுள்ள அடுத்த அடுத்த எபியா போட்டு தள்ளுறிங்களே...
செம ஸ்பீடு க்கா நீங்க...
ஒகே... நான் படிச்ச கடைசி நான்கு பாகத்தோடு கருத்தை ஒரே கமெண்ட்ல சொல்லிறேன்க்கா.
வேதாவின் மனமாற்றம் தாயின் உள்ளத்தை வெளிப்படுத்தி விட்டுது. தங்கையின் கதறலும்.. வளர்த்த மகளின் தவிப்பையும் பார்த்து மனம் மாறினாலும். அவளுக்குள் இருக்கும் பயம் விட்டு விலகவில்லை.. அதையும் கூடிய சீக்கிரம் விலகி மாறனின் செயல்கள் இருக்கும் என்று நம்புகிறேன். முருகேசன் அன்பு அளவு இல்லாதது போல் உணர்த்தி விட்டார்.
அம்மணி, கணவனின் பாசத்தால் மருத்துவராக பணிபுரிய நேர்ந்தது என்றால். தந்தையின் அன்பால் ஒரு மருத்துவமனையே பெற போகிறாளோ என்று தோன்றுகிறது. இவ்வுலகில் ஒரு பெண்ணுக்கு தந்தை, மற்றும் கணவன் இவருவரின் தூய்மையான அன்பும் கிடைத்து விட்டால் அப்பெண்ணிற்ககு வேற என்ன வேண்டும். அந்நிலையை தான் இப்போது கனிஷ் அடைந்துவிட்டாள்.
வளர்த்த மகளாக பாராமல் அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து செய்யும் முருகேசனை நினைத்தால் பெருமையாக உள்ளது.
அம்மணி மாறனோடு காதல் எவ்வளவு எடுத்து சொன்னாலும் வார்த்தைகள் பற்றாது. இருவரின் காதலும் எப்போதும் இதே போல் இருக்க வேண்டும். சீக்கிரம் சின்ன அம்மணியோ இல்ல குட்டி சிங்கம் போன்ற மனுவையோ உயிர் தந்து இந்த உலகத்திற்கு அழைத்து வாருங்கள்.
மருமகளை மகளாக பார்க்கும் பாக்கியம் அம்மணிக்கு கிடைத்து உள்ளது. அதே சமயம் கன்னிக்கும் கிடைத்து உள்ளது.
மாறனோடு அம்மாவின் கடந்த காலத்தில் நடந்த கசப்பான நிகழ்வால் காதலால் திளைத்து இருக்கும் அம்மணிக்கும் மாறனுக்கும் விரிசல் ஏற்பாடாமல் இருக்க வேண்டும்.
குழந்தையின்மையை பற்றியும் அதன் விளக்கத்தையும்... கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் உண்ண வேண்டும் உணவின் முறையையும்... கடைசியாக பெண்ணின் முதுகு தண்டு வலியில் கூறிய இருக்கமான உடையின் தீமையையும்.... எவ்வாறு உடைகளை உடுத்த வேண்டும் என்ற நன்மையையும்.. அருமையாக அம்மணியின் மூலம் விரிவாக எடுத்துரைத்தது பிரமாதம்.
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும். ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.
அதுபோலவே... கன்னிகாவின் நாவிலிருந்து உதிர்த்த வார்த்தை. அதுவும் அவள் இன்னும் உணராமல் இருப்பது தவறு.
பார்த்தியின் அம்மா கன்னியை மனதார ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் சூப்பர்.
கணவன் மனைவி ஒரே அறையில் இருந்தும் விலகி இருப்பது கொடுமை.
ஒரு இடத்தில் பார்த்தியின் விழியில் இருந்து கண்ணீர் வரும் போது என்னையும் அறியாமல் நீர்க்கோர்த்துக் கொண்டது.
உள்ளுக்குள் அவ்வளவு காதலை வைத்துக் கொண்டு.. அவளின் தவறை அவள் உணரும் வரை அவன் காத்திருப்பதை பார்க்கும் போது பாவமாக இருந்தது.
ஆயிரம் கோபம் கன்னியின் மீது இருந்தாலும் சரியாக சாப்பிடவில்லை என்று கேட்டதும்.. அவள் அருகிலே அமர்ந்து அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை இருந்ததை பார்க்கும் போது அவன் காதலை உணர முடிந்தது.
எப்படியோ இப்போதாவது கன்னிகா அவள் கூறிய வார்த்தையை உணர்ந்து தவறை புரிந்துக் கொண்டாலே.. அது போதும்.
இருவரையும் சீக்கிரம் சேர்த்து வெட்சிடுங்க.. போனா போகட்டும்...
எப்போதுல இருந்து இந்த கன்னி.. ஹனியா மாறினால்😒😒😒
ஏதோ தீக்ஷிதா வா.... பார்த்திக் கூடவா.... ஏம்மா உன் தமிழில தீயை அள்ளி போட. 🤣🤣🤣....
பார்த்தின் மீது எந்த அளவிற்கு அன்பு இருந்தால் வராத தமிழை வா..வா..னு கத்துகிட்டு வந்து நிக்கிறாள். இருந்தாலும் என்ன பயன் அதான் அவன் அடுத்தவனுக்கு சொந்தமாகிட்டானே.
நீ என்ன தான் தவம் இருந்தாலும் இந்த ஜென்மத்தில் உனக்கு பார்த்தி கிடையாது.... வந்த வழியே பார்த்துட்டு போய்ட்டு😓😓😓...
அடேய் பார்த்திப்பா உனக்கு ஓவர் திமிருடா... பாவம் திக்ஷி யா வச்சி உன் பொண்டாடியை வெறுப்பு ஏத்த ட்ரை பண்றியா..
பாவம் ஒன்னும் தெரியாத பச்ச மண்ணு டா தீக்ஷி...
அருள் ரூமிலிருந்து ஏன் இம்புட்டு கோவமா வர வேண்டும்..😣😣😣...
ஏதோ கன்னியை கட்டிகிற.. தீக்ஷியா ஆசைக்கு வச்சிக்கிறீயா...😠😠😠...
பார்த்தி உனக்கு நியாபக மறதி ஆகிடுச்சி நினைக்கிறேன்.. நீ ஏற்கனவே கன்னியை கட்டிக்கிட்ட.. ஆனால் என்ன உன் ஆசைக்காக திக்ஷியை வச்சிக்க முடியாது...
என்ன வார்த்தை கூறிட்ட பார்த்தி.. அன்று கன்னி செய்த தவறை இன்று நீ விளையாட்டாக கூறினாலும்... உதிர்த்த வார்த்தைகள் தவறு...
😣😣😒😒😒😒😞😞😞😞😞
அனைத்து பாகங்களும் அருமைக்கா..