எந்த விஷயத்தை தெரிஞ்சிக்கணுமோ அது மட்டும் ஷ்ரதாக்கு காதுல ஏறாது

...அட கிராதகா எத்தனை வேலை பண்ணிருக்கான்..vc ட உனக்குத் துளி கூட நட்பு இல்லடா சிவா








...வீசியை இனி என்னவெல்லாம் செய்வாங்களோ
...இந்த விபத்துல தான் ஷ்ரதாக்கு நியாபகமறதி வருமா சிஸ்...
Nice
காதல் கணம் 28
தனதறையில் இரும்புக்கட்டிலில் படுத்திருந்த வீசிக்கு சிந்தை முழுவதும் 'காலையில் எங்கு செல்வது?' எனும் கேள்வியே தொடர் மாரத்தான் ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது.
தனது அப்பா சொன்னது போல் கொடைக்கானலில் உள்ள வேல்ராஜ் சித்தப்பா வீட்டிற்கு செல்லலாம் தான். ஆனால், அதில் அவனுக்கு விருப்பமில்லை. காரணம், மதுபாலாவின் படிப்பு செலவிற்கு கையேந்தியதிலிருந்தே அவர் அவர்களை மதிப்பதில்லை என்பதால் ரொம்பவே யோசித்தான்.
அந்த யோசனையுடனே அசுவாரசியமாக தனது போனை எடுத்து கான்டாக்ட் லிஸ்ட்டை ஓட்டிப்பார்த்தவனுக்கு கேரளா மாதேஷின் எண் கண்ணில் படவும், உடனே எழுந்து அன்று அவன் கொடுத்த விசிட்டிங் கார்டை தேடினான்.
நல்லவேளை டீவி ஸ்டாண்டிலேயே அது கிடைத்தது. எடுத்து பத்திரப்படுத்தி வைத்துவிட்டு மீண்டும் படுக்கையில் வந்து விழுந்தவனுக்கு தூக்கம் ஆட்டம் காட்டவும் போனை இயக்கி ஆன்லைனிற்கு வந்தான்.
முதல் அறிவிப்பாக மதியம் ஷ்ரதா அவனுக்கு அனுப்பிய வாய்ஸ் மெஸேஜ் ஒன்று காத்திருக்கவும், ஹெட்போனை இணைத்து இரு காதிற்கும் கொடுத்தான்.
ஷ்ரதா தெளிவில்லாத குரலில் விம்மிக்கொண்டேப் பேசினாள். "அவ்வளவு சாரி கேட்டும் உங்கக்கோபம் குறையலை இல்ல?.. என்னைப் பழிவாங்க எங்க அப்பாவை ஜெயிலுக்கு அனுப்பிட்டீங்க இல்ல?.. இப்ப உங்களுக்கு சந்தோசம் தானே?" என்று கேட்டிருந்தாள்.
வீசி, "அட பைத்தியமே!" என்று முணுமுணுத்தவன், வாட்ஸாப்பில் அவளுக்கு டைப் செய்ய ஆரம்பித்தான். முதலில் தன்னைப் பற்றி அவளுக்கு விளக்குவான் என்று பார்த்தால்.. வீம்பன் தன் நிலையிலிருந்து இறங்கிவராதவனாக வேறு செய்தியை தட்டச்சு செய்துக் கொண்டிருந்தான்.
**************
Vc: Mani ipo 10.30 pm
Vc: Innum 10 ½ mani neraththula naan keralavukku train eariduven
Vc: Thirumba madurai varuvena vara mattena theriyaadhu
Vc: Oruvelai Nee ennai ippavum love panrenna en mela unaku nambikkai irukkudhunna 7-8am kulla nee jeyavilas bridge ku keezha varanum
Vc: naan unakkaga anga kaaththirupen
Vc: ama nee ellaththaiyum udharittu ennoda kerala varanum
Vc: unaku yosikka indha 9 ½ mani neram podhumnu ninaikiren
Vc: So nalla Yosichu mudivedu.
Vc: Apram
Vc: i love you❤️
******************
அனுப்பி விட்டான். ஆனாலும் 'அவள் எப்போது ஆன்லைன் வருவாள்?' என்றே அவன் மனம் ஏங்கித் தவித்தது. திடீரென ஒரு கொடுமையான சந்தேகம். 'ஒருவேளை அவள் தாமதமாகப் பார்த்தால்? இல்லை பார்க்காமலேயே போய்விட்டால்?..'
'என்னவொரு அபத்தமான நினைப்பு இது! வருவதும் வராமல் இருப்பதும் உன் இஷ்டம் என்று சொல்லிவிட்டு நான் ஏன் அவள் நிச்சயம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்?.. ஒருவேளை இது தான் காதலா?.. சே! என் அடிமன ஆசையை எப்படி காதலோடு முடிச்சிப்போடுகிறேன் பார்!.. எது எப்படியோ அவள் போனை எடுத்ததுமே நான் அனுப்பிய மெஸேஜை பார்க்கவேண்டும்.. வாட்ஸாப் மெஸேஜை காப்பி செய்து நார்மல் மெஸேஜ் ஒன்றும் தட்டிவிட்டால் தான் என்ன?' உள்ளம் நினைத்ததை அடுத்த கணம் கை நிறைவேற்றிவிட்டது.
போனை அணைத்துத் தூர வைத்தவன் போர்வையை தலைவரை மூடினான். தூக்கம் வரவில்லையானாலும் தானும் ஷ்ரதாவும் கேரளாவில் படகு இல்லங்களில் எப்படி வாழ்வோம் என்றே இன்பசொப்பனத்தில் மிதந்து கொண்டிருந்தவனுக்கு, அந்த இரவின் நீட்சி ஒன்றும் அவ்வளவு கொடுமையானதாக இருக்கவில்லை.
************************
விஜயாதித்தனை கைது செய்த விஷயம் கொரோனா தொற்று போல் ஊர் முழுவதும் பரவியதன் பலனாக, அவரின் உறவினர்கள் அனைவரும் கீரைத்துரையில் குவிந்துவிட்டனர்.
அவர்களின் நல்வரவால் ஷ்ரதாவின் வீடே கச்சடா முச்சடாவென்று கிடந்தது. விஜயாதித்தன் மட்டும் இந்நேரம் இருந்திருந்தால் 'போங்க' என்று அனைவரையும் அடித்து விரட்டியிருப்பார். ஆனால், மீனாட்சி கொஞ்சம் சாது என்பதால், சாந்தமாக அவர்களுக்கு சேவகம் புரிந்துக்கொண்டிருந்தார்.
ஷ்ரதா கீழே இந்த அமர்க்களங்கள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. விஷயம் தெரிவதற்கு முன், காலையில் சாப்பிடவென்று கீழிறங்கி வந்தவள். மதிய உணவைக்கூட சாந்தாம்மாவிடம் கொடுத்தனுப்பச் சொல்லிவிட்டாள். இவ்விதமே அவள் இரவுஉணவையும் வேண்டவே வேண்டாமென பிடிவாதமாக மறுக்க, பெரியவர்களுடன் பேசிக்கொண்டே கவனித்துக்கொண்டிருந்த சிவனேஸ்வரன், இரவு பத்துமணியளவில் ஷ்ரதாவின் அறைக்கு பால் டம்ளருடன் சென்றுகொண்டிருந்த சாந்தாம்மாவை நிறுத்தி, அதைத் தான் வாங்கிக்கொண்டு அவளறைக்குச் சென்றான்.
முதலில் அவளறை இருளடைந்து கிடப்பதைப்பார்த்து திகைத்துப்போன கிறுக்கன், "ஷ்ரதா! ஷ்ரதா!" என அழைத்துக்கொண்டே, தட்டுத்தடுமாறி மின்விளக்கின் சுவிட்சை இயக்கினான். ஷ்ரதா அங்கு படுக்கையில் சீராக மூச்சுவிட்டுக்கொண்டிருந்தாள்.
பதற்றம் நீங்கி முகம் தெளிவாகியவன் மேசைவிளக்கின் அருகே மாத்திரை அட்டை ஒன்று கிடக்கவும், வேகமாக ஓடிவந்து எடுத்துப்பார்த்தான். அது தலைவலி மாத்திரை தான் என ஊர்ஜிதமாகவும் ஆசுவாசமடைந்தவன் போல பாலை அதன் அருகிலேயே வைத்துவிட்டு, ஓரத்தில் கிடந்த பூஃப் இருக்கையை அவள் கட்டிலையொட்டி எடுத்துப்போட்டான். பின், அதில் உட்கார்ந்துகொண்டு அவள் முகத்தையே உட்கிரகித்துக் கொண்டிருந்தான்.
சிவனேஸ்வரன் அப்படி எவ்வளவுநேரம் அவள் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தானோ தெரியாது. ஆனால், அவன் பார்வையில் ஒரு கணம் கூட விரசம் இல்லை. மாறாக, ரசிப்பும் வியப்பும் மட்டுமே இருந்தது. 'என்ன இல்லை இவளுக்கு.. அந்தப் பரதேசியைப் போய் காதலிக்கிறாளே!..' அசந்தர்ப்பமாக வீசி அவன் ஞாபகத்திற்கு வந்தான்.
'ஒரு பெண் தூங்கும்போதுகூட இவ்வளவு அழகாக இருக்க முடியுமா?' மேலும் பத்து நிமிடங்கள் பிக்சல் பிக்சலாக அவளை ரசித்துப்பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அதற்குமேல் தன்னைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியமாகிவிட்டது. மெதுவாக அவளை நெருங்கி, நெற்றியில் முத்தமிட்டான். எதிர்வினையாக அவள் இதழ்கள் தூக்கத்திலேயே குறுநகை புரிந்தன.
குனிந்துப் பார்த்தவன் பயந்து மீண்டும் தன்னிருக்கையிலேயே வந்து உட்கார்ந்துகொண்டான். 'ஹார்ட் ஏன் இவ்ளோ ஃபாஸ்ட்டா பீட்டாகுது?' நெஞ்சில் கைவைத்துப் பார்த்துக்கொண்டான். பின், நடுங்கிய தனது இரு கைகளையும் இறுக்கிப் பிணைத்துக்கொண்டு, அவளை நுண்ணோக்குவதையே வேலையாக தொடர்ந்துக் கொண்டிருந்தவனுக்கு, இம்முறை தன் தவத்தை கலைப்பது போல் ஒலித்த ஷ்ரதாவின் கைப்பேசியை அடித்து நொறுக்கும் வேகமே வந்தது.
'ப்ச், யாரது நைட் பதினொன்றரைக்கு மெஸேஜ் அனுப்புறது?' எரிச்சலாக உச்சுக்கொட்டியபடியே அவள் போனை எடுத்துப் பார்த்தான் சிவனேஸ்வரன்.
அதில் வீசி கேரளா செல்லவிருப்பதும், விரும்பினால் ஷ்ரதாவை தன்னுடன் வரச்சொல்லி அழைத்திருப்பதும் கருப்பொருளாக இருக்க, "பிச்சைக்கார நாயே" என்று ஆவேசமாக சொல்லிவிட்டு, திரும்பி ஷ்ரதாவைப் பார்த்தான். அவள் முகம் நிச்சலனமாக இருந்தது.
'நல்லவேளை எந்திரிக்கலை' நிம்மதிப் பெருமூச்சுவிட்டவனாக அந்தத் தகவலை அழித்துவிட்டு, அநாகரிகத்தின் உச்சமாக அவள் வாட்ஸாப்பிற்குள் சென்றுப் பார்த்தான்.
முதலில் அவனுக்கு ஷ்ரதா ஏன் வீசிக்கு இவ்வளவு 'SORRY' மெஸேஜ் அனுப்பியிருக்கிறாள் என்றேப் புரியவில்லை. எதுவாகினும் அவர்களிருவருக்குள்ளும் உறவு சுமூகமாயில்லை என்ற புரிதலே அவனுக்கு ஆத்மதிருப்தியைத் தந்தது. அத்துடன் ஷ்ரதா இறுதியாக அவனுக்கு அனுப்பிய வாய்ஸ் மெஸேஜை கேட்பதற்காக அவளின் ஹெட்போனைத் தேடினான். தேடும் மும்முரத்தில் அவன் ஜன்னலை ஒட்டிக்கிடந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் டிராயரை இழுக்க, உள்ளே ஹெட்போனுடன் மோதிரப்பெட்டியொன்றும் கிடந்து அவன் கண்ணை உறுத்தியது.
முதலில் அதை புறந்தள்ளியவனாக ஹெட்போனை மட்டும் எடுத்த சிவனேஸ்வரன் பின், குரங்குப்புத்திகொண்டு அந்த சிவப்பு வெல்வெட்பெட்டியை திறந்துப்பார்த்தான்.
மூடியின் உட்பக்கத்தில் 'ஐ லவ் யூ ஷ்ரதா' என்று எழுதியிருப்பதைக் கண்டதுமே, "ஓஹ்! ஐயா கொடுத்த கிப்ட்டா.." என்று சர்வஅலட்சியமாக அதைத்தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் திணித்துக்கொண்டான். 'இதை அவன் மூஞ்சில விட்டெறியனும்' ஆனால், எப்போது?
காரியத்தில் கண்ணாக பின், போனில் ஹெட்போனை இணைத்து ஆடியோவை இயக்கியவனுக்கு ஷ்ரதாவின் பேச்சு நித்தியானந்தமாக இருந்தது. "ஆகா! ஷ்ரதா ஏதோ தன் மேல உள்ள கோபத்துல தான் வீசி மாமாவை ஜெயிலுக்கு அனுப்பிட்டதா நினைச்சிக்கிட்டு இருக்காப் போலயே!.. ம்ம், இதுவும் நல்லது தான்! இந்த வீசியை? ம்ம்? நாளைக்கு ஏப்ரல் பூல் பண்ணிடலாம்" என்று வன்மமாக நினைத்துக்கொண்டு, போனிலிருந்த அவள் சிம்மை கழற்றி எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினான்.
சிவனேஸ்வரன் இவ்வாறு தனது அறைக்கு வந்து சென்றது எல்லாம் தெரியாத ஷ்ரதா இன்னும் ஆழ்ந்த நித்திரையிலேயே இருந்தாள்.
*********************
தனது காதலை காப்பாற்ற சிவனேஸ்வரன் விடிந்ததும் விடியாததுமாக தாரணி சந்துவின் வீட்டுவாசலில் சென்று நின்றான். அவள் ஏழரைமணி கல்லூரிப் பேருந்தை எதிர்பார்த்து வெளியே வந்தபோது, இவன் அவளிடம் ஓடிப்போய் 'ஹாய் தாரிணி' என்றான்.
அவள் இவனைப் பார்த்ததுமே மிரண்டு இரண்டெட்டு பின்வாங்க, "ஹேய்! நான் தான்.. சிவனேஸ்வரன்.." என்று தன்னை நினைவுபடுத்தினான் அவன்.
"ம்ம், ஞாபகம் இருக்கு.. சொல்லுங்க" என்று மிரட்சியுடனே சொன்னாள் அவள்.
"இங்கப்பாரு தாரிணி உனக்கு வீசி தெரியும்ல என் ஃப்ரெண்டு?… நீயும் ஷ்ரதாவும் நான் சொல்லி அவன் புக் ஸ்டாலுக்குக்கூட டியூசன் போனீங்களே?.." தன் தவறை தானே தன் வாயாலேயே வாக்குமூலம் கொடுக்கும் அவலநிலை.
"ம்ம், ஞாபகம் இருக்கு.. சொல்லுங்க" அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே சொன்னாள் தாரிணி.
"வீசி இப்போ பெரிய ஆபத்துல இருக்கான் தாரிணி.. நீ தான் இப்போ அவனுக்கு உதவணும்"
"நானா? நீங்க இப்போ என்ன சொல்றீங்கன்னே எனக்குப் புரியலையே சார்!"
"ஒண்ணுமில்ல தாரிணி, நீ இந்த மோதிரத்தை வீசிக்கிட்ட கொடுத்து, நீங்க எதிர்பார்க்கிற மாதிரி ஷ்ரதா இங்க வரமாட்டா.. அவளுக்கு இங்க வர விருப்பமில்லைன்னு உங்கக்கிட்ட சொல்லச் சொன்னான்னு சொல்லணும்.."
தாரிணியின் முகத்தில் ஈயாடவில்லை. வீசியை காதலித்த மனம் உள்ளே வெட்டுப்பட்டு ஊமையாய் கதறிக்கொண்டிருந்தது.
"என்ன யோசிக்கிற தாரிணி?.."
"இல்ல நான் ஷ்ரதாகிட்ட ஒருவார்த்தை பேசிட்டு.." என்று சொல்லிக்கொண்டிருந்தபடியே தனது பர்ஸிலிருந்த போனை வெளியில் எடுத்து ஷ்ரதாவுக்கு அழைப்புவிடுத்தாள்.
சிவனேஸ்வரன் அர்த்தபுஷ்டியுடன் அவளைப்பார்த்து புன்னகைத்தவன், அவள் தன்னைப் பார்க்கும்போது முகத்தை மாற்றிக்கொண்டான். "நாட் ரீச்சபில்னு வருது"
"தாரிணி இதுக்கெல்லாம் நேரமில்ல.. வீசி இப்போ உயிர்போகிற ஆபத்துல இருக்கான்.. நாம சீக்கிரம் ஜெயவிலாஸ் பாலத்துக்குக் கீழ போகணும்.." என்று அவளை தன் பைக்கில் ஏறச்சொன்னான். அவள் இன்னும் யோசிப்புப் பாவனையிலேயே தயங்கியபடியே அவன் பைக்கில் ஏறி உட்கார்ந்தாள்.
பைக்கை தொண்ணூறில் விட்டு, பாலத்திற்கடியிலிருந்த வீசி தங்களை பார்க்கமுடியாத வட்டத்திற்கு வந்து அவளை இறக்கிவிட்டவன், "நான் சொன்னமாதிரியே சொல்லிடு என்ன?" என்று நினைவுபடுத்தினான். அவள் அவனை திரும்பிப்பார்த்தபடியே சென்றாள்.
பாலத்திற்கு அடியிலிருந்த கல் திண்டொன்றில், மணி எட்டைத்தொட இன்னும் பதினைந்து நிமிடங்களே இருந்ததால், நகம்கடித்தபடியே உட்கார்ந்திருந்த வீசி, தாரிணியைக் கண்டதுமே எழுந்து நின்றான்.
தாரிணிக்கு வீசியிடம் பொய் சொல்லப்போகிறோம் என்ற உணர்வே அச்சத்தைத் தந்தது. ஒவ்வொரு அடியையும் பயந்து பயந்து எடுத்துவைத்தாள்.
வீசி முதலில் தாரிணியை ஷ்ரதாவென்றே நினைத்துவிட்டான். தூரத்தில் அவள்முகம் சரியாகத் தெரியவில்லை அவனுக்கு. இதில் ஒரு கணம் அவன் மனம், 'அவளும் ப்ளூ ட்ரெஸ், நானும் ப்ளூ ட்ரெஸ்' என்று அல்பமாக சந்தோசப்பட வேறு செய்தது. கண் சிமிட்டாமல் அவளையேப் பார்த்துக்கொண்டிருந்த வீசிக்கு அவள் முகம் அருகில் வர வர கற்பனை கேபிள்கள் அனைத்தும் அறுபட்டு, முகம் தடங்கலுக்கு வருந்தியது.
நெருங்கி வந்தவளிடம் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் மறைத்து இயல்பான முகத்தோற்றத்துடன், "என்ன தாரிணி, ஷ்ரதா அனுப்பினாளா?" என்றான்.
அவள் 'ம்ம்' என்று தலையாட்டியவண்ணமே தன் கையிலிருந்த மோதிரத்தை நீட்டினாள்.
தனது காதலுக்கு ஷ்ரதா அனுப்பிய இரங்கல் செய்தியே இந்த மோதிரம் என்று உணர ரொம்பநேரம் எடுக்காத வீசி, அந்த மோதிரத்தை கையில் வாங்கிப் பார்த்துக்கொண்டே, "ஷ்ரதா என்ன சொன்னா?" என்றான்.
"அவளுக்கு.. இங்க வர விருப்பமில்லைன்னு சொல்ல சொன்னா.." என்று திக்கினாள் தாரிணி.
"உண்மையாவா?" கேட்டுவிட்டே அது எவ்வளவு அபத்தமான கேள்வி என்று உணர்ந்தான் வீசி.
"ஷ்ரதாவை கடைசியா ஒருதடவை எனக்குப் பார்க்கணும் தாரிணி.. ப்ளீஸ் அவளை இங்க வரச்சொல்றியா?.."
"சார்?"
"ப்ளீஸ் தாரிணி இன்னும் ஒண்ணேகால் மணி நேரத்துல எனக்கு ட்ரெயின்.. ப்ளீஸ்"
அவளிடம் இப்படி கெஞ்ச அசிங்கமாக இருந்தது வீசிக்கு. அவள் கண்களைப் பார்ப்பதையே தவிர்த்தான்.
தாரிணிக்கு அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. சிங்கம் தன் முடிகளை இழந்து நிற்பது போல் காணப்பட்டான். அனைத்திற்கும் காரணகர்த்தாவான ஷ்ரதா மேல் காரணமே தெரியாமல் வண்டை வண்டையாக கோபம் வந்தது அவளுக்கு.
"சொல்றேன் சார்" என்று கிளம்ப ஆயத்தமானாள் தாரிணி.
"இரு.. இரு.. நடந்துப்போனா லேட்டாகும்.. ஆட்டோல போ" என்று சாலையில் சென்ற ஒரு ஆட்டோவை மறித்து அவளை ஏற்றிவிட்டான் வீசி. அவனுக்கு தலையசைத்து விடைபெற்றாள் தாரிணி.
இந்த மௌன நாடகத்தை ஒளிந்திருந்தபடியே உற்றுநோக்கிக் கொண்டிருந்த சிவனேஸ்வரன், தாரிணியை ஏற்றிச் சென்ற ஆட்டோவை பைக்கில் வந்து வழிமறித்தான்.
தாரிணி வீசி கூறியதை கூறிவிட்டு, தான் இதை ஷ்ரதாவிடம் சென்று கூறப்போவதாக பிடிவாதமாக நின்றாள். தடுத்துப்பார்த்த சிவா பின், முடியாமல் போகவும் 'போ' என்று அவளுக்கு வழிவிட்டான்.
ஆனால், குரூரமாக உடனே அருண்மொழிக்குப் போன்போட்டு வீசி கேரளா செல்லவிருப்பதைப் பற்றி சொன்னான்.
தாரிணி ஆட்டோவில் ஷ்ரதாவின் வீட்டு வாசலில் வந்து இறங்கியபோது சாம்பல்நிற சுமோ ஒன்று வேகமாக அவளை உரசுவது போல் கடந்து சென்றது. அவள் தனது புத்தகமூட்டையை தூக்கிக்கொண்டே ஜல்ஜல்லென்று உள்ளே சென்றாள். விதவிதமான மனிதர்கள் அவளை விதவிதமான முக பாவனைகளுடன் வரவேற்றார்கள். அவர்களைக் கடந்து ஷ்ரதாவின் அறைக்கு செல்வதென்பது பிரம்ம பிரயத்தனமாகத்தான் பட்டது.
அறையில் ஷ்ரதாவை சந்தித்த தாரிணிக்கு முதலில், "ஹேய் ஷ்ரதா! என்னாச்சு? ஏன் இப்படியிருக்க?.." என்றே கேட்க ஆவலிருந்தாலும் அவகாசமின்றி, "ஷ்ரதா என்கூட கிளம்பு" என்றாள்.
ஷ்ரதா வியப்பாக, "எங்கே?" என்று வினவ, "ரொம்ப அவசரம்.. வா ஆட்டோல போகும்போது சொல்றேன்" என்றாள் அவள்.
ஷ்ரதா குழப்பமாகப் பார்க்கவும், "வா சொல்றேன்" என்று கையைப்பிடித்து வெளியே இழுத்துவந்தாள்.
ஷ்ரதாவின் உறவினர்கள் சிலர், "எங்கப்போற ஷ்ரதா?" என்று வினவ, தாரிணியை மாட்டிவிடாமல், "பக்கத்துல பெருமாள் கோவிலுக்கு போயிட்டு வந்திடுறேன்" என்றே சமாளித்து அவளுடன் வெளியேறினாள்.
தாரிணி ஷ்ரதா ஆட்டோவில் தன்னருகில் வந்து அமரவும், தான் காத்திருப்பில் போட்டிருந்த ஆட்டோ டிரைவரிடம், "போலாம்ண்ணே" என்றாள்.
"ஹேய் தாரிணி! இப்போவாவது சொல்லு.. எங்கேடி போறோம்?.."
"ம்ம்? உன் லவ்வரை பார்க்கப்போறோம்"
"புரியுற மாதிரி சொல்லுடி எரும"
"வீசி சாரை பார்க்கப்போறோம்டி"
ஷ்ரதா திடுக்கிட்டவளாக, "அது.. தாரிணி.. உனக்கெப்படி தெரியும் நானும் அவரும்?" என்று தடுமாறவும், இன்று தான் சிவனேஸ்வரனை சந்தித்ததிலிருந்து அவனை வெட்டிவிட்டது வரை நடந்த நிகழ்வுகளனைத்தையும் ஒன்றுவிடாமல் அவளிடம் ஒப்பித்தாள் தாரிணி.
முற்றாக அவள், "உன் சிவா அத்தான்கிட்ட ஏதோ தப்பு இருக்குடி" என்று சொன்னபோது, அந்த கடைசிவரியை மட்டும் காதில் ஏற்றிக்கொள்ளாத ஷ்ரதா, தன் முகத்தில் விழுந்த முடிகளையும், பறந்த துப்பட்டாவையும் சரிசெய்தபடியே ஆட்டோ டிரைவரிடம், "அண்ணே, கொஞ்சம் ஃபாஸ்ட்டா போங்கண்ணே" என்றாள்.
ஏற்கனவே வேகமாக சென்று கொண்டிருந்த அந்த டிரைவர், அவளின் வேண்டுகோளில் இன்னும் வேகத்தை அதிகரித்தார்.
அவள் பதைபதைப்பாக இருப்பதைப் பார்த்த தாரிணி ஆற்றமாட்டாமல், "என்ன தான்டி உங்களுக்குள்ளப் பிரச்சினை?" என்று கேட்க, அவளிடம் வெடித்துச் சிதறினாள் ஷ்ரதா.
"என்ன பிரச்சினையா?.. நான் பணக்காரியாயிருக்கிறது, எங்கப்பாவுக்கு பொண்ணா இருக்கிறதுன்னு எல்லாம் அவருக்குத் தான்டி பிரச்சினை.. இப்போக்கூட பாரு என்னை கடைசியாப் பார்க்கிறதுக்கு வரச்சொல்லியிருக்காரு.. ட்ரெயின் ஏறி எங்கப்போறாராம்டி?.."
"தெரியலையே ஷ்ரதா"
"இப்படித்தான்.. இப்படித்தான்டி என்னை எப்போப்பார்த்தாலும் அழ வைப்பாரு.. அப்புறம் அழாத பிடிக்கலைன்னு புலிக்கதை சொல்வாரு.."
தாரிணி ஷ்ரதாவின் மடிமீது கிடந்த அவளின் வலக்கையை எடுத்து, "சார், ரொம்ப நல்லவர் ஷ்ரதா.. அவரு உன்னை ரொம்ப லவ் பண்றாரு.. நீ ரொம்ப லக்கி" என்றாள்.
அதைச்சொல்லும்போது தாரிணியின் கண்கள் கலங்கியது போல் இருந்ததைக் கண்ட ஷ்ரதா அவளை வினோதமாகப் பார்க்க, தடாலென அந்த விபத்து நிகழ்ந்து முடிந்தது.
வாகன நெரிசல் எதுவுமில்லையென்று பறந்து கொண்டிருந்த ஆட்டோடிரைவர், எதிரிலொரு மஹிந்திரா ட்ரக் வண்டியைப் பார்க்கவும், வேகத்தைக் குறைக்க முயன்றார். ஆனால், பிரேக் சொல்பேச்சு கேட்கவில்லை. விளைவு, அனைவரின் "ஆ" என்ற அலறலோடு ஆட்டோ வாய்க்காலில் தூக்கி வீசப்பட்டது. சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அங்கபிரதட்சணம் செய்த ஆட்டோவிற்குள் இருந்தவர்களை பரிதாபமாக மருத்துவமனைக்குச் தூக்கிச்சென்றார்கள். ஷ்ரதா தன் சுயநினைவை இழந்துக் கொண்டிருந்தாள்.
![]()
காதல் கணம் கூடும்...
எழுத எழுத பிளாஸ்பேக் நீண்டுகொண்டே செல்கிறது ப்ரெண்ட்ஸ்😂
உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.
கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️
கருத்துத்திரி,
தென்றல் வந்து என்னைத் தொடும்🖤
Yes My name Prabha. Working as a teacher in a private school.This fb account is my husband's account. Now l am using.👍Thank you prabha maa😘. Unga peru dhane prabha😅 onnuku dhan next epila padhil. Aduthadhuku adutha epila padhil varum😊