ஹாய் சிஸ்.
முதல் அத்தியாயத்தில் இருந்து இறுதி அத்தியாயம் வரை மிஸ் பண்ணாம ஆன்கோயிங்கலப் படிச்சது உங்களோட இந்த " நரகமாகும் காதல் கணங்கள் " கதையைத் தான்.
உங்கள் எழுத்துக்கள்ல தெரிந்த மெச்சூரிட்டியையும் , வார்த்தைகள் எல்லாம் அவ்வளவு அழகா தேர்ந்தெடுத்து எழுதுனதையும் ஒவ்வொன்னா நோட் பண்ணிட்டு தான் வாசிச்சுட்டு இருந்தேன் சிஸ். இந்த கதைக்காக நீங்க எவ்ளோ எஃபர்ட் எடுத்து எழுதி இருக்கீங்கன்னும் , ஒவ்வொரு அத்தியாயத்துலயும் ஏதோ சுவாரசியத்தைக் கொடுக்கனும்னு மெனக்கெட்டு இருந்ததையும் வாசிக்கும் போதே எனக்கு நல்லாத் தெரிஞ்சுச்சு. இடையில் முத்துலட்சுமி ராகவன் மேம்க்கு ட்ரிப்யூட் குடுக்கும் விதமா அவங்களோட நாவல்கள் தலைப்பு வச்சு ஷ்ரதா , வீசிகிட்ட லவ் சொன்ன விதம் சூப்பர் ! ஆன்டி ஹீரோ ஸ்டோரி ! ஆனா இதுல கதாநாயகனுக்கு எந்தவித கெட்டப் பழக்கமும் இல்லாம காட்டினது நல்லா இருந்தது சிஸ். உவமைகளை நீங்க கையாண்ட விதம் அருமை. சுவாரசியம் குறையாம முழுக் கதையை எழுதி முடித்ததுக்குப் பாராட்டுக்கள். உங்களுடைய ஒவ்வொரு கதையையும் படிக்கும் போதும் உங்கள் எழுத்துக்களை நீங்க மெருகேற்றிக் கொண்டே இருக்கறதைப் பார்க்க முடியுது. போட்டியில் வெற்றி பெறவும் , இன்னும் இன்னும் அருமையான படைப்புகளைப் படைக்கவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சிஸ் ❤️