Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by sairenu

  1. S

    BK NOVEL அருவிக்கரைக் கோயில் - Tamil Novel

    7 அன்று… ஒரேநாளில் திரிகூடமலைக் காடுகளை அடைந்துவிட்டான் ஜடாவர்மன். உடல் கெஞ்சிற்று, ஓய்வுக்கு. மனம் "இந்த மலையின் அழகை நின்று பாரேன்" என்று கெஞ்சிற்று. குதிரை தன் கண்களால் தன் களைப்பைக் காட்டிக் கெஞ்சிற்று. கிராமத்தில் தங்கிவிட்டு மறுநாள் காடுகளுக்குச் செல்லலாம் என்ற சிந்தனையே அவனுக்கு...
  2. S

    BK NOVEL அருவிக்கரைக் கோயில் - Tamil Novel

    6 - இன்று… "வாவ்! எங்க கோவைக்கு அருகில் வருகிற க்ளைமேட் இங்கேதான். ஸெட்டில் ஆனா இங்கேதான் ஆகணும்" என்றான் தர்மா, தென்காசியை அடைந்ததும். "இப்போ ரொம்பக் கச்சடா ஊராகிடுச்சு, கூட்டம் ஜாஸ்தி. அதுக்குத் தகுந்த சுத்தம், ஏற்பாடுகள் இல்லே" என்றான் வசந்த். "இது ஒரு மீட்டிங் ப்ளேஸ் – முக்கியமான ஜங்க்ஷன்...
  3. S

    BK NOVEL அருவிக்கரைக் கோயில் - Tamil Novel

    5 - அன்று… பல ஒற்றர்கள் ஏவப்பட்டார்கள். சித்தர் குறிப்பிட்ட மாலாலயத்தைத் தேடிக் கண்டுபிடிக்க. மிகவும் உற்சாகமாக அவர்களைப் பணியில் ஏவிய ஜடாவர்மனும் ஸ்ரீவல்லபரும் நாளாக, ஆக மனந்தளர்ந்தார்கள். காடுகளில் எங்கு தேடியும் அப்படி ஒரு ஆலயத்தின் சுவடுகளே இல்லை என்பதைத் தவிர, பாழடைந்த அந்த ஊரைப் பற்றியோ...
  4. S

    BK NOVEL அருவிக்கரைக் கோயில் - Tamil Novel

    4 இன்று… முதல் பார்வையிலேயே வசந்துக்குத் தர்மாவைப் பிடித்துப் போனது. கண்ணியமான தோற்றம். மரியாதையான பேச்சு. ராஜியிடம் சகஜமாகப் பழகினாலும் "ஸிஸ்டர்" என்ற விளி இல்லாவிட்டாலும் சகோதரத்துவம் மிளிர்ந்த நடத்தை. அவனுடைய இரு சகோதரிகள். ஒருத்திக்குத் தர்மாவின் ஜாடை அப்பட்டமாகத் தெரிந்தது. இன்னொரு...
  5. S

    BK NOVEL நிறம் மாறும் நிஜம் - Tamil Novel

    4 4.1 மூவரும் தூக்கிவாரிப் போட்டவர்களாக மேனனைப் பார்த்தார்கள். "என்ன மேனன், பெரிய விஷயத்தைச் சாதாரணமாகச் சொல்றீங்க? யாமினி தற்கொலை செய்துக்கிட்ட அன்றைக்கு அவளுக்கும் சக்திக்கும் சண்டை வந்ததா?" என்று கேட்டான் தர்மா. "இது ரொம்ப முக்கியமான பாயிண்ட்டாச்சே! இது போலீஸ்க்குத் தெரியுமா?" "தெரியாம...
  6. S

    BK NOVEL அருவிக்கரைக் கோயில் - Tamil Novel

    3 - அன்று… "என்ன, ஒரு மாலவன் ஆலயத்தைப் புதுப்பிக்க வேண்டுமா?" என்று வியப்புடன் கேட்டார் ஸ்ரீவல்லபர். "ஆம். அப்படித்தான் சித்தர் கூறினார்." "ஜடாவர்மா! நீ என்றுமே சமயங்களுக்குள் வேற்றுமை பார்க்கிறவன் அல்ல என்றாலும் சுத்த சைவன். பல சிவாலயங்களைப் புதுப்பித்திருக்கிறாய். உன்னிடம் இதைக் கூறியவரோ...
  7. S

    BK NOVEL நிறம் மாறும் நிஜம் - Tamil Novel

    3 3.1 மேனன் மட்டுமல்ல, தர்மாவும் தர்ஷினியும்கூடத் தன்யாவை வியப்பாய்ப் பார்த்தார்கள். "சார், நீங்க முதலில் யாமினியோட ஆவியைப் பற்றிப் பேசியபோது, அது குழந்தைகளோடு விளையாடினதாகச் சொன்னீங்க. அதே மாதிரியே சில ஃப்ரெண்ட்லியான நிகழ்வுகள் நடந்ததாகச் சொன்னீங்க. அப்புறம் நீங்க யாமினியைப் பார்த்ததாச்...
  8. S

    BK NOVEL அருவிக்கரைக் கோயில் - Tamil Novel

    2 - இன்று… "வசந்த்!" ஆச்சரியத்துடன் கூவினாள் ராஜி. "வர குறைஞ்சது பத்து நாள் ஆகும்னு சொன்னே! ரெண்டே நாளில் வந்துட்டியே! என்ன, தேடிப் போனது கிடைச்சதா?" உற்சாக பலூனாய் வசந்தை நெருங்கிய ராஜி அவன் முகத்தைப் பார்த்ததும் சட்டென்று சுருங்கிப் போனாள். "சரி, உள்ளே வா" என்றாள். உடலெல்லாம் புழுதி கப்பி...
  9. S

    வண்ணங்கள் 2021 - அறிவிப்பு

    நித்யா மேடம், வணக்கம். நான் இரு கதைகள் (முல்லை) - அருவிக்கரைக் கோயில் மற்றும் நிறம் மாறும் நிஜம் - தொடங்கியுள்ளேன். நான் post செய்வது சரிதானே?
  10. S

    BK NOVEL நிறம் மாறும் நிஜம் - Tamil Novel

    2 2.1 "வாட் டூ யூ மீன்?" என்றான் தர்மா, சிறிய மௌனத்திற்குப் பிறகு. "யாமினி எங்க ரிசார்ட்டில் ஆவியா நடமாடறான்னு சொல்றேன்" என்ற மேனன் "தயவுசெய்து ஆவி, பேய்னு எதுவும் இல்லை, மூட நம்பிக்கைன்னெல்லாம் சொல்லிடாதீங்க" என்று சேர்த்துக் கொண்டார். தர்மா புன்சிரித்தான். "ஏன் இந்த மாதிரிக் கேஸ்கள் கொண்டு...
  11. S

    BK NOVEL அருவிக்கரைக் கோயில் - Tamil Novel

    அருவிக்கரைக் கோயில் 1 - அன்று… அரண்மனையெங்கும் விளக்குகள் மின்ன, நிலமகள் அணிந்திருந்த தங்க நெற்றிப்பட்டம் போல் ஒளிர்ந்தது மதுரை மாநகரின் அரண்மனை. "உனக்கு நான் சளைத்தவளா? நீ மண்ணில் மின்னினால் நான் வானில் மின்னுவேன்" என்று சவால்விட்டுத் தாரைகள் புடைசூழத் தங்கவொளி வீசியது முழுநிலா...
  12. S

    BK NOVEL நிறம் மாறும் நிஜம் - Tamil Novel

    நிறம் மாறும் நிஜம் 1 "ஹலோ தர்மா! தர்மா தானே?" ஆலயப் பிரதக்ஷிணம் ஆரம்பித்தவனைக் குரல் இழுத்து நிறுத்தியது. "ஆமா. சார் யாருன்னு…" என்று மாஸ்க் மறைவின் வழியே கேட்டான் தர்மா. "ஐ அம் வினீத் மேனன். நினைவிருக்கா? மூன் பேப்பர் மில்ஸ் மிஸ்டர் ஸ்ரீநிவாஸன் வீட்டுக் கல்யாணத்தில் மீட் பண்ணினோம்" என்று...
Top Bottom