Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம்24 மகேந்திரன் மன்னனாக பதவி ஏற்றதும் மகேந்திரபுரியின் தலைநகரை பைராகியை கொண்டு நிர்மாணித்தான்.சிறைச்சாலை கைதிகளை கொண்டு புதிர்பாதை ஒன்றை பொய்மான் கரட்டில் உருவாக்கினான் பைராகி.அந்த பணியில் ஈடுபட்ட அனைவரையும் கொன்ற மகேந்திரன் புதிர் வழியை யாரும் அறியாதிருக்கவும், மகேந்திரபுரி போன்ற...
  2. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம் 23 பதமா்வதிக்கும் தனக்குமான தொடர்புகளை தெரிந்து வைத்திருக்கும் இந்த இருவருக்கும் அநாபயனை தெரிந்திருக்கும் என்றோ அவன் இவர்களின் நண்பனாக இருப்பான் என்பதையோ கருணாகரன் எதிர்பார்த்திருக்கவில்லை.இந்த புதிய இக்கட்டிலிருந்து கருணாகரனை காப்பாற்ற இரண்டாக பிரியும் வழி உதவிக்கு வந்தது...
  3. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம் 22 கருணாகரன் பைராகி என்ற புதிய பெயரை சொன்னதும் ஆதித்தனுக்கு அந்த பைராகிக்கும் இந்த புதிர் பாதைக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும் என்ற விவரிக்க இயலாத ஒரு ஆர்வத்தை நோக்கி தள்ளப்பட்டான்.ஏற்கனவே சிவப்பு முகமூடி அணிந்ததால் கரிகாலன் என்று மக்கள் ஆர்பரித்ததும் யார் அந்த கரிகாலன் என்ற...
  4. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம் 21 துயில் எழுந்த கருணாகரன் ஆதித்தன் சொன்னதை போலவே பாதையில் கடந்து போன குதிரைகளின் குளம்படி ஆழத்தை வைத்து சகோதரர்கள் இருவரும் தன்னை கடந்து பயணித்து விட்டதாக தப்பாக கணித்தான்.இரண்டிரண்டாக பிரிந்து செல்லும் பாதையில் தன்னைத் தவிர வேறு யாராலும் சரியான பாதையை கண்டு பிடிக்க முடியாதென்னும்...
  5. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம் 20 கருணாகரன் கண்ணயர்ந்த சற்று நேரத்திற்கு அப்பால் முதல் சாமம் தொடங்கியது.அதே நேரம் ஆதித்தனும், அரிஞ்சயனும் தங்களை போன்ற இரண்டு உருவங்கள் தூங்குவது போன்ற ஏற்பாட்டை செய்து விட்டு சற்று தொலைவில் வந்து பதுங்கினர்.சமவெளி பகுதியில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.அருகே நான்கு குதிரைகள்...
  6. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம்19 காட்டிற்குள் கண்ணாமூச்சி ஆட்டம் நடைபெற ஆரம்பித்த அதே நேரத்தில் வாகை மரத்து புறாக்கள் மகேந்திரபுரியின் பல இடங்களில் தங்களுக்கான இலக்குகளில் அமர தொடங்கி இருந்தன.கரிகாலனின் மறைவுக்கு பிறகு புறா மூலம் தகவல்கள் வருவது நின்றே போய் விட்டது.இறுதியாக வந்த ஓலையும் “காலம் வரும்...
  7. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம்18 கருணாகரனை தொடர்ந்து சகோதரர்கள் இருவரும் குதிரையை விரட்டி கொண்டு வந்தனர்.கண்ணுக்கு முன்பாக செல்லும் எதிரியை வளைத்து பிடிக்க எந்த முயற்சியும் செய்யாமல் ஆதித்தன் அமைதியாக இருப்பது அரிஞ்சயனுக்கு குழப்பத்தை கொடுத்தது.அந்த குழப்பத்தை அதிகரிப்பது போல் ஆதித்தன் தன் குதிரையின் வேகத்தை...
  8. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம் 17 எதிரியை ஏமாற்ற ஆதித்தன் வகுத்த திட்டத்தை ஒருவாறு யூகம் செய்திருந்தான் அரிஞ்சயன்.அதற்கு சூரியனும் உதவி செய்வான் என்று ஆதித்தன் கூறியதும் திட்டம் வெட்ட வெளிச்சமானது.அரிஞ்சயனுக்கு இருந்தது ஒரே ஒரு சந்தேகம் மட்டுமே! “ஆதித்தா !நம் வித்தையின் போது குதிரையை வேகமாக செலுத்துவதா? இல்லை...
  9. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம்16 தன்னால் கொல்லப்பட்ட கரிகாலன் திரும்ப வருவது சாத்தியமல்லவென்று கருணாகரனின் மூளை சொன்னாலும் மனம் நம்ப மறுத்தது.சிவப்பு முகமூடி அணிந்த இந்த மனிதன் கரிகாலனாக இல்லாவிட்டாலும் அவனது ஆப்த நண்பர்களில் ஒருவனாகவோ அல்லது புரட்சி படை வீரர்களில் யாராவது ஒருவராகவும் இருக்க கூடும் என்று...
  10. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம் 15 ஆதித்தனின் புத்திகூர்மையால் கருணாகரன் விரித்து வைத்திருந்த வலையிலிருந்து தப்பிய சகோதரர்கள் தங்களுக்கு பின்னால் குதிரையின் குளம்படி ஒசையை கேட்டு குழப்பமடைந்தனர்.அபாயத்தை உணர்ந்த ஆதித்தனும் அரிஞ்சயனும் வாளை உருவிக் கொண்டு பாதையின் இரு மருங்கிலும் வளர்ந்திருந்த புதர்களினிடையே...
  11. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம் 14 மகேந்திரனுக்கு எதிரான செய்தியடங்கிய ஓலைகளை தாங்கி புறாக்கள் விண்ணில் பறக்க ஆரம்பித்த அதே நேரம் ஆதித்தனும், அரிஞ்சயனும் கருணாகரனை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர்.சகோதரர்கள் இருவரும் தங்களின் கண்ணில் பட்ட தடயங்களை ஊன்றி கவனித்து அது சரியான பாதைதானா என்பதை ஊர்ஜிதம் செய்து...
  12. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம் 13 ஆதித்தனும், அரிஞ்சயனும் பொய்மான் கரடின் புதிர் வழியில் சரியான பாதையை கண்டு பிடித்து கருணாகரனை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது நீலமலைக்கான நேர் வழியில் பயணித்தவர்களை அபாயம் சூழ தொடங்கியிருந்தது.ரதங்களிலும், குதிரைகளிலும் பயணித்தவர்கள் சற்றுதூர சமவெளி பகுதியில் சில...
  13. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம் 12 கருணாகரன் உயிரோடு இருப்பது எவ்வளவு அவசியம் என்று மதிவாணரும் மற்ற இருவரும் உணர்ந்து கொண்டிருந்த நிலையில் பொய் மான் கரடின் புதிர் வழியில் ஆதித்தன் கருணாகரனின் ஆட்களில் ஒருவன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொண்டிருந்தான். “வீரனே! உண்மையை சொல்லா விட்டால் உன் உயிர்பறவை உடலை...
  14. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம் 11 மதிவாணரின் “கருணாகரனை கொன்றால் அவர்கள் இருவரும் மரணமடைவதை தவிர வேறு வழியில்லை! “என்ற வார்த்தைகளை கேட்ட கந்தமாறனும், பூபதியும் அதிர்ச்சியடைந்தனர்.”மந்திரியாரே! என்ன சொல்கிறீர்கள்? “என்றான் கந்தமாறன் பதட்டத்துடன். “நான் சொல்வது உண்மை கந்தமாறா! அவர்கள் இருவரின் உயிர்...
  15. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம் 10 குதிரையை விரட்டி கொண்டிருந்த ஆதித்தன் முன்னும் பின்னுமாக தன்னை சூழப் போகும் அபாயத்திலிருந்து தங்களை எப்படி காப்பாற்றி கொள்வது என்று யோசித்தவனின் மூளை கடகடவென சில திட்டங்களை தீட்டியது.பொய்மான் கரட்டின் உள்ளே நுழையும் சமயம் ஆதித்தன் பரபரப்பானான்.”அண்ணா! உன்னிடமுள்ள கயிற்றை...
  16. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம்9 மைதானத்திலிருந்த மக்கள் “கரிகாலன்! கரிகாலன்! “என்று உணர்ச்சிமயமாக கத்தி கொண்டிருப்பதை பார்த்து குழப்பமடைந்த அரிஞ்சயன் “யார் இந்த கரிகாலன்? உன்னை பார்த்து ஏன் கரிகாலன் என்று கத்துகிறார்கள்? “என்றான். “அதுதான் எனக்கும் புரியவில்லை.ஏதோ ஒரு விதத்தில் நான் கரிகாலனை...
  17. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம்8 மறுநாள் காலை ஆதவன் கிழக்கே உதித்தான்.அந்த சூரிய உதயம் எத்தனை பேரின் தலை எழுத்தை மாற்றி எழுதப்போகிறதென்பதை யார் அறிவார்? .அணி, அணியாகவும், குழுவாகவும், தனியாகவும் போட்டியாளர்கள் வகைவகையாக வந்து சேர்ந்திருந்தனர்.விழா மேடையில் மகேந்திரனை காணவில்லை.அவன் போட்டி நடக்கும் வழியின்...
  18. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம்7 மரணத்தின் நுழைவாயிலாக கருதப்படும் நீலமலைக்கான நேர்வழியை விடுத்து தன் தம்பி பொய்மான் கரடு வழியை தேர்ந்தெடுத்ததுடன் அதிலேயே பயணம் செய்வேன் என்று அடித்து கூறியதால் அரிஞ்சயன் குழப்பமடைந்ததுடன் அதை ஆதித்தனிடம் கேட்கவும் செய்தான்.இளையவனோ புன்னகையுடன் பதில் கேள்வியை...
  19. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம்6 அன்று இரவு தங்கும் விடுதி ஒன்றில் தங்கிய சகோதரர்கள் இருவரும் தனிமையில் உரையாட ஆரம்பித்தனர்.”அண்ணா! இந்த வேட்டை விழாவை பற்றி நமக்கு எந்த விசயமும் தெரியாது.அதை நாம் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.” “வாஸ்தவம்தான்! அதை தெரிந்து கொள்ள என்னிடம் ஒரு உபாயம் உள்ளது! “என்றான்...
  20. E

    நான்கு பாதை!ஒரு வழி!

    அத்தியாயம்5 அவை முழுவதும் அலையென பரவிய ஆதித்தனின் சிரிப்பை மகேந்திரனின் குரல் தடுத்து நிறுத்தியது.”உன் நகைப்பின் மூலம் இந்த அவையை அவமதிக்கிறாய் ஆதித்தா! “என்று குற்றம் சாட்டியது கொற்றவனின் குரல். “இந்த அவையை அவமதித்தது நான் அல்ல மன்னரே! நீர்தான் நீதி வழங்க வேண்டிய மன்றத்தில் அநீதியை...
Top Bottom