Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL அங்காரகனின் தீத்திரள் அவள் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

சுபாஷினி

New member
Vannangal Writer
Messages
10
Reaction score
13
Points
3
அத்தியாயம் - 1

நகரத்தின் மையத்தில் ஜொலித்து கொண்டிருந்தது அந்த பெரிய மாளிகை. திருமண நிச்சயதார்த்த வரவேற்பிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டு அரண்மனை போல் காட்சியளித்தது அவ்வைபோகத்திற்கு வந்தவர்களுக்கு.

காதலின் முழுத்தொகுப்பு அவள் கண்களில் கரைபுரள தன்னவனின் கை சேர ஏங்கும் விரல்களை மெல்லிய புன்னகையுடன் பார்த்தவள், அவளுக்காக அவளவன் தனித்துவமாக தன் மேற்பார்வையில் வடிவமைக்கப்பட்ட அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த சேலையையும் நகைகளையும் உடலில் பூட்டி அவன் கண்களுக்கு விருந்தாக அவன் முன்னே சென்றாள்.

அவளுக்கு சற்றும் தான் குறைந்தவன் இல்லை என்று அவள் அழகிற்கு இணையாகவும் அவள் கம்பீரத்துக்கு நிகராகவும் பட்டுடுத்தி நின்றிருந்தான் அவள் கைகளை கைப்பற்ற.

இந்த தருணத்திற்காக தானே இத்தனை நாட்கள் அவன் காத்திருந்தான். அவன் கண்களில் அப்படி ஒரு பேரானந்தம், பதுமையாக நடந்து வந்தவளை தவிர அவன் மிழிகள் வேறு எதையும் கண்டிராது அவளை மட்டுமே பார்த்திருந்தான்.

அவளை பட்டுத்துணியில் அமர வைத்த அவனது அன்னை ஐயரிடம் நிச்சயப் பத்திரிக்கையை வாசிக்க கூற, அனைவரும் எதிர்பார்த்த அந்த நிகழ்வு பெரியோர்களின் முன்னிலையில் ஆரம்பமானது.

தனக்கான வேலையை செவ்வன முடித்த ஐயர் அவர்கள் இருவரிடமும் பூமாலையை கொடுத்து அணிந்து கொள்ள கூறினார். இருவரும் இன்முகத்துடன் அதை செய்ய விழா நிறைவாக இருவரையும் மோதிரம் மாற்றிக்கொள்ள பணிந்தார்.

இருவரும் எழுந்து தங்கள் இணையை ரசித்தவாறு அவர் கூறியதை நிறைவேற்ற முனைந்தனர். அவன் கையில் அவன் அன்னை மோதிரம் கொடுக்க அதை பெற்று அவள் கண்களை பார்த்து கண்களை மூடி அந்நொடியை ரசித்து ருசித்து, அவள் பட்டு விரலை மென்மையாக வருடி நீ இன்று முதல் என்னுள் பாதி என்று சான்றோர் முன் பறைசாற்ற எண்ணிய தருணத்தில், மெதுவாக பற்றிய விரலை விட்டான்.

கையில் இருந்த மோதிரத்தை காற்சட்டையில் போட்டு ஒரு மோகனப் புன்னகையை அவள் மேல் செலுத்தி "எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல " என்று மெதுவாக அவள் தலையில் இடியை இறக்கினான் அவள் மனம் கவர்ந்த கள்வன் விகர்ணன்.

"டேய் விகா என்ன டா ஆச்சு உனக்கு இப்படி பேசிட்டு இருக்க?" என்று அவன் அருகே வந்த கல்யாணியை பார்த்த பார்வையிலேயே வாயை மூடிக்கொண்டார்.

அவரை போல் அவனது தந்தையால் இருக்க முடியாதே, "என்ன இது விகர்ணா? உன்கிட்ட இதை நான் எதிர் பார்க்கவே இல்லை. எதுவா இருந்தாலும் நிச்சயதார்த்தம் முடியட்டும் பேசிக்கலாம். ஆதிரா கையில் மோதிரத்தை போடு முதல்" என்றார் லிங்கம்.

"முடியாது அப்பா நான் தான் தெளிவா சொல்லிட்டேனே, எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்று"

"விகர்ணா இது ரொம்ப தப்பு. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் வம்பு பண்ணாமல் நான் சொல்றதை செய்"

எதுவும் பேசாமல் அழுத்தமாக அவளை பார்த்திருந்தவனின் கைகளை பற்றினார் சீதா.
"விகர்ணா என்ன ஆச்சு உனக்கு? இந்த அத்தை முதல் முதலா உன்கிட்ட கேட்கிறேன் ஆதிரா கையில் மோதிரம் போடு ப்ளீஸ்" என்று கிட்டத்தட்ட கெஞ்சினார்.

அவர் இறைஞ்சுவதை பொறுக்காமல் கண்களை இறுக மூடி திறந்தவனது மிழிகளில் எவ்வித உணர்ச்சியும் இல்லை.
இத்தனை நேரம் அவன் கண்களில் இருந்த அந்த காதல் நொடியில் மாறி வஞ்சகம் நிறைந்து காணப்பட்டது.

'தன்மேல் தன்னவனுக்கு காதல் இல்லையா? அத்தனையும் நடிப்பா? தன்மேல் கொண்ட வஞ்சகமா? கண்மூடித்தனமாக தான் இவன் மேல் மையல் கொண்டோமே எல்லாம் இப்படி ஏமாறத்தானோ?' என்று அவள் மனம் ஆயிரம் கேள்வி எழுப்ப எதையும் கருத்தில் கொள்ளாது அவனை ஆழ்ந்து பார்த்தாள் ஆதிரா.

அவள் பார்வையை புரிந்துக் கொண்டவனாக அவளிடம் பேச ஆரம்பித்தான் அத்தனை பேர் இருக்கும் சபையில்.

"உனக்கு என்மேல் அப்படி என்ன காதல்? நான் அவ்வளவு நல்லவன் இல்லையே! நீ செய்த அனைத்தையும் மறந்து உன்னை கொண்டாட நான் என்ன முட்டாளா?"

அத்தனை நேரம் இழுத்து பிடித்த கோவம் எல்லாம் காற்றில் கரைய ஒரே எட்டில் அவன் கழுத்தை பிடித்தவள், "காதல் என்று சொல்லி நீ எனக்கு பண்ண துரோகத்தை மறக்க மாட்டேன்!" என்று அந்த கட்டிடமே அதிர கத்தினாள்.

பெண்ணவள் செய்கையில் சினம் கொண்ட வேங்கையாக அவள் சங்குக்கழுத்தை இறுக்கம் நிறைந்த கைகளால் அழுத்த வலியிலும் அவன் கழுத்தை விடாது இறுக்கியவளை பார்த்தவன் கோவம் குறைவே இல்லை.

இன்னும் சற்று அழுத்தம் கொடுத்தால் அவள் மூச்சு விட திணறுவாள், நிலைமை கைமீறி போய்விடும் என்று வேகமாக விகர்ணனிடம் வந்த அவன் அன்னை அவளை அவன் கைகளில் இருந்து விடுவிக்க, ஆங்காரமாக அங்கு வைத்திருந்த சீர் தட்டுகளை தூக்கி போட்டு கோவத்தை மட்டுப்படுத்த முயன்றான்.

எனினும் அவள்மேல் கொண்ட வெஞ்சினம் கொஞ்சம் கூட குறையவே இல்லை, வார்த்தையால் வதைத்தாலும் அவள் மனம் கலங்காது என்று தெரிந்தவனுக்கு கோவம் கொழுந்து விட்டு எரிந்தது அதற்கு சற்றும் குறையாத சீரும் சிறுத்தையாக நின்றிருந்தாள் ஆதிரா.

வாயை குவித்து உஃப் என்று ஊதியவன், "சரி உன்னை நானே கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனால் கல்யாணத்துக்கு அப்பறம் எனக்கு பொண்டாட்டியா மட்டும் இருக்கணும் எல்லாத்தையும் விட்டுட்டு"

அவன் கூறியதை கேட்டவள், "முடியாது என்னால் என் பிசினஸ்ஸை விட முடியாது. உன்னால் என் ஹவுஸ் ஹஸ்பண்ட்டா இருக்க முடியுமா?" என்று கேட்க விகர்ணனின் பொறுமை எங்கோ பறந்தது.

"இந்த ஜென்மத்தில் என்னை மீறி உன்னை எவன் கல்யாணம் பண்ணிக்கிறான்னு நானும் பார்க்கிறேன். என்னோட இன்னொரு முகத்தை நீ பார்க்கவேண்டிய நேரம் வந்துருச்சு"


"ஹே உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ, இப்போ சொல்லுறேன் நல்லா காதை திறந்து கேட்டுக்கொள். இந்த தீராவோட கழுத்தில் இந்த விகர்ணன் கட்டுற தாலி தான் தொங்கும். இல்லை! இப்போ இருக்க மாதிரியே கெத்தா திமிரா உன் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டுவேனே தவிர உன் காலில் விழுக மாட்டேன்" என்று நிச்சயம் நின்ற கோவத்தில் எதிரே நின்று இருந்தவனிடம் பேசிய ஆதிரா ராமசந்திரன் தன்னை சார்ந்தவர்களை கூட கண்டுக்கொள்ளாமல் மணப்பெண் அலங்காரத்தில் அவ்விடத்தை விட்டு நொடியில் அகன்றாள்.

தன்மேல் கொண்ட அன்பிற்காவது அவளை ஏற்பான் என்று நினைத்த சீதாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனினும் விகர்ணன் மேல் மட்டும் அனைத்து பழியையும் போட முடியாதே, தான் பெற்ற மகளின் குணமறிந்தவரால் இப்போது கண்ணீர் சிந்துவதை தவிர வேறு என்ன செய்ய இயலும்.

ராமச்சந்திரனுக்கு இப்படி ஒரு காரியம் நிகழும் என்று தெரிந்ததோ என்னவோ முகத்தில் எதையும் காட்டாது மாறி மாறி மகளையும் விகர்ணனையும் பார்த்தவாறு நின்றிருந்தார்.

அவள் செல்வதை கண்டவன் கண்கள் மின்ன அருகே இருந்த அறைக்கு சென்று கதவை அடைத்துக்கொள்ள அங்கிருந்த அனைவரும் வெறும் பார்வையாளராக மாறி போய் இருந்தனர்.

இருவரின் பெற்றோர்களும் வந்தவர்களிடம் மன்னிப்பை வேண்டி அனுப்பி வைத்து மாற்றத்தை பேச முடிவு செய்தனர். அனைவரையும் வழி அனுப்பி வைத்து கூடத்தில் கூடினர். இது தெரிந்தும் அதை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் நிச்சயதார்த்த ஆடையை கலைத்து கூடி இருந்தவர்களை காணாது காரை எடுத்து கொண்டு கிளம்பினான்.

இருவரின் வெஞ்சினமும் சற்றும் குறையவில்லை இருவரும் தங்கள் இடத்தில் இருந்து இறங்க முன் வரவில்லை பின்பு எப்படி காதல் என்று வந்து நின்று இந்நன்னாளில் இப்படி ஒரு காரியத்தை செய்தனர் என்று இரு குடும்பத்தினருக்கும் குழப்பம் மட்டுமே மிஞ்சியது.

நிலைமையை சரி செய்ய நினைத்த ராமச்சந்திரன், சிறிது காலம் பொறுத்திருப்போம் இருவரின் முடிவுக்கும் காலமே பதில் சொல்லும் என்று அங்கிருந்து புறப்பட ஆயத்தமாகினர். மனப்பாரத்துடன் அவர்களை வழியனுப்பி வைத்தார் லிங்கம்.

போதும் என்று தன் கதிர்களை சுருக்கி தன் வெம்மையை ஆதவன் குறைத்து கொண்டிருக்க, அங்கோ இரு உள்ளம் தகித்து கொண்டிருந்தது தம் கொதிநிலையை குறைக்க முடியாமல்.

இருவரின் நண்பர்களும் குடும்பத்தினரும் இவர்களை தொடர்பு கொள்ள முயன்று தோற்று போக, அவர்களே சரி செய்யட்டும் என்று விட்டுவிட்டனர் வேறு வழியின்றி.

மனமெல்லாம் விகர்ணனின் செய்கைகளே நிறைந்து இருந்தது ஆதிராவிற்கு. காதல் என்று வந்து நின்றவன் அவன் தானே? தம்மை துணைவி என்று காதல் பித்து கொண்டு தன் பின்னால் அலைந்தது அவன் தானே? அவன் மேல் கொண்ட ஈர்ப்பை காதலாக மாற்றியதும் அவன் தானே? இன்று தம்மை விட்டு சென்றதும் அவன் தானே? என்று மனம் நொடிக்கு நொடி அவளை வதைக்க, கண்ணீர் என்று அறியாதவள் முதல் முறை நெஞ்சம் விம்மி விழிநீரை உதிர்த்தாள் காதல் கொடுத்த அடியினால்.

காதல் கொண்ட ஒரு மனம் இங்கே கதற காதல் காதல் என்று அவளை சுற்றியவன் இலக்கின்றி மகிழுந்துவை இயக்கி எங்கே செல்கிறான் என்று தெரியாமல் அந்த சாலையில் பயணித்துக் கொண்டிருந்தான்.

இவர்களின் விளையாட்டை கண்டும் காணாதும் இருந்த நிலவு மகள் மேகத்துடன் ஒளிந்து விளையாடி களைத்து தன் காதலனின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தது.


காலை ஒன்பது மணி எப்பொழுதும் இருக்கும் படபடப்பு இல்லாமல் இன்று ஒரு சலசலப்புடன் காணப்பட்டது அந்த அலுவலகம். அவள் இன்று வரமாட்டாள் என்று எண்ணியவர்களுக்கு மறுப்பாக தான் ஒரு இரும்பு பெண்மணி இந்த சிறு விடயம் என்னையும் என் மனதையும் சருக்காது என்று எப்பொழுதும் போல் நிமிர்வான பார்வையுடன் உள்ளே வந்தவளை ஏளனமாக வரவேற்றது என்னவோ அவளை வேண்டாம் என்று அத்தனை பேர் முன்னால் கூறிய விகர்ணன் தான்.

அதை சிறிதும் மனதில் போட்டுக்கொள்ளாமல், அவனை எதிர்கொண்டாள்.

"எஸ் மிஸ்டர். விகர்ணன் இன்னைக்கு சைன் செய்ய வேண்டிய காண்ட்ராக்ட் எல்லாம் நான் படிச்சுட்டேன் அதை உங்க ஆபீஸ்க்கு காலையில் அனுப்பிட்டேன் " என்று அவனை பார்த்தாள்.

அவள் பார்வையின் அர்த்தம் விளங்கியதும், உதடை பிதுக்கி "இன்னும் நீ அடங்கவே இல்லை டி கொஞ்சம் கூட உனக்கு மனசு இருக்க இல்லையா இரும்பு மாதிரி இன்னும் நிற்கிற?" என்று அவளை நெருங்கினான் விகர்ணன்.

அவன் மேல் அழுத்தமாக பார்வை செலுத்தினாளே தவிர அவன் பேசியதற்கு பதில் பேசவில்லை அதற்கு மாறாக அவன் அலைபேசி விடாமல் ஒலித்து கொண்டே இருந்தது.

அதில் கடுப்புற்றவன் யாரென்று பார்க்க அதில் அவன் தந்தையின் படம் ஒளிர்ந்தது.

நெற்றியை சுருக்கி அதை எடுத்தவன், எதிர்புறம் என்ன சொல்லப்பட்டதோ தெரியவில்லை எதிரே நின்று தன்னை விழுகுபவளை தீயாக முறைத்து கண்கள் சிவக்க அவள் நாடியை அழுத்தி பிடித்து தன்னிடம் இழுத்து கீழே தள்ளி திரும்பி பார்க்காது அவ்விடத்தை விட்டு அகன்றான்.

அவன் செய்கையால் கோவம் எழுந்தாலும் தான் செய்த காரியத்தை எண்ணி இதழ் பிரித்து சிரித்து, "அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி" என்று அவன் காதுப்பட பாடி அவனை வெறுப்பேத்தியவள் அடுத்து அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டாள் விகர்ணனின் தீரா.



கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள,
Thread 'மாயநதி கரையினிலே - Comments' https://www.sahaptham.com/community/threads/மாயநதி-கரையினிலே-comments.478/
 
Last edited:

சுபாஷினி

New member
Vannangal Writer
Messages
10
Reaction score
13
Points
3
வணக்கம் மக்களே,

மன்னிக்கவும் ஏற்கனவே மாயநதி கரையினிலே என்று தலைப்பில் கதை உள்ளதால் வேறு தலைப்பு மாற்றியுள்ளேன்.

புதிய தலைப்பு :
அங்காரகனின் தீத்திரள் அவள்
 

சுபாஷினி

New member
Vannangal Writer
Messages
10
Reaction score
13
Points
3
அத்தியாயம் - 2

ஆதிராவின் அலுவகத்தில் இருந்து வெளியே சென்றவன் அதிவேகத்தில் மகிழுந்தை செலுத்தியவாறு தன் தந்தை கூறியதை அசைப்போட்டான்.

"விகர்ணா இனி நம்ப டை-அப் ப்ராஜெக்ட் எல்லாம் ராமச்சந்திரன் தான் கவனிக்க போகிறார். இனி ஏ.ஆர் குரூப்பில் இருந்து ஒரு டீம் இங்கேயே வந்து ப்ராஜெக்ட் முடியும் வர ஸ்டே பண்ணி முடிக்க பெர்மிஸ்ஸன் கேட்டு அப்ரூவ் வாங்கிருக்காங்க. அதனால் அங்க உனக்கு இனி எந்த வேலையும் இல்லை. அப்பறம் தேவையில்லாமல் இனி ஆதிராவை பார்க்க போகக்கூடாது. இனி உன் இஷ்டத்துக்கு எல்லாம் விட முடியாது. இன்னைக்கு ஈவினிங் உனக்கு பொண்ணு பார்க்க போகிறோம். ஏதாவது பிரச்சனை பண்ணனும்ன்னு நினைக்காத அப்பறம் நீ அதற்கான பின் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்" என்று படப்படவென்று பேசி அவனுக்கு வாய்ப்பளிக்காமல் அழைப்பை துண்டித்தார்.

தன் தனயனை பற்றி அறிந்த தந்தை அல்லவா? அதனால் பேச இடம் கொடுக்காது பேச வேண்டியதை பேசி வைத்துவிட்டார்.

இதற்கு எல்லாம் அவள் தான் காரணம் என்று தெரிந்தும் எதுவும் செய்யாமல் வந்தது, அவளிடம் தான் இறங்கி போவதாக தோன்ற அவள்மேல் கொண்ட கோபம் முழுவதையும் காரின் வேகத்தில் காட்டினான்.

நாற்பது நிமிட பயணத்தை, வெறும் இருபது நிமிடத்தில் அடைந்தான். அழுத்தமான நடையுடன் உள்ளே வந்தவனை கண்டு வேகமாக எழுந்து காலை வணக்கத்தை கூறியவர்களுக்கு சிறுத் தலையசைப்பை பதிலாக கொடுத்து அவன் அறைக்கு சென்றான்.

இருக்கையில் அமர்ந்தவன் மனம் முழுவதும் அவள் என்ன திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கிறாள் என்று தெரியாமல் குழம்பினான். ஆனால் அதற்கு காரணமானவளோ அழைப்பேசியில் யாரையோ அழைத்து அவளுக்கு தேவையானதை பெற்று குறுநகையுடன் அவனை காயப்படுத்தும் நோக்கத்துடன் அவள் வேலையை ஆரம்பித்தாள்.

இரவு ஒன்பது மணியளவில் ஓயமால் ஒலித்த அலைபேசியால் இமைகளை பிரித்தான். காரிருள் தன்னை சூழ்ந்திருக்க தான் எங்கே இருக்கிறோம்? என்று விழித்தான் விகர்ணன்.

சிறிது நேரம் கழித்து தான், இன்னும் அவன் அலுவலகத்தில் இருப்பது புரிந்தது. அதிகமான யோசனையில் தூங்கியதை உணர்ந்து கலைந்திருந்த கேசத்தை சரி செய்து மின் விளக்குகளை போட்டு அழைப்பேசியை எடுத்தான்.

கிட்டத்தட்ட இருபது முறை ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்திருந்தது, யாராக இருக்கும் என்று யோசிக்கும் போது மீண்டும் அந்த எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

அதை ஏற்று, "ஹலோ!" என்று கூறி முடிக்கும் முன்பே,
"விகா நான் அஞ்சலி பேசுகிறேன். என்னை யாரோ கிட்நாப் பண்ணிட்டாங்க. எனக்கு பயமா இருக்கு விக்கி போன் எடுக்க மாட்டேங்கிறான் என்னை காப்பாத்து" என்று பேச பேச அழைப்பு துண்டிக்கப்பட்டது.

விகர்ணனிற்கு குழப்பமாக இருந்தது, தன்னிடம் பேசியது அஞ்சலி தான் என்று அவள் குரலே கூறியது. அவள் இருக்கும் இந்த நிலையில் அவளை யார் கடத்தியிருப்பார்கள் என்று யோசித்தவாறு அவள் எண்ணிற்கு அழைத்தான்.

அது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்று கூற அடுத்து என்ன செய்ய பேசாமல் காவல்துறையிடமே செல்லலாம் என்று வேகமாக எழுத்தவனுக்கு ஆதிரா அழைத்தாள்.

இந்த நேரத்தில் இவள் எதற்காக அழைக்கிறாள் என்று வேண்டா வெறுப்பாக ஏற்க, "விகா நான் அஞ்சலி பேசுகிறேன். என்னை யாரோ கிட்நாப் பண்ணிட்டாங்க. எனக்கு பயமா இருக்கு விக்கி போன் எடுக்க மாட்டேங்கிறான் என்னை காப்பாத்து" என்று அஞ்சலி பேசியதை போல பேசிக் காட்டினாள்.

"ஏய் எதுக்குடி அஞ்சலியை கடத்திருக்க? உன்னை போலீஸில கம்பிளைண்ட் பண்ணி என்ன செய்கிறேன்னு பாரு"

"அதுவரை உன் ஆசை காதலி உயிரோட இருக்கணுமில்லை"

"உன்னை கொன்றுவேன் டி. அவளுக்கு எதாவது ஆனா" என்று கர்ஜித்தான்.

"நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லிட்டனா, அவளை பத்திரமா கொண்டு போய் விட்டறேன்"

"என்ன டி பிளாக்மெயில் செய்றியா?"

"எப்படி வேணாலும் நீ வைச்சுக்கோ, எனக்கு தேவையானதை சொல்லிட்டனா அவளை பத்திரமா அனுப்பிடறேன்"

அவளிடம் வாக்குவாதம் செய்வதை காட்டிலும் அங்கு நிறைமாத கர்ப்பிணியான அஞ்சலியே முக்கியமாக தெரிந்தாள். இப்படி அவளிடம் இறங்கி செல்வது பிடிக்கவில்லை என்றாலும் அஞ்சலிக்காக பொறுத்து பேசினான் பின்பு ஆதிராவை பார்த்துக் கொள்ளலாம் என்று.

"என்ன டி உனக்கு வேணும் கேட்டு தொலை" என்று அவன் கர்ஜித்ததை கூட பொருத்தப்படுத்தாமல் அவனிடம் கேட்டாள்.

"ஏன் என்னை காதலிச்ச மாதிரி நடிச்ச?"

வெளிப்படையாக உச்சுக் கொட்டிய விகர்ணன், "இப்போ அதை பத்தி பேச நேரம் இல்லை. எதுக்கு டி இந்த நேரத்தில் அஞ்சலியை கஷ்டப்படுத்திட்டு இருக்க?" என்றவன் பேச்சில் இன்னும் அஞ்சலி மேல் கொண்ட அன்பு அப்படியே வெளிப்பட்டது.

இதற்கு தானே தவறு என்று தெரிந்தும் இந்த நிலையில் அவளை கடத்திருந்தாள்.
இப்படி எல்லாம் கேட்டால் பதில் அளிக்கமாட்டான் என்று புரிந்துக் கொண்ட ஆதிரா, "உன் எக்ஸ் சாவுக்கு நீ தான் டா காரணம்!" என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

அவள் துண்டித்ததும் அவள் கூறியதை கேட்டவனின் நாளங்கள் வெடிக்க தயாரான நிலையில் இருக்க, தானாக அவளை வசைபாட திறந்தது அவனது அதரங்கள்.

"தீரா உன்னை கொல்லாமல் விட மாட்டேன்" என்று தொடுதிரையில் அவள் முகத்தை பார்க்க சகிக்காமல் தூக்கி எரிய அது மூன்றாம் தளத்தில் இருந்து விழுந்து தன் முடிவை தேடிக்கொண்டது.

தன் கோபத்தை குறைத்து கொள்ள முடியாமல் அவளை கொல்லும் வெறியில் அவளை நோக்கி செல்ல அவளோ அவனின் ஆருயிர் காதலி அஞ்சலியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள் அந்த வனாந்திர காட்டிற்குள்.

தான் செய்த செயலால் விகர்ணன் கொலைவெறியில் இருப்பான் என்று தெரிந்தும் அவனை சீண்டும் விதத்தில் அவனுக்கு மீண்டும் அழைக்க அது அணைத்து வைத்திருப்பதாக கூறியது.

சரி முதலில் அஞ்சலியை சந்தித்து அவனை பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த விருந்தினர் மாளிகைக்குள் சென்றாள். அங்கு அஞ்சலிக்கு காவலுக்காக அமர்த்தப்பட்ட நான்கு காவலாளிகள் அவளுக்கு வணக்கம் வைத்து வெளியே செல்ல, உள்ளே சென்றாள் ஆதிரா. அங்கு அஞ்சலியோ பதற்றமாக அருகே இருந்த பெண்ணிடம் அவளை விட்டு விடும்படி கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

"அஞ்சலி" என்ற ஆதிராவின் அழைப்பில், "அக்கா வந்துட்டியா என்ன இவங்க கடத்திட்டு வந்துட்டாங்க, எனக்கு பயமா இருக்கு. பேபி மூவ்மெண்ட் வேகமாக இருக்கு" என்றாள் பதறியப்படி.

"காம்டவுன் அஞ்சலி. ரிலாக்ஸ் நான் தான் வந்துட்டேனில்ல எதுக்கு பயம்?" என்று அவளிடம் கூறியவாறு அருகே இருந்த தண்ணீர் போத்தலை அவளிடம் கொடுக்க, மறுக்காமல் அதை அருந்தினாள்.

"அஞ்சலி எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு அது வரை நீ இங்க தான் இருக்கனும். உனக்கு எந்த பிரச்சனையும் வராது நான் சொன்னப்படி கேட்டால் நீயும் என் குட்டி பாப்பாவும் எந்த சேதாரமும் இல்லாமல் வீட்டுக்கு போகலாம்" என்று கூற ஆதிராவை அதிர்ந்துப் பார்த்தாள்.

"ஆதி அக்கா என்ன சொல்லுறீங்க? எனக்கு பயமா இருக்கு?" என்று கூற அவளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஆரம்பித்தது.

"அஞ்சலி உன்னை ரிலாக்ஸ் ஆக சொன்னேன் எதுக்கு இவ்வளவு பதற்றம்? எனக்கும் விகர்ணனுக்கும் ஒரு கணக்கு இருக்கு அதுக்கு நீ ஒரு துடுப்பு சீட்டு. உன்னை தவிர வேற யார வைத்தும் அவன்கிட்ட உண்மையை வாங்க முடியாது" என்று கூறியவளை வெட்டவா குத்தவா என்று பார்த்தாள் அஞ்சலி.

திடிரென்று புதிதாக வலி எடுக்க, தன் உதிரத்தில் உருவான உயிர் வெளியே வர போகிறதோ? என்று பயம் தொற்றிக் கொண்டது அஞ்சலிக்கு.

"ஆதிரா எனக்கு லேபர் பெயின் ஸ்டார்ட் ஆகுது ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ" என்று இடுப்பில் மின்சாரம் பாய்ந்தது போல எழுந்த வலியில் அஞ்சலி கெஞ்சினாள்.

அருகில் இருந்த பெண் அவள் அப்படி கூறியதும் அஞ்சலியின் வயிற்றை தொட்டு பார்க்க குழந்தை பிறக்க இன்னும் சில மணிநேரம் ஆகும் என்பதை தெரிந்துக் கொண்டாள்.

"மேம் இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் ஆகும்" என்று கூற அது போதும் தனக்கு என்று விகர்ணனை அழைத்தாள்.

வலியில் இருந்த அஞ்சலிக்கோ பயம் தொற்றிக்கொண்டது. ஆதிராவை பற்றி தெரிந்தவள் அல்லவா, அவள் தன்னை பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்வது அவளுக்கு பயத்தை கொடுக்கவில்லை. ஆனால் எதற்காக இந்த நிலையில் தன்னை பயன்படுத்துகிறாள். குழந்தைக்கு ஏதாவது ஆகிவிட்டால்? தனக்கு ஏதாவது ஆகிவிட்டால்? என்று மனம் அலைபாய, "அம்மா......" என்று அடி வயிற்றை பிடித்து கத்தினாள்.

பார்க்க பாவமாக இருந்தாலும் மனதை மாற்றி அழைப்பை அவன் ஏற்பதற்காக காத்திருந்தாள்.

சில நொடியில் எடுத்தவன், "நீ எங்க இருக்கன்னு கண்டுபிடிச்சுட்டேன். வந்து பேசிக்கிறேன்" என்று அவன் கத்த, அவனுக்கு மேல் அஞ்சலியின் குரல் அவன் செவிகளை எட்டியது கதறலாக.

"என்னடி பண்ண அஞ்சலியை" என்று அடக்கப்பட்ட கோபத்தில் கேட்டான்.

"நான் ஒன்னும் பண்ணல. அவளுக்கு லேபர் பெயின் ஸ்டார்ட் ஆகிருச்சு. நான் அவளை வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன்."

"நீயெல்லாம் மனுஷியா டி? அவளுக்கு ஏதாவது ஆனால் உன்னை கொன்றுவேன்".

"இப்பொழுது சொல்லுறேன் அவளுக்கு ஏதாவது ஆனால் அதுக்கு காரணம் நீ தான். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருந்தா இந்நேரம் அவளை வீட்டுக்கு கொண்டு போய் விட்டிருப்பேன். அவளும் டென்ஷன் ஆகியிருக்க மாட்டாள். ஒன் வீக் அப்பறம் கொடுத்த டேட் அன்னைக்கு என் குட்டி பாப்பா வந்திருப்பான். இப்போ எல்லாம் உன்னால் தான்"

"ஆதிரா நான் கொஞ்சம் நேரத்தில் அங்கே வந்துவிடுவேன் அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ. நேரில் பேசிக்கலாம், ரெண்டு உயிர் டி அது ப்ளீஸ்" என்று இதுவரை கெஞ்சி பழக்கமில்லாத விகர்ணன் கெஞ்சியும் மனம் இளகவில்லை நேற்று அவன் நடந்து கொண்டதில்.

"ஏன் என்னை காதலிச்ச மாதிரி நடிச்ச? " என்று திரும்ப திரும்ப அவள் கேட்க அருகே வலி தாங்காமல் கதறும் அஞ்சலியின் அலறல் நன்றாக கேட்டது அவனுக்கு.

அவளது அலறலில் அவன் இருதயம் தாறுமாக துடிக்க, அவளை சமாளிக்கும் நோக்கத்தில், "அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ போகாதே எனக்கு என்ன?" என்றான்.

சரியாக அந்த நேரம் அவள் போனை லௌட் ஸ்பீக்கரில் போட அவன் பேசியதை கேட்டு வலியில் துடித்தாள் அஞ்சலி.

அவனுக்கு கேட்கும் வண்ணம் "உன்னை காதலிச்ச பாவத்துக்கும் இவளை அக்காவா நினைச்ச பாவத்துக்கும் என் குழந்தை ரொம்ப அனுபவிக்குது. பாவிங்களா உங்க சண்டையை அப்பறம் போடுங்க என்னை முதல் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க" என்று உச்சபச்ச குரலில் கத்தினாள்.

அவ்வளவு தான் "உனக்கே அக்கறை இல்லை எனக்கு எதுக்கு. குட் பை" என்று துண்டித்தாள். மூவர் மனமும் தகிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

"இன்னைக்கு இது போதும் இனி தினம்தினம் ஏன்டா இப்படி ஒரு காரியத்தை பண்ணோம் என்று உன்னையே கதற விடவில்லை நான் ஆதிரா இல்லை" என தனக்கு தானே பேசி அந்த பெண்மணியை பார்க்க, "மேடம் எல்லாம் ரெடியா தான் இருக்கு. அவங்களை இப்போ லேபர் ரூமிற்கு கூட்டிட்டு போறேன்" என்று கூறியவர்.

"நர்ஸ்" என்று கத்த இருவர் வேகமாக வந்தனர், அவர்களை தாண்டி வேகமாக அவளை நெருங்கியவனை பார்த்த ஆதிரா, "சாரி அண்ட் தேங்க்ஸ்" என்றாள்.

தலையை அசைத்தவன் வலியில் துடித்துக் கொண்டிருந்தவளை கைத் தாங்களாக அவர்கள் தயார் செய்திருந்த அறைக்கு அழைத்து சென்றான். பிரசவம் பார்க்க தேவையான அனைத்து உபகரணங்களும் தயாராக இருந்ததை கண்டு யோசனையாக அவளவனை பார்த்தாள்.

"அஞ்சு இப்போ நம்ம குழந்தையை மட்டும் யோசி, மற்றத்தை அப்பறம் பேசிக்கலாம்"

"விக்கி கூடவே இருங்க எனக்கு பயமாக இருக்கு"

"இங்க தான் இருக்கேன் தங்கம்" என்று அவள் கைகளை இறுக்கி பற்றிக்கொண்டான்.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு இப்பூவுலகில் கால் பதித்தது அந்த பூந்தளிர். அயர்வின் காரணமாக அஞ்சலி மயக்கத்திற்கு செல்ல, குழந்தையை கழுவி துடைத்து தூக்கிக் கொண்டு வெளியே வந்தான் விக்னேஷ்.

ரோஜா நிறத்தில் பட்டுபோல் மின்னியது அவளின் பாதம். அதை பார்த்தவாறு வந்தவள் கையில் விக்கி கொடுக்க சிலிர்த்து போனாள் ஆதிரா.

ஏதோ பேச வந்தவளை, "அப்புறம் பேசிக்கலாம். இப்போ புயல் ஒன்னு வந்துகிட்டு இருக்கு நான் போய் அதை கவனிக்கிறேன். நான் வரவரைக்கும் என் பொண்டாட்டியை பயமுறுத்தாத, பத்திரம்" என்று கூறி வெளியே செல்ல அதிவேகமாக மகிழுந்தில் வாயிலை தாண்டி உள்ளே வந்து சேர்ந்தான் விகர்ணன்.

வேகமாக வெளியே இறங்கியவனின் கண்கள் ரத்த சிவப்பில் அவன் கொண்ட கோபத்தை காட்டிக் கொடுக்க,
மெதுவாக அவனிடம் சென்றான் விக்கி.

"எங்க போயிருந்த அஞ்சலியை தனியாக விட்டு?" சட்டையை பற்றி கேட்டு உள்ளே செல்ல எத்தனிக்க, "விகா பேசணும்" என்றான்.

"முதல் அஞ்சலிக்கு என்னாச்சு அந்த ராட்சசி என்ன பண்ணா?"

"ரிலாக்ஸ் விகா ஷி இஸ் பைன், இப்போ கொஞ்சம் வெளியே வா. நான் உன்கிட்ட பேசணும்" என்று கூட்டி சென்றான்.

அதை ஜன்னல் வழியாக பார்த்தவள் இதழ்கள் தானாக மலர, கையில் இருந்த மொட்டை கொஞ்ச ஆரம்பித்தாள் இரண்டாம் தாயாக.



-தகிக்கும் அழலாக நாயகன் நாயகி
 

சுபாஷினி

New member
Vannangal Writer
Messages
10
Reaction score
13
Points
3
அத்தியாயம் - 3

ஏற்கனவே ஆதிரா மீது கொலைவெறியில் வந்தவனுக்கு விக்கியின் இந்த மெத்தனமான செய்கை எரிச்சலை ஏற்படுத்தியது.
வெளிப்படையாக அதை முகத்தில் காட்டியும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத விக்கி அவனை அங்கு போடப்பட்டிருந்த கல்லிருக்கையில் அமரச் சொல்லி அவனும் அமர்ந்தான்.

"இந்த நேரத்தில் என்ன பேசணும் விக்கி. நாளைக்கு வீட்டுக்கு வா பேசிக்கலாம். இப்போ போய் அஞ்சலியை பார்க்க விடு" என்று அவன் ஏதோ தன்னை வேண்டுமென்றே உள்ளே விடாமல் இப்படி செய்கிறான் என கடுக்கடுத்தான் விகர்ணன்.

"விகா ஏன் ஆதிராவுடன் நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தின? " என்று பட்டென்று அவனிடம் கேட்டுவிட்டான் விக்கி.

"உனக்கு தேவையில்லாததில் நீ தலையிடாமல் இருப்பது உனக்கு நல்லது!" என்று விரல் நீட்டி எச்சரித்து உள்ளே செல்பவனை தடுக்க கைகளை பிடித்தான்.

"கையை மரியாதையா விடு விக்கி என் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு!"

"நான் இன்னும் பேசி முடிக்கல, பேசிட்டு போ" என்றான் விகர்ணனுக்கு இணையான அழுத்தத்துடன்.

குழந்தை அழுக பசியாற்ற அஞ்சலியிடம் குழந்தையை கொடுத்துவிட்டு வெளியே வந்தவள் கண்டது என்னவோ கைகலப்பில் இருந்த இருவரை தான். அதிர்ந்து நின்ற ஆதிரா சுதாரித்து அங்கிருந்த காவலாளிகளை விரைந்து அவர்களை பிரிக்குமாறு கூறி பின்னே ஓடினாள்.

காவலாளிகள் சிரமப்பட்டு அவர்களை பிரித்தும் கோவம் அடங்காமல் திமிர வேறு வழியில்லாமல் விக்கியிடம் அஞ்சலி அவனை பார்க்கவேண்டும் என்று கூறியதாக கூறினாள். அது உண்மையில்லை என்று அறிந்தும் பெரிதுப்படுத்தாமல் விகர்ணனை முறைத்த வண்ணம் உள்ளே சென்றான் விக்கி என்கிற விக்னேஸ்வரன்.

அவன் சென்றதும் தன் கைகளை பிடித்திருந்த காவலாளிகள் கைகளை உதறி அவர்களை முறைத்தான். அவர்கள் மிரண்டு ஆதிராவை பார்க்க தான் பார்த்துக்கொள்வதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தாள்.

அவர்கள் செல்லும் வரை அமைதியாக நின்றவன் அவள் கைகளை முறுக்கி முதுக்கு பின் திருகி அழுத்த, வலித்தாலும் அவனை பார்த்தவாறு நின்றாள் எதுவும் பேசாமல்.

"என்ன தைரியம் இருந்தால் அஞ்சலியை இப்படி கடத்திட்டு வந்து என்னை பிளாக்மெயில் பண்ணி இருப்ப? உன்னை கொல்லாமல் விட்டா இன்னும் என்ன வேண்டுமானாலும் பண்ணுவ?" என்று மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவள் முகத்திற்கு முன் நீட்டினான்.

"உனக்கு எதுக்கு சிரமம்?" என்று இடதுகையால் அவன் பிடித்து இருந்த துப்பாக்கியை மார்பில் நேர் இழுத்து அவன் கையை அழுத்த, காற்றை கிழித்துக்கொண்டு குண்டு அவள் தோலை பிய்த்து உள்ளே பாய அவன் முன்னே சரிந்தாள் ஆதிரா.

'தான் நினைத்தது என்ன? அவள் செய்தது என்ன?' என்று யோசிக்க முடியாத அளவிற்கு அந்த நிகழ்வு அவனை நிலைகுலைய வைத்திருந்தது. "காதலன் சுட்டால் எதிரி மடியில் இறப்பு. இதில் நான் ரொம்ப ஸ்பெஷல் ஏன்னா எனக்கு ரெண்டுமே நீ தான்" என்று கூறி தான் உயிரை விட்டிருந்தாள் அவன் மடியில்.

தலையை இருபுறமும் ஆட்டி என்ன இது என கண்களை மூடி திறந்தவன் முன்னே அலட்டிக் கொள்ளாமல் அப்படியே நின்றிருந்தாள்.

'சீ என்ன இப்படி எல்லாம் நம்ம நினைப்பு போகுது' என்று தன்னை சமன் செய்து அவளை பார்த்தவாறு துப்பாக்கியை உள்ளே வைத்தான்.

அவளிடம் தான் இறங்கி போவதை காட்டக்கூடாது என்பதற்காக, "உன்னை இதை வைச்சு கொன்னா கூட இதுக்கு தான் அசிங்கம்" என்று அவள் கையை மேலும் திருகினான்.

"ஏன் இப்போ சமாளிக்கிற? பட்டுனு போட்டா பொட்டுனு போயிட போகிறேன். நீயும் நானில்லாமல் நிம்மதியாக இருக்கலாம்" என்று கூறி அவனை பார்க்க கண்களில் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் அவளாசையை நிராசையாக மாற்றியிருந்தான்.

"ஆமாம் டி. ரொம்ப நிம்மதியா தான் இருப்பேன். செத்து தொலை!"

"அதெப்படி நீ நிம்மதியா இருக்கலாம். என்னால் நீ அனுபவிக்க வேண்டியது எவ்வளவு இருக்கு? நான் செத்தாலும் உனக்கு நிம்மதி இருக்காது அப்படி தான் நான் சாவேன்" என்றாள் திமிராக.

அவளை அப்படியே தள்ளிவிட பிடிப்பின்றி கீழே விழுந்தவள் எழுந்து கையை தேய்க்க இடதுகையை சுத்தமாக அசைக்க முடியவில்லை, வலி உயிர் போனது. கீழே பார்த்தால் அவன் விரல் ஆச்சு படிந்த இடமெல்லாம் கன்றி போய் ஊதா நிறத்தில் இருந்தது.

அவன் முன் வலியை காட்டாமல் நிற்க மேலும் கோவம் வந்தது விகர்ணனுக்கு, "அப்படி என்ன டி உனக்கு வீம்பு? வலியை கூட காட்டாத கண்ணு இப்படி அழுத்தமா இருந்து என்னத்தை சாதிக்க போகிற?" என்று மொத்தம் பலத்தையும் திரட்டி அவளை அடிக்க போக அப்படியே இறுகி நின்றிருந்தாள்.

அவள் மேல் காட்ட நினைத்த கோவத்தை அருகே இருந்த மரத்தில் காட்ட விரல் முட்டி சிராய்த்து குருதி எட்டி பார்த்தது. அவ்வளவு நேரம் விறைத்து நின்றவள் கண்களில் அவன் ரத்தம் பட அனைத்தையும் தூக்கி போட்டு அவனிடம் செல்ல அடுத்த குத்து குத்தினான் அதே கையால்.

"கர்ணா என்ன இது?" என்று அவனை நெருங்க, கொத்தாக அவள் முடியை பிடித்து தன்புறம் இழுத்தவனது கேள்வி, "ஏன் டி என்ன படுத்துற? உண்மையாவே நான் உன்னை காதலிக்கலை! உன்னை பழிவாங்க தான் உன்னை நெருங்கினேன். என்ன விட்டு தள்ளி இருக்கிறது தான் உனக்கு நல்லது!" என்று அவளை விரல் நீட்டி எச்சரித்து கடந்து சென்றவனை நிறுத்தினாள்.

"இதுவரை தான என்னை காதலிக்கல? இனி என்னை காதல் செய், இல்லை நான் அதை செய்ய வைப்பேன்" என்று எம்பி அவன் இதழில் தானாக பதிக்கும் முதல் முத்திரையை பதித்து நிற்காமல் உள்ளே சென்றாள்.

"எனக்கு ஒரு சந்தேகம்?" என்ற அவனது இறுகிய குரலில் திரும்பினாள் ஆதிரா.

"என்ன?"

"உனக்கு காதல் என்மேலயா? இல்லை என் உடம்பு மேலேயா?"

"பொய் சொல்லட்டா உண்மையை சொல்லட்டா?"

"அது உன் இஷ்டம்" என்றான் தோளை குலுக்கி.

"நீ எதை பார்த்து என்னை காதலிக்கிறேன்னு நெருங்கி என் தேகத்தை தொட்டயோ, அதை பார்த்து மயங்கி உன்னை காதலிக்க ஆரம்பிச்சேன்" என்று தெளிவாக எதையும் கூறாமல் அவனை பார்த்தாள்.

"என்னை நீ தான் டி டெம்ப்ட் பண்ண. ஆனால் அந்த அளவுக்கு எதுவுமே நான் பண்ணலையே" என்றான் வெளிப்படையாக.

"அதே தான் நானும் சொல்லுறேன்" என்று அதற்கு முற்றுபுள்ளி வைத்து அங்கிருந்து சென்றாள்.

தன்னை எந்த விதத்திலும் அவள் வார்த்தைகள் பாதிக்கவில்லை என்கிற விதத்தில் அஞ்சலியை காணச் சென்றான். அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவள் அருகே அமர்ந்து தங்கள் மகவின் பாதத்தை வருடிய விக்கிக்கு எதை அவள் பாதத்துடன் ஒப்பிடுவது என்று தெரியாமல் சிலிர்த்து போனான்.

கையில் ரத்தத்துடன் உள்ளே வந்த விகர்ணன், விக்கியை முறைத்தவாறு குழந்தையை வாங்க எதுவும் பேசாமல் அவனையே பார்த்திருந்தான்.

காற்றை போல லேசாக அஞ்சலியின் மறுபதிப்பாக தெரிந்தாள் அவனுக்கு, நெற்றியில் உதட்டை மடித்து முத்தமிட்டு, அஞ்சலியை பார்க்க அவளோ நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். இருவரையும் மாறி மாறி பார்க்க, அவ்வளவு நேரம் இருந்த கொதிநிலை மாறி சற்று சாந்தம் ஆகிருந்தது அவன் மனம்.

விக்கியும் எதுவும் பேசாமல் அவன் செய்கையை கவனித்தவண்ணம் நின்றிருந்தான். குழந்தையை அவன் கையில் கொடுத்த விகர்ணன், "அவளோட சேர்ந்து அஞ்சலிக்கு ஏதாவது கஷ்டம் கொடுத்த உன்னை கொன்றுவேன். அஞ்சலி எப்பவும் எனக்கு ஸ்பெஷல் தான். நீ ஜஸ்ட் அவளோட லைப் பார்ட்னர், அவளோட லைப் இல்லை இப்படி அவளை பணயம் வைக்க. இதுவே கடைசி தடவையா இருக்கட்டும். அவளோட கண்ணுல கண்ணீர் வந்த அதுக்கு காரணம் ஆன யாரையும் சும்மா விட மாட்டேன். அவள் என் காதலா இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவள் என்னோட குட்டிமா தான். அவள்மேல் எனக்கு இருக்க கிரேஸ் எப்பவும் குறையாது. இதை உன்கிட்ட சொல்ல எனக்கு எந்த பயமும் இல்லை. அவளை என்னை விட நீ நல்லா பார்த்துப்பன்னு எனக்கு தெரியும் அதுக்காக அவளை கஷ்டப்படுத்தினதை நான் மறக்க மாட்டேன். தரவேண்டிய நேரத்தில் இதுக்கான பதிலை தறேன்" என்று விறுவிறுயென அங்கிருந்து சென்றுவிட்டான் விகர்ணா.

அவனின் கொதிநிலைக்கு காரணமானவளோ அறைக்குள் வந்ததில் இருந்து தான் செய்வது சரியா? தவறா? பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.

தன்னிடம் அவன் காட்டிய அன்பு யாவும் உண்மையல்ல வெறுப்பின் உச்சியில் தன்னை பழிவாங்கும் படலம் என்று மூளை கூறினாலும் அதை மனம் ஏற்கவில்லையே. காதல் கொண்ட மனம் ஒருபுறம் தன்னை ஆட்கொள்ள அவன் மேல் கொண்டுள்ள சினம் மறுபுறம் அவனுக்கு வலிக் கொடுக்க தன்னை தள்ளுகிறது.

இதில் எதன் பின் சென்றாலும் வலி என்னவோ தனக்கு தான் என்று தெரிந்தும் எதற்கு இந்த போராட்டம் ? அவன் ஏமாற்றியதாகவே இருக்கட்டுமே! அவனை விட்டு விலகி தன் வழியில் செல்வது தானே சரியான முடிவு. ஆனால் இப்போது தான் செய்வது எந்த ரகத்தில் சேர்பது? வேண்டாம் என்பவனை வலுக்கட்டாயமாக தன்னுடைமை ஆக்க நினைப்பது சரியா? என்று மனம் கேட்க, "உன்னை எப்படி அவன் காதல் செய்றேன்னு உன் உணர்வை தூண்டினான்" என்று சட்டென்று அந்த நாளை நினைவூட்டியது மூளை.

"தீரா ஒரே ஒரு டேட். இனி கேட்கவே மாட்டேன்" என்று கெஞ்சாமல் கொஞ்சாமல் தன்னை நெருங்கி வரும் விகர்ணனை பார்த்தவள் பதில் கூறாது பைலுக்குள் தலையை விட, இருபுறம் தலையை ஆட்டி வென்யூ மெசேஜ் செய்கிறேன் என்று அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவன் செய்கை சிரிப்பூட்டியது ஆதிராவிற்கு, தன்னை இப்படி எல்லாம் கையாளுகிறான் என வியந்தாள். தன்னிடம் அனுமதி கேட்டாள் நிச்சயமாக மறுத்துவிடுவேன் என்று எப்படி கேட்டு செல்கிறான் என யோசித்தவள் வேலையை விடுத்து விகர்ணனை காணச் சென்றாள்.

அவனோ தனக்கான அறையில் கணினியில் எதையோ தேடிக் கொண்டிருந்தான். அவள் வந்திருப்பதை உணர்ந்தும் அவளை ஆராதிக்காமல் அலைக்கழிக்க நினைத்து திரையில் பார்வையை பதித்தான்.

"மிஸ்டர் கர்ணன்!"
"ம்ச் விகர்ணன்" என்று நிறுத்தினான்.

தெத்துப்பல் தெரிய இதழ் பிரித்து, "ஷால் வி ஹவ் கப் ஆப் காபி" என்று அவன் கேட்டதை முழுதாக ஒற்றுக் கொள்ளாமல் அதே சமயம் அவனை அறிய எழுந்த ஆவலை அவனிடம் காட்டாமல் கேட்டும் விட்டாள்.

அவள் விழிகளில் பதில் தேடி தோற்று போனவனாக, தலையை சிலுப்பி நடந்து செல்ல அவளும் அவனை பின் தொடர்ந்தாள்.

அவர்களுக்கான முதல் அன்-அபிஷியல் மீட்டிங் இது. இருவர் தந்தையரும் பல வருட நண்பர்கள் எனினும் இவர்களுக்குள் அப்படி ஒன்றும் நல்ல உறவு இல்லை. இருவரும் நேரில் சந்தித்த தருணம் வெகு சொற்பமே.

கல்வி முழுவதும் விடுதியில் தங்கிப் படித்த ஆதிரா நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அரிதாக போக இவன் அந்நியமாகி போயிருந்தான் அவளுக்கு.

அவனது மகிழுந்து நின்ற இடம் அவளுக்கு மிகவும் விரும்பமான கஃபே. மற்ற இடத்தை விட இது தனித்திருந்த காரணம் அந்த இடம் தான். பார்வையாளரை தகிக்க வைக்கும் காட்சியோடு, குளுமையான தோற்றம் கொண்டு காட்சியளிப்பதால் அந்த இடம் ஆதிராவின் விருப்பப்பட்டியலில் சேர்ந்திருந்தது.

அவளுக்கு பிடித்ததை அவனே ஆர்டர் செய்ய கேள்வியாக அவனை பார்க்க, "ஐ ஸ்மெல்ட் யூ" என்று பல் வரிசை தெரிய சிரித்தான்.

அப்படி ஒரு வசீகரம் அவன் சிரிப்பில், வசியம் செய்துவிடுமோ என்று தான் இவன் அரிதாக சிரிக்கிறானோ என்ற எண்ணம் தோன்ற மானசீகரமாக தலையில் அடித்து வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.

"தீரா ஆர்டர் வரும் வரை கேம் ரூம் போகலாமா?" என்றான்.
அவளும் நேரத்தை கடத்த சரி என்று கூற, அவள் கையை பற்றி அந்த அறைக்கு அழைத்து சென்றான்.

அவர்களை தவிர அந்த அறைக்குள் யாருமில்லை, தனிமை விரும்பி என்பதால் பெரிதாக தெரியவில்லை ஆதிராவிற்கும்.

அவர்கள் நேராக சென்ற இடம் பௌவ் அண்ட் அர்ரோவ் செக்ஷன் தான். இருவருக்கும் அது பிடித்தமான விளையாட்டு ஆனால் ஒருத்தர் தான் விளையாட முடியும் என்பதால் முதலில் ஆதிராவை விளையாட கூறினான்.

அவளும் ஆர்வமாக வில்லை விட அனைத்தும் குறித் தவறியது. அவனோ வேகமாக அவளை நெருங்கி அவள் கை மேல் கை வைத்து நூல் அளவு இடைவெளியின்றி அவளை பின்னிருந்து அணைத்தார் போல நிற்க, முதல் முறை ஒரு ஆணின் ஸ்பரிசம் பட்டு சிலிர்த்தது அவள் மேனி.

அவள் கைகளை வளைத்து அவனுக்கு தகுந்தாற் போல் வைத்து குறி பார்த்து விட அது சரியாக சென்றிருந்தது. அதுவரை எழாத உணர்வு அதன் பிறகு விகர்ணனை ஆட்கொண்டது.

அவன் விரல்கள் அத்துமீறி அவள் இடையை தழுவ, திரும்பி அவன் கைகளை பிடித்து, "கர்ணன் நான்..." என்று முடிப்பதற்குள் அவள் வார்த்தைகளை தன் இதழுக்குள் விழுங்கி இருந்தான். தாபமோ தாகமோ அவன் தான் அறிவான் அவள் இதழை சுவைக்க சுவைக்க வேகம் அதிகமானதோ தவிர குறைவில்லை, முதல் முத்தத்தில் மொத்தமாக துவண்டு போனாள்.

முதலில் தன்னிலைக்கு வந்தது விகர்ணனே, தான் செய்த செயலால் தலையில் அடித்துக் கொண்டு அவளை பார்க்க, அவனை பார்க்காமல் வேறெங்கோ பார்த்தபடி நின்றிருந்தாள்.

"தீரா வெளியில போய் பேசிக்கலாம்"
"கர்ணன் ஐ நீட் டு ட்ரெஸ் அப்" என்றவளை அப்போது தான் பார்த்தான்.

சேலை ஆங்காங்கே கசங்கி மடிப்பு கலைந்து இருந்தது, ஏனோ அவள் மீது காதல் கடந்து ஒரு மோகம் இன்று தலைதூக்குவதை உணர்ந்தான். எத்தனை பெண்கள் கடந்து வந்திருக்கிறான், இப்படி ஒரு எண்ணம் வந்தது இல்லையே என்று மனம் கேள்வி கேட்க முதல் முறை பதில் இல்லாமல் போனது அவனிடம்.

அவளை நெருங்கியவன் "சாரி கேட்க முடியாது. எனக்கவனவள் நீ தானடி" என்று நெற்றியில் முட்டி, "யாரும் வரமாட்டாங்க நீ டிரஸ் பண்ணு நான் வெளியே இருக்கேன்" என்று சென்று விட்டான்.

அந்த நினைவில் இருந்து வெளியே வந்தவளுக்கு, 'அவனிடம் தான் நெருங்கியது அன்று தானே, அவனது காதலின் மற்றொரு பரிணாமம் தான் தாபம் என்று நினைத்தேனே எல்லாம் பொய்யா? மோகம் கொண்டது தன் ஒருத்தி மேல் மட்டும் தானே!' என்று மனம் அடித்து கொள்ள, அவள் மூளையோ அவன் உன்னை ஏமாற்ற நினைத்து தான் உன்னை நெருங்கினான் அன்று மட்டுமல்ல கிடைக்கும் சந்தர்ப்பம் அனைத்திலும் என்று கூற வலிக்க ஆரம்பித்தது அவளுக்கு.

கடைசியாக அவர்கள் சந்தித்தபோது அவன் கொடுத்த பரிசை ஆடை விலக்கி பார்க்க காயமாக இருந்தது அவளது அங்கம்.

தனக்கு வலி மட்டுமே கொடுத்தவனுக்கு திருப்பி தர முடிவெடுத்து நிம்மதியாக கண்ணை மூடினாள்.
 
Status
Not open for further replies.
Top Bottom