Gowsalya.m
New member
- Messages
- 8
- Reaction score
- 5
- Points
- 3
நாவல் பெயர்: அதற்கொரு நேரமுண்டு!!
எழுத்தாளர்: ஆர்.சி. (RC)
ஹீரோயின்: மனோஹரி
ஹீரோ: தினகரன்
மனோஹரி, சென்னையில் நடைபெறும் ஒரு வேலை நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வருகிறாள். தன் அம்மாவின் விருப்பத்தினால், பெரிதாக நெருக்கம் இல்லாத தன் மாமாவின் வீட்டில் தங்குகிறார். அங்கு, மாமாவின் மகள் மீனா, "நான் பெரிய தொழிலதிபரான தினகரனை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்" எனக் கூறி, அவரது புகைப்படத்தைக் காண்பிக்கிறாள். அதை பார்த்தவுடனே, மனோஹரி பதறுகிறாள்.
காரணம், தினகரனை, மனோஹரி ஏற்கனவே ஒரு மோசமான சூழ்நிலையில் சந்தித்திருக்கிறாள்.
சிலநாட்களுக்கு முன் ஒருவர், "தினகரன் தன்னை காரில் மோதி விட்டார்" என நடித்து, பணம் பறிக்க முயன்றபோது, மனோஹரி உண்மையைத் தெரியாமலே தினகரனை சண்டை போட்டு, பணம் கொடுக்கச்சொல்கிறாள். இதனால் தினகரன் மனோஹரியும் அந்த மோசடி கும்பலை சேர்ந்தவள் என்றே நினைக்கிறான்.
பின்னர், உண்மை புரிந்த மனோஹரி, அவன் இழந்த பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று நினைக்கிறாள்.
இந்நிலையில், தினகரன் ஒரு விபத்தில் பார்வையை இழந்துவிட்டார் என்ற செய்தி தெரியவருகிறது. இதைக் கேட்டதும், மீனாவும், அவளது அம்மாவும், திருமணத்தை ரத்து செய்ய முயல்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில், மருத்துவமனையிலிருந்து ஒரு தொலைபேசி வருகிறது.
தினகரன், “மீனாவை பார்க்க வேண்டும்” என்று கூறுகிறான். மீனா இதற்கும் மறுப்புக் கூறி, மனோஹரியிடம் “நீ இவ்வளவு அக்கறையோடு இருக்கிறாயே... நீயே போய்ப் பார்த்துக்கோ!” என்கிறாள்.
இதனால் மனோஹரி, தினகரனுக்கு துணை நிற்க வேண்டுமென்று தீர்மானிக்கிறாள். அவள் மருத்துவமனைக்குச் செல்லும் போது, தினகரன் அவளை மீனாவாகவே நினைக்கிறான். உண்மையைச் சொல்வதற்கான சூழ்நிலை அமையவில்லை. அதன் பின்பு, சில காரணங்களால் மனோஹரி தினகரனை மணக்கிறாள். மணக்கும் பொது அவள் உண்மையில் மீனா அல்ல என்பதை சொல்ல முடியாமல் போய்விடுறது. அது பற்றி மீனாவுக்கு பிரச்சனை இல்லை. அவள் தன்னுடைய பிரச்சனை தீர்ந்தது என்று விலகி கொள்கிறாள்.
திருமணத்துக்குப் பிறகு, இருவரும் தினகரனின் தாயார் வசிக்கும் கிராமத்திற்கு செல்கிறார்கள். அங்கு, தினகரனின் தாயார், மனோஹரி மீனா அல்ல என்பதைக் கண்டுபிடிக்கிறார். மனோஹரி உண்மையை நேராகச் சொல்லி விடுகிறாள். தினகரனின் தாயார், அவளது நேர்மையையும் பணிவையும் பாராட்டி, மனோஹரிக்கு ஆதரவாக இருப்பதோடு, அவளது தாயாருடன் பேசுவதற்கும் உதவுகிறார்.
ஒரு நாள், மனோஹரி, தினகரன் முன்னே ஒருமுறை கூறிய ஒரு வசனத்தை நினைவுகூற, தினகரன் அதிர்ச்சியடைந்து உண்மை புரிந்து கொள்கிறான் — இவர் மீனா இல்லை என்பதை. பின்னர், ஒரு தனியார் விசாரணையாளர் மூலமாகவும் அதைப் பரிசோதிக்கிறான். ஆனாலும், இது பற்றிய உண்மையை யாரிடமும் வெளிக்காட்டமாட்டேன் என முடிவெடுக்கிறான்.
அதே சமயம், ஒரு ரஷ்ய மருத்துவர், தினகரனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய முன்வந்து, பார்வையை மீட்டுப் பெற வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார். மனோஹரி, தினகரனுடன் மருத்துவமனைக்குச் செல்கிறாள். இதைத் தெரிந்துகொண்ட மீனா, "நீ என் பெயரில் கல்யாணம் பண்ணிக்கிட்டே... இப்போவாவது வெளியே போ!" என மிரட்டுகிறாள்.
இறுதியில், மனோஹரி மற்றும் தினகரன், மீனாவின் அனைத்து சூழ்ச்சிகளையும் கடந்து, உண்மையான காதலால் ஒன்றாகிக் கொண்டு, சந்தோஷமான வாழ்க்கையை தொடங்குகிறார்கள். தினகரன் பார்வையை மீட்டுக்கொள்கிறாரா? மனோஹரி முழுமையாக ஏற்கப்படுகிறாளா? என்பதை வாசகனுக்கு சுவையாகக் கூறும் ஒரு இனிய ஹேப்பி எண்டிங் கதை தான் அதற்கொரு நேரமுண்டு!