Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
அனைவருக்கும் வணக்கம்...

நான் இதோ அதோ என்று எழுத வந்து ஐந்து வருடங்கள் முடிவடைய போகிறது...

இதுவரை எந்த தளத்திலும் எக்ஸ்குளுசிவ் ஸ்டோரி போட சொல்லி நிறைய பேர் கேட்டும் போட மறுத்திருக்கேன். இருந்தும் தோழி நித்யா கார்த்திகன் அவர்கள் கேட்கும்பொழுது மறுக்க முடியவில்லை ஆதலால் அவர்களுக்காக ஒரே ஓரு எக்ஸ்களுசிவ் ஸ்டோரி போட வந்திருக்கிறேன்...

ஆனாலும் ஒரு வேண்டுகோள். நான் மிக மிக ஸ்லோ ரைட்டர் தான்... அதனால் வாரத்திற்கு இரண்டு எபிகள் தருவதே மிக அதிகம் எனக்கு... சில நேரங்களில் அதுவும் தகிடத்திகிடோம் தான்.

கதையின் பெயர்,

"💕இளஞ்செழிலி💕"

பேசத்துடிக்கும் ஓர் வாயாடி😍😍, பேச்சேன்பதையே மறந்திருக்கும் ஓர் நாயகன்...💞💞 இவர்களுக்குள் உருவாகும் ஓர் பந்தம்...💕💕 இதுவே இந்த கதையின் ஆரம்பம்...

இப்போதைக்கு டீசர் தருகிறேன்...😍😍

பின் ஒரு பதிவு...✍️✍️✍️

பி.எட் எக்ஸாம் முடிந்த பிறகு ரெகுலர் பதிவுகள் வரும்.. ஒகேவா...😍😍💕

நான் அவ்வளவாக முகநூலில் வருவதில்லை... அதனால் தளத்தில் இந்த கதையினை படித்துக்கொள்ளுங்கள் வாசகர்களே!

நன்றி🙏🙏!

கதையின் சிறு வசனங்கள்✍️✍️ மட்டும் உங்களுக்காக...😍😍

💕💕💕💕

"பிரச்சனை எனக்கும் எங்க சித்திக்கும் தான்." என்றாள் சற்று சோகமாய்.

"உனக்கு சித்தில்லாம் இருக்காங்களா?" என்றான் கார்த்திக்.

"ஏன் உன் பிரெண்ட்க்கு நீ இருக்கும்போது எனக்கு சித்தி இருக்க கூடாதா?" என்று முறைத்தாள்.

"இருக்கலாமே. தாராளமா இருக்கலாம். மேல சொல்லும்மா." என்றான் பாவமாய்.

"நானும் தேனும் சித்திக்கு தெரியாம படத்துக்கு போனோமா?"

"யாரு தேனு?" என்றான் நடுவில்.

"நீ இப்படி குறுக்க குறுக்க கேள்வி கேட்டா நான் எப்படி சொல்றது?" என்று முறைத்தாள்.

"கதைல புது கேரக்டர் யாருன்னு தெரியலைன்னா புரியாதே" என்றான் உதட்டை பிதுக்கி.

"ஆமா இதை மட்டும் கரெக்டா பேசு. ஆனா ஒரு பிரண்டை கூட ஒழுங்கா வளர்க்க தெரியலை." என்றாள் கோபமாய்.

"எதே.. பிரண்டை ஒழுங்கா வளர்க்கலையா? நான் எங்கம்மா வளர்த்தேன்? நானும் அவன்கூட தானே வளர்ந்தேன்?" என்றான் கார்த்திக்.

💕💕💕💕💕

முடிஞ்சுது😍😍😍

சீக்கிரம் முதல் பதிவோடு வரேன்....
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
இளஞ்செழிலி 1:

தன் சூட்கேஸையும் பேகையும் கீழே வைத்துவிட்டு தன்னிடம் இருந்த சாவியால் வீட்டின் கதவை திறந்து உள் சென்றான் அஜய்.

கும்மிருட்டாய் இருக்கவும் ஹாலின் விளக்கு ஸ்விட்சை தட்டிவிட ஒளி அழகாய் வீசியதில் ஒரு நிமிடம் அசையாது அசந்து நின்றான்.

பின் சுற்றி முற்றி பார்த்தவன், "என்னடா இது? இது நம்ம வீடு தானே? ஒருவேளை வீடு மாறி வந்துட்டோமோ?" என்று மீண்டும் வெளியே சென்று உள்ளே வந்தவன், "கரரெக்டா தான் வந்துருக்கோம்." என்று திரும்பவும் சமையலறையில் இருந்து ஒரு உருவம் வரவும், "யார் இது?" என்று தனக்குள் கேட்டு கொண்டவன், "யார் அது?" என்றவுடன் அவன் எதிரில் வந்து நின்றாள் ஒரு பெண்.

"ஹலோ யாருப்பா நீ? என் வீட்ல வந்து என்னையே யாருன்னு கேட்கிற? நீ யாரு?" என்று வந்து நின்றாள் ஒரு இளம்பெண்.

"என்னாது உன் வீடா?" என்றான் அதிர்ச்சியாய்.

"ஆமா. என் வீடு தான். பின்ன உன் வீடா? உங்கப்பனா வாங்கி கொடுத்தான்?" என்றாள் அவள் கோபமாய் பின்னால் தன் கையில் வைத்திருந்த துடப்பத்தை அவன் முகத்துக்கு முன்னால் ஆட்டியபடி.

"எங்கம்மா சத்தியமா இது எங்கப்பா வாங்கு கொடுத்தது தான்மா." என்றான் பாவமாய்.

"அப்படியா சொல்ற?" என்றாள் ஒற்றை புருவம் ஏற்றி சந்தேகமாய்.

"அப்படி தான் மா. வேற எப்படியும் இல்ல" என்றான்.

"அப்போ இது அவன் வீடு இல்லையா? பக்கி பய. அதுக்கே என்னா அட்டகாசம் பண்ணான்?" என்று தனுக்குள்ளாகவே பேசி திட்டிக் கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி இளஞ்செழிலி.

"யாரும்மா அந்த அவன்?" என்றான் புரியாமல் வந்தவன்.

"அதான்யா இந்த வீட்டுக்கு என்னை கூட்டிட்டு வந்தானே அந்த பிராடு பய தான்." என்றவள்.

"ஆமா உன் பேரென்ன?" என்றாள்.

"என் பேரு கார்த்திக். உங்க பேரு?" என்றான்.

அவனை ஏற இறங்க பார்த்தவள், "என் பேரு இளஞ்செழிலி." என்றாள்.

"சரி. உன்னை இங்க கூட்டிட்டு வந்தானே அவன் பேரு என்னம்மா?" என்றான்.

"அவன் பேரு என்னமோ வாதனோ வேதனோ?? சரியா ஞாபகமில்ல." என்றாள் அசால்ட்டாக.

"என்ன வேதனா உன்னை இங்க கூட்டிட்டு வந்தான்?" என்றான் நம்பாமல் அதிர்ச்சியாய்.

"ஆமாமா அந்த கொரங்கே தான்..." என்றாள் நக்கலாய்.

"சரி. அவன் ஏன் உன்னை இங்க கூட்டிட்டு வந்தான்?" என்றான் சந்தேகமாய்.

"யோவ் என்ன கொழுப்பா... நீ பார்க்கிறதை பார்த்தா நான் என்னவோ பொய் சொல்ற மாதிரி இருக்கு?" என்றாள் முறைத்து.

"அப்படி இல்லைம்மா. அவன் மேல தான் சந்தேகம் அதான் கேட்டேன்." என்றான்.

"ஒஹ்! தாலிகட்டினா அவன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தானே ஆகணும்." என்றாள் தன் மஞ்சள் கயிறு எடுத்துக்காட்டி.

"என்னாது தாலி கட்டிட்டானா?" என்றான் விழிகளிரண்டும் தெறித்து வெளியே விழும் பெரும் அதிர்ச்சியுடன்.

"ஒய் நில்லு. என்னத்துக்கு நீ இவ்ளோ ஷாக் எபெக்ட் கொடுத்துட்டே இருக்க?" என்றாள் முறைப்பாக.

"அதில்லம்மா.." என்று இழுத்தான்.

"எதில்லம்மா?" என்றாள் அவளும் ராகமாக.

"அய்யோ அவனுக்கு இப்படி பட்ட பொண்ணா?" என்றான் தாங்காமல்.

"யோவ் என்ன கொழுப்பிருந்தா என்னை பார்த்து நக்கலா அவனுக்கு இப்படி ஒரு பொண்ணான்னு கேட்டிருப்ப? உன்னையெல்லாம் விளக்குமாறு பியிர வரை பொலக்கனும் இரு வரேன்." என்றாள்.

"அய்யய்யோ நான் சொன்ன மாடுலேஷன் வேற மா. நீ தப்பா புரிஞ்சுகிட்ட... அவன் ரெண்டாவது படிக்கும் போதிலர்ந்து பிரெண்டு ன்ற பேர்ல அவன்கூட குப்பை கொட்டறேன் மா. இதுவரைக்கும் எந்த பொண்ணுகிட்டயும் பேசமாட்டான். அவனுக்கு பொண்ணுங்கன்னா சுத்தமா பிடிக்காது. அதான் அப்படிப்பட்டவனுக்கு உன்னை மாதிரி கலகலன்னு பேசிட்டே இருக்க பொண்ணான்னு கேட்டேன்." என்றான் ஒரே மூச்சில்.

"ஒஹ் அதை தான் அப்படி சொன்னியோ?" என்றாள் யோசனையாய்.

"ஆமா." என்றான் வேகமாக.

"நான் ஊருக்கு போய் 15 நாள் தான் ஆகுது. அதுக்குள்ள உங்க கல்யாணம் நடத்துருக்கே? என்ன தான்மா நடந்துச்சு?" என்றான் ஒன்றும் புரியாமல்.

"அந்த கொடுமையை ஏன்யா கேட்கிற? இதெல்லாம் அந்த மைனர் பரதேசியால வந்துச்சு. அவன் மட்டும் என்கைல கிடைச்சான் கைமா பண்ணிடுவேன்." என்றாள் மிகவும் கோபமாக.

"உனக்கும் அந்த மைனர்க்கும் பிரச்னைன்னா இவன் எப்படி வந்தான் அங்க?" என்றான் மேலும் குழப்பமாய்.

"பிரச்சனை எனக்கும் எங்க சித்திக்கும் தான்." என்றாள் சற்று சோகமாய்.

"உனக்கு சித்தில்லாம் இருக்காங்களா?" என்றான் கார்த்திக்.

"ஏன் உன் பிரெண்ட்க்கு நீ இருக்கும்போது எனக்கு சித்தி இருக்க கூடாதா?" என்று முறைத்தாள்.

"இருக்கலாமே. தாராளமா இருக்கலாம். மேல சொல்லும்மா." என்றான் பாவமாய்.

"நானும் தேனும் சித்திக்கு தெரியாம படத்துக்கு போனோமா?"

"யாரு தேனு?" என்றான் நடுவில்.

"நீ இப்படி குறுக்க குறுக்க கேள்வி கேட்டா நான் எப்படி சொல்றது?" என்று முறைத்தாள்.

"கதைல புது கேரக்டர் யாருன்னு தெரியலைன்னா புரியாதே" என்றான் உதட்டை பிதுக்கி.

"ஆமா இதை மட்டும் கரெக்டா பேசு. ஆனா, ஒரு பிரண்டை கூட ஒழுங்கா வளர்க்க தெரியலை." என்றாள் கோபமாய்.

"எதே.. பிரண்டை ஒழுங்கா வளர்க்களையா? நான் எங்கம்மா வளர்த்தேன்? நானும் அவன்கூட தானே வளர்ந்தேன்?" என்றான் கார்த்திக்.

"இப்போ நான் சொல்லவா வேணாமா? இப்படி நடுவில பேசினா எனக்கு கதை சொல்ல வராது. நீ போய் உன் பிரெண்டகிட்டயே கேட்டுக்கோ." என்றாள்.

"இல்ல இல்ல நீயே சொல்லு. அவன் வாய் திறந்து பேசுறதுக்குள்ள எனக்கு முடி நரச்சிரும்." என்றான் கார்த்திக் சோகமாய்.

"உன்னை பார்த்தாலும் பாவமா இருக்கு. சோ சொல்றேன் வா." என்றாள் பெரிய மனது படைத்து.

நடுகூடத்திலேயே உட்கார்ந்து கொண்டு, " நீயும் வா உட்கார்ந்து சொல்லு. எனக்கு காலு வலிக்குது." என்று கூறவும்.

அவனின் அருகில் அமர்ந்தவள், "உன்னை பார்த்தாலும் பாவமா இருக்கு. என்னை போல தான் உன்னையும் கொடுமை செஞ்சுருப்பான் போல வெள்ளை தக்காளி." என்றாள்.

"என்னது உன்னை கொடுமை பண்ணானா? அடிச்சானா உன்னை?" என்றான் கார்த்திக் நம்பாமல்.

"என்னது அடிச்சானாவா? அடிச்சுருவானா உன் பிரென்ட் என்னை? என்னை அடிச்சுட்டு அவன் உயிரோடவா இருப்பான் இந்நேரம். அவன் விரல் நகம் என் மேல பட்டாகூட, அவன் குடலை உருவி மாலையா போட்டுருக்க மாட்டேன்." என்றாள் மெல்ல சிரித்து.

'ஆத்தாடி... இவன் என்ன பொண்டாட்டின்ற பேர்ல பிசாசை வீட்டிற்கு கூட்டிட்டு வந்துருக்கான். டேய். கார்த்தி நீ எதுக்கும் ரொம்ப உஷாரா இருடா.' என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

"யோவ். என்னைய கதை சொல்ல சொல்லிட்டு நீ என்னய்யா மோட்டு வளைய பார்த்துட்டு இருக்கவ.?" என்றாள் இளஞ்செழிலி.

"ஹ்ம்ம்.. ஒன்னுமில்லையே.." என்றான் கார்த்தி திடுக்கிட்டு.

"அவன் உன்னை அடிக்கலைன்னா ஏம்மா கொடுமை பண்ணான்னு சொல்ற?" என்றான் கார்த்திக்.

"அடிச்சா தான் கொடுமை பண்றதா?"

"பின்ன இல்லையா?" என்றான் பாவமாய்.

"எங்க ஊர்ல எப்பவும் என்னை சுத்தி பத்து பேர் இருப்பாங்க. உன் பிரென்ட் இருக்கான் பாரு.. என்னை இங்க கூட்டிட்டு வந்துட்டான்... இவ்வளவு பெரிய வீட்ல எந்த வேலையும் இல்லாம இங்க இருக்க பொருட்களை நானும் உயிர் இல்லன்னாலும் அதுங்க என்னையும் முறைச்சு பார்த்துக்கிட்டே இருக்குறது எவ்ளோ பெரிய கொடுமை?" என்றாள் வருத்தமாய்.

"அடகடவுளே.. சரி இப்போ கதையை சொல்லு மொதல்ல.. உன்னை எப்படி கல்யாணம் பண்ணான் அவன்?" என்றான் கார்த்திக்.

*******

அடுத்த எபி்யோட பி.எட் எக்ஸாம் முடிச்சுட்டு ஜாலியா வரேன். பை ப்ரெண்ட்ஸ்
 

New Threads

Top Bottom