Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இவள் பிரபஞ்சத்தின் காதலி

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
இதோ "இவள் பிரபஞ்சத்தின் காதலி" -யின் முதல் டீசர்.

டீசர் - 1

குளித்து முடித்துவிட்டு தன் ஆரஞ்சு நிற பாவாடையையும் பச்சை நிற தாவணியையும் உடுத்திக்கொண்ட திவிதா தலையில் ஒரு பருத்தி துண்டை கட்டியவாறு வெளியே வந்தாள்.
“சொல்ல சொல்ல கேட்காம மழைக் கொட்டிக்கிட்டு இருக்கற நேரத்துல இப்படி தலைக்கு குளிச்சிட்டு வந்திருக்கியே ஆத்தா” என்றார் அவளது பாட்டி பட்டம்மாள்.
“பாட்டி… எனக்கெல்லாம் என்ன நேரம் என்ன காலம்? உனக்கு தெரியாதா?” என்றவாறு முகம் மலர கண்ணாடியின் முன்னே சென்றவள் தன் பாவாடையை இரு கைகளாலும் பக்கவாட்டில் விரித்து பிடித்தபடி வலதும் இடதுமாய் திரும்பி திரும்பிப் பார்த்தாள்.
“என்ன ஆத்தா புடிச்சிருக்கா?” சிரித்தபடி கேட்டார் பட்டம்மாள் பாட்டி.
“ம்ம்ம்… ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு அழகா இருக்கா பாட்டி?” – திவிதா.
“என் திவி கண்ணுக்கு எது போட்டாலும் நல்லாதான் டி இருக்கும்… என் ராசாத்தி…” என அவளது கன்னம் இரண்டையும் ஒட்டத் தடவி எடுத்து சொடுக்கிட்டார் பட்டம்மாள்.
“அப்படியா… பின்ன நான் ஊருல இருந்து வந்த அன்னைக்கு என் ஜீன்ஸ் –அ பார்த்து சோளக்காட்டு பொம்மை மேல சாக்குப் பை -அ கட்டி வச்ச மாதிரி இருக்குனு சொன்னது யாரு?” என ஒற்றை புருவத்தை தூக்கியபடி கேட்டாள் திவிதா.
“அதெல்லாம் ஒரு ட்ரெஸ் –ஆ… வயசு பொண்ணா லட்சனமா தாவணியோ சேலையோ கட்டுனாதானே பார்க்க மகா லட்சுமி மாதிரி இருக்கும். அதென்ன ஆம்பள புள்ளையாட்டம் பேண்டும் சட்டையும் மாட்டிக்கிட்டு” – அலுத்துக் கொண்டார் பட்டாம்மாள்.
“ஆம்பளைங்க மட்டும் தான் அத எல்லாம் போடனும்னு ரூல்ஸ் எதாவது இருக்கா பாட்டி? ஹாஹா.. வேணும்னா உனக்கும் ஒரு பேண்ட் ஷர்ட் வாங்கித் தர்றேன். போட்டுப்பார்க்குறியா?” – கண்ணடித்தாள் திவிதா.
“வாலு கழுத” என அவள் தலையில் செல்லமா ஒரு கொட்டு வைத்த பட்டம்மாள் “நம்ம ஊருல ஆம்பள பையளுக கூட நீ போட்டுகிட்டு வந்த ட்ரெஸ் –அ போட மாட்டாங்க கண்ணு. எல்லாரும் வேஷ்டி தான். வேஷ்டி சவுகரியப்படாத வேலை செய்யுறப்ப பட்டாப்பட்டி தான்” என்றார்.
“அதுக்காக என்னையும் பட்டாபட்டி போட சொல்லுறியா பட்டு?” செல்லமாய் முறைத்தாள் திவிதா.
“அதான் உன் பாட்டி சொன்னாலே உனக்கு என்ன உடுப்பு போட்டாலும் நல்லா இருக்கும்னு. போட்டு தான் காட்டேன்” என்றபடி உள்ளே வந்தான் கரிகாலன். திவிதாவின் முறை மாமன்.
“பாருங்க பாட்டி மாமா –வ… என்ன பட்டாபட்டி போட சொல்லுது” – சிணுங்கிக்கொண்டே பாட்டியிடம் பஞ்சாயத்து வைக்க தயாரானாள் திவிதா.
“ஏலே… எம்பேத்திய எதுக்கு வம்புக்கு இழுக்க? நம்ம வயலுல இருக்கற மோட்டார் –ல ஏதோ கோளாறுனு கொம்பையா சொன்னானே. அத என்னனு பார்த்தாச்சா காலா?” – பட்டம்மாள்.
“ஆமா பாட்டி. இப்பதான் ஆள விட்டுட்டு வந்திருக்கேன். ஒரு மணி நேரத்துல சரியாகிரும்” – கரிகாலன்.
“இப்ப எதுக்கு அய்யா? நாளைக்கு காலையில பார்த்திருக்கலாமே” – பட்டம்மாள்.
“இல்ல பாட்டி. நாளைக்கு அதிகாலையில சீக்கிரமே தண்ணி பாய்ச்ச சொல்லியிருக்கேன். இப்ப சரி பண்ணாதான் முடியும். மோட்டார் ரூம் –ல இருந்து வயர் கனெக்‌ஷன் எடுத்து லைட் ஏற்பாடு பண்ணி தான் கொடுத்துருக்கேன்” என்று அங்கு வந்தான் கரிகாலனின் அண்ணன் சேது.
“சரிப்பு… கை கால அலம்பிட்டு வாங்க ரெண்டு பேரும். சாப்பாடு எடுத்து வைக்கறேன்” என்று நகர்ந்தார் பட்டம்மாள்.
அவர் செல்லவும் கரிகாலனை பார்த்து தன் உதட்டை சுழித்துக்கொண்ட திவிதா, தன் தலையில் இருந்த பருத்தித் துண்டை அவிழ்த்து முடியை காய வைக்க, அவளது கார்குழலில் இருந்து விழும் ஒவ்வொரு சொட்டு நீரோடு தன் இதயத்தை தொலைத்துக் கொண்டிருந்தான் கரிகாலன்.

என்றும் அன்புடன்
உங்கள் ஆனந்த லெட்சுமி
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
காதல் – 1

குற்றால சாரல் காற்றில் சிறிதை தன்னகத்தே கடத்தி வைத்திருக்கும் தென்காசி வீதியில் மிகவும் குறைந்தபட்ச புகையை கிளப்பியபடி நகர்ந்துக்கொண்டிருந்தது ஒரு சிற்றுந்து.

“என்ன டே காலா! விடியகாலையில வயல்ல தான் கிடப்ப? இன்னைக்கு என்ன டவுன் வண்டியில கிடக்க? ஹாஹா!!” - நக்கலாய் கேட்டான் பொன்மணி. காலா என்று செல்லமாய் அழைக்கப்படும் கரிகாலனின் நண்பன்.

“ஊருல இருந்து அம்மணி வந்திருக்குல. அத வீட்டுக்கு கூட்டிட்டு போகதான் குற்றாலம் போய்கிட்டு இருக்கேன்” – கரிகாலன்.

“யாரு? நம்ம தீவிதா புள்ளையா?!” – பொன்மணி.

“ஆமா டா” – வெட்கத்தின் வெளிச்ச ரேகைகள் தெரிந்தது கரிகாலனின் முகத்தில்.

“அடப்பாவி! வெட்கமெல்லாம் படுவியா டா நீ?” – பொன்மணி.

“அம்மணிய ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்கப்போறேன் டா” – நெளிந்தான் கரிகாலன்.

“மாப்ள! நான் சொல்லுறனு தப்பா எடுத்துக்காத டா! அந்த புள்ள வெளிநாட்டுக்கு எல்லாம் போய் படிச்சிட்டு வந்திருக்கு. சின்ன வயசுல இருந்த மாதிரி மாமா, மாமா –னு உன் தோள கட்டிக்கிட்டே திரியும்னு கனவு காணாத! அந்த புள்ளய பார்த்து பேசுற வர உன் மனசுல எந்த ஒரு ஆசையும் வளர்த்துக்காத! சரியா?” – பொன்மணி.

பொன்மணி இவ்வாறு சொல்லவும் கரிகாலனது முகம் சுண்டிப்போய்விட்டது. பலவருடங்கள் கழித்து தீவிதாவை காணவிருக்கிறோம் என்ற எண்ணத்தை தவிர அவன் மனதில் வேறு ஒன்றும் அப்பொழுதுவரை இருக்கவில்லை. ஆனால் பொன்மணி இவ்வாறு பேசிய பிறகு, தன் சந்தோஷத்திற்கான காரணம் என்ன என்று அவனே சுய ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினான்.

வருடம் 2003
கரிகாலன் – வயது 8, தீவிதா – வயது 5.

“மாமா... இந்த பாவாடைய பாரு மாமா! இறங்கி இறங்கிப்போகுது. நீ கட்டிவிடு மாமா!” என்றாள் தீவிதா.

மண்வீடு கட்டிக்கொண்டிருந்த கரிகாலன் தனது கைகளை டவுசரில் துடைத்துவிட்டு தீவிதாவின் பாவாடையை இறுக்கிக்கட்டிவிட்டான்.

“வயிறு இறுக்குதா புள்ள? வலிக்குதுனா சொல்லு” - கரிகாலன்.

இல்லையென மறுப்பாக தலையசைத்த தீவிதா “மாமா… இந்த வீட்டுலதான் நாம தங்கப்போறோமா?” என அவன் கட்டிவைத்திருந்த மண் வீட்டை காட்டி கேட்டாள்.

“ஆமா புள்ள! இதோ இங்கன பசு மாடுங்க, இங்கன எருமை மாடுங்க, இதோ இந்த பக்கம் வயலு, உனக்கு வேணும்னா இங்குட்டாம வாஐ தோப்பு வச்சிடலாம்” என கரிகாலன் கூறிக்கொண்டிருக்கும் பொழுது தூரத்திலிருந்து வேகமாய் பறந்து வந்த கோலிக்காய் ஒன்று அவர்களது கனவோடு சேர்த்து அந்த மண்வீட்டையும் தகர்த்தது.

“மாமா… வீடு ஒடைஞ்சி போய்டுச்சி!!” என கூச்சலிட்டு அழத்தொடங்கினாள் தீவிதா.

“டேய் பொன்னு! ஏன் டா எங்க வீட்டு மேல கோலிய எறிஞ்ச?!” – சண்டைக்கு நின்றான் கரிகாலன்.

“நீ மட்டும் நேத்து என் வீட்ட உடைச்சல? அதான் நானும் உடைச்சேன்!” – பொன்மணி.

“உன்ன விடமாட்டேன் டா!” என கரிகாலன் கொந்தளிக்க, அவனும் பொன்மணியும் அந்த வீதியிலேயே உருண்டு பிரண்டனர்.

“மாமா… மாமா” என கண்களை கசக்கியபடி நின்றிருந்தாள் தீவிதா.

அந்நேரம் தடார் என பேருந்து ஒரு குழுங்கு குழுங்க, திடுமென கண்விழித்த கரிகாலன், நிகழ்காலத்துக்கு வந்தான்.

“ஏலேய் காலா! இறங்கு டா!” – பொன்மணி.

‘ஓ… இடம் வந்துடுச்சா!’ என எண்ணிக்கொண்டே வேகமாய் பேருந்தை விட்டு இறங்கிய கரிகாலனிடம்,

“மாப்பிள்ள! தீவி தங்கச்சிய நாளாக்கழிச்சி வந்து பார்க்குறேன் –னு சொல்லு என்ன! நாளைக்கு நான் அசலூருக்கு போறேன்! பார்த்து பத்திரமா கூட்டிட்டு போ டா!” என கையசைத்து பேருந்தோடு மறைந்துப்போனான் பொன்மணி.

தன் தலையில் கட்டியிருந்த அடர் நீல நிற துண்டை அவிழ்த்து கழுத்திவழியே தோளின் இருபுறமும் தொங்கும்படி போட்டுக்கொண்ட கரிகாலன் வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டே நடையெடுத்தான்.

அப்போது அவன் சட்டை பையில் வைத்திருந்த அலைபேசி அலற, அதை எடுத்துப்பார்த்தவன் புன்னகையுடன் “சேது அண்ணன்” என்றவாறு பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்தான்.

“அண்ண! இப்ப தான் அண்ணே வண்டிய விட்டு இறங்கியிருக்கேன். தீவி புள்ளைய பார்த்ததும் நானே கூப்பிடுறேன்” என்றான்.

“சரி டா காலா! வயசு புள்ளைய கூட்டிக்கிட்டு வர்ற. அது மனசுல இருக்கட்டும் என்ன! ஜாக்கிரதை. வழியில எந்த வம்புக்கும் போகாம வீடு வந்து சேரு!” – கரிகாலனின் உடன்பிறந்த சகோதரன் சேது.

“சரிண்ண! அந்த நீ கொஞ்சம் வயல்ல…” கரிகாலன் ஆரம்பிக்கவும்,

“டேய் டேய்! எல்லாம் நான் பார்த்துக்கறேன் டா! நீ புள்ளய பத்தரமா கூட்டிட்டு வீடு வந்து சேரு. பாட்டி இங்கன என்னை போட்டு படுத்தி எடுத்துக்கிட்டு இருக்கு!” என்று கூறியபடி இணைப்பை துண்டித்தான் சேது, தன் அருகில் இருந்த நண்பனிடம், “வயல நினைக்காம ஒரு நொடி கூட நகராது என் தம்பிக்கு” என்று கூறி சிரித்துக்கொண்டான்.

கரிகாலன் தன் அண்ணனிடம் பேசிமுடித்துவிட்டு அலைபேசியை சட்டை பைக்குள் வைக்க முனைந்த பொழுது பின்னால் இருந்து “ப்பே!!!!” என்றது ஒரு கனீர் குரல்.

பதறிப்போய் அலைபேசியை கீழே போட்ட கரிகாலன், அது இரண்டாய் உடைந்து கிடந்த நிலையை கண்டு கனல் ஏறிட, வேகமாக பின்னால் திரும்பி அடிக்க கையை ஓங்கினான்.

“அய்யோ மாமா! அடிச்சிடாதீங்க மாமா! அடிச்சிடாதீங்க! நான்தான் மாமா தீவிதா!” என்றாள் ஒரு இளம் மாது.

ஓங்கிய வேகத்தில் கையை காற்றிலேயே நிறுத்தியிருந்த கரிகாலன் அவளை மேலிருந்து கீழாக ஒருவித சொல்லவியலாத முகபாவணையோடு பார்த்தான்.

தீவிதாவை கண்டதும்‘அத்தை பெத்த ரத்தினமே’ என கொஞ்ச நினைத்த கரிகாலனுக்கு அப்பொழுது ‘அத்தை பெத்த மெத்தையே’ என்றுதான் நினைக்கத் தோன்றியது.

“செதுக்கிவைத்த சிலையாட்டம் இருப்பா என் தங்க குட்டி” என்று அவனது பாட்டி கூறியதை மனதினுள் எண்ணிப்பார்த்த கரிகாலன்,

“பாட்டி! உன் பேத்தி சிலையாட்டம் இல்லை. சிலைய தாங்கி நிக்கற தூண் மாதிரி இருக்கா” என்று கருவிக்கொண்டிருந்தான்.

“என்ன மாமா! அப்படி பார்க்குறீங்க? என்ன அடையாளம் தெரியலையா?!” என கேட்டாள் அவள்.

“தீவி புள்ள! நீயா இது? ஆளே அடையாளம் தெரியாம மாறிப்புட்ட?!” – கரிகாலன்.

“என்ன மாமா? இவ்வளவு குண்டா இருக்கேன் –னு பார்க்குறீங்களா? நீங்க தானா மாமா சின்ன புள்ளையா இருக்குறப்ப சொல்லுவீங்க நிறைய சாப்பிட்டு நம்ம பெரியாத்தா மாதிரி இருக்கணும்னு. அதான் தினமும் எட்டு வேளை சாப்பிட்டு நீங்க சொன்ன மாதிரியே வந்திருக்கேன்! ஹாஹா!!” என சிரித்தாள் பெண்.

அவள் சொன்ன வார்த்தையில் லேசாக நெஞ்சடைப்பது போல உணர்ந்த கரிகாலன், “உனக்கு என் மேல எம்புட்டு பிரியம் புள்ள! நான் சின்ன வயசுல சொன்னத நியாபகம் வச்சி, இவ்வளவு குண்டா இருந்தா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்கனு கூட யோசிக்காம எனக்காக இப்படி இருக்க! ரொம்ப சந்தோஷமா இருக்கு புள்ள!” என்று அவளது அன்புள்ளத்தை பாராட்டிவிட்டு அவளை சிலையை தாங்கும் தூண் என தன் மனதில் நினைத்தமைக்காக மனதிற்குள் வருத்தப்பட்டான். பிறகு, “ஆமா நீ எப்படி என்ன கண்டுபிடிச்ச?” என கேட்டான்.

“நான்தான் மாமா அடையாளம் தெரியாம மாறிட்டேன்! நீ அப்படியே தான் இருக்க! கொஞ்சம் மீசையும் தாடியும் வளர்ந்து ஆளு வளந்தாமண்டியாகிட்டா எனக்கு என் மாமன தெரியாதா என்ன? சரி என்ன எப்படி கூட்டிட்டி போகப்போற வீட்டுக்கு? உன் சைக்கிள் கொண்டு வந்திருக்கியா? நான் முன்னாடி உள்ள கம்பியில உட்கார்ந்துதான் வருவேன்!” என்று அவள் கூற தற்பொழுது நிஜமாகவே நெஞ்சடைத்தது கரிகாலனுக்கு.

“சொல்லுறேன்னு தப்பா எடுத்துக்காத புள்ள! சைக்கிள் –ல எப்படி உன்ன வச்சி ஓட்டுறது? அதுவும் முன்னாடி இருக்கற கம்பியில?” என பாவமாய் கேட்டான்.

“அப்படீன்னா போ! நானே வீட்டுக்கு போய்க்கிறேன்” என்றவள் வேகமாக அவள் அருகே வந்த பேருந்தில் தாவி ஏறிக்கொண்டாள்.

“புள்ள! ஒடுற வண்டியில ஏறாத! மாமா கூட்டிட்டு போறேன் இறங்கு புள்ள!” என்று சிறிது தூரம் அந்த பேருந்தின் பின்னால் ஓடியவன் மூச்சு வாங்க நின்றுவிட்டான்.

“அலபேசிய ஒடச்சிப்புட்டா! தனியா வீட்டுக்கு வர்றான்னு எப்படி பாட்டிக்கிட்டயும் அண்ணன்கிட்டயும் சொல்லுறது? என்ன ரெண்டுபேரும் கஞ்சி காய்ச்ச போறாங்க!” என்று வருந்திய கரிகாலன் அடுத்த வண்டியை பிடித்து தங்கள் வீட்டிற்குச் சென்றான்.

“ஏலே… ஏம்ல இம்புட்டு பறத்தமா ஓடியாற?” என கேட்டார் தாத்தா வெங்கட சுப்பு.

வாசலில் காலணிகள் போடும் இடத்தில் புதிதாய் கிடக்கும் பெண் செருப்பை பார்த்திவிட்டு தீவிதா வீடு வந்து சேர்ந்துவிட்டாள் என எண்ணியவன், “உம்பேத்திய நான் கூப்பிட போனா அது என்ன விட்டுட்டு இங்கு வந்திடுச்சு தாத்தா! நட்பு புள்ளைங்களோட குற்றாலத்துல குளிச்சிட்டு இங்க வர்றதா தானே சொல்லுச்சி? ஆனா தனியாதான் நின்னுட்டு இருந்துச்சு. ஓடுற வண்டியில ஏறி வந்திடுச்சு. கீழ விழுந்திருந்தா என்ன ஆகிருக்கும்?” – எதை முதலில் சொல்வது எதை இரண்டாவதாய் சொல்வது என்று அறியாமல் வசவுகளை வரிசையாய் அடுக்கிக்கொண்டிருந்தான் கரிகாலன்.

“எம்பேத்திய குறை சொல்லாதே! நீ ஏதாவது பண்ணியிருப்ப. அதான் அவ உன்ன விட்டுட்டு வந்திருப்பா” – தாத்தா.

“வந்த முதல் நாளே ஆரம்பிச்சாச்சா? நீங்களே மெச்சிக்கோங்க உங்க பேத்திய!” என்று கரிகாலன் கூற அவனது தோளை தொட்டி தன்னை நோக்கி திருப்பிய பாட்டி பட்டம்மாள்,

“இந்தாப்பு… இந்த பாவாடை தாவணிய புள்ளக்கிட்ட கொண்டு கொடு. உன் ரூம் –ல தான் போய் உட்கார்ந்திருக்கு. குளிச்சிட்டு போட்டுக்கிட்டு வர சொல்லு” என்றார்.

“நீ கொண்டு கொடு பாட்டி! வயசு புள்ளைக்கு என்ன கொண்டு கொடுக்க சொல்லுற?” – கரிகாலன்.

“சொன்னேன்ப்பு! நீ வந்து கொடுத்தா தான் போட்டுப்பேன்னு அடம்பிடிக்குது. போய் கொடுப்பு! என் ராசா –ல?” – பாட்டி.

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. பின்ன எதுக்கு என்ன விட்டுட்டு ஓடியாந்துச்சாம்?” – கரிகாலன்.

“ஏலே! விடுலே! போய் கொடு. நேரமாகுது. எம்பேத்தி வந்த அப்பறம் தான் சாப்பிடணும். ஜோலி கிடக்குல. சீக்கிரம் கொண்டு கொடுத்து குளிச்சிட்டு வரச்சொல்லு!” என்ற தாத்தாவின் உத்தரவின்படி அந்த துணியை பெற்றுக்கொண்ட கரிகாலன் அவனது அறைக்குச் சென்றான்.

கதவை திறந்து உள்ளே நுழைந்தவன், அங்கு யாரையும் காணாததால் “தீவி புள்ள!” என்றான்.

“மாமா… நான் இங்க இருக்கேன்!” என்று துணிமாற்றும் மறைவிற்கு பின்னால் இருந்து சத்தம் கொடுத்தாள் தீவிதா.

“என்ன இது? குரல் வேற மாதிரி இருக்கு?!” என யோசித்தவன், “பாட்டி உனக்கு உடுப்பு கொடுத்துவிட்டுருக்கு. கட்டில் –ல வைக்கிறேன். குளிச்சிட்டு உடுத்திக்கிட்டு வா” என்றான்.

“பாவாடை தாவணி தானே மாமா! ப்ளெவுஸ் எப்படி இருக்கு மாடலா இருக்கா?” – தீவிதா.

“தெரியல புள்ள!” – கரிகாலன்.

“தெரியலையா? சின்ன வயசுல இப்படியா மாமா இருப்ப நீ? எல்லாம் எனக்காக பார்த்து பார்த்து பண்ணுவ? இப்ப மாறிட்ட போல?” – விளையாட்டாய் அழுகுரலில் கேட்டாள் தீவிதா.

“அட கிருக்கு புள்ள! அப்படியெல்லாம் இல்ல. இரு மாமா பார்க்குறேன்” என்று அவளது ரவிக்கையை விரித்திப்பார்த்தவன் அதிர்ச்சித்து நின்றான்.

“என்ன மாமா! நல்லாயிருக்கா? ஏன் அமைதியா நிற்குறீங்க?” – தீவிதா.

“அது… அதுவந்து… அளவு ரொம்ப சின்னதா இருக்கு புள்ள! உனக்கு இது பத்தாதே! பாட்டி ஏன் இப்படி தைச்சு வச்சிருக்கு!” என்றான் திக்கித் திணறி.

“ஏன் மாமா? எனக்கு பத்தாதா?” என்று அவன் முன் வந்து நின்றாள் தீவிதா.

காஃபி கொட்டை லேசாக சாயம் போன நிறம். தீர்க்கமான விழிகள், அதில் கூர்மையான பார்வை. செத்துக்கிய சிற்பம் என்று பாட்டி சொன்ன சொல்லை முறியடித்து பார்த்து பார்த்து செதுக்கி திரட்டிய சிலை என தோன்றியது கரிகாலனுக்கு. ஆனால் குற்றாலத்தின் தான் பார்த்த பெண் இல்லையே இவள் என்று வியந்து நின்றான் அவன்.

“என்ன மாமா! அப்படி பார்க்குறீங்க? நான் ரொம்ப குண்டா இருக்கேனா?” என கேட்டு சிரித்து தள்ளினாள் குரும்புக்காரி.

என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிப்போயிருந்தான் கரிகாலன்.

“என்ன மாமா? இன்னும் மாறவே இல்லையா நீ? யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா? இப்படி அப்பாவியா இருக்கியே மாமா?” – தீவிதா.

“என்ன சொல்லுறீங்க?” - கரிகாலன்.

“போச்சு டா! என்ன இது நீங்க நாங்கனு? நான் தான் மாமா தீவிதா. நீங்க பஸ் ஸ்டாண்ட் –ல பார்த்தது என் ஃப்ரெண்டு. பல வருஷம் கழிச்சு பார்க்கறோமேனு சும்மா அவள வச்சு உங்கள கலாய்க்க அப்படி செஞ்சேன். நான் உங்கள விட்டுட்டு வெளிநாட்டுக்கு படிக்கப்போனதும் கோவத்துல இனி நேர்ல வந்தாதான் பார்ப்பேன்னு இருந்துட்டீங்க. அதோட விளைவு இப்ப தெரியுதா? யார் வந்து நான் தான் தீவினு சொன்னாலும் நம்பிட்டு பின்னாடியே போய்டுறீங்க? ஹாஹா! நல்ல வேளை, என் ஃப்ரெண்டு சரியான நேரத்துல பஸ் ஏறி அவ வீட்டுக்கு ஓடிட்டா. இல்ல பின்னாடியே ஓடி கெஞ்சியிருப்பீங்க போல?! ஹாஹா!” – தீவிதா.

“என்ன புள்ள விளையாட்டு இது? இப்படியெல்லாமா பண்ணுவ? என்ன பார்த்த்துமே அடையாளம் கண்டுக்கிட்டயா நீ?” – கரிகாலன்.

“நான் சேது மாமாகிட்ட கேட்டு உங்கள போட்டோல பார்த்துட்டே தான் மாமா இருந்தேன் இத்தன வருஷமா? உங்கள விட்டுட்டு வெளிநாட்டுக்கு போய்ட்டா அப்படியே மறந்துருவேன்னு அர்த்தமா?” – தீவிதா.

“அப்படி போடு அருவாள! வெங்கட சுப்பு பேத்தியா கொக்கா?” என அங்கே வந்த தாத்தா, “தங்கம்! சீக்கிரம் குளிச்சிட்டு வா தாயி! தாத்தாக்கு ஜோலி கிடக்கு. உங்கூடதான் இன்னைக்கு சாப்பிடணும்னு காத்துக்கிட்டு இருக்கேன்” என்கவும் குளியலறைக்குள் புகுந்தாள் தீவிதா.

பத்து நிமிடத்தில் குளித்து முடித்துவிட்டு அந்த ஆரஞ்சு நிற பாவடையையும் பச்சை நிற தாவணியையும் உடுத்திக்கொண்ட தீவிதா தலையில் ஒரு பருத்தி துண்டை கட்டியவாறு வெளியே வந்தாள்.

“சொல்ல சொல்ல கேட்காம மழைக் கொட்டிக்கிட்டு இருக்கற நேரத்துல இப்படி தலைக்கு குளிச்சிட்டு வந்திருக்கியே ஆத்தா” என்றார் அவளது பாட்டு பட்டம்மாள்.

“பாட்டி… எனக்கெல்லாம் என்ன நேரம் என்ன காலம்? உனக்கு தெரியாதா?” என்றவாறு முகம் மலர கண்ணாடியின் முன்னே சென்றவள் தன் பாவாடையை இரு கைகளாலும் பக்கவாட்டில் விரித்து பிடித்தபடி வலதும் இடதுமாய் திரும்பி திரும்பிப் பார்த்தாள்.

“என்ன ஆத்தா புடிச்சிருக்கா?” சிரித்தபடி கேட்டார் பட்டம்மாள் பாட்டி.

“ம்ம்ம்… ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு அழகா இருக்கா பாட்டி?” – தீவிதா.

“என் தீவி கண்ணுக்கு எது போட்டாலும் நல்லாதான் டி இருக்கும்… என் ராசாத்தி…” என அவளது கன்னம் இரண்டையும் ஒட்டத் தடவி எடுத்து சொடுக்கிட்டார் பட்டம்மாள்.

“அப்படியா…? பின்ன நான் ஊருல இருந்து வரும்போது போட்டிருந்த ஜீன்ஸ் –அ பார்த்து சோளக்காட்டு பொம்மை மேல சாக்குப் பை -அ கட்டி வச்ச மாதிரி இருக்குனு சொன்னது யாரு?” என ஒற்றை புருவத்தை தூக்கியபடி கேட்டாள் தீவிதா.

“அதெல்லாம் ஒரு ட்ரெஸ் –ஆ… வயசு பொண்ணா லட்சனமா தாவணியோ சேலையோ கட்டுனாதானே பார்க்க மகா லட்சுமி மாதிரி இருக்கும். அதென்ன ஆம்பள புள்ளையாட்டம் பேண்டும் சட்டையும் மாட்டிக்கிட்டு” – அலுத்துக் கொண்டார் பட்டாம்மாள்.

“ஆம்பளைங்க மட்டும் தான் அத எல்லாம் போடணும்னு ரூல்ஸ் எதாவது இருக்கா பாட்டி? ஹாஹா.. வேணும்னா உனக்கும் ஒரு பேண்ட் ஷர்ட் வாங்கித் தர்றேன். போட்டுப்பார்க்குறியா?” – கண்ணடித்தாள் தீவிதா.

“வாலு கழுத” என அவள் தலையில் செல்லமா ஒரு கொட்டு வைத்த பட்டம்மாள் “நம்ம ஊருல ஆம்பள பையளுக கூட நீ போட்டுகிட்டு வந்த ட்ரெஸ் –அ போட மாட்டாங்க கண்ணு. எல்லாரும் வேஷ்டி தான். வேஷ்டி சவுகரியப்படாத வேலை செய்யுறப்ப பட்டாப்பட்டி தான்” என்றார்.

“அதுக்காக என்னையும் பட்டாபட்டி போட சொல்லுறியா பட்டு?” செல்லமாய் முறைத்தாள் தீவிதா.

“அதான் உன் பாட்டி சொன்னாலே உனக்கு என்ன உடுப்பு போட்டாலும் நல்லா இருக்கும்னு. போட்டு தான் காட்டேன்” என்றபடி உள்ளே வந்தான் கரிகாலன்.

“பாருங்க பாட்டி மாமா –வ… என்ன பட்டாப்பட்டி போட சொல்லுது” – சிணுங்கிக்கொண்டே பாட்டியிடம் பஞ்சாயத்து வைக்க தயாரானாள் தீவிதா.

“ஏலே… எம்பேத்திய எதுக்கு வம்புக்கு இழுக்க? நம்ம வயலுல இருக்கற மோட்டார் –ல ஏதோ கோளாறுனு கொம்பையா சொன்னானே. அத என்னனு பார்த்தாச்சா காலா?” – பட்டம்மாள்.

“ஆமா பாட்டி. இப்பதான் ஆள விட்டுட்டு வந்திருக்கேன். ஒரு மணி நேரத்துல சரியாகிரும்” – கரிகாலன்.

“இப்ப எதுக்கு அய்யா? நாளைக்கு காலையில பார்த்திருக்கலாமே” – பட்டம்மாள்.

“இல்ல பாட்டி. நாளைக்கு அதிகாலையில் சீக்கிரமே தண்ணி பாய்ச்ச சொல்லியிருக்கேன். இப்ப சரி பண்ணாதான் முடியும். மோட்டார் ரூம் –ல இருந்து வயர் கனெக்‌ஷன் எடுத்து லைட் ஏற்பாடு பண்ணி தான் கொடுத்துருக்கேன்” என்றவாரு அங்கு வந்தான் சேது.

“சரிப்பு… கை கால அலம்பிட்டு வாங்க. சாப்பாடு எடுத்து வைக்கறேன்” என்று நகர்ந்தார் பட்டம்மாள்.

அவர் செல்லவும் கரிகாலனை பார்த்து தன் உதட்டை சுழித்துக்கொண்ட தீவிதா, தன் தலையில் இருந்த பருத்தித் துண்டை அவிழ்த்து முடியை காய வைக்க, அவளது கார்குழலில் இருந்து விழும் ஒவ்வொரு சொட்டு நீரோடு தன் இதயத்தை தொலைத்துக் கொண்டிருந்தான் கரிகாலன்.

தொடரும்…
 
Top Bottom