Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உனக்கென நான் எனக்கென நீ - கதை

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
💕 20 💕

ஷாயின் விழித்த போது அவன் அணைப்பில் இருப்பதை பார்த்து 🤤🤤😢😢 நான் எப்படி இவன் அணைப்பில் தினமும் இருக்கேன். எனக்கு ஒன்னுமே புரியலை😦😦 இவனுக்கு தெரிந்தால் என்னை கொன்றுவானே😣😣 என்று அவன் அணைப்பில் இருந்து விலகி உளு செய்ய சென்றாள்.

தொழுகை முடித்து விட்டு நவீ மதி நீங்கள் ரெண்டு பேரும் ரெடி ஆகலையா என்று கேட்டவளை இருவரும் உன்னால் மட்டும் எப்படி இப்படி இருக்க முடியுதோ? என்று நினைத்து விட்டு இதோ கிளம்பிட்டு இருக்கோம் டி என்றார்கள்.

அனைவரும் மண்டபத்திறகு தேவையான பொருட்களை எடுத்து வைத்து விட்டு அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள்.

மதி நவீ ஷாயின் மூவருக்கும் ஊட்டி விட்டு கொண்டு இருந்தார் சரத். பிறகு அவர்களும் சாப்பிட்டு விட்டு மண்டபத்திற்கு வந்தனர்.

சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்து சேர்ந்தனர். மதி நவீ இருவர் இடையில் நாணம் ஒட்டி கொண்டது.

இருவரும் ஜன்னல் வழியே தங்கள் நாயகனை பார்த்தனர். இவர்கள் இருவரின் கண்களும் தன்னவளை தேட அண்ணா போதும் போதும் உங்கள் உத்பி உள்ள ரூம்ல தான் இருக்காங்க என்று ஷாயின் கூற அவர்கள் அசட்டு வழிய சிரித்து விட்டு தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டார்கள்.

சித்தார்த் அஜ்மல் இருவருக்கும் ஷாயினால் எப்படி இயல்பா இருக்க முடிகிறது என்று வியந்தார்கள். இவர்களை நாம தான் சேர்த்து வைக்கனும் என்று அஜ்மல் கூற அப்ப இப்பவே வேலை ஆரம்பிச்சிடலாம் மச்சி என்றான். என்ன மச்சி பண்ண போற என்று அஜ்மல் கேட்க நீ வாடா என்று அவனை அழைத்து கொண்டு வெளியே சென்றான்.

இரவு 10 மணி ....

என்ன எல்லாரும் ரொம்ப அமைதியாக இருக்கிங்க? என்று கேட்டு கொண்டு இருவரும் சேரை இழுத்து கொண்டு உட்கார என்ன பண்றது அப்புறம்? என்று ரியாஸ் கேட்க ம்ம்ம் அன்னிக்கு நம்ம ஷாயின் மேரேஜ் அப்ப எல்லாரும் பிரபோஸ் பண்ணிங்க ஆனா நம்ம ஷாயின் அம்மா அப்பா சாதிக் அப்பா அம்மா பேலன்ஸ் என்று சித்து கூற அச்சோ மறுபடியுமா? வேண்டாம் தம்பி என்று நஜீதா சொல்ல அதெல்லாம் முடியாது இப்ப அப்பா உங்ககிட்ட பிரபோஸ் பண்ணி தான் ஆகனும் என்று நவீ அங்கு வர ஏய் கல்யாண பொண்ணுக்கு இங்க என்ன வேலை என்று நஜீ கேட்க என்ன கொஞ்சம் சத்தமா இருக்கேன் வந்தோம் என்று மதி கூறி கொண்டே சேரில் அமர்ந்தார்கள் மூவரும்.

பிறகு சாதிக்கும் அங்கு வந்து அமர்ந்தான். ரிஹானா அம்மா கிட்ட ஹாபிஸ் அப்பா இப்ப பிரபோஸ் பண்ணணும் என்று அஜ்மல் கூற அவர்கள் அனைவரும் ஆமாம் போங்க என்று இருவரையும் நிற்க வைத்தனர்.

என்னவளே! நீ எங்கிருந்தோ
வந்து என் மனதை
கொள்ளை கொண்டு
இம்சை செய்து கொண்டு
இருக்கிறாய்!
உன்னை என் மணவாளி ஆக்க
என் மனம் துடிக்கிறது!
நீ சம்மதம் சொல்வாய்
என்ற நம்பிக்கையில்
உன்னிடம் கேட்கிறேன்
என்னை திருமணம்
செய்து கொள்ள சம்மதமா?....

என்று அவர் அங்கிருந்த பூவை நீட்டினார். அவரும் வாங்கி கொண்டு சம்மதம் என்று வெட்கத்தோடு கூறினார். அனைவரும் ஓஹோ அப்பா பிண்ணிடிங்க என்று ஷாயின் ரிஹானைவை அணைத்து கொண்டு முத்தமிட்டாள்.

அப்பா கலக்கிடிங்க என்று சாதிக் அவளை முறைத்து கொண்டு கூற அவள் பொறாமை என்று அவனுக்கு மட்டும் கேட்க்கும் குரலில் கூறிவிட்டு அமர்ந்து கொண்டாள். அவன் அவளை முறைத்து கொணடு அமர்ந்தான்.

அடுத்தது, நம்ம நஜீதா அம்மா கிட்ட சுலைமான் அப்பா கிட்ட பிரபோஸ் பண்ணணும் என்று சித்து அவர்களை நிற்க வைத்தான்.

இமைகள் விழிகளை
காப்பது போல்
உன்னை என்றுமே
நான் காப்பேன்
என் தேவதையே
என்னை ஏற்று கொள்வாயா?

என்று அவரும் பூவை கொடுத்து சொல்லவும் அவரும் வாங்கி கொண்டு எனக்கு சம்மதம் என்று வெட்கப்பட அதை அவர் ரசித்தார். சாதிக் செம கலக்கிடிங்க மா என்று கூறி தன் மாமனாரை அணைத்து கொண்டான்.

அவள் முறைத்து கொண்டு தலையை திருப்பி கொண்டாள். இவர்களின் விளையாட்டை நான்கு பேர் கவனித்து கொண்டு இருப்பதை மறந்து விட்டார்கள்.

அடுத்தது நம்ம ஷாயின் கிட்ட சாதிக் பிரபோஸ் பண்ணணும் என்றவுடன் இருவரும் அதிர்ந்தனர்😲😲😲🤤🤤🤤🤤

அதெல்லாம் முடியாது என்று நகர்ந்தவளை வலுக்கட்டாயமாக இழுத்து நிற்க வைக்க முனைய அதான் பிடிக்கலை சொல்றேன் விடுங்களா என்று எரிச்சலோடு கூறிவிட்டு நகர்ந்தாள். அவனும் எரிச்சலோடு நகர்ந்தான்.

அனைவரும் சற்று அதிர்ந்தனர். இதுக்கு மேல நாம இவங்க கிட்ட மறைக்கிறது தப்பு உண்மை சொல்லிவிடுவோம் என்று அஜ்மல் இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள சண்டை கூற அவர்கள் அதிர்ந்தனர்.

அவர்கள் இருவரின் நேசமும் உண்மை அதனால் தான் அல்லாஹ் அவர்களை ஒன்று சேர்த்தான் என்று சுலைமான் கூற ம்ம்ம் ஆமா பாய் இப்ப எப்படி அவர்களை ஒன்று சேர்ப்பது என்று காதர் கேட்க அதுக்கு ஒரு ஐடியா இருக்கு அவங்க ரெண்டு பேரையும் ஹனிமூன் மாதிரி எங்கயாவது அனுப்பி வைக்கலாம்.

அவங்க தனியா இருந்து கொஞ்ச மனசு விட்டு பேசுனாலே போதும். அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல் ஒருத்தர் உயிரா இருக்காங்க. கொஞ்சம் misunderstanding வேற ஏதுவும் கிடையாது. அவங்களுக்கு தனியா விட்டாலே போதும் என்று நான்கு பேரும் மாறி மாறி கூற அவர்கள் அனைவரும் நீங்க சொல்றதும் சரிதான் என்று குமார் கூறினார்.

முதல்ல உங்கள் திருமணம் முடியட்டும் அப்றம் பார்த்துக்கலாம் என்று சரத் சொல்ல சரி என்று அஜ்மல் கூறி உங்களுக்கு இந்த விஷயம் தெரியும் அவங்களுக்கு தெரிய வேண்டாம் என்றான். ம்ம்ம் சரி என்று அனைவரும் சம்மதித்தனர் .

ஷாயின் அறையில் வந்து சாரி செல்லம் கம்பல் பண்ணி தான் நீ எனக்கு பிரபோஸ் பண்ணணும் அவசியம் இல்லை டா. உனக்கு எப்ப என் மேல இருக்கிற கோபம் போகுதோ அப்ப வந்து நீ என்னை ஏத்து கிட்டா போகும் . அது வரைக்கும் நான் வைய்ட் பண்ற. நீ என் மேல கோபமா தான் இருக்க லவ் இல்லாமல் இல்லை என்று எனக்கு நல்லா தெரியும். நான் உனக்கானவள் டா லூசு என்று அவன் போட்டோவை பார்த்து கண்கலங்க முத்தமிட்டாள்.

அவள் என்ன பண்றது இப்ப சரி கேம் விளையாடலாம் என்று தன் போனில் கேம் விளையாடினாள்.

அவள் விளையாடுவது இருவருக்கும் எரிச்சல் தந்தாலும் ஏதுவும் சொல்லாமல் அவளை முறைத்து கொண்டு தூங்கினர். இருவரும் தன்னை முறைத்து பார்ப்பதை பார்த்த எதுவும் சொல்லாமல் அமைதியாக மதி மதி என்று அழைக்க இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.

அவள் மேலும் அழைக்க நவீ உனக்கு அறிவில்லையா என்று கத்த ஷாயின் தன்னை தான் சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்டு அமைதியாக தூங்கினாள்.

சாதிக் தன்னிடம் பேசவில்லை என்பதை விட தன் தோழிகள் தன்னிடம் பேசவில்லை என்று நினைக்கும் போது அவள் மனம் வலித்தது.

அவளுக்கு தூங்க விருப்பமின்றி வெளியே வந்து சற்று காற்று வாங்கினாள். தன்னவனும் தன்னிடம் பேசமாட்டேன் என்று இருக்கிறான் . தன் தோழிகளும் தன்னிடம் மாட்டேன் என்று இருக்கிறார்கள். நான் என்ன செய்வேன் அல்லாஹ்! என்று தன் கண்களை துடைத்து கொண்டாள்.

தன்னறைக்கு வந்த இருவரிடமும் டேய் உனக்கு அறிவில்லையா? என்று அவன் எரிந்து விழ டேய் உனக்கு தங்கச்சி அருமை தெரியலை நாங்க எதுவும் பேசலை அமைதியா போ என்று விட்டு அவர்கள் இருவரும் தூங்கினார்கள்.

சாதிக் தூக்கத்தை தொலைத்தான். அறையை விட்டு வெளியே வந்தமர்ந்தான்.

காலையில் அழகாய் தேவதையாய் காட்சி தந்தாள் நவீனா. அவள் கழுத்தில் தாலி கட்டி தன்னவள் ஆக்கி கொண்டான் சித்தார்த். நாத்தனார் முடிச்சை மித்ரா போட்டாள்.

இரவு முழுக்க தூங்காமல் இருந்ததால் இருவரும் திருமணம் முடிந்த உடன் தூங்கி விட்டனர். அப்போது அங்கு வந்த பாட்டிமார்கள் தூங்கி கொண்டிருந்த ஷாயினின் தலையை வருடி விட்டனர்.

எப்படி டா இவ்வளவு வலியையும் தாங்கிட்டு இருக்காள் என்று கேட்ட சரோஜாவை பார்த்து அதான் தெரியலை என்று ஜீபைதா கூற என் பேத்தி அப்படியே சரத் தம்பி மாதிரி என்று தாஜீன் கூற அவன் கிட்ட தான் இவள் அதிகமாக இருப்பாள். நவீ ரியாஸ் கிட்டயும் மதி சுலைமான் கிட்டயும் தான் அதிகமா இருப்பாங்க.

எது வேண்டும் என்றாலும் சரத் கிட்ட தான் கேட்பாள். அவனும் எதுவும் சொல்லாமல் வாங்கி கொடுப்பான். அவன் தூக்கி வளர்த்த பிள்ளை ஷாயின் என்று சரோஜா அவள் நெற்றியில் இதழ் பதித்த படி கூறினார்.

சரி வாங்க அவள் தூங்கட்டும் நைட் பூரா தூங்கமல் இப்ப தூங்குறாள் என்று கடிந்து விட்டு சென்றார்கள்.

அவர்கள் சென்ற சற்று நேரத்தில் அவள் விழித்தாள். பிறகு அவளும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.

அவர்கள் இருவரும் தங்கள் காதலை பகிர்ந்து கொண்டனர். மதினா திருமணத்திற்கான ஏற்பாடு நடைப்பெற்றது.

அடுத்த நாள் மதினாவை தன்னவள் ஆக்கி கொண்டான் அஜ்மல். தங்கள் மகள்கள் திருமணத்தை நல்லபடியாக முடித்த திருப்பதியில் இருந்தனர்.

மதி நவீ உங்க கிட்ட பேசனும் ப்ளீஸ் என்று கெஞ்ச அவர்களும் சொல்லு என்றனர். சாரி டி என்றவுடன் இருவரும் அடித்தனர். ஏன்டி எங்கள் கிட்ட இருந்து மறைத்த என்று கேட்டவர்களை புரியாமல் எதை? என்றவளிடம் தொடப்பக்கட்ட என்று அவர்கள் கூற.

நீங்கள் வருத்தம் படக்கூடாது தான் டி சொல்லலை மற்றபடி மறைக்கனும் எந்த ஐடியாவும் இல்லை டி என்றவுடன் அவள் கண்கள் கூறிய பல உணர்வுகளை புரிந்து கொண்டனர் இரு தோழிகளும் அவளை அணைத்து கொண்டனர் ஆறுதலாக.

அஜ்மலும் சித்துவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை சிந்தினர். பிறகு ஷாயின் இருவர் காதிலும் ஏதோ கிசுகிசுக்க அவர்கள் இருவரும் அடியே நாயே உன்னை என்று அவளை அடிக்க விரட்டினர். அவளும் அவர்களிடம் பிடிபடாமல் ஒடி சரத்திடம் சரண் அடைந்தாள்.

அப்பா காப்பத்துங்க இந்த பிசாசு கிட்ட இருந்து என்று கூற எனன்து நாங்க ரெண்டு பேரும் பிசாசா நீதான் டி பிசாசு நாய் பேய் எல்லாமே என்று அவளை மேலும் விரட்டனார்கள்.

இதையெல்லாம் அமைதியாக அனைவரும் ரசித்து கொண்டு இருந்தனர்.

ஆனால் இவர்கள் மூவரும் தன்னை மறந்து தன்னவளை ரசித்து கொண்டு இருந்தனர். பிறகு டேய் மச்சி இவங்க ரெண்டு பேரையும் சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான் டா என்று சித்து கூற ம்ம்ம் ஆமாம் ஆனால் அவங்க அன்பு இதே மாதிரி தான் ரொம்ப உண்மை தூய்மையானது டா நாம அவங்களை கண்கலங்காம பார்த்துக்கனும் என்று அஜ்மல் கூற ம்ம்ம் சரி மச்சி என்றான் சித்து.

ஒரு வழியாக மூவரும் தங்கள் விளையாட்டை முடித்து விட்டு வந்தனர். பிறகு அனைவரிடமும் பிரியா விடை பெற்று கொண்டனர் மூவரும்.

தொடரும்​
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
💕 21💕

மூவரும் தன் பிறந்த வீட்டிற்கு பிரியா விடை பெற்று கொண்டர். மூன்று ஜோடிகளும் ஏறி கொண்டனர்.

சித்துவும் நவீனாவும் அமர்ந்தனர். அடுத்த சீட்டில் அஜ்மலும் மதினாவும் அமர்ந்தனர். அதற்கு பின் சீட்டில் ஷாயினும் சாதிக்கும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு அமர்ந்தனர்.

இதை பார்த்து கொண்ட இவர்கள். சிரித்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் அமைதியாக இருந்தனர். ஷாயினுக்கு போர் அடித்தது. அவள் வேடிக்கை பார்த்த படியே தூங்கி சாதிக் தோளில் உறங்கினாள். அவனும் அவள் மீது தலை சாய்த்தவாறு உறங்கி போனான்.

நவீனா எதேச்சையாக திரும்ப சித்து சித்து என்று அவள் அழைக்க என்னம்மா என்று கேட்க அங்க பாரேன் என்று இருவரையும் காண்பிக்க அவனும் பார்த்து டேய் அஜ்மல் அங்க பாரேன் என்று அஜ்மல் மதினா இருவரும் அவர்களை பார்த்தனர்.

ரெண்டு பேரும் எவ்வளவு அழகாக தூங்கிறாங்க பாரேன் என்று மதி கூற ம்ம்ம் ஆமா டி என்று நவீ கூற இவர்கள் தூங்குவதை அழகாக தங்கள் போனில் போட்டோ எடுத்து கொண்டார்கள்.

அவர்கள் இருவரையும் சிறிது நேரம் ரசித்து கொண்டு இருந்தார்கள். ஒருத்தர் மேல் ஒருத்தர் அன்பு இருந்தும் இப்படி பிரிந்து இருக்கிறார்கள் ம்ஹூம் என்று பெருமூச்சு விட்டபடி சித்து கூறி கொண்டே அமர்ந்தான்.

பிறகு தன் அருகில் அமர்ந்த தன்னவளை ரசித்து கொண்டு இருந்தான். அவள் என்ன என்று கேட்க அவன் எதுவும் சொல்லாமல் அவளை தன் நெஞ்சோடு பொருந்தி கொண்டான். அவளும் அவன் அணைப்பில் தன்னை மறந்தாள்.

தன் தோளில் தூங்கி கொண்டிருந்த மதினாவை ரசித்து கொண்டு வந்தான் அஜ்மல்.

சிறிது நேரத்தில் சாதிக் கண்விழிக்க ஷாயின் தன் தோளில் உறங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தான். ஆனால் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து விட்டான்.

சிறிது நேரத்தில் ஷாயின் கண்விழித்தாள். அவள் சாதிக் தோளில் தான் தாம் உறங்கி கொண்டு இருக்கோம் என்பதை உணர்ந்தவள் 😭😭😭😭😭😣😣😣😣😦😦😦😦 இப்பவும் இவன் தோளில் தூங்கி இருக்கேன். எப்படி இவனுக்கு தெரிஞ்சா என்னை சாகடிப்பானே! நான் என்ன பண்ணுவேன்😣😣 என்று மனதில் நினைத்து கொண்டு அவனிடம் விலகி ஜன்னல் வழியா வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள்.

அவனும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்து கொண்டே நான் எப்போ அவன் மேலே தூங்கின எனக்கு ஒன்னுமே புரியலை😏 தனக்குள் புலம்பி கொண்டு இருந்தாள்.

பிறகு வீடு வந்ததும் ஷாயினும் சாதிக்கும் அவர்களிடம் கூறிவிட்டு இறங்கி தங்கள் வீட்டுக்குள் நுழைந்து கொண்டனர்.

ஷாயின் இஷா தொழுது விட்டு உறங்கினாள் . ரிஹானா சாப்பிடுவதற்கு ஷாயினை தேடி அவள் அறைக்கு வந்தார். அவள் தூங்குவதை பார்த்தவர் எல்லா சேட்டையும் பண்ணிட்டு தூங்குறத பாரு சாப்பிடாமல் தூங்கிட்டா என்று குட்டிமா எழுந்துடு சாப்பிட்டு தூங்குவ எழுந்துடு என்று அவளை உலுக்க போ ரிஹானா நான் தூக்கம் வருது தூங்க விடு என்று சிணுங்க கொஞ்சோடு சாப்பிட்டு படுத்துக்கோடா என் செல்லம்ல என்று சொல்ல தூக்கம் வருது போ என்று சிணுங்கி திரும்பி படுத்து கொண்டாள். குழந்தை தனமா என்று தனக்குள் சிரித்து கொண்டு சென்றார்.

பிறகு சாதிக் வர அவனுக்கு பரிமாறிவிட்டார். அவனும் சாப்பிட்டு விட்டு தன்னறைக்கு சென்றான்.

அவள் உறங்கி கொண்டிருப்பதை பார்த்து தனக்குள் சிரித்து விட்டு அவனும் அவள் அருகிலே உறங்கினான்.
.
.
..
.
.
.

நவீனாவை சித்துவின் அறையில் விட்டார்கள். தேவதை போல் இருந்த தன்னவளை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான். அவள் என்ன என்று கேட்க அவளை தன் பக்கம் இழுத்து அணைத்து கொண்டு லவ் யூ வினு மா என்றவுடன் லவ் யூ டு சிது என்று அவளும் அவனை அணைத்து கொண்டாள்.

சிது சாதிக் அண்ணா ஷாயினை ஏத்துப்பாரு தானே என்று கேட்டவளை ஏய் லூசு கண்டிப்பா ஏத்துப்பான். அவங்க ரெண்டு பேர்க்குள்ள பெரிய சண்டை எல்லாம் இல்லை சும்மா வெட்டி பந்தா காட்டிட்டு திரிராங்க ரெண்டு பேரும் என்று சொல்ல என்ன சிது சொல்ற என்று புரியாமல் கேட்டவளை பார்த்து ம்ம்ம் வினு இன்னிக்கு நீங்க மூனு பேரும் விளையாடிங்கல ம்ம்ம் ஆமா அப்ப சாதிக் கண்ணு ஷாயின் மேல தான் இருந்துச்சு அவன் கண்ணுல லவ் தெரிஞ்சுது என்று சொல்ல ம்ம்ம் அப்படியா என்று கண்கள் விரிய கேட்டவளை ஆமாடி லூசு. ம்ம்ம் சரி என்றாள்.
.
.
.
.
.
அஜ்ஜீ என்று மதினா அழைக்க சொல்லு மதுமா நாளைக்கு பீச் போகலாமா? என்று கேட்டவளை போலாம் டா அதுக்கு முன்ன நான் ஒன்னு கேப்பேன் உண்மை சொல்லனும்? என்று கேட்டவனிடம் சொல்லு அஜ்ஜீ என்றாள்.

இல்லை ஏன் ஷாயின் ரெண்டு வருஷமா சாதிக்கிட்ட பேசலை? என்று கேட்டவனிடம் அவள் நானும் ஷாயினும் ஆலிம் படிக்க பெங்களூர் போய்டோம் அங்க போன் அலவ்ட் இல்லை அதே மாதிரி வீட்டில் இருக்கிறவங்க கிட்ட கூட பேச கூடாது. அதுனால தான் அவள் எத்தனையோ டைம் அண்ணா கிட்ட சொல்லனும் நினைச்சா பட் முடியலை.

அண்ணா ஷாயினை வேண்டாம் சொன்னப்ப எவ்வளவு அழுதாள் தெரியுமா? என்று மதினா கண்களை துடைக்க அவளை தன் நெஞ்சோடு பொருந்தி கொண்டான்.

அவளும் அப்படியே உறங்கி போனாள். அவளின் தலையை வருடி தூங்குறத பாரு குழந்தை மாதிரி என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டு அவளை அணைத்து கொண்டு அவனும் உறங்கினான்.
.
.
.
.
.
ஏன் சுலைமான் உனக்கு எந்த கோபமும் இல்லை தானே ஷாயின் மேல்? என்று ரியாஸ் கேட்க இல்லை அவள் என்ன தப்பு பண்ணா நான் கோவப்படுறதுக்கு.

அவங்க லவ் தப்பில்லையே ரியாஸ். இந்த உலகத்தில் காதலிச்சவனுக்காக பெத்தவங்கள தூக்கி ஏறிஞ்சிட்டு போற எத்தனையோ பிள்ளைகள் இருக்காங்க ஆனால் சாதிக்கும் சரி ஷாயினும் சரி அப்படி இல்லை. ரெண்டு பேரும் ஏதோ புரிதல் இல்லாமல் இருக்காங்க அவ்வளவு தான் . அவங்க கண்டிப்பா ஒன்னு சேர்வாங்க அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு என்றார் சுலைமான்.

ம்ம்ம் இவ்வளவு கஷ்டத்தை தாங்கிட்டு எப்படி தான் இருக்காலோ? என்று ரியாஸ் சொல்ல வேற என்ன நாம கஷ்டப்பட்டு விட கூடாது சொல்லி தன்னோட வேதனை வலி எல்லாம் தனக்குள்ளே புதைத்து வச்சி கிட்டா என்று சரத் சொல்ல ம்ம்ம் அதுவும் உண்மை தான் என்று சுலைமானும் சொன்னார்.

நீ பார்த்து வளர்த்த பொண்ணு டா ஷாயின் என்று சரத்தை பார்த்து சொல்ல அவருக்கு சற்று பெருமையாக இருந்தது. என் வாலு எப்பயும் தப்பு பண்ண மாட்டா என்று பெருமிதத்துடன் சொன்னார்.

சரிசரி உங்க பொண்ணோட புகழாரம் போதும் வாங்க சாப்பிடலாம் என்று சுசீ அழைக்க உனக்கு பொறாமை என்று சரத் நக்கலடிக்க ம்ம்ம் ஆமா அப்படியே பட்டுடாலும் ம்ஹூம் என்று சலித்து கொண்டு சமையலறைக்குள் சென்றார். அவருக்கும் பெருமை தானே.

பிறகு அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்தனர்.
.
.
.
.
.
காலையில் கண்விழித்தவள் தான் சாதிக்கின் அணைப்பில் இருப்பதை உணர்ந்து இன்னிக்குமா 😣😣😣😣😨😨😞😖 நான் எப்படி எனக்கு ஒன்னுமே புரியலை போ என்று தனக்குள் புலம்பி கொண்டு தொழுதாள். சாதிக்கும் சிறிது நேரத்தில் எழுந்து தொழுகைக்கு சென்றான்.
.
.
.
.
.
மதுமா மதுமா எழுந்திரி தொழுகனும் என்று மதினாவை எழுப்ப அவளும் எழுந்து சென்று உளு செய்து கொண்டு வந்தாள்.

நாம சேர்ந்த தொழுவோம் என்று அவன் முன் நின்று தொழ அவனை பின்பற்றி இவள் தொழுதாள்.

தொழுது முடித்தவுடன் அஜ்ஜீ என்று மதினா அழைக்க சொல்லு நான் ஒன்னு கேப்பேன் தப்பா எடுத்த கூடாது என்று தயங்கி தயங்கி கேட்டவளை ம்ம்ம் சொல்லுடி இல்லை டெய்லி ஒரு வேளை மட்டும் என் கூட சேர்ந்து தொழுகிறியா? என்று கேட்டவளை தன்னோடு பொருந்தி கொண்டு இன் ஷா அல்லாஹ் தொழுகிறேன் என்று அவள் நெற்றியில் முத்தமிட்டாள்.

தன்னவளை நினைத்து பெருமை கொண்டது நெஞ்சம்.
.
.
.
.
.
.
நவீனா கண்விழித்தாள். எழுந்து தன்னவனின் தலையை வருடி அவன் நெற்றியில் முத்தமிட்டாள். பிறகு அவனிடம் இருந்து விலகி குளித்து விட்டு சமையலறைக்கு சென்றாள்.

அங்கு பூர்ணிமா இவளை பார்த்தவுடன் என்ன டா வேணும் என்று கேட்க சும்மா இங்க ஹெல்ப் பண்ணலாம் வந்தேன் என்றவளை அதெல்லாம் வேண்டாம் நீ போய் அங்கே அமைதியாக உட்கார் என்று அதட்ட அவள் போங்க மா நான் செய்வேன் என்று அவள் பிடிவாதம் பிடிக்க சரிசரி வா என்று இருவரும் சேர்ந்து செய்தனர்.

பேசி கொண்டே இருவரும் சமையலை செய்து முடித்தனர். பிறகு நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவை முடித்தனர்.

அம்மா ஷாயினையும் சாதிக்கையும் தனியா ஊட்டி கொடைக்கானல் அனுப்பி வச்சா நல்லா இருக்கும் தானே மா என்று அவன் கேட்க ம்ம்ம் நீ சொல்றதும் நல்லா இருக்கு ஆனால் அவங்க சம்மதிக்கனுமே என்று குமார் கேட்க கண்டிப்பா சம்மதிப்பான் என்று சித்தார்த் சொல்ல எப்படி என்று நவீனா கேட்க பார்த்துக்கலாம் என்று கூறிவிட்டு அம்மா நான் காலேஜ் போய்ட்டு வரேன் என்றவனை இன்னிக்கு லீவு போடலாம் தானே என்றவுடன் இல்லை மா போகனும் என்று தன் அறைக்கு சென்றான்.

நவீனாவும் பின் சென்றாள். வினு மா உனக்கு கோபமில்லை தானே என்று கேட்க எதுக்கு என்று கேட்டவளை இன்னிக்கும் வேலைக்கு போறேன் என்றவுடன் அதெல்லாம் இல்லை நீ கிளம்பு என்று அவள் கூற ம்ம்ம் சரி என்று அவன் நகர அவன் விடைபெற்று கொண்டு சென்றான்.
.
.
.
.
.
.

அம்மி நான் போய்ட்டு வரேன் என்று அஜ்மல் கூற லீவு போட்டா என்ன என்று கதீஜா கேட்க இல்லை போகனும் என்றான் அம்மா போகட்டும் விடுங்கள் என்று மதினா ம்ம்ம் சரி என்று கூறி விட்டு கல்லூரிக்கு சென்றான்.
.
.
.
.
.
தொழுகை முடித்து வந்தவன் குளிக்க சென்றான். அவன் குளித்து முடித்து வருவதற்குள் அவன் சட்டையை அயர்ன் செய்து வைத்து விட்டு அவள் சமையலறைக்குள் சென்று ரிஹானாவுடன் அரட்டை அடித்து கொண்டு இருந்தாள்.

பிறகு நான்கு பேரும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு அவன் கல்லூரிக்கு கிளம்பினான்.

ஷாயின் தன் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அந்த அறையை, சாதிக் மற்றும் அவளுடைய பழைய துணிகளுக்கு தன் கை வண்ணத்தால் அது புது உயிர் கொடுத்தாள். அதை அழகாகவும் அமைத்தாள்.

இதை எல்லாம் முடித்து விட்டு லுஹர் தொழுது விட்டு மூவரும் மதிய உணவை முடித்து கொண்டு வெளியே சென்றனர்.
.
.
.
.
.
.
டேய் மச்சி! நாங்க கிளம்பிறோம் டா என்று சித்து சொல்ல சரி மச்சி பார்த்து போங்கடா என்று சாதிக் சொல்ல இருவரும் விடைபெற்று கொண்டனர்.
.
.
.
.
கல்லூரியில் இருந்து கிளம்பும் போது இருவரும் தங்கள் மனைவிக்கு போன் செய்து கிளம்பி இருக்குமாறு சொல்லிவிட்டு இவர்கள் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு அவர்களும் ரெடியாக இருக்க நாங்கள் சாதிக் வீட்டுக்கு போய் வரோம் என்று கூறிவிட்டு சாதிக் வீட்டிற்கு வந்தனர்.

தன் தோழிகளை பார்த்தவுடன் சந்தோஷத்துடன் அவர்களை வரவேற்று பேசினாள். ரிஹானாவும் ஹாபிஸீம் இன்முகத்துடன் அவர்களை வரவேற்றனர்.

தன் தோழிகளுடன் பேசி கொண்டு இருந்ததில் நேரம் போனது தெரியவில்லை.

டேய் மச்சி என்னடா இவங்க மூனு பேரும் ஒன்னு சேர்ந்தா நாம இருக்கிறதே மறந்துடுவாங்க போல என்று அஜ்மல் கூற ஆமாடா என்று சித்துவும் பாவமாக பதிலளித்தான்.

பிறகு சிறிது நேரத்தில் சாதிக் வர அவர்களை பார்த்து டேய் இங்க வரத்தான் பர்மிஷன் போட்டு வந்திங்களா? என்று கேட்டவனிடம் ம்ம்ம் ஆமாடா என்று சித்து பதில் அளித்தான்.

எதுக்குடா? என்று சாதிக் கேட்க மச்சி நீயும் ஷாயினும் இப்ப ஊட்டிக்கு போறிங்க என்று கூற அவன் அதிர்ந்தான். ஷாயினுக்கும் பெரிய அதிர்ச்சி.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். அவன் அதெல்லாம் வேண்டாம் போக முடியாது என்று மறுக்க டேய் இப்ப உன் மனசுல என்ன தான் நினைத்து கொண்டு இருக்க? என்று அம்மா கோபம் கொண்டு மேலும் இன்னிக்கு வெள்ளிக்கிழமை நாளைக்கு ரெண்டு பேரும் இஷா தொழுதுட்டு கிளம்பிறிங்க அவ்வளவு தான் என்று கூறிவிட்டு அவரவர் வேலையில் மூழ்கினர்.

இவர்கள் நான்கு பேரும் தங்களுக்குள் கட்டை விரலை தூக்கி சக்சஸ் என்பதை போல் செய்கை செய்து விட்டு கிளம்பினர்.
.
.
.
.
.
.

அம்மா பிளான் சக்சஸ் என்று அஜ்மல் கூற என்னடா ரெண்டு பேரும் சம்மதித்தார்களா? என்று கதீஜா கேட்க சாதிக் முடியாது சொன்னா அப்புறம் அம்ம் திட்டி ரெண்டு பேரும் போய் தான் ஆகனும் என்று கண்டிப்புடன் சொல்ல அவங்க சம்மதித்து விட்டார்கள் என்றவுடன் ம்ம்ம் சரிசரி வாங்க சாப்பிடுவோம் என்று நான்கு பேரும் சேர்ந்துஇரவு சாப்பாட்டை முடித்தனர்.
.
.
.
.
.
அம்மா அவங்க ரெண்டு பேரையும் எப்படியோ சம்மதிக்க வச்சாச்சி என்று சித்து சொல்ல ம்ம்ம் நல்லது என்று குமார் சொல்ல ரெண்டு பேரும் சேர்ந்தா போதும் என்று பூர்ணிமா கவலைப்பட சொன்னார்.

பிறகு அனைவரும் சாப்பிட்டு விட்டு உறங்க சென்றனர்.
.
.
.
.
தன்னவள் அவளை அறியாமல் தன் மேல் உறங்கி கொண்டிருந்த ஷாயினின் தலையை வருடிய படி அவளின் நெற்றியில் முத்தமிட்டு ஒரு கள்ள சிரிப்பை சிந்தினான்.

தொடரும்
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
💕 22 💕

தன்னவள் அவளை அறியாமல் தன் மேல் உறங்கி கொண்டிருந்தவளின் தலையை வருடி அவள் நெற்றியில் முத்தமிட்டு கள்ள சிரிப்பை சிந்தினான் சாதிக்.

அவளை அணைத்து கொண்டு உன் மேல் கோபம் இருந்தது உண்மை தான்டி... ஆனா அந்த கோபம் கூட உன் குழந்தை தனத்தால் நான் மறந்தே போய்ட்ட வந்த ஒரு வாரத்தில்.... ஆனால் உன் கிட்ட விளையாடுறது பிடிச்சு இருந்திச்சு அதான் விளையாடின.... நீ அன்னிக்கி என் கிட்ட உன் லவ் பிரபோஸ் பண்ண அப்ப 😍😍😍😍😍 நிஜமா என்னால அந்த உணர்வை சொல்ல முடியலை டி என்று தன் கண்களில் வந்த நீரை துடைத்தவன், நானே பிளான் பண்ணி வச்சியிருந்த பட் அதுவாவே நடக்குது அல்ஹம்துலில்லாஹ்.... என்று அவளை இறுக்கமாக அணைத்து கொண்டு உறங்கினான்.

இதை யாவும் உணரமால் உறங்கி கொண்டு இருந்தாள் ஷாயின்.

அதே குழப்பத்துடன் அவனிடமிருந்து விலகி தொழுதாள். அவள் தொழுவதை பார்த்து விட்டு இவன் பள்ளிவாசல்க்கு சென்றான்.

அவன் வருவதற்குள் இவள் குளித்து முடித்து விட்டு அவன் சட்டையை அயர்ன் செய்து கொண்டு இருந்தபோது அவன் வந்தான்.

அவன் குளித்து விட்டு அவள் அயர்ன் செய்து வைத்த சட்டையை அணிந்து கொண்டான்.

அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். அப்போது ரிஹானா டேய் இன்னிக்கு கிளம்பினும் அதனால் காலேஜ்க்கு லீவு போடு என்றார். அம்மா அதெல்லாம் வேண்டாம் என்றான் கோபத்தோடு உள்ளுக்குள் அத்தனை சந்தோஷத்தையும் வைத்து கொண்டு.

அம்மா அதான் வேண்டாம் சொல்றாங்க விடுங்களேன்! என்றவுடன் அதெல்லாம் தெரியாது இன்னிக்கு போய் தான் ஆகனும் சாப்பிடுங்க என்று அவர் அதட்டினார்.

அல்லாஹ்! நான் என்ன பண்ணுவேன் அவனே ஏற்கனவே என் மேலே கடுப்பா இருக்கான்..... இதுல வேற ..... நான் என்ன பண்ணுவன் அவன் வேற என்ன முறைத்து பார்க்கிறான்..... நான் செத்த ..... ரொம்ப கோபமா இருக்கான்..... நாளுக்கு நாள் என் மேலே கோபம் தான் அதிகம் ஆகுது அவனுக்கு பேசாம நாம அவன்கிட்ட இருந்து விலகிடுவோமா? உன்னால் விலகி இருந்திட முடியுமா ஷாயின் என்று அவள் மனம் கேள்வி எழுப்ப அவள் கண்கள் கலங்கியது. அதை உணர்ந்த அவள் யாருக்கும் தெரியாமல் துடைத்து கொண்டு சாப்பிட துவங்கினாள்.

ஏதோ சாப்பிட்டு விட்டு எழுந்தாள். அப்போது அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) என்று கூறி கொண்டே ஷாயின் வீட்டார் உள்ளே நுழைந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் பதில் ஸலாம் கூறி வரவேற்றனர்.

என்ன மாப்பிள்ளை எப்போது கிளம்பிறிங்க? என்று ரியாஸ் கேட்க இஷா தொழுதுட்டு கிளம்பிறோம் மாமா என்றான் சாதிக்.

வழியனுப்பிட்டு போலாம் தான் வந்தோம். சிறிது நேரத்தில் அஜ்மலும் சித்துவும் தன் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்கள்.

இவள் தன்னறையில் தோழிகளுடன் சேர்ந்து துணிகளை எடுத்து வைத்து கொண்டு இருந்தாள். இருவரின் துணிகளையும் எடுத்து ரெடியாகி வைத்தாள்.

ஷாயின், நான் சாதிக்கிட்ட இருந்து விலகிட போற... அவரோட அன்புக்கு நான் தகுதியானவள் கிடையாது.... அவரை ஏமாற்றிவிட்டு போனவள் நான்..... அவருக்கு என் மேல் கோபம் மட்டும் தான் அதிகமாகுது... நான் விலகிடுற அவர்கிட்ட இருந்து.... அவருக்கு நான் வேண்டாம்....

அவருக்கு தான் என்னை பார்த்தாலே எரிச்சலாக இருக்கு சொன்னார். நான் அவர்கிட்ட இருந்து விலகிறது தான் சரி என்னால அவர விட்டுட்டு இருக்க முடியுமான்னு தெரியலை😢😢😢 அவருக்கு அதுதான் சந்தோஷம்னா நான் விலகிடுற... அவரோட சந்தோஷம் மட்டும் தான் எனக்கு முக்கியம்😢😢 என்று தன் கண்களை துடைத்து கொண்டாள்.

அப்போது சாதிக் உள்ளே வர அவளிடம் எல்லா ரெடியா? என்று கேட்டவனிடம் ம்ம்ம் ரெடி என்றுவிட்டு சென்றாள்.

இருவரும் இஷா தொழுது விட்டு இருவரையும் பேருந்து நிலையத்தில் வழி அனுப்பி வைத்தனர்.

சிது ரெண்டு பேரும் சேர்ந்து விடுவார்கள் தானே என்று நவீனா கேட்க கண்டிப்பாக ஒன்னு சேருவாங்க பயப்படாதே என்று அவளுக்கு புரிய வைத்தான்.

அஜ்ஜீ எனக்கு இப்ப ஐஸ்கிரீம் சாப்பிடனும் போல இருக்கு வாங்கி தாயேன் என்று மதினா கேட்க ஏய் மணி என்னாகுது தெரியுமா என்று அஜ்மல் கேட்க ம்ம்ம் அதெல்லாம் தெரியாது எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும் ... ஹே இந்த நேரத்தில் எவன் டி கடையை திறந்து வச்சியிருப்பான்😣😣😣 என்று அவன் சொல்ல ப்ளீஸ் ப்ளீஸ் என் செல்லம்ல என்று அவன் மேல் கோலம் போட்ட படி சிணுங்க ஏய் மதுமா காலையில் வாங்கி தரேன் என் அம்முல ப்ளீஸ் என்று கெஞ்ச அவள் போடா எருமை என்று அவள், எனக்கு வேண்டாம் நான் சும்மா கேட்டேன் நீ மட்டும் போதும் என்று அவன் மார்பில் உறங்கினாள். அவனும் புன்னகை விட்டு அவளை அணைத்து கொண்டு உறங்கினான்.
.
.
.
.
.
இருவரும் அமைதியாக வந்தனர். ஷாயின் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு வர அவளை ரசித்து கொண்டு வந்தான் சாதிக்.

அவள் அயர்ந்து ஜன்னல் ஓரம் தலை சாய்த்து உறங்கினாள். அவள் நன்றாக உறங்கி விட அவளை தன் தோளில் சாய்ந்து கொண்டான் சாதிக். அவனும் சிறிது நேரத்தில் தூக்கி விட்டான்.

பேருந்து கோயம்புத்தூர் நெருங்க சாதிக் விழித்து கொண்டான். தன் தோளில் உறங்கி கொண்டிருக்கும் தன்னவளை ரசித்து கொண்டு இருந்தான். மணி 4.30 நெருங்க ஷாயினும் விழித்தாள். அப்போது சாதிக்கை பார்த்தவள் என்ன என்று கேட்க ஒன்னுமில்லை என்றான்.

சிறிது நேரத்தில் பேருந்து ஒரு இடத்தில் நின்றது. டீ காபி குடிப்பவர்கள் இங்கே குடித்து கொள்ளுங்கள். கழிப்பறை செல்பவர்கள் செல்லலாம் என்றவுடன் ஷாயினும் இறங்க நினைக்க இருவரும் இறங்கி தங்களை ஃபிரெஷ் ஆக்கி கொண்டனர்.

ஷாயின் தொழுக வேண்டும் எப்படி ? என்று யோசித்தவாறு அவள் சற்றும் தாமதிக்காமல் உளு செய்துவிட்டு அங்கே இருந்த தரையில் தொழுதாள்.

அவளை பின் தொடர்ந்து அதே பேருந்தில் வந்திருந்த ஒரு சில சகோதரிகளும் அவளை பின்பற்றி தொழுதனர்.

அவனும் அதேபோல் செய்ய அவனை பின்பற்றி ஒரு சகோதரர் தொழுதனர்.

தன்னவளை நினைத்து நெஞ்சம் பெருமை கொண்டது . அவனின் மனம் முழுக்க அவள் மட்டுமே நிறைந்திருந்தாள்.

தொழுது முடித்து விட்டு திரும்பும் போது தான் புரிந்தது அவளுக்கு . அவள் ஒரு சிறு புன்முறுவல் விட்டு சென்றாள்.

சிறிது நேரம் அந்த குளிரையும் இடத்தையும் ரசித்தபடி நின்று கொண்டு இருந்தாள் சாதிக் தன்னை ரசித்து கொண்டு இருப்பதை உணராமல்.

பிறகு அனைவரும் பேருந்தில் பயணம் தொடங்க அவள் எல்லாவற்றையும் கவனித்தும் ரசித்தும் வந்தாள். ஆனால் தன்னை ரசிப்பவனை கவனிக்க தவறினாள்.

காலை 6 மணிக்கு மேட்டுப்பாளையம் பிளாக் தண்டரை தாண்டியது பேருந்து. பேருந்து ஒவ்வொரு மலைகளின் வளைவில் செல்ல செல்ல அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.

அவள் ஒவ்வொரு வளைவிலும் ஊட்டியின் அழகை அவள் ரசித்து கொண்டு வந்தாள். ஒவ்வொரு வளைவிலும் அத்தனை அழகையும் உரித்து வைத்திருந்தது ஊட்டி.

அந்த அழகில் தன்னை மறந்தாள். அவளின் ஒவ்வொரு செய்கையிலும் தன்னை இழந்தான் சாதிக்.

சரியாக எட்டு மணியளவில் அவர்கள் ஊட்டியை வந்தடைந்தனர். பிறகு ஒரு விடுதியில் அறை எடுத்து மூன்று நாள் வாடகை கொடுத்து விட்டு அங்கு அறையில் சென்று அமர்ந்தனர்.

அவள் கழிப்பறை சென்று குழாய் திறக்க அதில் வந்த தண்ணியில் தன் கையை நீட்டியவள் தண்ணி என்ன இவ்வளவு ஜீல்ன்னு இருக்கு என்று அடுத்த குழாயை திறந்தாள் அதில் வெந்நீர் வந்ததால் அதில் குளித்து விட்டு வந்தாள். பிறகு அவன் சென்று குளித்தான்.

அவள் கண்ணாடி முன் நின்று தன் தலையை சீவி கொண்டு இருந்தாள். இவன் குளித்து விட்டு சட்டை அணிந்து கொண்டு இருந்த போது தன்னவளை முழுவதுமாக பார்த்தவன் அவனை அறியாமல் ஷாயின் அருகே சென்றான்.

அவள் தன்னை சரிசெய்து விட்டு திரும்ப இருவரும் நெருக்கமாக நின்றனர். இருவரின் கண்களும் மோதின.....

அவளின் கண்களில் அவனின் உண்மையான காதலை மட்டுமே உணர்ந்தான்.

இருவரும் தன்னிலை திரும்பினர். ஷாயின் சட்டென்று அறையின் பால்கனிக்கு தன் கண்ணீரை துடைத்து கொண்டு சென்றாள்.

இவன் கட்டிலில் சிலை போல் அமர்ந்தான். அவள் கண்களில் அவன் கண்ட நேசம் ஏதோ ஒரு இரண்டு மாதங்கள் கொண்ட நேசம் போல் தெரியவில்லை அவனுக்கு .

அத்தனை நேசம் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டாயா? என்ற ஏக்கமும் அவள் கண்களில் கண்டான் . நான் எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டேன்..... அவளின் நேசத்தை உணராத பாவியாகி விட்டேனே😭😭😭..

என்னை மன்னித்து விடு ஷாயின். இனி நீ மட்டும் எனக்கு போதும் டா.. உன்னை இனி எந்த காரணம் கொண்டும் என்னால் பிரிய முடியாது என்று தன் மனதில் சொல்லி கொண்டான்.

அவளோ!! மேரேஜ் ஆகி ரெண்டு மாதம் ஆகிறது.... இன்னும் அவனிற்கு என் மேல் கோபம் குறையவில்லை.... அவனின் அன்புக்கு நான் தகுதியானவள் இல்லை போல..... இனி அவருக்கு நான் வேண்டாம்.... நான்தான் அவரை ஏமாற்றி விட்டு போனேன்..... என்னை எப்படி அவர் ஏற்று கொள்வார்? .... நான் வேண்டாம் என்று அவள் மனதில் நினைத்து கொண்டு இருந்தாள்.
.
.
.
.
வினுமா என்று அவன் அழைக்க இதோ வரேன் என்று தன் அறைக்கு சென்றாள் நவீனா.

என்ன சிது? என்று அவன் கேட்க இல்லை இங்க ஒரு இன்னிக்கு எடுக்க வேண்டிய நோட்ஸ் எழுதி டேபிள் மேலே பேப்பர் வச்சி இருந்த அது எங்க என்று கேட்க அவள் தலை குனிந்து கொண்டு சாரி சிது அதை நான் தான் வேஸ்ட் பேப்பர் நினைத்து தெரியாமல் கிழித்து குப்பையில் போட்ட என்று சொல்ல அவன் அடிப்பாவி ஏய் ஏன்டி உனக்கு இந்த கொலை வெறி..... 😢😢😢😢 நான் திரும்ப அதை எடுத்து படிக்க 😞😞😞😞 போடி என்று அவன் திட்ட சாரி சிது என்றாள் பாவமாக போடி என்றான். அவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவள் கிச்சனிற்கு சென்று விட்டாள். அவளின் செயலில் உறைந்து நின்றான். சிறிது நேரம் கழித்து அவன் தன்னிலை திரும்பி பரவாயில்லை பார்த்துக்கலாம் என்று விட்டு வீட்டில் சொல்லி விட்டு கிளம்பினான்.
.
.
.
.
.
.
அஜ்ஜீ டைம் ஆயிடுச்சு இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கிங்க வாங்க சாப்பிடலாம் என்று மதினா அழைக்க இரு மதுமா வரேன் என்று தலை சரி செய்து விட்டு உண்ண அமர்ந்தான்.

அம்மி எங்கே ? என்று கேட்க அம்மாவும் அப்பாவும் கடைக்கு போய் இருக்காங்க நீ சாப்பிட்டு கிளம்பு என்று கூறி அவனுக்கு பரிமாறினாள். அவன் சாப்பிட்டு விட்டு அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு சென்றான்.

தொடரும்​
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
💕 23 💕

சாதிக், ஷாயின் இருக்கும் இடத்திற்கு சென்றான். அவன் வந்ததை உணர்ந்தவள், என்ன வேண்டும் என்று கேட்டாள். அவன் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் என்று சொல்ல ஒரு விரக்தி சிரிப்பை விட்டு என் கிட்ட பேசுறதுக்கு என்ன இருக்கு ? சாதிக். நிறையா இருக்கு என்று அவன் கூற இப்ப நாம எங்க போறோம் என்று அவள் பேச்சை மாற்றினாள்.

அவள் தன் மேல் கோபமாக இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு அமைதியாக பைகரா நீர்வீழ்ச்சி போறோம் என்றான்.

ம்ம்ம் வாங்க போகலாம் என்று இருவருக்கும் தேவையான பொருட்கள் எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

சிறிது நேரத்தில் pygra நீர்வீழ்ச்சி வந்தடைந்தார்கள். அவன் சென்று டிக்கெட் வாங்கி கொண்டு வந்தான். இருவரும் உள்ளே சென்றனர்.

அந்த நதியின் ஓசையை அவள் ரசித்து கொண்டு இருந்தாள். அவளுக்கு அந்த ஓசை மிகவும் பிடித்து இருந்தது. ஊட்டியின் அழகில் தன்னை மறந்தாள்.

சாதிக் அவளின் செய்கையை பார்த்து சிரித்து கொண்டு இருந்தான். அவளை ரசனை உடன் பார்த்து கொண்டு இருந்தான்.

சாதிக் தன்னை காணா நேரத்தில் அவனை ரசித்து கொண்டு இருந்தாள். அவன் பார்க்கும் பொழுது திரும்பி கொள்வாள்.

அவன் போனில் பேசி கொண்டு இருந்தான். அப்போது அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருப்பதை அவன் பார்த்து விட்டான்.

அப்போதே அவன் புரிந்து கொண்டான் தன்மேல் கோபமாக இருப்பது போல் நடிக்கிறாள் என்பதை. அவன் புன்னகை விட்ட படி பேசி கொண்டு இருந்தான்.

அவன் தன் அருகில் வருவதை உணர்ந்தவள் தன் பார்வையை வேறு பக்கம் திரும்பி கொண்டாள். அவன் தனக்குள் சிரித்து கொண்டு போலாமா என்று கேட்டவனை போலாம் என்று கூறிவிட்டு நடந்தாள்.

அவளின் இந்த செயல் அவனுக்கு பிடித்திருந்தது. அவனும் அவளுடன் சேர்ந்து நடந்தாள்.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு shooting spot சென்றனர். இருவரும் சேர்ந்து ரசித்த படி மேலே ஏறினர். அவன் பார்க்காத நேரத்தில் அவனை ரசித்து கொண்டு வந்தாள். இவன் அதை தெரிந்தும் தெரியாததை போல் வந்தான்.

மேலே சென்று அவள் ஒவ்வொன்றையும் பார்த்தாள். கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டியை ரசித்தாள்.

சாதிக், பக்கத்தில் இருக்கும் என்னை ரசிக்காமல் ஊட்டியை ரசிக்கிறா😈😈 இங்க வந்து உன்கிட்ட மனசை விட்டு பேசலாம் தான்டி உன்னை இங்க அழைத்து கொண்டு வந்தேன். ஆனால் நீ என் மேலே கோபமா இருக்கிற மாதிரி நடிக்கிற .... 😞😞😞 எனக்கு அப்படியே உன்னை.... எருமை என்று அவன் மனதில் புலம்பி கொண்டு இருந்தான்.

ஷாயின், எவ்வளவு அழகா இங்க ஒருத்தி உட்கார்ந்து இருக்கேன். என்னை சைட் அடிக்காமல் ஊட்டியை சைட் அடிக்கிறான் பக்கி😈😈 என்று அவனை செல்லமாக திட்டினாள்.

பிறகு ஷாயின், அவனிடம் போலாமா ரூமுக்கு? என்று கேட்டவுடன் ம்ம்ம் போலாம் என்று இருவரும் தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தனர்.

அவன் அவளை ரூமில் விட்டு தான் சென்று தொழுது விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றான்.

ஷாயின், உன்கூட தொழுகனும் எவ்வளவு ஆசை தெரியுமா? இப்போ கூட உனக்கு என் கூட தொழ விருப்பமில்லை... 😞😞 என்று தன் மனதில் எண்ணிக்கொண்டு தொழ சென்றாள்.

அவன் மசூதிக்கு சென்று தொழுது விட்டு வெளியே வந்தான். அப்போது ஒரு நபர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). என்றவுடன் இவனும் புன்னகை மலர வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்) என்று கூறினான்.

அவர் என்னப்பா ஊருக்கு புதுசா என்று கேட்க ம்ம்ம் ஆமாம் சுற்றுலா வந்தோம் நானும் என் மனைவியும் என்றான். ஒ அப்படியா! பரவாயில்லை எந்நிலையிலும் தொழுகை பேணுகிறாய் நல்லது அல்லாஹ் உங்களுக்கு நன்மை நாடுவான் ஆமீன் என்றவுடன் நன்றி என்றான்.

ம்ம்ம் உன் பெயர் என்னப்பா? சாதிக் என்றான். நல்ல பெயர் அப்புறம் என் பெயர் உசைன் இந்த பள்ளிவாசலின் முத்தவல்லி(தலைவர்) அதான் புதுசா ஒரு ஆள் வந்திருக்கிறதால் கேட்டு போலாம் வந்து பேசுன சரி வாப்பா நம்ம வீடு பக்கத்தில் தான் இருக்கு வந்து டீ குடித்து விட்டு போவ என்றவுடன் அவனுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் அவருடன் சென்றான்.

இருவரும் சேர்ந்து வீட்டிற்கு சென்றனர். அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தனர் அவர் குடும்பத்தினர்.

உசைன் அவரின் மனைவி பெயர் பர்வீன் அவளின் ஒரே மகள் ஜாரா.

அவனுக்கு டீ எடுத்து வந்து கொடுத்தார் பர்வீன். அதை வாங்கி குடித்தான். பிறகு , உன் மனைவி பெயர் என்ன என்று கேட்க புன்சிரிப்புடன் ஷாயின் என்றான்.

நல்ல பெயர் என்றார் பர்வீன். அவன் அழகாய் ஒரு சிரிப்பை சிந்தினான். நல்ல பொண்ணு ஆண்ட்டி அவள். இதுவரை அவள் ஒரு நாளும் தொழுகை விட்டதில்லை. என் அம்மா அப்பா கிட்ட அன்பா நடந்துக்குவா ரொம்ப நல்ல பொண்ணு என்று அவன் கூற அவன் கண்களில் தெரிந்த காதலை பெரியவர்கள் உணர்ந்து கொண்டு லவ் மேரேஜா? என்று கேட்டார் பர்வீன்.

அவன் புன்முறுவலோடு எனக்கும் அவளுக்கு லவ் மேரேஜ் எங்க அம்மா அப்பாக்கு அரேஜ் மேரேஜ் என்றவுடன் அனைவரும் புரியாமல் பார்க்க அவன் புன்னகை விட்டு நான் அவளை இன்ஸ்டாகிராம் தான் முதல் முறை பார்த்த அதுவும் சுலைமான் என்ற ஐடில. நான் பையன் நினைத்து ரிக்வஸ்ட் குடுத்த ஆனால் பொண்ணு. அப்பறம் ரெண்டு பேரும் பேச ஆரம்பித்தோம்.

எனக்கு வர போற மனைவி எப்படி இருக்கனும் நினைத்தேனோ அப்படி இருந்தாள் ஷாயின். நான் அவகிட்ட சொன்ன அவள் சொன்னது ஒன்னு தான் என் அம்மா அப்பா எனக்கு முக்கியம் அவங்க சம்மதம் சொன்னா சரி இல்லை என்றால் முடியாது சொல்லிட்டா அது எனக்கு இன்னும் அவள் மேல் மரியாதை ஏற்படுத்தியது.

அப்படியே போச்சு நாட்கள். திடிரென்று ஒரு நாள் அவகிட்ட இருந்து எனக்கு எந்த மேசேஜ் வரல என்னாச்சு எதுவும் தெரியலை . எனக்கு அவள் மேல் கோபம் அதிகமாகிட்டே போச்சு.

ரெண்டு வருஷம் கழித்து ஒரு நாள் அவள் போன் பண்ணா நான் என் கோபத்தால் அவளை திட்டி தீர்த்தேன். எனக்கு நீ வேண்டாம் சொல்லிட்டு போனை வச்சிட்ட எங்க அம்மா அப்பா கொஞ்ச கட்டாய படுத்தினாங்க நானும் சரின்னு சொன்ன ஆனால் அப்ப தெரியாது ஷாயினை தான் நான் நிக்காஹ் பண்ணி கொள்ள போறேன் என்று நிக்காஹ் அன்னிக்கி தான் தெரிஞ்சது அவள் தான் நான் கல்யாண பண்ணிக்க போற பெண் என்று எதுவும் பண்ண முடியாத சூழ்நிலை பண்ணிக்கிட்டோம்.

அவள் கிட்ட முகம் குடுத்து கூட பேசமாட்டேன். அவளை பார்த்தாலே எரிந்து விழுவேன்.

ஆனால் அவள் குழந்தை தனத்தால் என் கோபம் எல்லாமே போய்டிச்சு வந்த ஒரு வாரத்தில். அவள் செய்கிற அனைத்தும் ரசித்து இன்னும் அதிகமாக நேசிக்க ஆரம்பிச்சிட்ட. அவகிட்ட விளையாட பிடித்து இருந்தது அதான் கொஞ்சம் விளையாடுன அப்பறம் எங்க வீட்டில் இருக்கிறவங்க சேர்ந்து எங்களை ஊட்டிக்கு அனுப்பி வச்சிட்டாங்க . ஆனால் இன்னிக்கு தான் நான் புரிந்து கொண்டேன் அவளோட உண்மையான நேசத்தை. ஆனால் அவள் என் மேலே இப்ப கோபமா இருக்காள் என்றான் சிறு வருத்தத்தோடு.

உசைன் இது அல்லாஹ்வோட நாட்டம். உங்களோட நேசம் உண்மை . உண்மையான காதல் என்னிக்குமே தோற்காது. அது கண்டிப்பாக நம்ம கிட்ட வந்து சேரும் அது போல தான் இது என்றார். அவனும் புன்னகை உடன் தலையசைத்தான்.

அவன் கையில் இருந்த போன் கை தவறி கீழே விழ அதில் போன் ஆன் ஆனது. அதை எடுத்த ஜாரா அந்த போனில் wallpaper இருந்த ஷாயின் போட்டோவை பார்த்து ஹே ஷாயின் என்று அவள் கண்கள் சந்தோஷத்துடனும் ஆச்சிரியத்துடன் விரிந்ததை பார்த்த சாதிக் உங்களுக்கு ஷாயினை முன்பே தெரியுமா? என்று கேட்டான்.

ம்ம்ம் தெரியும் என் பெஸ்ட் பிரெண்டு. நானும் அவளும் ஒன்னா தான் ஆலிம் படிச்சோம் பெங்களூரில். ரெண்டு வருஷம் என்றவுடன். அவனுக்கு தூக்கி வாறி போட்டது.

என்னம்மா சொல்ற ? என்று புரியாமல் அவன் கேட்க ஆமாம் போன ரெண்டு வருஷம் தான் நாங்க ஆலிம் முடித்தோம். அவள் உங்களை பற்றி அதிகமாக சொல்லுவாள். தூக்கத்தில் சாரி சாதிக் நான் பண்ணது தப்பு தான் என்னை மன்னித்து விடுங்கள் என்று புலப்புவாள் அல்லாஹ் கிட்ட அவள் கேட்கிற முதல் துஆ அவளும் நீங்களும் ஒன்னு சேரனும் தான் அல்லாஹ் அவளோட துஆவை பொய் ஆக்கலை என்று அவள் கூறிமுடிக்க ஊருக்கு போகும் போது கண்டிப்பாக நம்ம வீட்டுக்கு வரனும் என்று உசைன் கூற அவனும் இன் ஷா அல்லாஹ் வரேன் அங்கிள் என்றான். ஆமா அண்ணா அவளை பார்த்தே பல நாள் ஆகுது ப்ளீஸ் ண்ணா அழைச்சிட்டு வாங்க என்றவளிடம் கண்டிப்பாக அழைச்சிட்டு வரேன் நான் கிளம்பிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) என்று ஸலாம் கூறிவிட்டு அவன் நகர்ந்தான். அவர்களும் வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்) என்று பதில் ஸலாம் கூறி வழி அனுப்பி வைத்தனர்.

சாதிக் மனமோ குற்ற உணர்ச்சியால் தவித்தது. அவனுக்கு தன்மேல் கோபம் மட்டுமே வந்தது.

டேய் அவ எத்தனை சொல்ல வந்தா நீ எங்கடா அவளை சொல்ல விட்ட - அவன் மனம்

நான் பண்ணது தப்பு தான் டா மிகப்பெரிய தப்பு இனி அவள் முகத்தில் எப்படி முழிப்பேன்😭😭😭😭 என்னால் முடியாது..

இப்ப அழுது என்ன டா புண்ணியம். முன்னவே அவளை பேச விட்டிருக்கனும்.. - அவன் மனம்

.....😭😭😭

சாதிக் அழாத இதுக்கு மேலயும் பொறுமையாக இருக்காத அவகிட்ட மன்னிப்பு கேட்டு அவளோட சேர வழியை பாரு - அவன் மனம்

அவதான் என் மேலே கோபமா இருக்காளே😞😞

நீ போய் பேசுடா.- அவன் மனம்

நான் அவகிட்ட இருந்து விலக போற அவள் அன்புக்கு தகுதியானவன் நான் கிடையாது...😢😢

டேய் முட்டாள் தனம் பண்ணாத... அவள் இல்லாமல் உன்னால் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது.. - அவன் மனம்

அதுதான் டா நான் எனக்கு நானே கொடுக்க போற தண்டனை

டேய் கேனே தனமா பண்ணாத டா அவள் உன் மேலே உயிரே வச்சிருக்கா .. இதை அவள் தாங்கி கொள்ள மாட்டாள்.... - அவன் மனம்

முடியாது டா... நான் அவளை விட்டு விலக தான் போறேன் என்றவனை அசிங்க அசிங்கமாக திட்டியது அவன் மனம்..😈😈😈😈😈

டேய் ஏன்டா

ஒழுங்கு மரியாதையா அவகிட்ட மன்னிப்பு கேட்டு உன் லவ் பிரபோஸ் பண்ணுற வழியை பாரு இல்லை என்றால் இதை விட அசிங்கமா திட்டுவேன் என்று எச்சரித்தது மனம்.

சரிடா சரிடா நீ சொல்ற மாதிரியே செய்றேன் என்று பூங்காவில் இருந்து தங்கள் இருக்கும் அறை நோக்கி அவன் கால்கள் பயணம் செய்தது.
.
.
.
.
.
இந்த லூசு தொழ தானே போச்சு இன்னும் ஆளை ஆக்கனும். புது இடம் ... எங்க போனா அவனை பார்க்காமல் இருக்க முடியலை😞😞

யாரோ சொன்னாங்க நான் விலகி போறேன் - அவள் மனம்

உன்னை யாரு இப்ப வர சொன்னா?

ம்ம்ம் இல்லை சும்மா தான் உன்னை பார்த்துட்டு போலாம் - அவள் மனம்

பார்த்துட்டல கிளம்பு...

போறேன் அதுக்கு முன்ன ஒரு கேள்வி ? - அவள் மனம்

என்ன கேள்வி?

உன்னால் சாதிக்கை விட்டு பிரிந்து இருக்க முடியுமா? - அவள் மனம்

.......

ஏன்டி அமைதியா இருக்க? சொல்லு- அவள் மனம்

😭😭😭😭😭 அழுகிறாள்

விலகனும் நினைத்தாலே அழுகிறவள் பிரிந்து இருந்துடுவாலா மூஞ்ச பாரு எருமை என்று மானாவாரியாக திட்டி தீர்த்தது அவள் மனம்.

ஏய் போதும் டி போதும்

போடி.... - அவள் மனம்

இப்ப என்ன தான் பண்ண சொல்ற

ம்ம்ம் அவன் உன்னை புரிஞ்சிகிற வரைக்கும் வைய்ட் பண்ணுண்ணு சொல்ற - அவள் மனம்

என்னை புரிஞ்சிப்பானா?

கண்டிப்பா டி செல்லம் உன்னை அவர் புரிஞ்சிப்பாரு கொஞ்சம் டைம் கொடு டா - அவள் மனம்

ம்ம்ம் சரி மச்சி...

அது - அவள் மனம்

தொடரும்​
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
💕 24 💕

சாதிக் தங்கள் அறைக்கு வந்தான். அவனை பார்த்ததும் ஒரு முறை முறைத்து விட்டு கட்டிலில் அமர்ந்தாள். இருவருமே மறந்து போனார்கள் சாப்பிடுவதற்கு.

ஷாயு என்று சாதிக் அழைக்கவும் அவள் இது கனவா நிஜமா என்பதை போல் பார்க்க அவன் போன் அடிக்கவும் சரியாக இருந்தது. ஸ்ஸ்ஸ் ச்சே இதுவேற ஒரு நிமிஷம் நான் பேசிட்டு வரேன் என்று வெளியே சென்றான்.

இவளோ இது கனவா நிஜமா என்பது போல் கட்டிலில் சிலை போல் அமர்ந்து இருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் தானாக வந்தது.

வெளியே போனவன் உள்ளே எரிச்சலோடு வந்தான். எவன்டா இவன் இப்ப தான் இந்த விசிட் வரனுமா... ச்சே அல்லாஹ் இன்னிக்கி தான் வந்தோம் இப்ப கிளம்பனும் ..... நாளைக்கு சண்டே மீட்டிங் இருக்கான் போயே ஆகனும் அவகிட்ட இப்ப தான் மனசு விட்ட பேசவே வந்தேன் ஏன் அல்லாஹ் எனக்கு இந்த நிலைமை என்று புலம்பியவாறு கட்டிலில் அமர்ந்திருந்த ஷாயினை பார்த்தான். இவள் என்ன சிலை போல உட்கார்ந்து இருக்காள் என்று அவள் அருகில் சென்றவன்.

அவளை அழைக்க அவள் எ..என்ன என்று கேட்க அவனால் எதுவும் பேச முடியவில்லை அவள் கண்கள் சிந்தும் காதலை தன் கண்களால் பருகினான். அவளும் அவனை பார்த்து கொண்டு இருந்தாள்.

சிறிது நேரம் கழித்து இருவரும் தங்கள் நிலைக்கு திரும்பினார்கள். இருவரும் விலகினர். நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கான் காலேஜ்ல அதுக்கு போகனும் ரெடியாகு போலாம் என்றான் அவளும் எதுவும் சொல்லாமல் சரி கிளம்பிற எனக்கு பசிக்குது என்று பாவமாக கூறியவளை சிரித்து கொண்டு கிளம்பு போர வழியில் சாப்பிட்டு போலாம் என்று புன்னகை பட கூறியவனிடம் சரி என்று ஊருக்கு தேவையானவற்றை எடுத்து வைத்து கொண்டு கிளம்பினார்கள் இருவரும்.

இருவரும் சாப்பிட்டு விட்டு அவளை அழைத்து கொண்டு ஜாரா வீட்டிற்கு சென்றான். அவள் யார் வீடு இது? என்று கேட்க உள்ள போ போய் நீயே பாரு என்று அவன் சொன்னவுடன் அவள் புரியாமல் உள்ளே செல்ல அங்கு ஜாராவை பார்த்ததும் ஜாரா என்று சந்தோஷத்துடன் அவளை அணைத்து கொண்டாள். அவளும்.

அனைவரின் நல விசாரிப்பின் பின் சிறிது நேரம் தோழிகள் பேசி விட்டு ஊருக்கு கிளம்புறோம் அவசர வேலை அதான் இன் ஷா அல்லாஹ் அடுத்த முறை வரோம் என்று கூறிவிட்டு சென்றனர். அவர்களும் இன்முகத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.

இருவரும் வீட்டில் சொல்லி விட்டார்கள். அவர்கள் கோயம்புத்தூர் பேருந்தில் ஏறி அமர்ந்தனர். இருவருக்குள்ளும் ஏதோ ஒரு இனம் புரியாத இன்பம் . பேருந்து கிளம்பியவுடன் அவள் ஊட்டியை ஏக்கமாக பார்த்தாள். அதை பார்த்த அவன் இன்னொரு முறை வரலாம் என்று அவளிடம் கூற ம்ம்ம் சரி என்று குழந்தை போல் தலையசைத்தவளை ரசித்து கொண்டு இருந்தான்.

அவளோ ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள். அப்படியே அவன் தோளில் உறங்கி போனாள். அவன் அவளை பார்த்து புன்னகை விட்ட படி ரசித்து கொண்டு வந்தான்.
.
.
.
.
.
.

அம்மா நாளைக்கு மீட்டிங் இருக்கு மா என்று சலிப்போடு சித்து சொல்ல என்னடா சொல்ற? ம்ம்ம் ஆமாம் ம்மா இப்பதான் நீயூஸ் வந்திருக்கு அடுத்த மாதம் காலேஜ்ல விசிட் வராங்க அதுக்கு தான் நாளைக்கு மீட்டிங் இப்போ சாதிக் ஷாயின் ரெண்டு பேரும் கிளம்பி வராங்க... கஷ்டப்பட்டு அனுப்பி வச்சோம் எல்லா போச்சு என்று அவன் வருத்ததோடு சொல்ல டேய் பரவாயில்லை அவங்க ரெண்டு பேரும் சேருவாங்க நீ வருத்த படாத என்று குமார் சொல்ல ம்ம்ம் சரிப்பா என்று இரவு உணவை உண்டான்.
இருவரும் இவர்களுக்கு தனிமையை கொடுத்து விட்டு தங்கள் அறைக்கு சென்றனர்.

வினுமா ஏன் சாப்பிடாமல் எதையோ வெறித்து பார்த்துட்டு இருக்க? என்று சித்து கேட்க அவள் ஒன்னுமில்லை என்றாள்.

அவன் எழுந்து அவள் அருகில் சென்று வினுமா நீ உன் தோழிகளை மிஸ் பண்றியா? என்று கேட்டவுடன் அவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்து அழ தொடங்கினாள்.

வினுமா இதுக்கு எதுக்கு டா அழுகிற... என்று ஆறுதலாக அவள் தலையை வருடிய படி கேட்டவனிடம் இல்லை சிது நாங்க மூனு பேரும் நல்லா சிரிச்சு பேசி ரெண்டு வருஷத்துக்கு மேல் ஆகுது.. அவங்க ரெண்டு பேரும் பெங்களூர் போய்டாங்க ஆலிம் படிக்க நான் டைலரிங் சேர்ந்துட்ட சென்னையில். ரெண்டு வருஷமும் நாங்க ஒருத்தர் ஒருத்தர் பார்த்துக்கல பேசிக்கல.

ரெண்டு வருஷம் கழிச்சு நாங்க ஜாலியாக இருக்கலாம் பிளான் பண்ணோம் பட் எல்லாமே ஆபோசிட்டா நடந்திச்சு.

வினுமா அப்ப உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் இல்லையா என்று சித்து கேட்க நம்ம எங்கேஜ்மட் அன்னிக்கி நீ என் கையை பிடிச்ச நியாபகம் இருக்கா? அப்ப நான் ஒன்னு மட்டும் புரிஞ்சிகிட்ட... இனி எனக்கு நீ இருக்கேன் உணர்ந்த புரிஞ்சிகிட்ட.... எப்பவுமே தூங்கும் போது அதை நினைத்து கொண்டு தான் தூங்குவேன்.

அந்த முதல் ஸ்பரிசம் இன்னும் என்னால மறக்க முடியாது சிது.... இப்பன்னு இல்லை எப்பவுமே..... என்று அவனை இறுக அணைத்தாள். அவள் நெற்றியில் தன் இதழை பதித்து விட்டு வினுமா இப்போ சாப்பிடு இந்தா என்று அவளுக்கு ஊட்டி விட்டான்.

இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு அறைக்கு சென்றனர். சித்தார்த் கட்டிலில் அமர்ந்தவுடன் அவன் மடியில் படுத்து கொண்டாள் நவீனா.

அவன் புன்னகை விட்ட படி அவள் தலையை வருடி விட்டான். சிறிது நேரத்தில் அவள் உறங்கி விட அவளை சரியாக படுக்க வைத்து விட்டு இவனும் அவளை அணைத்த படி உறங்கி போனான்.
.
.
.
.
.
.
மதுமா கண்ணை மூடு என்று அஜ்மல் கூற எதுக்கு அஜ்ஜீ கண்ணை மூட சொல்ற என்று கேட்டவளை கண்ணை மூடுடி என்று அதட்ட அவள் கண்ணை மூடினாள். இப்போ தொற என்று அவள் கண்ணை திறக்க ஐஐஐஐ ஐஸ்கிரீம் என்று குழந்தை போல் துள்ளியவளை ரசித்தபடி ஏய் போதும் டி இந்தா சாப்பிடு என்று அவளிடம் நீட்ட அவளும் அதை வாங்கி சாப்பிட்டு அவனுக்கும் அதில் கொஞ்சம் ஊட்டி விட்டாள். அவளை ரசித்தப்படி இருந்தான்.

அவள் அவன் தோளில் சாய்ந்த படி அஜ்ஜீ என்று அழைக்க சொல்லு மதுமா என்கூட கடைசி வரைக்கும் இருப்பியா? என்று கேட்டவளை மதினா என்ன பேச்சு இதுலாம் என்று அவளை பார்த்து முறைக்க அவள் சற்று பயந்து விட்டாள். இங்க பாரு மதினா நான் எப்பவும் உன்னை விட்டு போக மாட்டேன் புரிதா என்று அவன் அதட்ட அவள் அவன் மடியில் படுத்து உறங்கினாள்.
.
.
.
.
.
.
மணி 12 அளவில் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். இருவரும் எதுவும் பேசாமல் தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டனர். ரிஹானாவும் காலையில் விசாரித்து கொள்ளலாம் என்று விட்டார்.

இருவரும் தங்கள் அறையில் நுழைந்தவுடன் அசதியில் அப்படியே உறங்கினர்.

ஆறு மணியளவில் ஷாயின் கண்விழித்தாள். சாதிக் அணைப்பில் இருந்தவள் அவனை காதலும் ஏக்கமும் கலந்த பார்வையோடு அவன் தலையை வருடினாள்.

அவள் வருடியதில் உணர்ந்தவன் அமைதியாக இருந்தான். நான் எப்படி டா உன் மேல் தினமும் தூங்குற எனக்கு தெரியலை. ஆனால் உன் கை வளைவில் இருக்கிறது எனக்கு எவ்வளவு பிடித்து இருக்கு தெரியுமா.

நீ இல்லாத நேரத்தில் உன் சிரிப்பு அந்த அழகான உன் சிரிப்பு மட்டுமே என்னை சுற்றி இருக்கும். நீ சிரிக்கும் போது அவ்வளவு அழகாக இருப்பேன் நீ.. அதே மாதிரி நீ வைய்ட் சர்ட் ப்ளு ஜீன்ஸ் போடும் போது இன்னும் இன்னும் அழகா இருப்பே. எனக்கு உன்னை மாதிரி கியூட்டா அழகா ரெண்டு குழந்தைகள் அது பொண்ணோ பையணோ எதுவாக இருந்தாலும் சரி எனக்கு என்று அவனை பார்த்தாள். அவன் தலையை வருடி நெற்றியில் முத்தமிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

அவள் சென்றவுடன் கண்களை திறந்தான். அவனுக்கும் ஆசை தான் அவள் கூறும் போது அவளை தன் மேல் சாய்த்து தன் காதலை சொல்ல . ஆனால் அவளிடம் மன்னிப்பு கேட்காமல் தன் காதலை கூறுவதில் விருப்பமில்லை அதனால் அவன் அமைதியாக இருந்தான். அவள் தனக்கு கொடுத்த முத்தத்திலே உணர்ந்தான் அவளின் காதலை.

சிறிது நேரத்தில் அவள் குளித்து விட்டு வர அவனும் குளிக்க சென்றான். ஷாயின், அவனின் துணிக்கு அயர்ன் செய்து கொண்டு இருந்தாள். சிறிது நேரத்தில் அவனும் வர அவள் அயர்ன் செய்த இரண்டையும் அவனிடம் நீட்டினாள். அவனும் சிரிப்புடன் வாங்கி கொண்டான்.

அவனின் அழகான சிரிப்பில் தன்னை மறந்து அவனை பார்த்தாள். அவனும் அமைதியாக அவளை ரசித்து கொண்டு இருந்தான். அதை அவள் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து தன்னிலை வந்தாள்.

பிறகு நான்கு பேரும் அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டனர். பிறகு அவன் சென்று விட்டான்.
.
.
.
.
.
சிது வரும் போது எனக்கு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரிங்கலா? என்று கேட்டவளிடம் ம்ம்ம் சரி வாங்கிட்டு வரேன் அம்மா நான் போய்ட்டு வரேன் என்று கூறிவிட்டு சென்றான்..
.
.
.
.
.
மதினா டேபிள் மேல் அமர்ந்து கொண்டு தன் மாமியாரிடம் அரட்டை அடித்து கொண்டு இருந்தாள். அப்போது அஜ்மல் அங்கு வந்தான். தன் அம்மாவிடம் கதை பேசி கொண்டு இருந்த தன்னவளின் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு தன் வேலைக்கு சென்று விட்டான்.

இதை கவனித்த கதீஜா தனக்குள் சிரித்து கொண்டு அமைதியாக இருந்தார். திடீர் தீண்டலில் உறைந்து போனாள் மதினா. பிறகு தன்னிலை திரும்பி அவனை வாடி கேடி ஈவினிங் இருக்கு சரியான கேடி என்று தன்னவனை செல்லமாக திட்டி கொண்டு தன்னறை சென்றாள்.

தொடரும்​
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
💕25💕

சித்தார்த், அஜ்மல் , சாதிக் மூவரும் கல்லூரிக்கு வந்தடைந்தனர். கூட்டணி முடிந்தவுடன், மூவரும் பூங்காவிற்கு சென்றனர்.

அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தனர். டேய் சாதிக் உங்கிட்ட ஏதோ ஒரு மாற்றம் தெரியுதே என்னது? என்று கேட்ட சித்துவை பார்த்து அழகாய் ஒரு புன்னகை சிந்தினான் சாதிக்.

அஜ்மல் என்னடா என்று கேட்க அவன் வெறும் புன்னகை மட்டுமே வீசினான். அவர்கள் இருவரும் புரியாமல் விழிக்க அதெல்லாம் இருக்கட்டும் இப்போ எதுக்கு நாம இங்க வந்து இருக்கோம் என்று சாதிக் கேடான்.

நவீனா மதினா ஷாயின் மூன்று பேரையும் எம்.எஸ்.சி படிக்க வைக்கலாமா டா என்று சித்து கேட்க ம்ம்ம் அவங்க ஆசை பட்டா படிக்க வைக்கலாம் என்று அஜ்மல் கூறினான்.

மூனு பேருக்கும் ஆசை இருக்கு படிக்கனும் பட் சொல்ல மாட்ராங்க. மூனு பேரும் ரொம்ப மிஸ் பண்றாங்க ஒருத்தர் ஒருத்தர். நேற்று நவீனா சொல்லி அழுதாள் என்று சித்து கூற ம்ம்ம் ஆமா டா மதி கூட நேத்து இதை தான் என்கிட்ட சொல்ல வந்தாள் ஆனால் பேச்சை மாத்திட்டா என்று கேடி என்று அஜ்மல் கூறினான்.

சரி டா ஷாயின்? என்று சித்து கேட்க டேய் அவனுக்கு தான் மனசை புரிந்து கொள்ள தெரியாதே! அவன் கிட்ட போய் இதை கேட்கிற என்று அஜ்மல் சாதிக் சீண்ட அவன் விரக்தி புன்னகை விட்டு ம்ம்ம் ஆமாம் நான் தான் மனசை புரிந்து கொள்ள தெரியாதவன் புரிந்து இருந்தேனா? அவளை இப்படி தவிக்க விட்டு இருக்க மாட்டேன் என்று வருத்தத்தோடு கூற டேய் மச்சி நான் சும்மா சொன்ன டா உன் மனசுல இருக்க லவ் வெளியே வரனும் தான் என்றவுடன் அவன் இல்லை டா நான் நல்ல முடிவோட வரேன் என்று தன் வீட்டிற்கு விரைந்தான் தன்னவளை காண.

இருவரும் அமைதியாக இருந்தனர். அவர்கள் இருவருக்கும் மகிழ்ச்சி தன் நண்பன் அவன் காதல் மனைவியுடன் சேர போவதில். இருவரும் அமைதியாக தங்கள் வீட்டிற்கு பயணம் செய்தனர்.
.
.
.
.
.

சாதிக் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றான். ஷாயின் யாரென்று காண கிச்சனில் இருந்து வெளியே வந்தாள். அவன் தான் என்று கிச்சனிற்கு செல்ல முற்பட அம்மா அப்பா எங்கே என்று கேட்க அவங்க சித்து அண்ணா வீட்டுக்கு போய் இருக்காங்க என்று கூறி விட்டு கிச்சனிற்கு சென்றாள்.

அம்மா அப்பா ரொம்ப தேங்க்ஸ் என்று மனதில் கூறி கொண்டு தைரியத்தை வரவழைத்து ஷாயினை அழைத்தான். அவளும் அவன் முன் வந்தாள்.

ஷாயின் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் என்று அவன் கூற அவள் ம்ம்ம் என்றாள்.

ஷாயின் என்று ஆரம்பிக்க அவள் நான் உங்களை விட்டு விலகிடுற சாதிக் நீங்கள் நிம்மதியாக இருங்கள் என்று அவள் கூற அவன் நான் இல்லாமல் உன்னால் இருக்க முடியுமா ஷாயு... என்று அவன் கேட்டவுடன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தலைகுனிந்தாள்.

ஏன் ஷாயு அமைதியாக இருக்க என்று அவன் கேட்க அவள் முடியும் என்றவுடன் அவன் கோபம் ஏன்டி இப்படி பண்ற நீ இல்லனா நான் செத்துடுவ டி நீ என் உயிர் டி என்று அவன் வேறு பக்கம் திரும்பி கூற அவள் சிறிதும் தாமதிக்காமல் அவன் அருகில் சென்று அவனை பின்னாலிருந்து அணைத்து கொண்டு சாரி சாதிக் இனி நான் அப்படி சொல்ல மாட்டேன்.

எனக்கு நீங்கள் வேண்டும் சாதிக், ஐ லவ் யூ சாதிக் என்று அவனை அணைத்து கொண்டாள். அவன் அவள் கைகளை பிடித்து தன்பக்கம் இழுத்து அவளை அணைத்து கொண்டு அழ தொடங்கினான்.

என்னை மன்னித்து விடு ஷாயு உன்னை நான் புரிந்து கொள்ள வில்லை என்று அவன் கூற அவன் வாயில் தன் ஒற்றை விரலை வைத்து முடிந்து போனதை பற்றி பேச வேண்டாம் சாதிக் இனி நாம எல்லாவற்றையும் மறந்து சந்தோஷமா வாழ்வோம் என்று அவள் கூற அவன் எதுவும் சொல்லாமல் அவளை இன்னும் இறுக அணைத்து கொண்டான்.

டேய் எருமை விடுடா வலிக்குது என்று ஷாயின் கத்த என்னது எருமையா ஏய் என்னை பார்த்தா என்ன எருமை மாதிரியா இருக்கு என்று அவளை விலகி விட்டு கேட்க ம்ம்ம் என்று அவனை முழுவதுமாக பார்த்தவளை ஏய் என்னடி அப்படி பார்க்கிற என்று அவன் கேட்க அவள் எருமை மாட்டுக்கு தேவையான பத்து பொருத்தமும் கரெக்டா இருக்கு 😜😜😜 என்று அவனை பார்த்து கண்ணடித்து கூற அவன், உன்னை என்று அவன் அடிக்க விரட்ட அவள் ஒட ஆரம்பித்தாள்.

ஒரு வழியாக அவளை பிடித்து விட்டான். ஏய் என்ன எருமை மாடு சொன்னதுக்கு சாரி கேளுடி என்று அவன் கூற முடியாது முடியாது என்று அவள் கூற உன்னை என்று அவளை இழுத்து தன் மேல் போட்டு அவள் நெற்றியில் தன் முதல் முத்திரையை பதித்தான்.

அவள் அவன் நெஞ்சில் புதைந்து அழ தொடங்கினாள். ஷாயு என்னாச்சு ஏன் அழுகிற என்று அவன் கேட்க இனி என்னை விட்டு எங்கேயும் போக மாட்டிங்களே! என்று அவள் கேட்க போக மாட்டேன் டா என்றவுடன் அவள் இது போதும் எனக்கு என்று மேலும் அவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்தாள்.

ஷாயு மா பசிக்குது என்று கேட்டவுடன் தான் அவளுக்கு நியாபகம் வந்தது பாலை அடுப்பில் வைத்து விட்டு வந்தது. அல்லாஹீ பாலை அடுப்பில் வைத்து விட்டு வந்துட்டேன் என்ன ஆகி இருக்குமோ என்று அவள் கிச்சனிற்கு சென்று பார்க்க அடுப்பில் வைத்த பால் சட்டி இரண்டும் கருகி போய் இருந்தது.

எல்லாமே கருகி போச்சு😣😣 என்று சிணுங்க நான் போய் பால் வாங்கிட்டு வரேன் என்றவனை பால் இருக்கு என்றாள். அவன் சரியென்று கிச்சன் டேபிள் மேல் அமர்ந்து கொண்டான்.

அவள் சுத்தம் செய்து கொண்டு இருந்தாள். அவளை ரசித்த படி இருந்தான் சாதிக்.

அவள் சிறிது நேரத்தில் டீ போட்டு அவனிடம் நீட்ட அவனும் அதை வாங்கி குடித்து கொண்டு இருந்தான்.

எதையோ யோசித்தவாறு இருந்தவளை தன் கை வளைவுக்குள் இழுத்து கொண்டு ஷானு என்ன யோசிச்சிட்டு இருக்க? என்று கேட்டவனை அவன் முகம் பார்த்து இல்லை உனக்கு எப்படி தெரியும் ஜாரா வீடு? என்று தன் சந்தேகத்தை கோர அவன் அங்கு நடந்தவைகளை சொன்னான்.

பிறகு மன்னித்து விடு ஷானு அன்னிக்கி நீ சொன்னது மட்டும் நான் கேட்டு இருந்தேனா இந்தளவுக்கு உன்னை கஷ்டப்படுத்தி இருக்க மாட்டேன் டா என்னை மன்னித்து விடு என்று அவன் கண்கலங்க அல்லாஹ் எதுக்கு சாதிக் இப்ப நீ மன்னிப்பு கேட்கிற?

அப்ப நான் பண்ணது மட்டும் தப்பில்லையா? என்று குழந்தை போல் கேட்டவளை என்ன சொல்வதென்று தெரியாமல் அவளை பார்த்து கொண்டு இருந்தான்.

உன்கிட்ட அப்பவே சொல்லி இருந்திருக்கனும். அதுவும் பண்ணலை இல்லையா ஒரு போறப்ப ஒரு மெசேஜ் பண்ணி இருக்கனும் நான் அதை பண்ணலை. உங்க இடத்தில் யாரா இருந்தாலும் இப்படி தான் சாதிக் நடந்து இருப்பாங்க.

உன் கோபம் நியாயம் தான் எனக்கு எந்த வித தப்பும் தெரியலை சாதிக் நீ எதுக்கு இப்ப சின்ன குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்க என்று அவன் கண்ணை துடைத்து விட்டாள்.

அவளை இழுத்து தன்மேல் சாய்த்து கொண்டு ஐ லவ் யூ அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

ஷானுமா நாம பீச் போலாமா என்று கேட்டவுடன் இல்லை அம்மா அப்பா வரட்டும் சொல்லிட்டு போகலாம் என்றவுடன் ம்ம்ம் சரி என்று அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தான்.

ஷாயின் மதினாவும் அவளும் பெங்களூர் இருந்த அனுபங்களை எல்லாம் அவனிடம் சொல்லி கொண்டே இருந்தாள்.

குழந்தை போல் தன்னிடம் கதை சொல்வதை புன்னகை சிந்த பார்த்து இல்லை ரசித்து கொண்டு இருந்தான்.

இருவரும் பேசி கொண்டு இருப்பதில் இரவு வந்தது என்பதை கூட தெரியாமல் தங்கள் உலகில் இருந்தனர் இருவரும்.

சாதிக் என்ன இன்னும் அம்மா அப்பாவை காணோம்? என்று ஷாயின் கேட்க சித்து வீட்டிலே தங்கி இருப்பாங்க விடு நாம என்ஜாய் பண்ணுவோம் என்றவனை முறைத்து கொண்டு எருமை மாடு என்று அவனிடம் இருந்து விலகி தன் போனை எடுத்து ரிஹானாவிற்கு கால் செய்தாள்.

அவர் போனை எடுத்தார். அம்மா எப்ப வருவிங்க? என்று கேட்டவளிடம் நாளைக்கு வரோம் டா என்றவரிடம் ஏன் நாளைக்கு? என்று கேட்க இல்லை பூர்ணிமா உடம்பு சரியில்லை அதனால் தங்கி இருந்து அவளுக்கு உதவி செய்ய தான் என்றார் பொய்யாக. அவளும் சரி என்று கூறி விட்டு போனை வைத்தாள்.
.
.
.
.
.
ஷாயினிடம் பேசி போனை வைத்து விட்டு சாரி பூர்ணிமா உனக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னதுக்கு என்று ரிஹானா கூற பரவாயில்லை ரிஹானா விடு என்றார் பூர்ணிமா.

ஆமாம் ரிஹானா நீ எப்படி கெஸ் பண்ண என்று பூர்ணிமா கேட்க அது காலையில் ரொம்ப நேரம் ஆயிடுச்சு ரெண்டு பேரும் எழுந்திருக்க அதான் எழுப்ப போன அப்ப புரிந்து கொண்டேன். அதே மாதிரி, ஷாயின் சாதிக் டிரஸ் அயர்ன் பண்ணி கொடுத்தப்ப அவன் சிரிச்சிட்டே வாங்கிட்டான். அவள் அவனையே பார்த்துட்டு இருந்தாள். அவன் ரசனையோடு பார்த்து கொண்டு இருந்தான். அப்போது புரிந்து கொண்டேன்.

இருவருக்கும் தனிமை தேவை என்று அதான் பொய் சொல்லி இங்கே வந்தோம் என்று ரிஹானா கூறி முடிக்க அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அம்மா உங்கள் பிளான் சக்சஸ் என்று கூறி கொண்டே உள்ளே நுழைந்தார்கள் அஜ்மலும் மதினாவும் அனைவரும் புரியாமல் அவனை பார்க்க அது நான் அவன் கிட்ட முக்கியமான விஷயம் பேசலாம் என்று அவனை பார்க்க போன அப்ப ரெண்டு பேரும் மனசு லிட்டு பேசிட்டு இருந்தாங்க நான் அப்படியே வந்துட்ட அதான் இஷா தொழுதுட்டு பார்த்துட்டு போகலாம் வந்தேன் என்று கூறி முடித்தான்.

அனைவரின் உள்ளமும் மகிழ்ச்சியாய் நிறைந்தது.
.
.
.
.
.
சாதிக் இஷா தொழுது விட்டு வர இருவரும் சேர்ந்து இரவு சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தனர்.

அவள் கிச்சனில் வேலைகளை முடித்து விட்டு தன்னறைக்கு சென்றாள்.

உள்ளே வர அவளின் கையை பிடித்து ஷாயுமா உன்கிட்ட பேசனும் என்று கூற சாதிக் எனக்கு தூக்கம் வருது நாளைக்கு பேசலாமா? என்றவளை பார்த்து ஏய் ஏன்டி இப்படி பண்ற என்று அவன் பாவமாக கூற எனக்கு தூக்கம் வருது சாதிக் ப்ளீஸ் என்று அவன் மடியிலே படுத்தாள்.

அவனும் புன்னகை சிந்தி அவள் தலையை வருடி விட்டான். அவள் உறங்கி விட அவளை சரியாக படுத்த வைத்தான். சிறு சிணுங்களுடன் உறங்கினாள். அவளை பார்த்து புன்னகை விட்டு அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு அவளை அணைத்து கொண்டு உறங்கி போனான்.

தொடரும்​
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
💕26💕

சாதிக் ஷாயின் இருவரும் உறங்கி கொண்டிருந்தனர். ஷாயின் ஏனோ விழித்து கொண்டாள். தன்னவன் அணைப்பில் இருந்தவள், தன் முகத்தை உயர்த்தி அழகாக தூங்கும் சாதிக்கை ரசித்து கொண்டு இருந்தாள்.

அவளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை அவன் தாடியுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள். அவனோ என்ன என்று கண்களை திறக்க அவள் தன் தாடியுடன் சிறு குழந்தை போல் விளையாடி கொண்டு இருந்தவளை ரசித்து கொண்டு இருந்தான். ஆனால் அவளோ அவனை கவனிக்க வில்லை.

அவன் என்ன மேடம் என் தாடி ரொம்ப பிடித்து இருக்கா என்ன? ரொம்ப நேரமா அதுகூட விளையாடிட்டு இருக்க என்று கேட்டவனை என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்து கொண்டு இருந்தாள்.

என்ன மேடம் அப்படி முழிக்கிற? என்று குறும்புடன் கேட்டவனிடம் ஒ...ஒன்..ஒன்னுமில்லை என்று அவன் தாடியில் இருந்து தன் கையை எடுத்து கொண்டாள். அவன் புன்னகையுடன் தூங்கு மா என்று அவன் தூங்க இவளுக்கோ தூக்கம் வரவில்லை.

அவனை பார்த்து கொண்டு இருந்தவள் அவனை சீண்ட தூண்டியது.

"சாதிக்"

".ம்ம்ம்.."

" பச் சாதிக்..."

" என்ன..." என்று சிணுங்க

"சாதிக் ...." என்று கடுப்பான குரலில் அழைக்க...

" என்ன டி..."

எங்கேயாவது வெளியே அழைச்சிட்டு போயேன் என்றவளை என்னது வெளியே கூட்டிட்டு போகனுமா என்று கண்ணை திறந்து அவளிடம் வெளியே போகனுமா?? என்று கேட்டவனிடம் ம்ம்ம் ஆமா சாதிக் என்று சொன்னாள்.

ஏய் மணி என்ன தெரியுமா? என்று அவன் சிணுங்க எனக்கு தெரியாது அழைச்சிட்டு போ என்று மறுபடியும் கூற ஏய் அர்த்த ராத்திரி டி மணி 1 ஆவது 😣😣😣😣 எனக்கு அதுலாம் தெரியாது அழைச்சிட்டு போ என்று மேலும் சொல்ல அவன் அதெல்லாம் முடியாது போடி என்றவுடன் அவள் அவனை முறைத்து கொண்டு திரும்பி படுத்து கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து என்ன எந்த ரியாக்ஷன் காணோம் என்று திரும்பியவள் அவனை காணவில்லை. எங்கே போய் இருப்பான் என்று அவனை தேட அவன் கண்ணாடி முன் நின்று டீசர்ட் அணிந்து கொண்டு இருந்தான்.

இவளோ, இந்நேரத்தில் எங்கே கிளம்பிறான் என்று யோசித்தவாறு அவன் அருகில் வந்தவளை அவன் என்ன மேடம் லாங் டிரைவ் போலாமா? என்று புருவத்தை உயர்த்தி புன்னகை உடன் கேட்டவனை கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்.

ஏய் என்னை சைட் அடிச்சது போதும் கிளம்பு என்று அவன் கூற சாதிக் நான் சும்மா தான் கேட்ட நீ போய் தூங்கு என்று சொன்னவளிடம் ஷானுமா நீ என்ன சொன்னாலும் செய்வேன். அதுவும் இது நீ என்கிட்ட கேட்ட முதல் ஆசை என்று தன்னுடன் சேர்த்து காதலோடு சொன்னவனை அணைத்து கொண்டு லவ் யூ😍😍😍😘😘😘 சாதிக் என்றவளை லவ் யூ டூ மா😍😍😘😘 என்று அவள் உச்சி முகர்ந்தான்.

ஷானுமா கிளம்பு என்றவனை நாளைக்கு என்று சொன்னவளை அவள் வாயில் தன் விரலை வைத்து அமைதியாக கிளம்பு என்றவனை சிரித்து கொண்டே கிளம்பினாள்.

சிறிது நேரத்தில் இருவரும் வீட்டை பூட்டி விட்டு கிளம்பினார்கள். அவன் பைக்கில் இருவரும் சென்றனர்.

அந்த நேரம் இருவருக்கும் மகிழ்ச்சியை தந்தது. அவளே ரசித்தபடி தன் பைக்கை செலுத்தினான். அவளுக்கும் அந்த பயணம் மிகவும் பிடித்து இருந்தது.

யாரும் இல்லாத அந்த சாலைகளில் தாங்கள் மட்டும் பயணம் செய்வது அவளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.

ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தபடியும் மகிழ்ந்தபடியும் இருவரும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

சில நிமிடங்கள் கழித்து இருவரும் கடற்கரை வந்தடைந்தனர். இருவரும் அலைகள் இருக்கும் இடத்திற்கு வந்து அமர்ந்தனர்.

சாதிக் என்னை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா என்று கேட்டவளை பார்த்து புன்னகை செய்தான்.

ஏனடா உன் சிரிப்பால்,
என்னை ஒவ்வொரு நொடியும்
கொல்லாமல் கொல்கிறாய்!😘😘😍😍😍

அவனை பார்த்து கொண்டு இருந்தவளின் தோளில் கை போட்டு ஷானு நீ என் உயிர்.. என் உயிர் எனக்கு பிடிக்காமா இருக்குமா? என்று மேலும் பேச தொடங்கினான்.

உன் மேல கோபம் இருந்தது உண்மைதான்... ஆனால் அந்த கோபம் நம்ம கல்யாணம் ஆன இரண்டாவது வாரமே போய்டிச்சு.. நீ என்கிட்ட உன் காதல சொன்ன அன்னிக்கி என்னால கிளாஸ் கூட எடுக்க முடியாமல் நீதான் என் கண்ணுல வந்து வந்து போய்ட்டு இருந்த.... நீ சொன்னது தான் என் காதுல கேட்டு கொண்டே இருந்தது.

அன்னிக்கி நான் வீட்டிக்கு வந்தப்ப நீ இல்லை நீ ஊருக்கு போய்ட்ட அம்மா சொன்னாங்க அன்னிக்கி நைட் பூரா ஏதோ வெறுமையா உணர்ந்த நீ இல்லாமல் என்னால் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது அப்ப உணர்ந்த நான்.

அப்ப தான் அம்மா வந்து நீ ஊருக்கு போ அங்கே போய் அவங்களுக்கு உதவு சொல்லி அனுப்புனாங்க... நான் ரொம்ப சந்தோஷம் சொல்லி உடனே கிளம்பி வந்துட்ட உங்க வீட்டுக்கு.

அன்னிக்கி நவீனாவையும் மதினாவையும் வேறு அறைக்கு அனுப்பிட்டு என்னை உன் பக்கத்தில் தூங்க சொன்னாங்க.

நானும் தூங்கலாம் வந்த அப்ப நீ என் போட்டோ மேல தூங்கிட்டு இருந்ததை பார்த்து புரிந்து கொண்டேன் நீ என்னை எவ்வளவு மிஸ் பண்ணி இருக்கேன்.

நீ தூங்குற அப்ப அவ்வளவு அழகா இருப்ப தெரியுமா உன்னை ரசித்து கொண்டே உன் அருகில் தூங்குனே.

உன்னை இழுத்து என் மேலே போட்டுக்கிட்ட நீயும் கொஞ்ச சிணுங்கிட்டே என் நெஞ்சுல அப்படியே தூங்கிட்ட தெரியுமா அப்ப நீ என் கண்ணுக்கு அவ்வளோ அழகா தெரிஞ்ச. அப்புறம் நானும் தூங்கிட்ட.

உன் குழந்தை தனம் என்னை உன்கிட்ட இழுத்திட்டே இருந்துச்சு அதிகமா... உன் குழந்தை மனம் யாருக்கும் வராது ....

தினமும் இதுதான் நடக்கும். நீ நைட் என் மேல தூங்க கூடாது எவ்வளவு டிரை பண்ணுவ பட் முடியாது உன்னை இழுத்து என் மேல போட்டு நானும் தூங்குவ. உன்கூட இப்படி விளையாட பிடித்து இருந்தது அதான் விளையாடிட்டு இருந்தேன்.

மதினா கல்யாணம் அப்ப நீங்க மூனு பேரும் விளையாடும் போது எவ்வளவு ரசித்தேன் தெரியுமா உன்னை.... நானும் உன்னை எங்கேயாவது அழைச்சிட்டு போய் உன்கிட்ட மனசு விட்டு பேசனும் நினைத்தேன் ஆனால் நம்ம குடும்பமே ஊட்டிக்கு அனுப்பி வைத்தது.

போன அடுத்த நாளே ரிட்டர்ன். பட் உண்மை தெரிஞ்சிட்ட ஷாயின். அதே மாதிரி நீ என்னை எவ்வளவு நேசிக்கிறே என்பதையும் புரிந்து கொண்டேன்.

அப்பவே உன்கிட்ட லவ் சொல்ல வந்தேன் ஆனால் மேடம் தான் கோச்சிட்டிங்க. அப்புறம் சொல்லலாம் விட்டுட்ட அப்புறம் ஜாரா வீட்டுக்கு போன பிறகு தான் உண்மை புரிந்து கொண்டேன். உன்கிட்ட சாரி சொல்லி சேர்ந்து வாழலாம் வந்த அதுக்குள்ள மீட்டிங் வந்துடுச்சு நாம கிளம்பி வட்டோம் அப்புறம் தான் நடந்தது எல்லாம் தெரியுமே என்று கூறி முடிக்க அவனை அணைத்து கொண்டு அழ தொடங்கினாள்.

ஹே அம்மு ஏன் அழுகுற என்று அவளிடம் கேட்க என்னை இந்த அளவுக்கு லவ் பண்ணி இருக்க எப்படி டா உன்னால மட்டும் எப்படி டா என்று கேட்க அவளின் கன்னத்தை தன் கரத்தில் ஏந்தி நீ என் உயிர் இனி உனக்கென நான் எனக்கென நீ புரிதா என்று அவன் நெற்றியில் முத்தமிட அவள் அவன் தோளோடு சாய்ந்து கொண்டு தன் காதலை ரசித்து கொண்டு இருந்தாள்.
.
.
.
.
.
அதிகாலையிலே ஷாயின் குடும்பத்தினர் சாதிக்கையும் ஷாயினையும் பார்க்க வீட்டிற்கு வந்தனர்.

அவர்கள் அனைவரும் வீடு பூட்டி இருப்பதை பார்த்து எங்கே போய் இருப்பார்கள் என்று எண்ணி ரிஹானாவிற்கு அழைத்தார்கள்.

அவரிடம் விஷயத்தை சொன்னவுடன் அவர்கள் அனைவரும் கிளம்பி வந்து விட்டனர்.

பிறகு அங்கேயே வீட்டின் சாவியை வைத்து விட்டு சென்றதால், அதை வைத்து திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

எப்படி இருந்தாலும் வந்து தானே ஆகனும் என்று காத்திருந்தனர்.
.
.
.
.
.

இருவரும் அலைகளோடு தாங்களும் விளையாடியபடி இருந்தனர். அல்லாஹீ அக்பர் என்று பாங்கு ஓசை கேட்ட போது தான் இருவரும் மணியை பார்த்தனர்.

இருவரும் தாமதிக்காமல் அங்கேயே தொழுதுனர். பிறகு இருவரும் தங்கள் பைக்கில் கிளம்பினர் வீட்டிற்கு.

அவள், அவன் மேலே உறங்கினாள். வீட்டிற்கு வந்தவுடன் அவளை எழுப்பாமல் தூக்கி கொண்டு கட்டிலில் படுக்க வைத்தான்.

ம்ம்ம் குழந்தை மாதிரி தூங்குறதை பாரு என்று அவன் சிரித்து விட்டு குளிக்க சென்றான்.

இவர்கள் இருவரும் சென்றதை தங்கள் போனில் அழகாய் பதிவு செய்து கொண்டனர்.

தொடரும்​
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
💕 27 💕

ஷாயினை கட்டிலில் படுக்க வைத்து விட்டு அவன் குளிக்க சென்றான்.

குடும்பமே இங்க இருக்கு அதை கூட தெரியாமல் போறானே கடவுளே என்று தலையில் அடித்து கொண்டான் சித்தார்த்.

டேய் இனி நாம யாரும் அவன் கண்ணில் தெரிய மாட்டோம் எல்லா அவன் மனைவி தான் என்று பொய் வருத்ததுடன் அஜ்மல் கூற போதும் போதும் வாங்க சாப்பிடலாம் என்று ரிஹானா அழைக்க அனைவரும் அமர்ந்து உண்டனர்.

நான் போய் ஷாயினை எழுப்புற என்று நஜீதா செல்ல ஏய் லூசா நீ அவளை கொஞ்ச நேரம் தூங்க விடு என்று சுலைமான் திட்ட ம்ம்ம் உங்க பொண்ணை எதுவும் சொல்ல கூடாதே என்று சலித்து கொண்டார்.

இதுக்கு ஒன்னு குறைச்சல் இல்லை என்று சுலைமானும் சலித்து கொண்டு நாளிதழ் படிக்க தொடங்கினார்.

டேய் ஏன்டா என் மருமகளை திட்டுற? என்று தாஜீன் தன் மகனை அதட்ட ம்ம்ம் இப்ப என் பொண்ணு வருவாள் அவகிட்ட நீங்க நிறைய சுவிட் சாப்பிடுறிங்க சொன்னே உங்களை சும்மா விட மாட்டாள் என்று சுலைமான் கூறியவுடன் தன் முகத்தை பாவமாக தொங்க போட்டார் தாஜீன்.

இவர்களின் சொல்ல சண்டைகளை அனைவரும் ரசித்து கொண்டு இருந்தனர்.

ஷாயினும் சிறிது நேரத்தில் எழுந்து சாதிக் துணியை அயர்ன் செய்து கொண்டு இருந்தாள். அவனும் குளித்து வர இவள் அயர்ன் செய்து கொண்டு இருப்பதை பார்த்து ஷாயு தூங்கலையா நீ என்று கேட்டவனிடம் இல்லை தூக்கம் போய்டிச்சு இதோ டிரஸ் அயர்ன் பண்ணிட்ட இருங்கள் நான் குளித்து விட்டு வரேன் என்று அவள் குளிக்க சென்றாள்.

அவனும் அவள் அயர்ன் செய்த ஆடையை அணிந்து கொண்டு கிளம்பி கொண்டு இருந்தான். அவளும் குளித்து முடித்து வந்தாள்.

கால் வழுக்கி விழ சென்ற ஷாயினை விழாமல் தாங்கி பிடித்தான் சாதிக். அவள் இரு கண்களையும் இறுக மூடியவளை ரசித்தபடி அவளை நேராக நிற்க வைத்தான். அப்போதும் தன் கண்களை இறுக மூடி இருந்தவளை பார்த்து தனக்குள் சிரித்து கொண்டு ஷாயு கண்ணை திற ஒன்னுமில்லை என்று அவன் கூற அப்போது தான் அவள் தன் கண்களை திறந்து அவனை பார்த்தாள்.

இருவரின் கண்களும் காதல் மொழிந்து கொண்டு இருந்தது. இருவரும் சிறது நேரத்திற்கு பிறகு தங்கள் நிலைக்கு திரும்பினர்.

நீ இரு நான் தோசை போட்டு தரேன் சாப்பிட்டு கிளம்பு மதியம் தோசை சாப்பிட்டு கொள் என்று அவள் கூறிக்கொண்டே கிச்சனிற்கு சென்றாள்.

அவள் வருவதை தெரிந்து கொண்ட அனைவரும் உணவு வகைகளை மறைத்து வைத்து விட்டு அனைவரும் ஒர் இடத்தில் மறைந்து கொண்டு என்ன நடக்கிறது என்பதை கவனிக்க தொடங்கினர்.

இவள் தோசை ஊற்றி கொண்டு இருக்க அங்கு வந்து சேரை இழுத்து அமர்ந்து கொண்டான் சாதிக். அவனுக்கு பரிமாறி கொண்டு அப்படியே சட்னியை அறைத்து முடித்தாள்.

அவனுக்கு மதிய உணவை எடுத்து வைத்து விட்டு மேலும் அவனுக்கு தோசை போட்டு கொடுக்க ஏய் போதும் டி டைம் ஆயிடுச்சு ஏய் ரெண்டு தோசை தான் சாப்பிட்ட ஒழுங்கா சாப்பிடு என்று அதட்டி கொண்டு இருந்தவளை இழுத்து தன் மடியில் அமர்த்தி அவளுக்கு ஊட்டி விட அவள் முறைத்து கொண்டு சாப்பிட்டாள்.

பிறகு அவன் சாப்பிட்டு கைகழுவி விட்டு அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு கிளம்பிய போது மொத்த குடும்பமும் அவர்கள் முன் நிற்பதை கண்டு அதிர்ந்தனர்🤤🤤🤤🤤

ஷாயின் சாதிக் பின் ஒளிந்து கொண்டாள். சாதிக் இப்ப என்ன பண்றது?😯😯 தெரியலை என்று அவன் கூற, நாம பண்ண சேட்டைகளை பார்த்து இருப்பாங்க சாதிக் 😣😣😣 ஏய் இருடி சமாளிப்போம் என்று இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டு இருக்க அங்கே என்ன பேச்சு? என்று சரோஜா கேட்க ஆமா நீங்களா எப்ப வந்திங்க என்று அவன் கேட்டவுடன் பின்னாடி ஒளிந்து இருக்கா பாருங்க உங்கள் அருமை மனைவி அவளை கொஞ்சம் வெளியே வர சொல்றிங்களா? என்று நவீனா கூற அவளை பார்த்தான்.

அவள் அவன் சட்டையை இறுக்கமாக பிடித்து கொண்டு ப்ளீஸ் வேண்டாம் டா நான் போகலை போனா என்னை கலாய்த்தே சாகடிப்பாய்ங்க ரெண்டு பேரும் வேண்டாம் டா என்று அவனிடம் கெஞ்ச அவன் என்ன செய்வதென்று தெரியாமல் நவீனாவிடம் நீயாச்சு உன் தோழி ஆச்சு என்ன ஆளை விடுங்க என்று அவன் வேலைக்கு கிளம்பி விட்டான். அஜ்மலும் சித்துவும் அவன் பின் சென்றனர்.

அவள் மவனே நைட் வீட்டுக்கு வருவளே அப்ப இருக்கு உனக்கு என்று தன்னவனை மனதில் செல்லமாக கடிந்து கொண்டாள்.

மதினா நவீனா இருவரும் பேசுவதற்குள் ஏதோ ஒரு காரணம் கூறி கொண்டு தன் அறைக்கு ஒடி சென்று கதவை அடைத்து கொண்டாள்.

உறக்கம் அவளை தொற்றி கொள்ள அவள் அப்படியே உறங்கி போனாள்.

அவள் சென்றதை பார்த்த அனைவரும் சிரித்தனர். எப்படியோ ஒன்னு சேர்ந்திடாங்க அது போதும் என்று தாஜீன் சந்தோஷம் பொங்க கூறினார்.

என்ன இவ்வளவு நேரம் ஆச்சு உள்ளே என்ன பண்றா என்று நவீனா கேட்க அவள் தூங்கிட்டு இருக்காமா என்று ரிஹானா சொன்னவுடன் ம்ம்ம் சரி சரி எப்படி இருந்தாலும் நம்ம கிட்ட வந்து தானே ஆகனும் அப்ப பார்த்துகலாம் நவீ விடு என்று மதினா கூற ம்ம்ம் டன் என்றாள் நவீனா.
.
.
.
.
.
மச்சி ரொம்ப சந்தோஷம் டா நீ இவ்வளவை சந்தோஷமா இருந்து எவ்வளவு வருஷம் ஆச்சு தெரியுமா? என்று அஜ்மல் கூற ம்ம்ம் ஆமாடா எத்தனை நாளைக்கு அப்புறம் உம் முகத்தில் சந்தோஷத்தை பார்த்த பிறகு தான்டா எங்களுக்கு நிம்மதியாக இருக்கு என்று சித்து கூற இருவரையும் அணைத்து கொண்டான்.

உண்மை தான் டா ஷாயின் இல்லாமல் என்னால் வாழவே முடியாது நான் உணர்ந்துட்ட டா.... அன்னிக்கி நானும் ஏதோ ஒரு அவசரத்தில் திருமணத்திற்கு ஒத்து கொண்டேன் ஆனால் எனக்கு இப்ப வரைக்கும் ஒன்னு மட்டும் புரிய மாட்டேன்து டா என்று அவன் குழப்பத்துடன் இருவரையும் பார்க்க அவர்கள் என்ன மச்சி சொல்லு என்றவுடன் ஷாயின் எப்படி எங்க அம்மாக்கு தெரியும் எனக்கு எதுவும் புரியவில்லை என்றான்.

அஜ்மல், ஒரு நாள் அம்மா மித்ராவை பார்க்க அவங்க கல்லூரிக்கு போய் இருக்காங்கள் அப்ப ஷாயினை அவங்க பார்த்துவிட்டு அவங்களுக்கு பிடித்து போனது. அங்கேயே அவங்க வீட்டு அட்ரஸ் வாங்கிட்டாங்க விசாரிச்சு. அப்புறம் பேசிக்கலாம் இப்ப தானே படிக்கிறாள் என்று அமைதியா அம்மாவும் இருந்துட்டாங்க. ரெண்டு வருஷம் கழித்து அவங்க வீட்டுக்கு போய் பொண்ணு கேட்டாங்க அவங்களும் சரின்னு சொன்னாங்க அப்புறம் நடந்தது தான் உனக்கு தெரியுமே என்று விளக்கினான்.

டேய் உங்க லவ் உண்மை அதனால் தான் நீங்கள் ரெண்டு பேரும் சேர்ந்திங்க. உண்மையான காதல் என்றும் தோற்காது மச்சி என்று சித்து கூற ஆமா உண்மை தான் என்றான் சாதிக்.

டேய் நைட் ரெண்டு பேரும் எங்கே போனிங்க என்று அஜ்மல் கேட்க இல்லை டா சும்மா ஒரு லாங் டிரைவ் அவ ஆசைபட்டா அதான் போலாம் கிளம்பினோம் என்றான் சாதிக்.

ம்ம்ம் நீ நடத்து மச்சி என்றான் சித்து. ஆமா நீங்கள் எல்லோரும் எப்ப வந்திங்க என்று சாதிக் கேட்க நாங்கள் எல்லோரும் 4.30 மணிக்கு வட்டோம் என்று நடந்ததை சொன்னான் அஜ்மல்.

டேய் அப்ப நான் அவளை தூக்கிட்டு போனது மொத்த குடும்பமும் பார்த்திடுச்சா😣😣🤤🤤 ம்ம்ம் ஆமா ராசா எல்லோரும் பார்த்துட்டோ என்று சித்து கூற சரி விடு நீ கிளாஸ் போகலை என்று சித்து கேட்க இன்னிக்கு எனக்கு லேஷர் மச்சி என்றான் சாதிக். ம்ம்ம் சரிடா என்று அஜ்மல் கூறினான்

டேய் மச்சி இன்னும் ரெண்டு வாரத்தில் பிஜி கிளாஸ் ஆரம்பித்து விடும் தானே என்று சாதிக் கேட்க ம்ம்ம் ஆமாடா என்று சித்து கூற அப்ப சரி வா நாம மூன்று அப்ளிகேஷன் வாங்கிட்டு வரலாம் என்று சாதிக் கூற ஏன்டா மறுபடியும் பிஜி படிக்க போறியா என்று நக்கலாக கேட்ட அஜ்மலை முறைத்தான் சாதிக்.

டேய் ஷாயின் மதினா நவீனா மூனு பேருக்கும் பிஜி படிக்க வைக்கலாம் நேத்து தானே டா சொன்னிங்க என்றவுடன் ம்ம்ம் ஆமாடா வா போய் வாங்கிட்டு வருவோம் என்று சித்து கூற நாம வேண்டாம் டா மித்ராவை போய் வாங்கிட்டு வர சொல்வோம் அவங்க நம்ம மனைவி என்ற விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் புரிதா என்று சாதிக் சொல்ல ம்ம்ம் நீ சொல்றதும் கரெக்ட் தான் மச்சி அப்படியே செய்வோம் என்று மித்ராவை அழைக்க அவளும் வந்து சேர்ந்தாள்.

மூவரும் department வெளியே நின்று கொண்டு இருந்தார்கள். மித்ரா சித்து அஜ்மல் இருவரின் காதுகளையும் பிடித்து திறுகினாள். அவர்கள் இருவரும் ஏய் விடு வடு வலிக்குது என்று கத்த வலிக்கட்டும் என்று மேலும் திறுகினாள்.

பிறகு எதுக்கு வர சொன்னிங்க என்று கேட்க ஒரு மூனு பீஜி அப்ளிகேஷன் வாங்கி தா என்று சாதிக் கூற ஏன் மறுபடியும் பீஜி படிக்க போறியா என்று கேட்டவுடன் அட லூசு எனக்கு இல்லை உன் தோழிகளுக்கு தான் என்றவுடன் என்ன சொல்ற அவங்க மூனு பேரும் பீஜி படிக்க போறாங்களா என்று மகிழ்ச்சியுடன் கேட்க மூவரும் ம்ம்ம் ஆமாம் என்றவுடன் சரி சரி நான் வாங்கிட்டு வரேன் என்றாள்.

மித்ரா, நீ எப்ப தான் கல்யாணம் பண்ணி கொள்ள போகிறாய் என்று அண்ணனுக்கு உரிய பாவனையில் சாதிக் கேட்க வீட்டுல பார்த்துட்டு தான் இருக்காங்க செட் ஆக மாட்டேன் என்கிறது நான் என்ன செய்வேன் என்று அவள் சொல்ல சரி யாரையாது லவ் பண்றியா என்று அஜ்மல் அவனை முறைத்து கொண்டு அதெல்லாம் இல்லை என்றாள். சரிசரி உனக்கு அதோ அந்த மாதிரி மாப்பிள்ளை தான் கிடைப்பான் என்று அங்கிருந்த ஒரு தாத்தாவை காண்பித்த சித்துவையும் அஜ்மலையும் அடிக்க விரட்ட அவர்கள் இருவரும் ஒடினர்.

பிறகு ஒரு வழியாக தங்கள் விளையாட்டை முடித்து கொண்டு மித்ரா ஆபீஸ் ரூம் சென்றாள் அப்ளிகேஷன் வாங்க.

இவர்கள் இருவரும் திரும்ப அங்கு சுசீந்திரன் நின்று அவர்களை முறைத்து கொண்டு இருந்தார்.

சார் சாரி என்று இருவரும் தலையை சொறிய அவர் சிரித்து கொண்டு உள்ளே சென்றார்.

பிறகு மூவரும் அவர் பின் சென்றனர். சார் மித்ராவிற்கு மாப்பிள்ளை ஏதும் பார்க்கலையா? என்று அஜ்மல் கேட்க அவர் பார்த்துட்டு தான்ப்பா இருக்கோம் வரவங்க எல்லாரும் வரதட்சணை அதிகமாக கேட்கிறாங்க இவள் வேண்டாம் சொல்லி அனுப்பிடுறாள் நாங்க என்ன பண்ண முடியும் என்று வருத்தப்பட்டார்.

சார் நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே என்று சாதிக் கேட்க சொல்லுப்பா என்று அவர் கேட்க இல்லை நீங்கள் ஏன் உங்கள் தங்கை மகன் தமிழரசன் மித்ராவை மணம் முடித்து வைக்க கூடாது என்று சாதிக் கூற அவர் உனக்கு எப்படி தெரியும் என் தங்கை மகனை என்று ஆச்சரியமாக கேட்க சார் மித்ரா எங்களுக்கு கூட பிறக்காத தங்கச்சி சார். அவள் வாழ்க்கை எங்களுக்கு முக்கியம் என்று அஜ்மல் கூற மூவரின் அன்பை கண்டு வியந்தார் சுசீந்திரன்.

தொடரும்

 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
💕28💕

சார் நீங்கள் ஏன் உங்கள் தங்கை மகன் தமிழரசனை மித்ராவிற்கு மணமுடித்து வைக்க கூடாது என்று சாதிக் கேட்டவுடன் சுசீந்திரன் சற்று அதிர்ச்சியும் குழப்பமும் கலந்தவாறு உங்களுக்கு எப்படி தமிழரசனை பற்றி தெரியும்? என்று கேட்க சார் மித்ரா எங்க கூட பிறக்காத தங்கச்சி சார் என்று அஜ்மல் கூற அவர்கள் மூவரின் அன்பை கண்டு ஆச்சரியம் பட்டார்.

என்ன சார் அப்படி பார்க்கிறிங்க? என்று சித்து கேட்க இல்லை அவளுக்கு கூட பிறந்த அண்ணன் இருந்தா கூட அவள் மேல் இப்படி அன்பா இருப்பானா தெரியலை என்று அவர் கூற சார் கூட பிறந்தா தான் அண்ணனா என்று சாதிக் கேட்க அப்படி இல்லை பா சொன்ன என்றவுடன் ம்ம்ம் சரிங்க அய்யா என்று சிரித்த படி சித்து சொல்ல டேய் இந்த நக்கல் நய்யாண்டி தானே வேண்டாம் என்றது என்று சுசீந்திரன் சொல்ல சரி சார்.

சரி சொல்லுங்க உங்களுக்கு எப்படி தெரியும் தமிழரசனை பற்றி? என்று சுசீந்திரன் கேட்க சார் அதுவந்து ஒரு வருஷத்துக்கு முன்ன உங்க வீட்டை ஆல்டர் பண்ணி ஒரு பூஜை வச்சிங்கல அப்ப மித்ராவை மட்டுமே தமிழரசன் பார்த்திட்டு இருந்ததை அஜ்மல் பார்த்துட்டு என்கிட்ட சொன்னா நானும் அவரை பார்த்தேன். அவர் மித்ராவை பார்த்தது உண்மை அந்தளவுக்கு அவர் கண்ணுல தெரிந்த காதலும் உண்மை. அவரோட பார்வை தப்பான நோக்கம் எதுவும் இல்லை. இருந்தாலும் அவரை பற்றி விசாரித்தில் தான் தெரிந்து கொண்டோம் அவர் ரொம்ப நல்லர் என்று .

மித்ரா படிச்சிட்டு இருந்ததால் உங்ககிட்ட அப்புறம் பேசிக்கலாம் என்று அமைதியாக இருந்தோம். இப்போ அதுக்கான நேரம் வந்துடுச்சு. சொன்னோம் என்று சாதிக் கூற. அவர் கண்கலங்க அவர்கள் மூவரையும் பார்த்தார்.

என்ன சார் நீங்க கண்ணு கலங்கிட்டு நாங்க உங்கள் ஸ்டுடெண்ட்ஸ் சார். உங்களுக்காக இதை கூட நாங்கள் செயலனா அப்புறம் என்ன சார் என்று மூவரும் சொல்ல அவர் அவர்கள் மூவரையும் பார்த்து பெருமையா இருக்குடா ஒரு ஆசிரியர்க்கு இதை விட பெருமை எதுவும் இல்லை என்று பெருமிதமாக கூறினார்.

சார் நீங்கள் எங்களுக்கு நிறைய கற்று கொடுத்து இருக்கிங்க... ஆறாவது வகுப்பில் நீங்கள் தான் எங்களுக்கு வரலாறு ஆசிரியர். எங்களை எல்ல விதத்திலும் ஊக்குவித்து புத்தக பாடங்களை தவிர்த்து பிற செய்திகளும் இன்னும் இன்னும் நிறைய கற்று கொடுத்திங்க எங்களுக்கு .

பத்தாம் வகுப்பு வரை நீங்கள் தான் வரலாறு ஆசிரியராக இருந்திங்க. அதுக்கப்புறம் நீங்கள் கல்லூரிக்கு ஆசிரியராக வந்திட்டிங்க. நீங்க போறிங்க தெரிந்ததும் நாங்க மூன்று பேரும் அழுதிட்டே இருந்தோம். அப்ப தான் கணக்கு ஆசிரியர் எங்களுக்கு நீங்க இந்த காலேஜ்ல வேலை செய்றிங்க சொன்னதும் உங்களை பார்க்க நாங்க அன்னிக்கி வந்தோம்.

நீங்களும் எங்க கிட்ட நல்லா பேசினிங்க. இன்னும் ஒரு விஷயம் சொல்லவா சார். உங்களுக்காக தான் சார் நாங்க மூன்று பேருமே வரலாறு பிரிவு எடுத்து இந்த காலேஜ் சேர்ந்தோம். எங்க அப்பா அடுத்து நீங்கள் தான் எங்களுக்கு எல்லாமே.

உங்க மாணவன் என்று சொல்வதில் தான் எங்களுக்கு சார் பெருமை என்று மூவரும் மகிழ்ச்சி பொங்க கூறியவர்களின் பேச்சை பிற ஆசிரியர்களின் கைதட்டல் அவர்களை தன்னிலை உணர செய்தது.

நாங்களும் எத்தனை மாணவர்களை பார்த்திருப்போம் ஆனால் உங்க மூன்று பேரையும் போல் நான் பார்த்ததில்லை என்று சக ஆசிரியர் ஒருவர் சொல்ல. உங்க சார் மட்டும் என்னப்பா எப்பயும் உங்க மூனு பேர் புராணம் தான் பாடிட்டு இருப்பாரு என்று இன்னும் ஒரு ஆசிரியர் சொல்ல அவர்கள் புன்னகை சிந்தினர்.

சரி சரி பிரெக் விட்டாங்க என்றவுடன் ம்ம்ம் ஒகே சார் எனக்கு வேலை இருக்கு நான் அப்புறம் வரேன் என்று மூவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.

டேய் இந்த மித்ரா எங்கடா காணோம் என்று அஜ்மல் கேட்க தெரியலையே அப்ளிகேஷன் வாங்குறேன் சொல்லி அங்கேயே தங்கி விட்டாளோ என்று சித்து கேட்க தெரியலையே இங்க தான் இருப்பாள் வா போய் பார்ப்போம் என்று மூவரும் செல்ல அங்கே மித்ரா அமைதியாக அமர்ந்திருந்தாள்.

மித்ரா இங்க என்ன பண்ற என்று சாதிக் கேட்க அவனை அணைத்து கொண்டு அழ தொடங்கினாள். மித்ரா என்ன ஆச்சு ஏன் அழுகிற? என்று சாதிக் கேட்க நீங்கள் பேசுனது எல்லாம் நான் கேட்டேன். நான் என்னடா பண்ண உங்களுக்கு என்னால எதுவும் பேச முடியலை பட் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்று அவள் கூற. மித்ரா நீ என்னிக்குமே எங்களுக்கு தங்கை தான் புரிதா என்று அவள் தலையை வருடிய படி சொன்னான் சித்து. அவனை விட்டு விலகி அங்கு மரத்தடியில் அமர்ந்தாள் மித்ரா.

மித்ரா அப்ளிகேஷன் வாங்கினியா என்று அஜ்மல் கேட்க வாங்கிட்ட ஒழுங்கா அவங்களை படிக்க வையுங்க என்றவுடன் ஓய் அதெல்லாம் எங்களுக்கு தெரியும் என்று சாதிக் சொல்ல அவங்க மூனு பேரும் என் தோழிகள் அப்புறம் தான் உங்களுக்கு மனைவி என்று அவள் சொல்ல அவள் தலையில் கொட்டினான் அஜ்மல்.

டேய் நாயே எதுக்கு டா கொட்டுன வலிக்குது என்று தலையை தடவியபடி அவள் கேட்க சும்மா😋😋😋 என்றவுடன் அவள் அவன் காதை திறுகினாள். ஏய் விடுடி வலிக்குது என்று அவன் கத்த வலிக்கட்டும் என்று அவள் மேலும் திறுக அவன் கத்தினான் சாதிக்கும் சித்துவும் சிரித்து கொண்டு இருந்தனர்.

டேய் நீங்க ரெண்டு பேரும் நண்பர்கள் தானே டா காப்பாத்துங்க டா என்னை என்றவுடன் சாதிக் போதும் விடு அவனை என்றவுடன் அவளும் விட்டாள்.

சரி நீ சொல்லு உனக்கு தமிழரசனை பிடித்திருக்கா? என்று கேட்க அப்பா அம்மா பிடித்திருந்தா எனக்கும் ஓகே என்றாள்.

சாதிக் ரொம்ப சந்தோஷம் நீ ஷாயின் கூட சேர்ந்தது என்று கேட்க அவன் புன்னகை செய்ய அட பாருடா என்று அவனை கலாய்க்க ஏய் சும்மா இரு என்று சாதிக் சொல்ல ஏய் ஒரு நிமிஷம் என்று அஜ்மல் தன் போனை மித்ரா விடம் காட்ட அவள் செமயா இருக்கா ரெண்டு பேரும் எவ்வளவு அழகா இருக்காங்க என்று சாதிக்கை பார்த்து சொல்ல அதை வாங்கி சாதிக் பார்த்தான்.

டேய் இதை எப்படா எடுத்திங்க என்று அவனை முறைத்தவாறு கேட்க அது நீ சிஸ்டரை தூக்கிட்டு போனியா அப்ப தோனிச்சு எடுக்க அதான் எடுத்தோம். நீ சிஸ்டரை தூக்கிட்டு போனப்ப உன் கண்ணுல அவ்வளவு லவ் தெரிஞ்சது என்று சாதிக்கை பார்க்க அவன் அந்த போட்டோவை ரசித்து கொண்டு இருந்தான்.

டேய் வழியுது தொடச்சிக்கோ என்று சித்து சொல்ல சாதிக் ஈஈஈஈஈ 😁😁😁😁 என்று சாதிக் இழிக்க டேய் இழிக்காத டா என்றான் சித்து. சரி மச்சி டைம் ஆயிடுச்சு நாம கிளம்பலாமா என்று அஜ்மல் கேட்க ம்ம்ம் சரி கிளம்பலாம் என்று மூவரும் கிளம்பினர்.

மித்ராவும் அவர்களிடம் இருந்து விடைபெற்று கொண்டாள். அஜ்மல் சித்தார்த் இருவரும் வகுப்பிற்கு செல்ல சாதிக் மட்டும் தனியாக அமர்ந்து இருந்தான்.
.
.
.
.
.
.
சிறிது நேரம் தூங்கி எழுந்த ஷாயின் ஹாலிற்கு வந்தாள். அவள் வந்ததும் அவளை பிடித்து கொண்டு வம்பிழுத்தும் விளையாடி கொண்டு இருந்தனர் மூவரும்.

அவர்களை ரசித்தபடியே பெரியவர்கள் இருந்தனர். பிறகு சரி பாய் நாங்க கிளம்பிறோம் என்று சுலைமான் சொல்ல என்ன பாய் இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்ல என்று ரிஹானா கேட்க இல்லைமா கொஞ்சம் வேலை இருக்கு அதான் போற வழியில் மாப்பிள்ளை பார்த்து சொல்லி விட்டு தான் போவோம் என்று கூறிவிட்டு அவர்கள் தங்கள் மகள்களிடம் கூறிவிட்டு சென்றனர்.

நவீனாவும் மதினாவும் அவர்கள் வீட்டிற்கு தற் குடும்பத்தினருடன் தங்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

ஷாயின்க்கு போர் அடித்தது. என்ன பண்ணலாம் என்று யோசித்து கொண்டு இருக்க அப்போது ரிஹானாவும் ஹாபிஸீம் அங்கு வந்து ஷாயின் என்ன யோசிக்கிற? என்று கேட்டவரை ம்ம்ம் என்று முறைத்து கொண்டு திரும்பினாரள்.

அவளின் முறைப்பை புரிந்து கொண்டு செல்லம் இங்க பாரு? இப்ப எதுக்கு எங்க மேலே கோபமா இருக்க என்று ரிஹானா கேட்க ம்ம்ம் நீங்கள் ஏன் பொய் சொன்னிங்க என்று கேட்டவுடன் அது அது சும்மா தான் என்று ஹாபிஸ் இழுக்க இங்க பாருடா பொய் தான் சொன்னோம். நீயும் சாதிக்கும் சேரனும் பொய் சொல்லி தான் நாங்க அங்க போனோம் . அது நிறைவேறி விட்டது என்று சொல்ல அப்ப உங்களுக்கு தெரியுமா ? என்பதை போல் அவள் பார்ப்பதை புரிந்து கொண்டார்கள் இருவரும்.

இங்க பாரு ஷாயின் உனக்கும் சாதிக்கும் என்ன பிரச்சினை என்று நம்ம குடும்பத்திற்கே தெரியும் எங்களுக்கும் தெரியும் புரியுதா என்று சொன்னவரின் மடியில் படுத்து அழுதாள் ஷாயின்.

ஹாபிஸ் அவள் தலையை வருடிய படி நீங்க எந்த தப்பும் பண்ணலை டா இது அல்லாஹ்வோட முடிவு புரியுதா. நீ எந்தளவுக்கு சாதிக்கை நேசிக்கிறே என்று மதினா சொன்னாள். உன் துஆ தான் மா உங்களை சேர்த்து வச்சியிருக்கு டா இதுக்கு எல்லாம் அழுகலாமா? என்று அன்பாக அவள் தலையை கோதிவிட்டார்.

இங்க பாருடா நீ எப்பயும் போல சிரிச்சிட்டு எங்களை கலாய்ச்சிட்டு சந்தோஷமா இருக்கனும் புரிதா என்று அவள் கண்ணை துடைத்தார் ரிஹானா இவர்கள் தனக்கு இன்னும் ஒரு அம்மா அப்பாவாக கிடைக்க தான் சாதிக்கை மணமுடித்து கொண்டேனோ என்று எண்ணி அல்லாஹ்விற்கு நன்றி சொன்னாள்.
.
.
.
.
.
.
.
அஜ்மல் சாதிக் சித்தார்த் மூவரும் மரத்தடியில் நிற்க சுலைமான் ரியாஸ் சரத் மூவரும் அவர்கள் மூவரின் முன் நின்றனர். மாப்பிள்ளை நாங்கள் கிளம்பிறோம் என்று சரத் சொல்ல ஏன் மாமா இருந்து ரெண்டு நாள் கழித்து போஙலாம் என்று அஜ்மல் சொல்ல இல்லைப்பா வேலை இருக்கு என்று ரியாஸ் சொல்லி விட்டு நாங்கள் கிளம்பிறோம் என்று மூவரும் விடைபெறுவதற்கு முன் சுலைமான் சாதிக் அருகில் சென்று நின்றார்.

தம்பி என் பொண்ணு என்ன தப்பு பண்ணாலும் பொறுமையாக எடுத்து சொல்லுங்க அவள் கேடுப்பா என்று சுலைமான் வருத்ததுடன் சொல்ல மாமா ஷாயின் என்னிக்குமே தப்பு பண்ணதில்லை என்று சொல்ல உங்களுக்கு உள்ள என்ன பிரச்சினை என்று நம்ம மொத்த குடும்பத்திற்கும் தெரியும் என்று மேலும் ஷாயின் பண்ணது தப்பு தான் தம்பி என்று சரத் சொல்ல அவரை தடுத்து இவன் பேசினான்.

மாமா தப்பு தான் பட் அவள் எனக்கு புரிய வைக்க எத்தனை முறை டிரை பண்ணா நான் சொல்ல கூட விடவில்லை அவளை.... உண்மை தெரிந்த பிறகு எனக்கு அவ்வளவு குற்றயுணர்ச்சியாக இருக்கு இப்ப வரைக்கும். அவள் என் வாழ்க்கையில் வந்தது நான் செய்த புண்ணியம் தான் மாமா.

அவளை மாதிரி ஒரு பொண்ணை எனக்கு திருமணம் செய்து வச்சதுக்கு நான் தான் மாமா உங்களுக்கு நன்றி சொல்லனும் என்று அவன் கண்கலங்க என்ன பா நீ குழந்தை மாதிரி அழுதுட்டு என்று அவன் கண்ணை துடைத்து விட்டு ஆறுதலாக அணைத்தார் ரியாஸ்.

சரிப்பா நாங்கள் கிளம்பிறோம் என்று அவர்கள் அனைவரும் விடைபெற்று கொண்டனர்.

இவர்கள் மூவரும் விசிடிங் வருவதற்காக ஒரு சில வேலைகளில் ஈடுபட்டு இருந்தனர். நேரம் கடந்து கொண்டு இருப்பதை தெரியாமல் வேலை செய்து கொண்டு இருந்தனர் அனைவரும்.

தொடரும்
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
💕29💕

மூவரும் வீட்டிற்கு வர மணி எட்டானது. ரிஹானா தான் கதவை திறந்தார். கைகால் கழுவிட்டு வா என்று விட்டு சமையலறைக்கு சென்றார், ரிஹானா.

அவனும் கைகால்களை கழுவிக்கொண்டு சமையலறைக்கு சென்றான்.

அவனிடம், சாதிக் ஷாயின் இன்னும் சாப்பிடவில்லை வேண்டாம் சொல்லிட்டா, நீ போய் அவளை சாப்பிட வை என்று தட்டை கொடுக்க அவனும் அதை வாங்கி கொண்டு தண்ணி பாட்டலை எடுத்து கொண்டு தன் அறைக்கு சென்றான்.

ஷாயின் எதையோ யோசித்த படி இருந்தாள். ஷாயுமா என்று சாதிக் அழைத்த பிறகே தன்னிலை வந்தாள்.

நீ எப்ப வந்த சாதிக்? என்று கேட்டவளை தன் மடியில் உட்கார வைத்து இப்ப தான் வந்த என்று அவளுக்கு ஊட்டி விட அவளும் சாப்பிட்டு கொண்டே கதை பேசி கொண்டே இருந்தாள்.

அவள் பேசுவதை ரசித்தபடி அவளை பார்த்து கொண்டு இருந்தான். போதும் சாதிக் என்று அவள் சிணுங்க ஏய் ரெண்டு இட்லி கூட முழுசா சாப்பிடலை ஒழுங்கா சாப்பிடு என்று அதட்டி அவளுக்கு ஊட்டி விட்டான்.

சாப்பிட்டு விட்டு தட்டிலே கைகழுவி விட்டான் . அவள் ஓயாமல் பேசி கொண்டு இருந்தவளை பார்த்து இவளுக்கு வாயே வலிக்காதா என்று தன் மனதில் நினைத்து கொண்டு இருந்தான்.

பேசி கொண்டு இருந்தவளின் இதழில் முத்திரையிட அவள் திணறி விட்டாள். சிறிது நேரம் கழித்து விட அவள் அவனை செல்லமாக இரண்டு அடி கொடுத்து அவன் நெஞ்சில் புதைந்து கொண்டாள்.

அப்படியே உறங்கியும் போனாள். அடிப்பாவி கண்ணுல தூக்கம் வச்சிட்டா டி இவ்வளவு பேசுன என்று தூங்கியவளை பார்த்து கேட்டு கொண்டு தூங்குறதை பாரு என்று அவளை ஒழுங்காக படுக்க வைத்து தட்டை கிச்சனில் வைத்து விட்டு அவனும் தூங்கினான் அவளை அணைத்து கொண்டு.
.
.
.
..
.
வீட்டிற்கு தாமதமாக வந்து தன் அம்மாவிடம் வாங்கி கட்டிகிட்டான் அஜ்மல்.

அம்மி நான் என்ன பண்ணுவேன். காலேஜ் ஹேவி வொர்க் என்று அஜ்மல் கூற ஏதோ போ என்று சலித்து கொண்டு சரிசரி வா சாப்பிடுவே என்று என்றவுடன் இல்லை மா அங்கேயே டின்னர் கொடுத்துட்டாங்க அதான் சாப்பிட்டு வந்துட்டேன் என்று விட்டு தற் அறைக்கு சென்றான்.

அங்கு மதினா தூங்கி கொண்டு இருந்தாள். அவள் அருகில் அமர்ந்து அவள் தலையை வருடிய படி சாரிடா என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

அவள் சற்று திரும்ப அவளை ரசித்து கொண்டு இருந்தான். அவனை அறியாமல் புன்னகை சிந்த அப்படியே அவளை அணைத்து படி உறங்கி போனான் அஜ்மல்.
.
.
.
.
.
அஜ்மல் வாங்கிய அதே பாட்டை சித்தார்த்தும் வாங்கி கொண்டு இருந்தான் என்ன இன்னும் அதிகமாக வாங்கி கொண்டான் வேறு ஏதுவுமில்லை.

அவன் திட்டு வாங்கி கொண்டு தன்னறைக்கு வந்தான். நவீனாவும் தூங்கிவிட அவளை ரசித்த படி அவனும் தூங்கினான்.
.
.
.
.
.
காலையில் சாதிக் கிளம்பி கொண்டு இருந்தான். அப்போது ஷாயின் குளித்து விட்டு வர அவளிடம் , ஷாயுமா ஒரு நிமிஷம் இங்க வா என்று அழைக்க அவளும் ம்ம்ம் என்ன? என்று கேட்டு கொண்டே அவனருகில் வந்தாள்.

அவளை தன்னோடு சேர்த்து கொண்டு அழகாக இருக்க என்று அவள் காதில் சொல்ல அவள் வெட்கத்தில் தலைகுனிந்தாள். அதை அவன் ரசித்து கொண்டு இருந்தான்.

ஷாயுமா, உன் 12th யுஜி சர்டிபிகேட் எல்லாம் எங்கே இருக்கு? என்று கேட்க ம்ம்ம் காலேஜ்ல இருக்கு . ஏன் இன்னும் போய் வாங்கலை என்று கேட்டவனிடம் ம்ம்ம் வந்தவுடனே மேரேஜ் நாங்க எங்கள் ரிசல்ட் கூட பார்க்கலை என்று சொன்னவளின் தலையில் கொட்டி ஏன்டி இப்படி பொறுப்பு இல்லாமல் இருக்க? என்று கண்டித்தான்.

ஆஆ எருமை வலிக்குதுடா என்று அவள் சிணுங்க வலிக்கட்டும் என்று விட்டு நீயும் கிளம்பு போய் சர்டிபிகேட் வாங்கிட்டு வரலாம் என்று கூற அதெல்லாம் வேண்டாம் அது அங்கேயே இருக்கட்டும் பத்திரமா என்று அவள் சொல்ல ஏய் உன் சர்டிபிகேட் டி என்றவுடன் இப்ப எதுக்கு அதை கேட்கிறாய்? உன்னை பிஜி சேர்க்க தான் என்றான்.

அவள் ஒஒ என்றுவிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு என்னது மறுபடியும் படிக்கனுமா? என்று அதிர்ச்சியுடன் கேட்டவளை ம்ம்ம் ஆமாம் ஒழுங்கா கிளம்பு என்றான் சாதிக்.

டேய் வேண்டாம் நான் படிக்கலை யுஜியே போதும் என்றவளிடம் அதெல்லாம் முடியாது நீ படித்து தான் ஆக வேண்டும் கிளம்பு என்றான்.

வேண்டாம் ப்ளீஸ் என்னால் முடியாது ரெண்டு வருஷம் ஆயிடுச்சு... எல்லாமே மறந்து போய்டிச்சு வேண்டாம் என்றவளை போய் கிளம்பு என்று அவளை பார்த்து முறைத்தான்.

போ நான் படிக்க மாட்டேன் என்று அடம் பிடித்து கொண்டு இருந்தவளை ஏய் என்று அதட்ட அவள் மிரண்டு விட்டாள்.

அவள் அருகில் சென்று அவளை தன்னருகில் அமர்த்தி இங்க பாரு ஷாயுமா உனக்கு படிக்க வேண்டும் ஆசை இருக்கு என்று எனக்கு தெரியும். அதை ஏன் நீ மறைக்கிற என்று அவளிடம் கேட்க அவள் முன்ன இருந்தது இப்ப இல்லை சாதிக்.

நமக்கு மேரேஜ் ஆனபிறகு அந்த ஆசை போய்டிச்சு.... இப்ப நான் படிச்சேனா உன்கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது.... உன்னை அதிகமா மிஸ் பண்ணுவேன் சாதிக்.... அம்மா அப்பா கூட ஒழுங்கா பேச முடியாது.... யுஜி ஈஸி ஆனா பிஜி பிராஜக்ட் அசைன்மட் அது இது நிறைய இருக்கும் வேண்டாம் என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் ஷாயின்.

அவள் முகத்தை தன் கரத்தால் ஏந்தி அவள் நெற்றியில் இதழ் பதித்து ஐ லவ் யூ என்றான். அவளும் அவன் நெஞ்சோடு புதைத்து கொண்டு நான் படிக்கிறேன் சாதிக் உனக்காக என்று சொன்னவளை விலகி என்ன சொன்ன என்று கேட்டவனிடம் ம்ம்ம் படிக்கிறேன் சொன்னடா எருமை என்றவளை நிஜமாகவே என்று நம்ப முடியாமல் கேட்க நிஜமா சாதிக் உனக்காக மட்டுமே என்றவளை அணைத்து கொண்டான்.

பிறகு இரு சாதிக் நான் ரெடியாகி வரேன் என்று அவள் கிளம்ப சென்றாள். இவன் தன் அப்பா அம்மா இருவரிடமும் சொல்ல ரொம்ப சந்தோஷம் இருவரும் மகிழ்ந்தனர்.

அஜ்மல், சித்தார்த் இருவரும் conference கால் மூலம் சாதிக்கை அழைக்க அவும் அதை ஏற்று கொண்டு பேசினான்.

ம்ம்ம் சொலுங்க டா என்றான் சாதிக். டேய் சாதிக் நவீனாவும் மதினாவும் ஒத்து கிட்டாங்க என்றவனிடம் உடனே ஒத்து கொண்டார்களா என்று கேட்க ம்ம்ம் ஆமாம் என்றார்கள் இருவரும் சிஸ்டர் என்று கேட்க ம்ம்ம் ஒத்துகிட்டாள் என்று சொல்ல ம்ம்ம் சரிசரி நாங்க சர்டிபிகேட் வாங்க போறோம் என்றவுடன் நாங்களும் வரோம் என்றான் சாதிக் ம்ம்ம் சரி அப்ப ஒன்னாவே போகலாம் என்று சித்து கூற இல்லை டா நாங்கள் பைக்கில் போறோம் என்றான் சாதிக். நாங்களும் அப்படிதான் போறோம் என்றவுடன் அப்ப ஒகே மச்சி பை என்று மூவரும் போனை கட் செய்து விட்டு அவரவர் வேலையில் ஈடுபட்டனர்.

பிறகு சாப்பிட்டு விட்டு கிளம்பினர். அவன் பைக்கை ஒட்ட இவள் அவனிடம் பேசி கொண்டே வந்தாள்.

ஏய் வாயாடி அமைதியா இருடி என்றவுடன் இப்ப எதுக்கு என்னை வாயாடி சொல்ற அது ரியாஸ் அப்பா சொல்றது நீலாம் சொல்லக்கூடாது சரி வாலு அமைதியாக வா என்று சொல்ல டேய் அது சரத் அப்பா சொல்றது நீயெல்லாம் சொல்லகூடாது என்றவுடன் அவன் அப்றம் எப்படி கூப்பிடுறது? என்று கேட்டவன் காதருகே சென்று ஷானு அழைக்கனும் என்றவுடன் சரிசரி இப்ப கொஞ்சம் அமைதியா வா என்றவுடன் முடியாது போ என்றாள்.

அவனுக்கு பிடித்து இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தான்.

ஹே உனக்கெல்லாம் வாயே வலிக்காதா என்று கேட்க ஏன் கேட்கிற என்று கேட்டவளை ம்ம்ம் இப்படி ஓயாமல் பேசிகிட்டே இருக்க என்றவுடன் அதெல்லாம் கூடவே பிறந்தது எப்பயும் போகாது என்றாள்.

அதான் தெரியுதே என்றான். ம்ம்ம் சரி சரி என்று அமைதியாகினாள். டேய் என்னால் அமைதியா இருக்க முடியலை என்று அவனை கிள்ள ஆஆஆ ஏய் எதுக்கு டி இப்ப கிள்ளுன? என்று அவன் கேட்க ஈஈஈ சும்மா தான் என்று சொல்ல ஏய் கொஞ்ச நேரம் டி அமைதியா வா என்று அவன் கெஞ்ச அவளோ அவனை சீண்டி கொண்டே இருந்தாள்.

இவளை எப்படி தான் அத்தை மாமா சமாளிச்சாங்களோ ரொம்ப கஷ்டம்.... நமக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் நீதான் டி என் முதல் குழந்தை என்று அவன் மனதில் நினைத்து கொண்டு கண்ணாடி வழியாக அவளை ரசித்தபடி வண்டியை செலுத்தினான்.

சிறிது நேரத்தில் கல்லூரி வர இருவரும் இறங்கி உள்ளே சென்றனர். அடுத்து மதினா நவீனா இருவரும் வர மூவருக்கும் சர்டிபிகேட் வாங்கி கொண்டு மூன்று ஜோடிகளும் வீட்டிற்கு சென்றனர்.

அட வாங்க என்று சரோஜா அழைத்து மூன்று ஜோடிகளையும் நலம் விசாரித்து உபசரித்தனர்.

அவர்கள் மூவரும் உற்சாகமாக விளையாடி கொண்டி இருந்தனர். உங்கள் மூன்று பேரையும் அடித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று நஜீதா சொல்ல யாரை அத்தை சொல்றிங்க என்று அஜ்மல் கேட்க எல்லாம் உங்கள் மாமா தான் என்றவுடன் ஏன் மாமா என்ன தப்பு பண்ணார்கள்? என்று சாதிக் கேட்க ம்ம்ம் மூனு பொண்ணுங்களுக்கும் செல்லம் கொடுத்து கேடுத்துட்டாங்க என்று கூற ஏன் அத்தை அப்படி சொல்றிங்க? என்று சித்து கேட்க பின்ன என்ன தம்பி மூனு கழுதைகளுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு இன்னும் சின்ன குழந்தை மாதிரி விளையாடிட்டு இருக்காங்க. அதுவும் நீங்க இருக்கிங்க உங்களை கூட கவனிக்காமல் என்று ஆதங்கத்தை பொழிந்தார் சுசீலா.

அத்தை அவங்க ரெண்டு வருஷம் பிரிந்து இருந்தார்கள். ரெண்டு வருஷம் கழிச்சு வந்த உடனே மேரேஜ் பண்ணி வச்சிட்டிங்க. அவங்க மூனு பேரும் ஒருத்தர் ஒருத்தர் மிஸ் பண்றாங்க ரொம்ப அதுக்காக தான் இப்ப நாங்க அவங்களை பிஜி படிக்க வைக்க பிளான் போட்டு இருக்கோம். அவங்க இப்படி இருக்கிறது தான் எங்களுக்கு பிடித்து இருக்கு... அவங்க எங்களுக்கு மனைவியா கிடைச்சது நாங்க பண்ண பெரிய தவம் என்று மூவரும் சொல்ல பெற்றவர்கள் மனம் குளிர்ந்தது.

அவங்க அவங்களாவே இருக்கட்டும் மாமா அவங்க நட்புக்குள்ள நாங்க தலையிட மாட்டோம் என்று மூவரும் சொன்னார்கள். பிறகு சாப்பிட்டு விட்டு தங்கள் செல்ல பாட்டிகளுடன் கதை அடித்து கொண்டு இருந்தார்கள்.

மணி 4 எட்ட அனைவரும் வீட்டில் சொல்லிவிட்டு கிளம்பினார்கள். அவர்களை தங்கள் கல்லூரிக்கு அழைத்து சென்று பிஜி சேர்த்து விட்டார்கள். இன்னும் ஒரு வாரத்தில் வகுப்புகள் தொடங்கபடும் என்றனர்.

பிறகு தங்கள் வீடு வந்து சேர்ந்தனர். சிறிது நேரத்தில் சுசீந்திரன் சுதா மித்ரா மூவரும் சாதிக் வீட்டிற்கு வந்தனர்.

அவர்களை வரவேற்றனர் அனைவரும். பிறகு சுசீந்திரன் தான் பேச்சை தொடர்ந்தார். மித்ராவிற்கு திருமண ஏற்பாடு பண்ணிருக்கோம் பையன் என் தங்கச்சி பையன் தான் .

நாங்க பேசலாம் போனோம் கடைசியில் என் தங்கை யாழினி எங்கள் வீட்டுக்கு வந்து முதல கேட்டாள் நாங்களும் சரி சொல்லிட்டோம். அடுத்த வாரம் நிச்சயம் வச்சியிருக்கோம் கண்டிப்பாக வந்துடனும் என்று சொல்ல அதுக்கு என்ன ப்பா வந்துட்டா போச்சு இனி எல்லா வேலையும் மித்ராவோட அண்ணன்கள் பார்த்துப்பாங்க என்றவுடன் சரி மா அவங்க தான் இந்த திருமணத்தை நடத்தி வைக்க போறாங்க என்று கூறிவிட்டு நாங்கள் கிளம்புறோம் என்று அவர்கள் விடைபெற்றனர்.

அஜ்மல் சித்தார்த் இருவருக்கும் கூறிவிட்டு தங்கள் வீட்டிற்கு சென்றனர். இவர்கள் மூவரும் நிச்சயதார்த்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் கவனித்து கொண்டு இருந்தனர்.

நிச்சயதார்த்தம் அன்று......

சித்தார்த் சாதிக் அஜ்மல் மூவரும் வேலைகள் கவனித்து கொண்டு இருந்தனர். பெரியவர்கள் வருபவர்களை வரவேற்று கொண்டு இருந்தனர். பெண்மணிகள் சமையல் வேலைகளை கவனித்து கொண்டு இருந்தனர்.

நவீனா மதினா ஷாயின் மூவரும் மித்ராவை கலாய்த்த படி அவளை அழகு தேவதையாக மாற்றி கொண்டு இருந்தனர்.

அவர்கள் இருவருக்கும் நடக்கும் நிச்சயத்தில் இந்த மூன்று ஜோடிகளும் தங்கள் கண்களில் காதலை பரிமாறி கொண்டு இருந்தனர். பெரியவர்கள் அதை கண்டும் காணாமல் இருந்து விட்டனர்.

சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்து விட நிச்சயதார்த்தம் நல்ல படியாக நடந்து முடிந்தது.

ஒரு மாதத்தில் திருமணம் என்று முடிவெடுத்தனர்.

மித்ரா திருமணத்தன்று....

அழகு தேவதைகளாக ஜொலித்து கொண்டு இருந்த தன்னவளை கண்கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தனர் சாதிக் அஜ்மல் சித்தார்த் மூவரும்.

பிறகு தன்னிலை வந்து மித்ராவை ரெடி பண்ணிடிங்களா என்று கேட்க பண்ணி கொண்டு இருக்கோம் என்று மதினா சொன்னாள். பிறகு சரி என்று அங்கிருந்து நகர்ந்தார்கள்.

மித்ரா அழகு ததும்ப மாறி இருந்தாள். அவளை கலாய்த்து கொண்டு இருந்தார்கள் அவள் தோழிகள்.

டேய் என்னமா அழகா இருக்கா என்று தங்கள் மனைவியின் அழகை வர்ணித்து கொண்டு இருந்தார்கள், இவர்கள் மூவரும். பிறகு மாப்பிள்ளை தமிழரசனை கலாய்த்து கொண்டு இருந்தார்கள் அவர்கள் நண்பர்களோடு சேர்ந்து.

சிறிது நேரத்தில் மித்ராவை தன்னவளாகி கொண்டான் தமிழரசன். சுசீந்திரன் சுதா மற்றும் யாழினி நாகேஷ் கண்களில் ஆனந்த கண்ணீர். அவர்களிடம் மணமக்கள் இருவரும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர்.

இவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு தன்னிலை மறந்தனர்.

பிறகு மற்ற சடங்குகள் முடித்தவுடன் மணமக்கள் தங்கள் வீட்டிற்கு சென்றனர்.

இவர்களும் அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

நான்கு ஜோடிகளும் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். தங்கள் மனைவியின் குழந்தை தனத்தை ரசித்தபடி பூஞ்சோலையாக வாழ்கிறார்கள்.

ஏனோ இன்பம்
கொண்டது மனம்
உன்னுடன் கரம் கோர்த்ததில்
நம் நேசத்தின்
ஆழத்தை உணர்ந்த
பிரிவே நம்மை
பிரித்து வைக்க
மனமின்ற திருமணத்தில்
நம்மை சேர்த்தது
இறைவனின் துணையோடு
நாம் வாழ்வில் இணைந்தோம்
பிரிவின் வலியால்
நீ என் மேல்
கோபம் கொண்டாய்
அக்கோபமும் என்
குழந்தை தனத்தால்
நீ மறந்து விட்டாய்
நீ என்னை புரிந்து
கொண்ட தருணத்தில்
நான் உன்னை விட்டு
விலகி நின்றேன்
எல்லாம் விதி
நம்முடன் சேர்ந்து
விளையாடும் விளையாட்டு
இதுவும் நம்மை
இன்னும் நெருக்கமாக்கியதே
தவிர பிரிக்கவில்லை!
ஒருவரை ஒருவர் புரிந்து
கொண்ட தருணமே
நம் வாழ்வின்
பொன்னான தருணம்
ஒவ்வொரு நொடியும்
என்னை உணர
வைத்து கொண்டே இருந்தாம்
நீ எனக்கானவன் என்று!
என் ஒவ்வொரு செயலிலும்
நீ உணர்ந்தாய் நான்
உனக்கானவள் என்று
உனக்கென நான்
எனக்கென நீ என்று
நம் உலகில்
வாழ்வதில் இன்பம்
எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் கிடைக்காதடா!
இன்று நம் உயிரை சுமக்கிறேன்
அதை காண விரைந்து வா
என் உயிரே!

என்று எழுதி இருந்ததை படித்து விட்டு அதை பத்திரமாக வைத்து ஷாயினை பார்த்தான். அவள் எதுவும் சொல்லாமல் தலை குனிந்தபடி இருந்தவளை தன் அருகில் இழுத்து அவள் நெற்றியில் இதழ் பதித்தான் சாதிக். அவனை இறுக்கமாக அணைத்து கொண்டு லவ் யூ சாதிக்😍😍😍😍 என்று அவள் கண்கலங்க அவன் அவளின் முகத்தை தன் இருகைகளால் ஏந்தி அவள் கண்ணீரை துடைத்து நெற்றியில் இதழ் பதித்து லவ் யூ டூ 😍😍😍😍😍 என்றவுடன் அவன் தோளில் சாய்ந்த படி நிலவினை ரசித்து கொண்டு இருந்தாள். அவனும் அவளை அணைத்து கொண்டு தன் நிலவை ரசித்தான் சாதிக்

அவர்கள் வாழ்வில் என்றும் இன்பமே......

சுபம் *

உனக்கென நான் எனக்கென நீ கதை முடிந்துவிட்டது. இக்கதையை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். If itz bad or good whatever may be plz give your valuable comments...

அடுத்த கதையோடு உங்களை சந்திக்கிறேன்

ஷமீம் பானு அப்துல் நஜீர்​
 
Top Bottom