Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

Barkkavi Murali

Active member
Vannangal Writer
Team
Messages
19
Reaction score
7
Points
43
ஹாய் பிரெண்ட்ஸ்... எழுத்தாளராக என்னுடைய முதல் படைப்பு ஒரு சிறுகதை... அதைத் தொடர்ந்த என் இரண்டாவது முயற்சியே இந்த கதை - உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே...
பெயரிலேயே இது ஒரு காதல் கதை என்று தெரிந்திருக்கும்...
வழக்கமான காதல் கதைகளில் ஹீரோ ஹீரோயின் பின்னால் சுற்றுவது போல் தான் இருக்கும். ஆனால் இந்த கதை அதற்கு அப்படியே எதிர்மறையாக இருக்கும்....
இந்த கதை முழுக்க ஹீரோயின் சார்ந்ததா இருக்கும். ஒரு பெண்ணோட மனநிலையில் காதல் எப்படி இருக்கும் - இது தான் இந்த கதையின் கரு.
இந்த கதையில் ஹீரோவை நீங்கள் கொஞ்சம் தேட வேண்டியதிருக்கும்.
ஹீரோ ஹீரோயின் பற்றி கதையின் போக்கிலேயே தெரிந்து கொள்ளுங்கள்...

விரைவில் கதையின் முதல் அத்யாயத்தோடு வருகிறேன்...
உங்களின் அன்பான ஆதரவை எதிர்நோக்கும்....
உங்கள் தோழி...
பார்கவி...​
 
Barkkavi Murali

Active member
Vannangal Writer
Team
Messages
19
Reaction score
7
Points
43
ஈர்ப்பு 1

பனிப் படர்ந்த காலை நேரம். சுற்றிலும் நடைப்பயிற்சி மேற்கொள்வோரைக் கூட காணமுடியாத அளவுக்கு மூடுபனி சூழ்ந்திருந்தது. ஆனால் நான் ஏன் மற்றவர்களைப் பார்க்கப் போகிறேன். இதோ என் முன் என் சம்மதத்திற்காகக் காத்திருக்கும் என் காதலனை விடுத்து மற்றெவரும் என் கவனத்திற்குள்ளாவாரோ? இந்த நொடி ஒரு பெண்ணிற்கு எவ்வளவு மகிழ்ச்சியான தருணம். ஆம் காதலிப்பதை விட காதலிக்கப்படுவது எவ்வளவு சுகமானது என்பது அதை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும்.
நான் என் வாழ்நாளில் மறக்கவே முடியாத அளவுக்கு சந்தோசமாக இருந்தேன் அவன் இதை கூறும்போது,

“பேபி, வுட் யு பி மை பெட்டர்-ஹாஃப் ஃபார் தி ரெஸ்ட் ஆஃப் மை லைஃப்?”
(“என்னுடைய சிறந்த பாதியாக என் வாழ்க்கை முழுவதும் வருவாயா கண்மணி?”)

இதைக் கேட்டபோது ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிக்கள் என் வயிற்றில் பறப்பது போன்று தோன்றி சிலிர்க்க வைத்தது. அவன் மெதுவாக என் கைப்பற்றி மோதிரம் போடும்போது எங்கிருந்தோ மணியோசை…. அது நான் வைத்த அலாரத்தின் ஓசை!!!

மணி 7.15. “ச்சே நல்ல கனவு. ம்ம்ம் நேர்ல தான் ஒன்னும் நடக்க மாட்டிங்குதுனா கனவுல கூடவா….” சலித்துக்கொண்டேன் நான்.

என் அம்மா சமயலறையிலிருந்து கத்திக் கொண்டிருந்தார். “ஒரு பொம்பளப் பிள்ள காலைல எந்திரிச்சு அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு தோணுதா? 8 மணி வரைக்கும் இழுத்துப் போத்திட்டு தூங்குறது. அப்பறம் காலேஜுக்கு டைமாச்சுன்னு என்ன டென்ஷன் படுத்த வேண்டியது. இதெல்லாம் எங்க உருப்படப்போகுது?”
தினமும் பாடும் சுப்ரபாதத்தை வரிசை மாறாமல் அதே குரலில் பாடினார் (!!!) என் அம்மா…

நல்ல கனவு (!!!) கலைந்த பெருமூச்சுடன் காலை வேலைகளைப் பார்க்க போனேன்.
ஒரு மணி நேரத்தில் கல்லூரிக்கு தயாராகினேன். (இதுவே லேட்டு…)

‘அச்சோ இன்னிக்கும் லேட்டா… எப்படியாவது அந்த கொரங்கு (என் அண்ணன்) கூட வண்டியில போயிடனும். அப்போ தான் பஸ்ஸ பிடிக்கமுடியும்.’ மனதிற்குள் தற்போதைய அஜென்டாவைப் பிளான் பண்ணிக் கொண்டு ஹாலிற்கு வந்தேன்.

அங்கு அப்பாவிற்கும் அண்ணாவிற்கும் வார்த்தைப் போர்!!! வழக்கம் போல பாக்கெட் மணிக்காக தான். இப்போதைக்கு அது முடியாது என்று தெரிந்தப் பின்பு கிடைத்த வாய்ப்பில் அண்ணணிற்கு சைகை காட்டிவிட்டு வெளியே அவனின் ‘அப்பாச்சே’ பக்கத்தில் நின்றேன்.

மெல்லிய காற்று என்னைத் தீண்டிச் சென்றது. அப்போது தான் ‘அவனைப்’ பார்த்தேன்.

இது முதல் முறை அல்ல. ஏழு வருடமாக எங்கள் அப்பார்ட்மெண்டில் எதிர்த்த வீட்டில் தான் இருக்கிறான். அவன் அவ்வீட்டிற்கு குடி வந்தபோது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அவன் கல்லூரி முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான். அப்போது எனக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது.

இதற்குக் காரணம் என் அம்மா எப்பொழுதும் அவனின் புகழைப் பாடிக்கொண்டேயிருந்தார்.

“எவ்வளவு நல்ல பையன் தெரியுமா அவன்… பிளஸ் 2 ல அவன் ஸ்டேட் ரேங்காம். நீயும் தான் இருக்கியே ஒரு தடவையாவது 1ஸ்ட் ரேங்க் வாங்கிருக்கியா?” (இத்தனைக்கும் அவ்வளவு மோசமாக படிக்க மாட்டேன். முதல் 10 ரேங்க்கிற்குள் வாங்கிவிடுவேன்!)

“அவன் அம்மாவிற்கு எவ்வளவு ஹெல்ப் செய்யுறான்னு தெரியுமா? அவனுக்கு சமைக்கக் கூட தெரியுமாம். உனக்கு சூடு தண்ணியாவது வைக்கத் தெரியுமா?” (ச்சே கிரேட் இன்சல்ட்!!!)

இவற்றாலேயே அவனைப் பார்க்கும் முன்பே பிடிக்காமல் போய்விட்டது.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. வழக்கம் போல என் அம்மாவிடம் திட்டு வாங்கிவிட்டு எங்கு செல்வது என்று தெரியாமல் மொட்டைமாடிக்குச் சென்றேன் (வீட்டினுள் இருந்தால் அம்மா திரும்பவும் திட்டுவார்கள் என்று பயந்து தான்!!!)

அங்கு பெரியவர்கள் சிறியவர்கள் அனைவரும் கூடி நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்படி என்ன தான் நடக்கிறது என்று பக்கத்தில் பொய் பார்த்தால், அங்கு Mr.Perfect (எவ்வளவு நேரம் தான் ‘அவன்’ என்றே சொல்வது… எனக்கு அவன் பெயரும் தெரியாது
😂
😂
😂
) கிடார் வாசித்துக்கொண்டிருந்தான்.

‘ச்சே இவனுக்கு இன்னும் என்னென்ன தெரியுமோ. இதப் பார்த்தா எங்க அம்மா இதுக்கும் என்ன ஏதாவது திட்டுவாங்க… ம்ம்ம் நமக்கு தான் சாப்பிடுறது தூங்குறது தவற ஒண்ணுமே தெரியாதே…’

ஆனாலும் அவன் நன்றாகத் தான் வாசித்தான் (!!!) எல்லோரும் அவனைப் பாராட்டிக்கொண்டிருந்தனர். நான் எனக்குள்ளே குழம்பிக்கொண்டிருந்தேன் அவனிடம் பேசலாமா வேண்டாமா என்று. பூவா தலையா போட்டுப் பார்த்து கடைசியில் பேசலாம் என்று அருகில் சென்றேன்.

“ஹாய்” அவன் கிடாரை எடுத்து வைப்பதில் பிஸியாக இருந்தான்.

‘ஒரு வேளை காதுல விழுந்துருக்காதோ’
மீண்டும் கூப்பிட்டேன். இம்முறை சற்று சத்தமாக. அவன் திரும்பவேயில்லை.

‘ச்சே இவனுக்குபோயா விஷ் பண்ணணும்னு நெனச்சேன்’ மானசிகமாக தலையில் அடித்துக்கொண்டு திரும்பினேன்.

“தேங்க்ஸ்”

‘நாமக்கா தேங்க்ஸ் சொன்னான்’ ஆச்சரியத்துடன் திரும்பினால், அங்கே அவன் ஒரு ‘ஆண்ட்டி’யிடம் பேசிக் கொண்டிருந்தான்.

‘அரோகண்ட் பெல்லொவ். எவ்வளவு தைரியம் இருந்தா என்ன இக்னோர் பண்ணுவான். சரியான சீன் பார்ட்டி’ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோபத்துடன் வீட்டிற்குச் சென்றேன்.

இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கையில் என் அண்ணா அப்பாவை ஒரு வழியாக சமாளித்து வந்துவிட்டான். Mr.Perfectஉம் சென்று விட்டான். நானும் என் கல்லூரிக்குச் சென்றேன்.

ஈர்ப்பான்(ள்)...
 
Barkkavi Murali

Active member
Vannangal Writer
Team
Messages
19
Reaction score
7
Points
43
ஈர்ப்பு 2
“ஹே அவன பாருங்க டி… ஆளு நல்ல இருக்கான்ல…”
“அவ்ளோ சீன் இல்ல டி அவனுக்கு. ஏதோ சுமாரா இருக்கான்.”
“என்ன டி இப்படி சொல்ற…. அவன் ஜிம்முக்கெல்லாம் போவான்னு நெனைக்குறேன்…. அவன் மஸில்ஸ் பாரேன்…”

இவையெல்லாம் என் நண்பிகளின் கமெண்ட்ஸ் தான். நாங்கள் எல்லோரும் கல்லூரி கேன்டீனில் ஸ்நேக்ஸ் கொறித்துக் கொண்டிருந்தோம். அப்போது அங்கிருந்த ஒரு அப்பாவி ஜீவனைக் கண்டு ஜொள்ளிக் கொண்டிருந்தனர் என் தோழிகள். அவனைக் கண்டு பரிதாபப் பார்வை (!!!) பார்த்துவிட்டு திரும்பும்போது தான் மறுபடியும் Mr.Perfectஐப் பார்த்தேன்.

எங்களுக்கு பக்கத்து மேசையில் ஒரு பெண்ணுடன்(!!!) அமர்ந்திருந்தான். அப்பெண்ணை எங்கோ பார்த்த நியாபகம். அவன் அவளிடம் ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்தான். (நமக்கு தான் ஹிந்தி தெரியாதே!) பக்கவாட்டில் நகர்ந்து சென்று அவர்களின் முகபாவனை வைத்து அவர்கள் பேசுவதை அறிந்து கொள்ளலாம் என்று நினைக்கும்போது (பெரிய ஜேம்ஸ் பாண்ட்னு மனசுல நெனப்பு) என் தோழி வகுப்பிற்கு நேரமாகிற்று என்று என்னை இழுத்துக் கொண்டு சென்றாள். (ஹம்ம்… எப்பவும் பங்க்சுவலா கிளாஸ் அட்டெண்ட் பண்ற மாதிரி பில்ட்-அப்)

நான் வகுப்பில் நேரத்தை நெட்டித் தள்ளிக்கொண்டிருந்தேன். எனக்கு அவள் யாரென்று அறியாமல் தலை வெடித்துவிடும் போல் இருந்தது.

“ஹே அந்த சீனியர் கூட வந்தது அவரோட ‘கஸினாம்’ இங்க தான் புதுசா அட்மிசன் போட்டுருக்காங்களாம்” - என் தோழி என்னிடம் கூறினாள்.

ஆம் அவனும் இதே கல்லூரியில் படித்து இப்போது ஒரு புகழ்பெற்ற சாப்டுவேர் கம்பனியில் TLஆக பணிபுரிகிறான்.
‘ஹம்ம்… இவனுக்கு மட்டும் எங்க போனாலும் fans இருக்காங்க…’ என்று நொந்துக்கொண்டேன்.

எங்கள் வகுப்பு முடிந்து நாங்கள் கிளம்பும்போது மறுபடியும் அவளைப் பார்த்தேன். அவள் நேஹா. இப்போது அவளை சிறிது நியாபகம் வருகிறது. இரண்டு அல்லது மூன்று முறை அப்பார்ட்மென்டில் பார்த்திருக்கிறேன். அவளும் என்னைப் பார்த்துச் சிரித்தாள். அனால் பக்கத்திலிருந்த Mr.Perfectஓ சிறிதும் என்னைக் கண்டுகொள்ளவில்லை.

‘மறுபடியும் என்ன இக்னோர் பன்றான்...’ என் தலையை சிலுப்பிக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். வீட்டில் என் அம்மாவின் ‘பக்கோடா’வில் அனைத்தையும் மறந்தேன் (
😂
😂
😂
நமக்கு சோறு தானே எல்லாம்!)

அன்று என் தோழிக்கு பிறந்தநாள். ட்ரீட்டுக்காக மால் போகலாம் என்று பிளான் போட்டோம்.ஒரு வழியாக அப்பா அம்மாவிடம் பெர்மிசன் வாங்கிவிட்டேன். (இதற்காக ஒரு வாரம் முழுக்க வீட்டுவேலைகளைச் செய்து என் அம்மாவிற்கு ‘ஐஸ்’ வைக்க வேண்டியதாயிற்று)

எனக்கு பிடித்த பேபி பிங்க் டூனிக் டாப் – ப்ளாக் ஜீன் அணிந்து கண்ணாடியில் என் பிம்பத்தைப் பார்த்தேன். ‘அவ்ளோ ஒன்னும் மோசமில்ல. என்ன கொஞ்சுன்டு குண்டு. மத்தபடி அழகா தான் இருக்க’ என்னையே ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு பாராட்டிக் கொண்டேன்.

“ஏன் டி அழகா தெரிய மாட்ட…. 1 மணி நேரமாச்சு நீ கண்ணாடி பாத்து மேக்-அப் போட ஆரம்பிச்சு…” – என் ஆருயிர் தோழி சாண்டி @ சந்தியா.

அப்பறம் அவளை எப்படியோ சமாளித்து அவளது டியோவை நான் ஓட்ட சம்மதிக்க வைத்து வெளியே வந்தேன்.

நான் டியோவை ஸ்டார்ட் செய்து அவளை உட்காரச் சொன்னால், அவள் என்னை கவனிக்காமல் பராக்கு பார்த்துக்கொண்டிருந்தாள். எங்கே பார்க்கிறாள் என்று என் பார்வையைத் திருப்பினால் அதிர்ச்சி. அங்கு Mr.Perfect ஸ்லீவ்லெஸ் ஷர்ட்டும் ஷார்ட்ஸும் அணிந்து அவனது ப்ளாக்கியுடன் (நாய்) விளையாடிக் கொண்டிருந்தான்.

‘இவனுக்கு வேற வேல இல்ல. இவ வந்திருக்குறப்போ தான் இப்படி வெளயாடனுமா? இவ சும்மாவே அவன பார்த்து ஜொள்ளு விடுவா… இப்போ இப்படி வேற டிரஸ் பண்ணிருக்கான்… என்ன ஆக போகுதோ?’ மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

“எங்க டி பராக்கு பாத்துட்டு இருக்க?” என்று அவளது மண்டையில் கொட்டினேன்.

“ஹான்… நம்ம சீனியர பாரேன். எவ்ளோ ஹேண்ட்சமா இருக்காருல. அவரு ஆர்ம்ஸ பாரேன்… சோ மேன்லி…”

அவள் வர்ணிக்க வர்ணிக்க எனக்கு புசுபுசுவென எரியத் தொடங்கியது.
‘இவ இப்போதைக்கு முடிக்கிற மாதிரி தெரியல…’

“ஹே சீக்கிரம் வண்டில உட்காரு டி” என்று அவளைத் திட்டிவிட்டு வண்டியை எடுத்தேன். பின்புற கண்ணாடி வழியாக அவனைப் பார்த்தேன். அவன் ப்ளாக்கியுடன் விளையாடியபடி சிரித்துக்கொண்டிருந்தான். ஒரு பெருமூச்சுடன் வண்டியைக் கிளப்பினேன்.

செல்லும் வழி முழுக்க அவனைப் பற்றி விசாரித்தப்படியே வந்தாள். ஆனால் நானோ என் வாயையே திறக்கவில்லை. பார்ட்டியில் எல்லாரும் கலகலப்பாக இருந்தாலும், என்னால் அவர்களின் கொண்டாட்டத்தில் ஈடுபட முடியவில்லை. உள்ளே ஏதோ ஒன்று தடம் மாறும் உணர்வு….

ஈர்ப்பு 3

“இங்க நீங்க அடிக்கடி வருவீங்களா?”

“ஆமா எனக்கு ரொம்ப பிடிச்ச இடங்கள்ல இதுவும் ஒன்னு… உனக்கு இங்க பிடிச்சுருக்கா?”

“சூப்பரா இருக்கு டார்ல்ஸ்… இங்க இது மாதிரி ஒரு இடம் இருக்குனு எனக்கு தெரியாது…” – ஆச்சரியத்துடன் நான்.

“ம்ம்ம் நான் இங்க நெறய தடவ வந்திருக்கேன். ஆனா இந்த தடவ வந்தது ரொம்ப ஸ்பெஷல்” என்று என்னைப் பார்த்து கண் அடித்தான்.
நான் அவனைப் பார்த்து உதட்டைச் சுழித்தேன்.

“இதுக்கு முன்னாடி எத்தன தடவ வந்திருந்தாலும் உன்னோடு இந்த ஸீனரி பாக்குறது தனி ஃபீல் தான்.” என்று தலை முடியைக் கோதிக் கொண்டான்.

எப்போதும் போல அவனின் அந்த ‘மேனரிஸத்தை’ ரசித்திருந்தேன்.
எனக்கு தெரிந்து இது போன்ற காட்சிகளை சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன். என் வாழ்வில் இது போன்ற ‘ரொமான்டிக்’ காட்சிகளை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் அருகில் நான் நானாகவே இல்லை. அவன் காதலில் அடிக்கடி நான் வானத்தில் பறப்பது போலவே உணர்கிறேன்… இல்லை அவன் உணர வைக்கிறான்.

ரொம்ப நேரம் நான் அவனை ‘சைட்’ அடித்துக்கொண்டிருந்ததால் அவன் கூறியதை கவனிக்கவில்லை. அவன் ஏதோ கேட்டிருக்க நான் அவனைப் பார்த்து முழித்துக்கொண்டிருந்தேன்.

அவன் என் எதிர்வினையைக் கண்டு, ”ஹம்ம்… ரொம்ப நேரமா யாரோ என்ன சைட் அடிக்குறாங்க போல. இப்போவே ரொம்ப பாக்காதமா. அப்பறம் உன் பார்வையாலேயே தேஞ்சுரப்போறேன்.”
வெட்கப்பூக்கள் என் முகத்தில்…

“என்ன கேட்டீங்க?” – என் குரலா இது என்று நானே சந்தேகப்படும் அளவிற்கு தேய்ந்து ஒலித்தது.

மீண்டும் லேசாக சிரித்துவிட்டு, “நான் ஃபீல் பண்ண மாதிரி உனக்கு எந்த ஃபீலிங்க்ஸும் இல்லையா?”

ஒரு பெருமூச்சுடன்… “உங்க கூட இருக்கிறது மட்டும் போதும். அது எந்த இடமானாலும் சரி…” என்று சொல்லப் போகும் சமயம் என் மேல் விழுந்தது சில தண்ணீர்த் துளிகள். (கொஞ்சம் ஃபீல் பண்ண விட மாட்டாங்களே
😏
😏
😏
)

என் அண்ணன் தான் என்னை எழுப்ப முயன்றுக்கொண்டிருந்தான்.

“ஏன்டா எரும என் மேல தண்ணிய தெளுச்ச… உன்னால நல்ல கனவு பாதிலேயே நின்னு போயிடுச்சு…” – கடைசி வரியை மட்டும் மெதுவாக முணுமுணுத்தேன்.

“என்ன டி ‘டா’ போட்டு கூப்பிடுற…”

“ஆமா டா அப்படி தான் டா கூப்பிடுவேன். எனக்கு ஒரு டவுட் டா… உனக்கு நான் டா போட்டு கூப்பிடுறது தான் இப்போ பிரச்சனையா? அப்போ எரும னு கூப்பிட்டா ஒன்னும் இல்லையா டா எரும அண்ணா…” என வேண்டுமென்றே அவனை வெறுப்பேத்தினேன்.

“அடிங்க… ஏதாவது ஹெல்ப் வேணும்னா மட்டும் அண்ணா அபி அண்ணானு வரது… மத்த நேரமெல்லாம் மரியாதைனா கிலோ என்ன விலைங்கிற மாதிரியே பேச வேண்டியது… இன்னோரு முறை அண்ணானு வருவேல அப்போ பாத்துக்குறேன்…”

அவனுக்கு நான் வக்கனை காட்டிக்கொண்டிருக்கும்போதே வெளியில் பேச்சு சத்தம் கேட்டது.

“யாரு டா அண்ணா வந்திருக்கா?”
“இது மாசத் தொடக்கமாச்சே… வேற யாரு வந்திருப்பாங்க…” சற்றே சலிப்புடன் கூறினான் என் அண்ணன் அபி @ அபிணவ்.

எனக்கு தெரிந்தது யார் வந்திருக்கிறார்கள் என்று. வந்திருப்பது என் அத்தை லேகா ரெங்கராஜன். என் அப்பாவின் கூடப் பிறந்த சகோதரி. சரியான ‘அல்டாப்பு’ பேர்வழி. எனக்கு சில சமயங்களில் இந்த சந்தேகம் வரும். இந்த அத்தையாலேயே மாமா ரெங்கராஜன் சீக்கிரமாக இறந்துவிட்டாரோ என்னவோ.

ஆம் என் பன்னிரெண்டாவது வயதிலேயே அவர் இறந்துவிட்டார். அன்றிலிருந்து இன்று வரை என் அப்பா தான் அத்தையைப் பார்த்துக்கொள்கிறார். ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் இங்கு வந்து ஆஜராகிவிடுவார். என அப்பா இருக்கும் போது ஒரு விதமாகவும் அவர் இல்லாத போது ஒரு விதமாகவும் நடந்து கொள்வார். அதனாலேயே அவர் இருக்கும் போது நானும் என் அண்ணனும் எங்கள் அறைகளுக்குள்ளேயே அடைந்து கொள்வோம்.

கடைசியில் அவரிடம் மாட்டிக்கொள்வதோ எங்கள் அம்மா தான். நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டோம், அத்தையைப் பற்றி அப்பாவிடம் கூறுமாறு. ஆனால் எங்கள் அம்மாவோ குடும்பமென்றால் அப்படி தான் இருக்கும் நாம் தான் அட்ஜஸ்ட் பண்ணி போக வேண்டும் என்று எங்கள் வாயை அடைத்துவிட்டார்.

“ஏன் டா அபி இந்த அத்தை என்னமோ ஹவுஸ் ஓனர் மாதிரி ஒவ்வொரு மாசமும் இங்க வந்து டேரா போட்டுடுறாங்க….”

“அவங்க மட்டும் வரல அவங்க கூட அவங்க பெத்த காட்டேரியும் வந்துருக்கு.”

“ஹாஹா” அவனது ‘காட்டேரி’ விளிப்பில் சிரித்துக்கொண்டிருந்தேன். அந்த காட்டேரி வேறு யாரும் இல்லை என் அத்தை மகள் – ஷீலா. அம்மாவிற்கு தப்பாத பிள்ளை. அவளை நான் பார்த்தே 8 வருடங்கள் இருக்கும். கடைசியாக அவள் அப்பா இறப்பிற்கு பின் ஒரு முறை இங்கு வந்தபோது பார்த்தது. அப்போது நடந்த சம்பவம் மறக்கமுடியாத காயத்தை என் மனதில் உருவாக்கியது.

அதுவரையிலும் என் அத்தை மீது பெரிதாக எந்த கோபமும் இல்லை. அப்போது நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். அன்று எங்களுக்கு பிரிவுபசார விழா. என் தோழிகள் எல்லாரும் சேலை கட்டிக்கொண்டு போகலாம் என்று முடிவு செய்திருந்தோம்.
நான் வழக்கம் போல என் அம்மாவின் கப்போர்டில் சேலையைத் தேடிக்கொண்டிருந்தேன்.

“அம்மா… அம்மா…” நான் கத்திக்கொண்டிருந்தேன்.

“எதுக்கு டி இப்படி கத்திட்டு இருக்க?”
“அம்மா இன்னிக்கு ஃபேர்வெல் பார்ட்டி இருக்கு. அதுக்கு போட ஒரு சேலை எடுத்து வை னு நேத்தே உங்ககிட்ட சொன்னேன்ல. சேலை எங்க?”

“அதுக்கா டி இப்படி கத்துன. தள்ளு நானே எடுத்து தரேன். அப்பாவும் பொண்ணும் காலங்கார்த்தலே என் உசுர வாங்க வேண்டியது.

“எங்க இதை உங்க புருஷன்கிட்ட சொல்லுங்க பாப்போம்.” என் அம்மாவைப் பார்த்து கண் அடித்தேன்.

“வாய் மட்டும் இல்லனா உன்ன நாய் தூக்கிட்டு போய்டும்” என்று என் தலையில் கொட்டிவிட்டு கையில் சேலையைக் கொடுத்தார்.

“அம்மா இது போன பர்த்டேக்கு நானும் அபி அண்ணாவும் உனக்கு எடுத்துக் கொடுத்த சேலை தான. இதை ஒரு தடவை கூட நீங்க கட்டவே இல்லல.”

“இதை எப்படி டி நான் கட்டுறது. ரொம்ப லேசா இருக்கு இந்த துணி. அதுவும் இல்லாம கருப்பு வேற. யாராவது பர்த்டேக்கு கருப்பு கலர்ல போடுவாங்களா?”

“ போ மா நீ வேற எப்போ பார்த்தாலும் மஞ்சள் செகப்பு னு கோவிலுக்கு போற மாதிரியே சேலையை எடுங்க. அப்போ உங்களுக்கு இந்த சேலை வேண்டாம்ல. நானே வச்சுக்குறேன்.” நாக்கைத் துருத்திக் காட்டி குளிக்கச் சென்றேன்.

ஒரு மணி நேரத்தில் ரெடியாகி கண்ணாடி முன் நின்று எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். ப்ளாக் ஸாரி ரெட் வெல்வெட் க்லோஸ்ட் நெக் ப்ளௌஸ் என் நிறத்தை சற்றே தூக்கிக் காட்டியது. காதிலே அதற்கான மேட்சிங் ஜிமிக்கி அணிந்து கொஞ்சமாக மேக்-அப் போட்டுக் கொண்டேன்.

என் அம்மா வந்து என்னைத் பார்த்து “இவ்ளோ நேரமா கிளம்புறதுக்கு. சீக்கிரமாக சாப்பிட்டு கிளம்பு.”

“நான் உன்னைவிட அழகுனு உனக்கு பொறாமை மா.”

“ஆமா நீ தான் அழகுனு சொல்லிக்கிட்டாங்க. கிளம்பு டி…”

“என்ன அம்மாவும் மகளும் கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க. அங்க என் அண்ணன் டிபனுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. சீக்கிறம் போங்க அண்ணி.”

என்னை ஒரு முறை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு,”என்ன இன்னிக்கு நீ சேலை கட்டிருக்க?” என்று கேட்டார். அவர் கண்களில் என்ன இருந்ததென்று அப்போது எனக்கு புரியவில்லை.

“இன்னிக்கு ஃபேர்வெல் பார்ட்டி அத்தை. அதனால தான் சேலை கட்டிருக்கேன்.”

“நல்லா தான் இருக்கு. ஆனா அதுக்கு உன் சேலைல நீ கட்டிருக்கணும். என் சேலைய எடுத்து கட்டிருக்க அதுவும் என் பெர்மிசன் இல்லாம. என்ன அண்ணி இதை தான் உங்க பொண்ணுக்கு சொல்லிக் குடுத்திங்களா?”

எனக்கு ஒரு நிமிடம் அங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
‘நான் எங்க அம்மாக்கு எடுத்து கொடுத்த சேலைய எதுக்கு அவங்க சேலைன்னு சொல்லுறாங்க?’ என் அம்மாவைத் திரும்பிப் பார்த்தால், அவர்களின் முகம் எந்த பாவனையையும் காட்டாமல் நிர்மலமாக இருந்தது. எனக்கு குழப்பமாக இருந்தது.

அப்போதும் என் அத்தை விடாமல் எதையெதையோ பேசிக்கொண்டிருந்தார். சத்தம் கேட்டு அங்கு வந்தார் என் அப்பா.
“காலைலேயே என்ன இங்க சத்தம்?” என்றார் கோபமாக.

அவர் வந்ததும் என் அத்தையின் குரல் அப்படியே மாறியது. அவரிடம் நான் கட்டியிருப்பது அவரின் சேலையென்றும் அதை அவர்களின் அனுமதி இல்லாமல் நான் கட்டியிருப்பதாகவும் கதை கட்டினார்.

“பாவம் அண்ணா பிள்ள தெரியாம எடுத்து கட்டியிருக்கும். அதான் அடுத்தவங்க பொருள அவங்க அனுமதி இல்லாம எடுக்கக் கூடாதுனு சொல்லிட்டு இருந்தேன். நீ ஒன்னும் அவள திட்டாத அண்ணா. ஆனா அண்ணி இதெல்லாம் சொல்லி வளர்த்துருக்கணும்.” என்று அப்பாவிடம் அம்மாவையும் குறை கூறினார்.

என் அப்பா என்னையும் அம்மாவையும் முறைத்தார். ஒரு வார்த்தை கூட எங்களை கேட்கவில்லை.

“அந்த சேலையை இப்போவே கழட்டிக்கொடுத்து அத்தைகிட்ட மன்னிப்பு கேளு.”

“அப்பா நான் சொல்றத…”

“உன்ன என்ன செய்ய சொன்னேனோ அத மட்டும் செய்.” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

பின்னாடியே அத்தையும், “என்ன அண்ணா பிள்ள பாவம் ஆசையா கட்டியிருக்குறத கழட்ட சொல்லுற…” என்று அவரின் நல்லவர் வேஷத்தை தொடர்ந்தார்.

அவர்கள் சென்றதும் நான் என் அம்மாவிடம் திரும்பினேன். அவரின் முகமே இது முதல் முறை நடப்பதல்ல என்பதை பறைசாற்றியது.

“அம்மா இது எவ்ளோ நாளா நடக்குது?”

“என்ன டி கேக்குற?” என் அம்மாவிடம் சிறிது தயக்கம் எட்டிப்பார்த்தது.

“நான் எதை கேக்குறேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். அத்தை ஏன் மா இப்படி இருக்காங்க? ச்சே இந்த அப்பாவும் இங்க நடந்தது என்ன னு தெரியாம அவங்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டு போறாரு.”

“விடு டி குடும்பத்துல இதெல்லாம் சகஜம். இந்த சேலை இல்லனா அம்மா வேற சேலை வாங்கித் தரேன்.”

“ப்ச்… சேலைக்காக நான் சொல்லல மா…” என்று நான் கூறிக் கொண்டிருக்கும்போதே என் அண்ணன் வந்தான்.

“என்ன ஆச்சு மா. ஏதாவது பெரிய பிரச்சன்னையா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல டா” என்று நடந்ததைக் கூறினார் என் அம்மா.

“ஓ அதான் அத்தையும் அந்த பீலா(ஷீலா)வும் சிரிச்சு பேசிட்டு இருந்தாங்களா?”

அவன் ஷீலாவை பீலா என்று சொல்லும்போதே லேசாக சிரிப்பு எட்டிப் பார்த்தது.
மேலும் அவன் விடாது சிரிக்கவும், என் அம்மா ,”எதுக்கு டா இப்படி சிரிக்கிற?” எனக் கேட்டதும், “அத்தை அந்த சேலையைக் கட்டினா எப்படி இருக்கும்னு நெனச்சுப் பார்த்தேன். அதான் சிரிப்பு வந்துருச்சு…” எனக் கூறி மேலும் சிரித்தான்.
அதை நினைத்து பார்த்த போது எங்களாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

அவன் என் தலையைக் தட்டி, ”இப்படி சிரிச்சுட்டே போய் டிரஸ் மாத்திட்டு வா. நான் உன்னை ஸ்கூல்ல விடுறேன்” எனக் கூறினான்.

நானும் சிரித்துவிட்டு உடை மாற்ற சென்றேன். கடைசியில் நான் அன்று சேலையே வேண்டாம் என்று முடிவு செய்து ப்ளாக் வித் ரெட் கலர் சுடிதார் தான் அணிந்து சென்றேன்.

நான் வீட்டை விட்டு கிளம்பும்போது என் அத்தையும் ஷீலாவும் ஒரு வெற்றிப் பார்வை வீசினர். நான் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சென்று விட்டேன். அது தான் ஷீலாவை நான் கடைசியாகப் பார்த்தது. இப்போது தாயும் மகளும் கூட்டணி போட்டு எதற்காக வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை….

ஈர்ப்பான்(ள்)…
 
Top Bottom