Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

Thank you so much sis ❤️. For the golden opportunity.
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
கதாநாயகி தன் லட்சியத்துக்காக போராடுகிறாள். அவளது குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு இழப்பே, அவளை போராட செய்ய… அவளது குடும்ப சூழ்நிலையும், அந்த நிகழ்வுமே அவளது லட்சியமான மருத்துவம் படிப்பதற்கு தடையாகவும் இருக்கிறது. ஒரே நிகழ்வு பெற்றோருக்கும், மகளுக்கும் இருவித உணர்வை தோற்றுவிக்கிறது. ஒரு வழியாக லட்சியத்தை நோக்கி அவள் பயணிக்க… காதல் அவளோடு பயணிக்கிறது. அந்த பயணத்தில் பல தடைகள். அந்த தடைகளைத் தாண்டி அவளின் காதல் பயணம் வெற்றி பெற்றதா என்பதை அறிய… " உயிரிலே தளும்பும் உன் நினைவுகள்." கதையை படிக்க வாருங்கள் தோழமைகளே… ஜூன் மாதத்தில் வருகிறேன் ஃப்ரெண்ட்ஸ்… அது வரை ஒரு சின்ன டீசர்.
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
டீசர்.

" உன்ன விட்டுட்டு என்னால இருக்க முடியாது. உன்ன விட்டுட்டு என்னால இருக்க முடியாது." என்று புலம்ப.

சுந்தரி புலம்புவதைக் கேட்ட ராதிகா, காதை இறுகப் பொத்திக் கொண்டாள்‌‌…….

'இதே நிலை தொடர்ந்தால், மூச்சு முட்டி கொஞ்ச நாளில் பைத்தியமாகி விடுவோம். ' என்று எண்ணியவள் வாயை விட்டிருந்தாள்.

" ஐயோ! மா… நிறுத்துங்க… இங்கேயே இருந்தேன்னா, பைத்தியம் பிடிச்சு கடைசியா தற்கொலை தான் பண்ணிக்கப் போறேன்." என்று கத்தினாள் ராதிகா…………..


பிறந்ததிலிருந்து எல்லோரும் அவளை தாங்கு தாங்கென்று தாங்கியது என்ன? இன்றைக்கு இவ்வளவு கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறாளே… அவளது கண்ணீரை நிறுத்த முடியாத தங்களோட நிலைமையை எண்ணி, கலங்கியவள், கணவரைப் பார்த்தாள்……….


ராதிகாவோ பசி தாங்க மாட்டாள். ' காலையில் ரிசல்ட் பரபரப்பில் ஒழுங்காக சாப்பிட்டவில்லையே.' என பரிதவித்தவர் தட்டில் சூடான காளான் பிரியாணி, ரைத்தாவை எடுத்து வைத்தவளின் கால்கள், மகளது அறைக்கு விரைந்தது…………..

அது தான் சுந்தரி. கோபமோ, தாபமோ எதுவாக இருந்தாலும் ஐந்து நிமிடம் தான். அதற்கு மேல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டாள். அவர் மட்டுமல்ல நாட்டில் தொண்ணூறு சதவீத அம்மாக்கள் அப்படித் தான்…......
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 1

அன்று...

" துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்" என்ற கந்த சஷ்டி கவசம் வழக்கம் போல டிவியில் ஒலித்துக் கொண்டிருந்தது…

மயில் வண்ண குர்தியில், தோகையென தலைமுடி விரிந்திருக்க… தனது அறையிலிருந்து வெளியே வந்தாள் ராதிகா. மெல்லிய உடல்வாகு. மாநிறம். களையான முகம். ஆனால் சிரிப்பைத் தொலைத்திருந்தது.

ஹாலில் யாருமில்லாமல் இருக்க, 'டெய்லி டிவியை ஓடவிட்டு கந்தசஷ்டி கவசம் கேட்க வேண்டியது. அட்லீஸ்ட் தைரியமா இருக்காங்களா? அதுவும் கிடையாது.' என்று தனக்குள் அலுத்துக் கொண்டவள், ரிமோட்டை எடுத்து சவுண்டை குறைத்து விட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.

" மா… நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்." ராதிகா கூற.

மும்முரமாக சமையல் செய்துக் கொண்டிருந்த சுந்தரியோ, அடுப்பை அணைத்து விட்டு புன்னகையுடன் மகளிடம் திரும்பினாள். " குளிச்சிட்டியா அம்மு." என்றவள், தலையிலிருந்து நீர் சொட்டுவதை கவனித்து விட்டாள்.

" அம்மு… இங்கப்பாரு… ஒழுங்கா தலை துவட்டலைப் போல… இப்படி உட்காரு." என டைனிங் டேபிள் சேரில் அமர வைத்து விட்டு பரபரப்பாக அவளது அறைக்குச் சென்றவர், டவலை எடுத்து கொண்டு விரைந்து வந்தார்.

தனது அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்த ராதிகா, அடுத்து என்ன நடக்கும் என்பதையும் யூகித்திருந்தாள். எல்லாம் வழமையான விஷயம் தான். தன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கும் நிலையை அறவே வெறுத்தவள், முகமெல்லாம் இறுக அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

வேகமாக வந்த சுந்தரியோ, மென்மையாக அவளது தலையை துவட்டியபடியே, " அம்மு… கோவிலுக்கு போகணும்ன்னா முன்னாடியே சொல்லலாம்லடா. அம்மா சீக்கிரமே எழுந்துருச்சு கிளம்பியிருப்பேனே. இப்போ வரலாம்ன்னா இன்னும் டிஃபன் செய்யலை.

நீ ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுடா… நான் அப்பாவை எழுப்பி கூட்டிட்டு வரேன்." என்றவர் அவர்களது அறைக்குச் செல்ல முயல.

" வேணாம் மா பக்கத்தில் உள்ள கோயில் தானே. நான் போய்க்கிறேன்."

" சொல்றதை கேளுடா அம்மு. தனியாக எல்லாம் போக வேண்டாம்." என்றவர், "ஆமாம் எந்த கோயிலுக்கு போகப்போற?" என அடுத்த கேள்வியை கேட்டார்.

தான் பதில் சொன்னால் அடுத்து என்ன வரும் என்பதை அறிந்துக் கொண்டவள், மெதுவான குரலில், "பெரிய கோவிலுக்கு தான் மா." என்றாள் ராதிகா.

" அங்க வேண்டாம்டா. நீ அப்பாவோட மாரியம்மன் கோவிலுக்கு வேணும்னா போயிட்டு வா. அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன். " என்று வழக்கம் போல தடுக்க…

ஒரு விருப்பப்பட்ட கோவிலுக்கு போவதற்கு கூட தடை. அதுவும் அன்பாலே அடக்கப்பட்டு வருகிறாள்.

எப்பொழுதும் சரி, சரி என்று தன் அம்மாவின் போக்குக்கே போய் விடுவாள் ராதிகா. ஏனோ இன்று மனது அலைபாய பெரியகோயிலில் உள்ள பிரகதீஸ்வரரை தரிசித்தால் தான் மனம் அமைதியடையும் என தோன்றியது. அதை சுந்தரி தடை செய்யவும், அத்திபூத்தாற் போல கோபம் வர, "நான் எங்கேயும் போகல." என்று விட்டு தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு கண்கள் கலங்க சென்ற மகளைப் பார்த்த சுந்தரியின் கண்களும் கண்ணீரைப் பொழிந்தது.

" சுந்தரி… " என்ற கணவனின் குரலில், கிச்சனிலிருந்து வெளியே வந்தவள், "கூப்பிட்டிங்களா ராதுப்பா." என்றாள்.

கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு வந்த மனைவியின் முகத்தைப் பார்த்தே ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவர்," ஏன் என்னாச்சு சுந்தரி."

" அது ராதுப்பா…" என்று தயங்கியவள், பிறகு சற்று முன் நடந்ததைக் கூற.

" சுந்தரி… பிள்ளை ஆசைப்படுற மாதிரியே செய்ய விடு. இன்னைக்கு அவளுக்கு ரிசல்ட் வருது. அதற்காக கோவிலுக்கு போகணும் என்று ஆசைப்பட்டிருக்கும். நீ ஏன் காலையிலே மூட் அவுட் செய்யுற? நான் க்ரவுண்டுக்கு வாக்கிங் போகலை. பாப்பாக் கூடப் போறேன். பாப்பா சாமி கும்பிட்டு வரும் வரை, பக்கத்து பார்க்குல வாக்கிங் போறேன். அவளைத் தனியா அனுப்பலை போதுமா… நீ கவலைப்படாமல் போய் பாப்பாவை கூட்டிட்டு வா. நாங்க கிளம்புறோம்." என்றவர் முடிவாகக் கூறி விட, ஒன்றும் கூற முடியாமல் தனக்குள் புலம்பிக் கொண்டே ராதிகாவை அழைக்கச் சென்றார்.

" அம்மு… " என்ற குரலில் ஜன்னல் வழியே தோட்டத்தை வேடிக்கைப் பார்த்தவள் திரும்பினாள்.

" அப்பா வரேன் என்று சொன்னாரு. அவரோடப் போயிட்டு வந்துடு. சாயந்திரம் என்னோட திருப்திக்கு மாரியம்மன் கோவிலுக்குப் போயிட்டு வந்துடலாம்." என.

"சரி மா." என்றவள், வேகமாக ஷாலை எடுத்துப் போட்டு கொண்டு வெளியேறினாள். எங்கே இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் அம்மா தடுத்தாலும் தடுத்து விடுவார்கள் என்று எண்ணினாள். அது உண்மையும் கூட… பேசிப் பேசியே ஒரு வழியாக்கி விடுவாள் சுந்தரி.

அவர்கள் வீட்டிலிருந்து பத்து நிமிட நடை தான், உலகமே வியந்து போற்றும் தஞ்சை பெரிய கோவில்.

அதற்கு போவதற்குத் இந்த அக்கப்போர்.
குழப்பத்துடன் வரும் மகளை வாஞ்சையாகப் பார்த்த சண்முகம், " ஏன் டா? அம்மா சொன்னதையே நினைச்சுட்டு இருக்கீயா? அவ உன் நல்லதுக்கு தான் சொல்றா. அங்கே நீ போனால் வேண்டாத நினைவுகள் வரும். அது உனக்கு மன வருத்தத்தைத் தரும். அதுவும் இல்லாமல் அவளுக்கு சில சென்டிமெண்ட் அந்த கோயிலுக்கு போவதற்கு, அதற்காக தான் சொல்கிறாள்."

" அப்பா… எதுப்பா வேண்டாத நினைவுகள்." என கண் கலங்க கூற.

"அப்படி சொல்லல டா. மனசுக்கு சங்கடம் தருவதை, மறக்கிறது தானே நல்லது."

" அதை விடுங்கப்பா. அதை பத்திப் பேசினால் நமக்குள்ள வாக்குவாதம் தான் வரும். அதுவுமில்லாமல் ஒரு சில விஷயங்களை நான் மறக்க நினைத்தாலும் நீங்களும், அம்மாவுமே மறக்காமல் நினைவுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறீங்க. அதற்காக பயந்துகிட்டு நான் கோயிலுக்கு போகாமல் என்னால இருக்க முடியாது.

அந்த கோயிலை பார்க்கும் போது, எனக்குள் தோன்றும் உத்வேகம், உங்கக் கிட்ட சொன்னாலும் உங்களுக்கு புரியாது.

ஒவ்வொரு முறை போனாலும் நானே அந்தக் கோவிலை கட்டிய மாதிரி பெருமைப்படுகிறேன். ஆனால் நீங்க இப்படி பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு. என்ன படிச்சி இருந்தாலும், நீங்களும் அம்மா மாதிரியே ஒரு வட்டத்துக்குள்ளே இருக்கீங்க." என்றவள் தனது தந்தையைப் பார்த்து முறைக்க.

" அதே தான் மா நானும் சொல்றேன்.எவ்வளவு படிச்சிருந்தாலும், புள்ளைங்க என்று வரும் போது, சென்டிமெண்டலா தான் யோசிப்போம். அது உனக்கு புரியாது. சரி மா… நேராமாயிடுச்சு நீ போய் சாமி கும்பிட்டு வா… நானும் பார்க்குக்கு போறேன்."

" சரிப்பா. நீங்க எதையும் நினைச்சுட்டு இருக்காதீங்க பா. அங்கே போய் வேடிக்கைப் பார்க்காமல், நடங்க. நான் வர வரைக்கும் நீங்க நடந்துட்டு தான் இருக்கணும். உங்க சுகர் லெவல் வேற அதிகமா இருக்கு." என்று தன் தந்தையிடம் கண்டிப்புடன் கூறியவள், இவ்வளவு நேரம் இருந்த சுணக்கம்,எரிச்சல் எல்லாம் மறந்து உற்சாகமாக கோயிலுக்குள் நுழைந்தாள்.

எப்போதும் போல அந்த கம்பீரமான விமானத்தை பார்த்தவள் வழக்கம் போல இராஜராஜ சோழரை எண்ணி பெருமிதம் கொண்டாள். எந்த வசதியும் இல்லாத அந்த காலத்தில் எப்படி இவ்வளவு பெரிய கோவிலைக் கட்டினார். எத்தனையோ போர்களையும், இயற்கை பேரழிவையும் கடந்து இன்றளவும் கம்பீரமாக வீற்றிருந்து அவரது பெருமையை உலகுக்கு பறைசாற்றிக் கொண்டு இருப்பதை பெருமையுடன் எண்ணிக் கொண்டிருந்தாள்.

பிறகு வந்த வேலையைப் பார்ப்போம் என்று நினைத்து கோவிலை வலம் வந்தாள்.

பிரகதீஸ்வரரை கண்மூடி வணங்கியவள், ' இறைவா! எனது விருப்பத்தை நிறைவேற்று. நான் ஆசைப்படுவது எல்லாமே நிறைவேற்றும் என் பெற்றோர், இதற்கு தடை தான் கூறுவார்கள் என்று நன்கு தெரியும் . அவர்களை எதிர்த்து போராடுவதற்கு, எனக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கொடு கடவுளே! ' என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்.

ஒருவழியாக கோயிலை வலம் வரலாம் என்று எண்ணியவள், பிரகாரத்தை வலம் வர… இடப்புறம் உள்ள ஓர் இடத்தைப் பார்க்கவும், மனம் துடிக்க ஆரம்பித்தது. பழைய நினைவுகளெல்லாம் மனதில் முட்டி மோதியது. அந்தப் பக்கமே பார்க்காமல் வேகமாக வெளியே வந்து விட்டாள்.

நான்கு வருடங்களுக்கு முன்பெல்லாம் அந்த இடத்தைப் பார்ப்பதற்காகவே தினமும் வருவாள். அந்த இடம் இருப்பதே பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.

'அந்த பகுதியில் தான் சோழர்களின் பொக்கிஷம் இருக்கிறது. அது தான் ஓவியம். காலத்தால் அழியாத ஓவியம் இருக்கிறது. இரு சுவர்களுக்கு இடையே வரைந்து வைத்திருந்த ஓவியத்தை தனியாக எடுத்து வைத்து பாதுகாத்து வருகின்றனர். கோவில் பற்றிய முக்கிய தகவல்களும் அங்கிருக்கிறது. சோழர்களைப் பற்றி அறிய வேண்டும் என்றால் மணிமண்டபத்தில் அவர்களைப் பற்றிய தகவல்கள் இருக்கிறது. ராஜராஜரை பற்றி தெரிந்துக் கொள்ள, இந்தக் கோவிலில் உள்ள கலைக் கூடமே போதும்.

முதல் தடவை இங்கு வந்தப் போது, அவ்வளவு பிரமிப்பு! அங்கு காவலுக்கு இருந்தவர்கள், இவளுடைய ஆர்வத்தைப் பார்த்து, அவர்களுக்குத் தெரிந்த தகவல்களை கூறினர். அதெல்லாம் அழகிய பொற்காலம். அதோடு சேர்ந்த பழைய நினைவுகள் இவளது மனதை வருத்தச் செய்யும். அதனாலே இப்போதெல்லாம் அங்கு செல்வதில்லை.' அந்த இடத்தைக் கடந்தவள் தந்தைக்கு ஃபோன் செய்து கோவிலுக்கு வெளியே காத்திருப்பதாக சொல்லி விட்டு தனக்குள் யோசனையில் ஆழ்ந்தாள். எப்படி இவர்கள் இருவரையும் கன்வின்ஸ் செய்வது என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

அங்கு வந்த சண்முகம் தன் மகளின் முகத்தில் கவலை தெரிகிறதா எனப் பார்க்க … அங்கு குழப்பம் இருப்பதை பார்த்து அவருக்கு ஆச்சரியம்.

" ஏன் பாப்பா? ரிசல்ட்ட நினைத்து பயமா இருக்கா? என்ன படிக்கிறது என்று குழப்பமா இருக்கா? மார்க் எவ்வளவு இருந்தாலும் பரவால்ல டா. நீ ஆசைப்பட்டதை அப்பா படிக்க வைக்குறேன். நீ கவலைப்படாதே."

"அப்பா… பேச்சு மாற மாட்டீங்கள்ல. ப்ராமிஸா? " என்று அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ராதிகா வாக்குறுதி கேட்க.

" உன் விருப்பப்படி தான் படிக்க வைப்பேன் டா." என.

உற்சாகமாக தந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு வீடு திரும்பினாள் ராதிகா.

*********************
சென்னையின் விஜபிகள் வசிக்கும் பகுதியான போயஸ்கார்டனில் உள்ள ஒரு மாளிகையில் ஒரே களேபரமாக இருந்தது.

அந்த வீட்டின் இளவரசி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க… அவளைச் சுற்றி எல்லோரும் அமர்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அந்த வீட்டின் ஆணிவேரான ருக்குமணியின் மடியில், அவரது பேத்தி கவுந்தடிச்சிக் கொண்டு அழுக… அருகில் அவளது மாமனும், பிரபல மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான சுகம் மருத்துவமனையின் சேர்மன் மற்றும் சிறந்த இதய நிபுணரான கிருஷ்ணமூர்த்தி சமாதானம் செய்துக் கொண்டிருந்தார். " அழாத அனு… உன்னை நீ ஆசைப்பட்ட மாதிரி டாக்டர் ஆக்குவது என் பொறுப்பு. மாமா இருக்கேன்ல நீ ஏன் கவலைப்படுற." என.

" ஆமாம் டா... தங்கம்... முதல்ல கண்ணைத் துடை. வந்து ஒரு வாய் சாப்பிடு. இவ்வளவு நாள் ப்ளஸ் டூ படிக்கிறேன் என்று உடம்பை கவனிக்காமல் இருந்த… அப்புறம் ரிசல்ட் நினைச்சு கவலைப்பட்டுட்டு இருந்த. இனியாவது எதையும் நினைச்சு கவலைப்படாமல் சாப்பிடு. மாமி உனக்கு ஊட்டி விடுறேன் வாடா." எனக் கொஞ்சிக்கொண்டிருந்தாள் இதயமருத்துவரின் சகதர்மினி ரஞ்சிதம்.

அந்த பூவைப் போல மென்மையானவர். குடும்பத்தலைவி. படித்தது பி.ஏ. வீட்டை நிர்வாகம் செய்கிறார். அது தான் அவரது உலகம்.

அதுவரை காஃபிக் குடித்துக் கொண்டே இவர்கள் செய்யும் அலட்டலைப் பார்த்தவன், இதற்கு மேல் முடியாது என்று பொங்கி எழுந்தவன், தன் அத்தை கௌரியைப் பார்க்க.

அவரோ மகளின் அழுகையில் கலங்கிப் போய் அமர்ந்து இருந்தார்.

அத்தையைப் பார்த்தவன் கண்களாலே,"நான் பார்த்துக் கொள்கிறேன்." என்றவன், அனுவின் அருகில் சென்றான்.

" ஏய் அனு… முதல்ல ஒழுங்கா எழுந்துரு. நாம என்ன எழுதுறோமோ, அதற்கு உண்டான மார்க் தான் வரும். எதுக்கு இப்போ சீன் போட்டுட்டு இருக்க. உன்னோட நைன் ஹன்டெடுக்கெல்லாம் டாக்டர் சீட்டெல்லாம் கிடைக்காது. நீ வேறு ஏதாவது கோர்ஸ் எடு." என்றான் விஸ்வரூபன்.

அவன் சொல்லி முடித்த அடுத்த நொடியே அவர்களின் பாட்டி, " ஏன் பா ராசா. நம்ம ஹாஸ்பிடல்ல உங்க அத்தைக்கும் பங்கு உண்டு. அவளுக்குப் பிறகு இவள் தானே பார்த்துக்கணும். அப்புறம் ஏன் டாக்டருக்குப் படிக்க வேண்டாம் என்று சொல்லுற. பணம் கட்டி சீட்டு ஏற்பாடு பண்ணு." என.

" பாட்டி… அவளுக்கு அந்த அக்கறை இருந்திருந்தா, ஒழுங்கா படிச்சிருப்பா. அவளுக்கே இன்ட்ரெஸ்ட் இல்லை. விடுங்க பாட்டி. வேண்டும்ன்னா ஒரு டாக்டர் மாப்பிள்ளை பார்த்துடுவோம்."
என்று விஷம புன்னகையை முகத்தில் படர விட்டுக் கொண்டே அனன்யாவை பார்த்துக் கூறினான் விஸ்வரூபன்.

அதுவரை அழுதுக் கொண்டிருந்தவள், வேகமாக எழுந்து வந்து விஸ்வரூபனின் தோளில் சாய்ந்துக் கொண்டு, " ஏன் மாமா? நீங்களே என்னைக் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று பார்க்குறீங்களா? எனக்கு ஓகே தான்." என்று அவனைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே கூற...

அவள் காதைப் பிடித்து திருகிய விஸ்வரூபன்," உன்னை மாதிரி வாயாடிப் பொண்ணு எல்லாம் எனக்கு வேண்டாம். என் கண் பார்த்து நடக்குற பொண்ணு தான் வேணும். அப்புறம் என் மனசுல உள்ளதை நான் சொல்லாமலே அவ புரிஞ்சிக்கணும். அவளை நான் அதே மாதிரி புரிஞ்சிக்கணும்." என்று கருவிழிகள் கனவில் மிதக்க கூற.

" ஹலோ மாம்ஸ். கனவுல இருந்து ரியாலிட்டிக்கு வாங்க… இப்போ உள்ள பொண்ணுங்க எல்லாம் அப்படிக் கிடையாது. உங்களை விட நாங்க அதிக எக்ஸ்ஸெப்படேஷன் வச்சுருக்கோம். தென் இந்த நாளை உங்க டைரில குறிச்சு வச்சுக்கோங்க. ச்சோ.. டைரி எழுதுற பழக்கம் உங்களுக்கு கிடையாதுல. உங்க ஐபோன் நோட் பேட்ல குறிச்சு வச்சுக்கோங்க. ஒன்னு என்னையே கெஞ்சி கல்யாணம் பண்ணீப்பிங்க. இல்லை என்னை விட பெரிய வாயாடியை கல்யாணம் பண்ணீப்பிங்க. " எனக் கூறியவள், கலகலவென நகைக்க. இவ்வளவு நேரம் இருந்த நிலை மாறி, அந்த இடமே கலகலப்பானது.

அங்கே தேவதைகளோ, இருவர் பேசும் போதும் ததாஸ்து ! எனக் கூறியதை அறியாமல் அவர்கள் இருவரும் ஒருவரை, ஒருவர் வம்பிழுத்துக் கொண்டிருந்தனர்.


இன்று...

" மா… கோவிலுக்கு போய்ட்டு வரேன்." ராதிகா கூற…

தன் மகளை நிமிர்ந்து பெருமிதம் பொங்க பார்த்தவள், " ஏன்டா… ஏதாவது குழப்பமா? திடீரென்று கோவிலுக்கு போறேன் என்று சொல்லுற? அப்பாவை வேணும்னா எழுப்பவா?" என.

" ஐயோ! மா… அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். அவருக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை. ரெஸ்ட் எடுக்கட்டும். நான் போயிட்டு வந்துடுறேன். ஆனாலும் மா நீங்க மாறவே இல்லை." என்றவள் லேசாக சிரித்தாள்.

" ஆனால் நீ மாறிட்டே…"

"அதெல்லாம் இல்லை மா… நான் எங்கே மாறினேன். அதே ராதிகா தான். "

" சரி… சரி... சீக்கிரம் கோவிலுக்கு போயிட்டு வா. உங்க அப்பா சாப்பிடாமல் உனக்காக வெயிட் பண்ணுவார். அப்புறம் ஹாஸ்பிடலுக்கு லேட்டாயிடுச்சின்னு நீயும் அவசரமா கிளம்புவ…" என.

" சீக்கிரம் வந்துடுவேன்." என்று கூறியவள் கிளம்பியிருந்தாள். மனதிற்குள்ளோ, ' ஐந்தரை வருடம் பிரிவு அம்மாவை மாற்றியிருக்கிறது. எதற்கெடுத்தாலும் பயப்படும் சுபாவம் மாறியிருக்கிறது. அப்போது வெளிநாட்டுக்கு அனுப்ப மாட்டேன்னு பிடிவாதமா இருந்தவங்க, இப்போ சென்னைக்கு நீ வேணும்னா போ. நாங்க இங்கே இருக்கிறோம் என்று சொல்றாங்க.' என்று நினைத்தவளின் முகத்தில் புன்னகை எட்டி பார்த்தது.

கோவிலுக்கு செல்லும் மகளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா.

காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. என்னமோ இப்போ தான் டூவெல்த் ரிசல்டுக்காக படபடப்புடன் கோவிலுக்கு அவள் போன மாதிரி இருக்கிறது. அதற்குள் எட்டு வருடம் முடிந்து விட்டது.

அந்த டீன் ஏஜ் ராதிகா இப்போ இல்லை. மெச்சூர்டான டாக்டர். கல்யாணம் பண்ணிக்க சொன்னால் மாட்டேன் என்று சொல்லிட்டு இருக்கா… கார்டியாலஜிஸ்ட் ஆகணும் ஆசை. அதற்கான எக்ஸாம் எழுதி விட்டு ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்.

இரண்டு வருடமாக ஒரு பெரிய ஹாஸ்பிடலில் டாக்டராக ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருக்கா… அதோட மேற்படிப்புகான என்ட்ரன்ஸ்க்கும் தயாராகி, ஒரு வழியாக எக்ஸாம் எழுதி விட்டாள். அவளுக்கு எப்படியும் சீட் கிடைத்து விடும். அப்புறம் இந்த தஞ்சாவூரை காலி செய்து விட்டு கிளம்ப வேண்டும் என்று நினைத்தவர் பெருமூச்சு விட்டுக் கொண்டே வேலைகளை கவனிக்க சென்றார்.

ராதிகா வழக்கம் போல பிரகதீஸ்வரை தரிசனம் செய்து விட்டு சுற்று பிரகாரத்தில் அமர்ந்தாள். அவளது மனமோ நிலையில்லாமல் தவித்தது.

எப்படியும் ரிசல்ட் வந்ததும், சென்னைக்கு ஷிப்ட் ஆகிடுவோம். இங்கு அடிக்கடி வர முடியாது. அதனால் தான் மனம் அலைப்பாய்கிறதோ என்று எண்ணினாள்.

சிந்தனைகள் தறிக்கெட்டு எங்கெங்கோ ஓடியது. இனி வேலைக்காவது கிளம்புவோம் என்று நினைத்தவள், அனிச்சை செயலாக மீண்டும் ஒரு முறை கருவறையை பார்த்தாள்.

அவள் நின்றிருந்த இடத்திலிருந்து பிரகதீஸ்வரை பார்த்தால் தெரியாது. இருந்தாலும் பார்வையை அவ்விடத்தில் செலுத்தி ஒரு கும்பிடு போட்டுக் கிளம்ப எத்தனித்தாள்.

அங்கோ சாமியை தரிசனம் செய்து விட்டு, கீழே இறங்குவதற்காக படிக்கு அருகே வந்து நின்றிருந்த இருவரையும் பார்த்தவளின் உள்ளம் படபடவென அடித்துக் கொண்டது.

முகமெல்லாம் வியர்த்து, இதயம் துடித்தது.

இனி யாரை அவளுடைய வாழ்க்கையில் எப்போதும் பார்க்கக்கூடாது என்று எண்ணியிருந்தாளோ, அவர்களே அவளின் கண் முன்னே வர… உலகமே தட்டாமாலையாக சுற்ற… கோவில் சுவரைப் பற்றி தன்னை சமாளித்துக் கொண்டாள்.

அவர்கள் பார்ப்பதற்கு முன்பு கிளம்பி விட வேண்டும் என்று எண்ணியவள், மீண்டும் ஒரு முறை அங்கு பார்வையை செலுத்தினாள்.

அங்கு அந்த நெடியவன், அவளுக்கு நெற்றியில் விபூதியைப் பூசி கண்ணை மூடி ஊதிக் கொண்டிருந்தான்.

மீண்டும் இருவரையும் கண்களில் நிரப்பிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

ஆனால் விதி அவளை அப்படி போக விடல்லை. அவள் இரண்டு எட்டு எடுத்து வைக்கும் முன்னே, யார் கண்ணில் படாமல் சீக்கிரம் சென்று விட வேண்டும் என்று எண்ணினாளோ, அவர்கள் பார்வையில் பட்டு விட்டாள்.

மேலிருந்து கீழே வேகமாக இறங்கிக் கொண்டே அந்தப் பெண், "ராது..." என அழுகையுடன் கூடிய குரலில் கத்தினாள்.

அந்தக் குரல், இன்னும் வேகமாக அவ்விடத்தை விட்டு வெளியேற சொல்லியது.

" ஏய் பார்த்து அனு மா." என்ற குரலில் திரும்பிப் பார்க்க…

தடுமாறி கீழே விழ இருந்தவளை தாங்கி அணைத்து நின்றான் அவன்.

அவர்களை ஏக்கமாக பார்த்தவள், அங்கிருந்து மறைந்தாள்.

ஏக்கத்துடன் செல்லும் ராதிகாவை, வலி நிறைந்த விழிகளால் நிரப்பிக் கொண்டான் விஸ்வரூபன்.

தொடரும்...
 
Last edited:

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 2

அன்று…

அனன்யாவின் கேலியில், எல்லோரும் நகைக்க… விஸ்வரூபனும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருக்க…

" டேய் விஸ்வா… என்ன நெனச்சிட்டு இருக்க? நான் என் பேத்தியோட எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டுட்டு இருக்கேன். நீ என்னடான்னா அவளை கிண்டல் பண்ணிட்டு இருக்க." என்ற ருக்குமணி விஸ்வரூபனைப் பார்த்து முறைத்தார்.

" ஐ நோ பாட்டி. எனக்கு எதுக்கு தாத்தா பேரை வச்சீங்கன்னு இப்போ நல்லாவே புரியுது." என்று அழுத்திக் கூறிய விஸ்வரூபன், தன் பாட்டியைப் பார்த்து கிண்டலாக சிரித்தான்.

" டேய் படவா‌… எங்களோட ஒரே பேரன் நீ. உனக்கு அந்த பேரை வைக்காமல் அடுத்த வீட்டுக்காரனுக்காக வைக்க முடியும்." என அவரும், அவனுக்கு சரி சமமாக கிண்டலில் இறங்க.

"எனக்கு அதெல்லாம் தெரியாது பாட்டி. உங்களுக்கு கோபம் வரும் போது தாத்தாவை திட்ட முடியாததற்காகத் தான் எனக்கு அவர் பேரை வச்சு, நல்லா திட்டிட்டு இருக்கீங்க. எங்க தாத்தா மட்டும் இருந்திருந்தா பாவம் உங்க கிட்ட மாட்டிகிட்டு முழிச்சிட்டு இருந்திருப்பார்."

" டேய் என் புருஷனை திட்டணும்னா நான் நேராகவே திட்டிட்டுவேன். அதுக்காக எல்லாம் உனக்கு அந்த பேரை வைக்கலை. அவர மாதிரி பேரும்,புகழும் வாங்கணும்னு அந்த பெயரை வச்சேன். நீ என்னனா என்னையே கிண்டல் பண்ணுற. ம்… எல்லாம் அந்த மனுசன சொல்லணும். என்னை இப்படி விட்டுட்டு போயிட்டாரு. போகும் போது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கக் கூடாதா? என் மேல அன்பு இருந்தா இப்படியா என்னை விட்டுட்டுப் போயிருப்பார்." என்று புலம்ப.

" ஏன்? அங்கேயும் அவர் நிம்மதியாக இருக்க கூடாதா பாட்டி."

" டேய்… என்னால உன்னை அடிக்க கூட ஓடி வர முடியாது." என்று பாட்டி புலம்ப.

அவன் அருகில் நின்று கொண்டிருந்த அனன்யா, " நான் இருக்கேன் பாட்டி‌. நீங்க ஏன் கவலைப்படுறீங்க. உங்களுக்கு பதிலாக மாம்ஸை நான் அடிக்கிறேன்." , என்றவள் விஸ்வரூபனை பிடிக்க.

"ஏய் அந்துருண்டை ஒழுங்கா ஓடிப் போயிடு.", என அவளை விரட்டினான் விஸ்வரூபன்.

அவர்கள் செய்யும் கலாட்டாவை பார்த்து
ரசித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணமூர்த்தி.

தன் மாமியாரைப் பார்த்த ரஞ்சிதம், அவர் கவலையில் இருப்பதை உணர்ந்து, தன் கணவரிடம் ஜாடைக் காண்பித்தார்.

தன் அம்மாவின் முகத்தில் இருக்கும் கவலைக்கான காரணத்தை அறிந்து இருந்திருந்தவர், அதைக் களைவதற்கான முயற்சியில் இறங்கினார்.

"ரூபன்… பீ சீரியஸ். அனன்யாவை மெடிசின் படிக்க, பணம் கட்டி சேர்த்துடலாம். எந்த காலேஜ்ல சேர்க்கிறது என்று பாரு?" என்று கிருஷ்ணமூர்த்திக் கூற.

" டாட்… மணி இஸ் நாட் ஏ ப்ராப்ளம் அட் ஆல். நம்ம இன்ஃப்ளூயன்சை வச்சுக் கூட சேர்ததுடலாம். அது ஒன்னும் நமக்கு பிரச்சினை கிடையாது. நமக்குன்னு ஒரு ரெபுடேஷன் இருக்கு. இவ்வளவு மார்க் குறைவா இருக்கும் போது, நம்ம இங்கு சேர்க்க வேண்டாம். என்றவன் நிமிர்ந்து எல்லோரையும் பார்க்க.

எல்லோரும் அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறானோ? என்று தவிப்போடு பார்க்க.

அனன்யாவோ, முகத்தில் கலக்கத்தோடு அவனைப் பார்த்தாள்.' எப்படியும் தன்னை மருத்துவப் படிப்பில் சேர்த்து விடுவார்கள் என்று அலட்சியத்தோடு, சற்று விளையாட்டுத் தனமாகவே படித்தாள்.' ஆனால் இன்று அந்த அஸ்திவாரமே ஆட்டம் காண அச்சத்துடன் இருந்தாள்.

அவள் மனதில் ஓடும் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட விஸ்வரூபன், அவளை லேசாக அணைத்தான்‌. "அந்துருண்டை… நீயும் இந்த வீட்டோட ஒன் ஆஃப் த டாக்டர். ஆனால் உன்னோட எய்ட்டி பர்சன்டேஜ்ஜிக்கு இங்கே வேண்டாம். பிலிப்பைன்ஸில் படிக்கலாம்.

அங்க அஞ்சு வருஷம் படிச்சிட்டு வா. அப்புறம் இங்கே ஒரு என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதிட்டால் போதும். நீ இங்கே ஃப்ராக்டிஸ் பண்றதோ, மேற்படிப்பு படிக்கறதோ எது வேணாலும் செய்யலாம்." என…

அவன் கூறியதைக் கேட்ட அனன்யாவின் கண்களோ கண்ணீரை பொழிந்துக் கொண்டிருந்தது.

அந்த இடமே அமைதியாக இருந்தது. சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் பாட்டியையும், கௌரியையும் மாற்றி மாற்றிப் பார்க்க.

" அவ அப்பா தான் விட்டுட்டு போயிட்டான். அவ அம்மா இன்னமும் உயிரோடு தான் இருக்கா விஸ்வா…" என்று ருக்குமணி கண்டிப்புடன் கூற.

அம்மா… அத்தை… பாட்டி… என பல குரல்கள் அங்கு ஒலித்தது.

விஸ்வரூபனோ, கண்களில் அடிப்பட்ட பார்வையுடன் தன் பாட்டியைப் பார்த்தவன், சோஃபாவில் அமர்ந்து இருந்த தனது அத்தையைப் பார்க்க…

அவனது பார்வையின் அர்த்தத்தை உணர்ந்த கௌரி, எழுந்து நின்று," இங்கே பாருங்க… எனக்கு ரூபன் மேல நம்பிக்கை இருக்கு. அவன் என்ன செய்தாலும், அது அனுவோட நல்லதற்காகத்தான் இருக்கும். எனக்கு எந்த அப்ஜக்சனும் இல்லை. ரூபன்… அனுவை பிலிப்பைன்ஸ்ல சேர்க்கிறதுக்கு என்ன ஏற்பாடு செய்யனுமோ செய்." என்றவர் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.

அனு அழுதுக் கொண்டே, அவளது அறைக்குச் செல்ல... ருக்குமணியும் பேத்தியின் பின்னே சென்றார். அவருடைய செல்லப்பேத்தியோட கண்களில் கண்ணீரைக் கண்டால் தாங்குமா அவரது இதயம்! அது தான் அவளை சமாதானம் செய்வதற்காகச் சென்றார்.

"ஏன் டா தம்பி? அனு இந்த வீட்டை விட்டு எங்கேயும் போனதில்லையே. அவளால அங்க தனியா சமாளிக்க முடியுமா?" என ரஞ்சிதம் வினவ…

" மாம்… அனு இங்கேயே இருந்தால் உலக நடப்பு எதுவுமே தெரியாமல் போய் விடும். இப்படி லேசா கண்ணுல தண்ணி வந்துட்டாலே போதும். செல்லம் என்ற பெயரில் தாங்குறதுக்கு நீங்கள்லாம் இருக்கீங்களே. அப்புறம் அவ எப்படி வெளி உலகத்தை பேஸ் பண்ணுவா சொல்லுங்க ?" என கோபமாகக் கூற.

" காம் டவுன் ரூபன். அவளோட அப்பா இருந்தா பரவாயில்லை. அந்த ராஸ்கல் தான் விட்டுட்டுப் போயிட்டான். அனுவுக்கு அந்த குறைத் தெரியாமல் வளர்க்கணும் என்று தான் நாங்க அவளுக்கு செல்லம் கொடுக்கிறோம். இப்போ நாங்க கேட்கறதே? அவளால அங்க தனியாக சமாளிக்க முடியுமா? அதை யோசிச்சியா?" என்று கிருஷ்ணமூர்த்தி தலையிட.

"டாட். அங்கே போயிட்டா சமாளிச்சிக்குவா… நாமளும் அடிக்கடி போய் பார்க்கலாம். அவ எல்லாத்துக்கும் நம்மளையே டிஃபென்ட் பண்ணி இருக்கக் கூடாது. போல்டான நம்ம அத்தையே, அந்த ஆள் இவங்களை விட்டுட்டு போனப்ப எப்படி உடைஞ்சு போனாங்க… அதுக்காகத் தான் சொல்லுறேன்."

" டேய் தம்பி… உங்க அத்தை என்ன பண்ணுவா? நாம பார்த்து, செய்து வச்ச கல்யாணம். ஏழுவருடம் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் போயிடுச்சு. எனக்கும் உனக்கும் செட்டாகாது. நான் ஆஃபிஸ் முடிந்து வீட்டுக்கு வரும் போது, சிரிச்ச முகத்தோட இருக்கற மாதிரி மனைவி தான் வேணும்னு ஈஸியா சொல்லிட்டு போயிட்டார். ஆனால் ஐந்து வயது பொண்ணை வச்சிக் கிட்டு, இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்க்கையை உதாசீனப்படுத்திட்டு போன வலி அவளுக்குத் தான் தெரியும்." என ரஞ்சிதம் கூற.

" அதே தான் மாம். நானும் சொல்றேன். எல்லாவற்றையும் ஏத்துக்கிற பக்குவம் வரணும். அது அவ இங்கே இருந்தா வராது. அங்கே தனியாக இருந்தால் முட்டி மோதி எல்லாம் கத்துப்பா. அவளோட லைஃப்புக்கு நான் பொறுப்பு" என்றான் விஸ்வரூபன்.

அனுவை சமாதானம் செய்து விட்டு வந்த ருக்குமணியின் காதில் இந்த வார்த்தை விழுந்தது. அதைக் கேட்டதும் தான் நிம்மதி வந்தது. 'எப்படியும் தன் பேரன், அவன் நினைத்ததை தான் நடத்துவான். அதிலெல்லாம் அவன் அவங்க தாத்தா மாதிரி.' என்று பெருமையாக நினைத்தவர், 'எப்படியோ அனுவை நினைத்து இனி கவலையில்லை.' என மனதிற்குள் எண்ணிக் கொண்டார்.

ருக்குமணியின் கணவர் விஸ்வதட்சன். அவரும் ஒரு இதயமருத்துவர்.சுகம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலை உருவாக்கியவர். இன்று அது பிரம்மாண்டத்துடன் சென்னையிலே இன்னும் இரண்டு இடத்தில் வெற்றிகரமாக செயல்படுகிறது.

அப்படிப்பட்ட சிறந்த மருத்துவமனையின் ஸ்தாபகரும், பிரபல இதயமருத்துவரான அவர் இறந்ததோ, எதிர்பாராத அதிர்ச்சியில் இதயம் செயலிழந்து இறந்து விட்டார்.

அதற்கான காரணமோ, தன் மகளின் எதிர்காலத்தை நினைத்து தான்…
தன் நண்பனின் மகன் என்ற ஒரே காரணத்தாலே வசதியைக் கூட பார்க்காமல் சங்கரை தனது மாப்பிள்ளையாக தேர்ந்தெடுதிருந்தார்.

ஆனால் அவனோ, தன் மகளையும், பேத்தியையும் கறிவேப்பிலையென தூக்கி எறிந்து இருக்க. அந்த அதிர்ச்சியிலே அவரும் போய் சேர்ந்து விட்டார். ருக்குமணி, தனது மகளுக்காகவும், பேத்திக்காகவும் எல்லா துக்கத்தையும் தனக்குள்ளே மறைத்துக் கொண்டு கம்பீரமாக வலம் வந்தார்.

இதோ இப்போதுக் கூட விஸ்வரூபன் கூறியதைக் கேட்டவரின் மனம் ஆசுவாசம் அடைந்தது. பேத்தியைப் பற்றிய கவலை மறைந்தது. எந்த வார்த்தை அவருக்கு நிம்மதி அளித்ததோ, அந்த வார்த்தையையே வாக்குறுதியாகப் பயன்படுத்தி பின்னாளில், பேரனின் காதலுக்கு முடிவுரை எழுதப் போவதை அப்போது அறியவில்லை.

**************

கோவிலில் இருந்து வந்தவுடன் டூவெல்த் ரிசல்ட்டைத் தெரிந்துக் கொள்வதற்காக பரபரப்புடன் முயற்சி செய்து கொண்டிருந்தாள் ராதிகா. எப்படியும் ஆயிரத்து நூற்று ஐம்பதுக்கு மேல் தான் மதிப்பெண் வரும் என்பதில் அவளுக்கு ஐயமில்லை. ஆனால் பள்ளியில் முதல் மூன்று இடத்திற்குள் வர வேண்டும் என்று நினைத்து இருந்தாள். ஆனால் கெமிஸ்ட்ரி எக்ஸாம் அன்று அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது. அது தான் அவளது டென்ஷனுககு காரணம்.

ராதிகாவோ நெற்றியெல்லாம் வியர்வைத் துளிர்க்க, பயத்துடன் தன் தந்தையிடம் சென்றவள், " பா… ஸ்கூலுக்கு போகலாம் பா. இங்கே பார்க்க முடியலை."

"சரி மா. போகலாம்… முதல்ல சாப்பிடு."

" அப்பா நீங்க சாப்பிடுங்க. எனக்கு பசிக்கலை பா."

" அம்மாடி… சாப்பிடாமல் உங்க அம்மா போக விட மாட்டா. சும்மா என்னோட உட்கார்ந்து எழுந்துரு." என்றவர் அவளை அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார்.

சண்முகமும் கடைக்கு வரமாட்டேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தார். மேனேஜர் வந்து சாவியை வாங்கிட்டு போயிருந்தார். கீழவாசலில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்திருக்கிறார்.

அவதிஅவதியாக மூன்று இட்லிகளை பிட்டு வாயில் போட்டுக் கொண்டவள்," மா… நானும், அப்பாவும் ஸ்கூலுக்கு போயிட்டு வரோம்.", என்று கூற…

"இருடா தங்கம். ஸ்வீட் செஞ்சுட்டேன். சாப்பிட்டு போகலாம்.", சுந்தரியின் குரல் கிச்சனிலிருந்து வர.

" இல்லை மா. டைமாயிடுச்சு வந்து சாப்பிடுறேன்."

" இருடா… எதுக்கு இவ்வளவு அவசரம்? ஐந்து நிமிஷம் பொறு. ஆமாம் உன் மார்க் எவ்வளவு. அதை சொல்லலையே."

"இங்கே தெரியலை. ஸ்கூல்ல போய் தான் பார்க்கணும். வந்து ஆற அமர உட்கார்ந்து சாப்பிடுறேன்.இப்போ ஸ்கூலுக்கு போயிட்டு வரேன். பை மா.", என்றவள் தந்தையுடன் கிளம்பி விட்டாள்.

ஆனால் திரும்பி வரும் போது, சுந்தரி தன் மகளுக்கு பிடிக்குமென்று ஆசையாக செய்து வைத்திருந்த அசோகா அல்வாவை சாப்பிடும் மனநிலை தான் அங்கே யாருக்கும் இல்லை.

*******************

சண்முகம் ஸ்கூட்டியில் மகளை அழைத்துச் சென்றார்.

‌பள்ளிக்குள் நுழைந்தவள் வகுப்பாசிரியரை சென்றுப் பார்க்க…

அவரோ," என்ன ராதிகா? நீ ஸ்டேட் லெவல் இல்லைன்னா டிஸ்டிரிக் லெவல் வருவேன்னு எதிர்பார்த்தேன். பட் ஸ்கூல் லெவல்லக் கூட ஃபர்ஸ்ட் த்ரீப்ளேஸ்ல இல்லை." எனக் கூற…

ராதிகாவோ முகம் வாட நின்றாள்.

*******************************

இன்று…

கோவிலிருந்து வந்த ராதிகாவின் முகம் வாடி இருக்க…

" ஏன் டா தங்கம் முகம் வாடி இருக்கு?" என பதறி சுந்தரி கேட்க…

அம்மா கூறியதை கேட்டவள், கலங்கும் கண்களை சமாளித்துக் கொண்டு, "வெளியில போயிட்டு வந்தது கொஞ்சம் டயர்டா இருக்கு மா. காஃபி ஆத்துங்க மா. இதோ வந்துடுறேன்." என்றவள், அவளது அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டாள்.

அப்படியே மடங்கி அமர்ந்தவளின் கண் முன்னே மேடிட்ட வயிறுடன் இருந்த அனன்யாவும், அவளை அணைத்து நின்ற விஸ்வரூபனும் தான் வந்து போயினர்.

கண்ணீரோ நிற்காமல் வழிந்தோடியது. எதையும் யோசிக்கும் மனநிலையில் இல்லை.

அதே நிலையில் அமர்ந்து இருக்க… அவளது தவத்தை களைக்க, சுந்தரி வந்து கதவை தட்டினாள்.

" ராது மா… காஃபி ரெடி… சீக்கிரம் வந்து குடி. அப்புறம் டிபன் எப்போ சாப்பிடுவ?"

" டூமினிட்ஸ் மா." என்றவள், கண்ணாடி முன்பு நின்று, அவசரமாக முகத்தை துடைத்து லேசாக மேக்கப் செய்துக் கொண்டு வெளியே வந்தாள்.

இது தான் கடந்த ஏழு எட்டு மாதமாக அவளுடைய வழக்கம். மனதில் உள்ளதை மறைத்து, பொய்யான முகமூடியை போட்டுக் கொண்டு, தன் தாயையும், தந்தையையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்.

இன்றும் காலை உணவு நேரத்தில் கலகலத்து விட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பி சென்றாள்.

அங்கோ அவளது சோர்ந்த மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தி வந்தது.

ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தவுடன் வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், சிரித்த முகமாக எதிர்பட்ட ஊழியர்களிடம் தலையசைத்தவள், தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தாள்.

இன்னும் பேஷண்ட்ஸ் வருவதற்கு நேரம் இருந்தது. அதற்குள் ரவுண்ட்ஸ் போக வேண்டும். பெரிய டாக்டருடன் இவர்களும் சென்று நோட்ஸ் எடுக்க வேண்டும். இன்டர்காம் ஒலிக்க…. அவளது நாள் ஆரம்பித்தது.

ரவுண்ட்ஸ் முடிந்து, கன்ஸல்டிங் ஹவரும் முடிந்து ப்ரேக்கில் கேண்டீனில் இருந்தாள். அவள் முன் ஆவி பறக்கும் காஃபி வீற்றிருந்தது. கெடுதல் என்று தெரிந்தாலும் அவளால் விட முடியாத பழக்கம்.

ரசித்துக் குடித்துக் கொண்டிருக்க அவளது செல்போன் இசைத்தது.

வெளிநாட்டிலிருந்து போன் கால் வந்திருக்க… உற்சாகத்துடன் பேசினாள்.

( ஆங்கிலத்தில் உரையாடிய உரையாடல் தமிழில்…)

" ஹலோ டாக்… வாட் ஏ ப்ளசன்ட் சர்ப்ரைஸ். ஹவ் ஆர் யூ." ராதிகாவின் உற்சாக குரல் ஒலித்தது.

" ஐயம் ஃபைன் டியர். நான் உனக்கு ஒரு சந்தோஷமான நியூஸ் சொல்ல தான் கால் பண்ணேன்." என்றார் டாக்டர் சேலவர்.

அவர் தான் ராதிகா எம்.பி.பி.எஸ் பண்ணும் போது டீச் பண்ண டாக்டர். வெரி ஃப்ரெண்ட்லி டைப். இப்போது வந்த ஃபோன் கால் அவரிடம் இருந்து தான் வந்திருந்தது.

அவர் கூறப் போவதை பற்றி யூகம் இருந்தாலும், அவரது வாயால் கேட்பதற்காக காத்திருந்தாள்.

"சொல்லுங்க டாக். ஐயம் வெயிட்டிங்."

" யெஸ் டியர். உன்னோட கனவு நிறைவேறப் போகுது. நீ ஆசைப்பட்ட மாதிரியே கார்டியாலஜிஸ்ட் ஆகலாம். பீஜி என்ட்ரென்ஸ் எக்ஸாமோட ரிசல்ட் வந்ததும், சென்னையில் இருக்கிற என்னோட ஃப்ரெண்ட் கிருஷ்ணனை போய் பாரு… அவரோட காலேஜ்ல சீட் அலாட் பண்ணியிருக்கார். பணம் ஏதும் கட்ட வேண்டாம். அவரோட அறக்கட்டளை மூலமா படிக்க வைக்கிறேன் என்று சொல்லிட்டார். உனக்கு ஓகே தானே."

" யா டாக்…"

" நான் சொன்னதை கேட்டதும், உற்சாகத்துல துள்ளிக்குதிப்பே என்று நினைத்தேன். நீ என்ன ரொம்ப அமைதியா இருக்க ராதி டியர்.எனி ப்ராப்ளம்?"

" நத்திங் டாக்… அப்போ காஞ்சிபுரத்துல தானே உங்க ப்ரெண்டோட காலேஜ் இருக்கு என்று சொன்னீங்க… இப்போ சென்னை என்று சொல்றீங்க? "

"ஓ… அதுவா… அவங்க காலேஜ் அன்ட் ஓன் ஆஃப் த ஹாஸ்பிடல் காஞ்சிபுரத்துல இருக்கு. அவங்க இருக்கிறது சென்னை. அந்த நியாபகத்துல சொல்லிட்டேன். இது ஒரு பிரச்சினையா? சரி மத்த டீடெயில்ஸ் மெயில்ல அனுப்புறேன். காலேஜ்ல ஜாயின் ஆனதும் எனக்கு மெசேஜ் பண்ணு. பை டியர்." என்று வைத்து விட.

' அப்பாடா… கொஞ்ச நேரத்துல கதிகலங்க வச்சுட்டாரே…' என்று எண்ணியவள் ஓய்வு அறைக்கு சென்றாள்.இனி மாலை தான் அவுட் பேஷண்ட்ஸ் வருவார்கள். அது வரை அவளுக்கு ஓய்வு தான்.

அவளது ஓய்வு நேரத்தை, லைப்ரேரியிலிருந்து எடுத்து வரும் மருந்துவ சம்பந்தமான புத்தகங்களை படிப்பதில் செலவிடுவாள்.

இன்றோ எதிலும் மனம் லயிக்கவில்லை. காலையில் சந்தித்த இருவரின் முகமே கண்ணில் வந்து போனது.

' கடவுளே! அவர்கள் இருவரையும் இனி என் வாழ்நாளில் சந்திக்க கூடாது.' என்று வேண்டிக் கொண்டாள்.

********************
" மாமா… அங்க பாருங்க… நம்ம ராது போறோ… சீக்கிரம் கூப்பிடுங்க… " என்று கதற…

அவளை ஒரு பார்வை பார்த்தவன் ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தான்.

" என்னைய விடுங்க மாமா… நான் போய் அவளைக் கூப்பிடுறேன். இல்லைன்னா அவ போயிடுவா. அவக் கிட்ட பேசணும் மாமா. ப்ளீஸ் விடுங்க…" என்று கெஞ்ச…

அவன் அசையவில்லை. அவளையும் தன் பிடியிலிருந்து விடவில்லை. ராதிகா இவர்களின் பார்வையிலிருத்து மறைந்து விட்டாள்.

அனன்யாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. விஸ்வரூபன் அதையும் பொருட்படுத்தவில்லை.

கோவிலிலிருந்து அவளை ரூமிற்கு அழைத்துச் செல்வதிலே கவனமாக இருந்தான்.

ரூமிற்கு சென்றதும், இண்டர்காமில் அவள் குடிப்பதற்கு மாதுளம் ஜூஸ் ஆர்டர் குடுத்து விட்டு, ரூம் வெகேட் பண்ணுவதற்கான ஏற்பாடையும் செய்ய சொன்னான்.

அவர்களது உடமையை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான். அவன் செய்வதை பார்த்துக் கொண்டே இருந்த அனன்யா, " மாமா… ஏன் இப்படி இருக்கீங்க? ராதிகாவை பார்க்கறதுக்குத்தான் நான் இங்கே வந்தேன். ப்ளீஸ் எப்படியாவது அவ வீட்டை கண்டு பிடிச்சு கூட்டிட்டு போங்க மாமா." என கெஞ்சினாள்.

" ஓ… இதுக்காகத் தான் தஞ்சாவூர் கோயிலுக்கு போகணும்னு சொல்லி அடம் பிடிச்சியா அனு? இது முன்னேயே எனக்கு தெரிந்திருந்தால் அழைச்சிட்டே வந்திருக்க மாட்டேன்." என்றான் இறுகிய குரலில் ...

அவன் கூறியதைக் கேட்ட அனு நம்ப மாட்டாமல் அதிர்ச்சியில் அவனை பார்த்து நின்றாள்.

" மாமா…" என.

"ஆமாம். நீ கோவிலுக்கு போகணும்ன்னு ஆசைப்பட்டதால தான் வந்தேன். உனக்காகத் தான் வந்தேன். அப்புறம் அவங்க வீடு தெரியலைன்னா தான் தேடணும். எனக்குத் தெரியும்." என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினான்.

"அப்போ எனக்கு இப்பவே ராதிகாவைப் பார்க்கணும்‌‌. அவக் கிட்ட கூட்டிட்டு போங்க. அவளைப் பார்த்து மன்னிப்பு கேட்கணும்.இல்லண்ணா நான் செத்துப் போயிடுவேன்." என்று ஹிஸ்டிரியா பேஷண்ட் போல கத்தினாள்.

தொடரும்...


ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே.
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 3

அன்று...

" ஸ்கூல் லெவல்ல ஃபர்ஸ்ட் த்ரீப்ளேஸ்ல கூட வரலை." எனக் கூறிய வகுப்பாசிரியர், ராதிகாவின் வாடிய முகத்தைத் பார்த்து விட்டு, டோண்ட் வொர்ரி ராதிகா. தவுசண்ட் ஒன் செவன்டி சிக்ஸ் நல்ல மார்க் தான்… பட் உன் ஆம்பிஷன் மெடிக்கல் தானே … அதான் யோசிச்சேன். ஃபர்ஸ்ட் த்ரீ ப்ளேஸ்ல வந்தா படிப்பு செலவை நம்ம ஸ்கூல்லேயே ஏத்துப்பாங்க.

பரவாயில்லை விடுமா. மேபி நீட் எக்ஸாம் இருந்தாலும் இருக்கலாம் என்று சொல்றாங்க பார்ப்போம். ஆல் த பெஸ்ட் ராதிகா." என்றார்.

ராதிகாவின் முகமோ தெளிவில்லாமல் இருந்தது.

அவளது முகத்தைப் பார்த்தவர், " ராதிகா…" என்று அழைத்தவர், அவள் நிமிர்ந்து பார்க்கவும் தனியே அழைத்துச் சென்று சற்று நேரம் பேசினார்‌.

சண்முகமோ, மகளது கனவில் கவலையில் ஆழ்ந்தார்.

திரும்பி வந்த ராதிகா, தன் அப்பாவை பார்க்க… அவர் முகமோ கவலையாகத் தெரிந்தது… "அப்பா.", என அழைத்தாள்.

" இங்கே ஏதும் பேச வேண்டாம் மா.வீட்டில் போய் பேசலாம்.", என்றார் சண்முகம்.

போகும் போது இருந்த உற்சாகம், வரும் போது இருவரிடமும் இல்லை. அமைதியாக வீட்டிற்குள் நுழைந்த இருவரையும் பார்த்த சுந்தரி,"ஏன் டா… டல்லா இருக்கே. மார்க் குறைஞ்சிடுச்சா? பரவாயில்லை விடு டா." என்று மகளை சமாதானம் படுத்தினார்.

வீட்டிற்கு போய் பேசலாம் என்ற அப்பாவும், ஒன்றும் சொல்லாமல் ரூமிற்குள் சென்றது, அவளுக்கு இன்னும் கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது. அவர் தான் தனக்கு சப்போர்ட்டா இருப்பார் என நினைத்திருக்க… அவரின் மௌனம் இவளை கவலையில் ஆழ்த்தியது.

இதையெல்லாம் கவனிக்காமல் மகளை கேர் செய்கிறேன் என்று சுந்தரி தனது வட்டத்திற்குள்ளே இருந்தார்." இந்தாடா…", என ஒரு கப் ஆரஞ்சு ஜூஸைக் கொண்டு வந்து நீட்டினார்.

அதை வாங்கி அருந்தியவாறே," அப்பாவுக்கு எங்கே மா?", என.

"இதோ அவருக்கு குடுக்குறேன். நீ முதல்ல குடி டா."

" இல்லை மா. நானே போய் குடுக்குறேன். ", என்றவள், அவருக்கும் எடுத்துக் கொண்டு போய் கொடுத்து விட்டு, அவளும் அருந்தினாள்.

அவர் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள்," அப்பா… என்னப்பா ஒன்னும் சொல்ல மாட்டேங்குறீங்க." என அவர் கையைப் பிடித்துக் கொண்டு வினவ…

" ராது மா. நீ கேட்டு என்னால படிக்க வைக்க முடியாதுன்னு சொல்ல சங்கடமா இருக்கு. " என மகளை பார்த்துக் கூற

" ஏன் பா… செலவு அதிகமாகும் என்று யோசிக்கிறீங்களாப்பா? " என.

"அது வந்து மா… நீட் எக்ஸாம் இருந்தாலும் இருக்கலாம் என்று சொல்றாங்க. ஒரு வேளை நீட் எக்ஸாம் இருந்தா, அதுல செலக்டாகணும். அது மட்டுமில்லாமல் கவர்மென்ட் காலேஜ்ல சீட் கிடைச்சா பரவாயில்லை. அதுவே தனியார் காலேஜ்ல சீட் கிடைச்சாலும், நீ படிச்சு முடிச்சுட்டு வரதுக்குள்ளே கோடிக்கணக்கில் செலவாகும். அவ்வளவுக்கு நமக்கு வசதியில்லை மா." என குரல் கம்ம கூறினார்.

அவர் மனமோ குன்றியது. ' இருப்பதோ, ஒத்த புள்ளை‌… அதை படிக்க வைப்பதற்கு கூட முடியாமல் இருக்கிறேனே!' என தனக்குள் மறுகிக் கொண்டிருந்தார்.

அவரது முகத்தைப் பார்த்தவள் பதறி, " அப்பா… நீங்க கவலைப் படாதீங்க. அவ்வளவெல்லாம் செலவாகாது. இங்க படிச்சா தான் நீங்க சொல்ற மாதிரி செலவாகும்.

பிலிப்பைன்ஸில் படிச்சா செலவு குறைவாகத் தான் ஆகும். ஓவெரால் தெர்டி லெக்ஸ் தான் ஆகும் பா." என்று அலுங்காமல் அடுத்த குண்டை எடுத்துப் போட்டாள் ராதிகா …

டங்கென்று சத்தம் கேட்டு சண்முகமும், ராதிகாவும் திரும்பிப் பார்த்தனர்.

அங்கு சுந்தரி அதிர்ச்சியில் தன் கையில் இருந்த கிண்ணத்தை கீழே போட்டு இருந்தாள்.

மகளுக்காக செய்த அல்வாவை கிண்ணத்தில் போட்டு எடுத்து வந்து இருந்தாள். அங்கு ராதிகா கூறியதை கேட்டவள், அதை கீழே தவற விட்டிருந்தாள்.

ராதிகாவோ அம்மாவை பார்த்ததும் தலையில் கையை வைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள்.

எப்படியாவது அம்மா வருவதற்கு முன்பு, அப்பாவை கன்வின்ஸ் செய்து விடலாம் என்று நினைத்திருக்க… இப்படி ஒரு திருப்பத்தை அவள் எதிர்பார்க்கவில்லை.

சண்முகம் முதலில் செலவை நினைத்து தயங்கியவர், அடுத்து தனது மகள் கூறியது கேட்டதும், " ஜயோ!" என்று ஆகிவிட்டது.

'தனது மனைவி, தங்கள் மகளை விட்டு பிரிந்து இருக்க மாட்டாளே! இதை நன்கு அறிந்த ராதிகா எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தாள். தாங்கள் இன்னமும் அவளை சின்னக்குழந்தை என நினைத்திருக்க… அப்படி எல்லாம் இல்லை என்று நிரூபித்து விட்டாளே!' என்று தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருக்கையில், சுந்தரி வந்ததும் அல்லாமல் ராதிகா பேசியதை கேட்டும் விட்டாள்.

இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் சண்முகம் மகளைப் பார்க்க. அவளோ இறுக்கமாக அமர்ந்து இருந்தாள்.

"ம்" என்று பெருமூச்சு விட்டுக் கொண்ட சண்முகம், " சுந்தரி…" என அவளது தோளைத் தொட…

அது வரை ஸ்தம்பித்து இருந்த சுந்தரி, சுய உணர்வுக்கு வந்ததோடு அல்லாமல், தன்னை அழைத்த கணவனைக் கூட கண்டுக் கொள்ளாமல் மகளிடம் சென்றவர். ராதிகா அருகே அமர்ந்து, அவளது தலையை வருடி விட்டு," அம்மாடி… அம்மாவால உன்ன விட்டுட்டு இருக்க முடியாதுடா. இங்கே நீ ஸ்கூலுக்கு போயிட்டு வரும் வரைக்குமே நான் எப்படி தவிப்பேன் தெரியுமா? கொஞ்சம் லேட்டானாலும் அம்மாவுக்கு உசுரே இருக்காதுடா… வாசல்லே வந்து நின்னுட்டு இருப்பேனே… நீ கூட ஏன் மா நிக்குறீங்க என்று திட்டுவியே… அப்போ கூட நான் கேட்க மாட்டேன் தானே… அப்படி இருக்கப்ப… உன்னை அவ்வளவு தூரம் அனுப்பிட்டு என்னால நிம்மதியாக இருக்க முடியாதுடா." என அவர் பேசிக் கொண்டே இருக்க.

அவர் பேசப் பேச ராதிகாவின் கண்களிலிருந்து,கண்ணீர் நிற்காமல் வடிந்துக் கொண்டே இருந்தது.

"ஏன் டா தங்கம் இப்படி அழற… இங்கே இருக்கேன் சொல்லேன் டா. அம்மாவுக்காக போகாதடா." என்று கெஞ்சியவள், திடீரென்று ஏதோ நினைவு வந்தவளாக, " ஐயோ! கடவுளே! போன வருஷம் கூட ஒரு பொண்ணு நீட் எக்ஸாம் நினைத்து டிப்ரெஷன்ல தற்கொலை பண்ணிக்கிச்சே. அப்போதே என் பொண்ணு டாக்டருக்கெல்லாம் படிக்க ஆசை படக் கூடாது என்று சாமியெல்லாம் வேண்டிக்கிட்டேனே அந்த கடவுளுக்கு கண் இல்லையா " என சுந்தரி புலம்ப .

அவளோ அசைந்தாளில்லை. அவர் பேச பேச இன்னும் பிடிவாதமாக இருந்தாள்.

முதலில் மகள் வெளிநாட்டிற்கு செல்வதாக கூறவும், அதை மட்டுமே தடுக்க முயன்றவளுக்கு, பிறகு தான் மகளின் டாக்டர் கனவு முழுவதுமாக விளங்கியது.

"ஏதாவது பேசுடா… டாக்டர் படிப்பே வேண்டாம் டா. எல்லாருமே பண பேய்ங்க. நாமளே நேரடியா பாதிக்கப்பட்டிருக்கோமே. அப்படி இருந்தும் டாக்கருக்கு படிக்கணும்னு சொல்லிட்டு இருக்கியே."

" எல்லாரும் அப்படியே இருக்க மாட்டாங்க. உயிரைக் கொடுத்து வைத்தியம் செய்றவங்களும் இருக்காங்க. டாக்டர்ஸெல்லாம் கடவுள் மாதிரி. அவங்களை எல்லாம் அப்படி பேசாதீங்க. ஐ டோண்ட் லைக் தட். நான் டாக்டரா தான் ஆவேன். " என்று உறுதியாக ராதிகா நிற்க.

"சரி… உனக்கு என்ன டாக்டருக்கு தானே படிக்கணும். அப்பா கிட்ட சொல்லி எப்படியாவது உன்னை நான் இங்கேயே சேர்க்க சொல்லுறேன். இந்த வீடு வித்தாவது நாங்க உன்னை படிக்க வைக்கிறோம்." என்று இறங்கி வந்தவர், சண்முகத்திடம் திரும்பி, " என்னங்க… ஒன்னும் சொல்லாமல் நிக்குறீங்க." என அவரிடம் பாய்ந்தார்…

' இவ்வளவு வெள்ளந்தியா இருக்காளே…' என அவளை பரிதாபமாக பார்த்தார் சண்முகம்.

"அம்மா புரியாம பேசாதீங்க. வீட்டை வித்தா எவ்வளவு வரும் என்று நினைச்சிட்டு இருக்கீங்க. கோடிக்கணக்குல வருமா? அப்புறம் வீட்டை வித்துட்டு எங்கே போய் இருக்கிறது. கடைக்கு வாடகை கொடுக்கணும், அப்புறம் வீட்டுக்கு வாடகைக் குடுக்கணும், ஸ்டாப்ஸுக்கு சேலரிக் கொடுக்கணும். அதுக்கெல்லாம் கடை வருமானம் போதாதுமா. இதுவே வெளிநாட்டுல படிச்சா, நம்மால சமாளிக்க முடியும்." என்று கூறி விட்டு தாயைப் பார்த்தாள் ராதிகா.

" அதெல்லாம் எனக்கு தெரியாது டா தங்கம். உன்ன விட்டுட்டு என்னால இருக்க முடியாது. ப்ளீஸ்மா… இங்கே இரு ராது மா."

" மா… என்னோட இலட்சியமே டாக்டராவது தான். நான் இங்கே இருந்தா என்னோட லட்சியத்தை அடைய முடியாது. அங்கே போனால் என்னுடைய லட்சியம் நிறைவேற ஒரு வாய்ப்பு இருக்கு. ப்ளீஸ் மா. அதை தடுக்காதீங்க." என அழ.

பிறந்ததிலிருந்து எல்லோரும் அவளை தாங்கு தாங்கென்று தாங்கியது என்ன? இன்றைக்கு இவ்வளவு கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறாளே… அவளது கண்ணீரை நிறுத்த முடியாத தங்களோட நிலைமையை எண்ணி, கலங்கியவள், கணவரைப் பார்த்தாள்.

அவரோ, மகளுக்கு ஆதரவாக இருப்பதா? இல்லை மனைவிக்கு பார்ப்பதா? என தெரியாமல் மாட்டிக் கொண்டு தவித்தார்.

தன் கணவர் இப்போதைக்கு வாயைத் திறக்கப் போவதில்லை என்பதை உணர்ந்துக் கொண்ட சுந்தரி, என்ன சொல்வதென்று தெரியாமல் சொன்னதையே திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். " உன்ன விட்டுட்டு என்னால இருக்க முடியாது. உன்ன விட்டுட்டு என்னால இருக்க முடியாது." என்று புலம்ப.

சுந்தரி புலம்புவதைக் கேட்ட ராதிகா, காதை இறுகப் பொத்திக் கொண்டாள்.

கடந்த இரண்டு வருடமாக அவள், தன் சுயத்தை விட்டுக் கொடுத்திருந்தாள். 'இதே நிலை தொடர்ந்தால், மூச்சு முட்டி கொஞ்ச நாளில் பைத்தியமாகி விடுவோம். ' என்று எண்ணியவள் வாயை விட்டிருந்தாள்.

" ஐயோ! மா… நிறுத்துங்க… இங்கேயே இருந்தேன்னா, பைத்தியம் பிடிச்சு செத்து போய்டுவேன் போல..." என்று கத்தினாள் ராதிகா.

எள் விழுந்தால் கூட கேட்கும் போல அவ்வளவு நிசப்தம் அங்கே…

தான் சொல்லிய வார்த்தை, தன் காதிலே விழுந்த பிறகே தான் செய்த தவறை உணர்ந்து தலையை தட்டிக் கொண்டவளுக்கு, ஐயோ! என்று ஆனது.

தனது தந்தையையும், தாயையும் பார்க்க… அவர்களோ அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றனர்.

" அம்மா…" என்று ராதிகா சமாதானம் செய்ய முயல.

" ராது… நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு." என்றவர், வேற எதுவும் பேசாமல் கீழே கிடந்தவற்றை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

" அப்பா…" என…

" உன் கிட்ட இதை எதிர்பார்க்கலை மா." என்றவர் சட்டையை போட்டுக் கொண்டு வெளியே கிளம்பி விட்டார்.

காலையில் இருந்த மகிழ்ச்சி இப்பொழுது இல்லை. சுந்தரி அவளுக்காக செய்த இனிப்பை சாப்பிடும் மனநிலையில் யாரும் இல்லை.

தனித்து விடப்பட்ட ராதிகா, அங்கிருந்து வெளியேறி அவளது அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

அப்பாவும், அம்மாவும் பேசாமல் போனதை நினைத்து அப்படி ஒன்றும் கவலைப் படவில்லை ராதிகா. ஏனென்றால் அவளிடம் பேசாமல் கொஞ்சம் நேரம் கூட அவர்களால் இருக்க முடியாது. அவர்களே சற்று நேரத்தில் வந்து பேசிவிடுவார்கள். ஆனால் அவர்களது முகம் பயத்தால் வெளுத்ததைக் கண்டவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது

'இருந்தாலும் அந்த வார்த்தையை நான் சொல்லி இருக்க கூடாது.' என்று வருத்தப்பட்டு கொண்டு இருந்தாள் அவள்.

" சொல்லாத வார்த்தைக்கு நாம் எஜமான். சொல்லிய வார்த்தை நமக்கு எஜமான்." என்பதன் பொருளை இப்பொழுது தான் நன்றாக புரிந்து கொண்டிருந்தாள்.

வெளியே வந்த சுந்தரியோ, சாமியலமாரிக்கு முன்பு சென்று," தன் மகளுக்கு எந்த ஆபத்தும் வராமல் நீதான் அவளுக்கு துணையாக இருக்கணும் கடவுளே!" என்று மனமுருக வேண்டியவள் மஞ்சத்துணியில் குலதெய்வத்துக்கு காசு முடிந்து வைத்து விட்டு சமையலறைக்குச் சென்று மகளுக்கு பிடித்த காளான் பிரியாணியை செய்தாள்.

இது தான் சுந்தரி. கோபமோ, தாபமோ எதுவாக இருந்தாலும் ஐந்து நிமிடம் தான். அதற்கு மேல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டாள். அவர் மட்டுமல்ல நாட்டில் தொண்ணூறு சதவீதம் அம்மாக்கள் அப்படித் தான்.

ராதிகாவோ பசி தாங்க மாட்டாள். ' காலையில் ரிசல்ட் பரபரப்பில் ஒழுங்காக சாப்பிடவில்லையே.' என பரிதவித்தவர் தட்டில் சூடான காளான் பிரியாணி, ரைத்தாவை எடுத்து வைத்தவளின் கால்கள், மகளது அறைக்கு விரைந்தது.

"ராது மா…" என்று கூப்பிட்டுக் கொண்டே விரைந்தாள்.

ராதிகாவோ அழுதழுது தூங்கி விட்டிருந்தாள்.

கட்டிலில் உட்கார்ந்த சுந்தரி, மகளை எழுப்பினாள்.

தூக்கக்கலக்கத்தில் கண்விழித்த ராதிகா, " மா... சாரி மா… நான்… இல்லை… தெரியாமல் வாயில வந்துடுச்சு மா." என்று உளற‌…

அருகில் படுத்திருந்த மகளின் தலையை கோதிவிட்டு, " தெரியாமல் கூட அப்படி சொல்லாதடா‌… அந்த வார்த்தையை கேட்டாலே நான் செத்து போயிடுவேன்." என்றாள் சுந்தரி.

" சாரி மா‌…" என்று மறுபடியும் மன்னிப்பு கேட்டாள் ராதிகா.

" சரி டா… எழுந்திரு… சாப்பிடலாம் வா. அம்மா ஊட்டி விடுறேன்." என்றவள் மேஜை மேலிருந்த தட்டை எடுத்து ஊட்ட…

" ஆ"வென வாயைத் திறந்து ஒரு வாய் வாங்கியவள், " நீங்க சாப்பிட்டிங்களா? அப்பா வந்துட்டாங்களா?" என ராதிகா வினவினாள்.

" சாப்பிடும் போது பேசாதே அம்மு. அப்பா இன்னும் வரலை. வந்ததும் நாங்க சாப்பிடுறோம்." என்றவள் அடுத்த கவளத்தை வாயில் வைத்தாள்.

" சரி மா. நான் அப்பாவுக்கு போன் போடுறேன்."

" இப்போ தான் நான் ஃபோன் போட்டேன். வந்துட்டுருக்கறாம்." என்றவள் மகளுக்கு ஊட்டுவதிலே கவனமாக இருந்தார்.

சற்று நேரத்தில் வீட்டுக்குத் திரும்பியிருந்த சண்முகம், கை, கால் கழுவி விட்டு, மனைவி, மகளைத் தேடி கிச்சனுக்குள் நுழைந்தார்.

அங்கு அவர்கள் இல்லை எனவும், மகளது அறைக்கு வந்தார்.

அங்கே அம்மா, மகளது பாசத்தைப் பார்த்தவருக்கு, சுந்தரியை நினைத்து கொஞ்சம் கவலையாக தான் இருந்தது.

'சுந்தரிக்கு இந்த வீடு தான் உலகம். இங்கே உள்ள ஒவ்வொருவரின் நலம் தான் அவளுக்கு முக்கியம். அவள் எப்படி ராதிகா இல்லாமல், ஐந்தரை வருடத்தை சமாளிக்கப் போகிறாளோ தெரியவில்லை.' என் வருந்தியவர் "சாப்பிடவும் வெளியே வாங்க." என்று இருவரையும் பார்த்துக் கூறிவிட்டு, ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து கண்களை மூடி இருந்தார்.

அவரது மனதிலோ பலவித எண்ணங்கள் ஓடியது. தனது அருகில் மகள் உட்காரும் அரவத்தில் கண் திறந்தவர்,மகளைப் பார்க்க.

அவரது கைகளைப் பிடித்து," சாரி பா." என்றாள்.

" சரி பரவால்ல விடு மா. இனி தெரியாமல் கூட அந்த வார்த்தைகளை நீ உச்சரிக்காத. அப்படி செய்யணும்னு நெனைச்சாலே, அதுக்கு முன்னாடி எங்க ரெண்டு பேரோட உயிரும் போய்டும். அதை மட்டும் மனசுல வச்சுக்க. நான் போய் நம்ம விக்ரமைப் போய் பார்த்தேன். வீட்டுப் பத்திரத்தை வச்சு பேங்க்ல லோன் வாங்கலாம் என்று சொன்னான்.

நீ எப்போ பிலிப்பைன்ஸ் போகணும்? அதுக்கு என்ன ப்ரொசிஜர் என்று விசாரி." என்று தன் சம்மதத்தை மறைமுகமாக கூறியிருந்தார்.

சண்முகம் கூறியதைக் கேட்ட ராதிகாவின் முகம் மலர்ந்தது..

****************************
இன்று -

விஸ்வரூபனின் முகம் இறுகியது, " வாட்? என்ன சொன்ன? செத்துடுவேன்னா? ஆர் யூ மேட். அவக் கிட்ட பேசலைன்னா செத்துடுவீயா? " என்று உறும...

அவனது கோபத்தைப் பார்த்து மிரண்டாள் அனன்யா.

"ஷிட்" தன் தலையை தட்டிக் கொண்டவன், அந்த அறையை கால்களால் அளந்துக் கொண்டிருந்தான்.

ரூம் பாய் வருவதற்காக காத்திருந்தவன், அவர் கொண்டு வந்த ஜூஸை வாங்கி அனன்யாவை அருந்த சொன்னான்.

அவள் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், " லுக் அனு… நான் அவளை என் வாழ்க்கையில் எப்போதும் சந்திக்க கூடாது என்று நினைச்சிட்டு இருக்கேன். புரியுதா? ராதிகா இஸ் அவர் பாஸ்ட். என்னோட வாழ்க்கையில வந்துட்டு போன பாசிங் க்ளோவுட். இது தான் நிதர்சனம். வேறு எதுவும் பேசாமல் சீக்கிரம் கிளம்பு."

அவனது கோபத்தை நினைத்து பயம் வந்தாலும், இப்போது பேசவில்லை எனில் அப்புறம் ராதிகாவை எப்பொழுதும் பார்க்க முடியாது என்பதை உணர்ந்த அனன்யா, தொண்டையைக் கணைத்து விட்டு பேசினாள்.

" மாமா… நான் ராதிகா கிட்ட பேசணும். நடந்த எல்லாத்தையும் சொல்லணும். அவக் கிட்ட மன்னிப்பு கேட்கணும். அப்புறம் உங்க இரண்டு பேருக் கிடையிலும் நான் எப்போதும் வர மாட்டேன். எனக்கு டைவர்ஸ் கொடுத்துட்டு …" அடுத்து என்ன சொல்ல வந்தாளோ, அதற்குள் விஸ்வரூபன், அவள் குடித்து விட்டு வைத்திருந்த கண்ணாடி க்ளாஸை தட்டி விட்டான்.

அந்த கண்ணாடி க்ளாஸோ, அவர்கள் இருவரது மனதைப் போல சுக்குநூறாக நொறுங்கியது.

வாயை மூடிக் கொண்டு அதிர்ந்து நின்றாள். அவளது உடலோ வெடவெட என நடுங்கிக் கொண்டிருந்தது.

தன் தலையை கோதியவன், அந்த உடைந்த கண்ணாடித் துண்டுகளை கவனமாகத் தவிர்த்து விட்டு அவளருகில் வந்தான்.

மெல்ல அவளை ஆசுவாசப் படுத்தியவன், அவளது தலையை லேசாக வருடி, " இதோ இந்த கண்ணாடி கிளாஸ் மாதிரி தான் எங்களுடைய காதல் உடைந்து போயிடுச்சு. இனி ஒன்று சேர்க்க முடியாது. அனும்மா புரிஞ்சுக்கோடா… நீ பேசறதை அத்தைக் கேட்டா எவ்வளவு வருத்தப்படுவாங்கத் தெரியுமா?"

மெல்ல அவனிடமிருந்து விலகியவள், அத்தை என்ன நினைப்பாங்க… பாட்டி என்ன நினைப்பாங்க? ஆட்டுக்குட்டி என்ன நினைக்கும். இப்படியெல்லாம் கவலைப்படுறீங்களே… உங்களை உயிருக்கு உயிராக நேசிச்சா
ளே ஒருத்தி. அவளைப் பத்தி ஏதாவது யோசிங்கிளா… யூ ஆர் செல்ஃபிஷ்..." என.

"ஆமாம் நான் செல்ஃபிஷ் தான் போதுமா? என்னை வளர்த்த பாட்டி, மரணப்படுக்கையில் என்கிட்ட யாசகம் கேட்கிகும் போது என்னால மறுக்க முடியலை போதுமா? நான் எடுத்த ஒரு முடிவால, உன் வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கு. நான் செய்த தவறின் விளைவை, நான் தானே சரி செய்ய வேண்டும்."

"ஐயோ! மாமா. நீங்க எனக்கு நல்லது தான் செய்தீங்க. நான் தான் அவசரப்பட்டுட்டேன். அதுக்கு நீங்களும், ராதிகாவும் ஏன் சிலுவை சுமக்கணும். சொல்லுங்க மாமா."

"திரும்பத் திரும்ப நமக்குள்ள ராதிகாவை இழுக்காதே. காதலிச்சா எல்லோரும் கல்யாணம் பண்ணிக்கணுமா என்ன? அதுவும் ஒரு வருஷ காதல் தானே… சீக்கிரம் மறந்துட்டு, வேற வாழ்க்கையை அமைச்சுக்குவா… நீ ஒன்னும் கவலைப்பட தேவையில்லை."

"அவளே காதலை சொன்னதால, அவளுடைய காதல் உங்களுக்கு இளப்பமா போயிடுச்சா மாமா?. உங்களுக்கு வேணா இது ஒரு வருஷ காதலாக இருக்கலாம். அவளுக்கு இது ஏழு வருஷ காதல். அந்த காதலுக்கு சாட்சியாக நான் மட்டும் தான் இருக்கேன்.

அப்புறம் இன்னொன்னு மாமா… நீங்க மறந்துட்டேன் சொல்றது பொய். நீங்க அவளை மறக்கவே இல்லைன்னு சொல்றதுக்கு என் கிட்ட ஆதாரம் இருக்கு." என ஆக்ரோஷமாக அனன்யா கூற…

இதயம் துடிக்க வேகமாக கைகளை பின்னால் மறைத்துக் கொண்டான். "என்ன சொல்ற புரியல ?" என மெதுவான குரலில் கூற…

" அதான் உங்க ஃபோன் ரிங்டோன். அதைத் தான் சொல்றேன். இன்னும் மாத்தாமல் வச்சிருக்கீங்க. "

சரியாக அதே நேரத்தில் அவனுடைய போன் இசைத்தது.

"யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பாத்திட
பாவை ராதையோ வாட…" என ராதிகாவின் தேன் குரலில் ஒலித்தது.

தொடரும்...
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் -4

அன்று...

சண்முகம் கூறியதைக் கேட்டு முகம் மலர்ந்த ராதிகா, அவரது கேள்விக்கு பதிலளித்தாள்.

" இன்னும் நாளிருக்கு பா. ஜனவரியிலிருந்து தான் காலேஜ் ஸ்டார்ட் ஆகும். அப்புறம் லோன் எல்லாம் வாங்க வேண்டாம் பா. எனக்காக என்று வச்சிருக்கீங்கல்ல அந்த நகை எல்லாம் வேண்டாம். அதை வித்துடுவோம்." என்றாள்.

"ஒன்றா, இரண்டா… ஐம்பது பவுன் நகை. அதை வாங்குவதற்கு எவ்வளவு கஷ்டப் பட்டிருப்போம். இப்படி ஈஸியா விக்க சொல்றீயே." என்றாள் சுந்தரி.

இதே சுந்தரி தான், இரண்டு வருடத்திற்கு முன்பு இந்த நகையெல்லாம் வேண்டாம். வித்துடலாம் என்று கதறி இருந்தாள். அது யாரும் நினைவு படுத்தாமலே அவளுக்கு நியாபகம் வந்தது.

அப்போதும் மகளின் உயிரைக் காப்பாற்றவதற்காகத் தான் விற்கலாம் என்று முடிவுக்கு வந்திருந்தாள்.

இப்போதும், மருத்துவம் படிக்க வைக்கவில்லை எனில், மகள் உயிரோடு இருக்க மாட்டேன் என்று கூறியது நினைவுக்கு வரவும் சுந்தரி, " சரி ராது பா… நகையெல்லாம் வித்துடுங்க…" என்று விட்டு, கிச்சனுக்குள் நுழைந்துக் கொண்டாள்.

ராதிகாவின் முகமும் ரத்த பசையின்றி வெளுத்திருந்தது. அவளைப் பார்த்த சண்முகம், அப்போது தான் அவளும் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார்.

மகளது மனதை மாற்றும் பொருட்டு,"சரி மா… சொல்லு… உனக்கு பிலிப்பைன்ஸல படிக்க ஐடியா கொடுத்தது யாரு. அந்த சோடா புட்டி கண்ணாடி போட்டிருந்த மிஸ் தானே."

அவர் நினைத்தது போல சண்டைக்கு வந்திருந்தாள் ராதிகா." ப்பா… அவங்க எனக்கு டீச் பண்றவங்க. அவங்களை இப்படித் தான் கிண்டல் பண்ணுறதா?"

"அவங்க உனக்கு தான் டீச்சர். எனக்கில்லையே. பெரிசா எனக்குத் தெரியாமல் ரகசியம் பேசுறதா நினைச்சிட்டு, தனியா அழைச்சிட்டு போனாங்களே அப்பவே சந்தேகம்." என்று கூறியிருந்தவர், மானசீகமாக மகளின் ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.

" அப்பா… உங்களை வர்ற சண்டே அன்னைக்கு அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வரச் சொன்னாங்க. அவங்க ரொம்ப நல்லவங்கப்பா." என தந்தையின் தோளில் சாய்ந்துக் கொண்டு சலுகையாகக் கூற.

"அது தான் எனக்குத் தெரியுமே மா …"

" சரி சாப்பிட வாங்க பா… அம்மாவும் இன்னும் சாப்பிடலை. " என்றவள் இருவரையும் டைனிங் டேபிளிற்கு அழைத்துச் சென்று பரிமாறினாள்.

முகமெல்லாம் சந்தோஷத்துடன் இருவருக்கும் உணவு பரிமாறுபவளை, சற்று ஆச்சரியத்துடனே சண்முகமும், சுந்தரியும் பார்த்தனர்.

கடந்த இரண்டு வருடத்தில் இந்த அளவுக்கு மகிழ்ச்சியோடு அவளை பார்த்ததே இல்லை.

மகளது சந்தோஷத்தைப் பார்த்து, அவர்களுக்கு மன நிறைவு தான். ஆனாலும் அவர்களால் உணவை உண்ண முடியவில்லை‌.

மகள் வருந்துவாளே என்று எண்ணி இருவரும் மருந்து என உணவை விழுங்கினர்‌.

'ராதிகா இல்லாமல் தாங்கள் எப்படி இருப்பது என அவர்கள் கவலை கொள்ள… அதைப் பற்றி அவள் கொஞ்சம் கூட நினைக்கவில்லையே... ' என உள்ளுக்குள் இருவரும் மறுகினர்.

ராதிகாவோ, வெளிநாட்டிற்குச் சென்று படிப்பதற்கு வாய்ப்பு இருக்கு என்று ஆசிரியர் கூறியதிலிருந்து, தனது பெற்றோரை எப்படி தனியாக விட்டுச் செல்வது என்ற யோசனையிலேயே இருந்து அதற்குள் ஒரு தீர்வையும் கண்டிருந்தாள்‌.

***********

அங்கு அழுதுக் கொண்டிருந்த அனன்யாவின் அறைக்குள் சென்ற விஸ்வரூபன், " ஏய் அந்துருண்டை எழுந்திரு… எதுக்கு இப்படி கண்ணை கசக்கிட்டு இருக்க…"

"நான் ஏன் அழறேன் என்று உங்களுக்கு தெரியாதா மாம்ஸ்?" என்று அவனைப் பார்த்து முறைக்க…

"என்னாச்சு செல்லம். சொன்னா தானே இந்த மாமனுக்கு தெரியும்."

"யோவ் மாம்ஸ்… ஓடிப் போயிடு… அப்புறம் நல்லா வந்துரும் என் வாயில்…. இங்கே நான் இருந்தா உனக்கு போட்டியா இருப்பேன்னு என்னை பேக் பண்ணி பாரினுக்கு அனுப்புற…" என்னவளின் கண்கள் மீண்டும் கலங்க…

"லூசாடி நீ… உன்னை விட்டுட்டு எங்களால தான் இருக்க முடியுமா? இங்கே இருந்தீனா படிப்பு, படிப்பு என்று இருக்கணும். இதே பிலிப்பைன்ஸிற்கு படிக்கப் போனேன்னு வை.. இங்கே அளவுக்கு படிக்கிறதுக்கு ஸ்டிரஸ் இருக்காது. ஈஸி கோயிங் டீச்சா தான் இருக்கும்.

அப்புறம் ஜாலியா சுத்திப் பார்க்கலாம். இங்கே எங்க மூஞ்சியைப் பார்த்துக் கிட்டு யாருக்கிட்டையும் பேசாமல் வெளிஉலகமே தெரியாமல் இருக்கிற… அங்கே போனால் நிறைய பிரெண்ட்ஸ் கிடைப்பாங்க... நாங்களும் அடிக்கடி வருவோம். உனக்கு இங்கே வரணும் தோணுச்சுன்னா காலேஜ் லீவ் போட்டுட்டு நீ வா. ஒன்னும் பிரச்சினை இல்ல.

அப்புறம் நீ அங்கே போறதுக்கு இன்னும் ஃபைவ் ஆர் சிக்ஸ் மன்த்ஸ் ஆகும். அதுவரை ஜாலியா இருக்கலாம். அங்கே போறதுக்கு டெய்லி ஷாப்பிங் பண்ணலாம். என்ன சொல்ற?"

"முப்பது நிமிஷம்." என்றாள் அனன்யா.

"வாட்?"என புரியாமல் விஸ்வரூபன் வினவ…

" அது தான் முப்பது நிமிஷமாக பிரசங்கம் பண்ணீங்களே. அதை தான் சொல்றேன். வேண்டாம்னு சொன்னா விடவா போறீங்க. நீங்க இவ்வளவு கெஞ்சி சொல்றீங்க. அதுனால ஒத்துக்கிறேன். ஆனால் ஒரு கண்டிஷன். நான் எப்போ ஷாப்பிங் போனாலும், நீங்க தான் ட்ரைவர் அண்ட் செக்யூரிட்டி வேலையை பாக்குறீங்க… ரைட் … " என்றவள் சிட்டாக பறந்து இருந்தாள்.

"அடியே அந்துருண்டை. நான் ஃபைனல் இயர்ல இருக்கேன். அப்புறம் மெடிக்கல் காலேஜ் ஆரம்பிக்கிற ப்ராஸஸ் வேற போயிட்டு இருக்கு. என்னால உன் கூட சுத்த முடியாதுடி." என அவன் கத்தியது காற்றோடு கலந்து போனது. கேட்கத்தான் அவள் அங்கு இல்லை.


அப்புறம் என்ன பிலிப்பைன்ஸ் போகும் வரைக்கும், விஸ்வரூபனை சும்மா விடவில்லை. வச்சு செய்தாள் அனன்யா.
அங்கு இங்கு என்று இழுத்தடித்து ஒரு வழியாக்கி விட்டாள்.

ராதிகா இந்த ஆறு மாத காலத்தில், ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் பயனுள்ளதாக கழித்தாள்.

முதலில் தன் தந்தையுடன் அவரது வகுப்பாசியரை சந்திக்க சென்றாள்.

பரிமளா அவர் தான் ராதிகாவின் வகுப்பாசிரியர்.

" வாங்க சார்… வா ராதிகா…" என்றவர் சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்து விட்டார் பரிமளா.

"நீங்க கவலையே பட வேண்டாம் சார். வருஷா வருஷம் இங்கே இருந்து பத்து பசங்களாவது பிலிப்பைன்ஸ் போய் படிக்கிறாங்க. நம்பிக்கையான ஏஜன்ட். நீங்க பணத்தை பே பண்ணிட்டீங்கனா, அவங்களே பிலிப்பைன்ஸ்க்கு அழைச்சிட்டு போய், ஹாஸ்டல் சேர்க்கிறது, காலேஜ் சேர்க்கிறது என்று அவங்க பொறுப்புல செய்துடுவாங்க." என்று நம்பிக்கை அளிக்க.

சற்று நிம்மதியானார் ஷண்முகம்.

ராதிகா அந்த ஏஜெண்ட் டீடெயில்ஸ் எல்லாம் கேட்டுக் கொண்டு வந்தாள்.

அடுத்து நகைகள் எல்லாவற்றையும் விற்று பேங்கில் பணத்தை போட்டாள்.

சுந்தரி தான் சற்று சுணக்கமாக இருந்தாள்.' கல்யாணம் பண்ணணும்னா நகை போட வேண்டாமா… இப்படி எல்லாத்தையும் விக்க சொல்றாளே,' என்று எண்ணியவர், " அம்மாடி… எல்லா நகையும் இப்பவே விக்கணுமா… அப்போப்போ வித்தா என்ன?" என்று நூல் விட்டுப் பார்க்க…

"அம்மா… நான் அந்தப் பக்கம் போனதும், அப்பாவை படுத்தி நகையை விக்காமல் கடனை வாங்க சொல்லுவே. அதெல்லாம் வேண்டாம்."

"ராது… இப்படி அமைதியான பொண்ணா இருக்கியேன்னு நினைச்சு கவலைப்படுவேன். ஆனால் அந்த கவலை இனி தேவையில்லை.இவ்ளோ பிடிவாதமா இருக்க… போற இடத்துல பொழைச்சுக்குவ. இங்கே மாதிரி அமைதியா இல்லாமல், அங்கேயாவது எல்லோரிடமும் கலகலன்னு சிரிச்சு பேசு." என்று சுந்தரி கூற…

அதற்கும் தன் மெல்லிய புன்னகையே பரிசாக அளித்தாள் ராதிகா.

'இதுக்கே அம்மா இப்படி சொல்றாங்களே… அடுத்து நான் சொல்றதை எப்படி எடுத்துக்க போறாங்க என்று தெரியலையே…' என்று யோசனையில் ஆழ்ந்தாள்.

"என்னடா ராது யோசனை. நான் நம்ம விக்ரமை வரச் சொல்லியிருக்கேன். அவனுக்கு தெரிஞ்ச நகைக்கடையில் நல்ல ரேட்டுக்கு வித்து தரேன் என்று சொல்லியிருக்கான். அப்படியே பேங்க்ல டெபாசிட் பண்ணிட்டு வந்துடலாம் என்ன சொல்ற…"

"சரிப்பா… அப்படியே இன்னொரு விஷயம் நம்ம விக்கி அண்ணன், வேற வீடு பார்க்கணும்னாங்களே… நம்ம மாடி போர்ஷனை கொஞ்சம் ஆல்டர் பண்ணி வாடகைக்கு விடலாம் பா." என்று தயங்கியபடியே கூறினாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே சுந்தரி "அதெல்லாம் வேண்டாம். அது உனக்கு கல்யாணம் பண்ணா தேவைப்படும் என்று பார்த்து பார்த்து கட்டுனது. வாடகைக்கு விடலாம் வேண்டாம். இப்போ உனக்கு என்ன பிரச்னை?." என்று மகளிடம் பாய்ந்தாள்.

" அம்மா… பீ ப்ராக்டிகல். நீங்க ரெண்டு பேரும் தனியா எப்படி இருப்பீங்க. அண்ணா பக்கத்துல இருந்தா சேஃப். நானும் கொஞ்ச நிம்மதியாக இருப்பேன். ப்ளீஸ் மா."என சமாதனப் படுத்த…

அவளோ சமாதானம் அடையாமல் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டிருந்தாள்.

ஒன்றும் செய்ய இயலாமல், தந்தையைப் பார்க்க…

அவரோ தான் பார்த்துக் கொள்வதாக கண் மூடித் திறக்க அமைதியானாள்.

அதோ இதோ என பிலிப்பைன்ஸ்க்கு செல்லும் நாளும் வந்து விட்டது. ஏர்போர்ட்டில் வெயிட் பண்ணிட்டு இருக்கும் போதும், சுந்தரி வழக்கம் போல சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.

" ராதுமா… நேரத்திற்கு சாப்பிடணும்… மறக்காமல் டெய்லி வீடியோ கால் போடு டா. இப்பவும் நீ அங்கே போய் ஹாஸ்டல்ல சேர்ந்ததும், ஃபோன் போடுடா… அப்ப தான் எனக்கு தூக்கம் வரும். " என்றுக் கூறிக் கொண்டே இருக்க.

அவள் கூறியதைக் கேட்ட ராதிகா டென்ஷனாகி, " மா… நான் என்ன சொன்னாலும் மைண்ட்லயே ஏத்திக்க மாட்டிங்களா மா… எனக்கு ஃப்ளைட் பத்து மணிக்கு தான் டேக்காகும். இங்கே இருந்து சிங்கப்பூர் ரீச்சாக ஃபோர் ஹவர்ஸ் ஆகும். அங்க த்ரீ ஹவர்ஸ் வெயிட் பண்ணி தான், பிலிப்பைன்ஸ்கான கனேக்டிவ் ஃப்ளைட். அதுக்கப்புறம் ஃபோர் ஹவர்ஸ் ட்ராவல் பண்ணி தான் அங்கே ரீச்சாக முடியும். அப்புறம் இமிக்கிரேஷன், மத்த பார்மலிட்டிஸ் எல்லாம் முடிஞ்சு நான் ஹாஸ்டல் போய் சேர கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி நேரத்திற்கு மேல ஆகுமா… அதுவரைக்கும் தூங்காமல் இருப்பீங்களா… ஓ காட்." என்று தன் இயல்புக்கு மீறி படப்படத்தாள்.

இரு விழிகள் அவளை வெறுப்புடன் பார்த்து விட்டு, ' என்ன பெண் இவள்? மகளைப் பிரியப் போற ஆதங்கத்தில் பெத்தவங்க ஏதாவது சொல்லத் தான் செய்வாங்க… அதுக்கு இப்படியா டென்ஷனாவாங்க.' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே விலகியதை அவள் கவனிக்கவில்லை.


இன்று…

விடாமல் இசைத்த ஐஃபோனை எடுத்து கட் செய்தவன், " உனக்கு என்ன இந்த ரிங்டோனை வச்சிருக்கிறது தானே ப்ராப்ளம். இப்பவே நான் சேன்ஞ்ச் பண்ணிடுறேன் ஓகே வா." என்று விஸ்வரூபன், அதை மாற்ற முயற்சி செய்ய…

அவன் கையில் இருந்து ஃபோனை வாங்கி மெத்தையில் வீசிய அனன்யா, " மாமா… நான் என்ன சொல்ல வர்றேன் என்று உங்களுக்கு புரியுது. ஆனால் புரியாத மாதிரி நடிக்கிறீங்க."

" இந்த பொய்யான வாழ்க்கை எவ்வளவு நாள் வாழுறது. நான் ஒருத்தி செஞ்ச தப்புக்கு, நீங்க இரண்டு பேரும் சிலுவை சுமக்குறீங்க. அவளைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு. " என அனன்யா கண்ணீர் சிந்த…

" இங்க பாரு அனு… நீயும், நானும் கணவன்-மனைவி இது உண்மை. இதை மாத்தணும் நினைக்காதே. உன்னாலே முடியாது. நாம சாகுற வரைக்கும் மாறாது இந்த பந்தம்." என்றவன், அவளை சட்டை செய்யவில்லை.

இன்டர்காமை எடுத்து ரூமை வெகேட் பண்ணுவதாக சொல்லியவன், க்ளாஸ் உடைந்ததைக் கூறி அதற்கான பேமண்டையும் பில்லில் சேர்க்க சொல்லியிருந்தான்.

ரூம் பாய் வரவும், லக்கேஜை எடுத்து வரச் சொல்லி விட்டு, அனன்யாவை கைப்பிடியாக இழுத்துச் சென்றான்.

அனன்யாவோ, இதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை. விஸ்வரூபன் கூறிய வார்த்தை கேட்டதும், மனதிற்குள் அந்த வார்த்தை ஒன்றே ஓடிக் கொண்டிருந்தது.

அதற்குப் பிறகு காரில் செல்லும் போதும், வயிற்றில் இருக்கும் குழந்தை மேல் கை வைத்துக் கொண்டு, ' இந்த பொய்யான வாழ்க்கை வாழக்கூடாது. ஆனால் குழந்தை இருக்கிறதே… சாவதற்கு கூட கடவுள் கருணை காட்டவில்லையே…' என தனக்குள் மருகிக் கொண்டிருந்தாள். நல்ல படியாக குழந்தையை பெற்றெடுத்து விட்டு, என்னவனை தேடி செல்ல வேண்டும் என்று அந்த நொடியிலிருந்து தீவிரமாக எண்ணத் தொடங்கினாள் அனன்யா.

ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு வந்த ராதிகாவோ, உற்சாகத்தில் மிதந்தாள். வரும் வழியில் பாம்பே ஸ்வீட்ஸில் சந்திரகலா ஸ்வீட்ஸ் இரண்டு பாக்ஸ் வாங்கிக் கொண்டாள்.

" அம்மா… அப்பா… " என்று கத்தியபடியே வீட்டிற்குள் நுழைந்த ராதிகா, சுந்தரியுடன் பேசிக் கொண்டிருக்கும் ஸ்வேதாவை பார்த்து, " ஹாய் அண்ணி… நீங்களும் இங்கே தான் இருக்கீங்களா. டூ மினிட்ஸ் ப்ரெஷ்ஷப் ஆகிட்டு வந்துடுறேன்" என்றவள் தான் வாங்கி வந்தவற்றை டீபாய் மேல் வைத்து விட்டு தனதறைக்கு ஓடினாள்.

இரண்டு நிமிடம் என்றவள், வழக்கம் போல ஒரு குளியல் போட்டு விட்டுத் தான் வந்தாள்.

" என்ன ராது… திடீர்னு ஸ்வீட் வாங்கிட்டு வந்திருக்க…" ஸ்வேதா வினவ.

"ஒரு சந்தோஷமான விஷயம். அதான் ஸ்வீட் வாங்கிட்டு வந்தேன். ஆமாம் என்னோட ஸ்வீட்டி எங்கே?"

"அவ அங்கிளோட கடைக்கு போயிட்டா… என்ன விஷயம் அதை மொதல்ல சொல்லு.

"அது… இன்னைக்கு எங்க டாக் ஃபோன் பண்ணுனார். பீஜி நீட் ரிசல்ட் வரவும் காஞ்சிபுரத்தில அவரோட ஃப்ரெண்ட் காலேஜ்ல சேர சொல்லிட்டார். அங்கே எனக்கு ஃப்ரீ கோட்டால சீட் அலாட் பண்ணியிருக்காங்க." என தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டாள் ராதிகா.

ஆனால் அதன் எதிரொலி அங்கு ஒலிக்கவில்லை.

சுந்தரியும், ஸ்வேதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர்.

"என்ன மா… நான் எவ்வளவு ஹாப்பியான நியூஸ் சொல்லிட்டு இருகக்கேன். நீங்க ஒன்னும் சொல்லாமல் இருக்கீங்க."

" சந்தோஷம் தான்டா… உனக்கு இருக்குற திறமைக்கு சீட் கிடைக்கும் டா." என்றாள் சுந்தரி.

" திறமை இருக்குறவங்களுக்கு சீட் கிடைக்கும். பட் எங்க டாக் முயற்சியால் செலவில்லாமல் சீட் கிடைச்சிருக்கு. ஆனால் நீங்க என்னமோ யோசனையில் இருக்க மாதிரி தெரியுதே." என்று ஆராய்ச்சியாக சுந்தரியைப் பார்க்க…

சுந்தரி என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க. ஸ்வேதா தான் பதிலளித்தாள். " ராது… அங்கிளுக்கும், ஆன்டிக்கும் தஞ்சாவூரை விட்டுட்டு வர மனசில்லை."

" மா… கடை வித்துட்டு என்னோட சென்னைக்கு வருவதாகத் தானே ப்ளான்." என்று குழப்பத்துடனே ராதிகா வினவ.

சரியாக அந்த நேரத்திற்கு சண்முகம், விகர்தனாவுடன் நுழைந்தார்.
விகர்தனா விக்ரம், ஸ்வேதாவின் மகள். நான்கு வயது சுட்டி. ராதிகாவிற்கு ஸ்வீட்டி. அவளுக்கு ராதிகா ஸ்வீட்டி.

"ஸ்வீட்டி …" என்று ஓடிவந்த விகர்தனாவைக் கூட கண்டுகாமல் அதிர்ந்து நின்றாள்.

"ராது… குட்டிமா கூப்பிடுறா பாரு… உனக்கு எது கேட்கணும்னாலும் அப்பாக் கிட்ட கேளு… நான் உங்களுக்கு காஃபி போடுறேன்." என்று விட்டு கிச்சனுக்குள் நுழைந்துக் கொண்டார்.

ஸ்வேதாவோ, " நான் அப்புறமா வரேன்." என்றுக் கூறி விட்டு மகளையும் அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள்.

" என்னடா ராது‌… முகம் வாடிப் போய் இருக்க? உங்க அம்மா ஏதும் வம்பிழுத்தாளா?"

"அப்பா… சென்னைக்கு என் கூட வரமாட்டீங்களா…" என்று ஏக்கமாக வினவ.

" இதுக்குத் தான் இப்படி முகம் வாடிப் போய் இருக்கீயா? பதினெட்டு வயசுல தைரியமா வெளிநாட்டில் படிக்கிறதுக்கு முடிவெடுத்து, அதற்கான முயற்சி எல்லாம் செஞ்ச என்னுடைய ராதுவா என்று யோசனையா இருக்கு.

இப்ப நீ ஒரு டாக்டர். மெச்சூர்டு கேர்ள். இருபத்து ஐந்து வயசாகப் போகுது. தைரியமா போய் படிக்கிறத விட்டுட்டு, எங்களை இந்த வயசான காலத்துல அங்கே கூப்புடுற.

இத்தனை வருஷம் இருந்த இடத்திலிருந்து, புது இடத்திற்கு மாறனும்னா எங்களுக்கு கஷ்டமா இருக்குது டா.

அங்க நல்ல ஹாஸ்டல்ல போய் சேர்க்கிறேன் டா. வாராவாரம் சனி ஞாயிறு இங்கே வா."

" அப்பா… அண்ணாக் கிட்ட கடையை கொடுக்கிறேன் என்று சொல்லிருந்தீங்க. இவ்வளவு நாள் நமக்காக உழைச்ச விக்கியண்ணாக்கு, நம்பிக்கை கொடுத்துட்டு இல்லைன்னு ஏமாத்தப் போறீங்களா."

" என்னடா இப்படி பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுற. விக்ரம நம்ம கடை மேனேஜரா மட்டும் நான் பார்க்கலை. இந்த வீட்டில ஒருத்தனா தான் பார்க்குறேன்.

லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டு, வீட்டுல ஒத்துக்கலை என்று திருச்சியை விட்டு இங்கே வந்த அன்னையிலிருந்து, நான் அவனுக்கு ஆதரவாக தான் இருக்கேன்.

அம்மாவால இந்த ஊரை விட்டு வர மனசில்லை என்று சொன்னா… அதான் இங்கேயே இருக்கோம் என்று சொன்னேன். நான் விற்கிறேன் என்று சொன்னபோதே, விக்ரம் பார்ட்னர்ஷிப் போட்டுப்போம் அங்கிள் என்று சொன்னான்.

இப்பவும் அதே தான், விக்ரம் இந்த கடையோட ஒன் ஆஃப்த பார்ட்னர்."

காஃபி எடுத்துக் கொண்டு வந்த சுந்தரி மகளிடம் நீட்டியவாறே, "உங்க அப்பா என்ன மட்டும் மாட்டிவிட்டாரு. அவர் சொன்னதை மட்டும் உன் கிட்ட இருந்து மறைக்கிறாரு. அங்கு வந்து வேலை இல்லாமல் வீட்டில் அவரால அடைஞ்சுக் கிடக்க முடியாதாம். இத்தனை வயசுக்கு மேல அடுத்தவங்க கிட்ட வேலைக்குப் போகுறதுக்கும் செட்டாகாதாம்." என்று சண்முகத்திற்கும் சென்னைக்கு வருவதில் விருப்பமில்லை என்பதை போட்டுக் கொடுத்தாள்.

இருவரையும் பார்த்து முறைத்த ராதிகா, "என்னை விட்டுட்டு இருவரும் தனிக்குடித்தனமா இருக்க பிளான் பண்றீங்க… அப்படித்தானே…" என.

" மூணு வருஷம் தானே... கண்ண மூடித் திறக்கதுக்குள்ளே ஓடிப் போய்விடும். அதுக்குள்ள உனக்கு நல்ல வரன் அமைஞ்சா கல்யாணம் பண்ணிடுவோம். அப்புறம் என்ன எங்களையாத் தேடப் போற…" என்று சண்முகம் கூற.

முகம் மாறாமல் சமாளித்தவள், "நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன். ஸ்வீட்டை சாப்பிடுங்க. மாடியில அண்ணிக்கிட்ட ஒரு ஸ்வீட் பாக்ஸைக் குடுத்துடுங்க." என்றவள் தனது அறைக்கு ஓட…

"கல்யாணப் பேச்சை எடுக்கவும், என் பொண்ணுக்கு வெட்கத்தைப் பாரு." என்று தனது மனைவியிடம் கூறி சிரித்தார் சண்முகம்.

உள்ளே சென்ற ராதிகாவோ, தனது கையிலிருந்த மோதிரத்தை வருடிக் கொண்டிருந்தாள். அவளது கண்களிலிருந்து இரு சொட்டு கண்ணீர் வழிந்தது.

தொடரும்...
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 5

அன்று...

" ஹாய் மாம்ஸ்… என்ன உங்க மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கு. எந்த ஃபிகரையாவது சைட் அடிச்சுட்டு, திட்டு வாங்கிட்டு வர்றீங்களா…" நமுட்டு சிரிப்புடன் அனன்யா கிண்டலடிக்க…

" எது நான் சைட் அடிச்சு திட்டு வாங்கிட்டு வரேனா… உன் ரைட்ல திரும்பி பாரு. நான் ஒரு பார்வை பார்க்க மாட்டேனா, ஒரு கூட்டமே காத்திட்டு இருக்கிறதை." என...

அங்கு விஸ்வரூபன் சொன்னதை போல இரண்டு இளம்பெண்களும், கூட ஒரு பையனும் பார்த்துக் கொண்டிருக்க… முதலில் அதிர்ந்த அனன்யா, பிறகு வாய்விட்டு நகைக்கலானாள்.

" மாம்ஸ்… ஆனாலும் உங்களுக்கு ஓவர் கான்பிடன்ஸ் ஆகாது. அந்த ப்யூட்டிஸ் உங்களைப் பார்க்கலை‌. அந்த தாத்தாவைப் பார்த்திருக்காங்க." என்று சொல்லியவள் மீண்டும் சிரிக்க…

"சரி… சரி… விடு. இந்த மாதிரி பல்பு வாங்குவது என்னைப் போல அழகான பசங்களுக்கு சகஜம் தான். அவங்களுக்கு கண்ணு தெரியலை. அதுக்கென்ன பண்றது…" என்று விஸ்வரூபன் பெருமூச்சு விட…

"உங்களைப் போய் நல்லவன்னு நம்பறாங்களே எங்க அம்மா... அவங்களை சொல்லணும்." என்று அவன் தோளிலே ஒரு அடி போட்டாள் அனன்யா.

"ஏய் அந்துருண்டை… உண்மையிலேயே நான் நல்லவன் தான் நம்புமா." என்று அந்த நல்லவனில் அழுத்தம் கொடுத்து கண்ணடித்து சிரித்தான்.

அவனின் புன்னகை, அவள் முகத்திலும் தொற்ற, " ஓகே விளையாட்டு போதும் மாமா. நீங்க ஏன் டென்ஷனா இருந்தீங்க. சொல்லுங்க" என விடாப்பிடியாக கேட்க.

" இல்லை அந்துருண்டை. அங்கப் பாரேன். அந்த அம்மா எவ்வளவு தவிப்போட இருக்காங்க. அவங்க பொண்ணு ரொம்ப திமிர் பிடிச்சவ போல. எடுத்தெறிஞ்சு பேசுறா."

விஸ்வரூபன் காட்டிய திசையில் பார்வையை செலுத்தினாள் அனன்யா.
அவளுக்கு என்னவோ ராதிகாவை பார்த்தவுடனே பிடித்து விட்டது.

" எனக்கு என்னமோ அந்த பொண்ணைப் பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலை. அந்த பொண்ணுக்கு என்ன டென்ஷனோ? எதுவும் தெரியாமல் நாம ஜட்ஜ் பண்ண கூடாது மாமா." என்றாள் அனன்யா.

" நீ சொல்வதும் சரி தான்… நமெக்கென்ன வந்தது… சரி வா நாம போகலாம்." என்றவன் அவர்களுக்கான கேட் அருகே அழைத்துச் சென்றான்.


ராதிகாவோ, பெற்றோருடன் துணைக்கு வந்திருந்த விக்கியிடம் திரும்பி, "அண்ணா… பத்திரமா கூட்டிட்டு போங்க. அவங்களைப் பார்த்துக்கோங்க." என்றவள் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு சிரித்தாள்.

"அப்பா… பை பா. அம்மாவைப் பார்த்துக்கோங்க." என்றவள் அம்மாவை இறுக கட்டிப்பிடித்து, " என்னையப் பத்தி மட்டும் நினைக்காமல், அப்பாவையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க மா. ஈவினிங் அண்ணியோட பக்கத்து பார்க்குக்கு வாக்கிங் போயிட்டு வாங்க. ரிலாக்ஸா இருங்க மா." என்றவள், எங்கே இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால், கட்டுப்பாட்டை மீறி அழுது விடுவோம் என எண்ணியதால் டைம் ஆயிடுச்சு என்று கூறிவிட்டு திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள்.

அவளது தலை மறையும் வரை கையாட்டிக் கொண்டே இருந்தனர் சண்முகமும், சுந்தரியும்...

உள்ளே நுழைந்த ராதிகாவிற்கோ, பெற்றோரைப் பிரிந்து செல்லும் வருத்தம் இருந்தாலும், அதையும் மீறி ஒரு பதட்டம் இருந்தது.

ஏஜெண்டின் உதவியுடன் தன்னுடைய லக்கேஜ்ஜை செக் செய்து விட்டு, போர்டிங் பாஸ் வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கேட்டருகே காத்திருந்தாள்.


அனன்யாவின் பார்வை சுற்றிலும் அலைபாய…

" யாரை தேடிட்டு இருக்க?" என விஸ்வரூபன் வினவ…

"அது நாம பாத்தோம்ல அந்த பொண்ணு… அவங்களும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுல தான் வர்றாங்க என்று நினைக்கிறேன். அதான் எங்கேயாவது தெரிகிறார்களா என்று பார்த்தேன்."

லூசா நீ என்பதுப் போல் அவளைப் பார்த்தவன்," அந்த பொண்ணு யாருன்னே தெரியாது. முன்னப்பின்னே பார்த்ததுல்ல… மறுபடியும் பார்க்க போறீயான்னும் தெரியல. எதுக்கு அந்த பொண்ண பத்தி பேசிட்டு இருக்க. ஸ்டாப் த டாஃபிக்." என்றவன் அதற்குப் பிறகு வேறுப்பேச்சுக்கு தாவி விட்டான்.

அப்பொழுது தெரியவில்லை இனி எப்பொழுதும் அனுவின் வாயில் அந்தப் பெண்ணின் பெயர் மட்டுமே ஒலிக்கப் போகிறது என்பதையும், இருவரும் நெருக்கமான தோழிகளாக போவதையும் அறியவில்லை. அதற்கும் மேலாக அவனது இதயத்தை கொள்ளையடிக்கப் போகிறாள் என்பதையும் அறியவில்லை.

ஃபிளைட்டில் பிஸினஸ் க்ளாஸில் செல்வதால் சிங்கப்பூர் செல்லும் வரை அவளை சந்திக்கவில்லை.

சிங்கப்பூரில் காத்திருக்கும் நேரத்தில், " மாம்ஸ்… லைட்டா பசிக்குது. ஏதாவது சாப்பிடலாம் வாங்க." என அனன்யா அழைக்க.

" அடிப்பாவி… ஃப்ளைட் ஏறினதுல இருந்து, ஏதாவது உள்ள தள்ளிட்டே இருந்தீயே… அந்த வாய்க்கு ரெஸ்டே கிடையாதா? அந்த வாய்க்கு மட்டும் வாய் இருந்தது கதறி தீர்த்துடும்." என்று கிண்டலடித்தவாறே அங்கிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.

" லூசு மாதிரி உளறாதீங்க மாமா." என்றவள், அங்கு சென்று இருவருக்கும் காஃபியை ஆர்டர் செய்தாள்.

அங்கே காத்திருக்கும் போது திடீரென்று, " ஐயோ! மாமா." என கத்த…

"ஏய் எதுக்குடி கத்துற? எல்லோரும் பார்க்குறாங்க." என்றவன் சுற்றிலும் பார்வையிட.

அவனுக்கு நேர் எதிரே இருந்த டேபிளில் இருந்த ராதிகா, அனன்யாவின் குரலில் நிமிர்ந்துப் பார்த்தவளின் பார்வையில், லேசாக குனிந்து பேசிய விஸ்வரூபனைத் தான் கண்டாள்.

சடக்கென்று நிமிர்ந்து சுற்றிலும் பார்வையிட்ட விஸ்வரூபனின் பார்வையை கவனித்து படக்கென திரும்பிக் கொண்டாள்.

இதெல்லாம் நொடிப்பொழுதில் நடத்துவிட… அனன்யாவோ,
"மாம்ஸ்… இந்தியன் ஃபுட் இல்லாமல் ஹவ் கேன் ஐ மேனேஜ்." என இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது தனது உணவு பற்றி கவலையாக கேட்க.

அவள் தலையில் ஒரு கொட்டு வைத்தவன், " இப்பக் கேளு… உன்னை என் ஃப்ரண்டோட வீட்டில் பேயிங் கெஸ்ட்டா தான் தங்க வைக்கப் போறேன். சாப்பாடு எல்லாம் அவங்களே ப்ரீப்பேர் பண்ணிடுவாங்க. அதனால உனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. அப்படி இல்லனாலும் அங்க நிறைய இந்தியன் ரெஸ்டாரன்ட் இருக்கு. நம்ம ஊரு சாம்பார் இட்லியிருந்து, பிரியாணி வரைக்கும் உண்டு. அப்புறம் உன்னோட ஐட்டம் பானிப்பூரி வரைக்கும் கிடைக்கும்."

" அப்ப‌ சரி." என்றவள் மீண்டும் தனது காஃபியில் கவனம் செலுத்தினாள். அனன்யாவின் கலக்கம் மறைந்தது.
அவளோடது மட்டுமல்ல... ராதிகாவின் முகத்தில் இருந்த கலக்கமும் இப்போது மறைந்திருந்தது.

தனது எதிரே இருந்த நெடியவனின் முகத்தைப் பார்த்தவளின் முகம் ஏனோ அமைதியடைந்தது. ஒரு வழியாக அந்த காஃபி ஷாப்பிலிருந்து கிளம்பியவள், அவள் கூட வந்தவர்களுடன் சேர்த்துக் கொண்டாள்.

அனுவோ, விஸ்வரூபனுடன் கிளம்பி விட்டாள்.

விஸ்வரூபனோ, பிலிப்பைன்ஸில் அவனது ஃப்ரண்ட் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

கீழே அவனது ஃப்ரெண்ட், ஃபேமிலியோட தங்கி இருக்க… மாடியில் இரண்டு போர்ஷன் இருந்தது. ஒன்றில் இவளுக்காக ஏற்பாடு செய்திருக்க… மற்றொன்றில் நண்பனின் ரிலேஷன் தங்கியிருந்தார்கள்.

விஸ்வரூபன் ஒரு வாரம் அவளுடன் தங்கி இருந்து, அவளுக்கு எல்லா வசதிகளும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து, காலேஜுக்கும் அழைத்துச் சென்று எல்லாம் சரி செய்து விட்டு இந்தியா திரும்பினான்.

இரண்டே நாட்களில் அனன்யா இந்தியாவிற்கு அழைத்து ஹாஸ்டலில் போய் சேர்ந்து கொள்கிறேன் என்றாள்…



ராதிகா ஏஜென்ட் மூலம் பிலிப்பைன்ஸ் வந்து இறங்கியவள் எல்லா ஃபார்மாலிட்டிஸும் முடித்து, ஹாஸ்டலிலும் வந்து சேர்த்து விட்டாள்.

ஒரு அறைக்கு இரண்டு பேர் என் தங்கியிருந்தனர்.
ஆனால் அவளது அறைக்கு தான் இன்னொருவர் வரவில்லை. இப்பொழுது அவள் மட்டுமே…

ஹாஸ்டலைப் பொறுத்தவரை ராதிகாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்திய உணவு தான் அங்கு… அவளுக்கு புதிய இடம் என்று கொஞ்சம் மிரட்சியாக இருந்தது. பொதுவாகவே அமைதியான ராதிகா, யாரிடமும் கலகலவென என்று பேசாமல் மெல்லிய புன்னகையுடனே நின்றுக் கொண்டாள்.

ஆனால் காலேஜில் அதே மாதிரி இருக்க முடியவில்லை‌. முடியவில்லை என்பதை விட ஒருத்தி இருக்க விடவில்லை என்று தான் கூற வேண்டும்.

காதலன் காதலியை சுற்றுவது போல, ராதிகாவேயே சுற்றி, சுற்றி வந்து அவளது எதிர்பாராத அன்பால் திகைக்க வைத்தாள்.

இன்று…

காரை ஓட்டிக்கொண்டு இருந்த விஸ்வரூபனின் பார்வை அவனது கைகளில் இருந்த மோதிரத்திலே சென்று, சென்று மீண்டது. 'அனன்யாவின் வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பு. ' என்று தனக்குள் உருப்போட்டுக் கொண்டிருக்கும் போதே, 'ராதிகா?' என மனசாட்சி கேள்வி எழுப்பியது.

'அவளுக்கென்ன எங்க இரண்டு பேரையும் பார்த்து, வெறுத்து போயிட்டா… சீக்கிரமே அம்மா, அப்பா பார்க்குற பையனைப் பார்த்து செட்டில் ஆயிடுவா…' என்று எண்ணியவன் சாலையில் கவனம் செலுத்தினான்.

அனன்யாவோ, தன் வயிற்றில் கையை வைத்துக் கொண்டே தூங்கி விட்டாள்.

உறங்கும் அவளைப் பார்க்க… அவளோ, அநாதரவாக இருக்க.

மெல்ல அவளை அணைத்து தோளில் சாய்த்துக்கொண்டான்‌.

விழித்திருந்தால் இப்போது பதறி விலகி இருப்பாள்.' பழைய அனன்யாவை திரும்பப் பார்க்கவே முடியாதா?' என்று எண்ணியவன் பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

முதல்நாள் கிளம்பியவர்கள், மறுநாளே திரும்பி வந்திருக்க…

"ஏன் பா… என்னாச்சு? வர ரெண்டு நாளாகும் சொன்னீங்க… உடனே வந்துட்டீங்க. அனும்மாவுக்கு ஏதும் பண்ணுதா?" என ரஞ்சிதம் பதற…

"ஒன்னும் இல்லை அத்தை." என்ற அனன்யா சோர்வாக அவர்களது அறைக்குச் சென்றாள்.

செல்லும் மருமகளை கவலையாக பார்த்தாள் ரஞ்சிதம்.

" மா… பெரிய கோவில் பார்க்கணும்னு ஆசைப்பட்டா… அப்படியே திருச்சிக்கும் போயிட்டு வரலாம் என்று பார்த்தோம். பட் அவளுக்கு டயர்டா இருக்கு என்று சொன்னா… அதான் வந்துட்டோம். வர வழியிலே சாப்பிட்டோம். இப்ப அவக் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். நான் ப்ரஷ்ஷாகிட்டு ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வரேன் மா."

"நாளைக்கு போகக் கூடாதா பா?" ரஞ்சிதம் வினவ.

" ப்ச்… இங்கே இருந்து என்ன பண்ணப்போறேன்." என்றவன் தனது அறையை நோக்கி சென்றான்.

' எப்படி கலகலன்னு இருக்குற ரெண்டு பேரும் இப்படி இருக்கிறார்களே. இப்படியே இரண்டு பேரும் ஒட்டாமலே இருந்துடுவார்களோ… இந்த அத்தை இப்படி ஒரு அநியாயம் செய்துருக்கக் கூடாது.' என்று மனதிற்குள் மகனிற்காக கவலைக் கொண்டார் ரஞ்சிதம்.

***************
நாட்களும் வேகமாக மறைய… ராதிகா சென்னைக்கு கிளம்பும் நாளும் வந்தது.

" ராது எல்லாம் எடுத்து வச்சுட்டியா. இல்லை நான் ஹெல்ஃப் பண்ணவா?" சுந்தரி வினவ.

"அதெல்லாம் தேவையில்லை. நானே பாத்துக்கிறேன்." என்றாள் ராதிகா.

"ஊருக்கு போகும் போது, இப்படி முகத்தை தூக்கி வச்சி இருக்க? அப்புறம் எப்படி நாங்க நிம்மதியாக இருக்கிறது. இல்லை நானும், அப்பாவும் சென்னைக்கு வரட்டுமா? "

" எதே… இங்கே இருக்க சென்னைக்கு துணைக்கு வர்றீங்களா… வெளிநாட்டுக்கே நான் தனியா தான் போய்ட்டு வந்துட்டுருக்கேன். அதுவுமில்லாமல் அல்ரெடி ரெங்கா ட்ராவல்ஸ்ல சென்னைக்கு டிக்கெட் போட்டாச்சு."

" அப்புறேன் ஏன் ராதுமா கோவமா இருக்க?"

" பின்னே நைட்டு கிளம்பிடுவேன். என்னைக் கண்டுக்காமல் ஸ்வீட்டியையே கவனிச்சிட்டு இருக்கீங்க. அதான் மீ கோவமா இருக்கேன்."

" அடிக்கழுதை… குழந்தையோட சேடைப் போடுறீயா… உதை வாங்கப் போற… கொஞ்ச நேரத்திலே என்னைப் பாட படுத்தியெடுத்துட்ட… " என்றாள் சுந்தரி.

" சும்மா… லுலூலாய்க்கு வம்பு பண்ணேன்." என்ற ராதிகா கலகலவென நகைத்தாள்.

"இன்னும் ஒரு மாசம் கழிச்சு தான் காலேஜ் சேரணும் என்று சொல்லிருந்தே… இப்போ திடுதிடுப்னு போகணும்னு சொன்னதே கஷ்டமா இருக்கு. இதுல விளையாட்டு வேறயா? ஆனால் விளையாட்டுக்குக் கூட குழந்தையோட வம்புக்கு போகாதே. அவங்களுக்கு எதுவும் புரியாது." என்ற சுந்தரியை பெருமைப் பொங்கப் பார்த்தாள் ராதிகா.

ஆனால் இதே சுந்தரி ஒரு குழந்தையை வெறுப்பாகப் பார்க்கப் போகிறாள் என்பதை அப்போது இருவரும் அறியவில்லை.

" மா… காலேஜ் ஆரம்பிக்க நாள் இருக்கு. அவங்க ஹாஸ்பிடல்லேயே எங்க டாக் வேலைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கார். இந்த ஒரு மாதம் வேலைக்கு போக சொன்னார். அப்புறம் காலேஜ் ஆரம்பிச்சதும், பார்ட் டைம்மா வொர்க் பண்ண சொல்லியிருக்கார். ஹாஸ்டலும் பக்கத்துல இருக்கிற மாதிரி தான் அரேஞ்ச் பண்ணியிருக்கிறார். சோ நோ ப்ராப்ளம்."

" சரி கவனமா இரு… இன்னும் அப்பாவைக் காணும்."

" அப்பாவும், விக்கியண்ணாவும் ஒன்னா தான் வருவாங்க என்று நினைக்கிறேன். அண்ணா வந்து பஸ் ஸ்டாண்ட்ல விடுறேன் என்று சொல்லியிருக்கிறார் மா."

" சரி மா…" என்றவர், மகள் கிளம்பும் வரை அவளோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

ஒருவழியாக சென்னைக்கு கிளம்பிய ராதிகா, அதிகாலையில் காஞ்சிபுரத்தில் இறங்கினாள்.

ஆட்டோ பிடித்துக் கொண்டு ஹாஸ்டலில் சேர்ந்தவள், அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட தனியறைக்குள்‌ நுழைந்தாள்.

ரெஃப்பிரஷ்ஷாகிக் கொண்டு வந்தவள், டாக்டர் சேலவர், வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்த எண்ணுக்கு அழைத்தாள்.

முழு ரிங்கும் அடித்து முடிக்கும் வரை அந்த பக்கம் ஃபோன் எடுக்கவே இல்லை. திரும்பத்திரும்ப நான்கைந்து முறை போட்டவள், பதட்டமாக பிலிப்பைன்ஸில் இருக்கும் டாக்டர் சேலவருக்கு அழைத்தாள்.

"வாட் ராதிகா ? எனிதிங் ப்ராப்ளம்?"

" டாக்… நீங்க கொடுத்த நம்பருக்கு கால் பண்ணேன். பட் நாட் ஆன்சரிங்." என்று பதற்றத்துடன் கூறினாள்.

"ஹேய் ரிலாக்ஸ் ராதிகா. ஐ வில் ட்ரை ஒன்மோர் டைம் அன்ட் கால் யூ பேக் ." என்று வைத்து விட…

அவருடைய பதிலுக்காக காத்திருக்கத் தொடங்கிய ராதிகாவின் மனமோ, பதட்டத்துடன் உலகையே சுற்றி வந்து விட்டது. ' ஒரு வேளை டாக்கோட வற்புறுத்தலால் ஓகே சொல்லிட்டு இப்போ தவிர்க்க பார்க்கிறார்களோ! தன்னுடைய கனவு அவ்வளவு தானா…' என்று தனக்குள் மறுகிக் கொண்டிருத்தாள்.

இவளது எண்ணவோட்டத்தைப் புரிந்துக் கொண்ட சேலவர் உடனே கால் செய்து விட்டார்.
தயக்கத்துடனே எடுத்த ராதிகாவிடம், "சாரிமா … " என்று அவளது ஹார்ட் ஃபீட்டை எகிற வைத்தவர், " ராதிகா அவர் வீட்டில் ஒரு இன்சிடென்ட். அவர் இப்போ பேசுற நிலைமையில் இல்லை. அவர் பி.ஏ கிட்ட தான் பேச முடிந்தது. உன்ன டேரக்டா ஹாஸ்பிடலுக்கு போய் ரிசப்ன்ல விசாரிக்க சொன்னாரு. அவங்க மேனேஜ்மெண்ட் கிட்ட சொல்லுவாங்க. அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வாங்கிட்டு இன்னைக்கே வேலையில ஜாயின் பண்ணிக்கோ… வீ வில் மீட் அவர் டீன் சூன்."

" சாரி டாக். உங்களை ரொம்ப தொந்தரவு பண்றேன். அண்ட் தேங்யூ சோ மச் டாக்."

" நோ மை டியர். உனக்கு அந்த தகுதி இருக்கு. உன் கனவெல்லாம் சீக்கிரம் நிறைவேற வாழ்த்துக்கள் டியர். " என்றவர் வைத்து விட…

ஃபோனை வைத்த ராதிகா மனதிற்குள் கடவுளுக்கு நன்றி கூறினாள்.

குளித்து விட்டு உணவருந்தி விட்டு, சுகம் மருத்துவமனைக்கு சென்ற ராதிகா, ரிசப்ஷனில் விசாரிக்க… அவளை அடுத்த ப்ளாக்கிற்கு சென்று ஹாஸ்பிடலின் அட்மினிடம் அழைத்துச் சென்றனர்.

அங்கே போய் தன்னுடைய அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரை வாங்கும் போது தான், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சார் வரததற்கான காரணம் தெரிய வந்தது.

அவருடைய மருமகள் பிரசவத்தில் இறந்து மூன்று நாட்கள் தான் ஆகிறது.

அவளால் நம்பவே முடியவில்லை. இந்த காலத்திலும் பிரசவம் ஒரு மறுஜென்மம் தான் போல…. எவ்வளவு டெக்னாலஜிஸ் வளர்ந்தாலும், டாக்டர்ஸ்ஸை மீறிய சக்தி உண்டு.

அவள் அங்கு வேலைக்கு சேர்ந்து ஒரு மாத காலம் ஆகியும், இன்னும் அவர்களது டீன் டாக்டர் கிருஷ்ணனை சந்திக்கவில்லை. ஏன் பிலிப்பைன்ஸில் இருந்து மாதம் ஒரு முறை வரும் டாக்டர் சேலவரையும் சந்திக்கவில்லை. இந்த முறை அவர் வருவது சற்று தாமதமாகியிருந்தது.

டாக்டர் கிருஷ்ணனை அவளது காலேஜில் தான் சந்திக்க போகிறாள். அது மட்டுமல்லாமல் அவரை சைட் அடிக்க போவதையும் அப்போது அறியவில்லை.

முதல் மாத சம்பளம் வாங்கி விட்டாள். நாளையிலிருந்து கல்லூரி. இனி பார்ட் டைம் ஜாப் தான்.

வீட்டிற்கு வீடியோகாலில் அழைத்தவள், தான் சேலரி வாங்கியதைக் கூறி ஆர்ப்பரிக்க…

"அட லூசே" என்பது போல சுந்தரிப் பார்க்க…

"சண்முகமோ சந்தோஷம் பாப்பா." என்றார்.

"என்னமா உன் பார்வையே சரியில்லையே." என்று ராதிகா வினவ.

"ஐயோ! ஸ்வீட்டி… நீ ஏற்கனவே நீ ஊசி போட்டு தானே இருந்த. எனக்கு சாக்கி, ஐஸ்கிரீம்ல வாங்கித் தந்தியே." என விகர்தனா கூற…

"ஐயோ!" என தலையில் கைவைத்துக் கொண்டாள்.

அவளது முகபாவனையைப் பார்த்த சுந்தரி அடக்கமாட்டாமல் நகைத்து, "சின்ன குழந்தைக்கு தெரியுது. நீ ஏற்கனவே வேலைப் பார்த்தது. உனக்கு மறந்துருச்சு. " என…

" ஏய் ஸ்வீட்டி… நீ தான் எனக்கு வில்லி." என.
"நோ ஸ்வீட்டி… நான் உன் ஸ்வீட்டி." என்று மழலையில் மிழற்றினாள் விகர்தனா.

அவளது பாவனையில் ராதிகாவும் மலர்ந்து சிரித்தாள்.

" பை மா… பை ஸ்வீட்டி…" என்று வைத்தவளின் மனமோ, இப்போது கலக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது.

நாளையிலிருந்து காலேஜ்… மீண்டும் ஒரு கல்லூரி பயணம்… சொல்லாமலே அனன்யாவின் ஞாபகம் வந்து சென்றது. மனம் பிசைய, உறங்க முயன்றாள்.

தொடரும்...
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 6

அன்று…

ராதிகாவிற்கு இன்னும் பிலிப்பைன்ஸ் செட் ஆகவில்லை. டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற கனவிற்காக துணிச்சலோடு கடல் கடந்து வந்து விட்டாள்.

ஆனால் பெற்றோர் இல்லாத தனிமையில் மனம் துவண்டு தான் போனது.

இதோ இன்றிலிருந்து கல்லூரி ஆரம்பம். அதற்காக கிளம்பி விட்டாள். ஃபர்ஸ்ட் ஒன் இயர் பி எஸ் படிக்க வேண்டும். அதற்குப் பிறகு தான் இங்கு மருத்துவம் படிக்க முடியும். பிஎஸ் என்பது சைக்கலாஜிப் பற்றியது.

இவர்களது காலேஜ், ஹாஸ்டலில் இருந்து நடந்து செல்வதற்கு அரைமணி நேரமாகும். ஆட்டோ வசதி எல்லாம் அங்கே அவ்வளவாக கிடையாது. சிற்சில ஆட்டோக்களே ஓடும். அதுவும் தெருக்களில் தான். இங்கே காலேஜிற்கு ஜிப்னியில் போகலாம் என்று தெரிந்து வைத்திருந்தாள். செவன் பேசோஸ் ஆகும். பேசோஸ் என்பது இங்குள்ள மணி.

ஹாஸ்டலில் இருந்து வந்தவள் ஜிப்னியில் ஏறி ஒரு வழியாக காலேஜ் சென்றாள்.

உள்ளுக்குள் பயம். காலேஜில் ராகிங் அவ்வளவாக இருக்காது என்று ஹாஸ்டலில் கூறியிருந்தார்கள்.

அப்படிக் கூறியிருந்த ஹாஸ்டலிலே ராகிங் நடந்தது. எல்லாம் ஃபன்னுக்காக தான் நடந்தது. பெருசா எதுவும் கிடையாது. ஜஸ்ட் ஏதாவது கவிதை சொல்றது, இல்லை ராம்ப் வாக் பண்ண சொல்றது. இப்படி ஏதாவது சின்ன சின்னதா செய்ய சொல்லி, அவங்க சீனியர்ஸ் என்று கெத்து காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

காலேஜிலும் இதே போல் நடக்குமோ என்ற பயத்திலே வந்தாள் ராதிகா.

அவள் முகம் ஏற்கனவே வாடி இருந்தது. இரவில் இவளது அறையில், தனியாகப் படுக்க பயந்து அரைகுறையாக தூங்கி எழுந்து வந்தாள்.

சிறுவயதில் எல்லாம் அப்படி இல்லை. ஒரு சில வருடங்களாக இவளை தனியாக படுப்பதற்கு பெற்றோர் விடுவதில்லை. அவர்கள் கூடவே இருப்பார்கள். இப்போது திடீரென்று தனியாகப் படுக்க, அவளுக்கு உறக்கம் வராமல் ஆட்டம் காண்பித்தது…

பொதுவாக ராதிகா அமைதியாக இருந்தாலும், தைரியத்துடன் தான் இருப்பாள். ஆனால் அவளது இயல்பே இப்பொழுது மாறிவிட்டது‌.

இரவெல்லாம் தூக்கம் வராமல் அரைகுறையாக தூங்கி, காலையில் கல்லூரிக்கு கிளம்பி வந்தவளின் முகத்தில், பயமும் சேர்த்துக் கொள்ள அவளது முகமே களையிழந்து காணப்பட்டது.

அங்கு இருந்த சீனியர்ஸ் அவளை அழைக்க…

ராதிகா பயத்துடனே அவர்கள் அருகே செல்ல… அவர்கள் வழக்கம் போல ஜாலியாக சில டேர் செய்ய சொல்ல…

ஒரு வழியாக செய்து முடித்தாள்.

அப்போது தான் உள்ளே நுழைந்த அனன்யாவோ, தூரத்திலிருந்தே ராதிகாவைப் பார்த்து விட்டாள்.

' ஏர்போர்ட்டில் பார்த்த பெண் தானே. வாவ்… அவளும் இந்த காலேஜ் தானா… சூப்பர்…' என்று எண்ணியவளின் கால்கள் விரைந்து அவளருகே சென்று நின்றது.

"ஹாய்… ஐயம் அனன்யா. ஃப்ரம் சென்னை." என்று ராதிகாவிடம் உற்சாகமாக அறிமுகமானாள்.

"ஹலோ… அனன்யா… இங்கே நாங்க சீனியர்ஸ் வெயிட் பண்ணிட்டு இருக்கோம். நீங்க மட்டும் கண்டுக்காமல் போறீங்க." என்று வினவ.

ராதிகாவை போகலாம் என்று அப்போது தான் சொல்லியிருக்க… அவளோ, அனன்யாவைப் பார்த்துக் கொண்டே அவ்விடத்தை விட்டு அகல முயன்றாள்.

அனன்யா, " ஜஸ்ட் ஏ மினிட் சீனியர்." என்று விட்டு, " ஹேய் ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணு." என்று ராதிகாவைப் பார்த்து கண்கள் சுருங்கப் புன்னகையுடன் வினவ.

அவளது முகபாவனையில், தன்னியல்பாக தலையசைத்தாள் ராதிகா.

ராதிகாவின் தலையாட்டலைக் கண்ட பிறகு தான், நிம்மதியாக சீனியர்களிடம் திரும்பினாள் அனன்யா.

அவர்கள் சொன்ன டேர் அனைத்தையும் உற்சாகத்துடன் செய்தவள்,தனக்காக காத்திருந்த ராதிகாவிடம் வந்து மீண்டும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள…

ராதிகாவும்,"ஐ யம் ராதிகா. ஃப்ரம் தஞ்சாவூர்." என்று கைகளை நீட்டினாள்.

நீட்டிய கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள் அனன்யா. யார் சொன்னது காதல் மட்டும் தான் முதல் பார்வையிலே தோன்றும் என்று... நட்பும் அப்படித்தான் என்பதை அனன்யா உணர வைத்தாள்.

இருவரும் சைக்கலாஜிப் படிப்பதற்கு வந்திருக்க‌. வகுப்பு எங்கே என்று விசாரித்து உள்ளே சென்றனர். சைக்காலஜி படிப்பது என்பது இலகுவாக தான் இருக்கும். ஸ்கிரிப்ட்... அதாவது நாடக வடிவில் தான் படிப்பு இருக்கும்‌. நாலைந்து பேர் குழுவாக, ஒவ்வொரு பிரச்சினைக்கும் சொல்யூஷன் செல்ல வேண்டும்.

அப்படி க்ரூப் செலக்ட் செய்யும் போது அனன்யா, ராதிகாவுடன் சேர்ந்துக் கொண்டாள்.

ராதிகாவிற்கும், அனன்யாவின் நட்பு கம்பர்டபுளாக இருந்தது. மெல்ல தனது கூட்டில் இருந்து வெளிவந்தாள் ராதிகா.

காலேஜ் ஆரம்பித்து, ஒரு வாரம் ஓடி இருந்தது.

வழக்கம் போல ராதிகா, முகத்தில் சோர்வுடன் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தாள்.

அனன்யாவும், பெற்றோரைப் பிரிந்து வந்ததால், டல்லடிக்கிறாள் என்று முதலில் நினைத்தாள்.

ஆனால் பேசிப் பார்க்கும் போது அப்படி ஒன்றும் தெரியவில்லை. இப்படியே விட்டால் சரி வராது என்று எண்ணி விசாரிக்க…

முதலில் ஒன்றும் இல்லை என்று மறுத்த ராதிகா, பிறகு தனது பிரச்சினையை கூறினாள்.
"அனு… அது வந்து, ஹாஸ்டல் அறையில் இன்னும் என்னுடைய அறைக்கு யாரும் வரவில்லை."

"சரி… அதுக்கும் இப்படி டல்லா இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் ராது?"

" எனக்கு தனியாக படுப்பதற்கு பயம் அனு. தூக்கம் வராது." என்று ஒரு வழியாகக் கூற…

" என்னாது? தனியா படுக்க பயமா?" என அனன்யா, நம்பமாட்டாமல் ஆச்சரியமாக வினவ.

"...."

" ஏன் ராது. ஒன்னும் சொல்ல மாட்டீங்கறே. இவ்வளவு தூரம் வெளிநாடு வரைக்கும் தனியாக வந்திருக்க… பட் என்னால நம்பவே முடியலை."

ராதிகாவோ ஒன்றும் கூறாமல், முகம் இறுகி நிற்க.

" சரி… சரி… விடு… நீ எதுவும் கூற வேண்டாம்." என்ற அனன்யா,கண்களை மூடி சில நிமிடங்கள் யோசித்தாள்.

பின்பு முகமலர ராதிகாவைப் பார்த்தவள், " ராது... உங்கள் ஹாஸ்டல் மேனேஜ்மென்ட்ட உன்னுடைய அறைக்கு ஒரு ஆள் வருவதாக சொல்லி வச்சிடு. நான் ரெண்டு நாள்ல வந்து உன்னோடு ஜாயின் பண்ணிக்கிறேன்." என்று அசால்டாகக் கூற…

ராதிகாவோ, நம்பாமல் அவளைப் பார்த்தவள், " ஆர் யூ மேட். உனக்காக, உங்க வீட்ல தனி அப்பார்ட்மெண்ட் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. அதை விட்டுவிட்டு இங்கே வருவியா? " என்று சிறு சினத்துடன் வினவ.

" கூல் ராது… திஸ் இஸ் மை ஃப்ராப்ளம். ஐ வில் மேனேஜ். நான் சொன்னதை மட்டும் செய். " என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

சொன்னபடியே காலேஜ் முடிந்து தனது அப்பார்ட்மெண்டிற்கு சென்றவள், தனது வீட்டிற்கு அழைத்துப் பேசினாள்.

முதலில் எல்லோரிடமும் பேசியவள், இறுதியாக பாட்டியிடம் அந்த விஷயத்தை காதில் போட்டாள்.

யாரிடம் சொன்னால் காரியமாகும் என்பதை நன்கு அறிந்த அனன்யா அதையே செய்தாள்.

" பாட்டி...எனக்கு இங்கே தனியே இருக்கிறதுக்கு போரடிக்குது. நான் என் ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து ஹாஸ்டல்ல தங்கிக்கிறேன் பாட்டி. ப்ளீஸ் பாட்டி." என அனன்யா கெஞ்ச.

ருக்குமணிக்கோ அனன்யாக் கூறியதைக் கேட்டு தலை சுற்ற," அனு மா...நான் விஸ்வத் கிட்ட சொல்லுறேன். அவன் என்ன சொல்லுவான் என்று வேறு தெரியலை." என.

" ப்ளீஸ் பாட்டி. எப்படியாவது ஹாஸ்டல்ல தங்கறதுக்கு பர்மிஷன் வாங்கித் தா பாட்டி. அப்புறம் நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது." என்று கெஞ்சலில் ஆரம்பித்து மிரட்டலில் முடித்தாள் அனன்யா.

"ம்.‌‌.. சரி டா." என்று சொல்லி ஃபோனை வைத்தவர், தன் மகள் மற்றும் மருமகளிடம் கூற.

"எங்களுக்குத் தெரியாது. நீங்களாச்சு… உங்க பேரன் பேத்தியாச்சு. எங்களை
ஆளை விடுங்க." என்று ஒன்று போல் ரஞ்சிதமும், கௌரியும் கூறி விட்டு அவ்விடத்திலிருந்து எழுந்து சென்று விட்டனர்.

தன் பேரனின் வரவிற்காகக் காத்திருந்த, ருக்குமணி அந்த பெரிய ஹாலில் நடைப் பயின்றுக் கொண்டிருந்தாள்.

கல்லூரி முடிந்ததும், மருத்துவமனைக்கும் சென்று விட்டு டயர்டாக வந்த விஸ்வரூபன் பார்த்தது என்னவோ, குட்டி போட்டப் பூனையைப் போல சுற்றிக்கொண்டிருந்த பாட்டியை தான்…

" என்ன பாட்டி என்ன நீங்க மட்டும் இருக்கீங்க? அம்மா, அத்தை எங்க காணோம்? நீங்க இன்னும் படுக்க போகலையா?" என்று வினவியவாறே கைகளைக் கழுவி விட்டு வந்து சோஃபாவில் அமர்ந்து சட்டை பட்டனை அவிழ்த்துக் கொண்டிருந்தான் விஸ்வரூபன்.

அவன் கேட்ட கேள்வியை புறந்தள்ளி விட்டு, " விஸ்வா… உனக்கு காஃபி கொண்டு வர சொல்லவா?" என்று ருக்குமணி வினவ…

அவரை ஒரு பார்வை பார்த்தவன், " திஸ் இஸ் ஏ டின்னர் டைம். நான் ரெப்ரெஷ்ஷாகிட்டு வந்து தான் சாப்பிடுவேன்." என்றான்.

அவனது பார்வையோ, 'என்ன விஷயம் சொல்லப்போறீயா? இல்லையா?' என மிரட்டுவதுப் போல தெரிய.

" அது வந்து விஸ்வா… " என இழுத்தவர், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு வழியாக அனன்யா பேசியதைக் கூற…

விஸ்வரூபன், தனது விஸ்வரூபத்தை காட்டினான். " வாட் ஏ க்ரேசி கேர்ள்." என்று உறும…

அவனுக்கே பாட்டியான ருக்குமணி மட்டும் சும்மா இருப்பாளா, " டேய் நீ இன்னும் தமிழ் நாட்டில தான் இருக்க… ஒழுங்கா தமிழ்ல பேசு."

" ம்… உன் பேத்திக்கு பைத்தியமா புடிச்சிருக்கு. அவ மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கா? எனக்கு என்ன வேலைவெட்டி இல்லைன்னு நினைச்சிட்டு இருக்கலாமா? ஒன் வீக் லீவ் போட்டுட்டு, அவக் கூட ஸ்டே பண்ணி, எல்லாம் கம்பர்டபுளா இருக்கான்னு பார்த்துட்டு வந்தேன். இப்ப என்னடான்னா ஹாஸ்டலுக்கு போறேன் என்று சொல்லுறா? அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிடுங்க. இல்லேன்னா அவளோட விருப்பம். என்ன வேண்டுமானாலும் செய்துக்க சொல்லுங்க." எனக் கத்த…

"டேய் விஷ்வா… இப்படி சொன்னால் என்ன அர்த்தம். நீதானே அவளை வெளிநாட்டுக்கு அனுப்புன… அவ உன் பொறுப்பு என்று சொன்ன… இப்போ என்ன இப்படி தட்டிக் கழிக்கிற. கூப்பிடுற தூரமா? அது… இங்கேயே பக்கத்துல சேர்த்து இருந்தா, நாங்களே போய் ஹாஸ்டல் வசதியெல்லாம் நல்லா இருக்கா என்று பார்த்திருப்போம். இப்போ நீ தான் போயாகணும்." என்று ருக்குமணி கிடுக்கிப்பிடி போட்டார்.

அவரின் பேச்சைக் கேட்ட விஸ்வரூபன் அயர்ந்து நின்றான். இனி இதையே சொல்லி அவனது வாழ்க்கையையே மாற்றி அமைக்க போகிறார் என்பதை அறியாமல் அவரதுப் பாட்டியைப் பார்த்து விளையாட்டாக முறைத்து நின்றான்.

இன்று…

நேற்றிரவு இருந்த கலக்கம் மறைந்து இருந்தது. முகம் பொலிவுடன் இருக்க, கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

இன்று முதல் நாள் காலேஜ். பி.ஜி ஸ்டார்ட் ஆகுது‌. டீனேஜில் இருந்த பரபரப்பு எல்லாம் இப்பொழுது ராதிகாவிற்கு கிடையாது.

கண்ணாடி முன் நின்று கிளம்பிக் கொண்டிருந்தவளின் மனதிலோ ஒரு யோசனை ஓடிக் கொண்டிருந்தது.

திடீரென்று தான் அணிந்திருந்த சல்வாரை மாற்றி விட்டு, புடவை எடுத்து கட்டினாள்.

ப்ளைன் கிளாஸ் ஒன்று எப்போதும் ஹேண்ட்பேகில் இருக்கும். தஞ்சாவூரில் இருக்கும் போது, டூவிலர் ஓட்டும் போது பயன்படுத்துவதற்காக வைத்திருந்தது. அதை எடுத்து கண்களில் மாட்டியவள், மீண்டும் கண்ணாடியைப் பார்க்க, என்னவோ குறைவதாக தோன்றியது.

ஒரு நிமிடம் கண்களை சுருக்கி யோசித்தவள், முகமலர விரித்திருந்த கூந்தலை வேகமாக பின்னலிட்டு கொண்டை போட்டுக் கொண்டாள்

ஹாஸ்டலில் டைனிங் ஹாலிற்குச் சென்று உணவு அருந்தினால்.

அங்கிருந்தவர்கள் எல்லோரும் அவளை மேலிருந்து கீழாக பார்க்க‌‌… அவளோ உணவில் மட்டும் கவனத்தைச் செலுத்தினாள். அவர்களது பார்வையை அலட்சியம் செய்து விட்டு, அருகில் இருந்த கல்லூரிக்கு நடந்தே சென்றாள்.

இந்த ஒரு மாத காலத்தில் ஹாஸ்பிட்டலில் உள்ளவர்களிடம், காலேஜ் பற்றிய டீடையில்ஸை தெரிந்துக் கொண்டவள், நன்கு பழகிய இடத்திற்குச் செல்வது மாதிரி தயங்காமல் வேகமாக சென்றாள்.

அவளுடைய டிபார்ட்மென்ட்ற்கு சென்றவள், அங்கு சலசலவென பேசிக்கொண்டிருந்த மாணவ மாணவிகளை ஒரு பார்வை பார்த்தாள்.

அவர்களை ஸ்டூடண்ட் என்பதை விட டாக்டர்கள் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். அவர்கள் எல்லோரும் ஒரே வயதில் உள்ளவர்களும் அல்ல. சில பேர் படிப்பு முடித்தவுடனே மேல் படிப்பு படிக்க வந்திருக்க, சில பேர் கொஞ்ச நாள் பிராக்டிஸ் செய்து விட்டு வந்திருந்தார்கள். அதனால் வயது வித்தியாசத்துடன் தான் இருந்தார்கள்.

"ஹாய் கைஸ்‌‌…" என்ற இவளது குரலில் எல்லோரும் திரும்பிப் பார்க்க…

" ஐ அம் ராதிகா… என்னைப் பற்றி அப்புறம் சொல்றேன். இப்போ உங்களை முதலில் அறிமுகப்படுத்திக்கோங்க. "

முதல் வரிசையில் இருந்த ஒரு பெண் எழுந்து அறிமுகப்படுத்த முயல…

" யூ சிட். நெக்ஸ்ட் ரோல உள்ள யெல்லோ சுடி… நீங்க எழுந்திருங்க இன்ட்ரொடியூஸ் யுவர் செல்ஃப். உங்க நேம் என்ன? உங்க ஆம்பிஷன் என்ன? அதைப்பத்தியெல்லாம் ஷேர் பண்ணிக்கோங்க." என.

அந்தப் பெண்ணோ குழப்பத்துடனே அவளது கேள்விகளுக்கு பதிலளித்தாள்.

"நெக்ஸ்ட் ப்ளாக் ஷர்ட்… நீங்க சொல்லுங்க" என‌.

அந்த பையனும், ஒரு விழி விழித்து விட்டு தன்னுடைய பெயரையும் இதய மருத்துவர் ஆக வேண்டிய இலட்சியத்தையும் கூறி விட்டு அமர்ந்தான்.
இதே மாதிரி அங்காங்கு இருந்த சிலரை மட்டும் எழுந்து விசாரித்தவள், கடைசியாக அமர்ந்திருந்த நெடியவனை அழைத்து, விசாரிக்க…

அவனோ கேஷுவலாக எழுந்தவன், இவளை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே, " கேள்வியே லூசுத்தனமா இருக்கு. உன்மையிலே நீங்க எங்களோட மேமா? டவுட்டா இருக்கு. கார்டியலாஜிஸ்ட் படிக்கிறதுக்காகத் தான் இந்த டிபார்ட்மெண்ட். அப்படியிருக்க… இப்படி ஒரு மொக்கை கேள்வி கேட்டதிலிருந்தே தெரியுது நீயும் ஒரு ஸ்டூடண்ட் தான்." எனக் கூற…

எல்லோருக்கும் இதே எண்ணம் தான். மனசுக்குள் நினைத்தாலும் வெளியே சொல்ல பயந்து கொண்டு அமைதியாக இருக்க… அவன் மட்டும் பட்டென்று கேட்டு விட்டான்…

அவனுடைய கேள்வியில் ராதிகாவின் முகம் மலர்ந்தது. " வாவ்… சூப்பர்…" என்றவள் வேகமாக அவனருகே வந்து அமர்ந்துக் கொண்டே, " யூவார் ப்ரில்லியண்ட். நீ தான் எனக்கு சரியான பார்ட்னர். எங்கே உட்காரலாம் என்று இவ்வளவு நேரமா, ஒவ்வொருத்தரையா விசாரிச்சேன்" என்றாள்.

அப்போது தான், ஏன் சிலரை மட்டும் விசாரித்தால் என்று புரிய, சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் அவளை வெட்டவு? இல்லை குத்தவா? என்பது போல பார்த்தனர்…

அதையெல்லாம் அசால்டாக தள்ளிவிட்டு, " ஹாய் பாஸ்… ஐயம் ராதிகா." என்று அவனிடம் கையை நீட்ட.

" ஆதவன்…" என்று அவன் பெயரைக் கூற…

" நைஸ் நேம்… " என்றுக் கூறி புன்னகைத்தாள்.

ஆதவனின் முகமும் புன்னகையால் மலர்ந்தது.

அங்கு நடக்கும் அக்கப்போரை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணனின் முகத்திலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு புன்னகை மலர்ந்தது. ராதிகா உள்ளே நுழையும் போதே வந்து விட்ட கிருஷ்ணன் அமைதியாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ராதிகா அமர்ந்து, ஆதவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது,
புன்னகையுடன் உள்ள நுழைந்தவர், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

" ஐயம் கிருஷ்ணா. நான் தான் உங்களுடைய டீன்.அப்புறம் கொஞ்சம் நான் பேசலாமா… இப்போ நீங்க ஒன்னும் பக்குவமில்லாத ஸ்டுடென்ட்ஸ் கிடையாது. எத்தனையோ உயிர்களை காக்க கூடிய மருத்துவர்கள். உங்களுடைய பொறுப்பை உணர்ந்து நடந்துக்கணும். ஒரு சின்ன கவனக்குறைவுக் கூட பெரிய உயிர் சேதத்தை உண்டாக்கிடும். சோ டோண்ட் பீ கேர்லஸ். அன்ட் ஆல் த பெஸ்ட் ஃபார் யூவர் பிரைட் ஃபியூச்சர். நவ் லெட்ஸ் ஸ்டார்ட் அவர் லெசன்." என்று ஒரு வழியாக அறிமுகப்படலத்தை முடித்துக் கொண்டு பாடத்தை நடத்தினார்...

அவர் வந்ததிலிருந்து, அவருடைய மேனரிசம் அன்ட் ஸ்பீச் எல்லாத்தையும், திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். வழக்கமாக ஆண்கள் கூறும் டயலாக்கான, 'எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே…' என மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்க…

அவளின் அருகில் அமர்ந்து இருந்த ஆதவன், " ராதிகா… வாட் ஹேப்பண்ட்? லிஸ்ன். சார் வாட்ச்ங் யூ." என்று உலுக்க…
யோசனையிலிருந்த, ராதிகா தன்னை மீறி வேகமாக கத்தி விட்டாள். " வாவ்… ஹேன்ஸம் மேன்." என…

ஹோல் க்ளாஸே அவளைப் பார்த்து, சிரிக்க…

"சைலன்ஸ்…" என்ற கிருஷ்ணன், அவளை எழுந்திருக்குமாறு சைகை செய்ய…

" மீ சார்." என்று ராதிகா வினவ.
சிரிப்பு பொங்க அதை அடக்கியவாறே, " ம்… நீ தான் எழுந்திரு. வந்ததிலிருந்து நான் சொன்ன எதையும் கவனிக்கலைன்னு தெரியுது. நீ ஒரு அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட் என்று நல்லாவே புரியுது. விருப்பமிருந்தால் அமைதியா உட்கார்ந்து க்ளாஸை கவனி. இல்லேன்னா வெளியே தாரளமாக போகலாம்." என்றவர், அவளின் அருகே அமர்ந்திருந்தவனைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தவர், பிறகு சமாளித்துக் கொண்டு பாடத்தை நடத்தினார்.

ராதிகாவோ அவரது அதிர்ச்சியைப் பார்த்து, தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள். ' பாவம்… ப்ரொபஸர் நம்மளைப் பார்த்து மிரண்டுட்டார்.' என்று எண்ணினாள். அவரது அதிர்ச்சிக்கு காரணம், அவளுக்கு அருகில் அமர்ந்து இருந்து ஆதவன் தான் என்பது அவளுக்குத் தெரியாமல் போய்விட்டது...

தொடரும் ‌…
 
Status
Not open for further replies.
Top Bottom