Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எனக்காகவே நீ - Ramani Chandran

Messages
40
Reaction score
14
Points
8
ஆசிரியர்: ரமணி சந்திரன்
நாவல்: எனக்காகவே நீ
ஹீரோ: சதாநந்த்
ஹீரோயின்: திவ்யா

கதை:

திவ்யா, தனது பெரியப்பா குடும்பத்தோடு வாழ்கிறாள். அவள் பிறந்தபோதே தாயார் மரணமடைந்துவிட்டார். தந்தை அமெரிக்காவுக்குச் சென்று அங்கேயே குடியேறியுள்ளார். பெரியப்பாவும் பெரியம்மாவும் திவ்யாவை மிகுந்த அன்புடன் வளர்த்திருக்கிறார்கள். உண்மையில், தங்களுடைய சொந்த மகளான பிரபாவை விட, திவ்யாவையே அதிகமாகப் பாராட்டிக்கொண்டே இருப்பார்கள்.

திவ்யா தன் மேல் அதிகாரியான மனோரஞ்சனுடன் நிச்சயமாகி இருக்கிறாள்.

பிரபா வேறு ஒருவரை திருமணம் செய்யவிருக்கிறாள். ஒரு காலத்தில், பிரபாவுக்கு ஓர் ஓவியருடன் தொடர்பு இருந்தது. அந்த நேரத்தில் அவனுக்கு சில காதல் கடிதங்களை எழுதி இருப்பாள். அது அதிக உணர்வுகளோடு கூடியதாகவும் நெருக்கமாகவும் எழுதப்பட்டிருக்கும். இப்போது அந்த ஓவியர் அந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு பிரபாவை மிரட்ட ஆரம்பித்துவிட்டான்.

பிரபா, திவ்யாவை அந்தக் கடிதத்தை திருடி கொண்டு வருமாறு சமாதானப்படுத்துகிறாள்.

திவ்யா இரவில் அந்தக் கடிதத்தை திருடச் செல்வாள். ஆனால், திட்டமிட்டபடி எதுவுமே நடைபெறவில்லை. அப்போது அங்கே ஒரு ஆண் தோன்றுகிறான். அவன் திவ்யாவை பாதுகாத்து, கடிதத்தை மீட்டுத் தர உதவுகிறான். அந்த ஆணின் பெயர் சதாநந்த்.

சதாநந்த், திவ்யா தான் அந்த கடிதத்தை எழுதியதாக நினைத்து, அவளை தவறாக நினைக்கிறான். அவன், திவ்யாவின் வருங்கால கணவர் மனோரஞ்சனின் நெருங்கிய நண்பன். அதனால், மனோரஞ்சன் இப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்பதற்காக, சதாநந்த் அந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு திவ்யாவை மிரட்டி நிச்சயத்தை உடைக்க வற்புறுத்துகிறான்.

பிரபாவிடம் சொன்னால் அவள் எந்த உதவியும் செய்ய மறுத்துவிடுகிறாள்.

திவ்யா நிச்சயத்தை முறித்துக்கொள்வதை தவிர வேறு வழி இல்லாமல் போகிறது. இதனால் குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. மேலும், தன் மேல் அதிகாரியோடு செய்யப்பட்டிருந்த நிச்சயம் முறிந்த காரணத்தால், திவ்யா தனது வேலையையும் இழக்கிறாள்.

பின்னர் சதாநந்த் உண்மையை உணர்கிறான். உண்மையில் அந்தக் கடிதத்தை எழுதியது திவ்யா இல்லை, பிரபாதான்.

உண்மை தெரிந்து அப்பிறகும் கூட, அந்தக் கடிதத்தை பிரபாவின் வருங்கால கணவரிடம் அனுப்புவதாக, சதாநந்த் திவ்யாவை தொடர்ந்து மிரட்டிக்கொண்டே இருக்கிறான்.

அதே சமயம், அவளுக்கு ஒரு சலுகையும் தருகிறான். பெயருக்கு மட்டும் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுமெனவும், அதற்காக பணம் தருவதாகவும் கூறுகிறான்.

சதாநந்த், தனது நண்பரின் பையனை வளர்க்கும் பொறுப்பில் இருக்கிறான். அந்த பையனை தனக்கு சட்டரீதியாக வளர்க்க அனுமதி பெற, குடும்பத்தில் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது.

திவ்யா அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறாள். இருவரும் கேரளா செல்லுகிறார்கள்.

அதன்பிறகு கதை தொடரும் — திவ்யா மற்றும் சதாநந்த் இடையிலான உறவினைச் சுற்றி, சதாநந்தின் குடும்ப நண்பர் வினோதினி ஏற்படுத்தும் குழப்பங்கள், மனோரஞ்சனின் மீண்டும் தோன்றல் ஆகியவை கதையைச் சிக்கலாக்குகின்றன.

இறுதியில், திவ்யா மற்றும் சதாநந்த் ஒருவருக்கொருவர் உண்மையான காதலை உணர்ந்து சேரும் விதமாக கதை முடிகிறது. நல்ல கதைதான். சுபமான முடிவு.​
 

New Threads

Top Bottom