Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL எனைப் பிரிந்தாலும் உனைமறவேனே - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Priyanka Raja

New member
Vannangal Writer
Messages
8
Reaction score
5
Points
3
எனைப் பிரிந்தாலும் உனை மறவேனே

டீசர் 1

“நம்ம ரெண்டு பேரும் எத்தன வருசமா ஃபரண்டா இருக்கோம்?...” என்றவனின் கேள்வியை காதில் வாங்கியபடியே தட்டில் இருந்த உணவை உள்ளே தள்ளிவிட்டு சொன்னாள்…

“என்ன ஒரு ஆறு ஏழு வருசமிருக்கும்னு நெனைக்குறேன்… ஏன்டா திடீர்னு இந்த சந்தேகம்?...”

“இல்ல சும்மா தான்...”

“நடிக்காதடா… உண்மைய சொல்லு...” என்றவள் நிமிர்ந்து அவன் விழிகளை ஊடுருவ, தன் மனதில் தோன்றிய அதிமுக்கியமான சந்தேகத்தை கேட்டு வைத்தான்…

“இல்ல, இத்தன வருசமா ஃப்ரண்டா இருக்கோம்… ஆனா நீ ஏன் என்ன லவ் பண்ணல?...” என்றவனின் திடீர் கேள்வியில் திடுக்கிட்டவளாய் முறைத்தாள்…

“என்னடா லூசுத்தனமா கேள்வி கேக்குற?...”

“ப்ச்… இல்லடி நீ பதில் சொல்லே… உனக்கு அப்புறம் தான் எனக்கு ராதிகாவையே தெரியும்… அவளே எனக்கு ப்ரோபோசல் எல்லாம் பண்ணும் போது நீ ஏன் பண்ணலன்னு கேட்டேன்...” என்றவனை நக்கல் பார்வை பார்த்து வைத்தவள்,

“ஏன்னா நான் ராதிகா இல்ல ரோஜா… ஃப்ரண்ட்ஷிப்க்கும் லவ்க்கும் வித்தியாசமும் தெரியும்… அதோட அருமையும் புரியும்...” என்றாள்…

**********************************************************

“ஹலோ எக்ஸ்யூஸ்மீ இருக்கிங்களா?...”
என்றவனின் கேள்வியில் நிமிர்ந்து அவனின் விழிகளை பார்க்க முயற்சித்தவள் அவனின் குறுகுறு விழிகளில் சற்றே மூச்சுமுட்டி குனிந்து கொண்டாள்… அந்த சூழ்நிலையில் தன்னைப் பற்றி நினைக்கவே மீராவிற்கு படுகேவலமாக இருந்தது…

'அய்யோ லூசுப்பக்கி, ஏன்டி குனிஞ்சுட்டு என் மானத்த வாங்குற? நிமிர்ந்து எப்போவும் ஒரு பார்வை பார்ப்பியே அது போலவே கெத்தா ஒரு லுக்க விடு… பாருடி, பாரு… ஹான் ஹான் தட்ஸ் குட்…' தனக்குத்தானே மனதிற்குள் அத்தனை தடவை பேசிக்கொண்டு நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்…

“ஹேய் வாட் ஹேப்பன்? நிஜமாவே முழிச்சுட்டே ஏதும் தூங்குறியா என்ன? பேசிட்டே இருக்கேன்ல, ஏதும் பேசமாட்டியா? சரி நான் யாருன்னாச்சும் தெரியுதா?...“ என்ற கண்ணனின் அடுத்தடுத்த கேள்விகளில் தோன்றிய புன்னகையை உதட்டிற்குள்ளேயே மறைத்துக்கொண்டு அதே நிலையிலேயே நின்றுகொண்டு தனக்குத் தானே பேசினாள்…

'சும்மா சொல்லக்கூடாது… இவன் இம்புட்டு ஒசரமா இருப்பான்னு நான் நெனைக்கவே இல்ல… ஆத்தாடி நாம என்ன இவன் முன்னாடி இவ்ளோ குட்டியா இருக்கோம்? என் ப்ரண்ட்ஸ் கேங்குலயே நான் நல்ல ஹைட் தானே! இவன் என்ன பனைமரம் கணக்கா வளந்து நிக்குறான்? ஊரவிட்டு போகயில இத்தனை ஒசரமா இல்லியே… ஷோல்டர் அளவுக்காச்சும் இருப்போமா! இருப்போம் இருப்போம்… இவன் பாக்குற பார்வையே சரியில்லயே ஒருவேள நம்மள சைட் அடிக்குறானோ! ம்ம்ம் இதுவும் நல்லாத்தான் இருக்கு… ஒரு அழகான பையன் நம்மள சைட் அடிக்குறதே செம கெத்து தான் போலயே.. ஆனாலும் சும்மா சொல்லப்படாது அஞ்சு வருசத்துக்கு முன்ன இருந்தது போல இல்லாம நல்லா மூக்கும் முழியுமா கண்ணுக்கு குளிர்ச்சியா தான் இருக்கான்…' என்று நினைத்தவள் மானசீகமாய் தன்னைத்தானே கடிந்து கொள்ளவும் மறக்கவில்லை…

**********************************************************

“மீராக்கா மீராக்கா… அது கண்ணன் அண்ணன் தானே! இவுங்க எப்ப ஊருல இருந்து வந்தாங்க? ஒனக்கு எதுனாச்சும் தெரியுமா?...” என்ற மாமன் மகளை பார்த்து முறைத்தவள், தூரமாய் நின்றுகொண்டு தங்களின் வரவிற்காய் காத்திருந்தவனை பார்த்துவிட்டு மாமன் மகளை நோக்கினாள்…

“இங்க பாருடி… ஒங்கண்ணன் ஒன்ன பத்தி எது கேட்டாலும் என்ன வேணா சொல்லு… ஆனா என்ன பத்தி கேட்டாக்க எனக்கு கல்யாணமாகி புள்ள குட்டின்னு நல்லா சந்தோசமா இருக்கேன்னு சொல்லு… உண்மைய சொல்லி எதாவது சொதப்பி விட்டன்னு வச்சுக்க! சோத்துல பேதி மாத்தரைய கலக்கி வுட்டுருவேன்...” என்று பீதியை கிளப்பி விட்டுவிட்டு வந்த வழியாகவே சென்று வீட்டிற்கு செல்லும் மாற்று வழியில் புகுந்துகொண்டாள்...
 

Priyanka Raja

New member
Vannangal Writer
Messages
8
Reaction score
5
Points
3
எனைப் பிரிந்தாலும்
உனை மறவேனே

பதிவு 1

மழை வரும் அறிகுறி

என் விழிகளில் தெரியுதே,

மனம் இங்கு நனையுதே

இது என்ன காதலா! சாதலா!

பழகிய காலங்கள்

என் பார்வையில் தெரியுதே,

பாதங்கள் நனையுதே....


என்ற பாடல் வரிகள் ஒருபுறம் மெல்லிய இசையோடு ஒலித்துக் கொண்டிருக்க, மழை வரும் அறிகுறி நம் விழிகளில் தெரிந்ததோ இல்லையோ! வான்மகளின் விழிகளில் வழிந்து கொண்டிருந்தது... காலையில் இருந்து சுட்டெரித்த சூரியனை திடீரென்று சூழ்ந்த கருமேகங்கள் மொத்தமாய் மறைக்க, சின்ன சின்ன ஊசித்தூறலாய் விழுந்த மழை இப்பொழுது அடித்து பெய்து கொண்டிருந்தது... சாலையில் மழைநீர் வெள்ளமாய் பாய்ந்தோட காணும் இடங்கள்
யாவும் வெறும் தண்ணீர் தடாகம் தான்... அடித்த வெயிலுக்கு மழையின் தயவால் எங்கும் குளுமை பரவிக்கிடந்தது... அந்த இதமான சூழலை மழைக்காக கடைகளின் ஓரங்களில் ஒதுங்கி நின்று கொண்டிருந்த ஜனத்திரள்கள் ரசித்து அனுபவிக்க, ஒருத்தி மட்டும் எதைப்பற்றியும் கவனிக்க தோன்றாதவளாய், தன் கடமையை செவ்வனே செய்து கொண்டிருந்தாள்...

கணினித் திரையில் விழிகள் இருக்க, வெண்டை விரல்கள் பத்தும் கீபோர்டில் அங்கும் இங்கும் ஓடி நர்த்தனமாடிக் கொண்டிருந்தது... அவ்வளவு குளுமையான சூழலிலும் நெற்றியில் துளிர்த்த வியர்வையை துப்பாட்டா நுனியால் ஒற்றி எடுத்தவள் திரும்பவும் தன் வேலையை தொடர, அவள் அமர்ந்திருந்த டேபிளுக்கு முன்பாக ஒரு இளம்யுவதி நின்று கொண்டு கத்திக்கொண்டிருந்தாள்...

“க்காஆஆஆ... அக்காஆஆஆஆ... மீராக்காஆஆஆ...” எத்தனையாவது முறையாக சத்தம் போட்டு அழைத்திருப்பாளோ! அந்த பெண்ணின் அழைப்பிற்கு இப்பொழுதாவது செவிசாய்ப்போம் என்று ஒருமுறை விழிகளை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு திறந்து அவளை பார்த்து அங்கலாய்த்தாள்...

“என்ன தான்டி வேணும் ஒனக்கு? நொய்யி நொய்யின்னு கூப்புட்டுட்டே இருக்க?...”என்றவளின் வார்த்தைகளில் எதிரே நின்றவளின் முகம் கூம்பிப்போனது...

“மழை பெயுது... எல்லாருமே போர்ட்டிகோவுல தான் நிக்குறாங்க... அதான் கூப்பிட வந்தேன்...” என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு சொன்னவளை பார்க்கவே கொஞ்சம் பாவமாய் தான் இருந்தது...

“சாரி சத்யா... இன்னைக்கு சீக்கிரமா வீட்டுக்கு போகணும்னு சொன்னேன்ல... சீக்கிரமா கணக்க முடிக்கணும்டி... நீ போய் மழைய என்ஜாய் பண்ணு... நான் இன்னொரு நாள் ஜாயின் பண்ணிக்குறேன்...” என்றவாறே திரும்பவும் கணினி திரையில் பார்வையை ஓட்டினாள்...

“நாளைக்கு வந்து கணக்க முடிக்க வேண்டியது தானேக்கா... எதுக்கு அவசர அவசரமா பார்க்குற?...”

“சேல்ஸ் கணக்கையாவது முடிச்சுடணும்ல டி... சர்வீசயும், ஸ்பேர்பார்ட்ஸாயும் நாளைக்கு வந்து பார்த்துப்பேன்... முன்னவே முடிச்சுருக்க வேண்டியது இந்த ஓனரம்மா... ஓ மை காட் சத்யா ஓனர பார்த்தியா ஒரு டாக்குமெண்ட்ல சைன் வாங்கணும்...” என்று ஒரு பைலை எடுத்துக்கொண்டு ஓடியவளை பார்த்து தலையில் அடித்துக்கொண்டு சென்றாள் அவள்...

மீரா எப்பொழுதுமே இப்படி தான்... வேலையின்னு வந்துட்டா வெள்ளக்காரன்னு சொல்லுவாங்கள்ள அதப்போல தான் அவளும்... தான் பண்ணுற வேலையில யாரும் எந்த குறையும் சொல்லிடக்கூடாதுன்னு தெளிவா இருப்பா... அதே சமயத்துல வேலை முடிஞ்சது அவள போல எல்லாத்தையும் ரசிச்சு செய்ய யாராலயும் முடியாது... எப்பொழுதும் மழை வந்தா மீரா நிக்கிற இடம் அந்த பில்டிங்ல இருக்க போர்டிக்கோவுல தான்...

மழையில நனைச்சு விளையாட அவளுக்கு ஆசையிருந்தாலும், அவள சுத்தி இருக்க கூட்டம் அவமேல இருக்க அக்கறையில வீட்டுல போட்டுக்கொடுத்துடுவாங்கன்னு போர்டிக்கோவுல நின்னு கைய கால மழைத்தண்ணியில விட்டு விளையாடிட்டு இருப்பா... சொல்ல மறந்துட்டேனே மீரா வேலை செய்யுறது அந்த ஊருல இருக்க டி.வி.எஸ் ஷோரூம்ல... கடந்த ரெண்டு வருசமா அவ தான் அங்க கேசியர் ப்ளஸ் அட்மினிஸ்ரேசன் மேனேஜர்... அன்பாவும் அதே சமயத்துல அதிகாரமாகவும் வேலை வாங்குறதுல அவ கெட்டிக்காரிங்குறதால அந்த ஷோரூமோட ஓனர் குடும்பத்துக்கு அவமேல தனி இஷ்டம்... அவள அவங்க வீட்டு பொண்ணாவே தான் நினைப்பாங்க பார்ப்பாங்க...

பைலோடு வேகமாய் சென்றவள் என்ன நினைத்தாலோ! கைக்கடிகாரத்தை
ஒருமுறை பார்த்துவிட்டு 'ப்ச்... போச்சு இன்னும் கொஞ்ச நேரத்துல அண்ணன் வந்துடுவான்...' என்று முணுமுணுத்தபடியே மழையை ரசித்தபடி ஓரமாய் நின்றிருந்த ஒரு வாலிபனின் அருகே சென்று பைலை நீட்டினாள்...

“அருணு... இந்தா இந்த பேப்பர்ல மார்க் பண்ணிருக்க எடத்துல எல்லாம் ஓனர் சார்கிட்ட சைன் வாங்கிட்டு ஒடனே வா... நேரமாகுது, நான் மெயில் அனுப்பணும்...” என்று படபடவென சொல்லிவிட்டு, திரும்பவும் தன்னுடைய டேபிளுக்கு வர, அந்த சமயம் பார்த்தா டெலிபோன் மணி ஒலிக்க வேண்டும்?

அன்றைய கணக்கை முடிப்பதற்காக நோட்டை எடுத்தவள், போன் ரிங்காகவும் ஒற்றை பார்வையாலேயே அங்கு தூரமாய் நின்றிருந்த சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்வை அழைத்து போனை எடுக்க சொல்லிவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள்...

சரியாக பத்து நிமிடத்தில் நோட்டை எழுது முடித்தவள், வரவு செலவை எல்லாம் சரிபார்த்து கடைசியாக அவளிடம் எவ்வளவு இருப்பு இருக்க வேண்டும் என்பதை குறித்துக்கொண்டு கல்லாப்பெட்டியை திறந்து பணத்தை எண்ண ஆரம்பித்தாள்... என்ன தான் பணம் எண்ணுவதற்கென்று தனியாக இயந்திரம் இருந்தாலும் மீராவுக்கு இயந்திரத்தின் மேல் எல்லாம் நம்பிக்கை வந்ததே இல்லை.. தன் கையே தனக்குதவி என்று ஒரு ஐநூறு ரூபாய் நோட்டுக்கட்டை எடுத்து எண்ண ஆரம்பித்துவிட்டாள்...

7,58,348 ரூபாய் என்று தான் நோட்டில் இருந்த கணக்கு சொன்னது... தான் எழுதியதற்கும் இருக்கும் பணத்திற்கும் சரியாக இருக்கிறதா என்று எண்ணிப்பார்த்தவளுக்கு இரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றி வந்ததில் ஆனந்தமே... எழுதிய கணக்கை விடவும் கொஞ்சம் அதிகமாகவே பணம் இருக்க, அதிகமாய் இருந்த பணத்தை மட்டும் தனியாக எடுத்து ஒரு கவரில் போட்டுவிட்டு, மற்றவற்றை பணப்பைக்குள் வைத்து பத்திரப்படுத்தும் பொழுது அவள் டேபிளின் எதிரே நிழலாட, நிமிர்ந்து பார்த்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது... அவளுடன் பணியாற்றும் யமுனா ஒருமாதிரி நெளிந்து பல்லைக்காட்டிக் கொண்டு இருக்க, என்னவென்பது போல ஒரு பார்வை பார்த்தாள்...

“மேடம்... சார் வந்துட்டாரு...” என்று
சொன்னவளை பார்த்து மென்மையாய் புன்னகைத்தவள்,

“ஓ வந்துட்டாரா?...” என்றபடியே அவசரகதியில் அனைத்தையும் எடுக்க, மீராவுக்கு உதவுவதற்காய் வந்து நின்றாள் அந்த பெண்...

“மேடம் நான் இதெல்லா எடுத்துட்டு வர்றேனே...” என்று தயங்கி தயங்கி கேட்டவளை பாவமாய் தான் பார்க்க தோன்றியது...

“யமுனா நான் மதியம் சொன்னத நீ கேட்கலையா? என் அண்ணனுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சு... நீ இப்படி அவன பார்த்து ஜொள்ளு விடுறது என் அண்ணன கட்டிக்கப்போறவளுக்கு தெரிஞ்சது! நேரா இங்கேயே கெளம்பி வந்து உண்டு இல்லைன்னு பண்ணிடுவா... பீ கேர்ஃபுல் முடிஞ்ச அளவுக்கு என் அண்ணன்கிட்ட இருந்து தள்ளியே இரு... என் வேலையை நானே பார்த்துக்குறேன்...” என்று சொல்லிவிட்டு, எடுக்க வேண்டிய பைகளை எல்லாம் அள்ளிக்கொண்டு வெளியே வர, ஷோரூம் வாயிலில் மீராவின் அண்ணன் விமல்பிரபு மீராவிற்காக தனது பைக்கில் காத்திருந்தான்...

அலையலையாய் கொண்ட கேசத்தினை ஒதுக்கிவிட்டனின் புஜங்கள் அவன் அணிந்திருந்த கேசுவல் டீசர்டிலும் விம்மி வெடிக்க, ஆறடி உயரத்தை அடக்கி பைக்கில் அமர்ந்திருந்தவனின் விழிகள் மீராவை கண்டதுமே சிரித்தது... விழிகளோடு சேர்ந்து இதழ்களும் விரிய, அவனருகில் மூட்டை முடிச்சுகளை அள்ளிக்கொண்டு வந்தவளோ, தனது ஹேண்ட்பேக்கை மட்டும் அவனிடம் நீட்டினாள்...

“ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுண்ணா... அப்டி போயிட்டு இப்டி வந்துடுறேன்...” என்று அவனது பதிலுக்கு கூட காத்திருக்காமல் நடையைக் கட்ட, அருண் வேகமாக ஓடி வந்து அவள் முன் நின்றான்...

“அக்கா அக்கா என்ன நீ என்னைய சைன் வாங்க அனுப்பிவிட்டுட்டு வீட்டுக்கே கெளம்பிட்ட... இந்தா புடி...” என்று அவன் பைலை நீட்டியதும் தான் மீராவிற்கு நினைவே வந்தது…

“அச்சோ... மறந்தே போயிட்டேனே... டேய் தம்பிம்மா எனக்கொரு ஹெல்ப் பண்ணுறியா?...”

“சொல்லுக்கா...”

“ஒன்னுல்ல இந்த பைல கொண்டு போய் சத்யாகிட்ட கொடுத்து இத ஸ்கேன் பண்ணி நான் சொல்லுற மெயில் அட்ரஸுக்கு அனுப்ப சொல்லுறியா?...” என்று கேட்க, ஒருமாதிரி நெளிந்தவாறே தலையை சொறிந்தான் அவன்... “என்னடா?...”

“அது இல்லக்கா... நான் இன்னிக்கு என் ஆள பார்க்க போறேன்... சீக்கிரமா போணும்...”

“ப்ச்... வெளங்கிப்போச்சு போ... உருப்புடமாட்டடா... நீ உருப்படவேமாட்ட... சரி என்னவோ பண்ணித்தொல, அதக்குடு நானே பாத்துக்குறேன்... சிவாக்கிட்ட கொடுத்து மெயில் அனுப்ப சொல்லிடுறேன்...” என்று எந்த தைரியத்தில் சொன்னாளோ! பைலை வாங்கிக்கொண்டு ஓனர் வீட்டை நோக்கி நடக்கலானாள்...

முதலாளி வீடு ஒன்றும் அத்தனை தொலைவில் இல்லை... ஷோருமோடு ஒட்டிய அடுத்த காம்பௌண்டிற்குள் தான் அதுவும் இருக்க, மூட்டை முடிச்சுகளை தூக்கிக்கொண்டு சென்றவள், சரியாக ஒரு இரண்டு நிமிடங்களில் முதலாளி வீட்டின் வாயிலில் நின்றாள்... பெரிய கேட்டை அவள் திறந்தது தான் தாமதம் வீட்டிற்குள்ளேயிருந்து வெள்ளைவெளேர் என்று பஞ்சுப்பொதியை உடலில் சுற்றியதைப் போல புசுபுசுவென்ற நாய்க்குட்டி வாலை ஆட்டியபடியே ஓடிவந்து அவளை சுற்றிசுற்றிவர, அதனை பார்த்து சிரித்தபடியே உள்ளே சென்றாள்...
 

Priyanka Raja

New member
Vannangal Writer
Messages
8
Reaction score
5
Points
3
பதிவு 2

oU1zWKfZhv6kyQi5KXHzAd99Lrh8Nn9Uznccc_t8JXKg31gTW3s-f2HHBLaj9pUmj5LLHAmjrrx_Pvk5diJKt6oJ7hJP5mEMvMifmEFCDRm2ACaXL0Yh_J-f1FC-0VCKJrzIzS0h

“ம்மாஆஆஆஆ.... ம்மாஆஆஆஆ.... அக்காஆஆஆஆ.... ஷி...சிவா சார்...” என்று வாசலில் நின்றபடி பிச்சைக்காரியைப் போல மீரா சத்தம் போட்டு கொண்டிருக்க யாருமே வெளியே வருவது போலவே தெரியவில்லை...

வாசல் கதவை திறந்து கொண்டு வரும்பொழுது இரும்பு கதவின் சப்தம் கேட்டு ஓடி வந்த நாய்க்குட்டிக்கு இருக்கும் அறிவு கூட வீட்டில் உள்ளவர்களுக்கு இல்லையென எரிச்சலுடனேயே எட்டாவது முறையாக காலிங் பெல்லையும் அழுத்திவிட்டு திரும்பவும் குரல் கொடுத்துக்கொண்டிருந்தாள்... ஒவ்வொரு முறை அழைக்கும் பொழுதும் எரிச்சல் தான் அதிகமானதே ஒழிய எவரும் வந்தமாதிரி இல்லை... இந்த கூத்தெல்லாம் இன்று ஒருநாள் மட்டும் நடப்பது இல்லை... தினமும் இதே புராணம் தான்...

ஷோரூம் முதலாளியின் மனைவியை தான் அம்மா அம்மாவென்று அழைத்துக்கொண்டிருக்கிறாள்... அவர்களிடம் வேலைக்கு இருந்தாலுமே ஷோரூமில் வேலை செய்யும் அத்தனை பேருமே முதலாளியையும் அவர் மனைவியையும் அம்மா அப்பாவென்றே அழைக்கவேண்டுமென்பது அங்கு எழுதப்படாத சட்டமும் கூட... அத்தனை பேருமே வயது வித்தியாசப்படி அவர்கள் இருவரையும் முறை சொல்லி தான் அழைப்பார்கள்... மீரா வேலைக்கு சேர்ந்த அன்றே இதனையும் சொல்லிவிட்டபடியால் அவளுமே அவர்களை அப்படித்தான் அழைக்கிறாள்... உண்மைக்கும் சொல்ல வேண்டுமென்றால் வெளியே இருந்து வந்து புதிதாக பார்ப்பவர்களுக்கு இவர்களின் அணுகுமுறை அன்பை பறைசாற்றுவதாய் இருந்தாலும் எல்லாம் காரணமாய் தான் நடக்கும்..

பிரேமா அம்மா... பார்க்க ஒன்றுமே தெரியாத அப்பாவி போலே முகத்தை வைத்துக்கொண்டு கம்பெனியில் நடக்கும் அத்தனையையும் விரல் சொடுக்கும் நேரத்தில் தெரிந்துகொள்பவர்... கணவரை முன்னிருத்தி பின்னால் இருந்து கொண்டே அத்தனையையும் அழகாய் வழிநடத்துபவர்... பாலசுப்ரமணியன், ஷோரூமின் முதலாளி... இரண்டு காதுகளைத் தவிர அவரிடத்தில் குறையேதுமில்லை... சிறுபிள்ளைப் போல இனிப்பிற்காக ஏங்கும் சக்கரைவியாதிக்கு சொந்தக்காரர்... இருவருமே வியாபார விசயத்தில் கெட்டிக்காரர்கள் தான்... எப்படி எப்படி வேலை செய்பவர்களிடத்தில் பேசினால் வேலை நடக்கும்? எங்கே தட்டிக்கொடுக்க வேண்டும்? எங்கே தள்ளி நிறுத்தவேண்டும்? என்று அத்தனையும் தெரிந்து வைத்திருப்பவர்கள்... அதனாலேயே என்னவோ வேலைக்கு இருப்பவர்களிடம் அன்போடும் நட்போடுமே பழகுவர்... அவர்களின் அணுகுமுறையிலேயே வேலைக்கு இருப்போருமே ஷோரூமை தங்களது சொந்த கம்பெனி போலவே பாவித்து தங்களது முழு உழைப்பை போட்டு இன்முகமாகவே செயல்படுவர்...

மீராவும் கூட அப்படியே தான்... வேலைக்கு சேர்ந்த பொழுது அவள் இருந்த மனநிலையை மாற்றவேண்டும் என்பதற்காகவே தன் முழு கவனத்தையும் வேலையில் செலுத்தி பிரேமாவையும் பாலசுப்பிரமணியத்தையும் ஈர்த்துவிட்டாள்... அதனாலேயே என்னவோ வெறும் காசாளராக சேர்ந்த அவளை இப்பொழுது அலுவலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் சேர்த்து பார்த்துக்கொள்ள சொல்லியிருந்தனர்... கம்பெனி விசயத்தை பொறுத்தமட்டும் மீராவிற்கு அந்த சூழல் நிரம்பவே பிடிக்கும்... ஏன் சிறுபிள்ளை போல நடந்து கொள்ளும் முதலாளியையும், இன்முகமாய் பேசும் பிரேமா அம்மாவையும் கூடத்தான்.. பிடிக்கவே பிடிக்காத விசயம் என்னவென்றால் தினமும் கணக்கை முடித்துவிட்டு பணத்தை கொண்டு வந்து வைக்க, அவள் போராடும் போராட்டம் தான்...

பாலசுப்பிரமணியன் வீட்டில் இருக்கும் சமயங்கள் எல்லாம் மிசினை கலட்டி வைத்துவிட்டு புத்தகமும் கையுமாய் அமர்ந்துவிடுவார்... பிரேமா அம்மாவோ வீட்டில் அத்தனை வேலையுமே தான் இருந்தால் தான் நடக்கும் என்பது போல சுழன்று கொண்டே இருப்பார்... இவர்கள் தான் இப்படி வாசலில் ஒருத்தி வந்து கத்துவதே தெரியாமல் தனக்கான உலகில் சஞ்சரிக்கிறார்கள் என்றால் இவர்கள் பெற்றெடுத்த செல்வக்களஞ்சியங்களோ அதற்கும் மேல்...

அதிகமாய் செல்லம் கொடுத்து வளர்த்தாலோ என்னவோ அவர்கள் பெற்ற இரண்டுமே இரண்டு ரகம்... மூத்தமகள் அமிர்தாவுக்கு என்ன தான் பிரச்சனை என்று யாருக்குமே தெரியாது... ஒரு சமயம் சிரித்த முகத்தோடு உலா வரும்... கம்பெனி செயல்பாடுகளை ஆர்வமாய் கேட்டு தெரிந்துகொள்ளும்... மற்றொரு சமயமோ விட்டேற்றியாய் அமர்ந்திருக்கும்... அதனால் அமிர்தவள்ளி எதிலேயுமே சேர்த்தி இல்லை... அடுத்தது அவர்கள் குடும்பத்தின் வாரிசு சிவபாலன்... பார்ப்பதற்கு பாலில் வெண்ணையும் நெய்யும் போட்டு பிசைந்து செய்த ரசகுல்லாவை போல இருப்பான்... ஐந்தரையடி உயரத்தில் அழகான உடல்வாகோடு, அளவான புன்னகையை சிந்தி செல்லும் இவனை எல்லோருக்குமே பிடிக்கும்... இரண்டு வருடங்களுக்கு முன்பு வரைக்கும் முசுடு போல சுற்றித்திரிந்தவன் இப்பொழுதோ அனைவரையும் வசீகரிப்பவனாய் மாறியிருந்தான் எல்லாம் மீராவின் வைத்தியத்தால்...

சிவபாலனை பொறுத்தவரை தான்தான் என்ற அகங்காரம் சிறுவயதில் இருந்தே அதிகம் உண்டு... அதிலும் சிறுவயது முதலே பாலசுப்பிரமணியன் அவன் தான் அடுத்ததாக தன்னுடைய தொழிலை எல்லாம் கவனிக்கவேண்டும் நீ தான் முதலாளி என்று சொல்லி சொல்லி வளர்த்ததாலேயே அவனுக்கு வேலைக்கு இருப்பவர்களை கண்டால் அடிமைகளைப் போல தான் தோன்றும்... யாரைக் கண்டாலுமே சிடுசிடுவென எரிந்து விழுவான்... எதற்கெடுத்தாலும் அன்பாக பேசாமல் அதட்டி பேசி மட்டுமே வேலை வாங்குவான்... இப்படியே இருந்தவனை மொத்தமாக மாற்றுகிறோம் என்று தெரியாமலேயே மாற்றி நட்புணர்வோடு பழகவிட்டவள் மீரா தான்...

அவள் வேலைக்கு வந்து சேர்ந்த ஆரம்பத்தில் சிவபாலன் பிசினஸ் விசயமாக வெளியூர் சென்றிருக்க, மீரா வேலைக்கு சேர்ந்ததெல்லாம் அவனுக்கு தெரியவே தெரியாது... ஊரிலிருந்து வந்து பார்த்த பொழுது தான் அவளை வேலையில் சேர்த்து ஒருமாதம் ஆகப்போகிறது என்பதே தெரியவந்தது... அவளை தன்னிடம் கேட்காமலேயே வேலைக்கு சேர்த்ததற்காக அவள் தாய் தந்தையரிடம் காட்டு கத்தல் கத்தி வைத்தான்... பிறகு இரண்டு மாதம் வரைக்கும் பொறுத்து பார்க்கலாம் என்று இருவரும் கேட்டுக்கொள்ளவும் அமைதியாக விட்டுவிட்டான்... இது எதுவும் புரியாத மீராவோ ஒருநாள் எதார்த்தமாய் கொட்டேசன் புத்தகம் தீர்ந்துவிட்டதென்று வீட்டில் போய் அலுவலக அறையில் எடுக்க, இப்பொழுது போலவே காட்டுகத்தல் கத்திக்கொண்டிருக்க, அவள் சென்ற நேரமோ என்னவோ பிரேமா அம்மா, தன் மகளோடு மதுரை வரைக்கும் சென்றிருந்தார்... பாலசுப்பிரமணியும் சர்வீஸ் டிபார்ட்மெண்டில் சீனியர் இன்ஜினியர்களோடு மீட்டிங்கில் இருக்க வீட்டில் இருந்தது சிடுமூஞ்சி சிவபாலன் தான்...

இவள் போய் ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக அம்மா அம்மாவென்று சத்தம் போட, முகப்பில் வலதுபுறம் சென்ற மாடிப்படிகளின் முடிவில் இருந்த அறைக்குள்ளேயிருந்து அவனுடைய குரல் கேட்டது....

“யாரது?...”என்று... திடீரென்று கேட்ட குரலில் திடுக்கிட்டவள்,

“நான் மீரா... பிரேமா அம்மா இல்லையா?...”என்று இங்கிருந்தே கத்தினாள்... அந்த பக்கம் ஒரு பத்து நொடிகள் அமைதியே நீடித்திருக்கும்... திடீரென்று கதவு திறக்கும் சத்தம் கேட்க, திரும்பி பார்த்தவளுக்கு திடுதிடுவென்று ஓடிவந்தவனின் உருவம் தான் கண்ணில் பட்டது... அவனை பார்த்ததுமே பளபளவென பாலில் ஊரவைத்த பால்பனியாரம் தான் நினைவில் வந்து போனது... அடர்ந்த புருவங்களும், சிறிய விழிகளும், முழுதாய் மலித்த தாடியும், அளவான மீசையுமாய் இருந்தவனை ஒருதடவை கொஞ்சம் பார்த்து தான் வைத்தாள்... கன்னத்தில் விழுந்த குழிக்கு கொஞ்சம் மட்டும் சிரித்தபடி வந்திருந்தான் என்றால் மீராவிற்கு அந்த நிமிடமே அவனை பிடித்திருக்குமோ என்னவோ! முசுடு போல உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு அவன் வந்து நிற்க இவளுமே தன் ரசனையான எண்ணத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கெத்தாக ஒரு பார்வை பார்த்து வைத்தாள்... அவனோ அவள் பார்வை எதையுமே கண்டுகொள்ளாதவனாய்,

“என்ன?...” என்க, இவளும் கேட்டாளே ஒரு கேள்வி... அவ்வளவு நேரமும் தோரணையாய் நின்றவனுக்கே, புஸ்ஸைன்றாகிவிட்டது...

“வாட்? என்ன என்ன கேட்ட?...”
என்று அவன் திரும்பவும் கேட்க, அதே கேள்வியை திரும்பவும் கேட்டாள்...

“நீங்க யாருன்னு கேட்டேன்? பிரேமாம்மா இல்லையா? அவங்க எங்க?...” என்று அடுக்கடுக்காக அவள் கேள்விகளை கேட்க, கொஞ்சமும் தாமதிக்காதவனாய்,

“இடியட்....” என்று அவள் முகத்திற்கு நேராகவே சொன்னான்... அவன் அப்படி சொன்ன பிறகும் சாதாரணமாய் நின்றால் அது மீராவே கிடையாதே... பொங்கி விட்டாள்...

“இடியட்டா? ஹலோ யாரப்பாத்து இடியட்ன்னு சொல்லுற? ஸ்டுப்பிட்... அறிவில்ல ஒனக்கு? யாருன்னு கேட்டா நாந்தான் இன்னாரு... இந்த வீட்டுக்கு இன்னாரு... நீங்க யாருன்னு கேட்கணும்... நீ யாருன்னு கேட்டதுக்கு அப்படி தானே நான் சொன்னேன்... ஏதோ பெரிய இவனாட்டம் இடியட்ன்னு சொல்லுற யாருடா நீ?...” என்று அவள் பொறிய,

“நீ புதுசா வந்துருக்க அந்த கேசியர் தானே?...” என்று கேட்டு வைத்தான்...

“நான் அந்த கேசியரோ! இல்ல அந்துபோகாத கேசியரோ! நீ யாருய்யா முதல்ல?.பெரிய இவன் மாதிரி பேசுற... ஒழுங்கா என்கிட்ட சாரி கேளு...” என்று படபடவென காற்றில் பறந்த துப்பட்டாவை இழுத்துபிடித்தபடி கேட்க, இடுங்கிய விழிகளுடனேயே நின்றவன்,

“யூஸ்லெஸ்... ஐ அம் த ஓனர் ஆஃப் த ஷோரூம்... சிவபாலன் பாலசுப்பிரமணியன்...” என்றான்... ஓனர் என்று சொன்னதும் திடுக்கிட்டு கையைக்கட்டிக்கொண்டு பேசும் சுபாவம் உள்ளவளாக இருந்திருந்தால் அவர்களின் பேச்சுவார்த்தை அப்பொழுதே நிறைவு பெற்றிருக்கும்... மீராவிற்கும் அந்த நிமிடமே வேலையும் பறிபோயிருக்கும்... ஆனால் அவள் தான் அப்படி எதுவும் செய்யவில்லையே... தோரணையாக நின்றவனை அர்ப்பமாய் பார்த்தவள்,

“நீ எவனா இருந்தா எனக்கென்னடா? சாரி கேளுன்னா கேளு... உன்கிட்ட வேலை பார்த்தா இடியட்ன்னு சொல்லுவியோ! ஆளும் மண்டையும் பாரு... உன் மண்டைக்கு மேல இருக்க வெயிட்ட இறக்கி வச்சுட்டு எல்லார்க்கிட்டேயும் ஒழுங்கா பழகு... அப்பத்தான் எவனா இருந்தாலும் ஒன்ன மதிப்பான்... எந்தலையெழுத்து இன்னைக்கு உன்கிட்ட வந்து திட்டு வாங்கணும்னு... வேஸ்ட் ஃபெல்லோ...” என்று வாய்க்கு வந்ததை எல்லாம் திட்டிவிட்டு நடையைக்கட்ட, போகும் அவளையே தன்னை மறந்த சிரித்த புன்னகையோடு பார்த்திருந்தான்.. அதன்பிறகு அவளும் அன்று வேலை மும்முரத்தில் தீவிரமாகிவிட, இவனுமே அடுத்தடுத்த தனது பிசினஸ் விசயங்களில் மூழ்கிவிட்டான்…


இதுபோலவே தான் இருவரும் எதிர்பாராமல் சந்திக்கும் தருணங்கள் எல்லாம் பல சமயங்களில் மோதலிலேயே ஆரம்பித்து மோதலிலேயே முடியும்... சில குறிப்பிட்ட சமயங்களில் மட்டும் அவளுடைய காரசாரமான வாக்குவாதங்களில் தன்னை மறந்துமே நின்றிருக்கிறான்... இரண்டு மாதங்கள் வரைக்கும் பொறுத்திருந்து பார்த்து அவளை இந்த வேலையில் நீடிக்கவிடலாமா? வேண்டாமா? என்று சொன்னவன் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே மேலாண்மை பொறுப்பையும் அவளிடத்திலேயே கொடுக்க சொல்லி பெற்றவர்களிடம் பேசினான்... நாட்கள் செல்ல செல்ல அவனுடைய குணமும் மாற இப்பொழுதோ அவனை பிடிக்காத பணியாளர்கள் ஷோரூமில் மட்டுமல்ல, அவனுடைய மேற்பார்வையில் இருக்கும் எந்த தொழிலுமே இல்லை என்று தான் சொல்லலாம்... சரி இதற்கு மேலும் விளக்கு விளக்கென்று எதனையும் விளக்க தேவையில்லை... மேலோட்டமாய் சொல்ல வேண்டியது இப்பொழுதைக்கு இவ்வளவே தான்... மற்றதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் இப்பொழுது நம் நாயகியோடு பயணிப்போம்...

வெகுநேரம் வரைக்கும் வீட்டு வாசலிலேயே நின்று கத்திக்கொண்டிருந்தவள், பொறுமை தாங்காமல் நிலைப்படியில் நின்று கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தாள்... கொடுமையிலும் கொடுமையாய் ஹாலில் கிடந்த சோபாவில் விட்டத்தை வெறித்து பார்த்தபடி அமிர்தா படுத்துக்கிடக்க தலையில் அடித்துக்கொண்டு புலம்பினாள்...

“தெனந்தெனம் இதே பொலப்பா போயிடுது இந்த வீட்டுல... இந்த அக்காவுக்கு நான் ஒருத்தி கத்துற சத்தம் கேட்கவேயில்லையா? வேணும்னே பண்ணுதா! இல்ல உண்மைக்குமே இப்படியான்னே தெரிய மாட்டுதே... ஆமா இதுக்கு மட்டும் அங்க என்ன தெரியுதுன்னு தெரியலையே...” என்று சுவற்றையும் அமிர்தாவையும் மாற்றி மாற்றி பார்த்தவள், தோளை குலுக்கியபடி வேறு எவரேனும் கண்ணுக்கு தென்படுகின்றனரா என்று பார்க்க, வீட்டின் பின்வாசலுக்கு போகும் கதவு வரைக்கும் வரிசையாக இருந்த மூன்று கதவுகளுமே திறந்து கிடந்தது...

“இப்புடி எல்லா கதவையும் பப்பரப்பேன்னு தெறந்து போட்டுட்டு எங்ப தான் போயிருப்பாங்க? பேசாம நாமலே ஆபிஸ் ரூமை திறந்து பணத்தை லாக்கர்ல வச்சு பூட்டிட்டு போயிடுவோமா?...” என்று யோசிக்கும் பொழுதே பின்வாசல் வழியாக பிரேமா அம்மா வியர்த்து வழிய, தூக்கி சொருகிய புடவையோடு தலையில் போட்டிருந்த கொண்டையை முடியக்கூட முடியாமல் ஒற்றைக்கையில் மாவோடு வந்து கொண்டிருந்தார்... மீராவை கண்டவர் வேகமாய் வந்து அமிர்தாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சத்தம் போட்டார்...

“இந்தா... சும்மா தானே படுத்துக்கெடக்க... புள்ள வந்து எவ்ளோ நேரமா கத்திட்டு இருக்கு... அந்த பையெல்லா வாங்கி வச்சா தான் என்ன?...” என்றவர் அமிர்தா எந்த ரியாக்சனுமே கொடுக்காமல் கிடக்கவும் மாவுக்கையுடனேயே தலையில் அடித்துக்கொண்டு வந்து சாவியை எடுத்து மீராவிடத்தில் கொடுத்தார்...

“இன்னைக்கின்னு பார்த்து கிரைண்டர் சொதப்பிடுச்சு மீராம்மா... ஊறவச்ச அரிசியை அள்ளிப்போட்டுட்டு தான் பாக்குறேன் ஓடவேயில்ல... அதான் சின்னவரு வீட்டுல போயி மாவ ஒட்டிக்கிட்டு இருந்தேன்... நீ கூப்புட்டது கேட்கவேயில்ல... சிவா தான் நீ வந்து நிக்குறன்னு போன் பண்ணி சொன்னான்...” ஒரு வித பார்வையுடனேயே மாடியில் இருந்த அவன் அறையை பார்த்துவிட்டு அலுவலக அறையை திறந்து தான் கொண்டு வந்த அனைத்தையும் உள்ளே வைத்துவிட்டு வந்து நின்றாள்...

“ம்மா சிவா சார் ரூம்ல தான் இருக்காரா?...”

“ஆமாண்டா... ஏன் அப்பா வர சொன்னாரா?...”

“இல்லம்மா நாந்தான் பார்க்கணும்...” என்று மேலே பார்த்தபடியே
சொல்ல, மாடியில் இருந்து அவன் குரல் கேட்டது... “மேல வா மீரா...” என்று, பிரேமாவும் புன்னகைத்தபடியே தலையசைத்துவிட்டு சாவியை வாங்கி வைத்துவிட்டு உள்ளே செல்ல,
முணங்கியபடியே பைலை எடுத்துக்கொண்டு படிகளில் ஏறினாள்...

'மனசக்குள்ள பெரிய டேஷுன்னு நெனப்பு... ரூம்குள்ள இருந்துட்டே எல்லாத்தையும் டீல் பண்ணுவான்... பிச்சைக்காரி கணக்கா கத்திட்டு இருக்கேன்... மாடியில இருந்துட்டு பக்கத்து வீட்டுல இருக்கவங்களுக்கு போன் பண்ணி சொல்லுவானாம், கீழ மட்டும் எறங்கி வரமாட்டானான்... டாமிட்...' என்று மனதிற்குள்ளேயே சிவாவை கரித்துக் கொட்டியவள், வேக நடை போட்டு அவனது அறைவாசலில் போய் நிற்க, கதவு தானாக திறந்து கொண்டது... அவள் வரும் நேரத்தை சரியாக கணித்து வைத்திருப்பான் போல, கதவை திறந்தவன் வெளியே வந்து புன்னகை வழியும் விழிகளோடு நிற்க, இவளோ முறைத்து வைத்தாள்...

“என்ன விசயம் மீரா?... பார்வையே சரியில்லையே கோபமா இருக்கியோ?..” என்க, இல்லையென தலையசைத்தவள்,

“ஒன்னுமில்ல சார்...” என்று வார்த்தைகளை கடித்து துப்ப, சிரித்துவிட்டான்...

“நல்லாவே தெரியுது நீ செம்ம கோபத்துல இருக்கன்னு...” என்று அவன் சொன்னது தான் தாமதம், கீழே ஒருமுறை எட்டி பார்த்தவள் திரும்பி ஓங்கி ஒன்று தலையில் வைக்க, வலியில் முகம் சுருக்காமலேயே சிரித்து வைத்தான்...

“சிரிக்காத... செம்ம கடுப்பா இருக்கு... சீக்கிரமா போகணும்னு சொல்லிருந்தேன்ல... வாசல்ல வந்து நின்னுட்டு காட்டு கத்தலா கத்துறேன் ரூம்குள்ள இருந்துட்டே சத்தம் போடாம இருக்க? என்னடா நெனச்சுட்டு இருக்க நீ?...” என்க,

“சொல்லட்டா...” என்று அவளை பார்த்தபடியே சிரித்துவைக்க, சட்டென்று முகம் மாறினாள்...

“நீ ஒன்னத்தையும் சொல்லி கிழிக்க வேணாம்... இந்தா பிடி... இந்த ரெண்டு பேப்பரையும் ஸ்கேன் பண்ணி இந்த ஐடிக்கு மெயில் அனுப்பிடு... நான் மார்னிங் வந்து பார்த்துக்குறேன்... டைமாச்சு... விமல் வெயிட் பண்ணிட்டு இருக்கான்...” என்று கடகடவென்று சொல்லி பைலை அவன் கையில் திணித்துவிட்டு இவன் பார்வையில் இருந்து தப்பித்தால் போதுமென்று நடையைக் கட்டினாள்...
 

Priyanka Raja

New member
Vannangal Writer
Messages
8
Reaction score
5
Points
3
பதிவு 3
Q1dCRAi8JltMBClWzkO-DU0h8ImG-QvtV2oMgLn-nR9vAq5yeLqgtmSXSUSSXEt9FE81kKWyV0FWr5AbTEsztmHypJlCIjBvLlxSFEMHkgI9aX01Yw0MkxV_PTaEbrPQ3HNTiZp7


சிவாவிடம் இருந்து இப்போதைக்கு தப்பித்தால் போதுமென்ற முடிவோடு படிகளில் இறங்கி வேகமாய் வந்தவள் கேட்டை திறந்து வெளியே வந்து நிற்க, பூந்தூரலாய் மழை அவளை நனைத்து விளையாடியது... அந்த நிலைமையிலும் எதார்த்தமாய் மாடியில் விழிகளை சுழலவிட, அவள் நினைத்ததை போலவே சிவா ஜன்னல் திரையை விலக்கி பார்த்துக்கொண்டிருந்தான்...

“இவன திருத்தவே முடியாது போலயே...” என்று அவளது இதழ்கள் சிறியதாய் முணுமுணுத்தது அவனுக்கும் கேட்டிருக்குமோ என்னவோ! தானாய் அவன் இதழ்கள் வளைந்தது... திரையை இன்னும் பெரிதாக ஒதுக்கியபடியே இவளைப்பார்த்து கையை அசைக்க, வேறு வழியே இல்லாதவளாய் இவளும் கையை அசைத்துவிட்டு விடைபெற்றாள்...

வந்தவழியாகவே திரும்பி விமல் நின்ற இடத்தை நோக்கி செல்ல, அவனுடைய பைக் மட்டுமே அவளை வாவென்று வரவேற்று வைத்தது... ஏங்கே போயிருப்பான் என்ற கேள்வியுடனேயே அண்ணனை தேட, அவனோ போர்டிக்கோவில் நின்று சீனியர் சேல்ஸ் ரெப்ரசண்டேட்டிவ் மணி அண்ணாவோடு பேசிக்கொண்டிருந்தான்... இவள் நேராக அவர்களை நோக்கி செல்ல மணி இவளை பார்த்து,

“தங்கச்சி... என்னத்தா அதுக்குள்ள கிளம்பிட்ட?...” என்று சிறு வருத்தத்துடனும், உற்சாகத்துடனும் கேட்டு வைக்க சிரித்து வைத்தாள் இவள்...

மணி அண்ணன் எப்பொழுதுமே இப்படி தான்... இவள் ஒன்பது மணிக்கே கிளம்பினாலும் கூட இப்படி தான் கேட்டு வைப்பான்... சிவாவை விடவும் ஒன்றிரண்டு வயது தான் மூத்தவன்... சிவாவை விடவும் இந்த கம்பெனியில் அதிக ஈடுபாட்டுடனும், அக்கறையோடும் வேலையை பார்ப்பவன்... மணி மட்டும் ஒருநாள் இல்லையென்றாலும் ஒரு வண்டி கூட விற்காது என்று தான் சொல்லவேண்டும்... அதே சமயம் சாதாரணமாய் வின்டோ ஷாப்பிங் என ஷோரூம் பக்கம் வருபவர்களை கூட எப்படியும் பேசி பேசியே ட்யூவிலாவது வாங்க வைத்துவிடுவான்... அது தான் அவனுடைய சாமர்ந்தியமும் கூட...

எந்த அளவிற்கு அவனிடம் பேச்சுத்திறமை இருக்கிறதோ! அதை விட அவனிடத்தில் நட்பு பாராட்டுதலும், அன்பு செலுத்துதலும் பிறப்பிலேயே இருந்திருக்கும் போல... எவரையும் தன் முதல் புன்னகையிலேயே சட்டென்று வசீகரித்துவிடுவான்... உதவியென்று வந்தால் தன்னால் முடிந்ததை உடனே செய்துவிடுவான்... இப்படி தான் ஷோரூமில் புதிதாய் வேலைக்கு சேர்ந்த பையன் அவசர தேவையென முதல் மாதமே கடனாக முதலாளியிடம் பணம் கேட்க, அவர் கொடுக்க தயங்கிய போது சிறிதும் யோசிக்காமல் தனது கழுத்தில் கிடந்த செயினை அடகு வைக்க சொல்லி அவனிடத்தில் கொடுத்துவிட்டான்...

மற்றவர்கள் எல்லாம் அவனது செயலை முட்டாள்தனமென நினைக்க, அவனோ எதையுமே அலட்டிக்கொள்ளாமல் அந்த பையனை நம்பி கொடுத்துவிட்டான்... அந்த நிமிடத்தில் இருந்தே மீராவுக்கு மணி என்றால் ஒரு தனி மரியாதை தான்... ஏதோ தன் சகோதரர்களிடத்தில் பழகுவதைப் போல தான் பழகினாள்... மற்றவர்கள் எல்லாம் மணியை சார் என்று அழைக்க, இவளோ அன்றிலிருந்து அண்ணன் என்று அழைத்து வைத்தாள்... பிறகென்ன சும்மாவே அன்பு செலுத்தினால் அவனை பிடிக்க முடியாது... அண்ணன் என்று சொல்லிவிட்டால் சொல்லவும் வேண்டுமா என்ன? மீராவிடத்தில் இன்னும் அக்கறை காட்ட ஆரம்பித்துவிட்டான்... தன் எதிரில் புன்னகை முகமாய் நின்றவனை பார்த்து பொய்யாய் முறைத்து சிரித்தவள்,

“நாந்தான் காலையிலேயே சொன்னேன்லண்ணா... இன்னைக்கு சீக்கிரமா போகணும்னு... ஏதோ ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்பிங்கலே...” என்க, சிரித்து வைத்தான்...

“அட போ தங்கச்சி... ரெண்டு வண்டி சேல் ஆகுற மாதிரி வேற இருக்கு... இந்த நேரத்துல நீ கெளம்பிட்டா நான் என்ன பண்ணுறது?...” என்க ஆர்வமாய்

“என்னண்ணா சொல்லுறிங்க? ரெண்டு வண்டியா?...” என்றாள்... இருவரின் பேச்சுவார்த்தையில் விமலுக்கு தான் திக்கென்றானது...

“அடப்பாவிங்களா? ரெண்டு பேரையும் கொஞ்சமா பேசவிட்டதுக்கு என் அடிமடியில கைய வச்சுருவிங்க போலயே... அம்மா தாயே... இதெல்லா சரிப்பட்டே வராது... ப்ரோ என்ன ப்ரோ நீங்க? மீரா நீ வீ முதல்ல... உன்ன விட்டா மறுபடியும் உள்ள போயிடுவா... ஓடி வா... ஓடி வா... நேரமாகுது...” என்று கையைப்பிடித்து பேசியபடியே விடுவிடுவென்று அழைத்து செல்ல, மணியும் மீராவும் கலகலத்து சிரித்தனர்...

விமல் வண்டியை எடுக்க, அவன் பின்னேயே சிரித்தபடியே வண்டியில் ஏறியவள், மணியிடம் கையசைத்து விடைகொடுத்துவிட்டு பைக்கில் காற்றைக் கிழித்தபடி பறந்தாள்...

விமலின் வண்டி ஷோரூம் வாயிலில் இருந்து புறப்பட்டு ஒரு இரண்டு நிமிடங்கள் கூட கடந்திருக்காது... அதுநேரம் வரைக்கும் புன்னகை முகமாய் இருந்த மீராவின் முகம் சட்டென்று வாடியது... அவ்வளவு நேரமும் இருந்த உற்சாகமான மனநிலை எங்கே சென்றதென்று அவளுக்கே புரியாத மனநிலை தான்... இதமான குளிர்ந்த தென்றல் காற்று ஊசித்தூறல்களுடன் அவளை வருட, எதையும் அனுபவிக்கும் மனநிலை இல்லாதவளாய் அமர்ந்திருந்தாள்... ஷோரூமில் எவ்வளவு தான் அதிகப்படியான வேலைப்பளு இருந்தாலும் தொலையாத புன்னகை இப்பொழுது தொலைந்து போயிருந்தது...

மீராவிற்கு தனது வீட்டை காட்டிலும் அலுவலகம் மட்டும் தான் தற்போதைய உலகமே.... அதிகப்படியான வேலைப்பளு மற்றவர் முகங்களில் வேதனையை கொடுக்கும் பொழுது இவளுக்கு மட்டும் உற்சாகத்தை மட்டுமே கொடுக்கும்... மற்றவர்கள் சிறிதுநேரம் ஓய்வு கிடைத்தால் போதும் என்று நினைக்கையில் இவள் ஓய்வை ஒதுக்கி வைத்துவிட்டு தானாகவே ஒவ்வொரு வேலையையும் செய்து கொண்டிருப்பாள்... மற்றவர்களின் வேலையிலும் உதவுகிறேன் என்று போய் நிற்பாள்... அவளை பொறுத்தவரைக்கும் அதிகப்படியான பணிசுமைகள் அவளை பழைய நினைவுகளில் மூழ்கவிடாது... எதையும் யோசிக்கவிடாது...

ஆனால் வீட்டை நோக்கி பயணப்பட்டுவிட்டால் போதும் மறக்கவேண்டும் மறக்கவேண்டும் என்று நினைத்த நினைவுகள் எல்லாம் நினைவடுக்கில் சுழன்று அவளை கொல்லாமல் கொல்லும்... அதனாலேயே என்னவோ அதிகப்படியான நேரங்களை ஷோரூமிலேயே செலவளிப்பாள்..

மீராவின் அந்த திடீர் அமைதியை அவள் உணர்ந்தாளோ இல்லையோ! அவளுக்கு முன்பாக அமர்ந்திருந்தவன் நன்றாகவே உணர்ந்தான்... பைக் மிரரை சரிசெய்து அவள் முகத்தை பார்க்க, இவ்வளவு நேரமும் அவளிடத்தில் இருந்த சந்தோசம் இப்பொழுது துடைத்து எடுத்ததை போல வெறுமனே என்று இருந்தது... தன் மனக்கண்ணில் தன்னையறியாமல் அவனுடைய அன்பான தங்கையின் இயல்பான புன்னகை தோன்றி மறைய, அவளுடைய அமைதியை கலைக்க வேண்டுமென்றே அழைத்தான்...

“மீரா...” என்ற சகோதரரின் அழைப்பில், “ம்ம்ம்...” என்றபடி நேராக கண்ணாடியை பார்க்க, அவனுமே அதில் தன்னை பார்த்தபடி வருகிறான் என்பது புரிந்தது...

“என்னாச்சு திடீர்னு சைலண்ட் ஆகிட்ட?...” என்றவனை பார்த்தவள், மெலிதாக இதழுக்கும் வலிக்குமோ! என்பது போல சிறு கீற்றாய் புன்னகையை வலிய விட்டாள்...

“ஒன்னும் இல்லையே...”என்றவளை ஒருமாதிரி பார்த்தவன்,

“நம்புற மாதிரி இல்லையே...”

“என்ன நம்புற மாதிரி இல்ல, நெம்புற மாதிரி இல்ல? நல்லா தான் இருக்கேன்...”

“இல்லையே...அப்புறம் ஏன் சைலண்ட் ஆகிட்ட?...”

“சைலண்ட் எல்லா ஆகல... சின்னதா ஒரு யோசனை...”

“எதப்பத்தி?...”

“ம்ம்ம்... எல்லா உன்ன பத்தி தான் யோசிச்சுட்டு இருக்கேன்...” என்க, வண்டியை மெதுவாக ஓட்டியபடியே கேட்டான்...

“எதே... என்னபத்தி யோசிச்சுட்டு இருக்கியா? ஆமா என்னபத்தி அப்படியென்ன பலமான சிந்தனையாம் இளவரசிக்கு?...” என்க, பல்வரிசை தெரியவே சிரித்துவிட்டாள்...

“அதாகப்பட்டது இளவரசே... என்னுடன் பணிபுரியும் தோழிப்பெண் ஒருத்தி தங்களை பார்த்தாலே மந்திரித்து விட்டது போல மருகுகிறாளே! என்னவாய் இருக்கும் என்று தான் சிந்தித்தேன்...” என்று சிரித்தபடியே வார்த்தைகளை உதிர்க்க,

“ஏய் சேட்டை... என்ன விளையாடுறியா? யாரு மருகுறா?...”

“பார்றா... அப்படியே ஒன்னுந்தெரியாத பாப்பா இவரு... சும்மா நடிக்காதடா... நீ யாரு எப்படிபட்ட ஆளுன்னு எல்லாமே எனக்கு தெரியும்... ஒஞ் சாம்பிராணி போடுற வேலையை நம்ம ஆத்தாளோட நிறுத்திக்க...” என்க, அவர்கள் பயணித்த வண்டியும் ப்ரேக் அடித்து நின்றது... “என்னடாண்ணா நிறுத்துன்னு சொன்னதுமே வண்டிய நிறுத்திட்ட?...” என்று சுற்றும்முற்றும் கவனிக்காமலேயே கேட்க,

“நிறுத்தாம... வரவேண்டிய இடம் தான் வந்துருச்சே...” என்றான்... அதன்பிறகு தான் சுற்றம் உணர்ந்தவளோ!

“ஓ வந்துட்டோமோ!...” என்றபடி இறங்க அவள் முன்னே இரண்டு அடுக்கில் பெரிதான கட்டிடம் ஒன்று வரவேற்றது...
 
Status
Not open for further replies.
Top Bottom