சமீர்க்கும் ஸ்ரீதேவிக்கும் வாயெல்லாம் பல்லாக தான் இருந்தது.
சமீருக்கு தன்னுடைய பழைய காதலி கிடைத்துவிட்டாள் என்ற சந்தோசம் மட்டும் தான் இருந்ததே தவிர அவள் இன்னொருவருடைய மனைவி என்ற எண்ணமே அவனுக்கு தோன்றவில்லை, காரணம் அவன் இவ்ளோ நாளாக இருந்த நாட்டின் கலாச்சாரம் அப்படி, நம்மக்களுக்கு நல்லதை கற்றுக்கொள்ள தான் லேட்டாகும் கெட்டதை அல்ல.
சமீர் அவனுடைய வீட்டுக்கு சென்றான், அங்கே அவனுடைய அம்மாவும் அப்பாவும் சோகத்தில் இருந்தனர்.
என்னம்மா என்னாச்சு நீயும் அப்பாவும் ஒரு மாதிரி இருக்கீங்க என்றான் சமீர்.
சமீர், உன்னையும் மீனாவையும் இணைத்து ஊர்ல எல்லாரும் தப்பா பேசுறாங்க இனியும் நீ அங்க போனா நல்லா இருக்காது, பாவமாகவும் வருத்தத்துடனும் கேட்டாள் மல்லிகா, சமீரின் அம்மா.
ஊர்ல எல்லாரும் தப்பா பேசல சரியா தான் பேசுறாங்க, நானும் மீனாவும் சீக்கிரமாகவே கல்யாணம் பண்ணிக்க போறோம், இதுக்கு நீங்க சம்மதிக்கனும், ஒருவேளை சம்மதிக்கலன்னா, நா எப்பாவது தான் மீனா வீட்டுக்கு போறேன் அப்பறோம் எப்பவும் அங்கேயே இருந்துருவேன் என்றான் சமீர்..
பாத்தியா மல்லிகா, அவன் நம்மகிட்ட சம்மதம் கேட்கல சம்மதிக்கணும்னு கட்டளை போடுறான், ஒரே ஒரு பிள்ளைனு செல்லம் கொடுத்து வளத்தோம்லா நமக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலையும் வேணும், நீ இந்த வீட்டுக்கு எப்பையுமே வந்துக்கோப்பா, நாங்க உன்ன ஒன்னும் கேட்கல, இங்க இருக்கிற பொருள்கள் மாதிரியே நாங்களும் இருக்றோம், நீ எப்பவேணாலும் வரலாம் போலாம் சரியா சார், கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து அகன்றான் சுந்தரம், சமீரின் அப்பா.
சமீர்க்கு அவனுடைய பெற்றோர்களின் கோபத்தை நினைத்து வருந்துவதா இல்லை அவர்கள் அவனது முடிவிற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லையேன்னு நினைத்து சந்தோசப்படுவதா, என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான். நம்ம அம்மா அப்பா தான சமாதானம் பண்ணிரலாம் என்று நினைத்து கொண்டு படுக்கை அறைக்கு சென்றான், ஆனால் அவனுடைய பெற்றோர்கள் அவனுடன் இனிமேல் பேச போவதில்லை என்று அவன் அப்போது அறியவில்லை.
ஒரு வாரத்திற்கும் மேல் ஆன பின்பும் மீனா மித்ரனுடன் பேச வில்லை, மித்ரன் அவளை தொடர்பு கொண்டாலும் அவள் அதை நிராகரித்தாள், இந்த கவலையில் மித்ரன் பாபுவை பற்றி மறந்தே போனான், பிறகு எங்கிருந்து பாபு கேட்டதற்கு சம்மதம் சொல்ல முடியும்.
பொறுமை இழந்து மீனாவின் சித்தி ஸ்ரீதேவியின் நம்பரை ப்ரதாப்பிடம் வாங்கி போன் பண்ணினான், ஸ்ரீதேவியோ அவனது போனிர்காக காத்திருந்தால் போல அவனிடம் மீனா மற்றும் சமீரின் காதலை பற்றி கூறிவிட்டு இனிமேல் மீனாவுக்கு போன் பண்ணாத என்று எச்சரித்து விட்டு வைத்தாள். மித்ரனுக்கு என்ன செய்வதென்ரே தெரியவில்லை, ஸ்ரீதேவி கூறியதை அவன் துளி கூட நம்பவில்லை, பயங்கரமாக யோசித்து ஒரு வழியாக மீனாவின் அப்பா கனகராஜின் நம்பரையும் ப்ரதாப்பிடம் வாங்கி அவருக்கு போன் பண்ணி மீனுகுட்டி கூட பேசனும் அவளிடம் போனை குடுக்க முடியுமா என்று மட்டும் கூறினான், கனகராஜ் கொஞ்சம் நல்லவர் போல போனை உடனே மீனாவிடம் கொடுத்துவிட்டார். அவளும் வேறு வழியில்லாமல் மித்ரனிடம் பேசினாள்....
என்ன மீனுகுட்டி உனக்கு என்ன ஆச்சி எதுக்கு என்கூட இவ்ளோ நாளா பேசல, என்னோட போனையும் அட்டென்ட் பண்ணல, உன்னோட சித்திக்கு போன் பண்ணாலும் லூசு மாதிரி என்னல்லாமோ சொல்றங்க, உனக்கு என்மேல எதாவது கோபமா, மீனுகுட்டி ப்ளீஸ் பேசுமா, புலம்பி தள்ளினான் அவன்.
உங்க மேல கோபபடுறதுக்கு எனக்கு என்ன உரிமை இருக்கு, எனக்கு உங்களிடம் பேச பிடிக்கல அதான் பேசல அவ்ளோ தான், அப்பறோம் சித்தி ஒன்னும் லூசு மாதிரி பேசல அவங்க சொன்னது எல்லாமே உண்மைதான், கூலாக பதிலலிதாள் மீனா...
இன்னுமே அவனால் நம்ப முடியவில்லை, மீனுகுட்டி ஏற்கனவே உன்ன பாக்காம எனக்கு பைத்தியம் பிடிச்சிடும் போலிருக்கு, இதுல நீ வேற விளையாடாத, ப்ளீஸ் மீனுகுட்டி வீட்டுக்கு வந்துரு என்னால முடியலமா ரொம்ப கஷ்டமா இருக்கு கெஞ்சினான் அவன்....
அவன் கெஞ்சுவதில் மீனாவின் கோபம் கொஞ்சம் கரைந்து தான் போனது, சரி நா வீட்டுக்கு வரேன், ஆனால் ஒரு கண்டிஷன், நீங்க நித்யாவுக்கு யாரவேணாலும் கல்யாணம் பண்ணி வைங்க அத பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல , ஆனா அவளுக்கு எவ்ளோ முடியுமோ அவ்ளோ சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சிருங்க, நித்யாவோட கல்யாணத்துக்கு அப்புறம் அவ நம்ம வீட்டுக்கு வரக்கூடாது நீங்களும் அவளிடம் பேசகூடாது, இதுக்கு நீங்க ஒத்துக்கிட்டா நா இப்போவே வீட்டுக்கு வரேன் என்றால் மீனா.
அவள் இப்படி பேசுவாள் என்று அவன் துளியும் எதிர்பார்க்கவில்லை.
உனக்கு நித்துகுட்டி மேல இவ்ளோ கோபமும் பொறாமையும் வரதுக்கு காரணம் நீ என்மேல வச்சிருக்க அதீத காதல் தான்னு எனக்கு புரியது, நீ என்னோட தங்கச்சியை இவ்ளோ திட்டியும் நா உன்னிடம் வந்து வந்து பேசுறதுக்கு காரணமும் நா உன்மேல வச்சிருக்க அதீத காதல் தான்னு உனக்கு எப்போ புரியுதோ அப்போ தான் நீ என்னிடம் இப்படியெல்லாம் கண்டிஷன் போடாமல் இருப்ப என்றான் மித்ரன்.
ஓ உங்களுக்கு என்மேல இருக்கிற அதீத காதல்னால தான் அன்னைக்கு அப்படி அடிச்சீங்களா என்று மீனா பேசிக்கொண்டிருக்க அது வந்து மீனுகுட்டி என்று மித்ரன் தன் பக்கத்து நியாயத்தை எடுத்துக்கூற விளையும் போது மீனா அதை காது கொடுத்து கூட கேட்க தயாராக இல்லை, தேவை இல்லாம எதுவும் பேசாதீங்க என்று அவன் வாயை அடைத்து விட்டாள், இப்போ முடிவா கேட்குறேன் உங்களுக்கு நா முக்கியமா இல்ல நித்யா முக்கியமா என்று மீனா கேட்டதற்கு மித்ரனால விரக்தியாக புன்னகைக்க தான் முடிந்தது...
நா உன்னிடம் செய்யகூடாதுனு சொன்ன ரெண்டு விஷயதையும் மீறிட்டல்ல, இப்போ சொல்றேன் டி இந்த நொடி சொல்றேன் நா சாகுறதுக்கு ஒரு செகண்ட் முன்னாடி இந்த கேள்வியை நீ மட்டும் இல்ல யார் கேட்டாலும் என்னோட பதில் எனக்கு எப்போவுமே முக்கியம் என்னோட நித்துகுட்டி தான் ஆணித்தரமாக கூறினான் அவன்.
எனக்கும் நீங்க முக்கியமில்லை சமீர் தான் முக்கியம் நா அவரை தான் கல்யாணமும் பண்ணிக்க போறேன் என்று மீனா கூறிக்கொண்டிருக்கும் போதே மித்ரன் அவளது இணைப்பை துண்டித்தான், மீனா கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள்....
மித்ரன் மீதிருந்த கோபத்தில் சமீரை அதிகமாக காதலிக்கிறோம் என்ற பெயரில் காதலித்தால் மீனா, சமீரோ அவள் அழகை கண்டு மயங்கினான் அதற்கு காதல் என்றும் பெயர் வைத்தான் அவன்....
ஆகமொத்தத்தில் அவர்களது காஞ்சி போன காதல் செடியில் மறுபடியும் காதல் துளிர்விட ஆரம்பித்தது🌱.....
ப்ரதாப்பிற்கோ மித்ரன் இரண்டு முறை போன் பண்ணி அவனின் அப்பா அம்மா நம்பரை கேட்டது ஏதோ பிரச்சனையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை வரவழைத்தது, இந்த வாரம் எப்படியாவது லீவ் எடுத்துட்டு வீட்டுக்கு போகணும் அங்கு போனா தான் என்ன பிரச்சனைனு தெரியும், பலவாறு யோசித்தபடியே இருந்தான் ப்ரதாப். ஒரு வழியாக லீவும் கிடைத்து வீட்டிற்கும் சென்றான் அவன்.
ப்ரதாப் வீட்டிற்கு வந்தவுடன் ஏதோ பெரிய சாதனை புரிந்த மாதிரி தான் செய்த அனைத்தையும் பெருமையுடன் கூறினாள் ஸ்ரீதேவி.
அம்மா என்ன பண்ணி வச்சிருக்க உன்னோட சுயநலத்துக்கு அக்காவோட வாழ்கையை நாசம் பண்ணாத, சே உன்னை அம்மானு சொல்லவே எனக்கு கேவலமா இருக்கு, அவனும் அவன் அம்மாவை எப்படியெல்லாமோ திட்டி பார்த்தான், ஸ்ரீதேவி அதை கண்டு கொள்ளவே இல்லை, சமீரிடமும் மீனாவிடமும் கூட பேசி பாத்தான் அவர்களும் அவன் பேச்சை காது குடுத்து கூட கேட்க தயாராக இல்லை, இனி மீதம் இருப்பது அவனது அப்பா கனகராஜ் மட்டும் தான் அவரிடம் என்ன பேசுவது அவர் ஒரு டம்மி பீஸ் ப்ரதாப்பிற்கு என்ன செய்வதென்ரே தெரியவில்லை , அவனால் தலையில் கைவைத்துக்கொண்டு அமர மட்டும் தான் முடிந்தது.
தேன்கிரெனாவிடம் போன் பண்ணி அனைத்தையும் அழாத குறையாக சொன்னான் ப்ரதாப், அவன் கூறிய அனைத்தும் அவளின் தலையில் இடியாக இறங்கியது அவளுக்குமே என்ன செய்வதென்று தெரியவில்லை, உடனே நித்யாவிடம் போய் சொன்னாள் தேன்கிரனா இப்பொழுது இடி இறங்கியது நித்யாவின் தலையில், உடனே தன் பாச மிகு அண்ணனை பாக்க ஓடி வந்துவிட்டாள் நித்யா🏃....
அண்ணனுக்கும் அண்ணிக்கும் அப்படி என்ன தான் சண்டையாக இருக்கும், இங்க வந்து ஒரு நாளுக்கும் மேலாகிவிட்டது இன்னும் அண்ணன் என்கூட ஒழுங்கா பேசமா சுத்திட்டு இருக்கான், என்று நித்யா யோசித்து கொண்டிருக்கும் போதே பாபு அவளை போனில் அழைத்தான்.
ஹெலோ நித்து, ஹனி இப்போ தான் என்னிடம் எல்லா விஷயமும் சொன்னா, உன்னோட அண்ணா இப்போ எப்படி இருக்காங்க, அவங்ககிட்ட எதாவது பேசுனியா, என்றான் பாபு.
அண்ணா இப்போ முன்னாடி மாதிரி இல்ல ரொம்ப சோகமா இருக்காங்க, இன்னும் நா அண்ணாவிடம் எதுவும் பேசல , இனிமேல் தான் பேசணும், சாரி பாபு எனக்கு மூடு சரி இல்லை நா உனக்கு அப்ரோம் போன் பன்றேன் என்று கூறி விட்டு அவனது இணைப்பை துண்டித்தாள் நித்யா.
இதுக்கு மேலையும் வெயிட் பண்ணா அவ்ளோ தான் எல்லாம் கை மீறி போயிரும் இப்போமே அவனிடம் போய் என்னாச்சினு கேட்ருவோம், தன் சிந்தனையை ஓடவிட்டபடியே மித்ரன் அறைக்குள் நுழைந்தாள் நித்யா.
அண்ணா உனக்கும் அண்ணிக்கும் இடையில ஏதோ பிரச்சனை இருக்கு, அதை காரணமா வச்சி தான் அண்ணி மனச அவங்களோட சித்தி மாத்திருக்காங்கனு ப்ரதாப் சொன்னான், அப்படி என்ன பிரச்சனை தான் உங்களுக்குள்ள இருக்கு ப்ளீஸ் அண்ணா சொல்லு நீ சொன்னா தான் என்னால எதாவது பண்ண முடியும், சொல்லு அண்ணா ப்ளீஸ், நித்யா விடாமல் கெஞ்சிகொண்டே இருந்தாள், அதனால் மித்ரனும் மறுக்காமல் நடந்த அனைத்தையும் கூறிவிட்டான், அவனுக்கும் மனதில் இருப்பதை யாரிடமாவது கொட்டிவிடவேண்டும் போல் தான் இருந்தது அதான் அனைத்தையும் கொட்டிட்டான்.
என்னால தான் உங்க ரெண்டு பேருக்குள்ளையும் இவ்ளோ சண்டை வந்துருக்குனு எதுக்கு என்னிடம் முன்னடியே சொல்லல, கோவமாக கேட்டாள் நித்யா.
சொல்லிருந்தா என்ன பண்ணிருப்ப நித்துகுட்டி...
எனக்கு உன்னோட சந்தோசம் தான் முக்கியம் அண்ணா, என்னிடம் நீ இதை முன்னாடியே சொல்லிருந்தா நா உன்னைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகி இருப்பேன், மென்று முழுங்கி கூறிவிட்டாள்.
நீ இப்படி தான் சொல்லுவன்னு எனக்கு தெரியும் நித்துகுட்டி, நீயும் சரி அவளும் சரி எனக்கு நீங்க ரெண்டு பேரும் எவ்ளோ முக்கியம்னு புரிஞ்சிக்கமாண்டுகிங்க, எனக்கு மீனுகுட்டி முக்கியம் தான் ஆனால் அதை விட நீ ரொம்ப ரொம்ப முக்கியம், உங்க ரெண்டு பேர்ல யாரையும் யாருக்காகவும் என்னால விட்டுகொடுக்க முடியாது, நா சொல்றது புரியுதா நித்துகுட்டி...
ம்ம் புரியுது அண்ணா, அடலீஸ்ட் உனக்கு கல்யாணம் முடியுறதுக்கு முன்னாடி எப்படி இருந்தியோ அப்படியாச்சும் இரு, நா வேணும்னா வேலைக்கு போகல என்றால் நித்யா.
உனக்கு வேலைக்கு போறது எவ்ளோ பிடிக்கும்னு எனக்கு தெரியும், வேணும்னா ஒரு மாதம் லீவ் எடுத்துட்டு இங்க வந்து இருந்துக்கோ, சிறு சிரிப்புடன் கூறினான் மித்ரன்.
நா வேலைக்கு போகலனு சொன்ன உடனே உன் முகத்தில் சிரிப்பு வந்துடுமே, நா ஒரு மாதம் இல்ல ரெண்டு மாதம் லீவ் கேட்டு உன்னோட இல்ல இல்ல நம்மளோட பிரச்சனையை முழுவதும் சரி பண்ண முடியுமான்னு தெரியல அடலீஸ்ட் பாதியாச்சும் சரி பண்ணிட்டு தான் போவேன், உறுதியாக கூறினாள் நித்யா.
ஓ அப்படியா பெரிய மனுஷி, நீங்க சொன்னா கண்டிப்பா சொன்னபடி பண்ணிடுவீங்களே, இப்பொழுது நல்லாவே சிரித்துகொண்டே அவளை கிண்டல் அடித்தான் அவன்.
நித்யாவும் அவள் பணிபுரியும் அலுவலகத்தில் இரண்டு மாதம் லீவும் கேட்டுவிட்டால், மேனேஜரும் நீ நல்லா வேலை பாக்குற அதுனால தான் உனக்கு இவ்ளோ நாள் லீவு தரேன், ஆனால் லீவு முடிஞ்சப்புறம் ஒரு வருடத்திற்கு நீ லீவ்வையே மறந்துறனும் என்ற நிபந்தனை வைத்த பின்பு தான் லீவே கொடுத்தார்.
அதன்பின் நித்யாவிற்கும் மித்ரனுக்கும் மனது கொஞ்சம் லேசானது போல் இருந்தது, ஆனால் நித்யாவிற்குகோ எவ்ளோ கண்ட்ரோல் பண்ணி பார்த்தும் அவளால் முடியவில்லை மீனா மீது கோபம் அதிகமாகிக்கொண்டே தான் இருந்தது, அதைவிட அதிகமாக முகம் தெரியாத அந்த சமீரை கொல்லும் அளவிற்கு கோபம் வந்தது அவளுக்கு.
நாட்கள் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் வேகமாக சென்றது, மித்ரனும் முன்னாடி இருந்ததற்கு இப்போ எவ்ளோ பரவால்ல கொஞ்சம் அதிகமாகவே சிரிக்க ஆரம்பித்திருக்கிறான், அன்று ஒரு நாள் காலை உணவை வாயில் திணித்த படியே நித்யாவும் மித்ரனும் ஒருவரை மாற்றி ஒருவர் கிண்டல் அடித்துக்கொண்டிருந்தனர், கற்பகமும் அவர்களின் சிரிப்பை கண்டு கொஞ்சம் நிம்மதியானாள், அவள் நிம்மதியை கெடுப்பதற்கென்றே நித்யாவின் போன் சிணுங்கியது திரையில் ஹனி என்று தெரிய அதை மித்ரனே ஸ்பீக்கரில் போட்டு நித்யாவின் அருகில் வைத்தான், தன் பாச மிகு தங்கை சாப்பிடும் போது போனை காதில் வைத்து பேசி கஷ்டப்படாமல், சுலபமாக சாப்டுக்கொண்டே பேசவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் தான் ஸ்பீக்கரில் போட்டு வைத்தான, ஆனால் அது அவனுக்கே பெரிய ஆப்பாக வரும் என்று அவனுக்கு தெரியாது.
சொல்லு ஹனி என்றால் உற்சாகமான குரலில் நித்யா,,
எனக்கு இப்போ தான் ப்ரதாப் போன் பண்ணி சொன்னான் நித்து, ஒரு பெரிய பிரச்சனை, மீனா அண்ணிக்கும் அந்த சமீர்க்கும் இன்னும் இரண்டு வாரத்தில் நிச்சயம் பண்ண போறாங்கலாம், என்றால் ஹனி.
கற்பகம் சொன்னது போல் ஹனியின் நாக்கில் சனி தான் தாண்டவம் ஆடுது போல, ஹனி கூறிய அடுத்த நொடியே மித்ரன் மயங்கியிருந்தான்....
மித்ரன் தரையில் விழுந்த வேகத்தில் அவன் தலையில் அடிபட்டு ரத்தம் வேறு வந்தது, அதை பாத்து நித்யாவும் கற்பகமும் பதறி போய் அடிச்சி புடிச்சி ஆட்டோவ புடிச்சி மருத்துவமனையில் சேர்த்தனர்...
மருத்துவரோ நித்யாவிடம், மித்ரனின் மனதும் உடலும் பலவீனமாக இருக்கு அதனால் தான் மயங்கியிருக்கான், உடலை எங்களால் சரி பண்ண முடியும் ஆனால் மனதை சரி பண்ண அவனாலும் அவனை சுற்றி உள்ளவர்களாலும் தான் முடியும், குளுக்கோஸ் ஏறி முடிச்சதும் வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என்று கூறி விட்டு சென்றுவிட்டார்.
மித்ரன் மீனாவிடம் பேசுனா அவனோட உடம்பு சரி ஆகுதோ இல்லியோ, நீ உன்னோட தோழி தேனிடம் பேசாம இருந்தா தான் அவனோட உடம்பு சரி ஆகும், அவளால தான் உன்னோட அண்ணன் இப்போ ஹாஸ்பிடல் வரைக்கும் வந்திருக்கான், கோபமாக கூறினாள் கற்பகம்...
கற்பகம் இப்படி கூறியதற்கு நித்யாவாள், முறைக்க மட்டும் தான் முடிந்தது, இதில் நித்யாவின் கண்கள் கலங்கி வேறு இருந்தது..
மித்ரனை பார்க்க அவனது அறைக்கு சென்றால் நித்யா, சோகமாகவும் சோர்வாகவும் தன்னுடைய கட்டிலில் படுத்திருந்தான் அவன், அவளை பார்த்து பேருக்கு மட்டும் புன்னகை சிந்தினான்.
என்ன அண்ணா இப்போ எப்படி இருக்கு பரவால்லையா, தலையில் வலி எதாவது இருக்கா பரிவாக கேட்டாள் நித்யா.
தலைல வலிக்கலமா மனசு தான் ரொம்ப வலிக்குது, அந்த வலியை என்னால தாங்க முடியல நித்துகுட்டி, மீனுகுட்டி என்னிடம் எப்படியும் வந்துருவாங்கற நம்பிக்கை என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமா போயிருச்சு, செத்துரலாம் போலிருக்கு, மித்ரன் பேசிகொண்டிருக்கும் போதே அவனது கண்களிலிருந்து கண்ணீர் அருவி போல கொட்டியது.
என்ன அண்ணா இப்படி பேசுற என்னையும் அம்மாவையும் பற்றி கொஞ்சம் யோசிச்சு பாத்தியா, நீ போய்ட்டனா எங்களோட நிலைமை என்னாகும்னு, என்மேல உனக்கு நம்பிக்கை இருந்தா நீ இப்படிலாம் பேசியிருக்க மாண்ட...
நித்துகுட்டி உன்மேல நம்பிக்கை இல்லனு யாரு சொன்னா, நா இப்போ வரைக்கும் உயிரோடு இருக்கேனா அதுக்கு காரணம் நீயும் அம்மாவும் தான்..
ம்ம் குட் என்மேல நம்பிக்கை இருக்குதுல அது போதும் எனக்கு, இன்னும் கொஞ்ச நாள்ல நீ இழந்த நம்பிக்கையை நா உனக்கு திரும்ப கிடைக்க வைப்பேன், சரி சரி நா இருந்தா பேசிட்டே இருப்பேன் நீ ரெஸ்ட் எடு நா போறேன், அங்கிருந்து அகன்றாள் நித்யா.
மித்ரன் அறையிலிருந்து வந்த நித்யா நேராக சென்றது மொட்டை மாடிக்கு தான், தன் சிந்தனையை பலவாறாக ஓடவிட்ட படியே வானத்தில் தெரிந்த நிலவை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள், அவள் மனம் முழுவதும் சோகமும் குழப்பமுமாக இருந்தது, அவள் சிந்தனை ஓட்டத்திற்கு தடை போட்டது அவளது கைபேசி.
ஹெலோ நித்து காலைல நா போன்ல பேசும் போது ஒரே சத்தமா இருந்துச்சு, அப்புறம் நா உனக்கு அடிக்கடி போன் பண்ணேன் நீ எடுக்கவே இல்ல என்னாச்சு எதாவது பிரச்சனையா, பதட்டமாக கேட்டாள் ஹனி.
நித்யாவும் நடந்த அனைத்தையும் கூறி முடித்தால், சாரி ஹனி, நா போன டென்ஷன்ல வீட்டுலியே வச்சிட்டு ஹாஸ்பிடல் போய்ட்டேன் அதான் உன்னோட போன அட்டென்ட் பண்ணல.
நா தான் உன்னிடம் சாரி கேட்கணும் நித்து என்னால தான அண்ணனுக்கு இவ்ளோ கஷ்டம்.
ஹனி உன்னிடம் எத்தன தடவ சொல்லிருக்கேன் இப்படி பேசாதனு, உன்மேல எந்த தப்பும் இல்ல, இப்படியெல்லாம் நடக்கணும்னு விதி இருந்துருக்கு நடந்துடுச்சி அவ்ளோதான், இனிமேல் இதுமாதிரி பேசாத கோபமாக பேசினாள் நித்யா.
சரி நித்து நா இனி அப்படி பேசல, அண்ணா எப்படி இருக்காங்க இப்போ பரவால்லையா.
அவனுக்கு தலையில் வலி இல்லையாம் மனசுல தான் வலியாம், அதுவும் சாதாரண வலி இல்ல ஹனி, சாகுற அளவுக்கு வலிக்குதாம். என்ன 🤬*********** காதலோ சாகுற அளவுக்கு ஒருத்தங்கல தூண்டி விடுது, காதல்னு பேர கேட்டாலே வெறுப்பா இருக்கு..
என்ன நித்து கெட்ட வார்த்தையெல்லாம் பேசுற, நீ இவ்ளோ கோபபட்டு நா பாத்ததே இல்ல, காதல் மேல உனக்கு ஏன் அவ்ளோ வெறுப்பு, காதல் புனிதமானது அது காதலிக்ரவங்களுக்கு தான் தெரியும், நீ லவ் பண்ணது கிடையாதுலா அதான் உனக்கு காதலோட அருமை தெரியல, காதல் வசனம் பேசினாள் ஹனி.
அண்ணனை சாகனும்னு தூண்டுர காதல், கல்யாணம் முடிஞ்சப்புரமும் வேறொருவர் மேல வர காதல் இதெல்லாம் உனக்கு புனிதமான காதலா, இன்னும் கோபத்தின் உச்சத்தில் தான் பேசிக்கொண்டிருந்தால் நித்யா.
கூல் நித்து டென்டின் ஆகாத, இப்போ நித்யாவிடம் காதலை பற்றி பேசி அவளை இன்னும் டென்டின் ஆக்க ஹனி விரும்பவில்லை, அதனால் அவளை சமாதானம் ஆக்க முயற்சி செய்து கொண்டிருந்தால் ஹனி, ஆனால் அவளது ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டது.
எனக்கு அண்ணி மேலையும் அந்த சமீர் மேலையும் ரொம்ப கோபமா வருது ஹனி, என்னோட அண்ணனையே அழ வச்சிட்டாங்கல்லா அவங்க ரெண்டு பேரையும் நா கதற வைக்கிறேன், அண்ணா சிந்தினத விட அதிகமா அண்ணியை நா கண்ணீர் சிந்த வைப்பேன், ஹான் அப்புறம் அந்த சமீர் அவன நா சும்மா விடுறதா இல்ல, இனி அவனோட வாழ்கைல என்ன நடந்தாலும் அது நா முடிவு பண்ணாத தான் இருக்கும்...
என்ன நித்து வில்லி மாதிரி பேசுற, அப்படி என்ன தான் பண்ண போற பதட்டமாக கேட்டாள் ஹனி...
நித்யாவும் வில்லியின் தோரணையில் கூறினாள், " வெயிட் அன்ட் வாட்ச் " ஹனி😎😎😎....
........ தொடரும்