Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கண்ணம்மா நீயே என் காதலி..

carolinemary C

Saha Writer
Team
Messages
6
Reaction score
2
Points
1
பாரதியின் வரிகளுக்கு ஏற்ப

நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும்

நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்



வலம் வருபவள் இந்த பாரதி

சுப்பிரமணியம் - சிவகாமி இவர்களின் செல்லப் புதல்வி. 24 வயது பெண். மயக்கும் மை விழிகளும்,எவரையும் நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் உள்ளவள்.

தமிழ் பற்று மிக்கவள். பாரதியின் வரிகளை சுவாசிப்பவள். கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் உடையவள்.

வலை தளத்தில் "கண்ணம்மாவின் கவிதைகள் "என ஒரு பக்கத்தை உருவாக்கி தினமும் கவிதைகளை பதிவு செய்வாள்.அவளின் கனவு தனது கவிதைகளை புத்தகமாக பார்க்க வேண்டும் என்பதே.. இவள் ஒரு தமிழ் ஆசிரியை.

"பாரதி" என்ற தாயின் குரலில் திரும்பினாள்.

என்ன என்று கேட்காமல் ஒரு பார்வை பார்க்கும் மகளை முறைத்தார் சிவகாமி.

தாயின் முறைப்பில்,தந்தையின் கெஞ்சல் பார்வையில் "என்ன மா சொல்லு"என்றாள்.

"நாளைக்கு உன்னை பெண் பார்க்க வருவாங்க அதனால" என பாதியில் நிறுத்தினார் மகளின் சலனமற்ற பார்வையில்

எதுவும் சொல்லாமல் பள்ளிக்கு சென்றாள்.

சிவகாமி "பாருங்க உங்களுடைய செல்ல மகளை எதுவும் சொல்லாமல் போறா,இப்படியே போனா என்ன அர்த்தம் நீங்க கொஞ்சம் சொல்லுங்களேன் "

அவரோ " விடு மா அவள் விருப்பப்படியும் உன் ஆசைப்படியும் எல்லாம் நல்லபடியாக நடக்கும் கவலைப்படாத"என்று ஆறுதல் கூறினார்.

பள்ளியில் பாரதி கோபத்தில் இருந்தாள்.அதற்கு காரணம் இதற்குமுன் வந்த வரன்கள் தான்..

அவள் விருப்பத்தை சொல்லும் போது காதில் வாங்காமல் "திருமணத்திற்கு பிறகு இது எல்லாம் வேண்டாம்"என்றே சொன்னார்கள்.

ஏனோ அவளுக்கு பிடிக்கவில்லை .

வீட்டில் "வேண்டாம்" என்று மறுத்து விட்டாள்.

இப்போது அவள் தாய்"நீ மாப்பிள்ளை கிட்ட பேசும் போது வேற எதுவும் சொல்லாதே" என்றார் .

இதுவே அவளின் கோபத்தை அதிகரித்து.

பார்க்கலாம் நாளைய விடியல் பாரதிக்கு எப்படி என்று??

கரு நீல பட்டு புடவை உடுத்தி,தளர பின்னி மல்லிகை சரம் சூடி ,பொருத்தமான நகைகள் அணிந்து தேவதைப்போல வந்தாள்.

மாப்பிள்ளை கதிரவன். வைத்தீஸ்வரன் - தேவகியின் ஒரே புதல்வன். 28 வயது. ஆறடி உயரம். செதுக்கி வைத்த கிரேக்க சிற்பம். சொந்தமாக தொழில் செய்பவன்.

கொலுசு ஓசையில் நிமிர்ந்து பார்த்தவன். கண் இமைக்க மறந்தான். பாரதியும் தன் சுட்டும் விழிகளால் பார்த்தாள்.



சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா

சூரிய சந்திரரோ??

வட்டக் கரிய விழி-கண்ணம்மா

வானக் கருமை கொல்லோ?



கதிரவன் மனமோ "இவள் எனக்கானவள்"என்று குரல் கொடுக்க.பாரதியின் மனமும் அதையே மெல்லிசையாக இசைத்து.

இருவரும் சேர்ந்து விழிகளால் "சம்மதம் " சொல்ல திருமண நாள் முடிவு செய்யப்பட்டது.

கதிரவன்-பாரதியின் காதல் தொலைபேசி மூலம் பரிமாறப்பட்டது.

பாரதி அவனிடம் தன் விருப்பத்தை சொல்லவில்லை.

நாட்கள் சென்றன.

இப்போது அவள் திருமதி.பாரதி கதிரவன்

பாரதி அவர்கள் தோட்டத்தில் இருந்த சமயம். அவள் கண்களை மூடினான் கதிரவன்.

"கதிர் என்ன பா"என்றாள்.

"ரதி கொஞ்சம் நேரம் அமைதியாக இரு" என்றான்.

"சொல்லுங்களேன் கதிர் "என மறுபடியும் கேட்க அவனிடம் மெளனம்.

"எப்போதும் பிடிவாதம் " என்று செல்லமாக அலுத்துக்கொண்டாள்.

அவன் கரம் பிடித்து அறைக்கு அழைத்து சென்றான்.

அங்கு "பிறந்த நாள் வாழ்த்துக்கள் கண்ணம்மா "என்று இருந்தது.

மகிழ்ச்சியாக கணவனைப் பார்க்க அவளை அணைத்து வாழ்த்து தெரிவிக்க புன்னகையுடன் ஏற்றுக்கொண்டாள்.

"ஒரு நிமிஷம் "என்று சொல்லி பெட்டி ஓன்று கொடுக்க,கண்களால் "என்ன" என்று கேட்க

அவனும் அதேப்போல் " பிரித்துப் பார்" என பதில் சொன்னான் கண்களால்.

மகிழ்ச்சியாக பிரித்தவள் பேசுவதற்கு வார்த்தைகள் வராமல்,கண்கள் கலங்கி சிலையாக நின்றாள்.

அதில் இருந்த பரிசு அவள் உயிராக நேசித்த பாரதியின் கவிதைகள் மற்றும் அவள் கனவு அவளுடைய கைகளில்..

ஆம் அவள் எழுதிய கவிதைகள் புத்தக வடிவில்.

"உங்களுக்கு எப்படி இது தெரியும்" என்று தவிப்புடன் வந்ததது வார்த்தைகள்.

அவளின் தவிப்பை உணர்ந்தவன் ஆறுதலாக அணைத்துக்கொண்டான்.

"அத்தை சொன்னாங்க "என்றான்.

அந்த நேரத்தில் தன் தாய்க்கு மனதில் நன்றி சொன்னாள்.

"உன் விருப்பம் தான் என் விருப்பம் ரதி.அதற்கு என்றும் தடையாக நான் வர மாட்டேன் கண்ணம்மா "என்ற கணவனை காணும் போது என்ன தவம் புரிந்தேன் இப்படி ஒருவன் சரிபாதியாக கிடைக்க என்றே தோன்றியது.

உணர்ச்சி வசப்பட்டு நிற்கும் மனைவியின் காதில்"கண்ணம்மா நீயே என் காதலி"என்று சொல்ல ஆசையோடு சரணடைந்தாள் தன் காதல் கணவனிடம்..



நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா

நின்னைச் சரணடைந்தேன்



பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்

என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று



மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்

குடிமை புகுந்தன,கொன்றவை போக்கென்று



தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு

நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்



துன்ப மினியில்லை சோர்வில்லை, தோற்பில்லை

அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட



நல்லது தீயது நாமறியோம் அன்னை!

நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!



நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா

நின்னைச் சரணடைந்தேன்



என்ற வரிகள் பாடலாக மாறியது..



முற்றும்.
 
Top Bottom