Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலா?? இது காதலா ??

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்-21

நாட்கள் அதன் போக்கில் வேகமாக சென்றுகொண்டிருந்தது.திருவிழா கொண்டாட்டம் முடிந்து, அர்ஜுன் தம்பதியர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர்.

இருவருக்குள்ளும்அந்நியோன்யம் கூடி இருந்தது.
சில நாட்களில், தீபாவளி வர இருப்பதால்,அனைவரும் textilesகு ஆடை வாங்க சென்றார்கள்.கடை ஊழியர்களை, தலையால் தண்ணி குடிக்க வைத்து தனக்கும் ப்ரியாவிற்கு,ஒரே நிறத்தில், ஒரே டிசைனில் பட்டு புடவை எடுத்தாள் ஜானு.

திருமண புடவைக்கு கருத்து சொல்லியதை போல ,இதில் ஒதுங்க முடியவில்லை அர்ஜூனால். அவனை முழி பிதுங்க வைத்தாள்.

"இது நல்லா இருக்கா ??"என்பாள்.

அவன்
"நல்லா இருக்குமா "என்றால்,.

"இது போய் நல்லா இருகுங்குரீங்க.என்ன டேஸ்ட் உங்களுக்கு.கடனேன்னு பதில் சொல்லாதீங்க " என்பாள்.

"அவன் நல்லா இல்லை" என்றால்,"என்ன எதுவுமே நல்லா இல்லைங்குறீங்க. உங்கள்ட கேட்டா இன்னிக்கு எடுக்க முடியாது" என்பாள்.

என்னமோ ,அவன் லேட் செய்வது போல்.
அவனின் நிலை பார்த்து ப்ரியாவிற்கே பரிதாபம் வந்தது.

"ஏய்,அண்ணாக்கு இதெல்லாம் பழக்கம் இல்லடி,என் ட்ரெஸ்ஸலாம் நான் தான் எடுத்துக்குவேன்.நாம எடுக்கலாம்."

"என்ன பழக்கம் இல்லை,இனிமே பழகிக்க வேண்டியது தான்."

"அவர்க்கு எப்படி டி லேடீஸ் டிரஸ் பத்தி தெரியும்"

"தெரிஞ்சுக்கனும்.ஒரு தங்கச்சி கூட பொறந்துருக்கார். ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்கார்.இன்னும் தெரிஞ்சுக்கலைனா எப்படி??இங்க இருக்குற salesman எல்லாம் தெரிஞ்சுக்கலையா??"

"எங்க அண்ணா ,என்ன salesman அஹ்??"

"என்ன இருந்தாலும், அண்ணா முதல்ல, தோழி அப்புறம்னு காட்டிட்டே இல்ல"

என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டாள்.

பிறகு பிரியா தான் ,அவளை,கொஞ்சி கெஞ்சி,வழக்கம் போல சமோசா வாங்கி தருவதாக கூறி சமாதானம் செய்தாள்.

இவளை பற்றி முன்பே அறிந்த விஜய்,தனக்கு ஆபீஸில் வேலை இருப்பதாய் சொல்லி, துணி கடை பயணத்தை தவிர்த்து இருந்தான்.

புத்திசாலி அவன் என்று, பெருமூச்சு விட்டான் அர்ஜுன்.
மனைவியின் செயல் பொறுமையை சோதித்தாலும்,அவளின் அடாவடிகளை ,ரசிக்கவே செய்தான்.

"எப்படி இருந்த என் அண்ணன், இப்படி ஆகிட்டான்"என்று பிரியாவே பெருமூச்சு விடும் அளவு ,இவள் ரகளையை பொறுதிருந்தான்.

தன் அண்ணன், இவ்வளவு பொறுமையாக ,எங்கும் நின்று அவள் பார்த்ததில்லை.திருமண புடவை எடுக்கும் போது கூட, இவள் அருகே நின்று, முகூர்த்த சேலை எடுத்ததும் கிளம்பி விட்டான்.

நகை கடையில் தான், இவளுக்கென்று பெரிதாக நகை ஒன்றுமில்லை,கல்லூரிக்கு போட்டு செல்லும்,சிறு தோடு,செயின் தவிர என்று திருமண நகை எடுக்க அதிக நேரம் செலவழித்தான்.அவள் விருப்பம் கேட்டு, தேர்ந்தெடுத்தான்.

அவள் பெற்றோர் இருந்திருந்தால், சிறுகசிறுக சேர்த்திருப்பார்கள்.இவன் மொத்தமாய், அப்பொழுது தான் வாங்கினான்.

எந்த குறையும் இல்லாமல், கோமதி கேட்டதை விட, அதிகம் கொடுத்தே ,திருமணம் முடிந்தாலும்,எல்லாம் நிச்சயத்திர்க்கு பிறகு வாங்கியதே.

தன் அண்ணனையே பார்த்து கொண்டிருந்தவளை ,கவனித்த ஜானகி,

"என்னாச்சு டி??உன் அண்ணனை, புதுசா பார்க்குற மாதிரி பார்க்குற??"

"புதுசா தான் இருக்கார்.இத்தனை வருஷத்துல இவ்ளோ பொறுமையா, என் அண்ணாவை பார்த்ததில்லை"

"க்கும்..உன் அண்ணாவை, நீ தான் மெச்சிகனும்.ஒரு புடவை செலக்ட் பண்ண தெரியலை"என்று முகவாயில் இடித்து கொண்டாள்.

ஒரு வழியாக ,புடவை எடுத்து கொண்டு, மதியம் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, இவர்களை வீட்டில் விட்டு, அலுவலகம் செல்ல தயாரானான் அர்ஜுன்.அரை நாள் விடுப்பு எடுத்திருந்தான்.

போகையில் ,எதையோ தேடிக்கொண்டிருந்தவனிடம்,
"என்ன ணா தேடுற??கூஜா வா??"

"என்ன??"

"அண்ணிக்கு தூக்குற கூஜா மிஸ்ஸிங் அஹ்னு, கேட்டேன்"

"ஏய்,வாலு..எப்போதிருந்து இப்படி வாயாடி ஆனா??"
என்று கூறி சிரித்து விட்டு ,தான் தேடிய மொபைலை எடுத்துக் கொண்டு, விடை பெற்று சென்றான்.

அவனை, அதிசயமாய் பார்த்திருந்த ப்ரியாவை உலுக்கி,

"என்னாச்சு டி??"

"என் அண்ணாவா இது.இவ்ளோ சந்தோசமா அவர் சிரிச்சு பார்த்ததே இல்லடி.பேருக்கு ஒரு சிரிப்பு, உதட்டுல வரும்.அவரு கண்ணும் சேர்ந்து சிரிக்குறதை, இப்போ தான் பார்க்குறேன்."

"ஹ்ம்ம்..அதென்ன கேப்புல ,எனக்கு கூஜா தூக்குறாருன்னு சொல்லுற.."
என்று முறைத்தவளை, சிரித்து சமாளித்து,

"என்ன இருந்தாலும் உண்மையை தானே சொல்லுறேன்"என்றாள்.

"கர்ப்பமா இருக்கேன்னு பார்க்குறேன்.இல்லை, உன்னை ஒரு கை பார்த்துடுவேன்"

"நண்பிடி.."என்று அவள் தோள் அணைத்து கொண்டாள் பிரியா.
இருவரின் முகத்திலும் புன்னகை மின்னியது.

தீபாவளிக்கு அழைத்த அலமு தம்பதியரிடம் பிரியாவும்,விஜயும் வர இருப்பதால்,மறுநாள் வருவதாக கூறினார்கள்.அலமு அனைவர்க்கும் ,ஆடை எடுத்திருப்பதாக கூறினார்.

இங்கு விஜயும், ப்ரியாவிற்கு இவளுக்கும் புடவை எடுத்திருந்தான்.விவரமாக தனியே சென்று எடுத்திருந்தான்.

அர்ஜுன், இவர்கள் புடவை எடுத்த அன்றே ,விஜய்க்கும் உடை எடுத்திருந்தான்.ப்ரியாவிற்கு இது, ஐந்து மாதம்.

தீபாவளி அன்று ,இரு ஜோடிகளும், புத்தாடை புனைந்து, கோவிலுக்கு சென்று வந்தார்கள்.பெண்கள் இருவரும், ஒரே மாதிரி புடவை அணிந்து வந்தார்கள்.ஆண்கள் வெவ்வேறு நிறத்தில் பேண்ட், சட்டை அணிந்து சென்றார்கள்.

கோயில் பிரகாரம் சுற்றயில், சற்று இடைவெளி விட்டு முன், பின் என இரு ஜோடிகளும் சுற்றயில்,ஜானு,
"நீங்க ரெண்டு பேரும், ஒரே மாறி டிரஸ் போட்ருந்தா எப்படி இருக்கும் தெரியுமா??"

"ஹ்ம்ம்..ஸ்கூல் யூனிபோர்ம் மாறி இருந்திருக்கும்"

அவனை முறைத்து விட்டு, அவனுடன் நடந்தாள் ஜானு.

வீட்டிற்கு வந்து, இரு பெண்களும் ,சமையலறையில், அரட்டை அடித்து கொண்டு, மதிய உணவிற்கு ,சிறப்பான சமையலில் ஈடுபட்டார்கள்.பேச்சு பல திசைகளில் சுற்றி
மகாதேவி,மஹிஷா பற்றி வந்து நின்றது.

"இந்த அண்ணா, அவங்களுக்கு பணமே கொடுத்திருக்க கூடாதுடி. எவ்ளோ பிரச்சனை பண்ணாங்க"என்று ஆதங்கப்பட்ட ப்ரியாவிடம்,

"விடுடி,அவங்க பண கஷ்டம், தீர குறுக்கு வழியில் யோசிச்சுருக்காங்க. அவங்க திட்டம், நிறைவேறாமா போய் இருக்கலாம்.ஆனாலும் அவங்க செஞ்சது தப்புன்னு, அவரு செய்ஞ்ச மாறி புரியவச்சா தான் உணர்ந்துருப்பாங்க.நான் இம்புட்டு பேசியும் திருந்தாதவாங்க.அவர் பணம் கொடுத்ததும், வாய் அடைச்சு ,மறு வார்த்தை பேசாம போயிட்டாங்கள்ல??"

"அவங்க வந்த வேலை முடிஞ்சுது, பணம் கிடைச்சது போய்ட்டாங்க"

"எப்படியோ,இவரால அவங்க பிரச்சனை தீர்ந்தா சரி தான்.உனக்கு ஒரு விஷயம் தெரியுமா??அவளுக்கு ஏதோ வரன் அமைஞ்சுருக்கு போல.நம்ம வக்கீல இவர் பார்க்க போனப்போ சொல்லி இருக்கார்.கூடிய சீக்கிரம் ,இங்க பத்திரிகை வைக்க வரதா அவர்ட்ட சொன்னங்களாம் அத்தையம்மா."

"ரெம்ப நல்லதா போச்சு.இனி தொல்லை பண்ணாதுங்க."

"ஏண்டி ,இந்த மஹிஷாக்கு ,முழுசாவே டிரஸ் பண்ண தெரியாதே. இவ புருஷன் இவளை பார்த்து என்ன பாட்டு டி பாடுவான்"

"ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன்
கேளு கேளு தம்பினு "பாடுவான்.

"அது, கொஞ்ச நாள் போனதும் பாடுவான் டி. இப்போ என்ன பாடுவான் தெரியுமா??

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேலை உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில்
நீச்சல் உடையில் அலையுரியேனு"
கூறி விட்டு ,கண்ணில் நீர் வர இருவரும் சிரித்தார்கள்.

ஒரு வழியாய் ,தீபாவளி முடிந்து ,அனைவரும் ஜானகியின் வீட்டிற்கு சென்றார்கள்.ப்ரியாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, ஒரு cab புக் செய்து சென்றார்கள்.

அங்கு மறுபடியும் ஒருமுறை, அலமு,வாசுதேவன் தம்பதிகள் கொடுத்த உடையை, இரு ஜோடிகளும் ,அவர்கள் பாதத்தில் விழுந்து வணங்கி அணிந்து,கோயிலுக்கு சென்று பண்டிகை கொண்டாடினார்கள்.

அதற்கு மறுநாள் ,கோமதியை பார்க்க, இரு ஜோடிகளும் சென்றார்கள்.விஜயின் ஊரும் அது தானே.

அவர்களை வரவேற்ற கோமதி.வழக்கம் போல, தன் மாமியார் அதிகாரத்தை காட்டிக்கொண்டு தான் இருந்தார்.ஆனால் பிரியா இப்பொழுது தெளிந்த நீரோடை .ஆதலால் அனைத்தையும் புன்னகையோடு கடக்க கற்று கொண்டாள்.

புள்ளைதாய்ச்சி பெண், இப்படி உட்கார், இப்படி நட, இது சாப்பிடு,இது கூடாது.இந்த நேரம் சாப்பிடு என்று, ஒரு வழி செய்துவிட்டார்.அனைத்திலும் அவர் பேரக்குழந்தையின் மீதிருந்த அக்கறையை பார்க்க கற்றுக்கொண்டாள் பிரியா.

விஜய் அங்கு ,தலையாட்டி பொம்மை ஆகி இருந்தான்.அவனை ஜாடை காட்டி ,இரு பெண்களும் சிரித்துக்கொண்டார்கள்.அவர்களை முறைப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை விஜய்க்கு.

"உனக்கு இந்த ஜால்ரா தெரியுமாடி??"

"அப்படின்னா??"

"அதாண்டி இந்த ஜிங்க் ஜக், ஜிங்க் ஜக் னு அடிக்குமே"

"ஓ..பார்த்தமாறி தான் இருக்கு"

இவர்கள், விஜயை கேலி செய்வதை புரியாத கோமதி,

"என்னமா??ஜால்ரா கூட தெரியாதா??கோயில்ல மணி அடிக்கும் போது கூட அடிக்குமே,மேளம் வாசிக்குறவங்க ,பின்னாடி உக்காந்து ஒருத்தர் வாசிப்பாரே"

வெகு தீவிரமாக விளக்கிக்கொண்டிருந்தார்.

"உங்களுக்கு தெரியுது பெரியம்மா,இந்த பிரியா, உங்க அளவு புத்திசாலி இல்லை.இல்லையா விஜய் அண்ணா??"

அவனும் வேறு வழி இல்லாமல் ,பல்லை கடித்து கொண்டு தலைஆட்டி வைத்தான்.

ப்ரியாவிற்கு தெரியாதது, தனக்கு தெரிந்த பெருமையில், கோமதி ஒரு பார்வை மருமகளை ,கெத்தாக பார்த்தார்.வந்த சிரிப்பை அடக்க பிரியா, தலை குனிந்து கொண்டாள்.

"விஜய் அண்ணாக்கு, ஜால்ரா பத்தி நல்லாவே தெரியும்.நீ அவர்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ.சொல்லி கொடுங்க அண்ணா"என்றாள் பவ்யமாய்.

"ஆமா என் புள்ளைக்கு எல்லாம் தெரியும்."

விஜய்க்கு ,எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது.கோமதி அவ்விடம் விட்டு அகன்றதும், அவள் தலையில், ஓங்கி ஒரு கொட்டு வைத்து விட்டு, அவ்விடம் விட்டு நகர்ந்தான் விஜய்.

இரு பெண்களும், பல நிமிடம் சிரித்து மகிழ்ந்தார்கள்.இதை அனைத்தையும் ,ஒரு பார்வையாளராக இருந்து ரசித்தான், அர்ஜுன்.

இன்னும் ,அங்கு இருந்தால் ,தன்னை இரு பெண்களும், ஒரு வழி ஆக்கி விடுவார்கள் என்று ,அவசர அவசரமா, அவர்களை கிளப்பி, சென்னை கூட்டி வந்தான் விஜய்.

கோமதி கூட "இருந்து விட்டு போங்க, இவ்ளோ அவசரமா போனுமா?? "என்று குறை பட்டு கொண்டார்.

."லீவு இல்லைமா" என்று சாக்கு போக்கு சொல்லி, சென்னை வந்ததும் தான், நிம்மதி பெருமூச்சு விட்டான் விஜய்..
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
ப்ரியாவுக்கு ஏழாம் மாதம் நடந்து கொண்டிருந்தது.வளைகாப்பு நடத்த வேண்டும் என்று முடிவு செய்து, நாள் பார்க்கப்பட்டது.

கோமதிஅதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே விஜய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

தெரிந்தவர்கள்,சொந்தக்காரர்கள் ஒருத்தர் விடாமல் அழைப்பு அனுப்பப்பட்டது.அர்ஜுனும்

,ஜானுவும் நகை கடைக்கு சென்று தங்க வளையல்கள் வாங்கி வந்தார்கள்.விரிவாக செய்வதால் மண்டபம் பிடிக்கப்பட்டது.
வளைகாப்பு நாளும், அழகாக விடிந்தது.

விஜய்வாங்கிக்கொடுத்த, பச்சை நிற பட்டில் பிரியா வெகு அழகாக இருந்தாள். புடவை முந்தானையில் குட்டி கிருஷ்ணர் தவழ்ந்துகொண்டிருந்தார்.

தாய்மையின்பூரிப்பில் அவள் முகம் ஜொலித்தது.அவளை விட்டு சிறிதும் விலகாது ஜானகி அவள் கூடவே இருந்தாள். முதல் நாளே விஜயின் வீட்டிற்கு சென்றுவிட்டாள். அ

மண்டபத்திற்கும் புறப்பட்டு வந்துவிட்டாள். அர்ஜுன் மண்டபத்திற்கு நேரடியாய் வந்துவிட்டான்.

ப்ரியாவிற்கு என்ன தேவை என்று பார்த்து, பார்த்து செய்தாள்.அலமுவும்,வாசுதேவனும் வந்திருந்தார்கள்.
நல்ல நேரம் ஆரம்பித்ததும், ப்ரியாவை அழைத்து வந்து மனையில் அமர்த்தினார்கள்.

மாமியார் கோமதி, முதலில் வளையல் போட்டு, சந்தனம் குங்குமம் வைத்து தொடங்கி வைத்தார்.தொடர்ந்து மூத்த சுமங்கலி பெண்கள் வளையல் போட்டார்கள்.

கோமதி பெண்களை பார்த்து," யாராவது பாடுங்க" என்றார்.
யார் பாடுவது என்று சிறிது சலசலப்பு எழுந்தது.
அலமு,

"ஜானு நல்லா பாடுவா"என்று கூறினார்.மகளையும் பார்த்து,

"பொழுதன்னைக்கும் பாடிட்டே இருப்பியே இப்போ ஒரு பாட்டு பாடு" என்றார்.

"நானா.…"என்று சிறிது தயங்கிய ஜானு,

"எனக்கு சினிமா பாட்டு தான் தெரியும்"என்றாள்.

"ஏதோ ஒன்னு பாடுடி"என்றாள் பிரியா.

"தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலரென்று வந்ததே,
எந்தன் கனவுக்குள் கனவொன்று
நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே!!
முத்துக்கள் கொட்டிய நட்சத்திரம்,
அந்த நட்சத்திரம், என் பக்கம் வரும்.
வித்துக்கள் கட்டிய முத்து சரம்,
என் பக்கம் வந்து, பொன் முத்தம் தரும்.
ஒரு முத்துத்தான், உடைபட்டுத்தான் பூவாய் மாறும்.
அதை தொட்டுத்தான், அணை கட்டித்தான் பாடும் ராகம்.
அன்புக்கும், பங்குக்கு ஆள் வரப்போகுது
அம்மா என்றப்பா என்றாடிடப்போகுது!!

கொட்டுங்கடி கும்மி
கொல்லிமல கும்மி
காலில் கொத்து சரபடி சத்தமிடவே
கொட்டுங்கடி கும்மி
தாழங்குடை போல் நடக்கும்
தாமரைப்பூ தாயானா
தன் மடியில் தேன் சுமக்கும்
குறிஞ்சி மலர் போலானா
குங்குமம் பொங்கிடும்
மங்கள மங்கையரே
உங்க கை வளைக் கொஞ்சிட
கொட்டுங்கடி கும்மி
கொல்லிமல கும்மி
காலில் கொத்து சரபடி சத்தமிடவே
கொட்டுங்கடி கும்மி
அரைச்சு வச்ச சந்தனத்த
எடுத்துப் பூசுங்க
மயில் இறகினாலே
வேர்த்திடாம விசிறி வீசுங்க
தொடுத்து வச்ச பாசி மாலை
கழுத்தில் மாட்டுங்க
வாழைத் தண்டு போல
இருக்கும் கையில்
வளையல் பூட்டுங்க
கட்டழகும் எட்டழகும்
கண்ணு படும் கண்டாலே
கன்னத்துல திருஷ்டி பொட்டு
வைக்க வேணும் முன்னால
இவ மூக்கும் முழியும்
பார்க்க பார்க்க
மின்னும் ஆனிப் பொன்போலே
சிவப்புக் கல்லு மாணிக்கம் போல்
புள்ளப் பொறக்கணும்
அது சூர்யகாந்தி பூவைப் போல
மெல்ல சிரிக்கணும்
பொறந்தப் புள்ள அருவிப் போல
தாவிக் குதிக்கணும்
இவ புடவத் தலைப்பில்
மூடிக்கிட்டு பாலும் குடுக்கணும்
தங்கக் கட்டி வயித்தில் வந்த
தலைச்சன் பிள்ளே எந்நாளும்
சிங்கக் குட்டி போல் நடந்து
போடும் இங்கு கும்மாளம்!!!"

ஜானகி பாடி முடித்ததும்,அர்ஜுனும் ஜானகியும், சேர்ந்து தான் வாங்கி வந்திருந்த வளையல்களை ப்ரியாவிற்கு அணிவித்தனர்.அனைவரும் வளையல் போட்டு முடித்ததும், விஜய், தான் தன் மனைவிக்கு வாங்கி வைத்திருந்த தங்க வளையலை அணிவித்து ,சந்தனம்,குங்குமம் வைத்துவிட்டன். இருவர் கண்களும் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டது.

ப்ரியாவின் அருகில் நின்றிந்த ஜானகி தொண்டையை லேசாக செருமி,மென்குரலில்,

"சீக்கிரம்,உங்க ரொமான்ஸ் முடிச்சீங்கன்ன,ஆரத்தி சுத்த காத்திருக்காங்க" என்றாள்.

சபையில் ஏதும் பேச முடியாமல் வழக்கம் போல் அவளை முறைத்து விட்டு விலகிச்சென்றான் விஜய்.
பிரியா வந்த சிரிப்பை அடக்கி கொண்டு தலை குனிந்தாள்.

நிறைய பேர் வந்து வளையல் அணிவித்ததாலும், அதிக நேரம் அமர்ந்து இருந்ததாலும் மிகவும் சோர்ந்து காணப்பட்ட ப்ரியாவை ஒய்வெடுக்குமாறு கோமதி கூறினார்.

அவளை பிடித்து எழுப்பி, அறைக்கு அழைத்து செல்ல முயன்ற ஜானகியை தடுத்து,

"நீ எங்க போற இரு"
வேறொரு பெண்மணியிடம், அவளை அழைத்து செல்லுமாறு கூறினார் கோமதி.

"ஏன் பெரியம்மா??"

"அடுத்து ,நீ நல்ல சேதி சொல்லணும்ல. போய் மனையில் உக்காரு, உனக்கும் வளையல் போடணும்"

என்ன சொல்வது என்று தெரியாமல், அர்ஜுனின் முகம் பார்த்தாள் ஜானு.தலையை அசைத்து சென்று அமருமாறு கூறினான்.

மனையில் அமர்ந்ததும் அலமு,கோமதி உட்பட சில சுமங்கலி பெண்கள் அவளுக்கு கண்ணாடி வளையல் அணிவித்தனர்.

"சீக்கிரம் நல்ல சேதி சொல்லு"என்று வாழ்த்தியபடி கோமதி அணிவித்தார்.

அப்பொழுது சற்று நிமிர்ந்து அர்ஜுனின் முகம் பார்த்தாள். யாருக்கும் தெரியாமல், மின்னல் வேகத்தில் அவளை பார்த்து கண்ணடித்தான், அந்த கள்வன்.

ஜானகியின் முகம் ,வெட்கத்தில் குப்பென சிவந்தது.அவளுக்கு வளையல் போட்டு முடித்ததும் நிமிர்ந்து தன் அன்னையை பார்த்தாள். அவர் கண்கள் கலங்கி இருந்தது.அது அவரின் ,பேரக்குழந்தை ஆசையை சொல்லாமல் சொல்லியது.

மனையில் இருந்து எழுந்து, அலமேலுவின் அருகில் சென்று, அவர் தோள் அணைத்து கொண்டாள்.

அவர் காதில் மெதுவாக,
"உனக்கு ஒன்னு வேணுமா,ரெண்டு வேணுமா??சீக்கிரம் சொல்லு ரெடி பண்ணனும்"என்றாள்.

கண்ணில் கேள்வியோடு நிமிர்ந்தவரிடம்,
"பேரப்பிள்ளைங்க மா"என்றாள்.

வழக்கம் போல் அவள் குறும்பில் அலமுவின் முகம் மலர்ந்தது.

"போடி வாயாடி,முதல்ல ஒன்னு பெத்துக்கொடு, வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை"என்று நொடித்து கொண்டவரை பார்த்து புன்னகைத்து,

"அப்புறம் பேச்சு மாற கூடாது. ஒன்னு போதுமில்ல"என்று கூறி அவர் அடிக்க செல்லமாய், கை ஓங்கியதும் சிரித்து கொண்டு அவ்விடம் விட்டு அகன்றாள்.

தாயின் கலக்கத்தை போக்கிய திருப்தியுடன்.

ப்ரியாவின் அறைக்கு சென்று, அவள் உடை மாற்ற உதவினாள்.மாற்றி முடித்ததும் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது அங்கு வந்த கோமதி.
"ஏண்டிமா ஜானு.ப்ரியாவுக்கு, தாய் வீடு தான் பிரசவம் பார்க்கணும்.அப்புறம் தான் ,குழந்தை பத்தி எல்லாம் யோசிப்பேன்னு அலமு கிட்ட சொன்னியாமே.ஏன் நாங்கெல்லாம் உன் நத்தனாரா நல்லா பார்த்துக்க மாட்டோமா??அவளுக்கு அப்பா,அம்மா இல்லைனு தெரிஞ்சு தானே ,கல்யாணம் செஞ்சு வச்சேன் என் புள்ளைக்கு.இதெல்லாம் யோசிக்காமையா செய்வேன்.எனக்கு பொண்ணு இல்ல.அவளை என் பொண்ணு மாறி பார்த்துக்குவேன். நீங்களும் சின்னச்சிறுசுங்க.கல்யாணம் ஆகி பல வருஷம் ஆனா மாறி பேசுற.சீக்கிரம் பெத்துக்குற வழிய பாரு.அலமு முகமே வாடி போச்சு.
சரி,சரி உங்க ரெண்டு பேருக்கும் இங்கேயே சாப்பாடு கொண்டு வர சொல்லுறேன்.சாப்பிடுங்க.ஏற்கனவே ஏகப்பட்ட கூட்டம். கண்ணு பட்டுடும்."

அவர் பாட்டில் பேசிவிட்டு அவ்வறை விட்டு சென்றார்.
அவர் பேசும் வரை சங்கடத்தில் குனிந்திருந்தாள் ஜானு.

.'இந்த அம்மா வேற, நான் சொன்னதை போய் இவங்க கிட்ட, சொல்லிவச்சுருக்காங்க.அவங்களுக்கு இருக்கு.தனியா மாட்டட்டும்,பேசிக்குறேன்'என்று மனதில் அலமுவை வருத்தெடுத்து கொண்டிருந்தாள்.

கோமதி போனதும், கதவில் பார்வையை பதித்து, நிம்மதி பெருமூச்சு விட்டு,ப்ரியாவின் புறம் திரும்பினாள்.வழக்கம் போல கோமதியின் பேச்சை கிண்டலடித்து, ப்ரியாவின் முகத்தில் சிரிப்பை வரவைக்கலாம் என்ற நோக்கில்,
ப்ரியாவின் முகம், கலங்கி சிவந்திருந்தது.கண்ணில், விட்டால் நீர் வந்து விடுமோ என்னும் அளவு நீர் தேங்கி நின்றது.

அதை பார்த்து அதிர்ந்த ஜானு,
"ஏய்,என்னடி ??ஏன் இப்படி இருக்க??குழந்தையை சுமந்துகிட்டு,விசேஷ நாளும் அதுவுமா அழக்கூடாது."

"எனக்காகவா டி,பிள்ளையை தள்ளி போற்றுக்க??"

"உங்க மாமியார் ஏதோ சொல்லுறாங்கன்னு.அவங்களை பத்தி தெரியாதா??, நாமா ஒன்னு சொன்னா அவங்க ஒன்னு புரிஞ்சுப்பாங்க"

ஏதேதோ சொல்லி அவளை சமாதானப்படுத்த முயன்றாள்.

"எல்லாருக்கும் ரெண்டு அம்மா கிடைக்குறது கஷ்டம்.எனக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு"என்று கூறி ஜானகியின் கையில் முத்தமிட்டாள் பிரியா.

ஜானகியின் மனம் நெகிழ்ந்தது.
"ஏய்,ஓவர் செண்டிமெண்ட் சீன் அஹ் இருக்கு டி. நமக்கு செண்டிமெண்ட் ஒத்துவராது தெரியாதா??"என்று கூறி அந்த சூழ்நிலையை சகஜமாக்க முனைந்தாள்.

அதை புரிந்து பிரியாவும் புன்முறுவளோடு,
"ஹ்ம்ம்..தெரியும், தெரியும் போய் அம்மா கிட்ட ஏன், இதெல்லாம் சொன்னனு ,சண்டை போட மாட்டேன்னு வாக்கு கொடு"
அவளை பற்றி அறிந்தவளாய் வாக்கு கேட்டாள் பிரியா.

"சரி,சரி உன் அலமேலுமங்காவை ஒன்னும் சொல்லிட மாட்டேன் போதுமா"
என்று சிரித்தபடி கூறினாள்.

விழா முடிந்து ப்ரியாவிற்கு மட்டுமல்லாது, விஜய்,அர்ஜுன்,ஜானு அனைவர்க்கும் திருஷ்டி கழித்த பின்னரே அவர்களை வீட்டுக்கு செல்ல அனுமதித்தார் கோமதி.

பிரியா,அர்ஜுனின் வீட்டுக்கு முறைப்படி அழைத்து வரப்பட்டாள். விஜய் அடிக்கடி சென்று மனைவி மற்றும் குழந்தையின் நலத்தை அறிந்து வந்தான்.

பிரசவ தேதி நெருங்க, நெருங்க ஒரு பதட்ட நிலைக்கு தள்ளப்பட்டாள் பிரியா.அடிக்கடி செக்அப்க்கு டாக்டரிடம் அழைத்து சென்றார்கள்.

அவள் பதட்டம் உணர்ந்து விஜய்,அவளுக்கு பிரசவத்துக்கு குறித்து கொடுத்த தேதிக்கு பதினைந்து நாள் முன்னமே, அர்ஜுனின் வீட்டில் தங்கினான்.

குறித்த தேதிக்கு ஒரு வாரம் முன்னமே வலி எடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள் பிரியா.

பிரசவ அறையின் வெளியே அனைவரும் பதட்டத்துடன் அமர்ந்திருந்தார்கள்.
அவளுக்கு வலி எடுத்ததும், அவளை விட ஜானகி தான் அதிகம் பயம் கொண்டாள்.

அர்ஜுன் அவளை கண்களாளையே எச்சரித்து, அவள் பயந்தாள், ப்ரியா இன்னும் அதிகம் பயம் கொள்வாள் என்று உணர்த்தினான்.

அவள் பிரசவம் நெருங்கும் போதிலிருந்தே, ஜானகிக்கு பயம் தான் .வெளியே காட்டி கொள்ளாமல் இருந்தவளுக்கு ,அவள் வலி வந்து துடித்ததை பார்த்ததும் தாங்க முடியவில்லை.

கணவனின் எச்சரிக்கையில், ப்ரியாவிடம் இருந்து, தன் உணர்வை மறைத்தவள்.அவளுக்கு ஆதரவாக அவள் கைகளில் அழுத்தம் கொடுத்து,ஆறுதல் சொல்லி மருத்துவமனை வரை கொண்டு சேர்த்தாள்.

அதன் பின் அவள் பதட்டத்தை மறைக்க முடியவில்லை.ப்ரியாவின் குரல்,வலியில் துடிக்கும் சத்தம் கேட்கும் போதெல்லாம் இவள் உடல் இங்கு தன்னிச்சையாக தூக்கி போட்டது.

இருக்கையில் இருப்பு கொள்ளாமல் எழுந்து ,சுவற்றில் சாய்ந்து ,கண் மூடி கடவுளை பிரார்த்தித்தப்படி நின்றாள்.

விஜயும், யாரையும் கவனிக்கும் நிலையில் இல்லை.அர்ஜுன் மட்டுமே, இவர்கள் இருவரையும் கவனித்து கொள்ளும் நிலையில் இருந்தான்.

அவனுக்கும் தங்கையின் வலியில் பயம் இருந்தாலும்,எப்பொழுதும் அவனிடம் இருக்கும் நிதானம் துணை புரிந்தது.

சில மணி நேரம் கடந்த நிலையில், யாரும் ஒன்றும் சாப்பிடவில்லை,போட்டது,போட்ட படி கிளம்பியதால்,எனவே மருத்துவமனை கேன்டீன் சென்று இருவருக்கும் காபி வாங்கி வந்தான்.

விஜய்யிடம் கொடுத்து விட்டு, ஜானகியை பார்க்கையில், அவள் நிற்கும் நிலை வித்தியாசமாய் இருந்தது.ஏதோ நடக்க போவதை உணர்ந்து ,அவள் அருகே அவன் விரைவதற்கும், ஜானகி மயங்கி அவன் மீது சரிவதற்கும் சரியாக இருந்தது.
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்-23

ஜானகியை தாங்கி பிடித்த அர்ஜுன், ஒரு நிமிடம் செய்வதறியாது நின்றான்.

பின் அவளை ,அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்து, தன் தோளில் சாய்ந்து கொண்டு, அவள் கன்னத்தில் தட்டி,பேர் சொல்லி அழைத்து, அவளை உணர்வுக்கு கொண்டு வர முயற்சிதான்.

அதன் பின்பு தான், இவர்களை கவனித்த விஜய்,

"என்னாச்சு அர்ஜுன்??"

"தெரியலை மயங்கி விழுந்துட்டா, கொஞ்ச நாளா சரியாய் சாப்பிடலை,பதட்டமாவே சுத்துனா, பிரியா பத்தி யோசிச்சுட்டு, இப்படி இருக்கானு நெனச்சேன்.இன்னிக்கு இப்படி மயங்கிட்டா."

அங்கே சென்று கொண்டிருந்த செவிலியரை அழைத்து ,அவளை பார்க்க சொன்னான், அர்ஜுன்.

அவளின் நாடி பிடித்து பார்த்தார், அவர்.பின் ,அங்கு பணியில் இருந்த மருத்துவரிடம், போக சொன்னார்.அவள் முகத்தில், நீர் தெளித்து, மயக்கத்தை கொஞ்சம் தெளிவித்தார்.

அவளை கைதாங்களாக பிடித்து கொண்டு, அந்த மருத்துவரிடம் சென்றான் அர்ஜுன்.

அவளை சோதித்த மருத்துவர்.சில கேள்விகள் கேட்டு,சில சோதனைகளுக்கு எழுதி கொடுத்து, அந்த முடிவுகளை வாங்கி வர சொன்னார்.

சிறிது நேரம் கழித்து, முடிவுகளோடு, மருத்துவரை அணுகிய இருவரையும், அமர சொல்லிவிட்டு, முடிவுகளை பார்வையிட்டார்.

"வாழ்த்துக்கள்,நீங்க கர்ப்பமா இருக்கீங்க."
அதை கேட்ட இருவர் முகமும் ,மகிழ்ச்சியில் மலர்ந்தது.

"ரெண்டு மாசம் ஆச்சே,இவ்ளோ நாள் கவனிக்கலியா??"

"இல்ல டாக்டர்…."
என்று ,தயங்கிய மனைவியை பார்த்து,

"என் தங்கச்சியை பிரசவத்துக்காக கூட்டிட்டு வந்தோம் டாக்டர்,அவளை கவனிச்சுக்குற பொறுப்பில, கொஞ்ச நாளாவே இவ சரியாய்,சாப்பிடாம,பதட்டமாவே இருந்தா.

அதுல கவனிக்காமா விட்டுட்டா போல"

"இதை கேட்க பெருமையா இருக்கு,ஆனாலும் நம்ம ஹெல்த்தும் முக்கியம்.இனியாச்சும் பார்த்துக்கோங்க.

டேப்லெட்ஸ் எழுதி தரேன்.ரெகுலர் செக் அப்,ஸ்கேன் எப்போ எடுக்கணும், எல்லாம் நர்ஸ் கிட்ட timetable சீட் இருக்கும், வாங்கிட்டு போங்க.

நல்லா ரெஸ்ட் எடுங்க,நல்லா சாப்பிடுங்க,mind அஹ் ரிலாக்ஸ் அஹ் வச்சுக்கோங்க,வெயிட் எதுவும் தூக்காதீங்க"

இன்னும் சில அறிவுரைகளை வழங்கி விட்டு, அவர்களை அனுப்பினார் மருத்துவர்.

வெளியே வந்த இருவர் முகத்திலும், புன்னகை பூக்கள் பூத்திருந்தது.

ஜானகியின் கையை பிடித்து, உதட்டருக்கே கொண்டு, சென்று மெல்லிய இதழ் ஒற்றல் அளித்தான் அர்ஜுன்.

ஒரு நிமிடம் மயங்கிய ஜானு,மறு நொடி கையை விலக்கிக்கொண்டு, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு,
"இது ஹாஸ்பிடல் "என்றாள்.

"அதுனால தான் கையில"என்றான் அர்ஜுன்.

அவன் பதிலில் ,கண்ணை அகல விரித்து வியப்பை காட்டி,
"இங்க அர்ஜுன்,அர்ஜுனு, ஒரு கஞ்சிபோட்ட சட்டை இருந்தாரு, பார்த்தீங்களா??"

"அவரு ஜானு,ஜானுன்னு ஒரு வாயாடியை கட்டினதும்,கைக்குட்டை ஆகி, அவ கைக்குள்ள போயிட்டாரு ,தெரியாதா??"

"யாரு??நீங்க ??என் கைகுள்ளயா??"

"பின்ன இல்லியா??"

"நீங்க சொன்னா ,நம்ப வேண்டியது தான்"

இருவரும் புன்னகையுடன், விஜய் இருக்குமிடம் வரவும், ப்ரியாவின் அறையில் இருந்து வெளியே வந்த செவிலியர்,விஜய்யிடம்,

"உங்களுக்கு பையன் பிறந்துருக்கான்"என்று சொல்லவும், சரியாக இருந்தது.

இரட்டிப்பு மகிழ்ச்சியில், இருவரும் விஜய்யிடம் ,கை கொடுத்து ,வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

வாழ்த்துக்களை ஏற்று கொண்ட விஜய்,
"ஜானுவுக்கு என்னாச்சு"என்றான்.

"உங்களுக்கு ஒரு ப்ரோமோஷன் கம்மின்னு, இன்னொன்னு தர முடிவு பண்ணிட்டோம்"

புரியாமல் முழித்த விஜய்யிடம்,
"நீங்க மாமா ஆக போறீங்க.சீர் எல்லாம் சிறப்பா செய்யணும்.பெரியம்மா தலைமையில்" வாய்க்குள் சிரிப்பை அடக்கி கொண்டு சொன்னாள்.

"செய்ஞ்சுடுவோம்,என் தங்கச்சிக்கு இல்லாததா??"
மகிழ்ச்சியுடன் பதில் அளித்தான் விஜய்.

ப்ரியாவை அறைக்கு மாற்றி விட்டதாக, செவிலியர் வந்து சொல்ல,அனைவரும் அவளை பார்க்க சென்றனர்.

சோர்ந்து, மயங்கி இருந்தாலும்,தாய்மையின் பொழிவில் அழகாய் இருந்தாள் பிரியா.அனைவரும் ,தொட்டிலின் அருகே சென்று, குழந்தையை பார்க்கும் போது,ஜானகி ப்ரியாவின் அருகில் சென்று,

அவள் தலையை கோதிக்கொடுத்தாள்.கண் விழித்த ப்ரியாவின் நெற்றியில் ,முத்தமிட்டாள்.இருவர் கண்களும் கலங்கியது ஆனந்தத்தில்.

இதை பார்த்த விஜய்,
"எம்மாடி ஜானு,இதெல்லாம் நான் பண்ணனும்."

" பெரியம்மாகிட்ட, பெர்மிஸ்ஸின் வாங்கீட்டீங்களா"

அதன் பின் வாய் திறப்பன் விஜய்.

"ஏம்மா…"என்றதோடு நிறுத்திக்கொண்டான்.

பிரியாவும் ,அர்ஜுனும், சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தனர்.

"நீ இங்க போட்ட சத்தத்தில,அங்க ஜானு மயங்கிட்டா,அவளை எழுப்பி கூட்டிட்டு வரத்துக்குள்ள, ஒரு வழி ஆகிட்டோம்"

சிறிது பதட்டத்துடன் பிரியா,
"என்னாச்சுடி, நிஜமா சொல்லுறாரா,?? விளையாடுறாரா??..உனக்கு ஒண்ணுமில்லைல??"

"ஏய்,பதட்டப்படாதடி. ஒண்ணுமில்லை எனக்கு"

"இன்னொரு நட்புக்காக பாத்த பீல் எனக்கு"

"சும்மா விளையாடாதீங்க"என்று கணவனை அடக்கி விட்டு

ஜானுவிடம்,
"அப்புறம் ஏண்டி, மயங்கி விழுந்த??"

"உன் பையனுக்கு, கல்யாணத்துக்கு, பொண்ணு ரெடி பண்ணி இருக்காங்க, உன் அண்ணாவும்,அண்ணியும்"

'என்ன' என்று ஒரு நொடி புரியாமல் விழித்த பிரியா,புரிந்ததும்

"நிஜமாவாடி"
ஜானு வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டு, புன்முறுவலுடன் தலை அசைத்தாள்.

"ஜானு,நீயா இது?? வெட்கமெல்லாம் படுற"

"ஏய் நீயுமாடி"

"சரி,சரி சீக்கிரம் எனக்கு மருமகளை பெத்து தா"

"உனக்கு கட்டாயம் பெத்து தரேன்.அடுத்து. இப்போ பையன் தான் வேணும். உன் அண்ணா மாறி அழகா,ஆனா, என்னை மாறி கலகலனு பேசுற பையன்."

அது வரை அமைதியாய் இருந்த அர்ஜுன்,
"உனக்கு இப்போவே மருமகள் தான். உன் அண்ணி மாறி, துருதுருன்னு வாயாடியா"

அவனை முறைத்த ஜானு,
"பையன் தான்"

"பொண்ணு தான்"

"பையன்"

"பொண்ணு"

"சரி,சரி ரெண்டையும் ஒரே தடவைல பெத்துக்கொடுங்க"என்று நாட்டாமையாய் மாறி, தீர்ப்பு வழங்கினான் விஜய்.

அவனை முறைத்த ஜானு,
"என்னை பார்த்தா உங்களுக்கு xerox மெஷின் மாறி இருக்கா??ஒரே நேரத்துல 10,20 copy போடுற மாறி"

புருவம் உயர்த்தி கேட்டவளை, பார்த்து மிரண்ட விஜய்,
"ஒரு நியாயம் பேச முடியுதா நாட்டுல..ஹ்ம்ம்.."
என்று பெருமூச்சு விட்டான்.

"நீங்களும், உங்க நியாயமும்"என்று சிரித்த பெண்கள், சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கும் போது வந்த செவிலியர்,

"நைட், இவங்க கூட ஒருத்தங்க தான் இருக்கனும்."என்று கூறிவிட்டு,

,"இந்த லிஸ்ட்ல இருக்குறதெல்லாம் வாங்கிட்டு வாங்க"என்று கொடுத்துவிட்டு சென்றார்.

நான் இருக்கிறேன் என்று சொன்ன ஜானுவை மறுத்து, இந்த நிலையில் இங்கு இருக்க கூடாது.நான் இருக்கிறேன், என்று பேசிக்கொண்டிருந்தான் விஜய்.

இவர்கள் வாக்குவாதம், முற்று பெறுவது போல இல்லாத நிலையில், உள்ளே நுழைந்த கோமதி,

"இது ஹாஸ்பிடல்லா??இல்ல fish மார்க்கெட் அஹ்??ஏன் இவ்ளோ சத்தம்??என் பேரப்பிள்ளைக்கு தொந்தரவா இருக்காது",என்றபடி உள் நுழைந்தார்.

'நர்ஸ் டயலாக் அஹ் ,யாரோ இவங்களுக்கு மாத்தி கொடுத்துட்டாங்க'

ப்ரியாவை சேர்த்ததும்,விஜய் அவருக்கு அழைத்து சொல்லி இருந்தான்.உடனே காரில் கிளம்பி, இவர்கள் வாக்குவாதத்தை முடித்துவைக்க, வந்துவிட்டார்.

அவரை பார்த்த பின், விஜய் வாயை திறப்பான்??.அங்கு வந்த பின்பு ஜானுவின் நிலையையும் தெரிந்து கொண்டார். ஜானுவும் ஏதும் பேசமுடியாத படி.

"ரெண்டு பிள்ளை பெத்த எனக்கு தான், அவளை எப்படி பார்த்துக்கணும்னு, பக்குவம் தெரியும்.அதுவும், நீ இப்போ இருக்குற நிலையில, தூங்காமா முழிசுட்டெல்லாம் இருக்கக்கூடாது. கிளம்பு" என்று விட்டார்.

சிணுங்கி கொண்டே ,ப்ரியாவை திரும்பி பார்த்துக்கொண்டே, அங்கிருந்து சென்றாள் ஜானு.

'லவ்வெர்ஸ் தோத்தாங்க போ'என்று மனதில் நினைத்தான் விஜய்.

பொதுவாவே கோமதி இருக்கையுல பேசமாட்டான்,இதுல ஜானு பத்தி தெரிஞ்சும், பேசுவானா??

வீட்டிற்கு வந்ததும், அலைபேசியில் அலமுவுக்கு அழைத்து விஷயத்தை சொன்னாள் ஜானு,கேட்ட அலமுவுக்கு ஆனந்த கண்ணீரே வந்து விட்டது.சர்க்கரை டப்பாவை எடுத்துக்கொண்டு சென்று, வாசுதேவன் வாயில் கொட்டினார்.தான் வேண்டுதல் வைத்த தெய்வத்திற்கெல்லாம், நேர்த்திக்கடன் செலுத்த, எப்பொழுது செல்வது என்று திட்டமிட்டார்.

அலமுவிடம் பேசிவிட்டு, ஒரு ஏகாந்த நிலையில் அமர்ந்திருந்த ஜானுவின் அருகில், அமர்ந்த அர்ஜுன்.அவள் மோனத்தை கலைக்கும் பொருட்டு, அவள் மடியில் தலை வைத்து, படுத்து, அவள் கைகளோடு கை கோர்த்து, தன் நெஞ்சின் மீது வைத்துக்கொண்டான்.

அதில் கலைந்த ஜானு, அவன் தலை முடியினுள் விரல் விட்டு, கோத ஆரம்பித்தாள்.

"என்ன ஐயா, இன்னிக்கு செம்ம மூட்ல இருக்கீங்க போல"

"பின்ன,எனக்கு சப்போர்ட் பண்ண, என் பொண்ணு வர போறாயில்ல.நீ எப்போவும், உன் தோழிக்கு தானே, சப்போர்ட் பண்ணுவா"

அவளுக்கு, அவன் பேச்சு ஆச்சர்யமாய் இருந்தது.இப்படி பேசுபவன் அல்ல அர்ஜுன்.ஏன் அதிகம் பேசுகிறவனே அல்ல.

'புள்ளை வந்ததும் தான், பேசவே தெரியுது சாருக்கு'

"அதென்ன சந்தடி சாக்குல பொண்ணுங்குறீங்க.பையன் தான். அவனும், எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவான்."

"சரி ,என்ன குழந்தைனாலும் ஓகே தான். பிறக்கும் போது பார்த்துக்கலாம்.இப்போவே எதுக்கு arguement."

"என்ன இது??இப்படி சப்புன்னு முடிச்சுட்டீங்க.போங்க நீங்க வேஸ்ட். நான் பெருசா எதிர்பார்த்தேன்.கடைசில புஸ்ஸுன்னு ஆக்கிட்டீங்க"

அவள் பதிலுக்கு ,புன்முறுவலை கொடுத்த அர்ஜுன், கண்கள் மூடி ,அவள் வயிற்றுபகுதில், தன் முகம் படுமாறு, திரும்பி படுத்துக்கொண்டான்.

அவன் நிலை உணர்ந்து ,அவனை கலைக்காமல், அமைதியாய், அவன் தலை கோதினாள் பெண்.
சிறிது நேரத்தில் கண் விழித்த அர்ஜுன்,
"தேங்க்ஸ்,தேங்க்ஸ் ஃபார் எவெரித்திங்,அண்ட் ஆல்சோ சாரி"

புரியாமல் பார்த்த ஜானுவிடம்,
"என் சுயநலத்துக்காக தான், நான் உன்னை கல்யாணம் பண்ணேன்.என் தங்கச்சியை நல்லா பார்த்துக்குவேனு, இப்போவும் என் சுயநலத்துக்காக தான், குழந்தையும் தள்ளி போட்டேன்.என் தங்கச்சியை நல்லா பார்த்துக்கணும்னு.அதுக்கெல்லாம் சாரி. இதெல்லாம் புரிஞ்சும் ,என் கூட துணை இருந்தியே ,அதுக்கு தேங்க்ஸ், எல்லாதுக்கும் தேங்க்ஸ்.என் வாழ்க்கையில் வந்ததுக்கு,என்னையும், என் தங்கச்சியையும், அம்மா மாதிரி பார்த்துகிட்டதுக்கு, இப்போ எனக்கு ஒரு தேவதையை பெத்துக்கொடுக்க போறதுக்கு"

கடைசி வரியை சொல்லி விட்டு, கண்ணடித்தான்.

அது புரிந்து, அவனை முறைத்த ஜானு.அவன் உணர்ச்சி பெருக்கில் இருக்கிறான் என்று, சிறிது நேரம் அமைதியாய் இருந்தாள்.

பின், நீண்ட நாட்களாக ,தனக்கிருந்த சந்தேகத்தை கேட்டாள்.

"நீங்க என்னை விரும்பவே இல்லை,பிரியா கிட்ட கூட, இனி இது பத்தி பேசாதேனு, சொல்லிட்டு போனீங்க.அப்புறம் எப்படி ஒத்துகிட்டீங்க நம்ம கல்யாணத்துக்கு."

"உன்னை காதலிச்சதால."
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்-24

அர்ஜுனின் பதிலில், இமைக்க மறந்து, அவனை பார்திருந்தாள் ஜானு.அவளின் நிலை பார்த்து, மென்னகை சிந்திய அர்ஜுன்.

"ஆச்சர்யமா இருக்கா??நிச்சயம் இருக்கும்.இது காதல் தான்னு, நானே தாமதமா தான் உணர்த்தேன்".

"உன்னை முதல்,முதலா உன் காலேஜ்ல பார்த்தபோ, ப்ரியாகூட பேசிட்டு வந்த,பிரியா முகத்துல அவ்ளோ சிரிப்பு,சந்தோசம்.,

எங்க அம்மா,அப்பா காலத்துக்கு அப்புறம் அவ அத்தனை சந்தோசமா இருந்ததை அப்போ தான் பார்த்தேன்.

அப்போவே, எனக்கு உன்னை பிடிச்சுது.ஆனா, அது காதல்னு நான் உணரலை.ஏன்னா நான் எனக்குள்ள பல வேலிகள், கட்டுப்பாடுகள் போற்றுந்தேன்.

என் தங்கச்சிக்கு அப்பா,அம்மா ஸ்தானதுல இருக்கனும், சின்ன சலனம் கூட, என் மனசுல நுழைய கூடாதுன்னு, எங்க பாசத்துல பிரச்சனை வரக்கூடாதுன்னு.

அதுனால, அப்போ அந்த உணர்வை ஆராய்ச்சி செய்யலை.நீயும் என்னை பார்கலை, உங்க காலேஜ் பஸ் நிக்குற இடத்துக்கு போய்ட்டே.

அப்புறம் ரெண்டாவது தடவை பிரியா கூட நீ வந்த, பிரியாவே உன்னை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சா.உன் பக்கமே பார்க்க தூண்டுன பார்வையை கட்டுப்படுத்த முடியாம,சீக்கிரம் பிரியா கிட்ட பேசிட்டு கிளம்பிட்டேன்."

"கடிவாளம் கட்டுன குதிரைன்னு நான் உங்களை மனசுக்குள்ள திட்டுனேன் தெரியுமா??"

"ஹ்ம்ம்..உன் முகத்துல எள்ளும்,கொள்ளும் வெடிக்கும் போதே தெரிஞ்சுது.ஓர கண்ணால உன்னை தானே பார்த்துட்டு இருந்தேன்."

"அடப்பாவி.."

என்று, வாயில் கை வைத்து கொண்டாள்.

கண்சிமிட்டி சிரித்து விட்டு,
"அப்புறம் மூணாவது தடவை,எனக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்.நீயும்,பிரியாவும் என்னை பார்க்க வெயிட் பண்ணிங்க.எதுக்குன்னு யோசிச்சுட்டு வந்தப்போ,நீ என்னை விரும்புரதா, பிரியா சொல்லுறா. முதல்ல கோவம் வந்துச்சு,படிக்கையில இதென்ன அதிகப்ரசங்கி தனம்னு.அப்புறம் வீட்டுக்கு வந்து, நிதானமா யோசிச்சு பார்க்கையில தான், எனக்கும் உன்னை பிடிச்சுருக்குன்னு தோணுச்சு.

நீ, ப்ரியாவுக்கு அண்ணி ஆனா ,அவளை அம்மா மாறி பார்த்துக்குவேனு, தோணுச்சு.

அவ எப்போவும் சந்தோசமா இருப்பான்னு, தோணுச்சு.உன் பக்கம் இருந்து பார்க்கும் போது ,பக்கா சுயநலமான முடிவு தான்.

ஆனா என் ஒரே உறவான தங்கச்சி, நாளைக்கு அம்மா வீடுன்னு வந்து போகணும்னா.என் மனைவிக்கும் அவளுக்கும், உறவு சுமூகமா இருக்கனும்.பிரியா ரெம்ப மூடி(moody).யார் கூடவும், அவ்ளோ சீக்கிரம் ஒட்ட மாட்டா.

சின்ன விஷயத்துக்கெல்லாம் கோச்சுக்குவா, யார் கூடவும் பேசமாட்டா. கோவம் வந்தா, சீக்கிரம் போகாது. இதெல்லாம், புதுசா வர்ர, என் மனைவிக்கு புரியாது.

அவளுக்கு, புரிஞ்சுக்கணுமுன்னு அவசியம் கூட இல்ல.புருஷன் மட்டும் தான், இப்போ உள்ள பல பெண்களுக்கு தேவை. அவனை சார்ந்தவங்க இல்ல.

அதுனால, பல விதத்துல யோசிச்சு.அவளை நல்லா புரிஞ்ச நீ, அவ அண்ணி ஆனா, எங்க உறவும் நிலைக்கும்.அவளுக்கும் தாய் வீடு நிலைக்கும்னு முடிவெடுத்தேன்.

பிரியா எப்படியும், இது பத்தி திரும்ப பேசுவானு காத்திருந்தேன்.அவ கேட்டதும் சரின்னு சொல்லிட்டேன்."

அவனை முறைத்த ஜானு,
"என்னா திட்டு?? அன்னைக்கு,என் காதுல ரத்தம் வராதது, ஒன்னு தான் குறை.கடைசியில, ப்ரியாவுக்காக ஒத்துக்குற மாதிரி, பில்ட் அப் கொடுத்துருக்கிங்க"
வாய் விட்டு சிரித்தான் ,அர்ஜுன்.

"சிரிக்காதீங்க. அதோட விட்டீங்களா??அலமு கிட்ட, நானும், பிரியாவும் arranged marriage மாறி, பூசி மெழுகி பேசி வச்சா,நான் உங்க கிட்ட ப்ரொபோஸ் பண்ணேன்னு, போட்டு குடுத்துட்டீங்க.அலமு கல்யாணம் வரை ,எனக்கு வேப்பிலை அடிச்சுது தெரியுமா??"

"எனக்கு எப்படி தெரியும்.??உங்க அம்மாக்கு, விஷயம் தெரியும்னு நெனச்சேன்.உன் அம்மாவும் 'பிரியா சொன்னா 'அப்டினதும்அவங்களுக்கு தெரியும்னு நெனச்சு,.பெரியவங்க ஆசிர்வாதத்தோடு, நம்ம கல்யாணம் நடக்கணும்னு ஆசை பட்டு ,அவங்க பெர்மிஸ்ஸன்காக சொன்னேன்."

"நல்லா சொன்னிங்க போங்க.அலமு சம்மதிக்காட்டி என்ன பண்ணி இருப்பிங்க??."

"பிரியா கல்யாணத்தை முடிச்சுட்டு, யாரையும் கல்யாணம் பண்ணாம இருந்துருப்பேன்."

உடனடியாக, அவனிடம் பதில் வந்தது.
அவன் பதிலில், ஒரு நிமிடம் வாயடைத்து போய், அவனை பார்த்தாள்.

"உங்க முடிவு ப்ரியாக்கு தெரிஞ்சுடுச்சு போல,அதான் உங்க கல்யாணம் முடிச்சு தான், அவ பண்ணிக்குவேணு, உறுதியா இருந்து, நம்ம கல்யாணத்தை முதல்ல முடிச்சுட்டா."

"எனக்கும் அப்படி தான் தோணுது."

"நல்ல அண்ணன் தங்கச்சி"சலிப்பாய் சொல்வது போல் ,பெருமைப்பட்டாள்.

"கல்யாணம் முடிச்சாலும், பிரியா கல்யாணம் முடிஞ்சு வாழ்க்கை தொடங்குறதுக்கு முன்ன, எனக்கு தொடங்க விருப்பமில்லை.அதை நான் சொல்லாமலே, நீ புரிஞ்சுகிட்ட.அதுக்கப்புறம் என்னோட ஒவ்வொரு விருப்பத்தையும் ,நான் சொல்லாமலே, நீ புரிஞ்சுகிட்ட.குழந்தை விஷயம் வரைக்கும்.

உங்க அம்மா வீட்டுக்கு, திருவிழா போன போது தான்,நீயும், உன் அம்மாவும் பேசுனதை, ஏதேச்சையா கேட்க முடிஞ்சுது.நீ பிரியா மேல வச்சுருக்க அன்புக்கு, நான் உனக்கு என்ன செஞ்சேன்னு?? தோணுச்சு.

உன் அம்மா வருத்தப்படுற அளவுக்கு ,அவங்க மகளை நடத்தி இருக்கேன்னு புரிஞ்சுது.உனக்கு குழந்தை வந்தாலும், ப்ரியாவை விட்டுக்கொடுக்க மாட்டேன்னு தெரிஞ்சும், அதை தள்ளி போடுறது எவ்ளோ சுயநலம்னு புரிஞ்சுது."

அன்றைய இரவில், அவன் மாற்றதையும்,அதன் பின் நடந்ததையும் நினைத்து,இப்பொழுதும் ஜானுவின் முகம் சிவந்தது.

"ஐ ஆம் வெரி சாரி ஜானுமா.உன்னை பத்தி முன்னவே தெரிஞ்சும்,அப்படி நடந்துகிட்டதுக்கு."

அவள் கைகளை பிடித்து, கண்களில் வைத்துக்கொண்டு, கண் மூடி சொன்னவனை பார்த்து, ஜானுவின் மனம் நெகிழ்ந்து.

அவன் குற்றஉணர்வை போக்கிடும் நோக்கில்,
"நீங்க,அந்த முடிவை எடுக்காட்டியும் நான் எடுத்துருப்பேன்.பிரியா எனக்கும் முக்கியம் தான்."

அவளை பெருமையாக பார்த்த அர்ஜுன்,
"தெரியும்.இப்படி ஒரு தோழி கிடைக்க, பிரியா கொடுத்து வச்சுருக்கணும்."

"அவ கிடைக்கவும், நான் கொடுத்து வச்சுருக்கணும்.அவ அடம் பிடிக்குற குழந்தை மாதிரி.அவளை கையாள தெரிஞ்சா, அந்த குழந்தையை ரசிக்கலாம்.அவளை முதல்ல பார்த்தப்போ,யார் கிட்டயும் பேசாம, ஒரு ஆதரவில்லாத குழந்தை மாதிரி உக்காந்திருந்தா.பேசுனா ,பேசுவாளானு கூட தெரியலை.

எல்லார்கிட்டையும், சட்டுன்னு பேசுற எனக்கே ,ஒரு தயக்கம்.எல்லோரையும் எட்டி நில்லுனு சொல்லுற தோற்றம்.அப்புறம் கேன்டீன்ல ,என் பிரின்ட்ஸ் கூட பேசிட்டு இருந்தப்போ, நான் சொன்னதுக்கு சிரிச்சா.அது தான் சாக்குன்னு, அவளை தோழி ஆக்கிகிட்டேன்.அப்புறம் என் பிரின்ட்ஸ் எல்லாம் பொறாமை படுற அளவு, அவ்ளோ கிலோஸ் ஆயுட்டோம்,கொஞ்ச நாளுலேயே.

அதோட அவ மூலமா தான், நீங்க கிடைச்சிங்க. அதுக்காகவே, அவ எனக்கு ஸ்பெஷல் தான்"என்று கூறி கண்ணடித்தாள்.

"அவ ஸ்பெஷல்னு, தான் எனக்கு தெரியுமே.அவ காதலை இன்னிக்கு வரை,ஏன் இப்போ கூட, என் கிட்ட சொல்லாம,நீ இருக்குறதுலயே.உங்க தோழமையோட ஆழம் புரியுது."

அவன் கூற்றில் அதிர்ந்து, அவன் முகம் பார்த்தாள்.

"உங்களுக்கு…..??"

"எல்லாம் தெரியும்."

"எப்போ??"

"கல்யாண புடவை எடுக்க போனப்போ.எனக்கு ஒரு முக்கியமான போன் கால் வந்ததுன்னு, பேச போனேன்.திரும்பி வரையில், ஜெண்ட்ஸ் ட்ரையல் ரூம் முன்னாடி, விஜயும்,பிரியாவும் பேசிட்டு இருந்தாங்க.அவங்க உடல் மொழி, புதுசா பேசிக்குறவங்க போல இல்ல.

பக்கத்துல நெருங்கையுல, அவங்க பேசுனது தெளிவா கேட்டுச்சு.

"ஸ்கூல் timeல இருந்து நீ மாறலைன்னு,ப்ரியாவோட தலையில கொட்டி விஜய் பேசிட்டு இருந்தார்.அப்போ தான் லவ் marriage அஹ் ,arranged marraige அஹ், நீங்க மாத்துன கதை.நம்ம கல்யாணம், எப்படி காதல் கல்யாணம் ஆச்சு.எல்லாம் பேசுனாங்க.

என்னை அவங்க கவனிக்களை.கொஞ்ச நேரத்துல பிரியா, கோமதி ஆண்ட்டி தேடுவாங்க. ரெஸ்ட் ரூம் போறதா, சொல்லிட்டு வந்தேன்னு, சொல்லிட்டு போய்ட்டா.

விஜயும் ட்ரையல் ரூமுக்குள்ள போயிட்டாரு.அவங்களை விட ,உன் மேல தான், கோவம் வந்துச்சு.அதான் நீ, புடவை பிடிச்சுருக்காணு கேட்டபோ, சரியா பதில் சொல்லல.கல்யாணம் வரை அந்த கோவம் இருந்துச்சு.

கல்யாணத்தன்னைக்கு நைட் தான், நீ மலங்க,மலங்க முழிச்சதை பார்த்து, கோவம் போச்சு.அப்புறம் தான் புரிஞ்சுது, என் கோவதுக்கு காரணம், உரிமை உணர்வு.நீ என்னை காதலிக்காம ,தோழிக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு,உன் மேல கோவம்னு.

என் மேலேயும் தப்பிருக்கு. நானும் என் தங்கச்சியை பத்தி யோசிச்சு தானே ,உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.முழுக்க,முழுக்க உனக்காக இல்லியே.அப்புறம் உன் மேல கோவப்படுறதுல, என்ன நியாயம்.

அதுனால உனக்கு, என்னை பிடிக்க வச்சுடலாம்னு யோசிச்சு, கோவத்தை விட்டேன்."

"உங்களை பிடிக்கலைன்னு யார் சொன்னா??என் மத்த பிரின்ட்ஸ் அஹ் கேட்டு பாருங்க.அவங்க சொல்லுவாங்க, நான் உங்களை சைட் அடிச்சு, காலேஜ் அஹ் ,கழுவி விட்ட கதையை.இதுக்கு தான் புடவை கடையில ,உம்முன்னு இருந்திங்களா.பரவால்ல.அதுக்கு பதிலா தான் ,தீபாவளி purchaseல, வச்சு செஞ்சேன்ல."

"அடிப்பாவி,இந்த கோவத்தை தான் அங்க காட்டுனியா??"

"பின்ன,நாங்கெல்லாம் யாரு??".

என்று இல்லாத காலரை, தூக்கி விட்டுக்கொண்டாள்.

"உன்கிட்ட இனி, ஜாக்கிரதையா தான் இருக்கனும்."

"இப்போ யோசிச்சு என்ன ப்ரியோஜனம்??.டூ லேட்."

சொல்லிவிட்டு, சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தாள்.அவள் சிரிப்பில் அர்ஜுனும் இணைந்து கொண்டான்.

"நானும், பிரியா காதலிக்குறது தெரிஞ்சதும், பயந்தேன்.யாரோ,எப்படிப்பட்டவனோன்னு.அவ ஏமாந்துர கூடாதுனு.அப்புறம் விஜய் அண்ணாவை, அடிக்கடி பார்த்து,அவர்கிட்ட பேசி,அவர் எங்க உறவுனதும், அம்மாவை விட்டு பேசவச்சு,எனக்கு திருப்தி ஆனதும் தான், உங்களை பார்க்க பிரியா கூட வந்தேன்.

அதுவும் நல்லது தான். அதுனாலே தான் ,நீங்க எனக்கு கிடைச்சிங்க.பிரியா ஸோ ஸ்வீட்."

புன்னகையுடன் கூறினாள். பின் முகம் மாற,
"உங்க அத்தையும், பொண்ணும் வந்தப்போ தான், கொஞ்சம் டென்சன் ஆயிட்டேன்.நீங்களும் கல்லுளிமங்கன் மாறி இருக்கவும்,கோவம் ஜாஸ்தி ஆயிடுச்சு."

"சந்தடி சாக்குல,மனசுல உள்ளதெல்லாம் சொல்லி திட்டுற. சரி விடு.அவங்க பொய் சொல்லுறாங்கன்னு, அவங்க வந்த அன்னைக்கே தெரியும்.மாமா கால் பண்ணி சொல்லிட்டார்.

அவர் முகத்துக்காகவும்,அப்பாவோட தங்கச்சி,பிரியா மாறி தானே அவங்களும்ன்னு ,நெனச்சு,பணத்துக்காக வந்தவங்களுக்கு அதை குடுத்து அனுப்புவோம்னு, பேசாம இருந்தேன்.

அந்த சொத்து விக்குறதுக்கு தான் ,கொஞ்ச நாள் ஆயிடுச்சு.நீயும் அவங்களை சமாளிச்சுடுவன்னு தெரிஞ்சு தான், நான் ஒன்னும் சொல்லல.

பிரியா வீட்டுக்கு, நீ போய்ட்டு வந்த அன்னைக்கு, உன்னை பத்தி தப்பு,தப்பா சொன்னாங்க.அவங்க மேல உள்ள கோவத்தை ,கட்டுப்படுத்த முடியலை.என் கிட்ட ஒன்னும் சொல்லாம, வெளியில போன, உன் மேல அது திரும்புச்சு.அதான் நீ வந்ததும் கேள்வி கேட்டேன். அதுக்குள்ள நீ முந்திக்கிட்டு, என்னை ஆப் பண்ணிட்ட."

அதை சொல்லிவிட்டு அன்றைய நிகழ்வில் ,புன்னகைத்தான் அர்ஜுன்.

"அதுக்கும் மேல, அவங்களை இங்க இருக்க விட்டா, நல்லதில்லைன்னு,மறுநாள் கிடைச்ச அட்வான்ஸ் அஹ் கொடுத்து, அனுப்பிட்டேன்.உன்னை படுத்துனதுக்கு, உன் கையால வாங்குனா தான், உணருவாங்கன்னு, உன்னை கொடுக்க வச்சேன்."

கணவன் தன்னை, விட்டு கொடுக்கவில்லை, எந்த சந்தர்ப்பத்திலும் என்ற நினைவில், ஜானு முகத்தில் புன்னகை மலர்ந்தது.

"அடப்பாவி அஜ்ஜு. இப்படி அம்புட்டையும் உள்ளேயே வச்சு ,என்னை எத்தனை நாள் புலம்ப வச்சுட்டே."

பழைய ஜானுவாய் மாறி, கலாய்த்தாள்.

அர்ஜுன் புன்னகையுடன்,
,"புருஷன் ஸ்ட்ரிக்ட் அஹ் இருக்குற வரை தான் மரியாதை எல்லாம்.ஹ்ம்ம்…"என்று பெருமூச்சு விட்டான்.

ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்த ஜானு,
"அது ஒரு ப்லொவ்ல வந்துருச்சு"என்றாள்.

வாய்விட்டு சிரித்த அர்ஜுன்,.
"சரி, சரி ரெம்ப நேரம் ஆச்சு. நாளைக்கு சீக்கிரம் ப்ரியாவை பார்க்க போனும்.வா தூங்கலாம்."

அதன் பின் இருவரும், தூங்க சென்றார்கள்.
மறுநாள் ப்ரியாவை, காண மருத்துவமனை சென்றார்கள்.
அங்கே கோமதி,தன் பேரனை பார்த்து,

"அப்படியே விஜய் மாதிரி இருக்கான்.கண்ணு மட்டும் என்னை மாதிரி."
என்று, கொஞ்சிக்கொண்டிருந்தார்.

அவரை பார்த்து, நமட்டு சிரிப்பை உதிர்த்த ஜானு,
,"பெரியம்மா, ஒரு மாதம் கழிச்சு தான், ஜாடை தெளிவா தெரியுமாம்.எங்க பாட்டி சொல்லுவாங்க.அப்போ பார்த்துக்கலாம்.இப்போ சாப்பிட வாங்க."

"க்கும்.."என்று நொடித்துக்கொண்ட கோமதி.

"சிறுசுங்கள்ளாம், இப்போ பெரியவங்க மாறி, பேச ஆரம்பிச்சுடுச்சுங்க.என் மருமகளுக்கு இதெல்லாம் கத்துக்கொடுத்துடாதை.அவ நல்ல பொண்ணு."

"சரி பெரியம்மா.பிரியா நீ பெரியம்மா கிட்ட தான், எதுனாலும் கத்துக்கணும்."

அந்த எதுவில் அழுத்தம் கொடுத்து, ப்ரியாவை பார்த்து ,கண் சிமிட்டி சொன்னாள்.

வழக்கம் போல் ,வந்த சிரிப்பை அனைவரும் அடக்கினர். விஜய் மட்டும் மனதில்,
,'இந்தம்மா இவ இருக்கும்போது மட்டும் ,அமைதியா இருக்கலாம்.'என்று நினைத்து கொண்டான்.

"ஏண்டிமா??இம்புட்டு வாய் பேசுரியே,உண்டானது கூட உனக்கு, ரெண்டு மாசமா தெரியல.என்ன பொண்ணோ. இந்த காலத்து பொண்ணுங்களுக்கு, வாய் பேச மட்டும் தெரியுது."

"என்ன செய்யுறது பெரியம்மா??எனக்கு வாந்தி ,தலை சுத்தல் எதுவும் இல்லை.தூக்கமும், பசியெடுக்கமா இருந்ததும் தான் ,இருந்துச்சு.உங்க பேரபுள்ளையோட அம்மாவை, கவனிச்சுக்குறதுல, இதை பெருசா எடுத்துக்கலை.

உங்க மாதிரி மாமியார், எனக்கிருந்தா கண்டுபிடிச்சுறுப்பாங்க. இல்லாததால.கண்டுபிடிக்க முடியலை.

என்ன இருந்தாலும் உங்களை மாதிரி மாமியார் யாருக்கு கிடைக்கும்.பிரியா கொடுத்து வச்சவா. நல்ல வேளை, நான் அவ்ளோ புன்ணியம் பண்ணலை."

"என்னடிமா??"

"உங்க மாறி மாமியார் அமைய,நல்லவேளையும், புண்ணியமும் வேணும்னு சொன்னேன்."

அதற்கு மேல் அவரை காப்பாற்ற விஜய்.,அவரை சாப்பிட அழைத்து சென்றான்.

மறுநாள் ப்ரியாவை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வந்தார்கள்.ஜானு அடம் பிடித்து, தங்கள் வீட்டிற்கு அவளை அழைத்து வந்தாள்.

நீ எப்படி பார்த்துக்குவ?? என்று ஆட்சேபம் தெரிவித்த கோமதியிடம், அலமுவை வரவழைத்து பார்த்துக்கொள்வேன் என்று கூறி ,அதன் படி செய்தாள்.

மகள் அழைத்ததும், ஆவலுடன் வந்துவிட்டார் அலமு.வேறு வழி இல்லாமல் கோமதியும் ,தன் பேர பிள்ளைக்காக, இவர்கள் வீட்டில் தங்கி இருந்து, இருவரையும் பார்த்துக்கொண்டார்.

அலமு ,ப்ரியாவிற்கு,ஜானுவுக்கும் பார்த்து பார்த்து சமைத்து போட்டார்.

மூன்று மாதம் கழித்து, ப்ரியாவை, அவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றான் விஜய்.கோமதியும் அவர்களுடன் சென்றார்.

அடுத்த இரண்டு மாதத்தில், ஜானுவுக்கு வளைகாப்பு செய்து ,அவர்கள் ஊருக்கு, அழைத்து சென்றார் அலமு.

அர்ஜுனை பிரிய மனமில்லாமல், அடிக்கடி வர வேண்டும் என்ற வாக்குறுதி வாங்கி கொண்டு ,கிளம்பினாள் ஜானு.

அதை சிரமேற்கொண்டு நிறைவேற்றுபவன் போல, வாரம் தவறாமல்,ஜானுவை பார்க்க சென்றான் அர்ஜுன்.பிரசவத்துக்கு பத்து தினம் முன்னவே, விடுப்பெடுத்து கொண்டு, அவள் அன்னை இல்லத்திற்கு, சென்று விட்டான் அர்ஜுன்.

அவன் வருவதற்காக காத்திருந்தது போலவே,மறுநாள்,
அவர்கள் மகன், இப்பூவுலகில் அவதரித்தான்.

பதட்டத்துடன் வெளியே காத்திருந்த அர்ஜுனை பார்க்கையில், தன் பதட்டம் மறந்து வாசுதேவன், அவனுக்கு ஆறுதல் கூறினார்.

அலமுவுக்கு மாப்பிள்ளையை நினைத்து ,பெருமையாய் இருந்தது.
குழந்தையையும்,ஜானுவையும் பார்க்க அனுமதித்ததும், உள்ளே விரைந்த அர்ஜுன்.ஜானுவிடம் முதலில் சென்று, அவள் கைகளை பிடித்து ,கண்களில் வைத்துக்கொண்டான்.

அவன் கண்கள் கசிந்தது.அந்த நீரின் தொடு உணர்வில், விழித்த ஜானு,அவனை பார்த்து புன்னகையுடன்,

"நான் தான் ஜெயிச்சேன்.பையன் தான் பிறந்துருக்கான்."என்றாள்.

"ஆமா,நீ தான் ஜெயிச்ச. எல்லாத்துலயும்,என்னையும்"

என்று கூறி, அவள் கைகளில் அழுந்த முத்தமிட்டான்.

இருவரின் கண்களும் ,ஆனந்தத்தில் கலங்கி இருந்தது.

"இங்க பாருடி,உன் பையனை, அழுது ஊரையே கூட்டுறான்.உன்னை மாறியே வாயாடியா வருவான் போல"

சந்தோஷத்தில் ஆர்ப்பரித்த அலமுவை பார்த்து, இருவர் பார்வையும் சங்கேத மொழி பேசி கொண்டது.

"என் மகன் காவிய நாயகனே,
என் உயிர் தேசத்து காவலனே,
வாடிய பூமியில் கார்முகிலாய்,
மழை தூவிடும் மானிடன்

என் மகனே!!".
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்-25

ஐந்து வருடங்களுக்கு பிறகு,
"இருபது வயதில் வருவது தானா காதல்,!!!
அறுவது வரையில் தொடர்வது தானே காதல்!!!
சிரிக்கிர போது சிரிப்பது தானா காதல் !!!
அழுகிர போது ஆறுதல் தானே காதல்!!!
காதலை நான் பாடவா!!!
பூவிலே தேன் தேடவா!!!

தொலைக்காட்சியில், ஒரு மியூசிக் சேனலில் பாடல் ஓடி கொண்டிருந்தது.

அர்ஜுன் அதை ரசித்து கேட்டுக்கொண்டிருந்தான். உள்ளே படுக்கையறையில் இருந்து ஜானகி,
"ஏங்க, இங்க வாங்க.உங்க பொண்ணை சமாதானப்படுத்துங்க.ஒரே அழுகை."

அவள் குரல் கேட்டு, எழுந்து உள்ளே சென்றான் அர்ஜுன்.அங்கே அவனது ஒரு வயது தேவதை, முகம் சிவக்க அழுது கொண்டிருந்தாள்.

"ஏன்டா தங்கம்??,ஏன் அழுகுறிங்க??அம்மா திட்டுனாளா??அடிச்சாள??சொல்லுங்க.நாம அவளை அடிச்சிடுவோம்."

"ஆமா.... திட்டுறாங்க, உங்க மகளை.குளிக்க அழுகை,சாப்பிட அழுகை.காரணமா வேணும் அழுக.ஏதாவது சாக்கு வச்சு அழுவா."

தந்தையின் கைகளுக்கு போனதும், ஸ்விட்ச் போட்டது போல், அவள் அழுகை நின்றது.

"அடி கழுதை, நான் எவ்ளோ சமாதானம் செஞ்சும் அழுகையை நிப்பாட்டலை. இப்போ அப்பா கைக்கு போனதும் சிரிக்குறதை பாரு.குட்டி கழுதை."
அலுத்துக்கொள்வது போல, பெருமை பட்டாள்.

"அவ அப்பா பொண்ணு, அப்படி தானே குட்டிமா??"
என்று கூறி குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான்.

"போதும், போதும் உங்க கொஞ்சல், இந்த ட்ரெஸ்ஸ அவளுக்கு போட்டு விடுங்க"என்று நொடித்துக்கொண்டாள்.

"உங்க அம்மாவுக்கு, அவளுக்கு முத்தம் கொடுக்கலைன்னு பொறாமை டா குட்டிமா."
நமுட்டு சிரிப்போடு, சொன்னான் அர்ஜுன்.

"ஆமா,ஆமா…"என்று முகவாயை தோளில் இடித்து கொண்டு,தன் முக சிவப்பை மறைக்க, அவ்விடம் விட்டு சென்றாள்.

அர்ஜுனின் சிரிப்பு சத்தம், அவளை தொடர்ந்தது.ஹாலை கடக்கையில், சுவற்றின் ஓரமாக இருந்த புத்தக அலமாரியில், அடுக்கி வைக்க பட்டிருந்த, பொன்னியின் செல்வன் கண்ணில் பட்டது.

அதை அவன் குடுத்த தினம்,அவன் முகத்தில் தோன்றிய வெட்கம்.அதன் பிறகு அவர்கள் ஆரம்பித்த தாம்பத்தியம்.அனைத்தும் ஞாபகம் வந்தது.

"எனக்கு இந்த நாவல் பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்??"என்று ஒரு நாள் கேட்ட போது,

"பிரியா மூலம் தான்,அவளுக்கு எப்படியாச்சும், உன்னை எனக்கு பிடிக்க வச்சுடனும்னு ஆவல். அதுக்கு முன்னவே, உன்னை பத்தி தான் லீவு நேரத்தில் எல்லாம் பேசுவா.

அப்புறம் உனக்கும் எனக்கும், நிச்சயம் ஆனதும், நான் கேட்காமலே,உனக்கு பிடிச்சது,பிடிக்காதது.உன் விருப்பு,வெறுப்பெல்லாம் வாய் ஓயாமா பேசிட்டே இருப்பா.

நானும் கேட்காத மாதிரி கேட்டுக்குவேன்.அதுனாலேயே முதல் தடவை உன்னை பார்க்கும் போது தெரியாதவங்களை பார்க்கிற மாதிரியே இல்ல."

என்று கூறி புன்னகைத்தான்.

அந்த நினைவில் அவள் முகத்தில் புன்னகை அரும்பியது.

"என்ன கனவா??முழிச்சுக்கிட்டே.கனவுல நான் தானே??அதான் உன் முகம் ப்ரகாசமா இருக்கு."
அவளை பார்த்துக்கொண்டே வந்த அர்ஜுன் கூறினான்.

"ஆமா,ஆமா…நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்."

"அஹான்…அப்படியா??"அவன் தோரணையே, அவள் சொல்வதை, அவன் நம்பவில்லை என்று கூறியது.

எவ்வளவு கட்டுப்படுத்தியும் முடியாமல், ஜானு சிரித்து விட்டாள். கூட சேர்ந்து நகைத்த அர்ஜுன், அவளை நெருங்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.அதில் மயங்கி நின்றவளை பார்த்து கொண்டே, அவள் இதழை நெருங்கும் போது,

"அப்பா…"
என்னும் குரல், ஹாலில் இருந்து கேட்டது.அவசரமாக இருவரும் விலகுவதற்கும், அவர்கள் தவப்புதல்வன் அபிமன்யு கிச்சேனுக்குள் வருவதற்கும், சரியாய் இருந்தது.

"இங்க என்ன பண்ணுறீங்க??உங்களை bedroomல தேடிட்டு இங்க வரேன்.வாங்க நாம செஸ் விளையாடலாம்"என்று கூறி, அர்ஜுனின் கையை பிடித்து அழைத்து, இல்லை இல்லை இழுத்துச்சென்றான்.

அவளை திரும்பி பார்த்துக்கொண்டே சென்றான் ,அர்ஜுன்.அவன் முகபாவனை இவளுக்கு சிரிப்பை வரவழைத்தது.இந்த ரூல்ஸ் போட்டதே அர்ஜுன் தான். ஒன்று வெளியில் சென்று விளையாட வேண்டும்.வீட்டில் விளையாண்டால் இது போல் செஸ்,carrom என்று விளையாட வேண்டும்.மொபைல்,வீடியோகேம் எல்லாம் கூடாது.இதுனாலேயே, இவ்ளோ நேரம் வெளியே ,தன் தோழர்களுடன் விளையாடி விட்டு, இப்பொழுது இங்க வந்து, விளையாட இவனை அழைத்து செல்கிறான்,அபிமன்யு.

அவர்கள் சென்றதும், படுக்கையறை சென்று பார்த்தாள் ஜானு.அங்கு அவர்கள் புதல்வி ,தொட்டிக்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

'இந்த குட்டிக்கு எல்லாத்துக்கும் அப்பா வேணும்.இதுவே நான் தூங்க வச்சா, சிணுங்கிட்டே இருப்பா.இப்போ சமத்தா தூங்குறதை பாரு. இவ அப்படியே பிரியா மாதிரி,அழுகுறதுலையும் சரி,அர்ஜுன் தான் வேணுங்குறதுலையும் சரி.ப்ரியாக்கு அண்ணனா உசத்தி,அவன் மேல ஒரு பக்தினே சொல்லலாம்.இந்த குட்டி கழுதையும், அப்படி தான் வளர போகுது.அபிமன்யு அப்படி இல்ல, அம்மா வேணுங்கும்போது அம்மா,அப்பா வேணுங்கும்போது அப்பா."

இவள் நினைவுகளை கலைப்பது போல், ஹாலில் பேச்சுக்குரல்கள் கேட்டது.

அங்கே இவள் சென்ற போது, பிரியா,விஜய் மற்றும் அவர்கள் மகன் ஆதித்யா வந்திருந்தார்கள்.

"வாங்க மகாராணி.இப்போ தான் வழி தெரிஞ்சதா இந்த வீட்டுக்கு.நான் தான், அங்க அடிக்கடி வரேன்.நீங்க வந்து எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா??"

"என்னடி பண்ணுறது. உன் மருமகனை கிளப்பி வாரதுக்குள்ள நான் ஒரு வழி ஆகிடுறேனே. என் மருமகன் அபி மாதிரி சமத்து பையனா இவன். சரியான அடாவடி."

"அப்படியே அவன் பாட்டி மாதிரி"
இதை மென்குரலில் ஜானுவின் காதிற்கு மட்டும் கேட்கும் படி கூறினாள்.

விஜய் கேட்டால் கூட பரவாயில்லை,ஆதி கேட்டால்,அப்படியே கோமதியிடம் சொல்லி விடுவான்.அப்புறம் கோமதியின் பார்வையையும்,பேச்சையும் யார் சகிப்பது.

"மருமகன்,மருமகன்குற, சீக்கிரம் ஒரு மருமகளை பெத்து தர மாட்டேங்குற.நான் பாரு உன் கிட்ட சொன்ன மாதிரி உன் மருமகளை கொடுத்துட்டேன்.அதுவும் உன்னோட ஜெராக்ஸ் காப்பியா"என்று கூறி கண்ணடித்தாள்.

"இதெல்லாம்,என் கிட்ட கேட்காத,உன் அண்ணா கிட்ட கேளு.அவருக்கு இவனே போதுமாம்."

அவளை போலியாக முறைத்த பிரியா,
"என் மருமக என்னை மாறி தான் இருப்பா.பின்ன உன்னை மாதிரியா இருப்பா??எங்க என் கண்ணம்மா??"

"இப்போ தான் அழுது ஓஞ்சு தூங்குறா."

"என் தங்கத்தை ஏண்டி அழ வைக்குற??."

"ஹ்ம்ம்…வேண்டுதல்.."

இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த விஜய்,இவர்கள் அருகில் வந்து,
"என்ன??என் தலை உருளுது."

"எனக்கு மருமக கேட்டா, உங்களை கேட்க சொல்லுறா.. சொல்லுங்க எப்போ தரீங்க."
ஏதோ பணம்,பொருள் மாதிரி கேட்டாள்.

"உன் மகன் மாதிரி இவன் நல்லவன்னு நெனச்சியா??சரியான அடாவடி.தினமும் ஸ்கூல்ல இருந்து ஒரு பஞ்சாயத்து இழுத்துட்டு வரான். இவன் கிளாஸ் மேம் கிட்ட மாட்டாமா, இவனை ஸ்கூல்ல விட்டு வரத்துக்குள்ள போதும், போதும்னு ஆயுடுது.பேரண்ட்ஸ் மீட்டிங் வந்தாலே வயிறு கலங்குது. இதுல இன்னொன்னா??உனக்கு நல்ல பொண்ணா, நானே தேடி தரேன் உன் பையனுக்கு."

நீண்ட உரையை முடித்து விட்டு மூச்சு வாங்கினான் விஜய்.
அதற்குள் அங்கு அபியும்,ஆதியும் ஓடி விளையாண்டு பொருள்களை கீழே தள்ளி, வீட்டை ரணகளம் ஆக்கினார்கள்.

பிரியா அங்கு சென்று ,அவர்களை அடக்குவதில் முனைந்தாள்.
அவர்களை ,கண் ஜாடையில் பார்த்தியா?? என்று காட்டி விட்டு, அவர்களை அடக்க இவனும் சென்றான்.

"பரவால்ல விடுமா..குழந்தைங்க தானே"என்று அர்ஜுன், ப்ரியாவை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தான்.

இதை புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தாள் ஜானு.

அவர்கள் கிளம்பி சென்றதும்.இரவு உணவை பிள்ளைகளுக்கு குடுத்து ,தாங்களும் உண்டு.கிச்சேனை ஒழுங்கு படுத்தி விட்டு வந்தாள் ஜானு.

படுக்கை அறையில், அர்ஜுனின் மார்பில், அவர்கள் மகள் சுகமாக துயில் கொண்டிருந்தாள்.அவன் அருகில் அவர்கள் மகன் அபி, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

அவர்கள் இருவரையும் உறங்க வைப்பது அர்ஜுன் தான். இருவரும் தந்தையிடம் மட்டுமே, அடம்பிடிக்காமல் சமத்தாக தூங்குவார்கள்.இவள் தூங்க வைத்தாள், மகள் அழுத்தே கரைவாள்.அபி விளையாட அரம்பித்துவிடுவான். பின்பு நேரம் கழித்து தூங்கி, மறுநாள் பள்ளிக்கு எழுப்பும் போது, எழாமல் அடம்பிடிப்பான்,தூக்க கலக்கத்தில்.

எனவே இருவரையும் அர்ஜுனே தூங்க வைத்துவிடுவான்.
இவர்களை பார்த்துக்கொண்டே, அறைக்குள் நுழைந்த ஜானு,அவன் மார்பில் இருந்து மெதுவாக அலுங்காமல், மகளை தூக்கி தொட்டிலில் கிடத்தினாள்.

பின் மகனையும் மெதுவாக, நகர்த்தி படுக்க வைத்துவிட்டு, இரு புறமும் தலையணைகளை அடுக்கி, அவன் கட்டிலில் இருந்து விழுந்துவிடாமல் இருக்குமாறு செய்தாள்.

அதன்பின், அர்ஜுனின் அருகில் அமர்ந்து, அவன் மார்பில் தலை சாய்த்துகொண்டாள். அவள் செய்கைகளை மென்னகையோடு பார்திருந்தவன்,அவள் இவன் மார்பில் சாய்ந்ததும்,அவள் தலையை கோதிக்கொடுத்தான்.

சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை.அவள் முகம் யோசனையை காட்டியதும்,அதை பார்த்த அர்ஜுன்,
"என்னடாமா??யோசனை எல்லாம் பலமா இருக்கு."

"ஹ்ம்ம்…பிரியா பத்தி தான், அவங்களுக்கு ஒரு குழந்தை போதுமாம்.நான் சின்ன வயசுல, ஒரு பொண்ணா வளந்து, கூட விளையாட கூட ஆள் இல்லாம,எந்த விஷயத்தையும் பகிர்ந்துக்க, சம வயசு பிள்ளைங்க இல்லாம.தம்பி,தங்கச்சிக்கு ஏங்கி இருக்கேன்.இப்போ ஆதியும் அப்படி தான் வளர போறான்.அதான் ,கொஞ்சம் கஷ்டமா இருக்கு."

அவள் மனநிலை புரிந்தது.எப்பவும் ப்ரியாவை நினைத்து யோசிக்கும் அவள் குணம் இப்பொழுதும், பெருமையாய் இருந்தது.

அவள் மனநிலையை மாற்றும் பொருட்டு,
"அவங்க இன்னொன்னு பெத்துக்காட்டி என்ன??நாம பெத்துக்குவோம்.எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல.குட்டிமா, பிரியா மாதிரி இருக்குறானு நீ தானே சொன்ன.உன்னை மாதிரி ஒரு பொண்ணு பெத்துக்குவோம்."
அவனை நிமிர்ந்து முறைத்த ஜானு,

"ஏன்??,அலமு மாதிரி ஒன்னு,எங்க அப்பா மாதிரி ஒன்னு,உங்களை மாதிரி ஒன்னுன்னு, இன்னும் நெறைய பெத்துக்கலாம்."
போலியாக ஒரு ஆச்சர்யம்,மகிழ்ச்சியை முகத்தில் காட்டி,

"சூப்பர் மா,நல்ல ஐடியா,இது எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு.எனக்கு எந்த தடையும் இல்லை.நீ எவ்ளோ பெத்துக்கொடுத்தலும் ஓகே.நான் வளர்த்துக்குடுக்குறேன்."என்று கூறி கண்ணடித்தான்.

"ஆஹா..தாராளம் தான்.."என்று அலகு காட்டி விட்டு பின் சிரித்து விட்டாள்.

கொஞ்ச நேர அமைதிக்கு பின்,
அவன் சட்டை பட்டனை திருகி கொண்டு,
"ஏங்க.."

"ஹ்ம்ம்…"

"உங்களை தான்.."

"சொல்லு.."

"நிஜமாவே, உங்களுக்கு இன்னொரு பேபி வேணுமா??"

"நான் விஜய் மாதிரி கிடையாது.எத்தனை அடாவடி வேணாலும் சமாளிப்பேன்.ஒன்னு என்ன பத்து பேபி வேணாலும் பெத்துக்கொடு.உன்னையே சமாளிக்குறேன்,பேபியை சமாளிக்க மாட்டேனா??"

அவனை நிமிர்ந்து பார்த்து "உங்களை……."
என்று அடிக்க கை தூக்கிவிட்டு, பின் புன்னகையுடன் அவனை அணைத்துக்கொண்டாள்.அவனும், மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன், இவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.

காதலா??இது காதலா??என்ற கேள்வியோடு ஆரம்பித்த இவர்கள் வாழ்க்கை பயணம்.காதல் தான். உண்மையான,ஆத்மார்த்தமான காதல் தான் இதுவென்று புரிந்து, நீண்ட காலம் தொடர்ந்தது.அந்த காதலோடு, அவர்கள் பயணம் சிறப்புற, வாழ்த்தி விடைபெறுவோமாக.

"உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறும் காதலே!!
உடல் தீர்ந்து போன பின்னும்,
உயிர் வாழும் காதலே!!
காலங்கள் எங்கு தீரும் ,அது வரை செல்வோமா!!
காலங்கள் தீருமிடத்தில் புது ஜென்மம் கொள்வோமா!!
உன் மூச்சிலே நானும்,
என் மூச்சிலே நீயும்,
காற்றில் ஒலிகள் கேட்கும் வரையில்,
காதல் கொள்வோமா!!
சுபம்.
 
Top Bottom