Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலா?? இது காதலா ??

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்-11

"வைத்த கண் ,வைத்தது தானோடி
அப்படியே நிற்கின்றாய்!!
தைத்த முள் ,தைத்தது தானோடி
சொக்கியே போகின்றாய்!!!
அர்ஜுனன், உன்னை பெண் பார்க்க
அவசரம் நீயும் பூ பூக்க!!
யுத்தங்கள் செய்திட யுவதியோ வந்தாளே!!!

ஜானகியின் தோழிகள், அவளை சுற்றி அமர்ந்து அவளை கேலி செய்து பாடி கொண்டிருந்தார்கள்.

"சொன்ன மாறியே அருண்பாண்டியன கல்யாணம் பண்ணிக்க போற."

"யாருடி,அருண்பாண்டியன்??"-பிரியா

"இவ்ளோ நாள் உனக்கு இது தெரியாதா??உன் அண்ணா தான். முதல் முதலா நம்ம காலேஜ் ல பாத்துட்டு ஜானு வச்ச பேர்."

பிரியா ஆர்வமாக,

"அப்படியா டி??"

"இவளுங்க கிடக்குறாளுங்க.இவளுங்க பேச்செல்லாம் பெருசா எடுத்துக்காத."

"பாரு டி, நம்ம ஜானுக்கு வெட்கத்தை."

'இவளுங்க வேற டார்ச்சர் பண்ணுராளுகளே'

"மாப்பிள்ளை பேர் வர மாறி பாடிட்டோம், இவ பேரு அதுல இல்லைனு கோவம் போல"

"அப்போ,இவளுக்கு தகுந்த மாறி ஒரு 80's பாட்டு பாடுங்கடி"

"ஜானகி தேவி ராமனை தேடி
இரு விழி வாசல் திறந்து வைத்தாள்!!
ராமன் வந்தான் மயங்கிவிட்டாள்!!
தன் பேரை கூட மறந்துவிட்டாள்!!"

"என்னடி எல்லா பாட்டுலயும் இவளே மயங்குறா,சொக்குறா, மாப்பிள்ளை மயங்க மாட்டாரோ??"

"அவரை பார்த்தா மயங்குற மாறி தெரில,மயக்குற மாறி தெரியுறார்"

என்று சொல்லி சிரித்தார்கள்.

'ஹ்ம்ம்..அந்த காரக்குழம்பு,மயக்கிட்டாலும்'

என்று நொடித்து கொண்டாள்.

இரண்டு பெண்களையும் அழைத்து வரும்படி ஐயர் சொல்வதாக ,அலமு வந்து இருவரையும் அழைத்தார்.

இருவரும் வந்து சபையில் வணங்கி, மாப்பிள்ளைகள் எடுத்து கொடுத்த புடவையை வாங்கி கொண்டு சென்றனர்.

சிறிது நேரத்தில்
அதை கட்டிக்கொண்டு வந்தார்கள்.முதலில் பிரியா,விஜயின் திருமண ஒப்புதல் வாசிக்க பட்டு இருவரின் கைகளிலும் மோதிரம் கொடுத்து மாற்றி கொள்ள சொன்னார்கள்.

தன் அன்னை பார்க்காத போது ப்ரியாவை, கண்களில் நிரப்பி கொள்வதில் விஜய் கில்லாடியாய் இருந்தான்.

இருவரும் கண்களாலேயே பேசிக்கொண்டார்கள்.
மோதிரம் மாற்றயில் யாருக்கும் தெரியாமல், அவளின் விரல்களை வருடி ,ஒரு அழுத்தம் கொடுத்து விடுவித்தான் விஜய்.

உதட்டில் ஒரு மென்னகை தவழ்ந்தது இருவரிடமும்.
அவர்கள் மோதிரம் மாற்றியதும்,ஜானகி அர்ஜுனின் ஒப்புதல் வாசிக்கப்பட்டு, இருவரிடமும் மோதிரம் கொடுத்து மாற்றி கொள்ள சொன்னார்கள்.

அதுவரை அவனை நிமிர்ந்து பார்க்காத ஜானு,அவனை நிமிர்ந்து பார்த்தாள்.லைட் ப்ளூ ஷர்ட்,டார்க் கிரெய் பேண்ட்டிலும் அம்சமாய் இருந்தான் அர்ஜுன்.

அவனை விட்டு கண்களை அகற்ற முடியாமல் பார்த்து நின்றவளின் காதருகே,

"ஒழுங்கு மரியாதையா குனிஞ்சு நில்லு,எங்க மானத்தை வாங்காத"

என்ற மெல்லிய முணுமுனுப்பு கேட்டது.வேற யாரு அலமு தான்.

'ஆண்டவா,இப்படியா பார்ப்பேன்.இன்னிக்கு விடிய,விடிய ராமாயணம் இருக்கு.'

அர்ஜுன்,தன் கடமையை ஒழுங்காக செய்தான். அதாங்க மோதிரம் போட்டு விடுறது.

இவளை பார்த்தானா என்று யாருக்கும் தெரியாது.

இவள் அறைக்கு வந்த மறுநிமிடம் இவள் முன் ப்ரஷணமான அலமு,
"அந்த பிரியா பொண்ண பாருடி குனிஞ்சதலை நிமிர்ந்துச்சா??.மாப்பிள்ளை முகத்தை கூட பார்க்கல. நீ விரும்புன பையனுக்கு தானே உன்னை கல்யாணம் பண்ண போறோம்.சபையிலே இப்படியா வாயில ஈ போறது தெரியாம பார்ப்ப??"

'ஸ்டார்ட் மியூசிக்…'

'அப்டியா பார்த்தோம்.இந்த அலமு ஓவர் அஹ் buildup கொடுக்குது..சரி விடு அரசியல்லா இதெல்லாம் சாதரணமப்பா'

அவளை திட்டி முடித்து அலமு சென்றதும்.பிரியாவையும், அந்த அறைக்கு அழைத்து வந்தார் கோமதி.

"விஜய்,உன்னை பாக்கலைன்னு,நீ ஒன்னும் வருத்த பட்டுக்காத மா, அவன் கொஞ்சம் கூச்ச சுபாவம்"

"பரவால்ல அத்தை"

ஜானுவிற்கு மட்டும் பார்வையில் எரிக்கும் சக்தி இருந்தால் இருவரையும் பஸ்பமாக்கி இருப்பாள்.

அவர் சென்றதும்,இவளை திரும்பி பார்த்த பிரியா, இவள் பார்வையின் பொருள் உணர்ந்து.

'நண்பேண்டி'

என்று தோள் அணைத்துக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் இருவரையும் சாப்பிட அழைத்தார்கள்.பந்தியில், அருகருகே இரு ஜோடியும் சாப்பிட அமர்ந்தார்கள்.

அர்ஜுன் இலையை விட்டு பார்வையை திருப்பாமல் கடமை வீரனாக சாப்பிட்டான்.

'சாப்பாட்டயே கண்ணுல பாக்காத மாறி சாப்டுது பாரு,உன் தலைவிதியை யாரு மாத்த முடியும்.நீயும் உன் வேலைய பாரு ஜானு, உனக்கு பிடிச்ச ஐட்டம் எல்லாம் நெறைய இருக்கு.'

என்று மனத்தை தேத்தி கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

பிரியாவும்,விஜயும் பார்வையாலேயே அடுத்தவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு, ரசித்து சாப்பிட்டார்கள்.

கோமதி இடையில் வந்து

"பொண்ணை, இப்போவாச்சும் நல்லா பார்த்துக்க பா, அப்புறம் கல்யாணத்துல பொண்ணு தெரியாம முழிக்க போற"

'இந்தம்மா வேற இடையில, இடையில வந்து காமெடின்் னு மொக்கை போடுது'

ஒரு வழியாய், நிச்சயம் முடிந்தது.கல்யாணத்திற்கு,

நிச்சயத்திற்கும் இரண்டு மாத இடைவெளி இருந்தது.இருவருக்கும், இரண்டு மாதத்தில் படிப்பு முடியவும் ,வரும் முகூர்த்தத்தில் திருமணம் வைப்பதற்கு பேசப்பட்டிருந்தது.

இடையில் புடவை,நகை எடுப்பதற்கு சந்தித்து கொண்டார்கள்.

புடவை கடையில் ,விஜய்க்கு பிடித்த புடவையை கண்களால் கேட்டறிந்து தேர்ந்தெடுத்தாள் பிரியா.

'இதுங்க மட்டும் எப்பிடி கண்ணுலயே பேசிக்குதுங்க. நாமளும் ட்ரை பண்ணுவோம்.'

என்று அர்ஜுனை நிமிர்ந்து பார்த்து ,கழுத்து வலி வந்தது தான் மிச்சம்.அவன் தங்கையின் புறமும் ,விஜயின் புறமும் பார்வையை வைத்திருந்தான்.

'அதானே,இந்த தத்தி கிட்ட கண்ணுல பேசிட்டாலும் விளங்கிடும்.பேசாம நேர்லயே கேட்டுடு'

"இந்த புடவை நல்லா இருக்கா??"
பெரிய மனது பண்ணி பார்வையை திருப்பிய அர்ஜுன்

"கட்டிக்க போறது நீ,என்னை ஏன் கேக்குற"

'நீயும் கட்டிக்குவேணு தான்.. மூஞ்சியை பாரு..உன்னை கேட்டேன் பாரு, என்னை சொல்லணும். ஜடம்,ஜடம்'

என்று மனதுள் அவனை அன்பாக அர்ச்சித்து விட்டு, பிறகு அவன் புறம் திரும்பாமல், கடனே என்று அலமு தேர்ந்தெடுத்த புடவைக்கு தலையாட்டினாள்.

நகை கடையிலும், முன் அனுபவத்தால், அவன் புறம் திரும்பாமல், இவளுக்கு தோணியதை எடுத்தாள்.

அர்ஜுனும், ப்ரியாவுக்கு தேர்ந்தெடுக்க உதவிக் கொண்டிருந்தான்.

'தங்கச்சிக்கு மட்டும் எடுக்க தெரியும்.இத மட்டும் இவனா போட போறான்'.

'.ஏய்!!என்ன நீயும் சராசரி அண்ணி மாறி, நாத்தனார் மேல பொறாமை படுற,அவ உன் தோழி அப்புறம் தான் இந்த உறவு'

மனம் தெளிந்த ஜானு,பிறகு ப்ரியாவிற்கு தேர்ந்தெடுக்க உதவினாள்.

இடையில் அர்ஜுன், இவளிடம் அலைபேசியில் கூட பேச முயற்சிக்காதது, இவளுக்கு வருத்தமாக இருந்தது.

.'சரியான ரூல்ட் ஷீட்' என்று திட்டிக் கொண்டாள்.

நாட்கள் விரைந்து, திருமணமும் முடிந்து, சென்னை வாசமும் ஆரம்பித்து விட்டது.இன்னும் இந்த ஹிட்லர் மனசை புரிஞ்சுக்க முடியலையே.

Flashback எல்லாம் முடிந்து ஜானகி நிகழ்காலத்திற்கு வந்த போது ,மதிய உணவுடன் அர்ஜுன் காலிங் பெல்லை அழுத்திக்கொண்டிருந்தான்.
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்:12

ஜானகியின், சென்னை வாசம் ஆரம்பித்து, ஒரு வாரம் ஆகி இருந்தது.அருகில் உள்ள கடைகள்,கோயில்கள் எல்லாம் அறிமுகப்படுத்தி இருந்தான் அர்ஜுன்.அடிக்கடி வெளியே கூட்டிச் சென்றான்.அவளுக்கு தேவையானதை வாங்கி கொடுத்தான்.அக்கறையாக பார்த்துக்கொண்டான்.

ஆனால் அளவாக பேசினான்.கேட்ட கேள்விக்கு பதில்,தேவையான பேச்சு அவ்ளோ தான்.

நம்ம ஜானகி அதுக்காக, அளவோடு பேசும் ஆளா என்ன??அவன் கேட்டாலும்,கேட்காவிட்டாலும்,

பேசினாலும்,பேசாவிட்டாலும் பேசிக்கொண்டே இருந்தாள். அவளுக்கே வாய் வலிக்கும் வரை.சில நேரம், அவளுக்கு பிரியமான பாடல்கள் மூலம் அவனிடம் பேசுவாள்.

முதலில் அவள் சாதாரணமாக பாடி கொண்டிருக்கிறாள் என்று எண்ணிய அர்ஜுன்,பிறகு தான் அப்பாடலில் தனக்கான செய்தி இருப்பதை தெரிந்துகொண்டான்.

விஜய்க்கு, சென்னையிலேயே ஒரு நல்ல கம்பனியில் வேலை கிடைத்திருந்தது.அதனால் அவனும்,பிரியாவும் சென்னையில் தன் குடித்தனத்தை ஆரம்பித்தார்கள்.

இதில் ஜானகிக்கு மிகவும் சந்தோசம்.அடிக்கடி பிரியாவை சந்திக்கலாம் என்று.
இப்பொழுதெல்லாம் ஜானகிக்கு, ஒரு சந்தேகம் அடிக்கடி தோன்றிக்கொண்டிருந்தது.

தான் பார்க்காத

போதெல்லாம் ,தன் கணவனின் பார்வை தன்னை தொடர்வதாக,தான் இருக்கும் இடத்தில் அவன் அதிகமாக இருப்பதாக.இதை எப்படி உறுதிப்பண்ணுவது என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

அன்று மாலையில் வீடு திரும்பிய அர்ஜுன் கையில், ஒரு பார்சல் இருந்தது.அதை அறைக்குள் வைப்பதும், பின் எடுத்துக்கொண்டு ஹால்ககு வருவதுமாக சுற்றிக்கொண்டிருந்தான்.

'என்ன அது..??பயபுள்ள இப்டி பம்முது'

சிறிது நேரம் கழித்து ,கிச்சேனில் அவனுக்கு டீ போட்டுக்கொண்டிருக்கும் போது, பின்னால் அரவம் உணர்ந்து திரும்பிப்பார்த்தாள்.

அர்ஜுன் தான், தயங்கி கொண்டு நின்றிருந்தான்.
அவன் கையில் இருந்த பார்ஸலை தயக்கத்துடன் நீட்டினான் இவள் புறம்.

'என்ன பார்சல் இது?? பூவும், அல்வாவுமா??அது இப்டி இருக்காதே,இவ்ளோ தயங்கி கொடுக்குராரு'

என்ற யோசனையோடு அந்த பார்ஸலை வாங்கி பிரித்துப் பார்த்தாள்.

உள்ளே பொன்னியின் செல்வன் ஐந்து பாகமும் இருந்தது.கண்கள் ஆச்சர்யத்தில் விரிய அவனை பார்த்தாள். ப்ரியாவோடு ,புத்தக கண்காட்சி செல்லும் போது, தேடி கிடைக்காமல்,எல்லாம் விற்றுவிட்டது என்ற செய்தியால் இரண்டு நாள் புலம்பிக்கொண்டிருத்த புதினம்.

இன்று கையில் கிடைத்தது ஆனந்த அதிர்ச்சி.
'எனக்கு பொன்னியின் செல்வன் பிடிக்கும்னு இவருக்கு எப்படி தெரியும்??'

மனம் ஆயிரம் கேள்வி கேட்டது.

வாய் தானாக
"கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன?"
என்று பாடியது.

அவன் முறைத்த பின் தான், தான் என்ன பாடினோம் என்று புரிந்து ஒரு அசட்டு சிரிப்பை கொடுத்துவிட்டு,

"உன்னை ஒரு, பூ கேட்கவே, ஓடி வந்தேன் இங்கே,
பூந்தோட்டமே சொந்தம் என்றால் ,நான் போவது எங்கே"என்று பாடினாள்.

அவள் பாடலினாலும், அவனது பரிசாலும், முகத்தில் தோன்றிய வெட்கத்தை மறைக்கும் முயற்சியில் ஹால்ககு சென்றான்.

என்ன மறைத்தும், அவன் முகத்தின் சிவப்பு அதை காட்டி கொடுத்தது.அவன் பின்னோடு சென்ற ஜானு,அவனின் வெட்கம் பார்த்து
'ஆண்களின் வெட்கமும் அழகு தான்'என்று நினைத்தாள்.

அவன் எதிரே வந்து, சற்று எம்பி, அவன் முகத்தை பிடித்து, அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.அவன் அதிர்ச்சி பார்த்து ,அவன் சுதாரிக்கும் முன் கிச்சேனுள் ஓடி மறைந்தாள்.

செய்யும் போது ,உண்டாகாத வெட்கம் இப்போது தோன்றி அவளை சிவக்க வைத்தது.
சிறிது நேரம் வரை கிச்சேனை விட்டு வெளியே வரவில்லை.இப்போது அவனது பார்வைக்கான அர்த்தம் புரிந்தது.

'இது தான் கணவன் பார்வை என்பதா??'

அவர்களது இரவு உணவு நேரம் ,வழக்கத்திற்கு மாறாக அமைதியில் கழிந்தது.அவன் முகத்தை ஓர பார்வையில் பார்த்தாள். அவனும் அடிக்கடி அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

இருவரின் பார்வையும் சந்தித்து கொண்ட போது இருவரும் தலைகுனிந்து கொண்டார்கள்.

உணவு முடித்து ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனிடம் பாலை கொடுத்துவிட்டு அருகில் இருந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்துகொண்டாள்.

அவன், இவள் பார்த்துக்கொண்டிருப்பதை அறிந்து தொலைக்காட்சியை விட்டு பார்வையை திருப்பவில்லை. அவன் செய்கை இவளுக்கு சிரிப்பை வரவழைத்தது.

அவனை வம்பிழுத்தால் என்ன என்று தோன்றியது.

"இன்னும் பார்த்துக்கொண்டிருந்தாள் என்னாவது,
இந்த பார்வைக்கு தானா பெண்ணானது,
நான் கேட்டதை தருவாய் இன்றாவது" என்று பாடினாள்.

இவள் பாடலினால், இவள் புறம் அவன் பார்வை திரும்பியது.

"என்ன பார்வை உந்தன் பார்வை இடை மெலிந்தாள் இந்த பாவை"-இது அடுத்து.

இப்பொழுது அவன் தனது சிரிப்பை வாய்க்குள் அடக்கி இவளை பார்த்தான்.அவன் கண்கள், அவன் சிரிப்பை காட்டி கொடுத்தது.

'ஹப்பா…அந்நியன்கு கோவம் வரல..இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணா ரெமோ ஆக்கிடலாம்'

"பொன்னி, பொன்னி நதி நீராட வரணும்!!
என்னை,என்னை நிதம் நீ ஆள வரணும்!!
பெண் மனசு காணாத, இந்திர ஜாலத்தை,
அள்ளி தர, தானாக வந்து விடு.
என் உயிரை தீயாக்கும் ,மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம் ,காப்பாற்றி தந்து விடு
அன்பே ஓடி வா.. அன்பால் கூட வா..
ஓ..பைங்கிளி."
அவள் படி முடித்ததும், அர்ஜுன் வேகமாக எழுந்து படுக்கை அறைக்கு சென்றுவிட்டான்.

'என்ன,பயபுள்ள தெரிச்சு ஓடுது,அவ்ளோ மோசமாவா பாடுனோம்??'

சிறிது நேரம் கழித்து கிச்சேனில், எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்திவிட்டு படுக்கையறையுள் நுழைந்தாள்.

அங்கு அர்ஜுன் இல்லை.

'எங்க போயிட்டாரு இவரு??என்று யோசித்து திரும்பயில் அர்ஜுனின் இறுகிய அணைப்பில் இருந்தாள்.

ஒரு நிமிடம் பயந்தவள்,பின் அவன் தான், என்று உணர்ந்து அமைதியாய் நின்றாள்.

"எப்டிடி??இப்டி சிட்டுவஷன் பாட்டா எடுத்து விடுற??"

அவன் குரலில் சிரிப்பு கலந்த கேலி இருந்தது.

"ஹ்ம்ம்..இதுக்குன்னு ரெண்டு வருஷம் டியூஷன் போனேன்".

"உனக்கு substitute எஹ் கிடையாது டி, நீ ஒரிஜினல் பீஸ்"

அவனது கேலியில் உண்டான சிரிப்பை மறைத்து கொண்டு அவனை முறைத்தாள்.

"என்ன நக்கலா??"

அவள் பார்வையில் அர்ஜுன் பிளாட். அப்புறம் எங்க?? அவ கேள்வியெல்லாம் கவனிச்சு பதில் சொல்லுறது.

அவளும் பதில் தெரியவா கேள்வி கேட்டா??

அவளுள் அவனும்,அவனுள் அவளும் கரைந்தார்கள்.அந்த அழகிய சங்கமத்துள் நல்லறமாய், இல்லறம் உருவானது.

"இரவுகள் முழுவதும் தலைவன் மடி,
இனிமைகள், இணைந்தபடி!!
உறவுகள்,உணர்வுகள் உயர்ந்தபடி,
உடல் அது, நனைந்தபடி!!
வார்த்தையில் கூடிய வாசனையே!!
வந்தணை, உந்துணை எந்தனையே!!
வாடாத ஒரு வாலிபம்,வாலிபம் வாசலில்
வந்தபடி!! வரம் கொடுத்தது
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்:13

நாட்கள் அதன் போக்கில் சென்றது.ஜானகி அடிக்கடி ப்ரியாவை பார்க்க சென்றாள். அவள் எப்போவாவது, இங்கு வந்தாள்.

அன்று ஜானகி,ப்ரியாவின் வீட்டுக்கு சென்றாள். கதவை திறந்த ப்ரியாவின் முகம் பொலிவிழந்து காணப்பட்டது.

"என்னடி அண்ணி, முகத்துல பியூஸ் போய் இருக்கு??என்னாச்சு??"என்றாள்.

அதற்கு பதில் ஏதும் கூறாமல் உச்சுகொட்டினால் பிரியா.

"காதல் மணம் புரிந்து ரெண்டு மாதத்திலேயே, வாழ்கை கசந்துடுச்சா??என்னே!! உங்கள் தெய்வீக காதல்".

"ச்சு..கிண்டல் பண்ணாதடி."

"சரி சொல்லு என்னாச்சு??"

"எங்க மாமியாருக்கு, நான் விஜயை பேர் சொல்லி கூப்பிடறது பிடிக்கல டி. எப்போ பாரு ,எதாவது குறை சொல்லிட்டே இருக்காங்க"

"அப்போ கூப்பிடாத,அது உங்களுக்கான ஸ்பெஷல் அழைப்பு,தனியா கூப்டுக்க. இதுல என்ன பிரச்சனை உனக்கு??எந்த அம்மாக்கும், அவங்க முன்ன மகனை பேர் சொல்லி கூப்பிட்டா பிடிக்காது.நான் உங்க அண்ணாவை பேர் சொல்லியா கூப்பிடுறேன்??இத்தனைக்கும் நாங்க லவ் marriage வேற!!"

பிரியா அவளை முறைத்துவிட்டு,
"இந்த விஜய் முன்ன மாறி இல்லடி,எங்கிட்ட ஒரு மாறி பேசுறாங்க ,அவங்க அம்மா இருக்கும் போது வேறு மாறி பேசுறாங்க.நான் சொல்லுறது சரினு சொல்லிட்டு ,அவங்க அம்மா இருக்கையில் அப்டியே மாத்தி பேசுறாங்க.சரியான அம்மா புள்ள.எரிச்சலா வருது டி".

"அவங்க அம்மா பத்தி தான் முன்னவே உனக்கு தெரியும்ல,அப்புறம் என்ன??"

"என் பக்கம் நியாயம் இருந்தா, எனக்கு தானே சப்போர்ட் பண்ணனும், அவரு.எப்படி அவங்க அம்மா சொல்லுறது சரீங்களாம்"

"என்னடி, இது குடும்பமா,கோர்ட் அஹ்??,உன் நியாயத்துக்கு சப்போர்ட் பண்ண.நீ ஒன்னு புரிஞ்சுக்கணும் பிரியா,குடும்பத்துல நியாயத்துக்கு வேலை இல்ல,அன்பு,பாசம்,அக்கறை,விட்டுக்கொடுக்குறது, மன்னிக்குறது,மதிச்சு நடக்குறது,பரஸ்பரம் புரிதல்,காதல் இதுக்கு தான் முக்கியத்துவம்.
இது ,ஒரு பக்கம் இருந்து வந்தா தான் பிரச்சனை,ரெண்டு பக்கமும் இருந்தா அதை விட வேற என்ன வேணும்??"

அவள் முகம் இன்னும் தெளியாததை கண்டு
"சரி சொல்லு, நான் சொன்னது எதாவது விஜய் அண்ணா கிட்ட இல்லியா??"

"அதெல்லாம் நல்லா தான் பாத்துக்குறார். அம்மா னு வந்துட்டா என்னை மறந்துடுறார்."

"திரும்ப அந்த பாயிண்ட்கே வர பார்த்தியா??நீயேன் அவங்கள போட்டியாவே பாக்குற??பொதுவாவே அம்மாக்களுக்கே, ஒரு பயம் இருக்கும் தன் மருமக ,தன் பிள்ளையை, தன் கிட்ட இருந்து பிரிச்சுடுவாளோன்னு, அதுனால நியாயம்,அநியாயம் எல்லாம் பாக்க மாட்டாங்க.மருமக மேல நம்பிக்கை வர வரை.அப்டி தான் நடத்துக்குவாங்க. உன் மாமியார் கொஞ்சம், இதெல்லாம் அதிகம் உள்ளவங்க தெரியாதா??"

"நாளைக்கே நான் வேண்டாம் விட்டுடுனு சொன்னா, விட்டுடுவாரா??"

"அப்படி விடுறவர்,எதுக்கு உன்னை காதலிச்சு கல்யாணம் பண்ணனும்??அம்மா பிள்ளை, அம்மாக்கு பயந்து, அவங்க சொல்லுற பொண்ண தானே பண்ணனும். இதுலயே அண்ணா மனசு புரியலியா??"

"அவரெங்க முயற்சி பண்ணார்??நானும், நீயும் தான் பண்ணோம்."

"சரி,நம்ம பண்ணோம்,இல்லாட்டி அண்ணா, அவங்க அம்மா சொன்ன பொண்ணை கட்டிக்குவாருன்னு நினைக்குரியா?"

ப்ரியாவிடம் பதில் இல்லை.அவள் குழப்பத்தில் இருப்பதை அவள் முகம் காட்டி கொடுத்தது.

"அவருக்கு,அவங்க அம்மா மேல மரியாதை,மதிப்பு ஜாஸ்தி,உன் மேல காதலும் ஜாஸ்தி, அதுனால தான் உன்னையும் விட முடியாம, அம்மா மனசும் நோகாம,உன்னை கல்யாணம் பண்ண கிடைச்ச வாய்ப்பை உபயோகப்படுத்திக்கிட்டார்."

"கூட இருந்து பார்த்த எனக்கே அவர் பாசம் புரியுது.இத்தனை வருசமா அவரை விரும்புற உனக்கு இது புரியலியா??காதலுக்கு கண் இல்லைங்குறது உண்மை தான் போல.காதலிக்கும் போது நல்ல விஷயம் மட்டும் தெரியுது.கல்யாணம் முடிஞ்சதும் ஆயிரம் கண் வந்து லட்சம் குறை தெரியுது."

"சரி ,ஒன்னு சொல்லு,இப்போ உங்க அம்மா இருந்து,அவங்களுக்கும் ,எனக்கும் சண்டை வந்தா, நீ யாருக்கு சப்போர்ட் பண்ணுவ??"

ஒரு நிமிடம் முழித்த பிரியா,
"உனக்கு தான் டி"

"ஏய்,இந்த கதை தானே வேண்டாங்குறது.உனக்கும் யார் பக்கம் நிக்குறதுன்னு தெரியாது.உங்க அம்மா, நீ பார்த்த பொண்ணு தானேனு உன்னை திட்ட,நீ வேற வழி இல்லாம,நியாயம் யார் பக்கம்னு ஆராயாம.உங்க அம்மாவ சப்போர்ட் பண்ணுவா.அது nature.. அப்புறம் கூட என்னை சமாதானபடுத்தலாம்.ஏன்னா நான் உன் friend. எப்போ சொன்னாலும் புரிஞ்சுக்குவேன்னு நம்பிக்கை இருக்கும்.உங்க அம்மாகு அப்டி புரிய வைக்க முடியாது.ஏன்னா, ஒன்னு ஜெனெரேஷன் gap, இன்னொன்னு ஈகோ,நேத்து வந்த ஒருத்தி என்னை விட என் பிள்ளைக்கு பெரிசா போய்ட்டாள்னு அவங்க மனசுல ஆழமா விதை விழுந்தா அதை அவ்ளோ சீக்கிரம் எடுக்க முடியாது."

"ஒரு தடவையாவது அவர் எனக்கு ஆதரவா பேசனும்னு நான் எதிர் பார்க்க கூடாதா??"

"கூடாதுனு,நான் சொல்லல,ஆண்களுக்கு உண்டான தேசிய பிரச்சனை இது.யாருக்கு சப்போர்ட் பண்ணாலும்,கெட்ட பேர் அவங்களுக்கு தான். ஒரு நூல் அளவு, இந்த பக்கம் பேசுனாலும்,அந்தப்பக்கம் பேசுனாலும்,அவங்கள நல்லவங்கன்னு யாரும் சொல்ல மாட்டாங்க.நியாயமா பேசிட்டனு பாராட்ட மாட்டாங்க.அதுனால தான், பல ஆம்பளைங்க மாட்டிக்கிட்டு முழிக்குறாங்க.சமநிலையா ரெண்டு பக்கமும் நடக்குறது அவங்களுக்கு கஷ்டம்."

"அம்மாவுக்காக மனைவியை கொடுமை படுத்துபவன் பழைய மிருகம்,மனைவிக்காக அம்மாவை கொடுமை படுத்துபவன் புது மிருகம்னு எதிலோ படிச்சேன்."

"உனக்கு நான் வேணுமா,அம்மா வேணுமானு அவங்களுக்கு option எஹ் கொடுக்காதிங்க.அவங்க யாரை விட்டாலும் கஷ்டம் அவங்களுக்கு மட்டுமில்ல, உங்களுக்கும் தான்,ஊர் தப்பா பேச நீங்களே வாய்ப்பு கொடுக்காதீங்க. அவரென்ன பொருளா??உனக்கு எனக்குன்னு உன் மாமியாரும்,நீயும் போட்டி போட.அவருக்கும் உணர்ச்சி இருக்கு.நாளைக்கு உன் குழந்தை மேல, உனக்கு உரிமை அதிகமா,அவருக்காணு கேக்குறது எவ்ளோ முட்டாள் தனமோ,அவ்ளோ முட்டாள்தனம்,உங்க உரிமை போராட்டமும்.ரெண்டு கண்ணுல எது முக்கியம்னு கேக்குற மாறி விஷயம் இது."

பிரியா சற்று தெளிந்தாள்.

"ச்செய், என்னை இவ்ளோ செண்டிமெண்ட் அஹ் பேச வச்சுட்டியே டி, நிறைய அறிவுரை வேற சொல்லிட்டேன்.எனக்கே போர் அடிக்குது போ."

"தேங்க்ஸ் டி"

"என்ன இவ்ளோ போர்மல் அஹ் பேசுற??அப்போ முழுசா தெளியல, சொல்லு இன்னும் என்ன பிரச்சனை??"

"ஹ்ம்ம்..அது ஒரு வாரமா, அவரோட பேசல.அதான் இப்போ எப்படி பேசுறதுன்னு…"

"வாயால தான்…"

"ச்சு…கடிக்காத டி"

"புருஷன், பொண்டாட்டிகுள்ள வரகூடாத முக்கியமான விஷயம் ஈகோ தாண்டி, அது வந்தா அத கோ,கோ னு விரட்டிடனும்."

"ஹ்ம்ம்.."

"என்ன,ஹ்ம்ம்..பேசாம விஜய் அண்ணா வந்ததும் ஒரு உம்மா கொடுத்துடு, பிரோப்ளேம் solve.. explanation கூட சொல்ல தேவை இல்லை."

"என்ன உம்மா வா??அதுவும் நானே எப்படி குடுக்குறது??"

"இதுக்கெல்லாம்,ஆள் ரெடி பண்ண முடியுமா??நீ தான் கொடுக்கணும்"
அவளை முறைத்து விட்டு, இவள் அமைதியாக இருந்தாள்.

"இதுல என்ன தயக்கம் உனக்கு??நம்ம கவிஞர் எஹ் சொல்லி இருக்காரே,
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்கு பெருமை"என்று பாடினாள்.

"ஏய்,நல்லா இருக்கு டி பாட்டு,என்ன பாட்டு டி"

"அங்கே மாலை மயக்கம் யாருக்காக,
இங்கே மயங்கும், இரண்டு பேருக்காக,
இது நாளை வரும் என்று காத்திருந்தாள் ,
ஒரு நாள் அல்லவோ வீணாகும்!!!"

"செம்ம டி, இப்டி பாட்டெல்லாம் எங்க பிடிகிறியோ!!இவரும் இப்டி தான் அடிக்கடி பாடுவார்"

"என்ன,பாடுனார் அண்ணா??"

"பிரியா..பிரியா..ஓ..பிரியா..பிரியா..பிரியா..என் பிரியானு"

"அப்டி போடு..அண்ணாகுள்ளயும் ஒரு ரெமோ ஒளிஞ்சிருக்காருன்னு சொல்லு"

இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் அர்ஜுனிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது ஜானகிக்கு.
"எங்க இருக்க??"

"பிரியா வீட்டுல தான்"

"சரி,அங்கேயே இரு,நான் வந்து கூட்டிட்டு வரேன்"

"ஹ்ம்ம்..சரி"

"என்னடி,யோசிக்குற??"

"ஹ்ம்ம்..உங்க அண்ணா குரலுலா ஒரு சந்தோசம் தெரிஞ்சுது,அதான் என்னனு?? யோசிக்குறேன்"

"பரவால்ல,அண்ணா குரல் வச்சே கண்டுபிடிக்குற"

"நாங்க லவ் marriage இல்லியா??அப்டி தான் இருப்போம்"

"உன்னை.."என்று அடிக்க கை ஓங்கி அவளை அணைத்து கொண்டாள் பிரியா.

சிறிது நேரத்தில் வந்த அர்ஜுன் கையிலிருந்த ஸ்வீட் boxல் இருந்த இனிப்பை ஜானகிக்கும், ப்ரியாவிற்கு ஊட்டி விட்டான்.அவன் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது.
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
"என்ன அண்ணா,எதுவும் ஹாப்பி நியூஸ் அஹ்?? Jk சொல்லவே இல்லியே."

"ஏய்,உதை வாங்க போற"
என்று சொல்லிய ஜானு அழகாக வெட்கபட்டாள்.

அதை பார்த்து சிரித்துவிட்டு அர்ஜுன்,
"நம்ம ப்ரொபெர்ட்டி ஒன்னு, ரெம்ப நாள் பிரோப்ளேம்ல இருந்துதுல, அது நம்ம பக்கம் தீர்பாயிருச்சு மா"

"ஓ,வாவ்!!சூப்பர் ணா, எவ்ளோ நாளா நடந்துச்சு அந்த கேஸ்,ஒரு வழியா முடிஞ்சுது"

"ஆமாம்,மா 15 வருசமா நடந்தது இன்னிக்கு தான் நல்லபடியா முடிஞ்சுருக்கு."

அவர்கள் அப்பா வாங்கி போட்ட சொத்து, வாடகைக்கு விட்டிருந்தார்கள்.அதில் கடை வைத்திருந்தவர்,அது முக்கியமான ஏரியா,நல்ல சொத்து என்று காலி பண்ண மறுத்து.

பல வருடங்களாக இருந்து வருவதால்,தங்களுக்கே சொந்தம் என்று பிரச்சனை செய்துகொண்டிருந்தார். அவர்கள் பெற்றோர் உயிருடன் இருந்த போதே ஆரம்பித்த வழக்கு,இன்று தான் முடிவடைந்தது.அந்த சொத்தின் மதிப்பு தற்போது 2கோடி.இது எதுவும் ஜானகிக்கு தெரியாது.

"என்ன,வழக்கு??"

"நம்ம இடம் ஒன்னு ,வாடகைக்கு விட்டருந்தோம் அவங்க காலி பண்ணமாட்டோம்னு பிரச்சனை பண்ணாங்க. அப்பா வழக்கு போட்டு இப்போ தான் தீர்பாயிருக்கு"

"எல்லாம் Jk வந்த ராசி தான் இல்ல ணா??"

"ஏண்டி,அந்த வழக்கு 15 வருசமா நடக்குது.இதுக்கு எனக்கு தூக்கி ஐஸ் வைக்குற.போடி ,எல்லாம் நேரம் வந்தா தானா நடக்கும்"

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது விஜயும் வந்துவிட்டான்.

"வாங்க அர்ஜுன்,வாம்மா மின்னல்".

"என்ன மின்னலா??"

"ஆமா,மின்னல் மாறி சரக்குன்னு வந்துட்டு,நான் வீட்டுக்கு வரத்துக்குள்ள போய்டுற, அப்புறம் எப்படி கூப்பிடுறது??"

"ஹ்ம்ம்..இங்கேயே உக்காந்திருந்தா, என்ற வீட்டுகாரர யார் பாத்துக்குறது??"

"அடேங்கப்பா,இவ்ளோ நாள் யாரு பாத்துகிட்டாங்களாம்??"

"அது நான் வாரத்துக்கு முன்ன, நான் வந்தபுறம், இவர் என் பொறுப்பு.இவர் மட்டுமில்ல ,பிரியாவும் என் பொறுப்பு தான். அவ கண்ணுல ஆனந்த கண்ணீர் கூட நான் பார்க்க கூடாது.அவளை ஒழுங்கா பார்த்துக்கோங்க. அப்புறம் வச்சு செஞ்சுருவேனாக்கும்"

என்ன இவ இப்படி பேசுறா, விஜய் ஏதும் தப்பா எடுத்துக்க போறார்,என்று விஜயின் முகத்தை பார்த்தான் அர்ஜுன்.அங்கு ஏதும் மாற்றம் இல்லை. மெல்லிய நகை மட்டுமே இருந்தது.

"ஏம்மா பரதேவதை,நான் உன் அண்ணா மா,எனக்கு தான் நீ முதல்ல சப்போர்ட் பண்ணனும்."

"அவ எனக்கு தோழி,தோழிக்கு அப்புறம் தான் அண்ணனெல்லாம்"

அவள் மூலமாக தான் எனக்கு உன்னையும், உன் குடும்பத்தையும் தெரியும்.எனவே நீங்க தூரத்து உறவென்றாலும்,அவள் தான் எனக்கு முதலிடம் என்று சொல்லாமல் சொன்னாள்.

அது புரிந்த விஜயும் சிரித்து கொண்டு,
"உன் தோழி வெங்காயம் கூட உரிக்காம பாத்துக்குறேன் போதுமா??என்றான்.

"ஹ்ம்ம்..அது,அந்த பயம் இருக்கனும்."

இவள் பேசுவது விஜய்க்கு பழக்கம் தான், ப்ரியாவுடன், அவளை முதன்முதலில் பார்த்தபோதிலிருந்தே அவளை பற்றி தெரியும்.அவள் தூரத்து உறவென்று ஆனதும், அவள் வீட்டுக்கு சென்று வருவது சகஜம் ஆனா பின்பு ,இன்னும் நன்றாக தெரியும்.அவள் கூறுவதை எப்போதும் தவறாக எடுத்துக் கொள்ளமட்டான்.

அர்ஜுனுக்கு மட்டுமே அவள் குணம் புதிது.
ப்ரியாவிற்கு புரிந்தது.தனக்காக தான் தோழி இவ்வாறு பேசுகிறாள் என்று.தன்னிடம் விஜய்க்கு ஆதரவாக பேசிவிட்டு,தன்னை விட்டுக்கொடுக்காமல் ,தன் கணவனிடம் பேசுகிறாள்.விஜயை பற்றியும்,அவன் தாயார் பற்றியும் இவள் கூறியதை நேரடியாக கேட்காமல்,பிரியா குறை கூறியதை சொல்லாமல், அதே நேரத்தில் உன் மனைவியை, நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக உணர்த்திய தோழியை நினைத்து பெருமையையாயிருந்தது.

பின் ப்ரியாவிடமும் தனிமையில்,
"நீ சந்தோசமா இருந்தா தான், உன் அண்ணாவும் நிம்மதியா இருப்பாங்க.உன் முகத்துல மாற்றம் தெரிஞ்சது.நாம செஞ்சுவச்ச கல்யாணம், தங்கச்சிக்கு பிரச்சனையா இருக்குனு கவலை படுவாங்க."

"நீ எனக்காக இவ்ளோ நேரம் பேசுறேன்னு பார்த்தேன்.இப்போ தானே தெரியுது,உன்ற வூட்டுக்காரர்காக பேசுறேன்னு"

"ஏய்…."

"சும்மா சொன்னேன் டி, உன்னை பத்தி எனக்கு தெரியாதா??கவலைபடாத நான் நல்லபடியா இருப்பேன்"

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அர்ஜுனும்,ஜானுவும் விடை பெற்றார்கள்.

மனைவியின் முகம் மலர்ந்திருப்பதை பார்த்த விஜய்க்கு,சமாதானமாகிவிட்டாள் என்று புரிந்தது.

"காலம் மாறலாம்,நம் காதல் மாறுமா??
தடைகள் தோன்றும் போதும்,
தலைவி பார்வை போதும்"என்று பாடினான், அவள் பதிலை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தோடு.

அவனை நோக்கி காதல் பார்வை வீசிய பிரியா,
"வா வா வா வானம் இங்கு தூரமில்லை
மனதுக்குள், உன்னையன்றி யாருமில்லை"
என்று பதில் கொடுத்து அவனுக்கு தான் சளைத்தவளில்லை என்று நிரூபித்தாள்.

அவளின் சம்மதம் உணர்ந்து ,மென்னகையுடன் அவளை நெருங்கினான் விஜய்.

வாழ்கை அதன் போக்கில் சென்றது, எவ்வித மாறுப்பாடுமின்றி.
அதெப்படி அமைதியாக செல்லலாம்,

நாங்கள் இருக்கும் போது என்று நினைத்த விதி, அர்ஜுனின் அத்தையையும்,அத்தை மகள் ரத்தினத்தையும் ,அர்ஜுனின் வீட்டிற்கு அனுப்பி வைத்தது.

ப்ரியாவின் வீட்டிற்கு சென்று வந்து 10 தினங்கள் கழித்து, அர்ஜுனின் அத்தை மஹாதேவியும்,அவள் அருமை புதல்வி மஹிஷாவுன் பெட்டி, படுகையுடன் இல்லை,இல்லை பெட்டியுடன் அவன் இல்லத்தில் அடி எடுத்து வைத்தார்கள்.
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்-15

அர்ஜுனின், அப்பாவுடன் உடன் பிறந்தவர் ஒரே தங்கை மட்டுமே.அவர் பேர் மகாதேவி.அர்ஜுனின் பெற்றோர்கள் இருந்தவரை, அண்ணா,அண்ணி என்று உறவு கொண்டாடியவர்.அவர்களுக்கு பின் பிள்ளைகள் பொறுப்பு தன்னை சேர்ந்து விடுமோ என்று காரணங்கள் கூறி விலகி சென்றவர்.

அர்ஜுன் தன் திருமணத்திற்கும்,ப்ரியாவின் திருமணத்திற்கும் அழைத்த போது தான் திரும்ப வந்தார்.

அண்ணனின் சொத்துக்களை பற்றி முழுதும் அறியாதவர்.பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு தன்னை சேர்ந்துவிடும் என்று பொறுப்பை தட்டிக்கழித்தவர்.

திருமணத்தின் போது தான் அர்ஜுனின் நிலை பற்றி சிறிது தெரிந்து கொண்டார்.நல்ல வேலை,சொந்தமாக ஒரு அபார்ட்மெண்ட் வீடு சென்னையில், என்று மட்டும் தெரிந்து கொண்டவர்.

இப்பொழுது தான் அவனின் முழுச்சொத்து விபரமும் தெரிந்து கொண்டார்.அவன் வக்கீல் மூலம்.அவன் பக்கம் தற்போது தீர்ப்பான சொத்து வரை.

அவர் கணவர் அமுதன்.அரசாங்க உத்தியோகத்தில் இருந்து சில வருடங்கள் முன்பு தான் ஓய்வு பெற்றார்.அவர்களுக்கு இரு மகள்கள்.மூத்தவள் மாலதி,இளையவள் மஹிஷா.

கணவர் பணியில் இருக்கும் போதே தன் மூத்த மகளுக்கு ஒரு பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்த்து மணமுடித்து வைத்தார்.மாப்பிள்ளையின் வியாபாரம் சில மாதங்களாக பிரச்னையில் இருக்கவே,மகள் அடிக்கடி இங்கு வந்து பணம் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டது.

திருமணத்தின் போதே பெரிய இடம் என்று முழு சேமிப்பையும் போட்டே கல்யாணம் முடித்திருந்தார்.அதன் பின் மகளின் பிரசவம்,வளைகாப்பு என்று தகுதிக்கு மீறி செலவு செய்து அனைத்தையும் செய்தார். இவர்களே கொடுத்த நிலை மாறி இப்பொது மகளின் கணவரும்,மாமியாரும் அடிக்கடி அவளை அனுப்பி வாங்கி வர சொல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது.

பெரிய இடம் என்று போனது, இப்போது இவர்களுக்கே தொல்லை ஆகி போனது.
கணவனின் பணி ஓய்வுக்கு பின் ,சொந்த கிராமத்தில் குடியேறியவர்.அங்கு தான் அர்ஜுனின் வழக்கை வாதாடிய வக்கிலை சந்தித்தார்.

அவரும் அர்ஜுனின் அத்தை தானே என்று, வழக்கு முதல் அவன் சொத்துக்கள் அனைத்தின் புள்ளி விவரங்களையும் தெரிவித்தார்.

அதை கேட்டதும் ,அவருக்கு உருவான திட்டம் தான், தன் மகள் மஹிஷாவை அர்ஜுனுக்கு மணமுடித்தால், அவனின் சொத்துக்கள் அனைத்திற்கும் உரிமைக்காரி ஆகி விடலாம் என்று.

அவர் கணவன் அமுதனுக்கு இதில்லெல்லாம் விருப்பமில்லை.ஆனால் அவர் மனைவியின் வார்த்தைக்கு அடங்கியவர்.அவரின் மூத்த மகளும் சொல்லி பார்த்தாள்.

உன் கணவன் மாறி மாப்பிள்ளை கிடைத்தால் இப்படி தான் செய்யவேண்டும் என்று அவள் வாயையும் அடைத்துவிட்டாள்.

மஹிஷாவுன் கொஞ்சம் முரண்டினாள். இரண்டாம் தாரமா என்று.அவள் குணத்தில் மஹாதேவியை போல.எனவே அர்ஜுனின் சொத்துக்களை பற்றி கூறி சம்மதிக்க வைத்துவிட்டாள்.

அவருக்கு தான் ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதே என்றவளையும்,
"அவளை பார்த்தால் அப்பாவி போல இருக்கு.கல்யாணத்துலயே பயந்து போய் உக்காந்திருந்தா,அவளை விரட்டி விட்டுறலாம்" என்று அதையும்,இதையும் கூறி அவளை சம்மதிக்க வைத்து கூட்டி வந்திருந்தாள்.

சொல்லாமல் திடீரென்று கிளம்பி வந்திருந்த அத்தையையும், அவர் மகளையும் கண்ட அர்ஜுன் அவர்களை முறையாக வரவேற்றான்.

ப்ரியாவின் மூலம் அத்தையை பற்றி ஓரளவுக்கு அறிந்து வைத்திருந்த ஜானகியும் விருந்தோம்பளில் குறை இல்லாமல் வரவேற்றாள்.

அவளுக்கு முதலில் கண்ணில் பட்டது மஹிஷாவின் உடையும், அலங்காரமும் தான்.கொஞ்சம் அதிக மேக்கப் போட்டிருந்தாள்.

'முகத்துக்கு ரெண்டு கோட் அடித்திருப்பாள் போல,பொங்கலுக்கு வெள்ளை அடிச்ச மாறி இருக்கு.தூங்கையில கூட மேக்கப் போட தான் தூங்குவா போல.'

ஸிரோ சைஸ் என்பார்களே அப்படி இருந்தவளின் ஆடை அரையும் ,குறையுமாய் இருந்தது. கிழிந்து போன ஜீன்ஸ்சும்,கை இல்லாத டாப்ஸ்சும் போட்டிருந்தவளை பார்த்து.
'பாவம்,ரெம்ப கஷ்டப்படுறாங்க போல,இவர்ட்ட சொல்லி ஒரு நல்ல துணி எடுத்து கொடுக்க சொல்லணும்.

இல்லாதவங்க இப்படி துணி போட்டா பிச்சைக்காரங்களாம்,

இருக்கவங்க போட்டா மாடர்ன் டிரஸ்சாம்,பேஷன்னாம்.என்ன கொடுமை சரவணன் இது.'
இவ்வாறு மனதுக்குள் நினைத்துகொண்டிருக்கும் போது மஹாதேவியின் குரல் அவள் எண்ணத்தை கலைத்தது.

"தம்பி,ராசா, இப்படி இளச்சுட்டியே பா. ஒழுங்கா சாப்புடறது இல்லியா??"
வந்த உடனேயே தன் வேலையை ஆரம்பித்தார்.

'எங்க கல்யாணத்துல தான் ரெம்ப வருஷம் கழிச்சு அவர பார்த்தாங்க.என்னமோ காலம்காலமா கூட இருந்து வளர்த்த மாறி கரிசனம் வேற'

"ஏம்மா,உனக்கு சமைக்க தெரியுமா??ஹ்ம்ம்..இந்த கால பொண்ணுங்களுக்கு எங்க அதெல்லாம் தெரியுது.அதான் பிள்ளையை பார்த்தாலே தெரியுதே..இப்படி இளச்சு போச்சு."என்று அங்கலாய்த்தார்.

"ஏன் அத்தை, உங்க பொண்ணுக்கு சமையல் தெரியாதா?? சொல்லி தரலியா??. ஆனா எங்க அம்மா எனக்கு சொல்லி தந்துருக்காங்க. நான் வேணா உங்க பொண்ணுக்கு சொல்லி தரேன்."

உன் மகளும் இந்த கால பெண் தான் என்று சொல்லாமல் சொன்னாள்.

'இந்த பொண்ணை பத்தி தப்பா இடை போட்டுட்டோமோ??எப்படி இருந்தா என்ன??நாமா நினைச்சதை முடிக்காம போகக்கூடாது'.

"அதெல்லாம் அவ அருமையா சமைப்பா, அவ மீன் குழம்பு வச்சா தெருவே மணக்கும்"என்று ஜானுவிடம் கூறிய மகாதேவி.

"நம்ம மஹிஷாவுக்கு இங்க ஏதோ ஒரு கம்பெனில இன்டெர்வியூ வந்துருக்கு.அதுக்கு போய்ட்டு அவளுக்கு வேலை கிடைச்சதும் ஒரு நல்ல லேடீஸ் ஹாஸ்டல் பார்த்து சேர்த்துவிட்டு அவ சௌரியத்தை பார்த்துகிட்டு போனும்."

ஆக மொத்தம் இங்கிருந்து இப்போது கிளம்பப்போவதில்லை என்று மறைமுகமாக கூறினார்.

"அதுகென்ன அத்தை, தாராளமா எவ்வளவு நாள் வேணாலும் இருந்து , எல்லாம் முடிச்சுக்கிட்டு கிளம்புங்க" என்றான்.

"என்ன கம்பெனி??,எங்க இன்டெர்வியூ??என்ன போஸ்ட்டிங்கு??எந்த ஏரியா??எல்லாம் சொன்னிங்கன்ன இவருக்கு இங்க எல்லா இடமும் தெரியும் இவர் விசாரிச்சு சொல்லுவார்."

அம்மாவுக்கும்,மகளுக்கும் பக் என்று ஆனது. அப்படி ஒரு கம்பெனி இருந்தா தானே சொல்வதற்கு.ஏதாவது சொல்லேன் என்று மகளின் முகம் பார்த்தார் மகா.

"அது என் friend வேலை பாக்குற கம்பெனி தான். நல்ல கம்பெனி.ஒரு பிரச்சனையும் இல்லை."

"ஓ..அப்போ உன் தோழி தங்கி இருக்குற ஹாஸ்டல்ல கூட இடம் பார்க்கலாம்."

"அஹான்.. பார்க்கலாமே..ஆனா இப்போ இடம் இருக்கா தெரியல."

"சரி இன்டெர்வியூ கார்டு கொடு, இவர் கூட்டிட்டு போய் விடுவார்"

"அது,அவ சொன்னதால் கார்டு எதுவும் கொண்டு வரல..அது ஆஃபீஸியல் இன்டெர்வியூ இல்ல..எனக்காக.."

அதற்கு மேல் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் பாதியில் விட்டாள் மஹிஷா.

"உனக்காகவே இன்டெர்வியூ வைக்குற அளவு செல்வாக்குள்ள தோழி.தங்க இடம் பார்க்க மாட்டாளா??இன்டெர்வியூ கூட இல்லாம தேர்ந்தெடுக்க வைக்கலாமே"

"அது ஆபீஸ் ரூல்ஸ் படி நடக்கனுமுள்ள"

'ஆஃபீஸியல் இன்டெர்வியூ இல்லையாம்.இன்டெர்வியூ கார்டு இல்லையாம்.ஆனால் ஆபீஸ் ரூல்ஸ் படி நடக்கும் இன்டெர்வியூவாம்.இதெல்லாம் நம்பும் படியா இருக்கிறது.'

அவர்களை கேள்வியால் இவள் துளைத்தெடுப்பதை பார்த்த அர்ஜுன்,
"அவங்க இப்போ தானே வந்துருக்காங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு,ரெபிரேஷ் ஆகட்டும்.அவங்க சாப்பிட டிபன் ரெடி பண்ணு. அப்புறம் பேசிக்கலாம்."என்று அப்பொழுதைக்கு
அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

அவர்களுக்கு ஒரு அறை ஒதுக்கி தரப்பட்டது.

அறைக்குள் வந்ததும் அறையை தாழ் போட்ட மஹிஷா,

"என்னமா,இவ இவ்ளோ கேள்வி கேக்குறா??கொஞ்ச நேரத்துல படபடனு ஆயிடுச்சு.இவளை எப்படி மா துரத்த போற.எனக்கென்னவோ முடியும்னு தோணால."

"நானும் இவளை அப்பாவினு தான் நெனச்சேன் டி, இவளை குறைச்சு இடை போட்டுட்டேன்.இருந்தாலும் நான் எடுத்த முடிவுல பின் வாங்க போறதில்லை.அவளா, நாமளானு பார்த்துடுவோம்"

நாங்களும் பார்க்க காத்திருக்கிறோம் என்று விதி கைகொட்டி சிரித்தது.
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்-16

மஹாதேவியும்,மஹிஷாவும் அர்ஜுனின் வீட்டிற்கு வந்து பத்து தினங்கள் கடந்திருந்தது.வந்த தினத்திலிருந்து ,அத்தையம்மாவின் அதிகாரம் தூள் பறந்தது.மஹிஷாவும், மஹாவுக்கு குறைந்தவளில்லை என்று நிரூபித்தாள். ஜானகியும் அடங்கி போகவில்லை.பதிலடி கொடுத்துக்கொண்டே தான் இருந்தாள்.

இது எதையும், அர்ஜுனின் காதுக்கு கொண்டு போகாமல் பார்த்துக்கொண்டாள்.

அத்தையம்மாவும்,எந்த விஷயமும் அர்ஜுனின் காதுக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தார்.

வேலை விஷயமாய் வந்தேன் என்றவர்கள்,அதை பற்றி அதன் பிறகு பேசவே இல்லை.இன்டெர்வியூ என்று எங்கும் செல்லவில்லை.சில நேரங்களில் ஜானகி என்பவள் அந்த வீட்டில் இல்லாதது போலவே அம்மாவும்,பெண்ணும் நடந்து கொண்டார்கள்.

அர்ஜுனை விழுந்து விழுந்து கவனித்தார்கள்.
அன்று அப்படி தான் அர்ஜுன் வேலையில் இருந்து வந்து ,அறையில் ரெபிரேஷ் செய்து கொண்டிருந்தான்.

ஜானகி அவனுக்கு டீ தயாரித்துக்கொண்டிருந்தாள். அறையை விட்டு வெளியே வந்த அர்ஜுனை கண்ட மஹிஷா அவனை பல வருடம் கழித்து காண்பவள் போல்
"அத்தான், எப்போ வந்திங்க??என்னை கூப்பிட்டிருக்கலாம்ல.என்ன சாப்புடுறீங்க??என்ன கொண்டு வர??"என்று ஏதோ அவன் விருந்தாளி போலவும்,இவள் வீட்டுக்கு வந்திருப்பது போலவும் உபசரித்தாள்.

இதை, கிச்சேனில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த ஜானகிக்கு எரிச்சலாக வந்தது.

'நானே இவரை அத்தான்னு கூப்பிட்டதில்லை, இவ என்னமோ கட்டிகிட்டவ மாதிரி, நிமிஷத்துக்கு ஒரு முறை அத்தான், அத்தான்னு உருக்குறா'

அவன் பதில் சொல்லும் முன், மஹிஷா, ஜானகி போட்டு கப்பில் ஊற்றி வைத்திருந்த டீயை எடுத்துக்கொண்டு,இல்லை இல்லை தூக்கிக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

அதை அர்ஜுனின் கையில் கொடுத்தாள். ஒரு வாய் அதை பருகிய அர்ஜுன், முகத்தை சுழித்தான்.

"என்னத்தான், டீ நல்லா இல்லியா??"

"சர்க்கரை போடாத டீ யை கொடுத்தா ,அவர் அப்படி தான் முழிப்பாரு. டீ போட்ட எனக்கு கொடுக்க தெரியாதா??அதென்ன மங்கி(monkey) வாழைப்பழத்தை தூக்கிட்டு ஓடுற மாறி டீ யை தூக்கிட்டு ஓடுற"

அவளை குரங்கு என்று சொன்ன கடுப்பில்,

"அத்தான் வந்து எவ்ளோ நேரமாச்சு,கொஞ்சம் கூட பொறுப்பில்லாம ஆடி, அசைஞ்சு மெதுவா டீ போடுற ,அதான் நான் கொண்டுவந்து கொடுத்தேன்."என்று கூறிவிட்டு

ஜானகியின் கையில் இருந்த சர்க்கரை டப்பாவை பிடுங்கி கொண்டுவந்து, அர்ஜுனின் டீயில் 3 ஸ்பூன் சர்க்கரை அள்ளி போட்டாள்.

'அசல் monkey யேதான்'
இன்னும் அதிகமாக அர்ஜுன் முழித்தான்.
"ஏன் அத்தான் பத்தலியா"

"ஆமா,டப்பவோட தூக்கி கொட்டு, அவர் எவ்வளவு போட்டுக்குவார்??,எவ்வளவு வேணும்?? எதுவும் கேட்காம உன் இஷ்டத்துக்கு கொட்டுற. அவர் ஒரு ஸ்பூன் தான் போட்டுக்குவார்."

"ஓ.."என்று முழித்த மஹிஷா

"எனக்கு தெரியாது.நீ சொல்ல வேண்டியது தான"

அவ்வளவு நேரம் இங்கு நடந்ததை பார்த்து கொண்டிருந்த மகாவும்
"ஆமா,சொல்லிக்கொடுத்தா கத்துக்க போறா"என்றார்.

"இதை அவ கத்துக்கவே வேண்டாம்.அவருக்கு என்ன பிடிக்கும்,பிடிக்காதுன்னு எனக்கு தெரியும்.எனக்கு தெரிஞ்சா போதும்.ஏன்னா, நான் தான் அவர் பொண்டாட்டி.இதை நீ கத்துகிட்டு என்ன பண்ண போற??.உனக்கு வரவனுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்கோ.

அவனுக்கும்இப்படி சர்க்கரையை கொட்டி அவனை சுகர் பேசன்ட் ஆக்கிடாத."

இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று நினைத்த மஹாவும்,

"ஏம்மா,இப்படி பேசுற??ஏதோ தெரியாம ஒரு தடவை செஞ்சுட்டா"

"அவரை கவனிச்சுக்க எனக்கு தெரியும்.நான் கவனிச்சுக்கிறேன்.உங்க பொண்ணு வந்த வேலையை மட்டும் பார்த்தா போதும்.ஆமா interview எப்போ??"

"அது,போஸ்ட்போன் ஆயிடுச்சு.இன்போர்ம் பண்ணுறேன்னு சொல்லி இருக்காங்க."

"ஓ..அப்போ அதுக்கு ப்ரீபர் பண்ணு. அதை தவிர வந்ததுல இருந்து வேற எல்லா வேலையும் பாக்குற"

'அவ வந்த வேலையே இதானே'.

அர்ஜுன் இருந்ததால்,அதற்கு மேல் அவர்களால் எதுவும் பேச முடியவில்லை.

வந்ததிலிருந்து ,அது சரி இல்லை.இது சரி இல்லை.வீடு சுத்தமாக இல்லை.பாத்ரூமில் அழுக்காக உள்ளது.சாப்பாட்டில் உப்பில்லை,புளியில்லை என்று குறை பட்டியல் நீண்டு கொண்டே போனது.

இவை அனைத்தும் அர்ஜுன் இல்லாத போது மட்டுமே.இருக்கும் போது மறைமுக தாக்குதல் நடத்துவார்கள்.

"கொஞ்சம் பார்த்து சமைக்க கூடாதாம்மா..பாரு பிள்ளை சரியவே சாப்பிடலை.கொஞ்சம் பாலாவது கொடு "என்று அவள் சமையல் மஹாமோசம் போல் ஒரு தோற்றத்தை மறைமுகமாக ஏற்படுத்துவர்கள்.

"உங்க பொண்ணு, மீன் குழம்பு வச்சா ஊரே மணக்கும்னு சொன்னிங்கள்ள அத்தை. இன்னிக்கு அவளை சமைக்க சொல்லுங்க.நானும் சாப்பிட்டு பார்க்குறேன்.அப்புறம் இவருக்கும் அப்படி சமைச்சு போட்டு, நிறைவா சாப்பிட வைக்குறேன்"என்று கூறிய பின், இந்த மறைமுக தாக்குதல் சற்று குறைந்தது.

பின் மஹிஷா சமைத்து, அந்த கொடுமையை யார் சாப்பிடுவது.அதனால் அமைதி ஆகி விட்டார் மகா.

மஹிஷா,படிப்பு,சமையல் அனைத்திலும் சுமார் ரகம்.ஒரு டிகிரி வாங்கவே ,பல அரியர்களை வாங்கி ,கஷ்டப்பட்டு பாஸ் செய்தவள்.

ஆனால் ஹீரோயின்கள் போல் மேக்கப்,அழகு பராமரிப்பு,உடல் எடை பேணுதல், இவற்றில் ஈடுபாடு அதிகம்.ஸிரோ சைஸ் இருப்பதற்கு அது தான் காரணம்.
நாளுக்கு நாள், ஜானகியின் பொறுமை குறைந்து கொண்டே வந்தது.

கல்யாணம் ஆனா நாளிலிருந்து, அர்ஜுன் கூட, இவள் சமையலில் குறை கூறியதில்லை.நன்றாக இருந்தாலும் பாராட்டமாட்டான். சுமாராக இருந்தாலும் குறை கூற மாட்டான்.இவளே சாப்பிட்டு தான் குறை நிறைகளை கண்டு பிடிப்பாள்.

அவள் பொறுமை எல்லை தாண்டும் நிலையில், பிரியா இவளுக்கு அலைபேசியில் தொடர்புகொண்டாள்.

"ஹலோ அண்ணி"

"என்னடி,அண்ணி அதிசயமா அண்ணினு கூப்புடுற.ஒரே குதூகலமா இருக்க போல"

"ஏன் உனக்கென்ன குறை"

"ஹ்ம்ம்..சீரியல் வில்லிங்க மாறி, வீட்டுலேயே ரெண்டை வச்சுட்டு எப்படி குதூகலமா இருக்கறது"

"என்னடி,அத்தையும், மஹிஷாவும் பிரச்சனை பண்ணுறாங்களா??"

"பிரச்சனை,பண்ணுறாங்களாவா??என்ன பிரச்சனை பண்ணலைன்னு கேளு.அப்போ தான் ஈஸியா பதில் சொல்ல முடியும்.அவங்க பண்ணாத பிரச்சனையே இல்ல.உங்க அம்மா இருந்திருந்தா கூட, இவ்ளோ குறை சொல்லி இருக்க முடியாதுடி. அது சரி இல்லை.இது சரி இல்லைனு,மூச்சு விடாம பேசுதுங்க."

"அண்ணா கிட்ட சொன்னியா??"

"அவரும் தானே பார்க்குராறு,அவரென்ன குழந்தையா??எனக்கு இந்த குறை சொல்றது, கம்பிளைன்ட் பண்ணுறதெல்லாம் பிடிக்காது.எதா இருந்தாலும் நேரடி dealing தான்.இன்டெர்வியூனு வந்தவங்க ,அதை பத்தியே பேசல.இதுல இருந்தே உன் அண்ணா னுக்கு புரியாதா??அவர் தெரிஞ்சுட்டே அமைதியா இருக்கார்.நான் புரிஞ்சுகிட்டு அமைதியா இருக்கேன்."

"என்னடி பண்ணுறது??நான் வேணா அண்ணாகிட்ட பேசி அவங்களை ஊருக்கு அனுப்பவா??"

"அதெல்லாம் தேவையில்லை.அனுப்புறதா இருந்தா இநேரத்துக்கு அனுப்பி இருக்கனும் அவ்ளோ மோசமா நடந்துகிட்டாங்க"

"என்னடி,பண்ணாங்க??"

சில நாட்கள் முன், ஒரு இரவு பொழுது, அனைவரும் இரவு உணவு முடித்து விட்டு, கிச்சேனை ஒழுங்கு படுத்தி விட்டு உறங்க சென்றாள் ஜானகி.

அவள் உறங்க சென்ற சிறிது நேரத்தில் அவர்களின் அறை கதவு பலமாக தட்டபட்டது.அர்ஜுன் கதவை திறந்தான்.

"தம்பி,ராசா நெஞ்செல்லாம் வலிக்குது, படபடனு வருது பா. என் அண்ணன் போன இடத்துக்கே போயிடுவேன் போலயே"

"என்னாச்சு அத்தை??. வாங்க டாக்டர் கிட்ட போலாம்.நான் cab புக் பண்ணுறேன்.இல்ல என் பைக்ல உட்க்காந்துருவீங்களா??"

"அதெல்லாம் வேண்டாம் பா, நீ என் பக்கத்துலயே இரு போதும்."

"என்ன அத்தை, நெஞ்சு வலின்னு சொல்லிட்டு, மருந்து எடுத்துக்காமா.டாக்டர்டையும் போகாம இங்க இருக்க சொல்லுறீங்க"

"மாத்திரை கொடுத்துட்டேன் அத்தான். உங்களை பாக்கணும் போல இருக்குன்னாங்க அத்தான். நீங்க கூட இருந்தா சரி ஆயிடும்."

'ஆக மொத்தம் ,இதுக்கு தான் பிளான்அஹ்.இவரை அறைக்குள் வரவிடாமல் செய்வது.சீரியல் வில்லிகள் தோற்றார்கள் இவர்களிடம்.'

அவர்களை கேவலமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு, அறைக்குள் சென்று ,கதவடைத்து படுத்து விட்டாள் ஜானு.

காலையில் கண் விழிக்கும் போது, அறைக்குள் ,வேலைக்கு தயாராகி கொண்டிருந்த அர்ஜுனை பார்த்து,

"உங்க அத்தை இருக்காங்களா??"

"என்ன??"

"இல்ல..இங்க இருக்காங்களா..இல்ல ஹாஸ்பிடல்ல இருக்காங்களான்னு கேட்டேன்.. நேத்து அவங்க performance பாத்து..I mean வலியை பார்த்து heartattack னு நெனச்சேன்.அதான் கேட்டேன்."

அவள் கேட்டதுக்கு, எந்த பதிலும் சொல்லாது ,அமைதியாய் இருந்தான் அர்ஜுன்.

"Night எப்போ உங்களை ரிலீஸ் பண்ணாங்க??இல்ல இல்ல, சரி ஆனாங்க."

அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு,

"ரெண்டு மணி போல சரி ஆகி அறைக்கு போய்ட்டாங்க"

"பரவால்ல,இவ்ளோ சீக்கிரம் சரி ஆகிடுச்சே. timing செட் பண்ணுவாங்க போல, அலாரம் மாறி"

"இப்போ என்ன சொல்ல வர்ர??"

"இல்ல,நல்ல வேலை சீக்கிரம் சரி ஆயிடுச்சுன்னு சொன்னேன்.இன்னிக்கு நைட் வருமா??முன் கூட்டியே சொல்லிட்டா.நீங்க ஹால்லேயே தூங்கலாம் பாருங்க.கதவடைச்சி அப்புறம் தூங்கமா இருந்து வேற திறக்கணும். அதான்"என்று அத்தனை பற்களும் தெரிய சிரித்து காட்டியவளை எதுவும் சொல்லாமல்,சொல்லமுடியாமல் அறையை விட்டு வெளியே சென்றான் அர்ஜுன்.

இதை கேட்டு கொண்டிருந்த பிரியா,
"என் மாமியரே பரவால்ல போலடி. என்னடி இவ்ளோ கேவலமா நடந்தும் ,அண்ணா ஒன்னும் சொல்லாம இருக்கார்."

"அவர் நெனைக்குறத, என்னைக்கு சொல்லி இருக்கார் ,இன்னிக்கு சொல்ல.அதை விடு, சொல்லு என்ன விஷயமா call பண்ண".

"அது..அது ..வந்து.."

"என்னடி,வந்து போயினு இழுத்துகிட்டு இருக்க"

"அது…"

"ஏய்..வெட்கப்படுறியா…"??"

"எப்படிடி.. போன் லேயே கண்டு பிடிச்ச??"

"அதான் உன் குரலேயே டன் டன் அஹ் வலியுதே.சொல்லு என்ன விஷயம்??"

"ஹ்ம்ம்..நீ அத்தை ஆக போற"

"இங்க ஒரு அத்தை தொல்லையே தாங்கலை, இதுல இன்னோரு…ஏய்…என்ன சொன்ன??..என்ன சொன்ன??கர்ப்பமா இருக்கியா??சூப்பர் டி.. இது புரியாம, நான் என் புலம்பல் எல்லாம் சொல்லிட்டு time வேஸ்ட் பண்ணிட்டேன்.காங்கிரட்ஸ் டி. அண்ணா இருக்காரா??"

"இல்லடி, அவர் ஆபீஸ் போய்ட்டார்.நேத்து தான், conform பண்ணோம்."

"சரி நான் ,அண்ணாக்கு call பண்ணி பேசிக்குறேன்.ஈவினிங் உங்க அண்ணா கூட வீட்டுக்கு வரேன்."

"ஆமாடி,உன்னை பாக்கணும் போல இருக்கு.நீ இங்க வந்து எவ்ளோ நாள் ஆச்சு..கிட்ட தட்ட ஒரு மாசம் ஆச்சு"

"என்ன பண்ணுறது டி, வர முடில.இன்னிக்கு கட்டாயம் வரேன்."

"ஹ்ம்ம்..எதிர்பார்த்துட்டே இருப்பேன்.சரி வச்சுரேன்"

அலைபேசியை வைத்துவிட்டு, முகத்தில் மலர்ச்சியுடன் வந்தவளை கண்ட அம்மாவும், பொண்ணும்,

"என்னமா?? ஒரே சந்தோசமா இருக்கா??"

"இருந்துட்டு போட்டும் டி. இன்னும் கொஞ்ச நாள் தானே"

என்று பேசி சிரித்து கொண்டார்கள்.
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்-17

அர்ஜுனின், தொலைபேசிக்கு பல முறை முயன்று விட்டு அவன் எடுக்காததால்,அவனை பேங்கிற்கு சென்று சந்திக்கலாம் என்று கிளம்பி சென்றாள்.

பேங்கில் கொஞ்சம் கூட்டமாக இருந்தது.இவளை பார்த்துவிட்டு வந்த பியூன் னிடம்

"அவரை பார்க்கணும்" என்றாள்.
அவளை அமர செய்துவிட்டு, உள்ளே சென்றவர்,சிறிது நேரத்தில் வெளியே வந்து

"என்ன விஷயம்னு கேட்டாங்க மா"

"கொஞ்சம் பர்சனல் அவர்ட்ட தான் சொல்லணும்"

"சரி மா.இருங்க சொல்லிட்டு வரேன்"

மறுபடியும்
உள்ளே சென்றவர் போன வேகத்தில் திரும்பி வந்தார்,
"சார்,கொஞ்சம் பிஸி மா,கிளைன்ட்ஸ் கூட பேசிட்டு இருக்காரு.சாயங்காலம் வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்னு சொன்னாரு மா"

சுறுசுறுவென கோபம் ஏற,
"ஓ..சரி அவரை சாயங்காலம் வந்து பேசிக்க சொல்லுங்க.நான் வீட்டுல இருக்க மாட்டேன்.அங்க இருக்க சுவர்,கதவு இதோட பேசிக்க சொல்லுங்க"என்று கூறிவிட்டு வேகமாக வெளியேறினாள்.

இதற்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல், பியூன் முழித்து கொண்டு நின்றார்.

கடுப்புடன் வீட்டுக்குள் நுழைந்தவளை, எதிர் கொண்ட மகாதேவி,
"இந்தம்மா நில்லு".

'இதுகளுக்கு என்னை எல்லாம் கண்ணுக்கே தெரியாது.அவரை மட்டும் தான் தெரியும்.இன்னிக்கு என்ன வம்பு வளர்க்க போகுதுகளோ??'.

"ஏம்மா,எங்க சொல்லாம கொள்ளலாமா போய்ட்டே.இங்க வீட்டுல

இருக்குற ,எங்களுக்கென்ன மரியாதை.போட்டது போட்ட படி கிடக்கு.கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இருக்க."

ஏற்கனவே கடுப்பில் இருந்த ஜானுவுக்கு, ஜிவ்வென ஏறியது.

"நீங்க யாருங்க??நான் ஏன் உங்க கிட்ட சொல்லிட்டு போனும்.நீங்க என்ன என் மாமியாரா??"

"என்னமா??கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுற.உங்க வீட்டுல உன்னை இப்படி தான் வளர்த்துருக்காங்களா??"

"தேவை இல்லாம என் வீட்டை பத்தி எல்லாம் பேசாதிங்க. உங்க வீட்டுல உங்கள எப்படி வளர்த்தாங்க??இப்படி தான் அடுத்த வீட்டுல போய் உக்காந்துகிட்டு அதிகாரம் பண்ண சொன்னங்களா??இல்ல உங்க பொண்ணை, நீங்க எப்படி வளர்த்திங்க??ஒரு ஆம்பளை இருக்குற வீட்டுல அரையும், குறையுமா, உடுப்பு போட்டு சுத்த சொல்லி வளர்த்திங்களா??"

"என்னமா??நீ இப்படி பேசுற??என் அண்ணி இருந்திருந்தா, எனக்கு இந்த நிலை வந்திருக்குமா??இப்படி யார்,யாரோ என்னை பேசுற நிலைக்கு விட்டிருப்பாங்களா??"

"நான் யாரோ இல்ல.நீங்க தான் யாரோ"

"நான் யாரோவா??என் பொண்ணு தான் இந்த வீட்டுக்கு மருமகளா வர வேண்டியது.என் அண்ணா,அண்ணி அப்படி தான் ஆசை பட்டாங்க. அவங்க இல்லாததால.இப்போ நீ வந்து என்னை யாரோங்குற"

"உயிரோட இல்லாதவங்க, வந்தா சாட்சி சொல்ல போராங்கன்னு ,இஷ்டத்துக்கு சொல்லுங்க.எங்களுக்கு கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆகுது, நிச்சயம் ஆகி 5 மாசம் ஆகுது.அது வரை நீங்க எங்க போனீங்க.இம்புட்டு வருசமா கோமால இருந்திங்களா??உங்க பொண்ணை கட்டுறதுன்னா அப்போவே கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியது தானே"

"நான்,என் அண்ணன் மகனுக்கு கல்யாணம் பண்ணுறதா தான் இருந்தேன்.அதுக்குள்ள புள்ளை ,'அத்தை என் தங்கச்சியை பொண்ணு கொடுத்து,அந்த மாப்பிள்ளைக்கு தங்கச்சி முறை இருக்குற பொண்ணை கட்டுறதா வாக்கு கொடுத்துட்டேன்,மீற முடியாதுன்னு'

வருத்தப்படுச்சி.பிடிக்காத கல்யாணமா இருந்தாலும் ,தங்கச்சி வாழ்கை முக்கியம்னு, உன்னை கல்யாணம் பண்ணான்.நானும் வேற வழி இல்லாம விட்டுகொடுத்தேன்.இப்போ நீ இப்படி பேசுற"

ஒரு நிமிடம் ஜானகியை அசந்து போனாள். அவள் கல்யாணம் எப்படி நடந்தது என்று அவளுக்கும்,ப்ரியாவிற்கு,விஜய்க்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.அர்ஜுனுக்கு கூட இன்று வரை தெரியாது.

அப்படி இருக்கையில், இந்தம்மா என்னவோ, கூட இருந்தது மாதிரி என்னமாய் கதை புனைக்கிறது.

இது சீரியல் கதை எழுத போகலாம்.அருமையாய் கதை சொல்லுகிறது என்று எண்ணினாள்.

அவள் மௌனத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மகா,
"என் பொண்ணை எவ்ளோ பெரிய இடத்துள்ளேலாம் கேட்டாங்க.நான் தான் எங்க அண்ணன் மகனுக்கு தான் கொடுப்பேன்னு, எல்லாரையும் வேண்டாம்னு சொன்னேன்.என் வீட்டுக்காரருக்கு கூட இதுல வருத்தம்.என் பொண்ணும் ,அத்தானை தான் கல்யாணம் பண்ணுவேணு ஆசையா இருந்தா.

இப்போ உன்னால எல்லாம் போச்சு.இதுல எங்களை நீ யாரோனு சொல்லுற"

இவ்வளவு நேரம் இவர்கள் பேசுவதை கவனித்து கொண்டிருந்த மஹிஷா, இது தான் சரியான நேரம் என்று,
"என் அத்தானும் என்னை தான் விரும்புறார்.நீ தான் இடையில வந்துட்ட. பேசாம விலகி போய்டு. எங்களை இனிமேலாவது ஒன்னா வாழ விடு"என்றாள்.

"என்ன,உன்னை அவரு விரும்பினாரா.அவரை எனக்கு ,காலேஜ் படிக்கும் போதே தெரியும்.எந்த பெண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்.கல்யாணத்துக்கு முன்ன ,என்னையே அவர் பார்த்ததில்லை.கொத்தவரங்காய்க்கு பேன்ட், சட்டை போட்ட மாதிரி இருக்குற உன்னை காதலிச்சாரா?? இதை என்னை நம்ப சொல்லுற"

தன்னை குறை கூறிய கடுப்பில்,
"என்னை விட,நீ அழகா??,உன் மூக்கும், முழியும், முகமும்.உன் முகத்தை கண்ணாடியில பார்த்துருக்கியா??"

இது ஒரு வகையான தந்திரம்,ஒருவர் எவ்வளவு அழகானவராக இருந்தாலும்,அவரை ஒரு பார்வை வித்யாசமாக பார்த்துவிட்டாலோ,என்ன இப்படி இருக்கீங்க.இன்னிக்கு ஏன் இப்படி என்று கேட்டு விட்டாலோ.அவர்கள் அழகின் மீது பெரிய சந்தேகமே வந்துவிடும்.நமக்கு குறை என்று தோன்றிவிடும்.இதை பயன்படுத்தினால் யாரை வேண்டுமானாலும் அவ நம்பிக்கை கொள்ள செய்யலாம்.அதை பயன்படுத்தினாள்் மஹிஷா.

இதற்கெல்லாம் அசந்துவிடுபவளா நம் ஜானு.இதை போல் கல்லூரியில், எத்தனை பேரை சமாளித்திருப்பாள்.

"நிச்சயம் நான் உன்னை விட அழகு தான். அடுத்தவ புருஷனை விரும்புற உன்னை விட ,100 மடங்கு நான் அழகு தான்"

என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றாள். சிறிது நேரத்தில் பிரியா வீட்டிற்கு செல்வதற்காக கிளம்பி வந்தவள் போகிற போக்கில்,

"வந்துட்டா,mysore மகாராஜா கேட்டாங்க,ஹைட்ரேபாத் nizam கேட்டாங்கன்னுட்டு.அத்தனை பேரையும் விட்டுட்டு அடுத்தவ புருஷனை பிடிக்க வந்துட்டா.நாட்டுல அம்பளைங்களே இல்லாத மாதிரி"என்று கூறி விட்டு சென்றாள்.

மானம் ,ரோஷம் உள்ளவர்கள் என்றாள் அவள் பேசிய பேச்சிற்கு இன்னேரம் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு, சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி இருப்பார்கள்.

இவர்கள் அர்ஜுனின் வரவுக்காக காத்திருந்தார்கள்.அவளை பற்றி அவனிடம் ,இல்லாததும்,பொல்லாததும் சொல்வதற்காக..
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்-18

ப்ரியாவின் வீட்டிற்கு பூ, பழம், இனிப்பு எல்லாம் வாங்கிக்கொண்டு சென்றாள் ஜானு.கதவை திறந்த ப்ரியாவின் முகத்தில், சோர்வையும் மீறி மலர்ச்சி தெரிந்தது.மிகுந்த மகிழ்ச்சியுடன் இவளை வரவேற்றாள் பிரியா.

"என்னடி,அண்ணா வரலியே??"

"வரல,நீ உங்க அண்ணாக்கு call பண்ணி சொன்னியா??"

"Call பண்ணேன் டி, அண்ணா எடுத்துட்டு, கொஞ்சம் பிஸிமா..ஏதும் urgent அஹனு கேட்டாங்க.இது அவசரமா சொல்லுற விஷயம் இல்லையே,அதான், அப்புறம் பேசலாம்னு சொல்லல".

"உங்க அண்ணாக்கு, நம்மளை விட வேலை தான் முக்கியம்".

"என்னாச்சு டி??"

"ஒரே எரிச்சலா இருக்கு டி, உன் அத்தையும், அத்தை பொண்ணும் பண்ணுற டென்சன்ல."

"அவங்கள அனுப்புறதுக்கு ,அண்ணா கிட்ட பேசுறேன்னு சொன்னா, அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்குற.இப்போ என்ன பண்ணாங்க??"

"ஹ்ம்ம்..அந்த எருமையை, உங்க அண்ணா விரும்புறாராம். அவளை தான் கல்யாணம் பண்ண இருந்தாராம்.உங்க அப்பா,அம்மா கூட ஆசை பட்டாங்களாம்.நான் இடையில வந்துட்டேனாம். என்னை பிடிக்காம, உன் அண்ணா கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.நான் விலகி போனுமாம்".

இதை கேட்ட பிரியா, வாயில் கை வைத்து கொண்டாள்.

"ஏய்,அவங்க சொல்லுறதை நம்பாதடி, அத்தனையும் பொய்.அவளை, உங்க கல்யாணத்தன்னைக்கு தான் அண்ணா பார்த்தார்.அதுக்கு முன்ன, அவள் குழந்தையா இருந்தப்போ பார்த்தது.அவங்க ஊர் மாறிட்டே இருப்பாங்க.அதனால சின்ன வயசுல கூட ரெம்ப பார்த்ததில்லை.

அவளும் விவரம் தெரிஞ்சபுறம், உங்க கல்யாணத்துல தான் அண்ணாவை பார்த்தா. எனக்கு நல்லா தெரியும்"

"லூஸா டி நீ??ஏன் இவ்ளோ பதரூர??அதுவும் இந்த நிலைமையில. உங்க அண்ணா பத்தி எனக்கு தெரியாதா??. உங்க அண்ணாக்கு என்னை கரெக்ட் பண்ணவே துப்பில்லை.இதுல அந்த எருமையை போய்.. போடி நினைச்சு கூட பார்க்க முடில.

இந்த ஒரு மாசமா, அவ நம்ம வீட்டுல தான் இருக்கா. அவளே வந்து அத்தான், சொத்தான்னு பேசுவா.உன் அண்ணா பேசி நான் பார்த்ததில்லை.நீ இவ்ளோ விளக்கம் கொடுக்க தேவையில்லை."

"ஒரு நிமிஷம் பயந்துட்டேன் டி"

"சந்தோசமா இரு.என் மருமக பிள்ளையை ஒழுங்கா பெத்து தா"

"ஹ்ம்ம்…அதென்ன சந்தடி சாக்குல,என் அண்ணனுக்கு துப்பில்லன்னு சொல்லுற??நாத்தனார்னு, ஒரு பயம் இல்லாம போச்சு."

"போடி,உன் அண்ணா முன்னாடியே சொல்லுவேன்"

"அவ்ளோ தைரியமாயுடுச்சா??"

"உங்க அண்ணா, பார்க்க தான் டெர்ரோர்,உள்ளுக்குள்ள எவ்ளோ சாப்ட்னு எனக்கு தெரியும்.ஒரு விளம்பரத்தில் வரும்ல

'கோணால இருந்தாலும் என்னோடதாக்கும்னு'

அப்படி தான் உன் அண்ணா ,அன்பை சொல்லுலயும்,ஸ்பெஷலானா செய்கையிலும் ,வெளிப்படுத்த தெரியாது.ஆனா அவர் செய்யுற ஒவ்வொரு செய்கையிலும் அன்பிருக்கும்".

கண்கள் கனவில் மின்ன கூறியவளை, பார்த்த பிரியா,

"அப்படி போடு.என் அண்ணாக்கு ,என் கிட்டேயே சப்போர்ட் அஹ்"

"நாட்டுல உள்ள முக்கால்வாசி ஆண்கள் அப்படி தான் ,சொல்லால அன்பை வெளிப்படுத்த தெரியாது, மாட்டாங்க.செய்கையால தான் சொல்லுவாங்க.உன் அண்ணா எப்படி இருந்தாலும், எனக்கு பிடிக்கும்."

முகம் சிவக்க கூறியவளை அன்பாக பார்த்த பிரியா,

"உங்க கல்யாணத்தப்போ, ரெம்ப பயந்தேண்டி, விருப்பம் இல்லாதவங்களை என் சுயநலத்துக்காக சேர்க்குறோமோன்னு.இப்போ தான் நிறைவா இருக்கு."

"உங்க அண்ணாவை, விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு,யார் சொன்னா??பிடிச்சு தான் பண்ணேன்.பிடிக்கலைன்னா, உங்க அண்ணாவை நேர்லயோ, போன்லையோ, contact பண்ணி, உன் லவ்அஹ் சொல்லி ,சேர்த்துவச்சுறுப்பேன்."

"அடிப்பாவி,கல்யாணம் வரை ,என்னை வருத்தெடுத்தியே டி"

"உன் அண்ணாவை ,முதல் முதலா, நம்ம காலேஜ்ல பார்த்தபோவே நான் பிளாட்.என் arraged marriage கொள்கையால, கொஞ்சம் யோசிச்சேன்.நீயே வலெண்டியரா வந்து உதவி பண்ணிட்ட"

"இதான், சொந்த செலவுல சுனியம்குறதா"

"ஏய்.."

"சும்மா சொன்னேன் டி, நீ எங்க வரம்"

சிறிது நேரம், இருவரும் பேசிக்கொண்டிருந்துவிட்டு, ஜானு கிளம்புவதாக சொன்னாள்.

"இருடி, விஜய் வந்ததும், உன்னை கொண்டுபோய் விட சொல்லுறேன்"

"உங்க அண்ணா இவ்ளோ நேரம் வந்துருப்பார், அந்த அணுகுண்டும், எருமையும் என்ன சொல்லி இருக்குங்களோ.நான் சீக்கிரம் போனா தான், சமாளிக்க முடியும்.நான் cab புடிச்சு போய்கிறேன். பத்திரமா இரு"

இங்கு அர்ஜுன் வந்ததும் ,வராததுமாக,அம்மாவும் பெண்ணும் புகார் பட்டியல் வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

"நாங்க,யாரோவாம், பா. நீங்க யாரு என்னை கேள்வி கேட்க அப்டிங்குறா உன் பொண்டாட்டி"

வராத கண்ணீரை துடைத்து, கண்ணை கசக்கி, கதை புனைந்தார் மகாதேவி.

"எங்க அண்ணி இருந்தா, இந்த நிலை வந்துருக்குமா??உன் பொண்டாட்டிக்கு, நாங்க வந்ததே பிடிக்கலை.வெளிய போங்கன்னு சொல்லாம சொல்லுறா"

"சொந்தம் விட்டு போயிட கூடாதேனு இருக்குறோம்"

"உன்னையும் மஹிஷாவையும் சேர்த்துவச்சு ,தப்பா பேசுறா, நாளைக்கு வாழ போற பொண்ணு, அப்புறம் எப்படி, அவ கல்யாணம் நடக்கும்"

இப்படி சொன்னால், அர்ஜுன் ரோசப்பட்டு,
'ஆமாம் ,நானும் மஹிஷாவும் விரும்புகிறோம்னு' ஜானகியிடம் சொல்லி,மஹிஷாவை திருமணம் செய்யும் முடிவை எடுப்பான் என்று எதிர்பார்த்தார்.

அர்ஜுனிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை.இறுகிய முகத்துடன் அமைதியாய் இருந்தான்.

'கல்லுளி மங்கன் எதாவது பதில் சொல்லுரானா'என்று மனதிற்குள் திட்டி கொண்டு,

"உங்களுக்கு இங்க எந்த உரிமையும் இல்ல.என் வீடு,என் மாமியாரா இருந்தா கூட ,மதிக்கமாட்டேன்னு சொல்லுறா பா".

இவ்ளோ பிட்டு பிட்டா போட்டும் ,ரியாக்ஷன் இல்லியே என்று மஹிஷாவை பார்த்தார்.

அவள் பங்கிற்கு அவள்,
"இப்டி அரைகுறை டிரஸ் போட்டு, என் புருஷனை மயக்க பாக்குறியானு கேக்குறா அத்தான்,இன்னும் வாய்க்கு வந்ததெல்லாம் கேக்குறா அத்தான். கேட்கவே கூசுது."

"நான் உங்களை, அத்தான்னு கூப்பிட கூடாதாம்."

அவள் பங்கிற்கு ,அவள் கண்ணை கசக்கினாள்.

"எங்க வீட்டுல சாப்பாட்டுக்கு இல்லாமலா, இங்க வந்தோம்.என் புருஷன், அரசாங்க உத்தியோகம் பார்த்து கைநிறையா சம்பாதிச்சவர். உறவுக்காக வந்து, இப்படி பேச்சு கேட்கவேண்டிய நிலைமை.நாங்க நாளைக்கு கிளம்புறோம் பா. இனி உங்களுக்கு எதுக்கு கஷ்டம்"

கண்கள் சிவக்க அமர்ந்திருந்த அர்ஜுனிடம், வேறு என்ன சொல்வது என்று யோசித்துக்கொண்டு, ஜானகியின் வரவுக்காக காத்திருந்தார்கள்.

தாங்கள் கூறிய எதையும், ஜானகி அர்ஜுனிடம் கூற மாட்டாள் என்று தெரியும்.சொல்லுவதென்றால் இந்நேரம் சொல்லி இருப்பாள் என்ற நம்பிக்கையில் இல்லாததும் ,பொல்லாததும் சொல்லிவைத்தார்கள்.

அனைவரின் எதிர்பார்ப்பும் பூர்த்தி செய்யும் வகையில் ,ஜானு வீட்டிற்குள் நுழைந்தாள்.

அனைவரும் ஹாலில் இருப்பதை பார்த்து விட்டு, ஒன்றும் கூறாமல் ,தங்கள் அறையை நோக்கி சென்றாள்.

"நில்லு.."
கணவனின் குரல் கேட்டு, நின்றவளை பார்த்து,

"எங்க போய்ட்டு வர??"

"விசாரணை எல்லாம் பலமா இருக்கு.என் தோழி பிரியா வீட்டுக்கு போய்ட்டு வரேன்"

குரலில் சற்று பதற்றத்துடன்,
"என்னாச்சு அவளுக்கு??நல்லா இருக்கா தானே??"

"ஹ்ம்ம்..ஒருத்தங்க போன் பண்ணா, எடுத்து பேசணும்.அந்த பழக்கம் தான் இங்க இல்லியே.யார் பண்ணாலும் எடுக்குறதில்லை, எடுத்தாலும் பிஸி னு சொல்ல வேண்டியது.இப்போ என்ன அக்கறை??"

"ச்சு.. சொல்லு மா..என்னாச்சு அவளுக்கு??"

"எது பேசுறதா இருந்தாலும் ,நம்ம அறைக்கு வாங்க.மூணாவது மனுசங்க முன்ன, பேச விருப்பம் இல்லை.புருஷன் ,பொண்டாட்டி விஷயம் ,அவங்களுக்குள்ள தான் இருக்கனும்.இல்லைனா, அடுத்தவங்க வாய்க்கு அவள் ஆயிடும்"என்று கூறிவிட்டு, பதில் எதிர்பாராமல், அறைக்குள் சென்று விட்டாள்.

பின்னாலேயே, அர்ஜுனும் சென்று விட்டான்.

"என்னமா??ஒரு இண்ட்ரெஸ்டிங் சீன்கு வெயிட் பண்ணா, புஸுன்னு போச்சு.ஹால்ல பேசுனா தானே, நமக்கு தெரியும்.இவங்க ரூம்குள்ள பேசுறது வெளிய கேட்காதே.காரியத்தயே கெடுத்துட்டா."

"இருடி நாமா ஏத்திவிட்டதுக்கு நிச்சயம் வெடிக்கும்.பொறுதிருப்போம்.இன்னிக்கு நிச்சயம் பெட்டி கட்டிடுவா.சந்தடி சாக்குல ,நம்மளை மூணாவது மனுஷங்கன்னுட்டு போய்ட்டா பாரு".

பொட்டி கட்டுறாளா?? இல்லியா?? பொறுத்திருந்து பார்ப்போம்..
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்-19



அறைக்குள் ஜானுவிடம்,
"பிரியா call பண்ணா. கொஞ்சம் பிஸி.ஏதும் அவசரமானு கேட்டேன்,இல்லைன்னுட்டா.அவளும் சொல்லல. ஏதும் பிரச்சனையா??"

"அவ கிட்ட மட்டுமா பேசல?? என்கிட்டேயும் தான் பேசல.நேர்ல வந்தா, பியூன் விட்டு, என்ன விஷயம்னு கேக்குறீங்க.வீட்டு விஷயத்தை அவர்ட்ட சொல்ல முடியுமா??"

"இன்னிக்கு, கொஞ்சம் வேலை ஜாஸ்தி மா.ஒரு முக்கியமான கிளையன்ட் கிட்ட ,பேசிட்டு இருந்தேன்"

"அப்போ நாங்க முக்கியமில்லை"
அர்ஜுனிடம், ஜானகி படாத பாடு படுவாள் என்று, வெளியே அம்மாவும் பொண்ணும் எதிர் பார்க்க,இங்கு முழி பிதுங்கி நின்றதோ அர்ஜுன்.

"தெரியாம செஞ்சுட்டேன் மா.சாரி.இப்போ சொல்லு ப்ரியாவுக்கு என்ன??"

மேலும் சில நொடி முறுக்கி கொண்டு நின்றவளை, சமாளித்து கேட்டான்.

"அவ கர்ப்பமா இருக்கா. நீங்க மாமா ஆக போறீங்க"
முகத்தில் தோன்றிய முறுவலோடு, சொன்னாள்.

ஒரு நிமிடம் அர்ஜுனுக்கு, ஒன்றும் புரியவில்லை, அதீத சந்தோஷத்தில்.பிறகு முகத்தில் தோன்றிய புன்னகையோடு,
"நிஜமாவா??எப்போ தெரிஞ்சுது.டாக்டர் கிட்ட போனாங்களா??அவ எப்படி இருக்கா??"

"இவ்ளோ கேள்வி ஒரே நேரத்துல கேட்டா, எப்படி பதில் சொல்லுறது.நாளைக்கு நாமா ரெண்டு பேரும் போய் பார்த்துட்டு,அவளை இங்க கூட்டிட்டு வருவோம்.அதுக்கு தான், உங்களை இன்னிக்கு பார்க்க வந்தேன்.நீங்க தான் ரெம்ப பிஸினு பார்க்க முடியாதுன்னுட்டீங்க"

திரும்ப முதல்ல இருந்தா, என்று தோன்றியது அர்ஜுனுக்கு.

"அதான் காரணம் சொல்லிட்டேன்ல மா"

"என்ன சொன்னீங்க??இப்படி போன் பண்ணையில எடுக்காமா இருந்தா, நாளைக்கே எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, இல்ல accident ஆச்சுன்னு போன் பண்ணா, இப்படி எடுக்காமா இருந்தா, எப்படி விஷயம் சொல்லுறது."

அவள் சாதாரணமாக தான் சொன்னாள்.

ஆனால் அர்ஜுன், அதீத கோபத்தில், கை ஓங்கி விட்டான்.அவளை அடிக்கும் முன், தன்னை கட்டுப்படுத்தி கொண்டு, அவளை முறைத்து,

"அறிவு கெட்டதனமா பேசாத...ச்சை, ஒரு நல்ல விஷயம் சொல்லிட்டு.இப்படி பேசுற"
அவன் திட்டியதை எல்லாம் விட்டுவிட்டாள். அவன் அடிக்க கை ஓங்கியதை கண்டு,

"அடிச்சுருவிங்களா,எங்க அடிங்க பார்ப்போம்."

"ஏன் பதிலுக்கு நீயும் அடிப்பியா??"

"இல்ல கடிச்சுடுவேன்"
வெகு தீவிரமாக சொன்னாள். அவள் பதிலில் அவன் தான் முழிக்கும்படி ஆகியது.

"உங்க தங்கச்சிட்ட கேளுங்க, என்கிட்ட ,எவ்ளோ கடி வாங்கி இருக்கானு.என் பெருமை எல்லாம், அவ சொல்லுவா.காலேஜ் எஹ் என்ன பார்த்தா நடுங்கும்.தெரிஞ்சுக்கோங்க"

வினோத பிறவியை பார்ப்பது போல, அவளை பார்த்த அர்ஜுன்.
"சுமார், எத்தனை பேரை கடிச்சுருக்க??"

அவனை முறைத்து,
"என்ன நக்கலா??"

"இல்ல, அவங்க நிலைமை தெரிஞ்சுகிட்டு, உங்கிட்ட, ஜாக்கிரதையா இருக்கலாமுன்னு தான். ப்ரியாக்கு எந்த சேதாரமும் இல்லை. இருந்தாலும், அவளையும் ஒரு வார்த்தை கேட்டுக்குறேன்."

அவனை பார்த்து, புசுபுசுவென மூச்சு விட்டுவிட்டு, படுக்கையில் சென்று ,அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.

கோவமா இருக்காங்களாம்.

முகத்தில் தோன்றிய முறுவலுடன்,
"வா, சாப்பிடலாம்."

"எனக்கு வேண்டாம்"

அடம் பிடிக்கும் சிறு குழந்தை போல், தோன்றியது அவனுக்கு.

"ஏன் வேண்டாம்"

"பசிகலை"

"ஏன் பசிகலை"

திரும்பி அவனை முறைத்து விட்டு,

"பிரியா வீட்டுல சாப்பிட்டேன்"

அவள் சொல்லுவதை, நம்ப தோன்றவில்லை அவனுக்கு,அவன் மீது கோபத்தில் இருபவள்,அவன் இல்லாமல் ,இத்தனை நாட்களில் சாப்பிடாதவள். இன்று மட்டும் எப்படி சாப்பிட்டிருப்பாள்.

"பரவால்ல,இங்க இன்னொரு முறை சப்பிடு."

"வேண்டாம்"

இவளிடம் பேசிக்கொண்டிருந்தால், வழிக்கு வரமாட்டாள் என்று நினைத்து,படுக்கை அறையை விட்டு வெளியே வந்த அர்ஜுன், கிச்சேனுக்குள் சென்று, உணவை எடுத்துக்கொண்டு, மீண்டும் படுக்கை அறைகுள் சென்றான்.

வெளியே இருந்த அத்தையும், மஹிஷாவும், அவன் வெளியே வரும்போது, ஆவலுடன் அவன் முகம் பார்த்தார்கள்.அதிலிருந்து ஏதும் கண்டுபிடிக்க முடியாததால்,குழம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு, அவன் மீண்டும், உணவுடன் அறைக்குள் செல்வதை பார்த்து, ஒருவர் முகத்தை மற்றவர்கள் பார்த்து முழித்தார்கள்.

"அம்மா..என்னமா??.இவரு சாப்பாடு எடுத்துட்டு போறாரு, அவளுக்கு."

"அதாண்டி எனக்கும் புரியல.சரவெடி இல்லாட்டியும், ஒரு ஊசி பட்டாசாச்சும், எதிர் பார்த்தேன்.என்ன சொக்குப்பொடி போட்டானு தெரில.இப்டி நமத்துப்போச்சு எல்லாம்"

"போம்மா,உன் அண்ணன் பையன் வேஸ்ட்.இப்டி, பொண்டாட்டி பின்னாடி ,வால் பிடிச்சிட்டு சுத்துறார்".

"அவன் கெத்து தான் டி, இவ தான் மந்திரிச்சுட்டா."

இவர்களை இப்படி புலம்பவிட்டு உள்ளே சென்ற அர்ஜுன், ஜானுவை எழுப்பி, சாப்பிட சொல்லி,இல்லை, இல்லை கெஞ்சி கொண்டிருந்தான்.

"சாப்பிடுமா"

"வேண்டாம்னு சொன்னேன்ல"

இது வேலைக்கு ஆகாது என்று நினைத்து, உணவை கையில் எடுத்து ,அவள் வாயருகே கொண்டு சென்றான்.

அவன் கண்கள், அவளை சாப்பிட சொல்லி வேண்டின,

அவன் ஊட்டியதை, அதிசயம் போல பார்த்தவள்.தானாக வாய் திறந்து, vangi கொண்டாள்.
அத்தை ,அவளிடம் பேசியதை பற்றி, அவளும் சொல்லவில்லை.

அவனிடம் கூறிய புகார்களை பற்றி, அவனும் கேட்கவில்லை.அவர்கள் இருவரும் அவர்களுக்கான தனி உலகில் சஞ்சரித்தார்கள்.

இருவரின் கண்களும், காதலுடன் சந்தித்து கொண்டன.
மறுநாள் பேங்கிற்கு விடுப்பு எடுத்த அர்ஜுன்,காலையில் மனைவியுடன் சென்று, ப்ரியாவை பார்த்துவிட்டு,விஜய்யிடம் கேட்டுக்கொண்டு, அவளை தன் வீட்டிற்கு அழைத்து வந்தான்.
மசக்கை சமயம் ஆதலால் ,தாய் வீட்டில் சீராட,சிறிது நாள் இருக்கட்டும் என்று விஜய்யிடம் சொல்லி அழைத்து வந்தாள் ஜானகி.

இவர்களை விட்டுவிட்டு, ஒரு வேலை இருப்பதாக வெளியே சென்றான் அர்ஜுன்.

இங்கு பெண்கள் இருவரும் கதை பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
அதை பார்த்து பொறுக்காத அத்தையம்மா,

"ஏம்மா பிரியா,தலைசுத்தல்,வாந்தி எல்லாம் ரெம்ப இருக்கா??"
எதற்கு இவர்கள் வழியக்க பேசுகிறார்கள் என்று புரியாத பிரியா,

"இல்ல அத்தை, தூக்கம் தான் அதிகம் வருது"என்றாள்.

"ஹ்ம்ம்..உனக்கும்,உன் அண்ணனுக்கும், ஒரே நேரத்துல தான் கல்யாணம் ஆச்சு.என்னத்த சொல்ல.இங்க ஒரு புழு,பூச்சிக்கு கூட ,வழிய காணும்."

என்னமோ, அவர்களுக்கு கல்யாணம் ஆகி, பல வருடம் ஆனது போல, பேசியவரை பார்த்த பிரியா,பதறியபடி அவருக்கு பதில் சொல்ல முனைகையில், அவளது கையில் அழுத்தம் கொடுத்து,

அவளை தடுத்த ஜானகி.
"புழு,பூச்சி வந்தா, அவங்க ஆரோக்கியமா இல்லைனு அர்த்தம் அத்தை, ஏதோ வியாதின்னு நினைச்சுப்பாங்க.அநேகமா உங்க பொண்ணுக்கு புழு,பூச்சி இருக்கும்னு நெனைக்குறேன்.அதான் ஈற்குச்சி மாறி சதை போடாம இருக்கா. நல்ல டாக்டர் அஹ் பாருங்க.வியாதி முத்தறதுக்குள்ள."

அவள் பதிலில் ,வாயடைத்து போன அத்தை, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தார்.

பிரியா தனக்கு வந்த சிரிப்பை ,வாயிற்குள் கஷ்டப்பட்டு அடக்கினாள்.

இவள் பேச்சில் கோபமுற்ற மஹிஷா,
"ஏய்,நான் டயட்ல இருக்கேன்.உனக்கு எங்க?? அது பத்தி தெரியபோது,ஆறு வேலை சாப்பிட்டு உக்காந்துருக்க.."

அதற்குமேல் பேச முடியாமல் ,கோபத்தில் மூச்சுவாங்க நின்றாள்.

அவள் கோவத்தை கண்டுகொள்ளாமல்,
"என்னவுட்டு டயட்டோ, என்னவோ.எங்க ஊர்ல எல்லாம், சூது வாது புடிச்சவங்களுக்கு தான், ஒடம்பு வைக்காது.ஹ்ம்ம்.."
என்று அவளை, மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து விட்டு,

"அதென்ன ,ஆறு வேலை சாப்பிடுறேன்னு சொல்லுற,உங்கப்பன் வீட்டு காசுலய சாப்பிடுறேன் .என் புருஷன் பணம்,பன்னண்டு வேலை கூட சாப்பிடுவேன்.வேலையை பார்த்துகிட்டு போடி"

என்று கூறி விட்டு ,தனக்கும் அந்த பேச்சுவார்த்தைக்கு சம்பந்தம் இல்லாதது போல, ப்ரியாவுடன் பேச ஆரம்பித்தாள்.

அம்மாவுக்கும்,பெண்ணிற்கும் தான், என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல்,அவளை பற்றி தெரிந்தும், அவளிடம் வாயைவிட்ட மடத்தனத்தை நொந்துகொண்டு, தனியே வந்தார்கள்.

"அண்ணிக்கும், நாத்தனார்க்கும் சண்டை மூட்டலாம்னு பார்த்த, முடியலையே"

"விடும்மா,சான்ஸ் கிடைக்காமையா போய்டும்."

சிறிது நேரம் கழித்து ,வீட்டிற்குள் நுழைந்த அர்ஜுன் ,அனைவரும் ஹாலில் இருப்பதை பார்த்து,
"உங்க எல்லார்கிட்டையும் ஒரு விஷயம் சொல்லணும்,எல்லாரும் இங்க வந்து உக்காருங்க" என்றான்.

என்ன ??என்கிற வினாவோடு, அனைவரும், ஹால் சோபாவில் அமர்ந்தார்கள்.

அவன் கையில் உள்ள கவரில் இருந்து, ஒரு செக் ஸ்லிப்பை எடுத்து, ஜானு விடம் கொடுத்த அர்ஜுன்,

"இதை அத்தை கிட்ட கொடு மா"என்றான்.

அதில், என்ன எழுதி இருக்கிறது என்று பார்த்தாள் ஜானு.

பத்து லட்சத்திற்கான செக் அது. எதற்கு இவ்ளோ பணம் என்று கேள்வி தோன்றினாலும், கணவனின் சொல் மீறாமல் ,அதை அத்தையிடம் கொடுத்தாள்.

என் மனைவி தான், எனக்கு முக்கியம்.என்னிடம் என்ன பெற்றாலும், அது என் மனைவியின் மூலமே கிடைக்கும்.அவளுக்கு தெரியாமல், ஒரு துரும்பை கூட, நகர்த்த மாட்டேன் என்று ,சொல்லாமல் சொன்னான் அர்ஜுன்.

"அத்தை, இதுல பத்து லட்சம் இருக்கு.நீங்க வந்த அன்னைக்கே, மாமா call பண்ணார். மாலினி நிலைமை, உங்க குடும்ப நிலைமை ,எல்லாம் சொன்னார்.அப்போவே உங்களுக்கு கொடுக்க முடிவு பண்ணிட்டேன்.அப்பாவோட இடம் ,இப்போ தான், விற்க ஏற்படாகி இருக்கு.அதோட அட்வான்ஸ் தான் இது.

மீதி பணம் வந்ததும்,மாலினி பேர்ல 20 லட்சமும்,மஹிஷா பேர்ல 20 லட்சமும் போடுறேன்.அதுல மாலினி பிரச்னையும் தீரும், மஹிஷாவுக்கும் நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணலாம்."

அவன் கூறியதை கேட்டு, அனைவரும், ஒவ்வொரு மனநிலையில் நின்றனர்.

ஜானகி ,தான் கணவனை நினைத்து பெருமையும், பூரிப்பும் பொங்க நின்றாள்.

'இவ்வளவு பிரச்சனை செய்தவர்களுக்கு, எதற்கு கொடுக்க வேண்டும்' என்ற மனநிலையில் பிரியாவும்.

என்ன சொல்லுவது என்று தெரியாமல், வாயடைத்து போய் அத்தையும், மஹிஷாவும் நின்றார்கள்.

அத்தையின் கண்கள் கலங்கி விட்டது.

"எனக்கு பிரியா எப்படியோ, அப்படி தானே ,அப்பாவுக்கும் நீங்கள் இருந்துருப்பிங்க.அப்பா இருந்தா, இவ்ளோ வருஷம்,உங்களுக்கு சீர், பொங்கல்,தீபாவளிக்கு, மாலினி, கல்யாணத்துக்குன்னு ,செஞ்சுருப்பாங்க.

அதை இப்போ, என் மூலமா செஞ்சதா நெனச்சுக்கோங்க."

ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் ,அவனை நோக்கி கை எடுத்து கும்பிட்டார்.

அவர்களை வளர்க்கும் பொறுப்பை கூட, சுயநலத்தால் தட்டி கழித்த தன்னை, கூனி குறுக செய்துவிட்டான் என்று தோன்றியது.

"மாமாக்கு call பண்ணி சொல்லிட்டேன் அத்தை. உங்களை நாளைக்கு கிளம்பி வர சொன்னார்.உங்களுக்கு call பண்ணுறேன்னு சொன்னார்.இந்தாங்க அத்தை ட்ரெயின் டிக்கெட்.நாளைக்கு காலை ட்ரெயின்னுக்கு போற்றுக்கேன்."

எதுவும் கூற முடியாமல், தலை மட்டும் அசைத்து, டிக்கெட்டை வாங்கி கொண்டார்.

"பீச்ல இடம் கிடைக்குறது வேற, கஷ்டமாச்சே."

சம்பந்தம் இல்லாமல், ப்ரியாவின் காதை கடித்தவளை ,கேள்வியுடன் நோக்கினாள் பிரியா.

"உங்க அண்ணனுக்கு சிலை வைக்க.
'இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் '.
அப்டிங்குற குறளுக்கு எடுத்து காட்டா ஆயிட்டார். தியாக செம்மல்.அதான்."

அவளை ,முறைக்க மட்டுமே முடிந்தது ப்ரியாவாள்.

கணவனை கிண்டல் அடித்தாலும், அவள் பார்வை பெருமையுடன் ,அவனை தழுவியது.
அன்றைய இரவின் தனிமையில், ஜானகியின் பார்வைக்கு, அர்த்தம் கேட்ட கணவனிடம்,

"இருக்கி அணைச்சு ஒரு உம்மை தருமோ!!"என்று கூறினாள் ஜானு.
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்-20

அத்தை குடும்பம் பெட்டி கட்டி, பத்து நாட்கள் கடந்திருந்தது.பிரியாவும், நேற்று தான் கிளம்பி இருந்தாள்.

ஊரிலிருந்து அலமு, அலைபேசியில், திருவிழாவிற்கு அழைத்திருந்தார்.அதற்கு அர்ஜுனும்,ஜானுவும் கிளம்பி கொண்டிருந்தார்கள்.இந்த முறை பேருந்து பயணம்.non a.c.

தனக்காக பார்த்து, பார்த்து செய்யும் கணவனை நினைத்து ,பாசம் பொங்கியது ஜானுவுக்கு.

அன்று இரவு
'இருக்கி அணைச்சு உம்மை தருமோ'என்று கேட்டு விட்டு.முதலில் கொடுத்தது என்னமோ ஜானகி தான்.
ஆரம்பித்தது அவளாய் இருந்தாலும்,முடித்தது அர்ஜுன் தான்.

இனிமையான நினைவுகளுடன், பேருந்தில் பயணித்து, ஊர் வந்து சேர்ந்தார்கள்.

அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள் அலமு,வாசுதேவன் தம்பதியர்.அர்ஜுனுக்கு கொஞ்சம் கூடுதல் கவனிப்பு,மரியாதை கிடைத்தது.

"இதெல்லாம் சரியில்ல அலமு,என்னையும் மரியாதையா கூப்பிடு, அப்போ தான் வருவேன்"என்று முறுக்கிக்கொண்டாள் ஜானு.

"வந்த உடனே, உன் வேலையை ஆரம்பிச்சுட்டியா??"என்று அவள் காதை திருக்கினார் அலமு.
குதுகலமும், மகிழ்ச்சியும் நிரம்பியது அங்கே.

தனிமையில் அம்மாவும் ,பெண்ணும் பேசிக்கொண்டிருக்கும் போது அலமு,
"ஏண்டி,ஏதும் விசேஷமா??"

"ஹ்ம்ம்..இப்போ என்ன விசேஷம்??.இவர் பக்கம்,நம்ம பக்கம் ஏதுமில்லை.தீபாவளிக்கு ரெண்டு மாசம் இருக்கு.யாருக்கும் பிறந்த நாள்,கல்யாண நாள் கூட இல்லியே மா."

யோசிப்பது போல, நாடியில் விரலால் தட்டினாள்.

"உனக்கு புரியுதா,இல்ல நடிக்கிறியா??"

"எல்லாம், நல்லா புரியுது."

"அப்புறம் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டியா??பிரியா மாசமா இருக்கா. அவளுக்கு ஒரு வாரம் முன்னாடி, உனக்கு ஆச்சு.ஞாபகம் இருக்கா??"

"ஏன் இல்லாம,நல்லா இருக்கு.நானும் உண்டானா, யார் அவளுக்கு பிரசவம் பார்க்குறது.அவளுக்கு தாய் வீடு நாங்க தானே"

"ஏண்டி,இதுக்கா தள்ளி போடுற??உங்க ரெண்டு பேருக்கும், நான் பார்க்க மாட்டேனா??அவளும் என் பொண்ணு மாதிரி தானே டி. சீக்கிரம் குழந்தை பெத்துக்குற வழிய பாரு."

"அவளுக்கு நாங்க பார்க்குறதும்,நீ பார்க்குறதும் ஒன்னா??தாய் வீட்டுல பார்த்தா தான், அவளுக்கு மரியாதை.இல்லைனா ,உன் அக்கா கோமதி, அதுக்கும் அவளை ஏதாவது சொல்லி அழ வச்சுடும்.பார்க்க கூட ஆள் இல்லாத இடத்துல, பொண்ணு எடுத்துட்டோம்னு.அவ ரெம்ப சென்சிட்டிவ். தெரியாதா உனக்கு??.உங்க அக்கா பத்தி தெரிஞ்சும், இப்படி சொல்லுற.அவ கவுரவம் எனக்கு, ரெம்ப முக்கியம்.அவ ,அதை விட எனக்கு முக்கியம்."

தன் பெண்ணா, இவ்ளோ பொறுப்பாக பேசுவது என்று ,அலமுவுக்கு பெருமையாய் இருந்தது.மனதிற்குள் அவளை பற்றி சிலாகித்தாலும், வெளியே வழக்கம் போல,

"மாசமா இருக்குற பொண்ணு,கொஞ்சம் வாய்க்கு ருசியா, நல்ல சாப்பாடு செஞ்சு போடலாம்னு பார்த்தா, உன் சாப்பாட்டை ,சாப்புடனும்னு அவளுக்கு இருக்கு போல."

"ஏன்,என் சாப்பாட்டுக்கு என்ன குறை??"

"நீ சமைச்சதை சாப்பிட்ட நம்ம தெரு நாய், இன்னும் என் கண்ணுலயே படல, என்ன ஆச்சோ, ஏது அச்சோ தெரியலை. ஹ்ம்ம்.."

என்று பெருமூச்சு விட்டார்.

"ரெம்ப பேசாத அலமு.என் புருஷன் ,என் சாப்பாட்டை தான் இத்தனை மாசமா சாப்புடுறார்."

"அவரு ரெம்ப பொறுமையான மனுஷன்.சகிப்பு தன்மை ஜாஸ்தி போல."

"உன் மாப்பிள்ளை??…ரெம்ப பொறுமை??..நீ பார்த்த…??"
அவரை கோபமாக முறைத்து விட்டு, தன் தந்தையிடம் சென்றாள்.

"பாருங்க பா, அம்மாவை"என்று பஞ்சாயத்து வைத்தாள்்.

இவர்கள் இருவர் தரப்பையும் கேட்டு, வழக்கம் போல, தன் மகள் பக்கமே தீர்ப்பு வழங்கினார் வாசு.

அதை ,பெருமை பொங்க பார்த்திருந்தார் அலமு.பெரிய மனுஷியாய் இவ்ளோ நேரம் பேசி விட்டு, தன் தந்தையிடம் ,செல்லம் கொஞ்சும் குட்டி பெண்ணாய் மாறிய மகளை பார்த்து, அவர் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், அர்ஜுனும் வந்து விட்டான்.பின் மாப்பிள்ளையை கவனித்தலில் ,பொழுது சென்றது.

அன்றைய இரவு சாப்பாடு முடிந்து,வெகு நேரம் அன்னை ,தந்தையிடம் அரட்டை அடித்து விட்டு, பின்பு தன் அறைக்கு சென்றாள் ஜானு.அர்ஜுன் எப்பொழுதோ சென்றிருந்தான்.

அறையின் உள்ளே சென்று, விளக்கை போட்டாள்.அர்ஜுன் தூங்காமல் அமர்ந்திருந்தான்.

அவனை பார்த்துவிட்டு,
"தூங்கலியா??புது இடம் தூக்கம் வரலியா??"

அவள் கேட்டதற்கு பதில் ஏதும் கூறாமல்,அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் பார்வை, வித்தியாசமாய் இருந்தது.

"என்ன முழுங்குற மாறி பார்க்குரிங்க??"
புருவங்களை ஏற்றி, இறக்கி கேட்டாள்.

அவள் அருகில் வந்ததும், அவள் கை பிடித்து இழுத்து, அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

"என்ன இன்னிக்கு ஒரு மார்க்கமா பார்க்குரிங்க??நடந்துகுரிங்க??ஏதாவது காத்து, கருப்பு அடிச்சுடுச்சா??"

"ஏதாவது பாடேன்."

முதல் முறையாக அவனாக பாட சொன்னான்.சிறிது வியப்போடு,
"என்ன??"

"பாடுன்னு சொன்னேன்"

"நேயர் விருப்பமா??பாடுனா என்ன தரீங்க.??நான் free service எல்லாம் செய்யுறதில்லை."
கெத்தாக புருவம் உயர்த்தி, கேட்டாள்.

"என்ன கேட்டாலும் தரேன்."

"ஹ்ம்ம்..பேச்சு மாற கூடாது.அப்புறம் கைகேகிக்கு வரம் தந்த, தசரதர் மாதிரி முழிக்க போறீங்க" சொல்லிவிட்டு கேலியாக பார்த்து சிரித்தாள்.

"நான் வரம் தர்றது, கைகேகிக்கு இல்ல.என் ஜானகிக்கு"
அந்த 'என்னில்' அழுத்தம் கொடுத்து சொன்னான்.

அவன் பதிலில், இவள் தான் வாயடைத்து நின்றாள்.

அவளை சகஜமாக்கும் பொறுட்டு,
"பாடு மா" என்றான்.

சட்டென்று, என்ன பாடுவது என்று ,தோன்றவில்லை.அதீத சந்தோசத்திலும், வேதனையிலும், மூளை சில நிமிடம் செயலிழக்கும், அது போல், ஒரு நிலையில் இருந்தாள் ஜானு.

"ஹ்ம்ம்.."என்ற அவன் உந்துதலில்

"ஆசையோடு பேச வேண்டும்!!
ஆயுள் இங்கு கொஞ்சமே !!
ஆவலாக வந்த பின்பும் !!
அஞ்சுதிந்த நெஞ்சமே!!"

அந்த வரியை ,அவள் பாடி முடித்ததும்,அடுத்த வரியை ,அர்ஜுன் பாட ஆரம்பித்தான்.

"ஆசை கொண்ட நெஞ்சம் இங்கு நீதிமன்றம் போகுமே!!
பேச தேவை இல்லை என்று, அங்கு தீர்ப்பு ஆகுமே!!"

அவன் பாடலை முடித்ததும் ,கண்களை அகல விரித்து ,வியப்புடன் பார்த்தாள்.

அவன் பாடுவது ,இதுவே முதல் முறை,
அவளை குறுநகையோடு பார்த்தவன்.பாடலை செயல் படுத்த தொடங்கினான்.

அதன் பிறகு ,அங்கு பேச்சுக்கு வேலை இல்லாமல் போனது.
கைகளும்,உதடுகளும் பேச ஆரம்பித்தது. என்றுமில்லாத வகையில், இன்று அர்ஜுன், அதிக வேகத்தையும்,நெருக்கத்தையும் கட்டினான்.ஜானுவும் அதற்கு ஈடுகொடுத்தாள்.

"நீயும்,நானும் காதல் கைதி
எண்ண, எண்ண இனிக்குது.!!"

இருவர் மனமும் நிறைந்திருந்தது.அன்றைய கூடலின் முடிவில் அர்ஜுன்,
"ஐ லவ் யூ ஜானுமா!!"என்று கூறி, அவள் நெற்றியில், அழுந்த முத்தம் பதித்தான்.

முதல்முறையாக, அவன் காதலை, அவன் வாயால் கேட்ட புரிப்பில்,
ஜானகியின் முகத்தில், அழகிய வெட்க பூக்கள் பூத்தது..
 
Top Bottom