Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed காதல் உணர்வுப்பூர்வமானது- இந்திரா செல்வம்

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
90
Points
48
12

தருணின் போன் அவன் எண்ணம் போலவே அலறியது. அதன் அலறலை நிறுத்திக் காதுக்கு கொடுத்தான்.

“ஹலோ...”

“சிவரஞ்சனி பேசுறேன்”

“ம்.. சொல்லு”

“உங்களை உடனே பார்க்கணும்”

“நானுந்தான்”

“சரி ஈவ்னிங் 4.00 மணிக்கு எங்க தெரு முனையில் இருக்கிற கோவிலுக்கு வந்துடுங்க. நான் தெப்பக் குளத்துல தான் இருப்பேன்”

“கண்டிப்பா வர்றேன்”

“மத்ததை நேர்ல பேசலாம்” போன் வைக்கப்பட்டது.

தெப்பகுளம் அருகில் இருவரும் அமர்ந்திருந்தனர். மௌனம், மௌனம் அதைக் கலைத்தான் தருண்.

“ஏதோ பேசணும்னு கூப்பிட்டு இப்படி குளத்தையே வெறிச்சு பார்த்தா என்ன அர்த்தம்”

“என்ன பேசறதுன்னு தெரியலை தருண். மாமாவோட பிடிவாதத்தை பத்தியா, அப்பாவோட கவலையைப் பத்தியா, நம்ம மனசு துடிக்கிற துடிப்பைப் பத்தியா எதுவுமே புரியலை”

“நீ எதுக்கும் கவலைப்படாதே நான் இருக்கேன், உன்னைக் கைவிட மாட்டேன்’

“அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை தருண், என் கவலையெல்லாம் மாமாவைப் பத்தித்தான். அவர் விருப்பத்தோட அந்த வீட்டுல கால் வைக்கணும்னு ஆசைப்படுறேன்”

“உன் ஆசையை நிறைவேத்தி வைக்கிறது என்னோட கடமை”

“நிறைவேத்துவீங்களா தருண்” கண்களில் நீர் போங்க அவனைப் பார்த்தாள்.

“கண்டிப்பா, அதிலென்ன சந்தேகம்” தோள்களை குலுக்கிச் சிரித்தான்.

கோவில் மணி மூன்று முறை அடித்தது. “அதோ பாத்தியா அந்தக் கடவுளே சொல்லிட்டார். நீ ஏன் கவலைப்படற”

“எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் தருண், மாமா என்னை வெறுக்க என்னத்தான் காரணமா இருக்கும்?”

“அது எனக்கு தெரியும்”

“தெரியுமா?”

“ம்...”

“சொல்லுங்க தருண்”

“அது ஒரு உப்பு சப்பில்லாத விஷயம் உன்னை மாதிரியே ஏதோ ஒரு பொண்ணை தியேட்டர்ல பார்த்துட்டு நீ தான் அதுன்னும், நீ ஒரு பையனோட பேசிகிட்டிருந்தேன்னும் சொல்றாரு”

‘எப்ப பார்த்தாராம்?”

“பார்த்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் இருக்குமாம்”

‘தியேட்டர்’ வாசல்ல பார்த்தேன்னு சொன்னாரா” சிறிதுநேரம் அமைதியாக இருந்தாள்.

அதுக்கு நீங்க’ என்ன சொன்னீங்க தருண்”

“அது சிவரஞ்சனியா இருக்காது, வேற யாரையாவது பார்த்திருப்பீங்கன்னு சொன்னேன்”

“இல்ல தருண் அது நான்தான்”

“என்ன சொல்ற?”

“ஆனா மாமா நினைக்கிற மாதிரி தப்பா இல்லை. நான் அந்த வழியா ஒரு நெட் சென்டருக்கு போய்க்கிட்டிருந்தேன். அந்த தியேட்டர் வாசல்ல என் பிரண்டும் அவள் வீட்டுக்காரரும் படம் பார்க்க வந்தப்ப பார்த்தேன். அவங்க கூட பேசினேன், மாமா என்னையும் அவரையும் மட்டும் பார்த்திருக்கார். பக்கத்தில் இருந்த என் தோழியை பார்க்கலை. அதான் தப்பா பட்டிருக்கு”

“சரி விடு அவர்கிட்ட சொல்லி புரிய வெச்சுக்கலாம்”

“ஆனா உங்க மேல என் அன்பு கூடிக்கிட்டு இருக்கு தருண். என்னை எந்தளவு புரிஞ்சு வெச்சிருந்தீங்கன்னா, உங்க அப்பாவ எதிர்த்து எனக்காக பேசியிருப்பீங்க?”

“ஏய், .என்ன இது சின்ன பிள்ளை மாதிரி அழுதுகிட்டு... நீ வேற நான் வேறயா, நான் உன்னை சந்தேகப்பட்டா என்னை நானே சந்தேகப்படற மாதிரி” நெகிழ்ந்தாள் சிவரஞ்சனி

“அப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”

“என்னடா இன்னும் பேச என்ன இருக்கு?”

“நீங்க போட்டது தப்புக் கணக்குபா”

“என்னடா உளர்ற?” சிவரஞ்சனி கூறியதை சொன்னான்.

“என்னதான் பிரண்டோட புருஷனா இருந்தாலும், அப்படியா சிரிச்சு சிரிச்சு பேசுவாங்க, உன்னை அவ நல்லா ஏமாத்துற?”

“ஏன்பா இப்படி ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்கையில விளையாடுறீங்க. எது எப்படியிருந்தாலும் அவதான் என் மனைவி. எங்க கல்யாணம் உங்க சம்மதத்தோட கண்டிப்பா நடக்கும். நடத்திக் காட்டுவேன்” சவால்விட்டு நகர்ந்தான்.

விக்கித்து போனார். காதலின் வலிமை அதிகம் தான் என்பதை உணர்ந்தார். அவர் யூகித்தது தவறு எனபது தருணால் தெரிவிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் தன்மானம் அவரை இறங்கிவர விடவில்லை. அவன் என்ன சொல்வது, நான் என்ன கேட்பது, நான் அவனை பெத்தவன் எனக்கு அவன் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமையில்லையா? என்று உள் மனம் உறுமியது.

நாட்கள் நகர்ந்து கொண்டுதான் இருந்தது. யாருக்காகவும் அது நிற்கவில்லை. இருவர் மனதிலிருந்த அன்பு மட்டும் துளியும் குறையவில்லை. காதலில் ஒருவர் மீது மற்றொருவர் முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். அதில் கடுகளவு குறைவு வந்தாலும் இருவரும் ஒன்று சேர் முடியாது. ஆனால் இவர்களிருவரும் ஒருவர் மீது மற்றொருவர் அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அவர்கள் காதல் நிச்சயம் கைகூட வேண்டும்.

தருண் மிகவும் இளைத்திருந்தான், தன் விருப்பம் நிராகரிக்கப்பட்ட வருத்தம் அவனை நிறையவே வாட்டியது. தூரத்து சொந்தம் ஒருவருடைய மகனுக்கு திருமணம் என்பதால் அம்மா அப்பா இருவரும் ஆட்டோவில் ரெயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். ஒரு திருப்பத்தில் தான் அந்த விபரீதம் நடந்தது. எதிரில் வந்த லாரி ஆட்டோவில் மோதிவிட்டது. மூவரும் வெளியே தூக்கி ஏறியப்பட்டனர்.

ஆட்டோ டிரைவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். காமாட்சி சிறிது நேரம் மூச்சு வாங்கியபடி கணவனைப் பார்த்து ‘சிவரஞ்சனி” என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டு கணவனின் கரத்தை பிடித்த நிலையிலேயே சுமங்கலியாக போய் சேரும் பாக்கியத்தை பெற்றார். இவர் மட்டும் ரத்தவெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார்.

அவர் கண் திறந்து பார்க்கும்போது, தன்னை சுற்றி தருண், சிவரஞ்சனி, வைதேகி தணிகாசலம், சுரேஷ், அவன் மனைவி, ஸ்ரீராம் என அனைவரும் இருந்தனர்.

“அப்பா” என்றழைத்த தருணுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

“காமாட்சி, காமாட்சி” என்று புலம்பினார்.

“அம்மா நம்மை வீட்டுபோயிட்டாங்கப்பா” என கதறி அழுதான் தருண்.

“உஷ்.. ஐசியுல ஏன் சத்தம் போடுறீங்க, வெளியே போங்க, போங்க, பேஷண்டோட ஒருத்தர் மட்டும் இருந்தா போதும்” என ஒரு நர்ஸ் உள்ளே வந்தாள்.

“நான் இருக்கேன் நர்ஸ்” என்ற தருண் கூறினான்.

“வேண்டாம் தருண், நான் இருக்கேன் நர்ஸ்” என்று சிவரஞ்சனி கூறினாள்.

“சரி நீங்களே இருங்க, ஆண்களை விட பெண்களுக்குத்தான் பொறுமை அதிகம், நீங்களே பார்த்துகோங்க”

“தேங்க்யூ சிஸ்டர்” எல்லோரும் வெளியே சென்றனர்.

”காமாட்சியை...” என்று அதற்கு மேல் பேச முடியாமல் அழுதார்.

“மாமா கூல் டவுன், பதட்டப்படாதீங்க, யாரோ புண்ணியவான் உங்களை இங்கே கொண்டு வந்து அட்மிட் பண்ணிட்டு, உங்க டைரில இருந்த தருண் நம்பருக்கு போன் பண்ணி சொன்னதால, நாங்கள் எல்லாம் இங்க வந்து பார்க்கும் போது நீங்க ஐசியுல அத்தை மார்ச்சுவரில” சொலும்போதே வந்த அழுகையை அடக்கிக் கொண்டாள். மாமாவை தேற்றுவதை விட்டு தானும் சேர்ந்து அழக்கூடாது என கட்டுபடுத்தினாள்

“நீங்க சுய நினைவில்லாம இருந்தீங்க மாமா, அதான் தருணே...” அதற்கு மேல் கட்டுபடுத்த முடியாமல் கதறியழுதார்.

“பெட்டில் அவருக்கு எல்லா வேலைகளையும் இவளே செய்தாள். அவர் நெகிழ்ந்து போனார். தனக்கு மகள் இருந்தால் கூட இப்படி செய்ய மாட்டாள் என்று நம்பினார். காமாட்சி கடைசியாய் உச்சரித்தது இவள் பெயரைத்தானே என் மனைவியின் இறுதி ஆசை, இருவரையும் சேர்த்து வைப்பதுதானே, கண்டிப்பாக சேர்த்து வைக்க வேண்டும். தருண் அப்பாவை பார்க்க வந்திருந்தான்.

“அப்பா இப்ப எப்படி இருக்காங்க சிவரஞ்சனி?”

“பரவாயில்லை”

“சரி நான் கிளம்புறேன்”

“ம்...”

“டேய், தருண் இங்க வாடா, நீயும் தான் சிவரஞ்சனி” வந்தார்கள்.

“நீ எனக்கு உபகாரம் செய்வதெல்லாம் தருணுக்காக தானேம்மா?”

“இல்லவே இல்லை மாமா, உங்கமேல நான் வெச்சிருக்கிற மரியாதையை தருண் கிடைக்கணுங்கிற சுயநலம்னு நினைச்சீங்களா. இல்லை மாமா, நான் உங்க பொண்ணா இருந்தா செய்ய மாட்டேனா?”

மிகவும் மகிழ்ந்து போனார்.

“நீ என் மகள் இல்லம்மா, நான் மனபூர்வமா ஏத்துகிட்ட என் மருமகள், என் காமாட்சியின் ஆசை கனவை நிறைவேத்துகிறேன்” என்று கூறி தருணின் கைகளில் சிவரஞ்சனியின் கையை வைத்தார்.

காதல் நெஞ்சங்கள், முட்களை கடந்து மலரை பறித்துவிட்டன. இனி எப்போதும் இன்பம் பொங்கும்
 
Top Bottom