Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL சொப்பனத்தில் வரும் சுந்தரனே! - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
சொப்பனத்தில் வரும் சுந்தரனே

குட்டி டீஸர்

"டேய் மச்சான்... இந்த ஃபார்ம் ஃபில் பண்ண முடியலை..." என்று சொல்லி ஒரு பேப்பரை தூக்கி கொண்டு அவனிடம் வந்தான் மெல்வின்...

"நாயே என்ஜினீயரிங் படிச்சி முடிச்சி தானே வேலைக்குச் சேர்ந்த... அதுவும் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருஷம் ஆக போகுது... இன்னும் உனக்கு ஒரு ஃபார்ம் ஃபில் பண்ண துப்பில்லை..." என்று அவனை பார்க்காமல் கத்தினான் அவன்...

"அடேய் நல்லவனே... நான் ஃபார்ம் ஃபில் பண்ண தெரியலை என்று சொல்லலை பக்கி... உன் ஃபார்மை ஃபில் பண்ணவே முடியலை அப்படின்னு மட்டும் தான் சொன்னேன்..." என்று கடுப்புடன் சொன்னான் மெல்வின்...

"ஓஹோ... ஆமா என்ன ஃபார்ம் அது..." என்றான் அவன்...

"தெரியாது... அந்த சொட்ட தலை தான்... இது ஏதோ டேக்ஸ் ஃபார்ம் ஆஆ... எல்லாருக்கும் ஃபார்ம் ஃபில் பண்ண சொல்லி என்னிடம் சொன்னான்..." என்று சொல்லி விட்டு அவன் அருகே உட்கார்ந்தான்...

அவன் பார்வை கணினியில் படிந்து இருக்க "அப்படியா..." என்று பதில் அளித்தான்...

"டேய் மச்சான்... உன்ன எவன் டா... ஆரன் செழியன் நந்தியவர்மன் என்று முழம் நீட்டுக்கு பேரை வைக்க சொன்னது... ஆமா உன் ஆதார் கார்டு ரேஷன் கார்டில் எல்லாம் உன் பேருக்கு இடம் பத்துதா..." என்று வேண்டுமென்றே அவனை வம்பு இழுத்தான் மெல்வின்...

இதை கேட்டு மெல்வினை பார்த்தவன்... "அடிங்க... இதோ பாரு மெல்லு... என் பேரு வெறும் ஆரன் செழியன் மட்டும் தான்... இந்த நந்தியவர்மன் ஆரியவர்மன் எல்லாம் யாருக்கு வேணும்... இதை வீட்டில் கேட்டா பெருசா மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை என்று சொல்லி வெட்டி பில்டப் வேற‌.. என்னோட பேருக்கு பின்னாடி அது இருந்தே ஆகணுமா... அது எனக்கு சுத்தமா பிடிக்கலை..." என்று கோபத்துடன் சொன்னான் ஆரன்...

"விடு ஆரன்... அது உன் குடும்பத்தோட (surname ) குடும்ப பெயர்... அதை நீ யூஸ் பண்ணி தானே ஆகணும்..." என்றான் மெல்வின்...

"வேணா மெல்லு... இங்க எனக்கு அட்வைஸ் பண்றேன்னு... அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருந்த... உனக்கு வாய் இருக்கும் ஆனால் திறக்க முடியாது... கம் எடுத்து கொட்டி விட்டு விடுவேன்... சோ... பீ கேர் ஃபுல் மெல்லு..." என்று சொல்லி எச்சரித்தான் ஆரன்...

"ஆரன்... ஆரன்... எனக்கு இன்னும் இருபது நாள்ல கல்யாணம் டா... அப்படி எல்லாம் பண்ணி வச்சி என் வாழ்க்கையில் கேம் ஆடாத... இந்த வாயை வச்சி தான் என் டார்லிக்கு நிறைய உம்மா எல்லாம் தரணும்..." என்று பாவமாக சொன்னான் மெல்வின்...

"அரென்ஜ் மேரேஜுக்கு இவ்வளவு பில்டப்... போடா இடியட்.." என்று சொல்லி விட்டு அவன் வேலையை தொடர்ந்தான் ஆரன்...

"என்னடா பொசுக்குனு இப்படி சொல்லிட்ட..." என்று நெஞ்சில் கை வைத்தான் மெல்வின்...

***********

"அம்மா..." என்று வீடே அலறும் படி கத்தினாள்...

"என்ன டி மேகா..." என்று சொல்லிக் கொண்டே வந்தார் மலர்மதி...

அவளுடைய நிலையை பார்த்து மதிக்கு சிரிப்பு தான் வந்தது...

"என்னடி உன் மனம் கவர்ந்த சுந்தரன் இன்னைக்கும் வந்தானா..." என்று மகளை பார்த்து கேட்டார் மலர்மதி...

"அம்மா தானே நீ..." என்று இடுப்பில் கை வைத்து கொண்டு சொன்னாள் மேகா மலர்குழலி....

"நான் உன் அம்மா தானே டி..." என்று பாவமாக கூறினார் மதி...

"ஒருத்தன் ஒரு வருஷமா என்னைய தினம் தினம் டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்... அவனை யாரும் ஏன்னு கேட்காதீங்க..." என்று மேகா கோபத்துடன் சொல்ல...

மகளை கண்டு சிரிப்பு வந்தாலும் அதை கட்டுப் படுத்திக் கொண்டு அவளை சமாதானம் செய்தார் மலர்மதி...

"ஆமா மதிமா... அப்பு எங்க..." என்று கேட்டாள் மேகா...

"மேகா அப்பு சொல்லாத அப்பா சொல்லு என்று சொன்னால் கேட்கவே கூடாதுன்னு இரு டி..." என்றார் மலர்மதி...

"அட... சின்ன புள்ளையில் நீங்க தானே எப்படி வேணாலும் கூப்பிடு ன்னு சொன்னீங்க... போ மா... என் அப்பாவை நான் எப்படி வேணாலும் கூப்பிடுவேன்..." என்று சொல்லி பழிப்பு காட்டினாள் மேகா...

அவளை பார்த்து மதியும் சிரித்துக் கொண்டே... "உன் அப்பாக்கு ஆஃபிஸில் ஏதோ முக்கியமான மீட்டிங்கா அதான் போய் இருக்காங்க..." என்று சொன்னார்...

"ஓஓ... சரி சரி..." என்று அமைதியாக இருந்தாள் மேகா மலர்குழலி...

**********

இந்த கதையின் டீஸர் எப்படி இருந்தது என்று சொல்லி விட்டு போங்கள்...

இந்த கதை அடுத்த மாதம் தான் ஆரம்பம் ஆகும்... அப்ப சொல்றேன் வேணும் என்றால் படிங்க செல்லம்ஸ் 😍😍

Urs...
Kani 😍🙈

சொப்பனத்தில் வரும் சுந்தரனே! - Comments
 

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
#my_own_lyrics

Song lyrics : கனவில் கண்டேன் கண்டேன்
By - நிலவின் தோழி கனி

🙈🙈🙈

கனவில் கண்டேன் கண்டேன்
உன்னை கண்டேன்
என் வாழ்வில் நொந்தேனே...

கனவில் கண்டேன் கண்டேன்
உன்னை கண்டேன்
என் மனதினில் நொந்தேனே...

என் கண்கள் ரெண்டும் மூடினால்
உன் பிம்பம் மட்டுமே தோன்றுதே...
என் கண்களை நானும் திறந்தால்
உன் நிழலும் மறைந்து போகுதே...

ஏனோ நானோ
உன்னால் தானோ
மாற்றம் வந்தது போலடா
ஏனோ நானோ
உன்னால் தானோ
மாறி போனேன் போலடா...

கனவில் கண்டேன் கண்டேன்
உன்னை கண்டேன்
என் வாழ்வில் துடித்தேனே...

கனவில் கண்டேன் கண்டேன்
உன்னை கண்டேன்
என் மனதிலும் துடித்தேனே...

தினம் தினம் வருகிறாய்
கனவினில் கரைகிறாய்
நினைவினில் இருக்கிறாய்
காதலை கனவில் சொல்கிறாய்
ஏனடா இம்சை செய்கிறாய்

என் அனுமதி இல்லாமலே
எனக்குள் ஏனடா வருகிறாய்
மனதில் ஏனடா புதைகிறாய்
உன் நிழலோடு வாழ வைக்கிறாய்...

ஒருநாள் கண்டேன் கண்டேன்
உன்னை கண்டேனே...
என் நிஜத்திலும் கண்டேனே...
என் வாழ்விலும் வென்றேனே...

என் வாழ்வினில் வென்றேன்...
என் மனதிலும் வென்றேன்...
நான் உன்னிடம் தோற்றேனே...
உன் அன்புக்கு முன்னே தோற்றேனே...
உன் எல்லை இல்லா அன்பிலே
நான் முழ்கி போனேனே...
உன் காதலை உணர்ந்தேனே...

கண்டேன் கண்டேன்
உன்னை கண்டேன்
உன் காதலை கண்டேனே...
உன் மீது வைத்த காதலில்
வெற்றியும் கொண்டேனே...


***********

ஹாய் செல்லமஸ் 😍

இது ஒரு பாட்டு தான்... பட் இது வேற பாட்டோட மியூசிக் வச்சி எல்லாம் எழுதலை... என்னுடைய ஓன் லிரிக்ஸ் தான்...

இந்த பாட்டை நான் எழுத போகும் இந்த கதையை மைண்ட்ல வச்சி எழுதிய பாட்டு...

இந்த கதையின் முதல் அத்தியாயம் கூடிய விரைவில் போடுறேன்...

மாஸா கதையோடு வரேன்...
அதுவரை சிவப்பு வண்ணம் கதையான எழுத்தாளினி நிசப்தா கதையை படித்து கருத்து சொல்லுங்கள்...

Urs...
Kani 😍🙈

சொப்பனத்தில் வரும் சுந்தரனே! - Comments
 
Last edited:

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
சொப்பனத்தில் வரும் சுந்தரனே

அத்தியாயம் - 1


என் சொப்பனத்தில் சுந்தரனாக வருகிறாய்...!!!
அதை நான் சுதாகரிக்கும் முன்னே செல்கிறாய்...!!!
நின் வதனம் காணும் முன்னே ஏனடா மறைகிறாய்...!!!
என்னை அறியாது என் மனதிற்குள் குடி இருக்கிறாய்...!!!
என் மனதை தினம் தினம் ஆக்ரமித்து வருகிறாய்...!!!
நொடி பொழுதும் காதலில்லா காதலால் இம்சித்து போகிறாய்...!!!!


கல்யாண மண்டபத்தை போல அலங்கரிக்கப் பட்ட சிவன் கோவில் அது... அந்தக் கோவிலில் கல்யாணம் செய்வதற்கு என தனியாக ஒரு இடம் இருந்தது... அது பாறாங்கற்களை செதுக்கி அழகாய் அமைக்கப்பட்ட கல்யாண மேடை போன்ற மண்டபம்...

அந்த இடம் முழுக்க நறுமணம் அளிக்கும் பூக்களால் சூழ்ந்து... மாவிலை தோரணங்கள் கட்டி தொங்க விடப் பட்டு இருந்தது...

திருமணத்திற்கு வந்து இருக்கும் விருந்தினர்கள் அமர்வதற்கு என ஓலை பாயும்... சில நாற்காலிகளும் போடப் பட்டு இருந்தன...

அங்கு மணப்பெண் அறை என்று கோவில் அலுவலகத்தின் ஒரு அறையை தான் ஒதுக்கி இருந்தனர்...

அங்கு தான் பெண்ணை அழகு கலை நிபுணர்... மணப்பெண்ணாக அலங்காரப் படுத்திக் கொண்டு இருந்தார்...

அவள் கண்களிலும் கண்ணீர் துளிகள் நிற்காமல்... ஆறாய் ஓடிக் கொண்டு இருந்தது...

அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் பவுடரையும்... அவர் வைத்திருந்த கிரீம்களையும்... அவர் முன்னே முகூர்த்த புடவையில் கல்யாண கலை இல்லாமல்... எதையோ இழந்தது போல துயரத்துடன் அமர்ந்திருக்கும் மணப் பெண்ணின் முகத்தில் அப்பிக் கொண்டு இருந்தார் அந்த பியூட்டிஷியன்...

பிறகு அலங்காரம் எல்லாம் சிறப்பாக முடிந்து.... அங்கிருந்தவர்கள் அவளை மணமேடைக்கு அழைத்து கொண்டு சென்றனர்... அவளும் மனதில் ஒரு வலியுடன் அங்கு சென்றாள்...

அவளுடைய மனதிலோ... 'எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல..." என்று கத்தி அழ தோன்றியது...

அங்கே இருந்த அனைவரிடமும் கல்யாணத்தை நிறுத்தும் படி... கண்ணால் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் மங்கையவள்...

ஆனால்... அதன் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்... வேறு வழி ஏதும் இல்லாமல்... அவள் மணமேடைக்கு சென்று... தலை குனிந்து அமர்ந்தாள்...

ஐயர் திருமணத்திற்கு கூறவேண்டிய மந்திரங்களை சொல்லிக் கொண்டு இருந்தார்...

அப்போது திடீரென அவள் கழுத்தில் மும்முடிச்சு போடப் பட்டது...

அங்கு பார்வையாளர்களாக அமர்ந்து இருந்த அனைவரும் அதிர்ச்சியாக மணமேடையை பார்த்தனர்...

"யார் இவன்..."

"என்ன இது..."

"புதுசா எவனோ ஒருத்தன் வந்து இருக்கான்...."

"அய்யய்யோ..."

"பாவி... என்ன காரியம் பண்ணிட்டான்..."

"அடடே... என்ன இப்படி திடு திப்புன்னு வந்து தாலியை கட்டிப்புட்டான்..." என்று அவரவர் பக்கத்தில் இருப்பவரிடம்... கண் மூக்கு காது வைத்து சொல்லிக் கொண்டு இருக்க...

அதனால் அந்த இடத்தினில் கொஞ்சம் சலசலப்பு அதிகம் ஆகியது...

இதை எல்லாம் தலை குனிந்த படியே கேட்டு கொண்டு இருந்த மணப்பெண்ணோ... அவள் கழுத்தில் தொங்கும் தாலியை கையில் எடுத்துப் பார்த்தவள்... அதிர்ச்சி ஆகி... தலை நிமிர்ந்து பார்க்க எத்தனிக்க...

"அய்யோ என் தலை முடி..." என்று கூறி அலறினாள் அவள்...

அவளுடைய விலோசனங்கள் இரண்டையும் மெதுவாக திறந்து பார்க்க... அவளின் தலைக்கு மேலே இரு நாய் குட்டிகளும்... அவளுடைய கார்குழல் கூந்தலை இழுத்து இழுத்து மும்மரமாக விளையாடிக் கொண்டு இருந்தது...

"அவ்வ்... ஈனு... டீனு... ரெண்டு பேரும் என் தலையை... என்னடா பண்ணிட்டு இருக்கீங்க... விடுங்க டா..." என்று அவள் கத்தி கொண்டு இருக்க...

அந்த குட்டி நாய்களோ... அவள் கத்துவதை கொஞ்சம் கூட பொருட் படுத்தாமல் அண்ணனும் தம்பியும் ஜாலியாக... அவள் மீது ஏறி... வவ் ன்னு குரைத்த படி... விளையாடிக் கொண்டு இருந்தனர்...

"ஆஆஆ... என்னைய விட்டு தள்ளி போங்க டா..." என்று சொல்லிய எழுந்து அமர்ந்து கொண்டாள்...

'ச்சே... இன்னைக்கு வந்தது கூட கனவு தானா... யாருடா நீ... ஏண்டா இடியட்... என்னை இப்படி ஒரு வருஷமாக கல்யாண டார்ச்சர் பண்ணிட்டு இருக்க... போடா தலையில்லா உடம்பா... மாயக்கார தந்தரா... சொப்பன சுந்தரா... வெண்கல குண்டு அண்டா...' என்று அவனுடைய பட்டப் பெயர்களை வைத்து... மனதிற்குள் திட்டிக் கொண்டு இருந்தாள் பாவையவள்...

அந்த நாய்க் குட்டிகளும் அவள் மடி மீது ஏறிக் கொண்டது...

"ஏய் ஜூலி... பசங்களை உனக்கு கண்டித்து வளர்க்க தெரியாதா... இன்னைக்கு இவனுங்களால் தான்... அந்த சைக்கோ இடியட்டைை பார்க்க முடியாமல் போச்சு..." என்று அவளுடைய மெத்தையில் கீழே அமர்ந்து இருந்த... அவர்களின் அம்மாவான ஜூலியிடம் புலம்பிக் கொண்டு இருந்தாள் அவள்...

ஜூலிக்கு பக்கத்தில் இருந்த பெண் குட்டி நாய் ஆன மீனு... தன் அம்மாவையும்... கத்திக் கொண்டே இருந்த அவளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தது...

ஜூலியோ அவளை பார்த்து... "வவ் வவ்..." என்று நாலு முறை சத்தமாக கத்தி விட்டு வெளியே போய் விட்டது...

அவள் மடியில் இருந்த இரண்டு குட்டி நாய்களும்... "வவ் வவ்..." என்று மெதுவாக கத்தி... அவளிடம் இருந்து எழுந்து... கீழே குதித்து வெளியே போனது...

அது வரை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த மீனு நாய் குட்டியும்... தன் அண்ணகளுக்கு பின்னால் அமைதியாக சென்றது...

இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த அவளோ அவ்வ் என்று கத்தி... "ச்சே... என்ன குடும்பம் உங்க குடும்பம்..." என்று சொல்ல...

அவள் மூளையோ சட்டென்று... 'ஹ்ம்ம்... பார்த்தா தெரியலை அது ஒரு நாய் ஃபேமிலி...' என்று கவுண்டர் கொடுத்தது...

"இப்ப இது ரெம்ப்ப்பபப... முக்கியமா..." என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள் அவள்...

பின்னர் அப்படியே எழுந்து வெளியே சென்றாள் மணாளனுடன் கனவில் வாழ்ந்து கொண்டு இருப்பவள்...

"அம்மா..." என்று வீடே அலறும் படி கத்திக் கொண்டே ஹாலுக்கு போனாள்...

"என்ன டி மேகா..." என்று சொல்லிக் கொண்டே வந்தார் அவளுடைய அம்மா மலர்மதி...

அவளுடைய நிலையை பார்த்து மதிக்கு சிரிப்பு தான் வந்தது...

ஒரு டீ ஷர்ட் மற்றும் ட்ராக் பேன்ட் நைட் டிரஸ்ஸில் இருந்தவள் இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டே நின்றாள் பெண்ணவள்...

பப்பிகள் அவள் தலை முடியில் விளையாடிக் கொண்டு இருந்ததில்... அது முழுவதுமாக கலைந்து போய்... ஜோக்கர் போல இருக்க... அதை கண்டு சிரித்து கொண்டு இருந்தார் மலர்மதி...

"ம்மா...." என்று மீண்டும் எஃம் ரேடியோ கத்துவது போல ஹை பிச்சில் கத்தினாள் மேகா...

"கடவுளே... நான் பொண்ணை பெத்து போடுவதற்கு பதிலாக... ரேடியாவை தான் பெத்து எடுத்து இருக்கேன் போல..." என்று அங்கலாய்த்து சொன்னார் மலர்மதி...

"ப்ச்ச்... என்னை கடுப்பேத்தாதே ம்மா..." என்று சொல்ல...

"என்னடி உன் மனம் கவர்ந்த சொப்பன சுந்தரன் இன்னைக்கும் வந்தானா... ஆமா இன்னைக்கு எப்படி தாலி கட்டினான்... இன்னைக்கும் என் மருமகனோட முகத்தை பார்க்கலையா..." என்று மகளை பார்த்து கேட்டார் மலர்மதி...

"அம்மா தானே நீ..." என்று இடுப்பில் கை வைத்து கொண்டே சொன்னாள் மேகா மலர்குழலி....

"நான் உன் அம்மா தானே டி... என் ஒத்த அன்பு மகளே...." என்று பாவமாக கூறினார் மதி...

"ஒருத்தன் ஒரு வருஷமா என்னைய தினம் தினம் டிசைன் டிசைனா கல்யாணம் பண்ணி... விடாமல் டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்... அவனை யாரும் ஏன்னு கேட்காதீங்க..." என்று மேகா கோபத்துடன் சொல்ல...

மகளை கண்டு சிரிப்பு வந்தாலும் அதை கட்டுப் படுத்திக் கொண்டு அவளை சமாதானம் செய்ய நினைத்தார் மலர்மதி...

"அடியே மேகா... அது வெறும் கனவு தானே..." என்று சொல்லி அவளை அணைப்புடன் பிடித்தார்...

"கனவாக இருந்தாலும்... என் கழுத்தில் எவனோ ஒருத்தன் எப்படி தாலி கட்ட முடியும்... அதுவும் ஒரு கனவில் கூட நீங்க ரெண்டு பேரும் இல்ல... நீங்க இல்லாமல் அவன் எப்படி எனக்கு தாலி கட்டலாம்..." என்று முக்கு சிவக்க கேட்டாள் மேகா...

"அப்போ அவன் தாலி கட்டியது பிரச்சனை இல்லை... நாங்க இல்லாமல் இருப்பது தான் பிரச்சனையா..." என்று மென் நகைப்புடன் கேட்டார் மலர்...

அன்னையை கண்ட மகளோ... "எனக்கு இந்த உலகத்தில் உள்ள எல்லாரையும் விட... நீயும் அப்பாவும் தான் ரொம்ப ரொம்ப முக்கியம்... அப்பறம் தான் யாராக இருந்தாலும்..." என்று பொத்தாம் பொதுவாக சொன்னாள் மேகா மலர்க்குழலி...

தன் பாசமிகு செல்ல மகளையே இமைக்காமல் கண்டு கொண்டு இருந்தார் மலர்மதி...

"ஆமா மதிமா... அப்பு எங்க..." என்று கேட்டாள் மேகா...

"மேகா அப்பு சொல்லாத அப்பா சொல்லு என்று சொன்னால் கேட்கவே கூடாதுன்னு ஒரு முடிவோடு இரு டி..." என்று கண்டிப்புடன் சொன்னார் மலர்மதி...

"அட... என்ன என் மலர் மேடமுக்கு குரல் ரொம்ப உயருது... சின்ன புள்ளையில் நீங்க தானே எப்படி வேணாலும் கூப்பிடு ன்னு சொன்னீங்க... போ மா... என் அப்பாவை நான் எப்படி வேணாலும் கூப்பிடுவேன்..." என்று சொல்லி பழிப்பு காட்டினாள் மேகா...

அவளை பார்த்து மதியும் சிரித்துக் கொண்டே... "உன் அப்பாக்கு ஆஃபிஸில் ஏதோ முக்கியமான மீட்டிங்கா அதான்... காலையிலேயே கிளம்பி ஆஃபிஸ் போய் இருக்காங்க..." என்று சொன்னார் மலர்மதி...

"ஓஓ... சரி சரி..." என்று அமைதியாக இருந்தாள் மேகா மலர்குழலி...

"என்ன தங்கம் காலேஜ் போற ஐடியா இல்லையா..." என்று கேட்க...

"ஹ்ம்ம் ம்மா... போகனும் போகனும்... என் காலேஜ் லைஃப் வேற இன்னும் மூணு இல்ல இரண்டு மாசத்துல முடிந்து விடும்..." என்று வருத்தமாக சொன்னாள் மேகா...

"அது முடிஞ்சு போனால் என்ன டி... அப்பாவோட கம்பெனியை பார்த்துக்கோ... அதை நீ எடுத்து ரன் பண்ணு..." என்று மலர்மதி கூற...

அவரை முறைத்து பார்த்தாள் மலர்க்குழலி...

"மதிமா... என்னை நீங்க எவ்ளோ கன்வின்ஸ் பண்ணாலும் அதை மட்டும் நடக்கவே நடக்காது... நான் வேற ஒரு கம்பெனியில் தான் வேலைக்கு போவேன்... நம்ம கம்பெனிக்கு போனால் எல்லார் கூடவும் மனசு விட்டு பேசி ஜாலியாக வேலை செய்ய முடியாது... எல்லாரும் என் கிட்ட இருந்து வன் ஸ்டெப் விலகி தான் நிற்பாங்க... பயந்து தான் பேசுவாங்க... அதை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது மதிமா... நானும் இதை பற்றி நிறைய முறை உங்க கிட்டயும் அப்பா கிட்டயும் சொல்லிட்டேன்... ப்ளீஸ் டிரை டூ அண்டர்ஸ்டாண்ட் மதிமா... ஹ்ம்ம்... எனக்கு காலேஜ் போக டைம் ஆக மாட்டேங்குது... நான் போய் அதுக்கு ரெடி ஆகிட்டு வரேன்..." என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள் மேகா...

இப்படி சொல்லி விட்டு போகும் தன் மகளையே வருத்தத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தார் மலர்மதி....

'எங்களுக்கு இவ தான் ஒரே பொண்ணு... எங்களுக்கு அப்பறம் மேகா தானே எல்லாத்தையும் பார்த்துக்கணும்... அதை புரிந்து கொள்ளாமல் இப்படி பேசிட்டு போறாளே...' என்று மனதில் நினைத்து... கவலை கொண்டார் அன்னையானவர்...

பிறகு... அந்த நினைவை எல்லாம் ஒதுக்கி விட்டு... தன் மகளுக்கு பிடித்த காலை உணவை செய்ய ஆரம்பித்தார் மலர்மதி...

********

மதிவாணன் மலர்மதி தம்பதிகளுக்கு அம்மா அப்பா என்று யாரும் இப்போது உயிருடன் இல்லை... சொந்தம் என்று சொல்லிக் கொள்ளவும் யாரும் இல்லை... ஆனால்... தொழில் முறை நட்பு வட்டாரங்கள் ஏராளமாகவும்... நெருங்கிய நட்பு வட்டாரங்கள் கொஞ்சமாகவும் உள்ளது...

மதிவாணன் - மலர்மதி தம்பதிகளுக்கு பிறந்த ஒற்றை பெண் பிள்ளை தான் மேகா மலர்க்குழலி... எம். எம். குரூப் ஆஃப் கம்பெனியின் ஒரே வாரிசு தான் இவள்...

இவ்வளவு வசதியான வீட்டு பெண்ணாக இருந்தாலும் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாத வாழ்க்கையை வாழ நினைப்பவள் தான் மேகா...

அவளுடைய மனதிற்கு பிடித்ததை சந்தோஷமாக செய்வது... அனைவரோடும் எந்த ஒரு பேதமும் பார்க்காமல் நட்பு பாராட்டுவது... இல்லாதவர்களுக்கு மனம் உவந்து உதவிகள் புரிவது... அம்மா அப்பா தான் உலகம் என்று வாழ்வது... காதலுக்கு பெரிய ஆர்வம் காட்டாமல் இருப்பது... இதுவரை மேகாவின் வாழ்க்கை... தெளிந்த நீரோடை போல அழகாக தான் சென்று கொண்டு இருந்தது...

ஆனால்... இந்த ஒரு வருட காலமாக தான்... அவளுடைய கனவில் முகம் தெரியாத ஒரு சுந்தரன் வந்து... எப்படியோ மேகாவுக்கு டிமிக்கி கொடுத்து... அவள் கழுத்தில் தாலியை மட்டும் கட்டி விட்டு போய் விடுகிறான்...

இந்த கனவு வந்த தொடக்கத்தில் எந்த டாக்ரிடம் போனாலும்... அந்த கனவு நின்ற பாடாக இல்லை...

இதில் மேகாவும் கொஞ்சம் சலித்து போய்... டாக்டர்களிடம் போவதை நிறுத்தி விட்டாள்...

பிறகு... அவள் கனவில் வரும் சுந்தரனின் முகம் பார்க்க ஆவல் கொண்டு இருக்க... மேகாவுக்கு அதில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது... கனவில் வரும் அவன் முகத்தை காணும் வாய்ப்பு இன்னும் கூட அம்மணிக்கு கிடைக்கவில்லை... அதனால் தான் தினம் தினம் காலையில்... அனைவரிடமும் எரிச்சல் பட்டுக் கொள்வாள் மேகா மலர்க்குழலி....


*******

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

👇👇👇

சொப்பனத்தில் வரும் சுந்தரனே! - Comments
 
Last edited:

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
அத்தியாயம் - 2

காதல் செய்வதில் எனக்கு இஷ்டமடி...!!!
ஆனால்...!!!
ஏனோ காதல் வருவதில் கஷ்டமடி...!!!
நீ என் வாழ்வில் இல்லாது (வராது) போனால்
என்னோடு சேர்ந்து உனக்கும் தானடி நஷ்டம்...!!!
நீ எப்போது வருவாயடி என் இதயத்தில்...!!!
உன்னை காதல் செய்கிறேன் என் மனதில்...!!!!
நாம் இணை பிரியாது வாழ்வோமடி இந்த உலகத்தில்...



ஶ்ரீபுரம் பொற்கோவில்... வேலூர் கோட்டை... ஜலகண்டேஸ்வரர் ஆலயம்... சி. எம். சி. மருத்துவமனை... என்று எண்ணில் அடங்கா சிறப்புகளை பெற்றது தான் வேலூர் மாவட்டம்...

இவை மட்டும் அல்லாது... வைணு பாப்பு வானாய்வகம் (Vainu Bappu Observatory)... வேலூரில் உள்ள காவலூரில் தான் அமைந்துள்ளது... இது தான் நம் இந்தியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி... இங்கு இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute of Astrophysics) நிறுவப்பட்டுள்ளது.... இது வானியல் முன்னோடியான வைணு பாப்பு அவர்களின் வானியல் பங்களிப்புக்காக இப்பெயர் சூட்டப்பட்டது.... இங்குள்ள 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்...

இவ்வளவு சிறப்பு மிக்க மாவட்டமாக வேலூர் இருந்ததாலும்... இதை பற்றி யாரும்... அதிகம் பேசப்படுவது இல்லை... தற்போது தான் கொஞ்ச கொஞ்சமாக ஸ்மார்ட் சிட்டியாக மாறிக் கொண்டு இருக்கிறது...

என்ன தான் இவ்வளவு முன்னேற்றம் இருந்தாலும்... சில இடங்களில் இன்னும் அப்படியே தான் இருக்கிறது...

அதில் ஒரு ஊர் தான் கொணவட்டம்... ஊரில் பஞ்சாயத்து முறை எல்லாம் மாறி மாநகராட்சியாகி கவுன்சிலர் வார்டு ஆனாலும்... அவர்களின் மனதில் பழமையின் குணம் கொஞ்சம் இருக்க தான் செய்தது...

அதில் ஒன்று ஜமீன்தார் குடும்பத்தை அந்த ஊர் மக்கள் மதித்து வருவது... அவர்களுக்கு முதல் மரியாதை கொடுப்பது என்று வாழ்ந்து வருகிறார்கள்... அதே போல் அந்த ஜமீன்தார் குடும்பமும் இன்றளவும் இல்லாத மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்...

பழமையிலும் புதுமையாக ஜொலித்து கொண்டு இருந்தது அந்த வீடு... இல்லை இல்லை அதனை அந்த காலத்து ராஜா மாளிகை என்றே கூறிக் கொள்ளலாம்... அதற்கு வெள்ளை மற்றும் மெரூன் நிறத்தால் வண்ணம் பூசப்பட்டு இருந்தது... அதன் கூரையில் நிறைய மர வேலைப்பாடுகள் செய்ய பட்டு...‌ அழகாய் இருந்தன... அந்த வீட்டினை காணும் அனைவரும் வாயில் கை வைத்து... ஒரு‌‌ நிமிடம் பிரமித்துப் போய் தான் பார்ப்பார்கள்...

அந்த ஊரிலேயே அது தான் பெரிய வீடு... பெரிய பெரிய தூண்கள் எல்லாம் வைத்து... மிகவும் பிரம்மாண்டமாக காட்சி அளித்தது... அந்த வீட்டை சுற்றி தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருந்தது... அந்த மாளிகைக்கு பெரிய இரும்பு கதவுகள் நிறுவப்பட்டு இருந்தது...

அதற்கு உள்ளே நுழைந்து பார்த்தால் பல வகை பூக்கள் பூத்துக் குலுங்க... மா... கொய்யா... வாழை... பப்பாளி... என்று மரங்கள் நிறைந்த.... தோட்டம் தான் நம் கண்களுக்கு விருந்தாக அமையும்...

அப்படியே அதனை கடந்து உள்ளே சென்றால்... அமர்வதற்கு என்று மரத்திலான தூண்கள் வைத்த திண்ணை இருந்தது... அதை தொடர்ந்து வீட்டின் தலை வாசலுக்கு நேர் எதிரே முற்றம் இருக்க... அங்கே இருந்த புறாக்கள் முற்றத்தில் தூவி இருந்த தானிய வகைகளை கொறித்து கொண்டு இருந்தது...

வீட்டில் உள்ள சாம்பிராணி தூபமும்... ஊதுபத்தி புகையும்... போட்டி போட்டுக் கொண்டு... அந்த இடம் முழுவதும் நறுமணம் வீசிக் கொண்டிருந்தது...

பூஜை அறையில் தெய்வங்களுக்கு தீபாராதனை காட்டி கொண்டு இருந்தார் அந்த வீட்டின் முக்கிய தலைவி பானுப்ரியா... சாந்தத்தின் மறு உருவம்... அனைவருக்கும் அன்னம் அளிக்கும் அன்னபூரணி... அந்த வீட்டின் மகராசி இவர்... அந்த வீட்டிலுள்ள ஒவ்வொரு நபரும் அவர் வழியில் பயணம் செய்தாலும் அவர்களை எல்லாம் இழுத்துப் பிடித்து நிறுத்தி வைப்பது இந்த மாதர் குலமே... பானுப்பிரியாவின் பேச்சுக்கு இந்த வீட்டில் அவ்வளவு மதிப்பு உண்டு... அதை மிகுந்த அளவில்லா பாசமும் உண்டு...

பூஜையை முடித்து விட்டு அவருடைய அறைக்கு சென்றார் பானு... அங்கே அவருடைய கணவர் பாரியவேல் நந்தியவர்மன்... வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையுடன்... வெளியே கிளம்ப தயாராகிக் கொண்டு இருந்தார்... அதில் அவருடைய கம்பீரம் மெருகேறி இருந்ததே தவிர குறையவில்லை... கண்ணில் பிரேம் வைத்த கண்ணாடி... கழுத்தில் அவர்கள் பரம்பரையின் குடும்ப சங்கிலி அணிந்து இருந்தார்... வெள்ளை நிறத்தில் முறுக்கு மீசை மற்றும் அளவான தாடி... ஊரில் மதிப்பு மிக்க மனிதர் எனும் பெருமைக்கு உரியவர் தான் பாரியவேல்...

அவர் எதிரே மனைவி வந்து நிற்க... "என்ன..." என்றார்...

"என்னங்க காலையிலேயே புறப்பட்டு விட்டீங்க போல... கொஞ்ச நேரம் வீட்டில் இருங்க... நம்ம சின்னவன் ஊருக்கு கிளம்பிட்டு இருக்கான்... அவனை வழி அனுப்பிட்டு அப்பறமா வெளியே போங்களேன்..." என்று கெஞ்சும் குரலில் கேட்டார் பானு...

அவரோ மனைவியை ஒரு வெட்டும் பார்வை பார்த்தார்...

"மொதல்ல உன் செல்ல மகனை அந்த வேலையை விட்டுட்டு வர சொல்லு... அப்போ தான் அவன் என் புள்ள... இந்த சொத்து முழுக்க என் பிள்ளைகளுக்கு தானே... அவன் ஏன் வீணாக போய் அடுத்தவன் முன்னாடி கை கட்டி வேலை செய்யனும்... எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கலை பானு... நம்ம பரம்பரை பெருமையை சீர்குலைக்கவே இருக்கான் உன் மகன்..." என்று அவர் காட்டமாக சொல்ல...

பானுவின் மனதிலோ... 'ஹ்ம்ம்... ஏதாவது தப்பு பண்ணால் மட்டும் என் பசங்க... அதுவே பாராட்டு வாங்கினால் உங்க மகனா.... என்னங்க இது நியாயம்... ஊரில் நடக்கும் எல்லா தப்புக்கும் தீர்வு சொல்லும் பெரிய மனுஷருக்கு இந்த நியாயம் மட்டும் விளங்கவே விளங்காது போல....' என்று ஓடிக் கொண்டு இருந்தது...

"எனக்கு துகிலனை விட செழியனை தான் ரொம்ப பிடிக்கும்... அது உனக்கும் தெரியும் பானு... நான் அவன் கிட்ட கோபத்தை காட்டியது கிடையாது... நான் கேட்பது ஒன்றே ஒன்று தான்... இந்த வேலையை விட சொல்லி தான் நான் சொல்றேன்... அதை விட்டுட்டு என்னை அப்பான்னு கூப்பிட சொல்லு... போ..." என்று கோபத்துடன் சொன்னார் பாரியவேல்...

பானுவோ கணவரை மேலும் கீழும் பார்த்து விட்டு... "சரிங்க..." என்று சொல்லி விட்டு... திரும்பி நின்று நடந்தவர்... மனதிற்குள் ஒன்று இரண்டு மூன்று என்று எண்ணிக் கொண்டு இருந்தார்...

அதற்குள் பாரியவேல்... "பானு நில்லு..." என்று கத்தி அழைக்க... பானுவும் அதை கேட்டு... மேலும் ஒரு அடி எடுத்து வைக்காமல்... அவரை திரும்பி பார்க்காமல்... அதே இடத்தில் அப்படியே நின்றார்...

அவரின் முகமோ இப்போது கனிவான மாறியது... "அவனை பார்த்து பத்திரமாக போக சொல்லு... ஒழுங்கா சாப்பிட சொல்லு... அவனுக்கு என்ன தேவையோ அதை சரியாக பார்த்து... எல்லாத்தையும் கொடுத்து அனுப்பி வை... புரியுதா..." என்று பாரி சொல்லிக் கொண்டு இருக்க... பானுவுக்கு சிரிப்பு தான் வந்தது...

"அவ்வளவு தானா..." என்று பானு கேட்க...

"ம்ம்... நான் கிளம்பறேன்..." என்று சொல்லிய பாரியவேலின் முகம் மீண்டும் இறுக்கமாக மாறி இருந்தது... அவரோ வெளியே சென்று விட்டார்...

அவரையே கண்டு கொண்டு இருந்த பானுப்ரியா... 'இந்த வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் அகத்தில் பாசம் இருக்கும்... ஆனால் முகத்தில் மட்டும் வண்டி வண்டியாக வெட்டி ரோசம் இருக்கும்... அப்படி அதை பற்றி எதையாவது நாம கேட்டால்... முகத்தை விரைப்பாக வச்சிட்டு பட்டும் படாமல் பதில் சொல்லிட்டு போக வேண்டியது...' என்று மனதில் சலிப்பாக நினைத்துக் கொண்டார்...

அப்போது ஆறடி உயரத்தில்... உடற்பயிற்சி செய்யும் காரணத்தால் அளவான உடற்கட்டு கொண்டு தேகம்... அதற்கு மேலும் அழகு சேர்க்க.... கருப்பு கலர் கார்கோ ஷர்ட்டும்... அதே கருப்பு நிறத்தில் டெனிம் ஜீன்ஸ் என்று உடல அணிந்து கொண்டு... ஆணழகனாய் வந்து நின்றான் பாரியவேல் மற்றும் பானுப்பிரியா இருவரின் இரண்டாம் புதல்வன்... நம் கதையின் நாயகன்... ஆரன் செழியன் நந்தியவர்மன்...

அவன் வந்ததும்... புன்னகை அரும்பும் முகத்துடன் பானுவை கட்டி அணைத்தான்... ஆனால்... அவரோ முகத்தை உர் என்று வைத்திருந்தார்...

"அம்மா... அப்போ நான் கிளம்பறேன்... டைம் ஆச்சு..." என்று ட்ராவல் பேக்கை எடுத்துக் கொண்டே சொன்னான் ஆரன்...

அவன் அம்மாவோ அதற்கு எதுவும் பதில் கூறாமல் வெறுமனே நின்று கொண்டு இருந்தார்...

"இப்படி முகத்தை வச்சிட்டா நல்லாவா இருக்கு... பத்து கிலோ கடுகு போட்டாலும் பட்டுனு பொரிந்து விடும்... அப்படி இருக்கு மா உங்க முகம்..." என்று கூறி பெருமூச்சு விட்டவன்... "சரி பை பை..." என்று சொல்லி விட்டு சென்றான் அவன்...

"டேய் செழியா...." என்று போகும் செல்ல மகனை அழைத்தார் பானு...

ஆரனோ நிற்காமல் தன் பையை மாட்டிக் கொண்டு சென்றான்...

"செழியா நில்லு... நில்லுன்னு சொல்றேன் தானே..." என்று கத்தினார் பானுப்ரியா...

அவரின் கத்தலை கேட்டு நின்றவன்... "என்ன ம்மா..." என்று கடுப்புடன் சொன்னான் ஆரன்...

"இப்படி எல்லாம் கோபப் படாதே பா... அப்பா உன் நல்லதுக்கு தானே சொல்றாரு... இந்த ஊரில் இருந்து... உன் அண்ணானை போல அப்பாவுடைய வேலையை நீயும் பார்த்துக்கலாம் தானே..." என்று எப்போதும் கூறும் பாரதத்தை பாடினார் பானுப்ரியா...

அவனோ எதுவும் சொல்லாமல் அவரை முறைத்து பார்த்து கொண்டு இருந்தான்...

"ம்மா... எப்ப பார்த்தாலும் உங்களுக்கு இதே பேச்சு தானா... எனக்கென்று ஒரு அடையாளம் இருக்கணும் என்று ஆசை படறேன்... ஆனால்... நீங்க என்னன்னா என் அடையாளத்தை இழந்து உங்க கூட இங்க இருக்க சொல்றிங்க.... நான் ஒன்னும் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ள நினைக்கலை மா... என் வேலை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு... அதனால்... நான் அதை செய்ய நினைக்கிறேன்... அவ்வளவு தான்... ஆனால் ஏன் இந்த வீட்டில் இருக்கும் யாரும் அதை புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம் பிடிச்சிட்டு இருக்கீங்க... இங்க வந்து என்னால கம்ஃபோட்டபிளா இருக்க முடியாது... என் கிட்ட யாரும் ஃப்ரெண்ட்லியாக நாலு வார்த்தை பேச மாட்டாங்க... இன்னும் கூட இந்த ஊர் மக்கள் நம்ம வீட்டில் உள்ள எல்லார் மேலயும் மதிப்பு மரியாதை என்று கொடுத்து இப்படி உயர்த்தி உயர்த்தி வச்சி இருக்காங்க... எனக்கு இந்த பரம்பரை அது இதுன்னு எதும் வேண்டாம் ம்மா... ப்ளீஸ்... என்னை கட்டாயப் படுத்தாதீங்க மா..." என்று எப்போதும் சொல்வது போல இன்றும் அவனுடைய அன்னையிடம் ஒப்பித்தான் செழியன்...

அவனை ஆழ்ந்து பார்த்தவர்... "செழியா..." என்றார் பானுப்ரியா...

"சொல்லுங்க..."

"நீ ஏன் பா... இதை ஒவ்வொரு முறையும் என் கிட்ட பேசி பேசி... ப்ச்ச்... இதனால் உனக்கு தொண்டை வலிக்கும் தானே... நீ உன் செல் ஃபோன்ல பேசி வச்சிட்டு... அதையே எனக்கு போட்டு போட்டு காமிச்சா... நானும் அதை கேட்க போறேன்... அவ்வளவு தானே... இதுக்கு ஏன் டா மூச்சை பிடித்து பேசிட்டு கிடக்க..." என்று சிரிக்காமல் சீரியஸாக சொன்னார் அவனுடைய தாய்...

இதை கேட்டதும்... அவன் அதரங்கள் புன்னகையில் வளைந்து கொண்டன...

"இந்த ஐடியாவை அடுத்த முறை யூஸ் பண்றேன் அம்மா..." என்று சொல்லி... அவர் கன்னத்தில் முத்தம் பதித்தான் ஆரன்...

"அப்பறம்..."

"ஹ்ம்ம்... அப்பறம்... அப்பாவுக்கு கரெக்ட் டைமுக்கு சுகர் டேப்லெட் கொடுங்க... கொஞ்சம் கூட அவருக்கு ஸ்வீட்டை கண்ணில் காட்டாதீங்க... அவரு கொஞ்சிக் கேட்டாலும் கெஞ்சிக் கேட்டாலும்... எப்படி கேட்டாலும் கொடுக்காதீங்க... புரியுதா..." என்று சீரியஸாக சொன்னான் ஆரன்...

பானுவும் சிரித்துக் கொண்டே...‌ "ம்ம்... ம்ம்... புரியுது செழியா... ரொம்ப நல்லாவே புரியுது..." என்றார்...

"ஹ்ம்ம்..."

"சரி பார்த்து பத்திரமாக போ... காரில் போக போற... உன் கவனம் சாலையில் மட்டும் இருக்கட்டும்... ஃபோனை பேசணும் அதை பேசணும்னு சொல்லிட்டு பொத்தாம் பொதுவாக வண்டியை ஓட்டிட்டு போவாதே... சரியா..." என்று அன்பாக கண்டிப்பில் கூறினார் பானுப்ரியா...

அவனும் சரி என்று சொல்லி விட்டு... அவனுடைய கருப்பு நிற ஹூண்டாய் கிரீட்டா காரில்... பெங்களூருக்கு புறப்பட்டு சென்றான்...

வேலூரில் இருந்து பெங்களூருவின் ஐந்து மணி நேரத்தை பயணத்தை... நாலு மணி நேரத்தில் முடித்து இருந்தான் ஆரன் செழியன் நந்தியவர்மன்...

பிறகு... அவனுடைய ஃப்ளாட்டுக்கு வந்து குளித்து முடித்து... அம்மா கொடுத்து அனுப்பிய உணவையே உண்டு விட்டு... பயண களைப்பில் கொஞ்சம் நேரம் உறங்கி விட்டான்...

மாலை எழுந்து கொஞ்சம் நேரம் கைப்பேசியை பார்த்து நேரத்தை போக்கி கொண்டு இருந்தவன்...

இப்போது அவனுக்கு இரவில் வேலை என்று ஷெடியூல் இருந்தது... அதனால்... அவனுடைய வேலை செய்யும் ஐடி கம்பெனிக்கு செல்ல தயார் ஆகிக் கொண்டு இருந்தான்...

அவனுடைய கார் பணி புரியும் ஐடி கம்பெனியின் உள்ளே நுழைந்து... அதை பார்க்கிங்கில் விட்டுட்டு வேகமாக உள்ளே சென்றான் ஆரன்...

அவனுடைய இருப்பிடத்திற்கு சென்று... இருக்கையில் அமர்ந்து... அவன் செய்ய வேண்டிய பணிகளை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டு இருந்தான்...

அப்போது... "டேய் மச்சான்... இந்த ஃபார்ம் ஃபில் பண்ண முடியலை..." என்று சொல்லி ஒரு பேப்பரை தூக்கி கொண்டு அவனிடம் வந்தான் ஆரனின் நண்பன் மெல்வின்...

"நாயே என்ஜினீயரிங் படிச்சி முடிச்சி தானே வேலைக்குச் சேர்ந்த... அதுவும் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருஷம் ஆக போகுது... இன்னும் உனக்கு ஒரு ஃபார்ம் ஃபில் பண்ண துப்பில்லை..." என்று அவனை பார்க்காமல் கத்தினான் அவன்...

"அடேய் நல்லவனே... நான் ஃபார்ம் ஃபில் பண்ண தெரியலை என்று சொல்லலை பக்கி... உன் ஃபார்மை ஃபில் பண்ணவே முடியலை அப்படின்னு மட்டும் தான் சொன்னேன்..." என்று கடுப்புடன் சொன்னான் மெல்வின்...

"ஓஹோ... ஆமா என்ன ஃபார்ம் அது..." என்றான் அவன்...

"தெரியாது... அந்த சொட்ட தலை தான்... இது ஏதோ டேக்ஸ் ஃபார்ம் ஆஆ... எல்லாருக்கும் ஃபார்ம் ஃபில் பண்ண சொல்லி என்னிடம் சொன்னான்..." என்று சொல்லி விட்டு அவன் அருகே உட்கார்ந்தான்...

அவன் பார்வை கணினியில் படிந்து இருக்க "அப்படியா..." என்று பதில் அளித்தான்...

"டேய் மச்சான்... உன்ன எவன் டா... ஆரன் செழியன் நந்தியவர்மன் என்று முழம் நீட்டுக்கு பேரை வைக்க சொன்னது... ஆமா உன் ஆதார் கார்டு ரேஷன் கார்டில் எல்லாம் உன் பேருக்கு இடம் பத்துதா..." என்று வேண்டுமென்றே அவனை வம்பு இழுத்தான் மெல்வின்...

இதை கேட்டு மெல்வினை பார்த்தவன்... "அடிங்க... இதோ பாரு மெல்லு... என் பேரு வெறும் ஆரன் செழியன் மட்டும் தான்... இந்த நந்தியவர்மன் ஆரியவர்மன் எல்லாம் யாருக்கு வேணும்... இதை வீட்டில் கேட்டா பெருசா மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை என்று சொல்லி வெட்டி பில்டப் வேற‌.. என்னோட பேருக்கு பின்னாடி அது இருந்தே ஆகணுமா... அது எனக்கு சுத்தமா பிடிக்கலை..." என்று கோபத்துடன் சொன்னான் ஆரன்...

"விடு ஆரன்... அது உன் குடும்பத்தோட (surname ) குடும்ப பெயர்... அதை நீ யூஸ் பண்ணி தானே ஆகணும்..." என்றான் மெல்வின்...

"வேணா மெல்லு... இங்க எனக்கு அட்வைஸ் பண்றேன்னு... அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருந்த... உனக்கு வாய் இருக்கும் ஆனால் திறக்க முடியாது... கம் எடுத்து கொட்டி விட்டு விடுவேன்... சோ... பீ கேர் ஃபுல் மெல்லு..." என்று சொல்லி எச்சரித்தான் ஆரன்...

"ஆரன்... ஆரன்... எனக்கு இன்னும் இருபது நாள்ல கல்யாணம் டா... அப்படி எல்லாம் பண்ணி வச்சி என் வாழ்க்கையில் கேம் ஆடாத... இந்த வாயை வச்சி தான் என் டார்லிக்கு நிறைய உம்மா எல்லாம் தரணும்..." என்று பாவமாக சொன்னான் மெல்வின்...

"அரென்ஜ் மேரேஜுக்கு இவ்வளவு பில்டப்... போடா இடியட்.." என்று சொல்லி விட்டு அவன் வேலையை தொடர்ந்தான் ஆரன்...

"என்னடா பொசுக்குனு இப்படி சொல்லிட்ட..." என்று நெஞ்சில் கை வைத்தான் மெல்வின்...

"பின்ன வேற எப்படி சொல்லணும் டா மெல்லு..." என்று அலட்சியமாக கேட்டான் ஆரன்...

"அது ஒன்னும் சாதாரணம் கிடையாது ஆரன்..." என்று மெல்வின் சொல்ல...

"எஸ்... அதே தான் நானும் சொல்றேன்... அரென்ஜ் மேரேஜில் மேக்சிமம் ரெண்டு மூணு வாட்டி பார்ப்போமா... அதை வச்சு ஒரு பொண்ணு கழுத்தில் எப்படி தாலி கட்டுவது..." என்றான் செழியன்.‌‌..

அவனை கேவலமாக ஒரு லுக்கு விட்ட மெல்வின்... "ஏன் ரெண்டு கையும் நல்லா தானே வேலை செய்யுது... பக்கவாதம் எல்லாம் இல்லைல... ஒழுங்கா இருக்கு தானே... அப்போ அதை வச்சி தான் தாலி கட்டணும்..." என்று நக்கலாக சொன்னான் மெல்வின்...

"உன் மூஞ்சிய உடைக்க போறேன் பாரு‌... ஒருவேளை நீ கல்யாணம் பண்ணதுக்கு அப்பறம் அந்த பொண்ணை பிடிக்காமல் போச்சுன்னா என்ன செய்யவ..." என்று ஆரன் அழுத்தமாக கேட்க...

இதை கேட்டதும்... "அடப்பாவி... எனக்கு கல்யாணதுக்கு முன்னமே டிவோஸ் பண்ண பிளான் போட்டுட்டீயா..." என்று மயக்கம் வராத குறையாக தான் மெல்வின்...

"அப்படி எல்லாம் இல்ல மச்சி... நான் சொல்ல வருவது என்னன்னா... என்னை பொறுத்த வரை ஒருவனுக்கு ஒருத்தி தான்... அந்த ஒருத்தி நமக்கே நமக்கு மட்டும் தான் இருக்கணும்... அது நமக்கு பிடிச்சவளா இருக்கணும்... அந்த பொண்ணுக்கும் நம்மளை ரொம்ப பிடித்து இருக்கணும்... ரெண்டு பேருக்கும் முதல்ல மனசு ஒத்து போய் இருக்கணும்... அதுக்கு நம்ம கூட பழகிய பொண்ணு தான் சரியா வரும்... ஏதோ ஒரு பொண்ணை பார்த்ததும் அவளை பிடித்து இருக்கு... கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லிட்டால் அவ்வளவு தானா... ஆனால் கல்யாணம் முடிந்து கொஞ்ச நாளில் ரெண்டு பேருக்கும் செட் ஆகலை என்றால் என்ன பண்ண முடியும்... சோ... அரென்ஜ் மேரேஜை விட லவ் மேரேஜ் தான் கொஞ்சம் பெஸ்ட்..." என்று ஆரன் பொறுமையாக சொல்லி முடிக்க... மெல்வினோ அவனை கையெடுத்து கும்பிட்டான்....

"இனி உன் சங்காத்தமே எனக்கு வேண்டாம் தெய்வமே... உன்னை எல்லாம் நான் ஃபிரண்ட் ன்னு சொல்லிக் கொள்வதற்கு பதிலாக... தூக்கு மாட்டி தொங்கிக்கலாம்..." என்று கடுப்புடன் சொன்னவன்... "ஹ்ம்ம்... உன் கிட்ட பேச வந்ததற்கு பதில்... நான் அந்த சொட்ட சொன்ன வேலையவே செய்து இருக்கலாம்..." என்று சோகமாக சொல்லி விட்டு... நண்பனிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டான்..

அவனை பார்த்து சிரித்து விட்டு... மீண்டும் வேலையில் மூழ்கிப் போனான் ஆரன் செழியன் நந்தியவர்மன்...

'ஆமா... இவன் இப்படி வாய் கிழிய பேசுவான்... ஆனால் எந்த பொண்ணை பார்த்தாலும் பிடிக்கலை பிடிக்கலை என்று சொல்ல வேண்டியது.... ஏதாவது ஒரு பொண்ணு இவனுக்கு வந்து ப்ரபோஸ் பண்ணாலும்... சிரிக்க சிரிக்க பேசி மனசு நோகாத மாதிரி ரிஜெக்ட் பண்ண வேண்டியது... இங்க எனக்கு மட்டும் காதல் பாடம் எடுக்க வேண்டியது...' என்று மனதில் புலம்பிக் கொண்டே... அவனுடைய வேலையை பார்க்க சென்று விட்டான் மெல்வின்...

*************

உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் 👇👇

சொப்பனத்தில் வரும் சுந்தரனே! - Comments
 
Last edited:

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
அத்தியாயம் - 3

உன் நினைவில் என்னை மறக்கிறேன்...!!!
ஆனால்... ஏனோ மறதியிலும் நித்தம்
உன்னை மட்டுமே விடாமல் நினைக்கிறேன்...!!!
அந்த நினைவோடு தான் எப்போதும் வாழ்கிறேன்...!!!
உன்னை நினைத்து நான் ஒவ்வொரு நாளும் துயில்கிறேன்...!!!
உன் நினைவோடு தான் அனுதினமும் ரகமாக கழிக்கிறேன்...!!!
அதே நினைவால் தான் எந்நாளும் தவிக்கிறேன்...!!!!


மேகா குளித்து முடித்து... தன்னை தயார் படுத்தி கொண்டு வந்து வெளியே வந்தாள்...

"அம்மா டிபன்..." என்று கத்தி விட்டு... டைனிங் டேபிளில் அமர்ந்து அங்கிருந்த கரண்டிகளை எடுத்து தாளம் தட்டிக் கொண்டு இருந்தாள்...

அவள் அன்னை மலர்மதி அதை பிடுங்கி.... "மேகா கரண்டியை வச்சி லொட்டு லொட்டுன்னு தட்டாதே என்று உனக்கு எத்தனை முறை சொல்றது..." என்று கூறிய படி... அவளுக்கு ஒரு தட்டை வைத்து... அதில் ரவா இட்லி வைத்து... அதற்கு தொட்டுக் கொள்ள சாம்பாரும் கெட்டி தேங்காய் சட்னியும் ஊற்றினார்...

"அடடே... இன்னைக்கு ரவா இட்லியா..." என்று சொல்லி... அதை பிட்டு ஒரு வாய் சாப்பிட்ட மேகா... "ஆஆஆ... சூப்பரோ சூப்பர் மா... சைடிஷ் தொடாமல் வெறும் இட்லியை சாப்பிட்டதே அமிர்தம் போல இருக்கு... இரு இரு...‌ இப்போ சட்னி சாம்பார் ஒன்னா தொட்டு சாப்பிட்டு பார்க்கிறேன்..." என்று கூறி... அதை செய்யவும் செய்து... "ஹ்ம்ம்... இது வாயில் வைத்து மெல்லும் போது... ஆஹா... அப்படியே தேவமிர்தம் மாதிரி இருக்கு..." என்று சொல்லி கொண்டே... அதை சப்பு கொட்டி சாப்பிட்ட அன்பு மகளை மென் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தார் மலர்மதி...

அவள் சாப்பிட்டு முடித்து... "சரி அம்மா... நான் காலேஜ் கிளம்புறேன்..‌. பை பை... எதோ உன் கன்னத்தை என் பக்கம் திருப்பி காட்டு..." என்று சொல்லி அன்னையின் கன்னத்தில் முத்தம் கொடுத்து... அவளுடைய ஸ்கூட்டியில் சிட்டாக பறந்து விட்டாள் மேகா மலர்க்குழலி...

தன் போக்கில் வாழ்க்கையை எளிமையாக... தனக்கு பிடித்தது போல வாழும் மகள் போவதை கொஞ்சம் கவலையுடன் பார்த்த அவளின் அன்னை... அவள் எப்போதும் அப்படி தான் என்று மனதில் நினைத்து கொண்டு... அவர் வேலைகளை பார்க்க வீட்டின் உள்ளே சென்றார்...

ஸ்கூட்டியில் போய் கொண்டு இருந்த மேகாவின் ஃபோன் அலறுவதை கேட்டு... வண்டியை சாலையின் ஓரமாக நிறுத்தினாள்...

அந்த அழைப்பு ஏற்று... "சொல்லு நைனி... ஹ்ம்ம்... ஹ்ம்ம்... சரி விடு... நீ வீட்டிலேயே இரு நானே வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்... ஓகே பை டி..." என்று சொல்லி விட்டு கைபேசியை அணைத்து விட்டு... வண்டியை அவள் நண்பி நைனிகா வீட்டை நோக்கி செலுத்தினாள்...

வீட்டின் வாசலிலேயே நின்று கொண்டு இருந்தாள் மேகாவின் நெருங்கிய தோழியில் ஒருத்தியாக இருக்கும் நைனிகா...

"மங்கி... உன்னை பிக்கப் பண்ணனும் என்றால் முன் கூட்டியே சொல்ல மாட்டீயா... நான் இந்நேரம் காலேஜ் போய் இருந்தால் என்ன பண்ணி இருப்ப..." என்று நைனியிடம் பொங்கினாள் மேகா...

அதற்கு அவளோ யாருரு... நீயா... என்பது போல பார்த்து நக்கலாக சிரித்தாள்...

"என்ன டி இப்ப..."

"நீ உன் கனவு காதலன் கூட டூயட் பாடிட்டு இருப்ப... ஆமா செல்லம்... உன் சொப்பனத்தில் வந்த சுந்தரன்... அவன் முகத்தை காட்டினானா இல்லையா..." என்று நைனி கேட்க....

முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு... இல்லை எனும் விதமாக தலை ஆட்டினாள் மலர்க்குழலி...

"இன்றைக்கு உன்னை... ஐ மீன் உன் கனவை யார் டிஸ்டர்ப் பண்ணது..."

"அந்த ஜூலியோட பசங்க தான்..."

"ஹாஹா..."

"அடியே சிரிக்காமல் இரு டி... எனக்கு கடுப்பு தான் வருது... எனக்கு ஏன் தான் இந்த விநோதமான வியாதியோ தெரியலை... எல்லாம் எனக்குன்னு வருது பாரு... அந்த பரதேசி மட்டும் என் வாழ்கையில் வரட்டும்... வச்சி வச்சி செய்யறேன்... நான் படுத்தும் பாட்டில்..." என்று எரிச்சலாகவும் கடுப்பாகவும் சொல்லிக் கொண்டு இருந்தாள் மேகா...

அதற்கு இடையில் புகுந்த நைனிகா... "குரட்டை விட்டு தூங்கி விடுவானா மச்சி... அந்த அளவுக்கா உன் ராஜ தந்திரங்கள் மோசமாக இருக்கும்..." என்று சிரிக்காமல் சொல்ல... அவளை தீப்பொறி பார்வை பார்த்தாள் மேகா...

"ஏய் பத்ரகாளி... என்ன லுக்கு... வா காலேஜ் போகலாம்... டைம் ஆகுது... வண்டியை ஸ்டார்ட் பண்ணு டி..." என்று சொல்லிய படி... ஸ்கூட்டியில் ஏறிக் கொண்டாள் நைனி...

"வா வா போற வழியில்... ஏதாவது ஒரு குட்டையில் உன்னை மட்டும் தள்ளிட்டு நான் மட்டும் காலேஜ் போறேன்..." என்று கூறிக் கொண்டே வண்டியை கிளப்பினாள் மேகா...

"ஹி ஹி... சூப்பர் டி மச்சி... இந்த ஐடியா நல்லா தான் இருக்கு... நீ மட்டும் காலேஜ் போ... என்னை எங்காவது இறக்கி விட்டுடு... நான் விகாவுக்கும் ஃபோன் பண்ணி காலேஜ் வராதே என்று சொல்லிடறேன்... நீ மட்டும் அந்த ஹிஸ்டீரியா ஆஃப் டைனோசர் கிட்ட தனியாக மாட்டி பே பே ன்னு முழிச்சிட்டு இரு... ஹாஹா... அதை நினைத்து பார்க்கும் போதே எவ்வளவு ஆனந்தமா இருக்கு..." என்று சொல்லி சிரித்தாள் நைனிகா...

"அடிங்க... நல்லா தான் டி பிளான் பண்றீங்க... ஏற்கெனவே எனக்கும் அந்த டைனோருக்கும் ஆகவே ஆகாது... எப்ப டா சான்ஸ் கிடைக்கும் என்னை மட்டம் தட்டி பேசலாம் என்று காத்துட்டு இருக்கு... அது வாயில் நானா போய் தலையை விட... நான் என்ன உன்னை போல‌ ஒரு லூசா... நான் மேகா‌... மேகா மலர்க்குழலி..." என்று சொல்லி காலரை தூக்கி விட முயற்சிக்க... வண்டி ஆட்டம் காண தொடங்கியது...

"தெய்வமே நீ யாராக வேணாலும் இரு... உன்னை ஒரு குட்டி யானை வருது... அது மேலே ஏறி டேன்ஸ் ஆடாமல் ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டு எருமை... உயிரு முக்கியம் பிகிலு..." என்று கத்தினாள் நைனி...

"சும்மா நைய் நைய்னு பேசாமல் கம்முனு வா நைனி.... அதெல்லாம் எனக்கு ஒழுங்கா தான் ஓட்ட தெரியும்..." என்று சொல்லி விட்டு... சாலையில் கவனத்தை வைத்தாள் மேகா...

இருவரும் பேசி பேசியே ஒருவழியாக கல்லூரி வந்து சேர்ந்தனர்... அவர்களுக்காக வெளியே காத்துக் கொண்டு இருந்தாள் விகாஷினி...

"ஏய் விகா... என்ன டி உன் வேலையை சிறப்பாக பார்த்துட்டு இருக்க போல..." என்று கேட்டபடி இறங்கினாள் மேகா...

"ஏது வேலையா.... அப்படி நான் என்ன வேலை பார்தேன்..." என்று சொல்லி முழித்தாள் விகாஷினி...

"முண்டம்... அவ நீ பார்க்கும் வாட்ச்வுமன் வேலையை தான் சொல்லிட்டு இருக்கா... அது கூட தெரியாமல் திருட்டு முழி முழிச்சிட்டு இருக்க..." என்று சொல்லி... நைனி சிரிக்க... விகா இருவரையும் முறைத்து பார்த்தாள்...

"முறையாத்தா வா ஆத்தா நாம கிளாஸ் போகலாம்... இல்லான்னா நம்ம ஹெச் ஆத்தா சாமி ஆடி விடுவார்கள் தெரியும் தானே..." என்று மேகா எச்சரிக்கையாக சொல்ல...

"மேகா... நம்ம ஹெச்.ஓ.டி க்கு நீ எத்தனை பேர் தான் வைப்பீயோ தெரியலை... அவங்க வீட்டில் கூட ஒரு பேரை தான் வச்சிருப்பாங்க... ஆனால்.... நீ தினம் தினம் அவங்களுக்கு பெயர் சூட்டு விழா கொண்டாட்டிக் கொண்டு இருக்க..." என்றாள் விகாஷினி...

"சரி சரி... வாங்க அப்படியே கேன்டீன் பக்கம் கால் வலிக்க நடந்துட்டு... நம்ம கிளாஸை நோக்கி படையெடுத்து போவோம்... என்ன நான் சொல்றது..." என்று சொல்லிய நைனிகா இருவரும் சிரித்துக் கொண்டே பார்த்தாள்...

விகா அவளை பார்த்து... "த்துதூ...." என்று துப்ப...

மேகாவோ... "மேய்க்கிறது பன்னி குட்டி... இதுல பன்னாடைக்கு பெருமை பீத்தல் வேற..." என்றாள்...

அவர்கள் இருவரும் ஏளன பார்வை பார்த்த நைனி... "அப்போ நீங்க ரெண்டு பேரும் கேன்டீன் பக்கம் உங்க வட்ட மண்டையை காட்டவே மாட்டீங்க... அப்படி தானே..." என்று நக்கல் தொணியில் கேட்டாள்...

"நாங்க எங்க அப்படி சொன்னோம்..." என்று சொல்லி இருவரும் தோள்களை குலுக்கி கொண்டார்கள்...

"அப்போ வாயை அடக்கிட்டு வாங்க டி குந்தானிகளா..." என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள் நைனிகா... பின்ன... மேலும் அங்கே நின்று கொண்டு இருந்தால்... அவள் மண்டைக்கு தானே பேராபத்து... அந்த பயத்தில் தான் இந்த சில்வண்டு சிக்கிக் கொள்ளாமல் ஓடி விட்டது...

பின்னர் மூவரும் கேன்டீனில் அமர்ந்து எதையோ ஆர்டர் செய்து கொறித்து கொண்டு இருந்தனர்...

"இன்னைக்கு என்னாச்சு மேகா..." என்று சாப்பிட்டு கொண்டே கேட்டாள் விகாஷினி‌...

"எதை பற்றி..."

"அவ வேற எதை பற்றி கேட்பா... எங்களுடைய எண்டர்டெயின்மெண்ட் டாபிக்... ஹாட்..." என்று நைனி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே...

"ஏய்... வார்த்தை முக்கியம்..." என்று கை நீட்டி எச்சரித்தாள் ‌மேகா...

'க்கும்... இல்லாத ஆளுக்கு இவ்வளவு பிலட்ப் ஆக்கும்... போடி‌ கழுதை...' என்று வாய்க்குள் முனங்கி கொண்டு... "ஹ்ம்ம்... உன் சொப்பனத்தில் வரும் சுந்தர மகாராஜாவை பற்றி தான் கேட்டுட்டு இருக்கா... உங்க கனவு ராஜை பற்றி ஒரு பிட்டை எடுத்து சொல்லுங்க பாப்போம்..." என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் சொன்னாள்...

அவளை முறைத்து பார்த்த மேகா... "உனக்கு ஒன்னும் முடியலை டி..." என்க...

"இல்ல டி... வயிறு எல்லாம் எனக்கு கலக்கவில்லை... அதனால் நல்ல தான் இருக்கேன்..."

"அடச்சீ... எருமைகளா... ரெண்டு பேரும் வாயை திறக்காமல் இருங்க டி... எப்ப பார்த்தாலும் ரெண்டு பேரும் இப்படி பேசி பேசியே என் பிபியை ஏத்த வேண்டியது..." என்று இருவரிடமும் கத்தினாள் விகாஷினி...

அதை கேட்ட இருவரும் சேர்ந்து ஹைஃபை அடித்துக் கொண்டார்கள்...

"அப்பாடா... உன்னை இன்னைக்கு டென்ஷன் பண்ணி கத்த வச்சாச்சி... இன்றைய காலை பொழுது சுகமாக மூவ் ஆகும்..." என்று சொல்லி சிரித்தாள் நைனிகா...

"அது என்னமோ தெரியலை விகா... உன் கோபத்தில் கத்தும் எங்களுக்கு சிரிப்பு சிரிப்பா வருது... அதுவும் இதில் ஹைலெட் என்ன தெரியுமா... உன் சிவந்த போன காய்ந்த மிளகாய் மூக்கு தான்..." என்று சொல்லி மேகாவும் சிரித்தாள்...

அவர்கள் இருவரையும் முறைத்து பார்த்த விகாஷினி... அதற்கு மேல் முடியாமல் போக... பக்கென சிரித்து விட்டாள்...

"பக்கிஸ்... உங்க மூஞ்சியை எல்லாம் பார்த்தால் கோபம் கூட வந்து தொலைய மாட்டேங்குது டி..." என்று சொல்ல...

"எங்க முக ராசி அப்படி..." என்று மேகா கூற... "அதே தான்..." என்று சொன்னாள் நைனிகா...

"வெட்டி கதை அடித்தது போதும்... நம்ம பேசிட்டு இருந்த முக்கிய டாப்பிக்கை பற்றி பேசலாம்..." என்று ஆர்வத்துடன் சொன்னாள் விகாஷினி...

"என் கதையை கேட்க அவ்வளவு ஆர்வமா செல்லம்..." என்றாள் மேகா மலர்க்குழலி...

"இல்ல டி... நீ கதை சொல்வதை வச்சி ஒரு அழகிய நாவலே எழுதலாம்... அதான் நம்ம விகா இவ்வளவு மெனக்கெட்டு உன் கதையை எல்லாம் கேட்டுட்டு இருக்கா..." என்று நைனிகா சொல்ல...

"இது மட்டுமா இதுக்கு இன்னொரு காரணம் இருக்கே..." என்று விகா சொல்ல...

"ஹ்ம்ம்... அப்படி என்ன இன்னொரு காரணம்..." என்று பல்லை கடித்து கொண்டு கேட்டாள் மேகா...

"நீ சொல்லும் கதையை..."

"ஏய் அது கனவு டி..."

"எங்களுக்கு ரெண்டும் ஒன்னு தான் அப்படி தானே நைனி..."

"எஸ் எஸ்..."

"உன் கனவை எல்லாம் கேட்கும் போது இன்ரெஸ்ட்டிங்கா இருக்கு... ஹ்ம்ம்... நம்ம உலக நாயகன் கூட தசாவதாரம் படத்தில் பத்து கெட்டப் தான் போட்டு இருப்பார்... ஆனால் உன் ஆளு... இந்த ஒரு வருஷமா தினம் தினம் ஒவ்வொரு கெட்டப் போட்டு அசத்திட்டு இருக்காரே... அதனால் தான் எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப கியூரியாசிட்டி அதிகமாக இருக்கு..." என்று சொன்னாள் விகாஷினி...

இதை எல்லாம் சலிப்புடன் கேட்டுக் கொண்டு இருந்தாள் மேகா மலர்க்குழலி...

'அடேய் பரட்டை மண்டை... உன்னால தான் டா நான் இப்படி எல்லாம் கலாய் வாங்கிட்டு இருக்கேன்... நீ மட்டும் என் கையில் சிக்கி... உன்னை ஜுஸ் பிழிந்து வடி கட்டாமல் விட மாட்டேன்... ச்சே... அப்போ அண்டா தலையா... உன்னை எவ்வளவு திட்டினாலும் என் ஆத்திரம் மட்டும் அடங்க மாட்டேங்குது டா... தயவு செய்து என்னை புலம்ப விடாமல் என் வாழ்கையில் சீக்கிரம் வந்து தொலை‌..‌. என்னால எல்லாம் இனியும் மாங்கு மாங்குனு மண்டையை பிச்சி புலம்பிட்டு இருக்க முடியாது... ஆனால் ஒன்னு... நீ மட்டும் உன் கழுத்தில் சொல்லாம கொல்லாமல் தாலி கட்டின மவனே நீ காலி தான் பார்த்துக்க... கனவுல என்னால ஒன்னும் பண்ண முடியாது... ஆனால் நேர்ல உன் மூளை வெடித்து விடும் பாத்துக்க... என் அப்பா அம்மா சம்மதத்தோடு தான் என் கல்யாணம் நடக்கணும் என்று தான் ஒரு வைராக்கியத்துடன் இருக்கேன்... ஹ்ம்ம்... காதல் என்றால் பத்து அடி தள்ளி நிற்பேன்... ஆனால் என்னையே நீ மைண்ட் பேச வச்சிட்ட... போடா மூளை இல்லா முட்டைகோஸு....' என்று மனதில் நினைத்து அவளின் சொப்பன சுந்தரனை திட்டிக் கொண்டு இருந்தாள் மேகா மலர்க்குழலி...

"ஏய் மேகா... என்ன டி டிரீமா..." என்று கத்தி அவளை உலுக்கினாள் நைனிகா...

"அதெல்லாம் ஒன்னும் இல்ல..." என்று அவள் சொல்ல...

அதை கேட்டு விகாஷினி... "மேகி மூஞ்சியை பார்த்தால் எங்களுக்கு தெரியாது... உன் முகத்தில் தான் இப்ப நவரசமும் பழரசம் மாதிரி வந்து போச்சே..." என்று சொல்லி சிரித்தாள் அவள்...

"இப்ப ரெண்டு பேரும் வாயை மூடிட்டு இல்ல உங்களுக்கு பாயாசத்தை கிண்டி விடுவேன்... ஜாக்கிரதை... அப்பறம் நீங்க பாத்ரூமில் தான் குடி இருக்கணும்..." என்று முறைத்துக் கொண்டே சொன்னாள் மேகா...

"அடியாத்தி... அந்த பாயாசத்தில் நிறைய நெய்யி... முந்திரி... திராட்சை.... எல்லாம் எக்கச்சக்கமா போட்டாலும் எனக்கு வேணாம்..." என்று பொய்யான பயத்துடன் கூறினாள் நைனிகா...

"நீ என்னைக்கு பாயாசம் செய்ய போற என்று சொல்லு செல்லம்... அன்னையில் இருந்து ஒரு வாரம் நான் காலேஜ் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேன்..." என்றாள் விகாஷினி..

"போங்க டி... என்னை கோபப்பட கூட விட மாட்றீங்க... இப்படி பேசி பேசியே என்னை கூல் ஆக்கி சிரிக்க வைச்சிட்டு இருக்கீங்க... அதனால் எனக்கு திட்டவே வர மாட்டேங்குது..." என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே...

"அய்யய்யோ டைம் ஆச்சு டி..." என்று கத்தினாள் நைனி...

"என்ன ஆச்சு..."

"டைம் பார்த்தியா..." என்று அவள் சொல்ல...

கையில் கட்டி இருக்கும் கடிகாரத்தை பார்த்த மேகா... "அச்சோ... வா வா... சீக்கிரமா ஓடலாம்..." என்று சொல்லி விட்டு எழுந்து கொண்டாள்...

அதன் பின்னர் மூவரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டது போல ஓடி... அவர்களின் வகுப்பறையை அடைத்தார்கள்...

********

உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களே 😍

👇👇👇
 
Last edited:

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
அத்தியாயம் - 4

எனக்கு காதலை அதிகம் பிடித்தாலும்...!!!
காதலை ஏற்க மறுக்கிறது என் ஆண் மனம்...!!!
அது ஏனென்று தெரியாமல் தவிக்கிறது...!!!
எந்த பெண் மீதும் ஈர்ப்பு கூட வரவில்லை...!!!
இதில் காதலை நான் எங்கே சென்று தேடுவேன்...!!!
என் காதல் கண்மணி எங்கே என்று தான்...!!!
நித்தமும் பித்தாக தேடுகிறதே என் இதயம்...!!!!


ஆரனின் அலுவலகத்தில் உணவு உண்ணும் நேரம் வந்து விட... மெல்வின் அவன் கேபின் முன்பு வந்து நின்றான்...

அவனோ மெல்வின் வந்தது கூட தெரியாமல்... கணினியின் திரையில் மூழ்கி போய் இருந்தான்...

'எப்பா சாமி... இவன் இப்படி சின்சியர் சிறுத்தையாக இருக்க கூடாது பா... ஏதோ ஒரு பொண்ணை மாங்கு மாங்குனு சைட் அடிக்கிற மாதிரி கம்பியூட்டர் கிட்ட இருந்து கண்ணை எடுக்கவே மாட்டேங்குறான்... இவன் எல்லாம் எங்க இருந்து லவ் பண்ண போறானோ... ஆனால் லவ் என்றால் என்னன்னு பக்கம் பக்கமா கிளாஸ் எடுப்பான்...' என்று மனதில் நினைத்து கொண்டான் மெல்வின்...

அதற்கு மேல் பொறுமை இழந்து போய்.... "அடேய் மன்னாங்கட்டி பரம்பரையை சேர்ந்தவனே..." என்று அவன் கத்த... அப்போது தான் சிரசை நிமிர்த்தி எதிரே உள்ளவனை முறைத்து பார்த்தான் செழியன்...

"உன் வாயில் ஃபாரின் பிராண்ட் ஆசிட்டை வாங்கி ஊற்றி விடுவேன்... சோ... பீ கேர்ஃபுல் மெல்லு..." என்று விரலை நீட்டி எச்சரித்தான்...

"ச்சீ... ச்சீ... ஃபாரின் பிராண்ட் சரக்கு மட்டும் தான் என் வாயில் ஊத்தணும்... இந்த ஆசிட் எல்லாம் பாத்ரூமில் ஊற்றி தான் கிளீன் பண்ணனும்..."

"ஹ்ம்ம்... நீ சொன்னது உன் வாயிக்கும் பொருந்தும் மெல்லு..."

"அடப்பாவி... என் வாயை போய் பாத்ரூம் கூட கம்பேர் பண்றீயே... நீ விளங்கவே மாட்ட டா..." என்று முறைத்துக் கொண்டே சொன்னான் மெல்வின்...

"பரவாயில்லை..." என்று சொல்லி தோள்களை குலுக்கி கொண்டு... மீண்டும் கணினியை சைட் அடித்துக் கொண்டு இருந்தான் ஆரன் செழியன்...

"ஆரா... என்னால முடியல... ரொம்ப பசிக்குது டா... டைம் என்ன ஆகுது என்று பார்த்தியா... வா மச்சி... கேன்டீன் போய் வயிற்றில் ஏதாவது கொட்டிட்டு வரலாம்..." என்று பாவமாக சொன்னான் மெல்வின்...

நண்பன் மீது கொஞ்சம் பாவம் பார்த்த ஆரன்... கணனியை சைட் அடிப்பதை கொஞ்ச நேரம் நிறுத்தி விட்டு... "சரி வா போகலாம்..." என்று சொல்லி... அவனோடு சாப்பிடச் சென்றான்...

அங்கே கேன்டீன் சென்று... தேவையான உணவுகளை வாங்கி கொண்டு... ஒரு டேபிளில் சென்று அமர்ந்தனர்...

ஆரனும் மெல்வினும் அலுவலக விஷயங்களை பற்றி பேசிக் கொண்டு இருந்தனர்... அப்போது ஒரு பெண் வந்து... அவர்கள் அமர்ந்து இருந்த டேபிள் முன்னே நின்றாள்...

மெல்வினும் ஆரனும் அவளை பார்க்க... "கேன் ஐ சிட் ஹியர்..." என்று ஆரனை பார்த்து கேட்டாள் அந்த பெண்...

"ஷோர்..." என்று சொல்லி விட்டு... மீண்டும் மெல்வினுடன் பேச ஆரம்பித்தான் ஆரன்...

அவர்கள் இருவரும் மெல்லிய குரலில் அவர்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தார்கள்...

"மெல்வின்..."

"சொல்லு ஆரன்..."

"யார் இந்த பொண்ணு... எதுக்கு தேவை இல்லாமல் இங்க வந்து உட்கார பெர்மிஷன் கேட்குது... ஏன் வேற இடமே கிடைக்கலையா..." என்று அவன் கேட்க...

"இந்த பொண்ணு இப்ப தான் நியூ ஆக ஜாய்ன் பண்ணி இருக்கு... என்ன மிஞ்சி போனால் வந்து பத்து நாள் ஆகி இருக்கும்.... நம்ம பிரசாத் டீமில் தான் சேர்ந்து இருக்கு... அவ்வளவு தான் இந்த பொண்ணை பற்றி டீடெயில்ஸ் தெரியும்..." என்று சொன்னான் மெல்வின்...

"ஓஹோ... எப்படி டா ஒரு பொண்ணு என்றால் மட்டும் இவ்வளவு டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண தோணுது.." என்று ஆரன் நக்கலாக கேட்க...

"இது எல்லாம் ஒரு பொது அறிவு மச்சான்..." என்று பெருமையாக சொன்னான் மெல்வின்...

"ஹ்ம்ம்... இது தான் இந்த வருஷம் ஐ.ஏ.எஸ் எக்ஸாமுக்கு கேட்க போறாங்க பாரு... " என்று முறைத்துக் கொண்டே சொல்லி விட்டு உணவில் கவனத்தை செலுத்தினான்...

"என்னுடைய பேர் நிரஞ்சனா..." என்று ஆரம்பித்தாள் அவள்...

"நைஸ் நேம்..." என்று சொன்னான் மெல்வின்...

"ம்ம்..." என்று அவனுக்கு சின்ன சிரிப்பை கொடுத்து விட்டு... ஆரனிடம் திருப்பினாள் நிரஞ்சனா...

"சார் உங்க பேர் ஆரன் தானே..." என்று கேட்டாள் அந்த பெண்...

"ம்ம்..."

"உங்களை பற்றி தான் இங்க நிறைய பேசிட்டு இருந்தாங்க..."

"ஓஹ்..."

"நீங்க ரொம்ப சைலண்ட்டா சார்..."

"நோ... அப்படி சொல்ல முடியாது..."

இவர்களின் உரையாடலையும் உண்டுக் கொண்டே கேட்டு இருந்தான் மெல்வின்...

'ரைட்டு... இன்னைக்கு சுண்டெலி சிக்கிடுச்சு... பாவம் இந்த பொண்ணு... பெரிய சைஸ் பல்ப்பை இலவசமாக வாங்கிட்டு போக போகுது... இன்னைக்கு இவன் என்னென்ன பேச்சை எல்லாம் பேச போறானோ... ஹ்ம்ம்... இன்று உனக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் பொண்ணே...' என்று மனதில் நினைத்து கொண்டான் மெல்வின்...

"நான் கொஞ்சம் தனியாக பேசணும்..." என்று பொதுவாக சொன்னாள் நிரஞ்சனா...

"மெல்வின் அப்போ பேசிட்டு வா... நான் போறேன்..." என்று சொல்லி... ஆரன் எழுந்து கொள்ள...

"சார்... ஒரு நிமிஷம்... நான் சொல்வதை கேளுங்க.... நான் உங்க கிட்ட தான் பேசணும்..." என்று தயங்கிய படி சொன்னாள்

"ஹ்ம்ம்... சொல்லுங்க..."

"உங்க கிட்ட தனியாக பேசணும்..." என்று மெல்வினை பார்த்துக் கொண்டே சொன்னாள் நிரஞ்சனா...

"ஆரன்... யூ கேரி ஆன்..." என்று சொன்ன மெல்வினை அழுத்தமாக பார்த்தான் ஆரன்...

"மெல்வின்... உன்னை நான் இப்ப எழுந்துக்க சொன்னேனா..." என்று கேட்க...

"இல்ல மச்சி..."

"அப்போ மூடிட்டு இங்கேயே உட்கார்..." என்று அவன் சொல்ல... மெல்வினும் அமைதியாக அமர்ந்து கொண்டான்...

அதனை எரிச்சலாக பார்த்த நிரஞ்சனா... "நான் உங்க கிட்ட பர்சனலாக பேசணும்... ப்ளீஸ்..." என்று சொன்னாள்...

"உங்க பர்சனலாக இருந்தால் அது உங்களோட வச்சிக்கணும்... அதை எதுக்கு என் கிட்ட பேசிட்டு இருக்கீங்க நிரஞ்சனா... எனக்கு எது... எந்தெந்த விஷயங்கள் பர்சனலாக தோணுதோ அதை மட்டும் தான் நான் தனியாக பேச நினைப்பேன்... உங்க கிட்ட எனக்கு எந்த ஒரு பர்சனலும் கிடையாது... மெல்வின் என் கிளோஸ் ஃப்ரண்ட் தான்... அவனை விட்டுட்டு என்னால உங்க பேச்சை எல்லாம் கேட்க முடியாது..." என்று அவளிடம் சொல்லி விட்டு... மெல்வினை பார்த்த ஆரன்... "போகலாம் வா..." என்று சொல்லி எழுந்து கொண்டான்...

"இல்ல பரவாயில்லை... உங்க ஃப்ரண்ட் இங்கேயே இருக்கட்டும்...‌ நான் சொல்ல வேண்டியது சொல்லிடறேன்..." என்று கூறினாள் நிரஞ்சனா...

"ஓகே சீக்கிரம் சொல்லுங்க... எங்களுக்கு டைம் ஆகுது... வொர்க் இருக்குது..." என்று அழுத்தமாக சொன்னான் ஆரன்...

எதிரே இருந்தவளோ அவனை நீ எல்லாம் என்ன மனுஷன் தான் என்ற ரேஞ்சுக்கு பார்த்துக் கொண்டு இருந்தாள்...

அவளும் ஒன்னும் சுமாரான ஃபிகர் எல்லாம் கிடையாது... செதுக்கி வைத்த சிலை போல அழகாக ஷோ கேஸில் வைக்கும் பொம்மை போல இருப்பாள்... இவளை பார்க்கும் எல்லாரும் ஓர் கணம் திரும்பி பார்க்க தான் நினைப்பார்கள்... அதில் நிரஞ்சனாவுக்கு கொஞ்சம் கர்வம் கூட இருந்தது... ஆனால்... இவனோ தன்னை ஒரு கல் மண்ணை பார்ப்பது போல கூட பார்க்காமல் இருந்தது அவளுக்கு கோபத்தை தான் தூண்டி விட்டது... அதிலும் அவளோட பேசுவதற்கு இத்தனை அலட்டிக் கொண்டது வேறு கடுப்பை கிளப்பியது...

"இந்த ஆஃபிஸில் எல்லாரும் உங்களை பற்றி தான் பேசிட்டு இருக்காங்க..." என்று அவள் ஆரம்பிக்கும் போதே...

"சோ வாட்..." என்று கேட்டு வைத்தான் ஆரன்...

அதை கேட்ட மெல்வினுக்கோ சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது... இருந்தாலும் அவன் நண்பனுக்கு பயந்து... அதனை கட்டுப் படுத்திக் கொண்டு அமர்ந்து இருந்தான்...

"என்னை கொஞ்சம் பேச விடுங்களேன்..." என்று காட்டமாகவே கூறினாள் நிரஞ்சனா...

"ஓகே...." என்று சொல்லி அவளை அலட்சியமாக பார்த்தான் ஆரன்...

"நான் சுத்தி வளைச்சு எல்லாம் பேச விரும்மலை... உங்களுக்கு பற்றி தான் எல்லாரும் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து கொண்டு இருந்தாங்க... அதை எல்லாம் கேட்டு எக்ஸைட் ஆகிட்டேன்... அப்படியே உங்களை பார்த்ததும் பிடிச்சு போச்சு... சோ... நான் உங்களை லவ் பண்றேன் போல... ஐ லவ் யூ ஆரன்..." என்று மூச்சு விடாமல் சொல்லிய அவளை சலிப்புடன் பார்த்தான் ஆரன் செழியன்...

"நீங்க என்ன பதில் சொல்ல போறிங்க என்று இப்ப கேட்க மாட்டேன்... உங்களுக்கு எப்ப பதில் சொல்ல தோணுதோ... அப்ப‌ நீங்க சொல்லுங்க... அது வரைக்கும் நான் எதுவும் கம்பெல் பண்ண மாட்டேன்..."

"நோ..." என்று ஒற்றை பதிலை அவளிடம் சொன்னான் ஆரன்...

"வாட்..." என்று சொல்லி அவனை அதிர்ந்து பார்த்தவள்... "உங்க பதிலை இப்ப சொல்லணும்னு அவசியம் இல்லை... நல்லா யோசித்து பொறுமையாக பதில் சொன்னால் போதும்... டேக் யோர் ஓன் டைம்..." என்று பெருந்தன்மையுடன் சொன்னாள் நிரஞ்சனா...

"மிஸ். நிரஞ்சனா... இந்த கேள்விக்கு நான் இப்ப பதில் சொன்னாலும் இந்த ஆன்சர் தான் வரும்... அப்பறம் பதில் சொன்னாலும் அதே ஆன்சர் தான் வரும்... நோ சேன்ஜெஸ் அட் ஆல் நிரஞ்சனா..." என்று உறுதியாக சொன்னான் ஆரன்....

"ஆரன்... என்ன நீங்க இப்படி பேசிட்டு இருக்கீங்க..." என்று அவள் கேட்க...

"வேற எப்படி பேசணும்... மானே தேனே பொன்மானே மயிலிறகே... என்று பாட்டு பாடிட்டு இருக்கணுமா... நீயா தானே வந்து பேசின... நான் உன் கிட்ட பேச வரலை... இப்பவும் நான் தன்மையாக தான் பேசிட்டு இருக்கேன்... கோபத்தை கிளறிட்டு இருக்காதே..." என்று சீறினான் ஆரன்...

அவ்வளவு நேரம் இதை எல்லாம் வேடிக்கை பார்த்து... எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த மெல்வின்... அவனை கை மீது கையை வைத்து... "ஆரன்... ஜஸ்ட் காம் டவுன்..." என்று அழுத்தம் கொடுத்தான்...

"ஒரு பொண்ணு கிட்ட முகத்தில் அடிச்ச மாதிரி இப்படி தான் பேசிட்டு இருப்பீங்களா... கொஞ்சம் சாஃப்டா பேச தெரியாது..." என்று அவள் எரிச்சலாக சொல்ல...

"எனக்கு என்ன தோணுதோ அதை தான் நான் பேசுவேன்... ஆமா என்னை பற்றி என்ன தெரியும் என்று என் கிட்ட ப்ரோபோஸ் பண்ண வந்த... நாலு பேரு ஆஹா... ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிட்டா நான் நல்லவன் ஆகிடுவேனா... ஏன் நான் ஒரு டிரக் டீலராக இருந்தால் என்ன பண்ணுவ... இல்ல ஒரு அண்டர் கிரவுண்ட் தாதாவாக இருந்தால் என்ன பண்ணுவ... யாரை பற்றியும் அலசி ஆராய்ந்து முடிவு பண்ண மாட்டீயா... எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தான் முடிவு எடுப்பீயா... இதில நீ நீயா வந்து என் கிட்ட பேசிட்டு... எனக்கு இப்படி பேச தெரியாதா அப்படி பேச தெரியாதா என்று எனக்கே பேச கற்று தர போறியா... அதுக்கு உனக்கு எந்த ரைட்ஸும் கிடையாது... இதுக்கு மேல எதாவது பேசினால் சத்தியமா டென்ஷன் ஆகிடுவேன்... நீ என்னோட ஒரே ஆஃபிஸில் வேலை செய்யும் கொலிக்... அந்த லிமிட்டுன் இருந்துக்கோ..‌ அது தான் உனக்கு நல்லது... இதுக்கு மேல என் கிட்ட பேச நினைக்காதே..." என்று அவளை பார்த்து சொல்லி கொண்டு இருந்தான் ஆரன் செழியன் நந்தியவர்மன்...

"ஆரன் நான் உங்களை மதித்து நானா வந்து பேச வந்தேன்ல... எனக்கு இந்த செப்பல் ஷாட் தேவை தான்... எனக்கு இதுவும் வேணும்.... இன்னமும் வேணும்... இனி நீங்களே பேச அழைச்சாலும்...‌ உங்க பேச்சை கேட்க நான் தயாராக இல்லை... குட் பாய்..." என்று சொல்லி விட்டு... அங்கிருந்து சென்று விட்டாள் நிரஞ்சனா...

'ச்சே... எனக்கு தான் இப்படி எல்லாம் வந்து மாட்டும்... இது எல்லாம் கேட்கும் போது செம டென்ஷன் ஆகுது...' என்று மனதிற்குள் கருவிக் கொண்டு இருந்தான் ஆரன்....

அவள் அங்கிருந்து சென்றதும் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான் மெல்வின்...

"டேய் மெண்டல்.... எதுக்கு இப்படி சிரிச்சிட்டு இருக்க..." என்று கடுப்புடன் கேட்டான் ஆரன்...

"இல்ல மச்சான் சிரிப்பு வந்துருச்சு... அதான் சிரிச்சேன்..." என்று சொல்லி மீண்டும் சிரித்தான் மெல்வின்...

"நீ இங்கேயே தனியாக சிரிச்சிட்டு இரு... நான் போறேன்..." என்று எரிச்சலாக சொல்லி... அங்கிருந்து வேகமாக எழுந்து சென்றான் அவன்...

அவன் பின்னே... "அடேய்... நில்லு டா..." என்று கத்திக் கொண்டே ஓடினான் மெல்வின்...

அவனை திரும்பி பார்த்த ஆரன்... "எதுக்கு இப்ப கத்திட்டு இருக்க... சத்தம் போடாமல் வா..." என்று சொல்ல... அதை கேட்ட அவனும் மௌனமாக உள்ளுக்குள் சிரித்த படி வந்தான்...

"மச்சான் ஒரு டவுட்..." என்று மெல்வின் கேட்க...

"ப்ச்ச்... என்ன..."

"இல்ல லவ் பண்ணி தான் மேரேஜ் பண்ணிக்கணும் என்று பக்கம் பக்கமா வசனம் பேசின... ஆனால்... உன் கிட்ட இப்படி எந்த பொண்ணு ப்ரோபோஸ் பண்ண வந்தாலும் அவங்க கிட்ட எல்லாம் அட்வைஸ் பண்ணி எரிந்து விழுந்தால்... எப்படி டா... அது தான் எனக்கு எவ்வளவு யோசித்தாலும் புரிய மாட்டேங்குது..." என்று தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு சீரியஸாக பேசினான் மெல்வின்...

"ஏண்டா... நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும் அப்படின்னு மட்டும் தான் சொன்னேன்... பார்க்கும் பொண்ணை எல்லாம் உடனே லவ் பண்ணி கல்யாணம் பண்ண வேண்டும்னு நான் எப்பவும் சொன்னது இல்ல... ஒரு பொண்ணை பார்த்ததும் என் மனசு சொல்லனும்... இவ தான் எனக்கானவள்.... இவளால் தான் என் வாழ்க்கை அழகாக மாறும்... இவ தான் உனக்கு சிரிப்பையும் சந்தோஷத்தையும் கொடுப்பா... இவ தான் உன் கஷ்டத்தை போக்கி... அழுகையை போக்குவா... இப்படி எல்லாம் என் மனசு சொல்லனும்... அதை விட்டுட்டு நான் லவ் மேரேஜ் தான் பண்ணனும்னு நினைத்து ஏதோ ஒரு பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திட முடியுமா... எனக்கு இந்த பொண்ணை எல்லாம் பிடிக்கலை... அதனால எல்லா ப்ரோபோஸலையும் ரிஜெக்ட் பண்ணேன்... தட்ஸ் ஆல்... மத்தபடி நான் லவ் பண்ணி தான் மேரேஜ் பண்ணிக் கொள்வேன் மெல்லு..." என்று சொல்லி கண் அடித்தான் ஆரன் செழியன் நந்தியவர்மன்....

அவன் பேசியதை எல்லாம் கேட்டு... தலையை பிய்த்து கொண்டது என்னவோ மெல்வின் தான்...

"அடேய் நல்லவனே... புரியலை டா...." என்று தொய்ந்த குரலில் சொல்ல...

"புரியாமலே இருக்கட்டும்... அரேன்ஜ் மேரேஜ் பண்ணும் உனக்கு எல்லாம் புரிய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை..." என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொன்னான் ஆரன்...

"அது சரி... ஆமா... நீ இவ்வளவு வியாக்கியானம் பேசிட்டு இருக்கீயே மச்சான்... நீ பண்ண போறது லவ் மேரேஜா....... இல்ல....... அரேன்ஜ் மேரேஜா......" என்று வேண்டுமென்றே இழுத்து இழுத்து கேட்டான் மெல்வின்...

"என்ன டா கொழுப்பா..." என்று அவனை முறைத்து பார்த்த படி கேட்டான் அவன்...

"பின்ன என்ன டா... நீ இவ்வளவு வக்கனையாக எல்லாத்தையும் பேசற... ஆனால்... உன் செயலில் ஒன்னுமே காணோமே..."

"மெல்லு... உன்னை என் வாயில போட்டு மெல்ல போறேன் பாரு..."

"சரி சரி... உன் கிட்ட ஒன்னே ஒன்னு கேட்கவா மச்சான்..."

"கேட்க வேணாம்னு சொன்னால் விட போறியா என்ன..."

"ச்சே ச்சே... அப்படி எல்லாம் உன்னை விட மாட்டேன் டா..."

"அப்போ என்ன கேட்கணுமோ அதை கேட்டுத்தொலை..."

"ஒருவேளை உனக்கு அரேன்ஜ் மேரேஜ் தான் அப்படின்னு உன் தலையில் எழுதி இருந்தால் நீ என்ன பண்ணுவ..." என்று தயங்கிக் கொண்டு கேட்டான் மெல்வின்...

இதை பற்றி அவன் எப்போதுமே யோசித்து பார்த்தது இல்லை... ஆனால்... இப்போது நண்பன் இப்படி ஒரு கேள்வியை கேட்டதும் சத்தியமாக என்ன பதில் சொல்வது என்று அவனுக்கு தெரியவில்லை... அது தான் உண்மையும் கூட... அதனால் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தான் ஆரன் செழியன் நந்தியவர்மன்...

"ஆரன் உன்னை தான் கேட்டுட்டு இருக்கேன்..." என்று அவனை உலுக்கினான் மெல்வின்...

"ஹான்... அப்படி எல்லாம் நடக்காது..." என்று சொன்னான் ஆரன்...

"ஒருவேளை நடந்துட்டா..."

"ப்ச்ச்... ஃப்யூச்சரை பற்றி இப்ப எதுக்கு பேசிட்டு இருக்க... ஜஸ்ட் லீவ் இட் மெல்வின்..."

"எதுக்கு இப்படி ஜெர்க் ஆகுற... நான் கேட்டதுக்கு பதிலை சொல்லு டா..."

"ஹ்ம்ம்... கண்டிப்பா டிவோஸ் மட்டும் பண்ண மாட்டேன்... எனக்கு சில முக்கியமான வொர்க் இருக்கு... நான் போறேன்..." என்று சொல்லி விட்டு... விறு விறு வென்று நடந்து சென்றான் ஆரன் செழியன் நந்தியவர்மன்...

'என்னடா சொல்லிட்டு போற... டிவோஸ் பண்ண மாட்ட சரி... அந்த பொண்ணு கூட சேர்ந்து வாழ்வியா மாட்டீயா... அதை சொல்லாம இதை மட்டும் சொல்லிட்டு போற... என்ன பதில் டா இது... உன்னை எல்லாம் மியூசியமில் தான் செதுக்கி வைக்கணும்... ச்சே...' என்று மனதில் நண்பரை திட்டிக் கொண்டு இருந்தான் மெல்வின்...

**************

உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களே 😍😍

👇👇👇👇
 
Last edited:

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
அத்தியாயம் - 5

என்னை நான் இயல்பாக காட்டிக் கொள்ள....
பற்பல முயற்சிகளை நான் மேற்கொண்டாலும்...!!!
மனதிற்குள் உன் எண்ணம் தானே இருக்கிறது...!!!
என் அனைத்து செயல்களிலும்
உன் தாக்கம் தானே இருக்கிறது...!!!
நீயே என் இதயத்தை முழுவதுமாக
ஆட்கொண்டு இருக்கிறாய்...!!!
என் இதயச் சிறையில் எப்போதடா
நீ கைதியாக மாறுவாய்...???


அதன் பின்னர் மூவரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டது போல ஓடி... அவர்களின் வகுப்பறையை அடைத்தார்கள்...

"அப்பாடா... ஏய் கிளாஸில் யாரும் இல்ல போல டி..." என்று சொன்னாள் விகாஷினி...

"ம்ம்... ஆமா டி... வா வா சீக்கிரமா கிளாஸ் உள்ள போய்டலாம்..." என்று நைனிகா கூற... மேகாவும் இருவருக்கும் தலை அசைத்தாள்....

அப்போது...

"மேகா அண்ட் கோ... லேட்டா வந்துட்டு எங்க உள்ள போக பார்க்கறீங்க... வெளியே நில்லுங்க... கிளாஸ் உள்ள நீங்க மூணு பேரும் வரக் கூடாது..." என்று குரல் கேட்க...

அவரை பார்த்து... "ஓகே மேம்..." என்று சமர்த்து பிள்ளையாக சொன்னாள் மேகா...

"இடியட்... உங்களை திட்டிட்டு இருக்கேன்... அதுக்கு ஒரு சாரி கூட சொல்ல மாட்டீங்களா... என்ன மேனர்ஸ் இது... நீங்க எல்லாம் ஒரு கம்பெனியில் போய்... ஒருத்தருக்கு கீழே கையை கட்டி வேலை செய்ய போறிங்க... இதுவரை நான் பாத்த ஸ்டூடன்ட்டில் நீங்க மூணு பேரும் தான் ரொம்ப வொர்ஸ்ட்..." என்று டீச்சர் பாட்டை பாடிக் கொண்டு இருந்தார் அவர்களின் ஹிஸ்டீரியா ஆஃப் டைனோசர்... அதான் அவர்களின் HOD...

இதை எல்லாம் கேட்டு மூவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டு இருந்தனர்...

அவர்களின் முகத்தை பார்த்தே எண்ண ஓட்டத்தை சொல்லி விடலாம்... வெளியே முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டும்... உள்ளுக்குள் சிரியோ சிரி என்று சிரித்துக் கொண்டு அறிய முடிந்தது...

"சாரி மேம்... தன்ங் யூ மேம்..." என்று மூவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்...

அவர்களை முறைத்து பார்த்தார் துறைத் தலைவர்... "உங்களை எல்லாம் திருத்தவே முடியாது...' என்று சொல்ல...

'நாங்க உங்களை திருத்த சொல்லவே இல்லையே... போங்க போங்க மொதல்ல எங்க செமஸ்டர் பேப்பரை திருத்தி மெண்டல் ஆகாமல் இருங்க... அப்பறம் எங்களை நீங்க திருத்தலாம்...' என்று மனதில் நினைத்த படி... நண்பிகளை பார்த்தாள் மேகா மலர்க்குழலி... அவர்களும் மைண்ட் வாய்ஸில் சரமாரியாக வெளுத்து வாங்கி கொண்டு இருக்கிறார்கள் என்று புரிய... வெளியே வரத் துடிக்கும் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்...

"போங்க போய் உங்க ப்ளேஸில் உட்காருங்க... இன்னொரு முறை லேட்டா வரக் கூடாது..." என்று அவர் இத்தோடு சொல்வது ஆயிரம் முறைகளை கடந்து இருக்கும் என்பதை அவரும் நன்கு அறிவார்...

"தன்ங் யூ சோ மச் மேம்..." என்று மூவரும் பவ்வியமாக சொன்னார்கள்...

"இர்ரெஸ்பான்ஸிபள் இடியட்ஸ்... இந்த நடிப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..." என்று திட்டிக் கொண்டே வகுப்பை நடத்த தொடங்கினார் துறை தலைவர்...

இவர்களும் அவர்கள் இடத்திற்கு சென்று சமத்து குட்டிகளாக அமர்ந்து கொண்டார்கள்...

கொஞ்ச நேரத்திற்கு பிறகு...

மேகாவோ வரும் கொட்டாவியை அடக்கிக் கொண்டே... "விகா..." என்று அழைக்க

"தூக்கம் வருது டி... சும்மா இரு.." என்று அவள் சொல்ல...

"ஆமா இந்த நைனி... நைனி ன்னு ஒரு டிக்கெட் இருந்ததே... எங்க டி பேச்சு மூச்சையே காணோம்..."

"அந்த ஜென்மம் பாட்டை (பாடத்தை) ஸ்டார்ட் பண்ணதும் உறங்கியது தான்... மேடம் இன்னும் கூட எழவில்லை... இந்நேரம் யார் கூட டூயட் பாடி ஜொள்ளு விட்டுட்டு இருக்காளோ..." என்று விகாஷினி சொல்ல...

"சரி தான்... அவ வாழ்க்கை தான் ஓஹோ வென்று போயிட்டு இருக்கு..." என்றாள் மேகா...

இப்படியாக இருந்தது இவர்களின் கல்லூரி வகுப்புகள் நடந்து முடிந்தது...

"நைனி நான் தானே உன்னை டிராப் பண்ணனும்..." என்று மேகா கேட்க...

"பின்ன டிரம்ப் ஆஆ வந்து டிராப் பண்ணுவாரு... நீ தான் பண்ணி ஆகணும் எருமை..." என்று கத்தினாள் நைனிகா...

"மாடுகளா... எப்ப பாத்தாலும் ரெண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டே இருக்காதீங்க... இதுங்க கூட மல்லுக்கட்டி என் பிராணனே போகுது முருகா..." என்று புலம்பிக் கொண்டு இருந்தாள் விகாஷினி...

"போதும் போதும் செல்லம் ரொம்ப புலம்பாதே... எங்க காது பிச்சிக்கிட்டு போயிட போகுது..." என்றாள் நைனிகா...

"இந்த நக்கல் நையாண்டி கே ஒன்னும் குறைச்சல் இல்லை..." என்று சொல்லி முறைத்தாள் விகா...

அவள் மூக்கை பிடித்து ஆட்டி... "அடி என் சில்லி மூக்கு..." என்று சொல்லி சிரித்தாள் மேகா...

"அடிங்க... விடு டி மெண்டல்... எனக்கு வலிக்குது..." என்று கதறினாள் விகா...

"போனா போகுதுன்னு உன்னை விடறேன் சில்லி பேபி..." என்று சொன்னாள் அவள்...

"விகா... நீ எப்படி வீட்டுக்கு போக போற..." என்று நைனி கேட்க...

"ஹ்ம்ம்... என்னை கூட்டிட்டு போக அப்பா இல்ல அண்ணன் வருவாங்க..." என்று விகா கூற...

"உங்க அண்ணனா வருவாங்க..." என்று கண்கள் மின்ன சொன்னாள் நைனிகா...

"அப்பா கூட வந்தால் வருவாங்க... யாருக்கு தெரியும்..." என்று அவள் கூற...

"அதெல்லாம் உன் அண்ணன் தான் வருவாங்க... வரணும் டாட்..." என்று அவள் சீரியஸாக சொல்ல...

"நைனி மா... இப்ப எல்லாம் உன் செய்கை சரியே இல்ல டி... உள்ள நினைப்பது ஒன்னு... வெளியே செய்வது ஒன்னு... சோ... பார்த்து பதிவிசா நடந்துக்க தங்கம்... விகாவுக்கு எல்லாம் அண்ணி ஆக ஆசை படாதே..." என்று வேண்டுமென்றே சீரியஸாக சொன்னாள் மேகா...

"இவளுக்கு எல்லாம் யார் அண்ணியாக போவாங்க... நான் சும்மா போற போக்கில் சைட் அடிச்சிட்டு அப்படியே எங்க அப்பா பார்க்கும் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிட்டு ஜாலியாக ஹனிமூன் போவேன்..." என்று நைனிகாவும் சொல்லி கொண்டு இருக்க... விகாவும் மேகாவும் வாய்க்குள் சிரித்த படி நின்று இருந்தனர்...

"என்ன டி ரெண்டு பேரும் சைலண்ட் ஆகிட்டீங்க..." என்று சொல்லி அவள் நண்பிகளை பார்க்க...

"உச்... உச்... சோ சேட் பட்டு... அப்படியே திரும்பி உன் பேக்கில் பாரு..." என்று விகா கூற...

"ஏன் எதுக்கு..."

மேகாவோ... "ப்ச்ச்... நீ கொஞ்சம் பாரேன் செல்லோ..." என்று சொல்லி அவளை திருப்பி விட்டாள்...

அங்கே பார்த்ததும்... "அய்யோ... அம்மே... காஞ்சனா ராகவா பேய்..." என்று சொல்லி முகத்தை மூடிக் கொண்டாள் நைனிகா...

"அடியே என் அண்ணனை பார்த்தால் உனக்கு பேய் மாதிரி தெரியுதா..." என்று விகா கத்த...

"பேய் மாதிரி இல்ல... நிஜ பேயே தான்..." என்று வாய்க்குள் முனங்கிக் கொண்டாள் நைனிகா...

"ஹலோ..." என்று அழைத்தான் வியன் பிரசாத்...

"நீங்கள் அழைக்கும் நபர் இப்போது வீட்டுக்கு செல்ல உள்ளார்... அதனால் அவர்களை எப்போதும் தொடர்பு கொள்ளாதீர்..." என்று ஏதோ ஒரு கன்றாவி மாடுலேஷனில் சொல்லி... மீண்டும் திரும்பி நின்று கொண்டாள்...

"மேகா... மேகா... நாம போகலாமா... நான் வீட்டுக்கு சீக்கிரம் போகனும்... அம்மா தயிர் போட தயிர் பேக்கெட் வாங்கிட்டு வர சொன்னாங்க டி... அதனால் நான் வேகமாக போகணும் வா போகலாம்..." என்று அவள் உளறிக் கொட்ட...

"எது தயிர் பேக்கெட் வாங்கிட்டு போகணுமா... முண்டம் அதுக்கு நீ பால் பேக்கெட் தானே வாங்கிட்டு போகணும்... நீ ஏன் தயிர் பேக்கெட் வாங்கிட்டு போற..." என்று அதில் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு இருந்தாள் விகாஷினி...

"ஆஆஆ.‌... உனக்கு இப்ப இந்த ரிசர்ச் தியரி எல்லாம் வேணுமா... உன் அண்ணன் தான் வந்துட்டாரே... அப்பறம் ஏன் இங்கே நின்னு உசுரை வாங்கிட்டு இருக்க... போக வேண்டியது தானே..." என்று அவளிடம் தாம் தூம் என்று குதித்தாள் நைனிகா...

"நைனிகா..." என்று அழுத்தமாக கூப்பிட்டான் வியன்...

"அண்ணா காலிங் டி..." என்று மேகா வேற சொல்ல... அவர்களை முறைத்துக் கொண்டு இருந்தாலே ஒழிய திரும்பி பார்க்கவில்லை...

"நைனிகா நீ தானே‌... இல்ல வேற யாராவதா..." என்றான் அவன்...

"ப்ச்ச்... நான் தான்..." என்று திரும்பிப் பார்த்தாள் நைனி...

வியனோ அவளை புன்னகையுடன் பார்த்து... ஒரு டைரி மில்க் சாக்லேட்டை நீட்டினான்...

"எனக்கு வேணாம்..." என்று சொல்வதற்கு வாய் திறக்க மறுத்து மக்கர் பண்ணிக் கொண்டு இருந்தது... கையோ அதை வாங்க பரபரத்தது...

"உனக்கு தான் வாங்கிட்டு வந்தேன்..." என்று சொல்ல...

"யோவ் அண்ணா... எனக்கு எல்லாம் நீ சாக்லேட் வாங்கிட்டு வர மாட்டீயா... அது என்ன அவளுக்கு மட்டும் ஸ்பெஷலுலுலு..." என்று அவனிடம் சண்டைக்கு போனாள் மேகா...

"அச்சோ செல்லக்குட்டி... உனக்கு இல்லாமலா... இதோ இது உனக்கு..." என்று செல்லமாக சொல்லி... மேகாவுக்கு சாக்லேட் கொடுத்தான் அவன்...

அங்கே அவர்களை எல்லாம் பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தாள் விகாஷினி...

"ஹேய் குட்டி பிசாசு... உன் காலேஜ் பேக்கை ஓபென் பண்ணி பாரு... உனக்கு அதில இருக்கு..." என்று சொல்லி சிரிக்க... விகாவும் பேக்கை திறந்து பார்க்க... அதில் இருந்ததை எடுத்துக் கொண்டாள்...

மேகாவும் விகாவும் அவர்களின் சாக்லேட்டை பிரித்து தின்ற படி நின்றனர்... அதனை ஏக்கமாக பார்த்துக் கொண்டு இருந்தாள் நைனிகா...

'பாவிகளா... ஒரு சாக்லேட்டை பார்த்து என்னை மறந்து விட்டீர்களே டி... இந்த சாக்லேட்டை என் கண்ணு முன்னாடி நீட்டிட்டு இருந்தால் வாங்கி சாப்பிட தோணுமா தோணாதா... ச்சேய்... என்னை நல்லா தான் கார்னர் பண்ணிட்டு இருக்காங்க...' என்று மனதில் கோபமாக நினைத்து... அவன் கையில் இருந்த சாக்லேட்டை முறைத்துக் கொண்டு இருந்தாள் நைனிகா...

"நைனி சாக்லேட் வேணுமா..." என்று மீண்டும் கேட்டான் வியன்...

அவளோ எந்த ஒரு பதிலையும் சொல்லாமல் நின்று கொண்டு இருந்தாள்...

மீண்டும்... "வேணுமா வேணாமா..." என்று வியன் கேட்க... அப்போதும் அவளிடம் மௌனம் மட்டுமே இருந்தது...

"உனக்கு வேணாம் ன்னா போ..." என்று சொல்லி சாக்லேட் அவரை பிரித்தான் வியன்...

'அய்யோ போகுது போகுதே... டைரி மில்க்கு தான் போகுதே... ஹ்ம்ம்... எனக்கு அது வேணுமே... நைனி உனக்கு வெட்டி மத்தாப்பு... ச்சீ... வீராப்பு வேணுமா... சாக்லேட் வேணுமா... நோ... எனக்கு சாக்லேட் தான் வேணும்...' என்று அவள் மனம் ஓலம் இட்டுக் கொண்டு இருந்தது...

"வேணும்..."

"என்ன..."

"எனக்கு வேணும்..."

"எது..."

"அது..." என்று சொல்லி நேராக கை காட்டினாள் நைனிகா...

அதை கண்டு அவன் இதழில் ஒரு குறுநகை... "நானா..."

அவனை முறைத்து பார்த்த நைனி... "ப்ச்ச்... நீங்க இல்ல எனக்கு சாக்லேட் தான் வேணும்..." என்று கூறி... அவனிடம் இருந்து பிடுங்க முயற்சித்தாள்...

அவனோ அதை கொடுக்காமல் போக்கு காட்டிக் கொண்டு இருந்தவன்... கடைசியில் அந்த சாக்லேட்டை ஒரு கடி கடித்துக் அவள் கையில் அந்த சாக்லேட்டை திணித்தான்...

"போடாங்... இது எப்படி நான் சாப்பிடுவேன்... நீ கடித்ததை நீயே தின்னு..." என்று திட்டிக் கொண்டே... அவன் கடித்து பகுதியை மட்டும்... அதை சுற்றி பிட்டு... எதிர் பார்க்காமல் அவன் வாயில் திணித்து விட்டாள் நைனிகா...

"மூஞ்சியை பாரு... கொரில்லாவுக்கு சட்டை பணியன் போட்ட மாதிரி இருக்கு..." என்று வாய்க்குள் திட்டிக் சாக்லேட்டை மொக்கினாள் நைனி...

வியனோ வாயில் இருந்ததை சாப்பிட்டு முடித்து... "நைனி... புருஷன் சாப்பிட்டதை தான் பொண்டாட்டி சாப்பிடனும் என்று உனக்கு தெரியாது... அதான் நான் கொஞ்சமாக கடிச்சிட்டு உன் கிட்ட தந்தேன் நைனி மா..." என்று சொல்லி கண் அடித்தான் வியன்...

"இந்த ரொமான்டிக் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..." என்று திட்டிக் கொண்டே அதை சாப்பிட்டாள் நைனிகா‌...

வியனோ தன்னவளையே கண் கொட்டாமல் பார்த்து இருந்தான்... அவளும் அவனை அப்போ அப்போ ஓரக் கண்ணால் ரசித்துக் கொண்டு தான் இருந்தாள்...

இவர்கள் இருவரின் குரங்கு சேஷ்டைகளை தாங்க முடியாமல்... விகாவும் மேகாவும் அங்கே தனியே சென்று மரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டார்கள்...

மேகவோ விகாவிடம்... "இதுக்கு ரெண்டும் பண்றதை எல்லாம் என்னால பார்க்க முடியலை டி... இவங்க ரெண்டு பேரும் காதல் பண்றாங்களாம்... ஆனால்... ஒருத்தர ஒருத்தர் சொல்லிக் கொள்ள மாட்டார்களாம்... இவங்க ரெண்டு பேர் வீட்டிலும் கல்யாணத்துக்கு ஓகே சொல்வாங்களாம்... ஆனால் இதுங்க இப்ப கல்யாணம் எல்லாம் பண்ணிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பார்களாம்... பார்க்கும் போது எல்லாம் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை சண்டையாக போடுவாங்களாம்... ஆனால் அதுக்கு கடைசியில் டோரா புஜ்ஜி போல ஊர் சுத்தி முடியுமாம்... ஷப்பா.‌‌.. இது எல்லாம் பார்க்கும் போதே கண்ணை கட்டுது..." என்று சொல்லி கொண்டு இருந்தாள்...

"அவங்க ரெண்டு பேர் காதலும் ஒரு புரியாத புதிர் தான் பேபி..." என்று கூறினாள் விகா...

"ஹ்ம்ம்... எனக்கு தான் விளங்கவே மாட்டேங்குது... என் கனவில் வரும் இடியட் மட்டும் கிடைக்கட்டும்... அவனுக்கு..."

"ஆஹா... ஸ்பெஷலான கவனிப்பு எல்லாம் பலமாக இருக்கும் போலயே மேகா‌.."

"நீ வேற ஏன் கடுப்பை துடுப்பு போட்டு சீண்டிட்டு இருக்க..." என்று சலிப்புடன் சொன்னாள் மேகா மலர்க்குழலி...

"ஹா ஹா..."

"நாயே நீ இப்ப சிரிச்ச... உனக்கு கல் அடி தான் பரிசா கிடைக்கும்..." என்று சினத்துடன் சொல்லும் போதே... அந்த இடத்திற்கு வியனும் நைனியும் வந்து சேர்ந்தார்கள்...

"எதுக்கு டி இந்த ஆள் கிட்ட என்னை மட்டும் விட்டுட்டு வந்தீங்க... இங்க வந்து ரெண்டு பேரும் ஹாயாக உட்காந்து இருக்கீங்க..." என்று மெல்லமாக சண்டை போட்டாள் நைனிகா...

"அடடா... உனக்கு இப்ப நாளும் நானும் இவளும் கண்ணுக்கு தெரிந்தோமாக்கும்..." என்று மேகா கேட்க...

"அப்படி எல்லாம் இல்லயே..." என்று மழுப்பினாள் நைனி...

"ஏய் ஏய் நடிக்காத டி...." என்றாள் விகா...

"இப்ப எதுக்கு அவளை வம்பு இழுத்துட்டு இருக்கீங்க..." என்று நைனிக்கு பரிந்து பேசினான் வியன்...

"டேய் அண்ணா... இந்த விஷயத்தில் எல்லாம் உன் நோஸை எண்டர் பண்ணாத... அப்பறம் பின் விளைவுகள் எல்லாம் உனக்கு தான் அதிகம் இருக்கும்... சோ... உன் மவுத்தை கிளோஸ் பண்ணிட்டு இரு டா அண்ணா... விகா கூட உனக்கு பாவம் பார்க்க மாட்டா..." என்று சொன்னாள் மேகா...

"ஆமா ஆமா.... நீ என் உடன்பிறப்பு என்று எல்லாம் நான் நினைக்கவே மாட்டேன்... இது எங்க ஃப்ரண்ட் மேட்டர்... எங்க நட்பு... எங்க உரிமை... அதனால் நீ வாயை மூடிட்டு இங்க இரு அண்ணா... இல்லன்னா இங்க இருந்து கிளம்பிட்டே இரு... உனக்கு எப்படி வசதி..." என்று விகாஷினி கேட்க...

"நான் இங்கேயே அமைதியாக இருக்கேன்... நீங்க எப்படியோ பண்ணித் தொலைங்க..." என்று முறைத்துக் கொண்டே சொன்னான் வியன் பிரசாத்...

"அந்த பயம் இருக்கட்டும்..." என்று இருவரும் சொல்லி... நைனி பக்கம் திரும்பினார்கள்...

அவளோ என்ன வேணாலும் பேசிக் கொண்டு இருங்க நான் ஒரு செவிடு என்பது போல நின்று கொண்டு இருந்தாள்...

"இந்த மங்கியை பாரு... எப்படி நின்னுட்டு இருக்கா என்று... இவளை பத்தி தானே இவ்வளவு நேரமாக பேசிட்டு இருக்கோம் ஆனா இந்த குரங்கு யாருக்கோ வேதம் ஊதுவது போல பராக்கு பார்த்து நின்னுட்டு இருக்கு..." என்று சொல்லி நைனியின் தலையில் அடித்தாள் விகாஷினி...

"ஏய்... நான் என்ன டி பண்ணேன்... எதுக்கு என்னை அடிக்கிற... எனக்கு வலிக்குது டி..." என்று பாவமாக சொன்னாள் நைனிகா...

"க்கும்... இந்த பாவ மூஞ்சிக்கு ஒன்னும் குறைவு இல்ல... அதில் லிட்டர் கணக்கில் இன்னொசென்ஸ் (innocence) வழியுது என்று நினைப்பா... ஹா ஹா... நீ ஒரு ப்ராடு என்று உன் அடப்பாவி (அப்பாவி) முகத்தில் எழுதி ஒட்டி இருக்கு செல்லோ..." என்று சொல்லி சிரித்தாள் மேகா மலர்க்குழலி...

"அதான் தெரியுமே... அப்பறம் ஏன் டி என்னை நடிக்க வைக்கும் வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க... நீ வம்பு இழுக்காமல் இருந்தால் நான் ஏண்டி தேவை இல்லாமல் நடிக்க போறேன்..." என்று நைனிகா சொல்ல... அதை கேட்ட மூவரும் வாய் விட்டு சிரித்தார்கள்...

"நான் என்ன உங்க மூணு பேருக்கும் காமெடி பீஸா... நான் என்ன இங்க சிரிக்க போவது யாரு... அதில் வெல்ல போவது யாரு என்று போட்டா போட்டியா வச்சிட்டு இருக்கேன்... மொதல்ல இப்படி பொக்கை பொக்கை ன்னு சிரிப்பதை நிறுத்துங்க... எனக்கு கடுப்பு ஏறிட்டு இருக்கு..." என்று கோபத்துடன் சொன்னாள் நைனிகா...

"சரி சரி பேபி... உன் கடுப்பு குறைக்க போகும் வழியில் சூடா கருப்பட்டி காஃபி வாங்கித் தரேன்..." என்று சொல்லி அவள் தோளில் கை போட்டாள் மேகா...

"என் அண்ணா ஆகிய திரு. வியன் பிரசாத் அவர்களே... உங்க ஆளை சைட் அடிக்கும் தொழிலை அப்பறம் வச்சிக்கோங்க... நமக்கு இப்போ நேரம் ஆகுது... சோ வீட்டுக்கு போகலாமா..." என்று பொய் பணிவுடன் கேட்டாள் விகா...

நைனி மேல் இருந்த பார்வையை அகற்றாமல்... "ஹ்ம்ம்... போகலாம் போகலாம்..." என்று சொல்லி வைத்தான் வியன்...

"ஹெலோ சார்... உங்க பேச்சு போகலாம்னு தான் சொல்லுது... ஆனால் உங்க பார்வை வேற என்னவோ சொல்லுதே..." என்று சொன்னாள் மேகா...

அதை கேட்டு ஹிஹி என்று இளித்து வைத்தான் வியன்...

"பார்க்க முடியலை அண்ணா ரொம்ப கன்றாவியாக இருக்கு..." என்றாள் விகாஷினி...

"குட்டி பிசாசு... வீட்டுக்கு வா உனக்கு இருக்கு..." என்று அவன் சொல்ல...

"என்ன டா என்ன... என்ன பண்ணி கிழித்து விடுவ..." என்று சண்டைக்கு போனாள் அவள்...

"ஹா ஹா... அதான் உன் மூணாவது செமஸ்டர் ரிசல்ட் வந்துச்சே... அதை வீட்டில் சொல்லி ஒரு குதுகலத்தை கிளப்ப வேண்டியது தான்..." என்று சிரித்துக் கொண்டே சொன்னான் வியன் பிரசாத்...

"அய்யோ அண்ணா... என்ன அண்ணா..‌.. நீ என் அண்ணா தானே அண்ணா... நான் உன் தங்கச்சி தானே அண்ணா... நீயே இப்படி எல்லாம் சொல்லலாமா அண்ணா‌... என்ன அண்ணா நீங்க இப்படி பிளாக் மெயில் பண்றீங்களே அண்ணா... நான் பாவம் இல்லையா அண்ணா... ப்ளீச்ச்ச் உன் அன்புள்ள தங்கைக்கு கொஞ்சம் கருணை காட்டு அண்ணா..." என்று வார்த்தைக்கு வார்த்தை அண்ணா சொல்லி பேசினாள் விகாஷினி...

"ஆனாலும் இவ்வளவு பாசம் உடம்புக்கு ஆகாது என் குட்டி பிசாசு தங்கையே..." என்று புன்னகைத்த படி சொன்னான் வியன்...

அப்போது நைனிகாவுக்கு ஃபோன் வர... "ஷ்ஷ்... அம்மா ஃபோன் பண்றாங்க... எல்லாரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருங்க..." என்று சொல்ல... அனைவரும் அமைதி காத்து நின்றனர்...

"ஹான்... சொல்லு மா... ஹ்ம்ம்... இவளுங்க கூட தான் இருக்கேன்... ப்ச்ச்... இருக்காங்க மா... சரி... சரி... சரி மா சீக்கிரம் வரேன்... நாம சேர்ந்து போகலாம்... என்னால தனியாக எல்லாம் வர முடியாது... ஓகே வா... ம்ம்... நான் வைக்கிறேன்...." என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தாள் நைனிகா...

"என்னவாம் டி..." என்று மலர்க்குழலி கேட்க...

"மேகா... அம்மா கோவில் போக போறாங்களாம்... என்னையும் வர சொன்னாங்க... அதனால் நான் சீக்கிரமா வீட்டுக்குப் போகணும்..." என்று ஓரக் கண்ணால் வியனை பார்த்த படி சொன்னாள் நைனி...

"ஹ்ம்ம்... இதை நீ டைரக்டாக என் அண்ணன் கிட்டயே சொல்லி இருக்கலாம்..." என்று சலித்துக் கொண்டாள் விகாஷினி...

"ப்ச்ச்... மேகா நாம போகலாம்..." என்று மீண்டும் சொன்னாள் நைனி...

"சரி போகட்டும்... மேகா மா அவளை கூட்டிட்டு போ..." என்று சொன்னான் வியன்...

'நான் போறேன்னு சொன்னால் போகட்டும்னு சொல்லி விடுவாங்களா... போயா... நீங்க என்ன பெர்மிஷன் கொடுப்பது... நானே போக தான் போறேன்...' என்று மனதில் நினைத்து அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள் நைனிகா...

"சரி வா நைனி போகலாம்..." என்று மேகா சொல்ல...

நைனியோ... "பை விகா... நான் போய்ட்டு வரேன்..." என்று அவளிடம் மட்டும் சொல்லி மேகாவின் ஸ்கூட்டி பக்கத்தில் நின்று கொண்டாள்...

"இது ஒரு லூசு... சரி பை விகா... பை டா அண்ணா..." என்று சொல்லி விட்டு மேகாவும் வண்டியை எடுத்தாள்..‌

"பாசக்கார அண்ணா அதான் அவ போய்ட்டாளே... வா நாம வீட்டுக்கு போகலாம்..." என்று சொல்லி வியனை கிளப்பிக் கொண்டு வீட்டுக்கு போனாள் விகாஷினி...

இதை எல்லாம் முடித்து விட்டு... வீட்டுக்கு போக அவள் அம்மா சொன்னதை கேட்டு டென்ஷன் ஆனாள் மேகா மலர்க்குழலி....

********

உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே 😍

👇👇👇👇
 

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
அத்தியாயம் - 6

தட்டான் பூச்சிகள்
மழையின் வருகைக்காக
அங்கும் இங்கும் உலாவி
வானில் பறப்பது போல
என்னவனின் வருகைக்காக
மனதால் அலைந்து திரிந்து
ஒவ்வொரு நொடியும் நானும்
உன் உருவமில்லா நிழலின்
நினைவில் வாழ்வை
கற்பனையில் கழிக்கிறேனே!!!


நைனிகாவை அவள் வீட்டில் விட்டுவிட்டு... இவள் வீட்டுக்கு வந்தாள் மேகா மலர்க்குழலி...

"மலர் மா... மதி மா... எங்க இருக்க..." என்று கத்திய படி வீட்டுக்குள் நுழைந்தாள் அவள்....

"கண்ணு குருடி.... நான் இங்கே தானே சோஃபாவில் உட்கார்ந்து இருக்கேன்..." என்று சொன்னார் மலர்மதி...

"குட்டிமா... வந்துட்டீயா டா..." என்று சொன்னார் அவளின் தந்தை மதிவாணன்...

"ஐய்ய்... அப்பு நீங்க எப்போ வந்தீங்க..." என்று சொல்லி அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள் மலர்க்குழலி...

"நான் மதியமே வந்திட்டேன் குட்டிமா..." என்று மென் புன்னகையுடன் சொன்னார் மதிவாணன்...

"ஏன் ப்பா... காலையில என்ன எழுப்பவே இல்ல... நீங்க என் கிட்ட சொல்லாமலே மீட்டிங் போய்ட்டீங்க... போங்க... நான் உன் மேல ரொம்ப கோவம்..." என்று சிறுபிள்ளை போல கூறினாள் அப்பாவின் செல்ல மகள்...

"அச்சோ... உன் கனவை கலைக்க கூடாது என்று தான் நான் உன்னை எழுப்பவே இல்லை குட்டிமா... சாரி..." என்று அவர் சொல்ல...

"ம்ம்... அப்பவும் கனவு கலைந்து போச்சு அப்பு..." என்று ஆரம்பித்து காலையில் இருந்து மாலை வரை நடந்த அனைத்தையும் கதை போல சொல்லிக் கொண்டு இருந்தாள் மேகா மலர்க்குழலி...

"ஹா ஹா... உனக்கு இதே வேலையாக போச்சு குட்டிமா..." என்று சொல்லி மேலும் சிரித்தார் அவர்...

"அட போங்க ப்பா... எல்லாம் என் தலை எழுத்து... இதை நினைத்து நினைத்து டென்ஷன் தான் ஆகுது... அவன் மட்டும்..."

"எவன் டி அது..." என்று அவள் அம்மா மலர் கேட்க...

"அதான் மா... அந்த மூஞ்சி இல்லாத முட்டாப்பீஸு தான்..."

"அவர் என் வருங்கால மாப்பிள்ளை டி... உனக்கு வருங்கால புருஷன் டி..."

"க்கும்... எவன்னே தெரியலையாம்... இதுல மாமனாம்.. மச்சானாம்.. போ மா வேலையை பார்த்துட்டு..." என்று தாயை திட்டினாள் மேகா‌...

"உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிட்டா இப்படி எல்லாம் ஆகாது குட்டிமா..."

"அப்பு... எனக்கு இப்ப கல்யாணம் எல்லாம் வேணாம்... நான் இன்னும் பிஜியை முடிக்க கூட இல்ல... அதுக்குள்ள கல்யாண பேச்சை ஸ்டார்ட் பண்றீங்களா... என்னை கொஞ்ச நாள் நிம்மதியாக இருக்க விடுங்களேன்... நான் சுதந்திரமாக ஜாலியா சந்தோசமா எல்லாம் இருந்தா உங்களுக்கு பொறுக்காதே... அதுக்குள்ள எனக்கு ஒரு கமிட்மெண்ட்டை கொண்டு வர பார்க்கிறீர்களே மை டியர் பேரெண்ட்ஸ்..." என்று சொல்லி...

ஒரு பெரிய பெருமூச்சுடன்... "ஹ்ம்ம்... நீங்க மட்டும் ஜாலியா லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்டீர்கள் தானே... எனக்கு அந்த வாய்ப்பை எல்லாம் தர மாட்டீங்களா... ச்ச... ச்ச... ச்ச... நீங்களும் ஒரு டிபிக்கல் அப்பா அம்மாவா நடந்து கொள்ள பார்க்கறீங்க..." என்று கடைசியாக இருப்பதை மட்டும் சீரியஸாக சொல்ல முயற்சி செய்தாள் மேகா மலர்க்குழலி... ஆனால் அதை அவளால் செய்ய முடியாமல் பக்கென்று சிரித்து விட்டாள்....

"அதுக்கு எல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்டேன் தங்கம்..." என்று மதிவாணன் சொல்ல... அவரை முறைத்து பார்த்தாள் மேகா...

"அப்பு..."

"சும்மா டா குட்டிமா... உன் ரியாக்ஷனை பார்க்க தான் அப்படி சொன்னேன்..."

"இருந்தாலும் அது தானே அப்பா உண்மை அது மறுக்க முடியாதே..." என்று சிவாஜி போல சொன்னாள் மேகா...

"என் பொண்ணு மேகாவை அடுத்தவங்க எல்லாம் கிண்டல் பண்ண தேவை இல்லை... அவளே அவளை கிண்டல் பண்ணி... அவ மானத்தை ஏரோபிளேனில் ஏற்றிக் கொள்வாள்..." என்று சொல்லி நகைத்தார் மலர்மதி...

"என்ன நானே கிண்டல் பண்ணிக்கலாம் அம்மா... ஆனா மத்தவங்க தான் என்னை கிண்டல் பண்ணக் கூடாது... அடுத்தவங்க தான் என்ன குறையாக பேசுவது போல வச்சிக்க கூடாது... சோ... என்னை நான் பெர்ஃபெக்டா வைத்துக் கொள்வேன்..." என்று சொல்லும் மகளை... அவளை பெற்ற தாயும் தந்தையும் வாஞ்சையுடன் பார்த்தனர்...

"மேகா..."

"சொல்லு மா..."

"என்னங்க உங்க கிட்டயும் ஒன்னு சொல்லனும்..." என்று சொன்னார் மலர்மதி...

"என்ன மதி சொல்லு..."

"ஹ்ம்ம்... நாம ஒரு நாள் ஜோசியர் கிட்ட போயிட்டு வரலாமா..."

"மலரு... இது எல்லாம் எனக்கும் அப்பாக்கும் நம்பிக்கை இல்ல என்று உனக்கு தெரியும் தானே..." என்று சீறினாள் மேகா...

"மேகா கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இரு... இதை பற்றி நீ எதுவும் பேசாதே... நான் உங்க அப்பா கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்..." என்று அவளிடம் கோபமாக சொன்னார் அவர்...

"ப்ச்ச்... மலர் குட்டிமாவை எதுக்கு இப்படி திட்டிக் கொண்டே இருக்க... அவ என்ன சொல்லிட்டா என்று இப்படி கோபமாக பேசற..." என்று மனைவியை திட்டினார் மதிவாணன்...

"அப்படி சொல்லுங்க அப்பு..." என்று சொல்லி தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டாள் மேகா...

"ப்ளீஸ்... ரெண்டு பேரும் நான் சொல்ல வருவதை என்னன்னு தான் கேளுங்களேன்... எதுக்கு அப்பாவும் பொண்ணும் என்னை திட்டி பேசிட்டு இருக்கீங்க..." என்று மலர்மதி சொல்ல... இருவரும் அமைதியாக இருந்தனர்...

"இப்ப நான் வாயைத் திறந்து பேசவா... வேண்டாமா... எதுக்கு ரெண்டு பேரும் இப்படி மௌன சாமியார் போல உட்கார்ந்து கொண்டு இருக்கீங்க..."

"பேசு பேசு..." என்று நக்கலாக சொன்னாள் மலர்க்குழலி...

"கொழுப்பு டி உனக்கு..."

"மலர் என்ன விஷயம் அதை பற்றி சொல்லு..."

"கொஞ்ச நாளாக வீட்டில் நடப்பது எல்லாம் தப்பாகவே இருக்குங்க..." என்று அவர் ஆரம்பிக்க...

"என்ன மா நம்ம வீட்டில் பேய் ஏதாவது இருக்கா..." என்றாள் மேகா...

அவளை முறைத்து பார்த்த மலரோ... "அதுக்கு தான் நீ இருக்கீயே... இன்னொரு பேய் வேற நம்ம வீட்டை தேடிட்டு வரணுமா என்ன..." என்று சொல்லி அவள் மூக்கை உடைத்தார்...

"தேவை இல்லை... தேவை இல்லை... நானே போதும் தான்... என்னால பங்கு எல்லாம் தர முடியாது..." என்று சொல்லி விட்டாள் அவள்...

"நேற்று காலையில் பூஜை செய்யும் போது குங்குமம் கொட்டி விட்டது..."

"அதை துடைத்து கிளீன் பண்ண வேண்டியது தானே அம்மா..." என்று சொன்ன மகளை அனல் பார்வை பார்த்தார் மலர்மதி...

அதற்கு பயந்து... "சாரி சாரி மா... இனி என் வாயை திறக்க மாட்டேன்..." என்று உடனடியாக கூறினாள் மேகா மலர்க்குழலி...

"என் மனசுக்கு சரின்னு படலை... அதனால... கோவிலில் அம்மனுக்கு புடவை வாங்கி கொடுக்கலாம் என்று நினைத்து அதை வாங்கிட்டு கோவிலுக்கு போனேன்... ஆனா அந்த புடவை நெருப்பு பட்டு எரிஞ்சு போச்சு... அதுக்கு அந்த பூஜாரி சொன்னாரு... ஏதோ அபசகுணம் போல இருக்கு மா... நீங்க உங்க குலதெய்வம் கோவிலுக்கு போய் தரிசனம் செய்துட்டு வாங்க... எல்லாம் சரியாக போய்டும் என்று சொன்னார்... அது தாங்க... மனசை ஒரு மாதிரி பண்ணுது... நாம ஜோசியர் கிட்ட ஒரு வாட்டி போய்ட்டு... பிறகு ஒரு நல்ல நாளாக பார்த்து நம்ம குலதெய்வம் கோவிலுக்கும் போய்ட்டு வரலாம்... ஆனால் குலதெய்வம் கோவிலுக்கு எப்படி நாம போக முடியும்... அதான் கொஞ்சம் யோசனையாக இருக்கு..." என்று கவலையுடன் சொன்னார் அவர்...

"ப்ச்ச்... என்ன இது எல்லாம்... எதுக்கு மலர் இப்படி எல்லாம் நினைச்சிட்டு இருக்க... இது எல்லாம் தற்செயலாக நடந்தது தான்... நீயாக ஓவர் கற்பனை பண்ணிட்டு இருக்க... நீ எதை பற்றியும் நினைக்காமல் இரு... அப்போ எதுவுமே தப்பாக தோன்றாது... புரியுதா..." என்று பொறுமையாக விளக்கினார் மதிவாணன்...

"என்னங்க... என்னுடைய உணர்ச்சிகளை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவே மாட்டீங்களா... நான் என்ன எப்பவும் இது போல சாங்கியம் சம்பரதாயம் நல்லது கெட்டது என்றா பேசிட்டு இருக்கேன்... எனக்கு ரெண்டு நாளாவே ஏதோ பயமாவே இருக்கு... என்னமோ தப்பா நடக்க போற மாதிரியே தோன்றி மனசை உறுத்திக் கிட்டு இருக்கு... அதனால தானே நான் இதெல்லாம் உங்களிடம் சொல்லிட்டு இருக்கேன்..." என்று படபடப்பாக சொன்னார் மலர்மதி...

"அப்பா அம்மா ரொம்ப ஹைப்பர் ஆகி இருக்காங்க... அவங்க என்ன சொல்றாங்களோ... அதை செய்ங்க... அது செய்தால் அவங்க கொஞ்சம் திருப்தியாக இருப்பாங்க... இல்லன்னா அவங்க தாட் எல்லாம் இது போல தானே இருக்கும்... அதே அவங்க ஹெல்த்துக்கு நல்லது இல்ல... சோ எதுவாக இருந்தாலும் ஓகே சொல்லிடுங்க..." என்று மெல்லிய குரலில் தந்தையிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள் மேகா மலர்க்குழலி...

"சரி மா... நீ என்ன செய்ய சொல்றியோ அதையே நாம செய்யலாம்... ஹ்ம்ம்... உனக்கு ஜோசியரை தானே பார்க்கணும்... ஓகே நாம போய் பார்க்கலாம் சரியா..." என்று மனைவியிடம் கூறினார் மதி...

"ம்ம்... சரிங்க... ஆனால்..." என்று சொல்ல தயங்கினார் மலர்...

"ஆனா ன்னு ஏன் மா இப்படி இழுத்துக் கொண்டு இருக்க..."

"குலதெய்வம் கோவிலுக்கு போகணுமே... எங்க ஊரில் எங்களை சேர்ப்பாங்களா... அங்கே எப்படி போக முடியும்..."

"அம்மா... நான் பிறந்தே இருபத்து மூன்று வயசு ஆக போகுது... உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி கிட்ட தட்ட இருபத்து ஐந்து வருஷம் ஆக போகுது... இன்னுமா அதை எல்லாம் ஞாபகம் வச்சிட்டு இருக்க போறாங்க... இதெல்லாம் யாரும் கேர் பண்ணிட்டு இருக்க மாட்டாங்க மலர் மா... நீங்க போய்ட்டு சாமி கும்பிட்டு வாங்க..." என்று தாய்க்கு ஆறுதல் மொழி கூறினாள் மேகா...

"உங்க பாட்டிக்கு கோபம் குறைந்து இருக்காது மேகா... உங்க அப்பாவை‌ எந்த அளவுக்கு பிடிக்குமோ அதே போல தான் என் அம்மாவையும் எனக்கு பிடிக்கும்... அப்போ அந்த சமயத்தில் என் அம்மாக்கு என்னுடைய அப்பா இருந்தார்... ஆனால்... இவருக்கு நான் மட்டும் தானே இருந்தேன்... அதான் இவரோட கை பிடித்து வெளியே வந்தேன்... ஹ்ம்ம்... இதை என் அம்மா அப்பா மன்னிக்கவே இல்ல..." என்று அழுது கொண்டே சொன்னார் ‌மலர்... அதை கணவனும் மகளும் வேதனையுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்...

"மலர் எதுக்கு மா இப்படி அழற... நீ அழுவதை பார்த்தால் எனக்கு தான் ரொம்ப கஷ்டமாக இருக்கு... என்னால தானே நீ இப்படி அழுதுட்டு இருக்க..." என்று தழு தழுத்த குரலில் சொன்னார் மதிவாணன்...

"அப்படி எல்லாம் இல்லங்க... நீங்க கஷ்டப் படாதீங்க... நான் நல்லா தான் இருக்கேன்... நீங்க என்னை மகாராணி போல பார்த்துட்டு இருக்கீங்க... எனக்கு எந்த கஷ்டமும் இல்ல..." என்று சொல்லி அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டார் மலர்...

"நான் உன்னை என் கூட கூட்டி வந்து இருக்க கூடாதோ..." என்று மதி சொல்ல...

"அய்யோடா... ப்பா... இதை நீங்க இருபத்து ஐந்து வருஷம் கழிச்சு சொல்றீங்க பார்த்தீங்களா... யூ ஆர் கிரேட் அப்பா..." என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்னாள் மேகா...

"சரி வா மலர்... உன்னை உன் வீட்டிலேயே விடறேன்..." என்று சோகமாக முகத்தை வைத்து சொன்னார் மதி...

அதை கேட்ட மலரோ... பக்கத்தில் இருந்த செய்தித்தாளை தூக்கி அவர் மீது வீசினார்...

"அப்போ என்னை பழைய மாதிரியே கன்னி கழியாதது போல மாற்றுக் கொடுங்க... நான் என் அம்மா வீட்டுக்கு போறேன்..." என்று சினத்துடன் சொன்னார் மலர்மதி...

"ஹாஹா.. அப்பா அம்மா கிட்ட மாட்னிங்களா..." என்று சொல்லி சிரித்தாள் மேகா...

"அது எப்படி முடியும்..." என்று அவர் சொல்ல...

"அது முடியாது என்று தெரியுது தானே... அப்போ எதுவும் பேசாமல் அமைதியாக இருங்க..." என்று முறைப்புடன் கூறினார் மலர்...

"நீங்க ரெண்டு பேரும் செம லவ்வபிள் கப்பில்..." என்று புன்னகையுடன் சொன்னாள் மேகா மலர்க்குழலி...

அவர்கள் குழந்தையின் புன்னகை இவர்களையும் தொற்றிக் கொள்ள... இருவரும் கவலை மறந்து சிரித்தார்கள்...

"மேகா... போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா... உனக்கு ஏதாவது ஸ்நேக்ஸ் பண்ணித் தரேன்..." என்று மலர்மதி சொல்ல...

"ஓகே ராஜமாதா... நான் இப்பவே போறேன்..." என்று சொல்லி சென்று விட்டாள் மேகா...

அதன் பிறகு நேரம் அப்படியே கடந்து சென்றது...

இரவு வேளையில் அவளுடைய டைரியை எடுத்துக் கொண்டு... மெத்தையில் அமர்ந்துக் கொண்டாள் மலர்க்குழலி...

இன்று காலையில் ஆரம்பித்து இப்போது வரை நடந்த அனைத்தையும் சிறுக சிறுக எழுதினாள் அவள்...

பின்னர்... அவள் மனமோ தலை இல்லாத தண்டம்... மூஞ்சி இல்லாத முட்டாப்பீஸை... வதனம் இல்லாத வாத்து முட்டை... என்று அவளால் பல அடைமொழி சூட்டப் பெற்ற அவனை பற்றி நினைக்க தொடங்கினாள் சொப்பன சுந்தரனின் வருங்கால சுந்தரி...

உன் முகம் காட்டாமல் போனாலும்
உன் அகம் காட்டி செல்கிறாயடா...!!!
கனவில் என் கழுத்தில் ஏறும் தாலி
நினைவில் என்றைக்கு நடக்குமடா...!!!
காதலில்லாது இருந்து என் இதயத்தில்
ஏனடா கள்வா காதலை மலர செய்தாய்...!!!!

என்று எழுதிய மேகா... அதை படித்து விட்டு சிரித்தவாறே சலிப்புடன் ஒரு பெருமூச்சை விட்டாள்...

பின்னர்... அதே புன்னகையுடன் உறங்க சென்று... சொப்பனத்தில் அவள் சுந்தரனை முகம் பார்க்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் இந்த சொப்பன சுந்தரி...

*******

உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே 😍

👇👇👇👇👇
 

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
அத்தியாயம் - 7

எல்லாம் இருந்தும் ஏனோ
வெறுமையான உணர்வே...!!!
என் உள்மனம் காதல் கொண்ட
உன் அருகாமையை தான்
தேடி அலைகிறது போல...!!!
வந்து விடு பெண்ணே...!!!
என் தேடலை முடித்து வைக்க...
வந்து விடு பெண்ணே...!!!
என் காதலை உனக்கு மட்டும்
பரிசாக அளிக்க நீ விரைவில்
வந்து விடு பெண்ணே...!!!



ஆரனோ அவன் வேலையை முடித்து விட்டு மெல்வின் கேபினுக்கு சென்றான்...

"மெல்வின்..."

அவனை தலை நிமிர்ந்து பார்த்தவன்... "என்ன டா..." என்று கொட்டாவி விட்ட படி கேட்டான்...

"மெல்லு... வேலையை எல்லாம் இப்படி கஷ்டப்பட்டு செய்ய கூடாது... இஷ்டப்பட்டு தான் செய்யணும்... நீ செய்வது போல் செய்தால் எரிச்சல் தான் வரும்... உனக்கு பிடிச்சு போய் செய்து பாரு... அதில் இருக்கும் கஷ்டம் எல்லாம் உனக்கு தெரியவே தெரியாது..." என்று ஆரன் சொல்லிக் கொண்டு இருக்க...

அவனை கையெடுத்து கும்பிட்டு... "எப்பா... அட்வைஸ் அட்டைப்புழு... இந்த கன்றாவி பேச்சை எல்லாம் என்னால கேட்க முடியாது... ஏற்கனவே இந்த வொர்க்கில் வெறுப்பாகி போய் இருக்கேன்... நீ வேற அதில் எக்ஸ்ட்ரா மசாலா தடவி... எண்ணெயில் வேற போட்டு... பொரிச்சு எடுக்காத... ஐம் சோ பாவம்..." என்று புலம்பிக் கொண்டு இருந்தான்...

"ஹா ஹா... சரி சரி டா நான் உனக்கு அட்வைஸ் எல்லாம் செய்யல... எனக்கு போர் அடித்தது... அதான் ஜஸ்ட் பேசிட்டு போகலாம்னு வந்தேன்..." என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே... அவன் கைபேசிக்கு அழைப்பு வந்தது...

அதை ஏற்று காதில் வைத்தவன்... "அம்மா எதுக்கு இந்த நேரத்தில் ஃபோன் பண்ணி இருக்கீங்க... ஏதாவது பிரச்சனையா... ஏன் மா சைலண்ட் ஆஆ இருக்கீங்க... அம்மா பேசுங்க..." என்று கத்தி கொண்டே இருந்தான் ஆரன்...

"செழியா.... இப்போ ஆஃபிஸில் வேலை தானே பார்த்துட்டு இருக்க...கொஞ்சம் பொறுமையாக தான் பேசேன்..." என்று மறுமுனையில் அவன் அன்னை பானுப்ரியா பொறுமையாக பேசினார்...

அதன் பின்னர் தான் சுற்றம் அறிந்து தன்னை அமைதி படுத்திக் கொண்டான் செழியன்...

"மணி நாலு ஆக போகுது... நீங்க இந்த நேரத்தில் கால் பண்ணால்... வேற எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களாம்..."

"சரி சரி... விடு பா..."

"மொதல்ல எதுக்கு ஃபோன் பண்ணிங்க ன்னு சொல்லுங்க..."

"சும்மா தான்... உன் கிட்ட பேசணும் போலவே இருந்தது... அதான் உனக்கு ஃபோன் பண்ணேன்... ஏன் அம்மா உன்னை தொந்தரவு பண்ணிட்டேனா‌... நான் வேணா ஃபோனை வச்சி விடவா..." என்றார் பானு...

"வேலை எல்லாம் இல்ல மா... நீங்க பேசுங்க... நான் இப்ப ஃப்ரீயா தான் இருந்தேன்..."

"சரி செழியா... நீ சாப்ட்டீயா..."

"அதெல்லாம் ஆச்சு..."

"ம்ம்..." என்று மட்டும் சொல்லி மௌனமாக இருந்தார் அவர்...

"என் கிட்ட ஏதாவது கேட்கணுமா... இல்ல ஏதாவது சொல்லணுமா... எதுக்கு எதுவும் பேசாமல் இப்படி அமைதியாக இருக்கீங்க..." என்று கேட்டான் ஆரன்...

"செழியா... நீ ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோ பா... உனக்கும் கல்யாண வயசு வந்துருச்சு தானே..." என்று அவர் சொல்ல...

"ஏன் ம்மா... உங்களுக்கு தூக்கம் வரலை ன்னா என் தூக்கத்தை கெடுக்க பார்ப்பீங்காளா..."

"ஏன் செழியா இப்படி எல்லாம் பேசுற..."

"வேற எப்படி பேசணும்..."

"நீ எப்படி பேசறீயோ... அப்படியே பேசு... உன் பேச்சை என்னால மாத்த முடியுமா... ம்ஹூம் முடியாது..."

"அம்மா நீங்க என் கிட்ட பேச ஃபோன் செய்தீர்களா... இல்ல கலாய்க்க ஃபோன் பண்ணீங்களா..."

"ஹிஹி... ரெண்டும் தான்..." என்று சொல்லி சிரித்தார் பானுப்ரியா...

"நல்லா வருவீங்க மா..." என்று சொல்லிய அவனுக்கும் சிரிப்பு தான் வந்தது...

"உனக்கு இப்ப வேலை இல்ல..."

"நான் வொர்க் எல்லாம் முடிச்சிட்டேன்... ஹ்ம்ம்... நீங்க மெல்வின் கிட்ட பேசறீங்களா மா... அவன் தான் புலம்பிட்டே வேலை பார்க்கிறான்..." என்று ஆரன் சொல்ல...

"சரி குடு... அவன் கிட்ட பேசியே ரொம்ப நாள் ஆச்சு..." என்றார் பானு...

"மெல்லு இந்த அம்மா பேசுறாங்க..." என்று சொல்லி ஃபோனை கொடுத்தான்...

"ம்மா... எப்படி இருக்கீங்க... வீட்டில் எல்லாம் எப்படி இருக்காங்க..." என்று மெல்வின் கேட்க...

பானுவோ... "எல்லாரும் நல்லா இருக்கோம் பா... ஆமா... உன் கல்யாண வேலை எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு..." என்று சொன்னார்...

"அது எல்லாம் நல்லா தான் அம்மா போய்ட்டு இருக்கு..." என்று ஆரம்பித்து... அது பற்றி பேசிக் கொண்டு இருந்தனர்...

"ம்மா... உங்க பையனை இத்தனை வருஷம் எப்படி தான் வச்சி மேய்ச்சிட்டு இருந்தீங்களோ தெரியலை... அவன் பேசுவது எல்லாம் புரியாத புதிராகவே இருக்கு... ஒரு சில நேரத்தில் ஒன்னுமே புரிய மாட்டேங்குது... அவன் ஒன்றை பற்றி பேசினால் அது புடிக்குதா இல்லையா என்று கண்டு பிடிக்கவே முடியலை..." என்று மெல்வின்.. அவன் புலம்பலை தொடங்க...

"மெல்வின் இப்ப நீ பேசறது தான் பா எனக்கு புரிய மாட்டேங்குது..." என்றார் பானு...

அதே சமயம் மெல்வின் தலையில் நங் என்று கொட்டு வைத்தான் ஆரன்...

"ஆஆஆ...."

"என்னப்பா அங்க சத்தம்..." என்று ஃபோனில் கேட்டுக் கொண்டு இருந்தார் பானுப்ரியா...

"அம்மா கிட்ட இன்னும் எதையாவது உளறி வச்ச மவனே உன் தொண்டை குழி இருக்காது பார்த்துக்க... சீவிடுவேன்..." என்று மெல்லிய குரலில் சீறினான் ஆரன் செழியன்...

அவனை பாவமாக பார்த்த மெல்வின்... "அது அது... ம்மா... என் பென்ச்சை தலையில் இடித்துக் கொண்டேன் அம்மா..." என்று எதையோ ஒன்று சொன்னான்...

"என்ன சொல்ற..."

"மாத்தி சொல்லிட்டேன் போல டா..." என்று ஆரனிடம் பாவமாக சொன்னான் மெல்வின்...

"அம்மாவிடம் பேச சொல்லி உன் கிட்ட ஃபோனை கொடுத்தேன் ல என்னை சொல்லணும்..." என்று திட்டிக் கொண்டே... அவனிடம் இருந்த கைபேசியை வாங்கினான் ஆரன்...

"அம்மா அவன் நைட் ஷிப்ட் ஆனால் இப்படி தான் லூசு ஆகிடுவான்... அதுவும் இல்லாமல் அவன் பென்ச்சில் வேற இடிச்சிக் கிட்டான்... அதான் கண்டதையும் பேசிட்டு இருக்கான்..." என்று தாயிடம் எதையோ சொல்லி சமாளித்தான் ஆரன்...

"சரி சரி... அவன் எதையோ உண்மையை சொல்லி வச்சான்... நீ ஏதோ பொய்யை சொல்லி என்னை சமாளிக்க பார்க்கிற... ஹ்ம்ம்... என்னமோ போ..." என்று சலித்து கொண்டே சொன்னார் பானுப்ரியா...

'இந்த அம்மா கிட்ட ஒரு பொய்யை ஒழுங்கா சொல்லிட முடியாதே...' என்று மனதில் நினைத்து சிரித்துக் கொண்டான் செழியன்...

"என்னடா சிரிச்சிட்டு இருக்கீயா என்ன..."

"இல்ல ம்மா.."

"தெரியும் டா மகனே... சரி சரி செழியா... எனக்கு தூக்கம் வருது ஒரு மணி நேரம் தூக்கிட்டு அப்பறம் எழுந்து வீட்டு வேலை எல்லாம் பார்க்கணும்..." என்று சொன்னார் பானுப்ரியா...

"சரி ம்மா... நீங்க தூங்குங்க... நான் ஃபோனை வைக்கிறேன்... பை ம்மா..." என்று சொல்லி ஆரனும் ஃபோனை வைத்து விட்டான்...

"என்ன டா அம்மா இந்த டைமில் ஃபோன் செய்து இருக்காங்க... ஏதாவது முக்கியமான விஷயமா என்ன..." என்று கேட்டான் மெல்வின்...

"பிரச்சனை எல்லாம் இல்ல..."

"அப்போ..."

"நான் பேசுவதை கேட்பதற்கு தான்..."

"ஏன்..." என்று மெல்வின் கேட்க...

ஆரனோ சிரித்துக் கொண்டே... "அப்பாவுக்காக ஃபோன் செய்து என் கிட்ட பேசி இருப்பாங்க... அவரும் நான் பேசியதை எல்லாம் கேட்டு இருப்பார்... அதுக்காக தான் இருக்கும்... வேற ஒன்னும் பெருசா இருக்காது.." என்று கூறினான்...

"ஹா ஹா... நல்ல வருவீங்க டா..." என்றான் அவன்...

"உன் வேலை கொஞ்சம் பெண்டிங் இருந்ததை நானே முடிச்சிட்டேன் டா..." என்று ஆரன் சொல்ல...

அவனை அணைத்துக் கொண்டு... "நண்பேன்டா..." என்று சொல்லி சிரித்தான் மெல்வின்...

"நீ கொஞ்சம் தள்ளி நில்லு டா... நாறுது... நாற்றம் தாங்க முடியலை..." என்று கூறி அவனும் சிரித்தான்...

அதன் பிறகு... வேலையை முடித்து விட்டு... அவன் வீட்டுக்கு சென்று விட்டான் ஆரன் செழியன் நந்தியவர்மன்...

அங்கே பானுப்பிரியா சிரித்துக் கொண்டே ஃபோனை வைத்ததும்...

"என்ன உன் சின்ன மவன் கிட்ட பேசியாச்சா..." என்று கேட்டார் பாரியவேல்...

"ஏங்க நீங்க தூங்கலையா... முழிச்சிட்டு தான் இருந்தீங்களா..." என்று ஆச்சரியமாக கேட்டார் பானு...

"நீ பேசு ஆரம்பிக்கும் போதே எனக்கு முழிப்பு வந்துருச்சு..." என்று பாரியவேல் சொல்ல...

பானுவோ வாயில் கை வைத்து... "அடியாத்தே... நான் மொத்தத்தையும் ஸ்பீக்கர் போட்டு தானே பேசிட்டு இருந்தேன்... அம்புட்டும் கேட்டீங்களா..." என்று புன்னகையை அடக்கிய படி கேட்டார்...

அவர் மனதிற்குள்... 'நீங்க கேட்கணும்னு தானே அதை போட்டு பேசினேன்...' என்று நினைத்துக் கொண்டார்...

"ஆமா... ஆமா... ம்ம்... இந்த இராவில் பார்க்கும் வேலை வேணாம்னு தானே சொன்னேன்... எங்க என் பேச்சை கேட்கிறான்... அவன் இஷ்டப் பட்டதை செய்ய நினைக்கான்... எப்படியோ போகட்டும்... அவன் அங்க சந்தோசமா தானே இருக்கான்..." என்று பரிவோடு சொன்னார் பாரியவேல் நந்தியவர்மன்...

'இவ்வளவு பாசம் இருக்கும் மனுஷன்... புள்ள கிட்ட நாலு வார்த்தை பாசமா பேசலாம் தானே... அதை விட்டுட்டு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து என் தூக்கத்தையும் கெடுக்க வேண்டியது...' என்று மனதில் கணவனை திட்டிக் கொண்டு இருந்தார் பானுப்ரியா...

"ஆமா ங்க... செழியன் அங்கே சந்தோஷமா தான் இருக்கானாம்..." என்று அவர் சொல்ல... மனைவியை முறைத்து பார்த்தார் பாரியவேல்...

"எதுவும் பேசாமல் தூங்கு பானு... இங்க கொஞ்ச நேரத்தில் பொழுது புலர்ந்து விடும்... எனக்கு தூக்கம் கண்ணை சொக்குது..." என்று சொல்லி திரும்பி படுத்து கொண்டார் அவர்...

"இந்த பேச்சில் மட்டும் தாங்க உங்களுக்கு மவுசு... எனக்கும் உறக்கம் தான் வருது... நீங்க சொன்னாலும் சொல்லாமல் போனாலும் நான் தூங்க தான் போறேன்..." என்று சொல்லி பானுவும் புன்னகையுடன் திரும்பி படுத்து கொண்டார்...

**********

உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே 😍

👇👇👇👇
 
Status
Not open for further replies.
Top Bottom