Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தீராத் தீயே... தீஞ்சுவையே....

Gayathri vinothkumar

Saha Writer
Team
Messages
2
Reaction score
0
Points
1
முப்பத் திருபல் முனைவேல்
காக்க
செப்பிய நாவைச் செவ்வேல்
காக்க
கண்ணம் இரண்டும் கதிர்வேல்
காக்க
என் இளங் கழுத்தை இனியவேல்
காக்க.......
கந்த சஷ்டி கவசம் இசைக்க நேத்ரா காலைப் பொழுதிற்கே உரிய இரம்யமான தருணத்தை இரசித்து விட்டு மித்துவின் ஆசையின் பொருட்டு விளக்கேற்றி வணங்கினாள்🙏🙏🙏

அவளுடைய சாம்ராஜ்யமான சமையலறையில் நுழைந்து அன்னபூரணியை நினைத்து வணங்கி காலை உணவு தயாரிப்பிற்கு மனதை கலந்தாலோசித்துக் கொண்டே பாலை காய்ச்சி சுடச் சுட காஃபி தயாரித்தாள்☕☕☕

மித்ரனுக்கு தேனீர் தான் பிடிக்கும் அதில் இஞ்சியும் ஏலக்காயும் தட்டிப்போட்டு சுடச்சுட பிளாஸ்கில் ஊற்றி வைத்தாள்.🍮🍮🍮

நேத்ராவிற்கு காஃபியின் மீது அலாதியான காதல் அதிலும் அதிகாலையில் ஒரு காதல் கவிதையோடு காஃபி குடித்தால் அவளுக்கு அன்றைய நாள் சொர்க்கமாக கழியும்...😍😍😍😍

அவள் காபியை பருகும் இடைவெளியில் நாம் அவளை அறிந்து கொண்டு வரலாம் வாருங்கள்... 😎😎😎

நேத்ரா மைகரும்பும் இல்லை.... மஞ்சள் வெளுப்பும் இல்லை ... இதமான கோதுமை நிறம் அலங்காரங்களோடு பார்க்க அத்தனை அழகோவியமாக மிளிர்வாள்.👩

ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு ஆசிரியை... குழந்தைகளுக்கு அவள் ஸ்டோரி மிஸ் அப்படித் தான் அழைப்பார்கள் ....👩‍🏫

சற்று பூசின உடல்வாகு தான் ஆனாலும் ஒரு குடும்பத்தலைவி என்பதை விட ஒரு ஆசிரியரின் பாங்கு தான் அவளை பார்க்கையிலும் அவளது நடை உடை பாவனைகளிலும் ஆதிக்கம் செலுத்தும்.👩‍🏫👩‍🏫👩‍🏫

இடையளவு கூந்தல் ஆனாலும் கொண்டையிட்டு நெருங்க தைத்த மல்லிகை வேணி சூடிக்கொள்ளவே அவளுக்கு மிகவும் விருப்பம்...

மித்ரனின் விருப்பத்திற்காக திட்டமாக வெட்டி ஸ்ரெய்ட்னிங் செய்து மாடல் யுவதியாக பார்வைக்கு புருவம் ஏற பார்க்க வைத்தாள்.

கலகலவென பேசிக்கொண்டே இருக்கும் வாயாடி ரகம்.🙉🙉🙉🙉

கோவம் மட்டும் அதிகமாக வரும் பொய் சொன்னால் அறவே பிடிக்காது...😨😡😡😡

அன்பு காட்டுவதில் அளவுகோள் அற்றவள் பசியோடு யாரையும் பார்த்தால் கர்ணனின் குணம் தலைதூக்க இருப்பதை கொடுத்துவிட்டு பட்டினி கிடக்கும் புன்னியவதி...😇😇

அன்பிற்கு உரியவர்கள் எதை சொன்னாலும் ஆமாவா என அப்படியே கேள்வி கேட்காது நம்பும் வெள்ளந்தி...😳😳😳

(அய்யய்யோ மக்களே ஒரு ஆர்வத்துல அதிகமா புகழ்ந்துட்டேன்.)😊😊😊😊

(நேத்ரா சமையலே முடிச்சிட்டா போல வாங்க நாம மத்தவங்கலயும் பாக்கலாம்)🤔🤔🤔😾

காஃபி முடிந்து சாமை அரிசியில் வெண்பொங்களும் கொஞ்சம் சட்னி சகிதம் கத்தரிக்காய் சாம்பாரையும் அடுப்பின் மீது அமர்த்திவிட்டு தன் வீட்டு இரட்டை வால்களை எழுப்ப சென்றாள்.☺️☺️

முதல் அறையில் முகிலனை பத்து நிமிட போராட்டம் பல தாக்குதல்களுக்கு பிறகு எழுப்புவதற்குள் அடுத்த காஃபி தேவைப்பட்டது அவளுக்கு...

யாழிசை சமத்து பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதவிருப்பதால் காலையே எழுந்து படித்துக்கொண்டிருந்தாள்.🤗🤗🤗

இருவருக்கும் அவளே வீட்டில் அரைத்த சத்துமாவு கொண்டு கஞ்சி தயாரித்து கொடுத்துவிட்டு அடுத்த அறைக்கு விரைந்தாள்.

அவளுடைய மூத்த குழந்தை சிவனே என சாந்த சொரூபியாக முகத்தைப் போர்த்திக் கொண்டு தூங்கிக்கொண்டு இருந்தது

மித்து எத்தனை முறை சொல்லி இருக்கிறேன் முகத்தை மூடாதேன்னு... அது தப்பு ஆக்ஸிஜன் இன்றி சுவாசிக்க சிரமமாக உணர வேண்டி வரும் என்று...🙄🙄🙄


அல்லது உடலை அழுத்துவது போல பய உணர்வு கூட ஏற்படும் டா...(தனியே எப்போதும் டா தான்....)😉😉😉

எழுந்திரிடா நீ லேட் ஆ எழுந்துட்டு என்மேல பழி போட்டுட்டு சாப்பிடாம போகலானு பாக்காத எழுந்துக்கோ இல்லைனா தண்ணீர் ஆபிஷேகம் தான்...😡😡😡

அம்மு இன்னும் பத்தே பத்து நிமிஷம் டி பிளீஸ் டி உருள.... ( இவை மித்ரன் மட்டும் நேத்ராவை அழைக்கும் செல்லப் பெயர்கள்( அம்மு..உருள.... பட்டு..சிட்டு... தங்கம்....இன்னும் பல....)

ஏன் நடுவுல மானே ....தேனே.... பொன்மானே லா போடலையா....🤓🤓🤓

நீ ரொம்ப கடுப்போத்ர உனக்கு பனிஷ்மென்ட் கூட ஒரு கரண்டி பொங்கல் சாப்டே ஆகனும் என்று கட்டளை பிரப்பித்து மித்ரனின் கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டு நிமிர்கயிலே...

பொங்கலும் சாம்பாரும் கோவமாக நேத்ராவை விசிலடித்து ட்ரில்லுக்கு வா ரொமான்ஸ் போதும் என அழைத்தது...🙈🙈🙈

இன்று முகிலனுக்கு கல்லூரிக்கு முதலாமாண்டு மாணவர் வருகை.... அவன் இப்போது இரண்டாம் நான்காம் ஆண்டு ஆர்கிடெக் படிக்கிறான்... இன்று பல வண்ண வண்ண புதிய வரவுகளை வாரி விழிகளில் நிரப்ப வேண்டி வேகமாகவே கல்லூரிக்கு தயாரானான்..👼👼👼👼

உள்ளே ஒரு கடுப்போடு புலம்பினான் என்ன முயற்சி பன்னாலும் நாம்ம கேரக்டர் ஆர்டிஸ்ட் தானே....

ஆனாலும் இந்த ரைட்டர் ரொம்ப மோசம் நாப்பது வயதிற்கு மேல் இவர்களுக்கு காதல்.... ரொமான்ஸ்.... ஓ மை காட் ......😩😩😩😩

( கவல படாதடா கண்ணா உனக்கும் ஒரு களமும் காதலும் உண்டு பொருத்தார் பூமி ஆள்வார்🤓🤓🤓) அடுத்த பார்ட்டில்.....

ஆமாங்க கதைல யாரு ஹீரோ யாரு ஹீரோயின்.... னு கேட்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது....

உங்கள் யூகம் சரிதான்.... காதலுக்கு அழகு வயது காலம் எல்லாம் ஒரு தடையா.... 🤔🤔🤔

காதல் எல்லா கட்டத்திலும் உண்டு.... வயதுக்கும் அனுபவத்திற்கும் ஏள்ப அதில் பரிணாம வளர்ச்சியும் உண்டு....🤗🤗🤗🤗

காதலிப்பது சுலபம் தான்... 😍😍😍அதை கடைசி வரை இழுத்துப் பிடித்து குடும்பம் என்ற தேரை நகர்த்த தேர்ந்த சாரதியாக ஒருத்தர் விட்டுக் கொடுத்து இறங்கி வந்து இயங்கவும் வேண்டும் இயக்கவும் வேண்டும்.....😊😊😊 இல்லையா.....😎😎😎

அதற்கு அன்பும் பொருமையும் சகிப்புத்தன்மையும் சில பல இழப்புகளும் இணைந்த அச்சாணியாக காதல் சக்கரத்தை தொடர்ந்து சுழட்டவும் வேண்டும்.....😯😯😯

இங்கே பயணம் தொடங்கி சுழண்டு எப்படி நகர்ந்தது என்று இவர்களோடு நாமும் பயணித்து தான் உணர முடியும்....🤓🤓🤓

வாருங்கள் தொடர்ந்து பயணிக்கலாம்....

மித்ரன் நேத்ராவோடு......👨🙏🙏🙏👩



-- தொடரும்....
 

Gayathri vinothkumar

Saha Writer
Team
Messages
2
Reaction score
0
Points
1
👩 நேத்ரா பார்த்து பார்த்து கணவனின் உடல் நலத்துடன் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை கருத்திற் கொண்டு தான் சமையலை செய்வாள்..😊😊

பதமாக நெய்விட்டு தாளித்த பொங்கள் சாம்பாரின் மணம் வீட்டை சுழல நேத்ரா பரிமார ஏதுவாக அனைத்தையும் தயார் செய்து வைத்தாள் .🍱🥙🍛🥘

யாழிசைக்கும் மித்ரனுக்கும் மதிய உணவையும் தயாரித்து டப்பாக்களை அதன் உறைக்குள் திணித்து மேசைமீது வைத்தாள்.🍱🍱🍱

மித்ரன் குளித்தவுடன் பவுடர் போடாமல் சந்தனம் இல்லாமல் வெளியே செல்ல மாட்டார்...👨👨 இன்று இளம் பச்சை நிற சட்டையும் கருப்பு பேண்ட்டும் அணிந்து கைகளை பட்டன் போட்டபடி படிகளில் இருந்து இறங்கினார்.😘😘😘

👩நேத்ரா கண்ணிமைக்காது கணவனை கருவிழிகளுக்குள் கடத்தி சிறை செய்ய முயன்று சிலையாகிப் போனாள்.😘😘

மித்ரன் தேவர் மகன் படத்தில் ரேவதி பாடுவதைப்போல இஞ்சி இடுப்பழகா... மஞ்ச செவப்பழகா...👨👨. என பொருத்தமான நிறமும் அழகும் கொண்ட நாற்பத்து எட்டு வயது இளைஞர்...

ஆம் அவருமைய உடல்வாகு வயதை காட்டாது அத்தனை மெலிந்த உடல்வாகு அதோடு காதலின் சோபையும் பிள்ளைகள் மனைவி என நிறைவான வாழ்க்கையும்
அவரை என்றும் இளமையாகவே காட்டியது....😎😎😎

👨மனைவி தன்னை கண் கொட்டாது பார்ப்பதைக் கண்டவர் என்னடி மாமா வ பசங்க வர நேரத்ல இப்படி சைட் அடிக்கிற...😉😉😉

👩நெனப்பு தா... நா ...நான் வந்து சட்டை ஏன் இவ்லோ டல்லான கலரா இருக்கேனு பார்த்தேன்... அவ்ளோ... தா...😏😏😏

👦அம்மா... முடியல பொய் சொன்னா புடிக்காதுனு சொல்லிட்டு நீங்களே இப்படி அள்ளி விடுரீங்களே நியாயமா... நீங்க டாடிய சைட் அடிச்சத நானே ஐந்து நிமிஷமா பார்த்தேன்.... என்றான் கல்லூரிக்கு தயாராகி வந்த முகிலன்.🙈🙉🙊

👨அம்மு பார்த்தியா பையனே சாட்சி சொல்லிட்டான்..😃😃😃

👩போதும் போதும் பனிஷ்மெண்ட் மறந்துடாதீங்க வாங்க சாப்டு கிளம்பலாம் எனக்கும் ஸ்கூள் கு டைம் ஆச்சு.... 🤗🤗🤗

👩டேய் முகில் கொஞ்சம் சாப்டு போடா .....

👦அம்மா இன்னைக்கு பஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் வராங்க.... இன்னைக்கு உங்க பொங்கல சாப்டு தூங்க நா தயாரில்ல

👦நா கேன்டீன் ல சாப்டுக்குறேன் பிளீஸ் மா...

👨டேய் முகிலா நானே பஸ் ஸ்டாண்ட் ல விட்டிடவா.... டா

👦வேண்டாம் பா.... நீங்க அம்மாவயும் யாழையும் கூப்டு போங்க நா பாத்துக்குறேன்.... 😉😉

👩ஓகே டா முகில் பார்த்து மெதுவா போ...

👦சரிமா... பை ம்மா...👋👋👋. பை ப்பா..👋👋👋👋..

👩‍👧‍👧👩‍👧‍👧வேக வேகமாக யாழுக்கு உணவை ஊட்டி விட்டு அவளும் கொஞ்சம் சாப்பிட்டு மித்ரனுடன் பள்ளிக்கு கிளம்பினாள்.🤷🤷🤷

👨அம்முகுட்டி.. ஏன்டா அமைதியா இருக்க..

👧இன்னைக்கு முக்கியமான டெஸ்ட் பா அதா கொஞ்சம் டென்ஷன் ...

👨 இங்க பாரு குட்டிமா படிப்பு , டெஸ்ட், னு இதுக்காக யாராவது டென்ஷன் ஆவாங்கலா...? நீ புரியாம கஷ்ட பட்டு மனப்பாடம் செஞ்சி வாங்குர 100 மார்க்க விட புரிஞ்சி படிச்சி வாங்குர 60 மார்க் கூட போதும்டா...

👩 யாழ் வாழ்க்கைக்கு படிப்பு அவசியம் டா.... ஆனா படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை... அனுபவ அறிவுதா முக்கியம் நீ எதுங்காகவும் பயமோ பதட்டமோ இல்லாமா இயல்பாவே உன் டெஸ்ட் அ எழுது ஓகே தானே...

👧யாழிசை: ஓகே ம்மா இதையே தான் நீங்க நான் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு போறதுல இருந்து சொல்றீங்க ... எனக்கு மனப்பாடமே ஆய்டுச்சு.... நான் ஸ்ட்ரைன் பன்னல சரியா.... நான் எனக்காக என் தேவைக்காக படிக்கிறேன்.... எனக்கு எந்த கஷ்டமோ டென்ஷனோ இல்லை சோ பிளீஸ்.....நா கிளம்பட்டுமா... அப்பா பை...👋.. ம்மா பை....

👨👩சரி குட்டிமா.. .👋👋👋

👩சரிங்க நானும் கிளம்பட்டுமா.... (நேத்ரா)

👨 : முடிஞ்சா ஈவ்னிங் வரேன் பாத்து பத்ரமா இரு... பை...👋..😊😊

👩‍⚕️👩‍⚕️👩‍⚕️நேரே பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த உடனே நேத்ராவிற்கு மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்களின் காலை வணக்கங்களும் ... புன்னகையும் இதமாக இனிய நாளை தொடங்கிவைத்தது... 🌼🤗🤗

ஆனால் அந்த சந்தோஷங்களின் ஆயுள் இன்று ....இன்னும் சில நொடிகளில் தொலைந்து தான் தன்னிலை மறந்து அதிர வேண்டிய தருணம் வரும் என நேத்ராவே பாவம் அறிந்திருக்க வில்லை. 😞😞😞

👩இன்று பள்ளியில் காலைத் தொழுகைக்கு தயார் செய்வது அவளது முறை... வேக வேகமாக மாணவர்களை உறுதிமொழி ,திருக்குறள் ,இன்றைய செய்திகள், என அனைத்திற்கும் மாணவர்களை தேர்வு செய்து விட்டு தேவையானவற்றை முறைப்படுத்திக் கொண்டிருந்தாள்...🤷💁🙆

இன்று கரும்பலகையில் தினம் ஒரு தகவளும், பொன்மொழியும் எழுத வேண்டிதும் அவளே தான்....😳😳😳

👩: சாக்குக் கட்டிகளை எடுத்து எழுதத் துவங்கினாள் கரும்பலகையில் தேதியை எழுத அருகில் அழித்து மாற்றுகையில் அவள் கைகள் நின்றது...😥😥😥😥

நடுக்கம் பரவியது .... வியர்த்து கொட்டியது....
மூச்சுக்கு திணறுவதுபோல பார்வை மங்கி கண்கள் சுழன்றது... 😮😮😮😮அவள் கைகளின் வளையல்கள் சரிந்து தெரிந்த அந்த தழும்பு அவளை பல நினை வடுக்குகளை தூசி தட்டி தள்ளாட்டத்தோடு மயக்கமுறச் செய்தது.....😔😔😔😔

--- தொடரும்

த.காயத்ரி வினோத் குமார்....
 
Top Bottom